பசுபதி நீண்ட நேரம் விழித்திருந்துவிட்டு, விடியலில்தான் உறங்கினான்.
மறுநாள் இருவருக்கும் சங்கடமாகவே விடிந்தது. நந்தித்தாதான் முதலில் எழுந்தாள்.
நந்தித்தா, பொறுமையாக சோபாவில் அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தாள். மனது நேற்றைய பேச்சுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தது. ‘எத்தனை நாட்கள்.. இப்படியே இருக்க முடியும் அவரால்.. காலம் எங்களை கண்டிப்பாக மாற்றும்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டாள். என்னமோ நந்தித்தாவிற்கு, நம்பிக்கை நிறையவே இருந்தது தங்களின் திருமணத்தின் மீது.
இப்போது அவளின் அத்தை போனில் அழைத்துவிட்டார் கீழே வரசொல்லி. அதனால் நந்தித்தா குளித்து கிளம்பி கீழே சென்றாள்.
அழுதா பூஜை செய்ய சென்றுவிட்டார். நந்தித்தா காலை உணவு வேலையை கவனித்தாள்.
மாமனார் வந்து “எப்படி இருக்க.. நந்தித்தா ம்மா” என்றார்.
மருமகள், பேச ஆரம்பித்து நடந்த நிகழ்வுகளை பேசிக் கொண்டே.. அவருக்கு காபி கொடுத்து.. ஊரிலிந்து எடுத்து வந்த பலகாரங்களை எல்லாம் கடைபரப்பினாள்.
அமுதாவும் பூஜை முடித்து வந்து சேர்ந்து கொள்ள.. தன் மகன் அவளோடு கோவிலுக்கு வந்த கதை.. தாத்தாவை பார்த்த கதை.. மதியம் உண்ட விருந்து.. டியூஷன் பசங்களோடு பேசியது.. என எல்லாம் கேட்ட பெற்றோருக்கு.. என்னமோ பசுபதி மாறிவிட்டதாக தோன்ற.. மனதில் இவர்களின் வாழ்க்கை சீராகிவிடும் என அன்னை தந்தை இருவரும் தங்களுக்குள் பார்வை பரிமாறிக் கொண்டனர்.
நந்தித்தா காரில் நடந்த உரையாடல் தவிர்த்து, கணவனில் எல்லா நடவடிக்கைகளையும் சொல்லி முடித்தாள்.. சந்தோஷமாக.
பிரகதீஷ் கல்லூரி கிளம்பி வரவும்தான்.. அமுதா, கிட்சென் சென்றார். கெளரவ் அலுவலகம் கிளம்ப சென்றார். நந்தித்தா.. தான் எடுத்து வந்த பொருட்களை.. பத்திரபடுத்த தொடங்கினாள்.
பசுபதி, இப்போது அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தான். அமுதா “வா பசுபதி, மாமனார் வீட்டு விருந்து எப்படி இருந்தது” என மருமகள் சொன்ன கதையின் தாக்கத்தில்.. விளையாட்டாக மகனிடம் கேட்க்க.
மகனோ வாய் திறந்து ஏதும் பேசவில்லை.. உணவு உண்பதற்கு அமர்ந்தவன்.. நந்தித்தா பரிமாறவும்.. இரண்டு இட்லிகளை மட்டும் விழுங்கிவிட்டு.. கிளம்பிவிட்டான். நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை அன்னை கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.
அமுதாவிற்கு மருமகள் சொல்லுவது உண்மையா.. இல்லை, மகன் இப்போது நடந்துக் கொள்வது உண்மையா என தெரியாமல்.. நின்றார்.
நந்தித்தாவிற்கு, கணவனின் இந்த பாராமுகம் வேதனையை தந்தது. தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.
காலையில் இருந்த நம்பிக்கை.. மீண்டும் பின்வாங்கிக் கொண்டது. பெண்ணவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உண்டு மேலே சென்றுவிட்டாள், அப்போதே.
நந்தித்தாவிற்கு, பயமாகி போனது கணவனின் செய்கை இப்போது. நேற்றுதானே பேசியிருக்கிறோம்.. இன்னும் நாட்கள் கடந்தால் என்னை புரிந்துக் கொள்வார்.. மீண்டும் ஒரு சமாதான மூச்சினை எடுத்துக் கொண்டாள் பெண்.
அத்தோடு, அவர் கேட்பது போல.. எனக்கு, ஆனந்தன் ஞாபகங்கள் இப்போது இல்லையே.. அவனை நினைத்தாலே கோவம்தான் வருகிறது.. இப்படி, அருகதை இல்லாதவனிடம் என் அன்பினை கொட்டிவிட்டேனே.. என என்மீதே எனக்கு கோவம்தானே வருகிறது. அதனால், எனக்கு ஆனந்தன் நினைவுகள் இல்லை.. என்னால் பதிதேவ்வோடு நன்றாக வாழ முடியும்.. எல்லாமே ஒரே நாளில் நடக்கும் என எதிர்பார்க்க கூடாது.. நான் கொண்ட காதல் பொய்யாகி போனது, அதற்காக திருமண வாழ்க்கையையும் பொய்யாக விடமாட்டேன்.. என மனதை தேற்றிக் கொண்டாள் பெண்.
அடுத்தடுத்த நாட்களில் நந்தித்தா, கணவனை நன்றாக கவனிக்க தொடங்கினாள். முதலில் அவன் எழும் நேரமே தானும் எழுந்துக் கொண்டாள். அவன் உடற்பயிற்சி செய்யும் போது, தான் சென்று காபி கலந்து வந்தாள்.. “ஹாப்பி மோர்னிங்” என புன்னகையோடு.. அவனுக்கு வாழ்த்து சொல்லி.. கணவனோடு அமர்ந்து காபி பருகினாள்.
பசுபதி, காபியோடு பால்கனி சென்றுவிட்டான்.
நந்தித்தாவிற்கு அவனின் ஒதுக்கம் புரிந்தாலும்.. ஒரேநாளில் ஏதும் மாறிடாது என.. கணவனுக்கு காலை உணவினை சமைக்க கீழே சென்றிடுவாள்.
காலை உணவினை தானே சமைத்தாள்.. கணவனுக்கு தானே பரிமாறினாள்.
மதியும்.. லஞ்ச், முன்பெல்லாம்.. அமுதா கட்டி கொடுப்பார் டிரைவரிடம். இப்போது நந்தித்தா, தன் அத்தையிடம் கேட்டு என்ன பிடிக்கும் பசுபதிக்கு என கேட்டு சமைத்து கொடுத்தாள். அத்தோடு, அவன் அதிகமாக சப்பாத்தியை விடும்புவதில்லை. தமிழ்நாட்டு உணவு வகைகள்தான் அவனுக்கு பிடித்ததாக இருந்தது. நந்தித்தா விருப்பமோடு சமைத்து கொடுக்க தொடங்கினாள்.
இரவில், கணவனுக்காக காத்திருந்து, கணவன் வந்ததும் அவனோடு சேர்ந்து.. எதோ பேசிக் கொண்டே உண்ண தொடங்கினாள்.
பசுபதிக்கு புரிகிறது, மனையாள் தனக்காக எல்லாம் பார்த்து செய்கிறாள் என. அவளளவு, சட்டென அவனால் ஒன்ற முடியவில்லை என்றாலும்.. மனையாளோடு இணக்கமாக எண்ணினான். காலை காபியின் போது, பதில் வாழ்த்து சொல்ல பழகிக் கொண்டான்.
காலை உணவு உண்டு கிளம்பும் போது.. “பைய்.. கிளம்புகிறேன்..” என சொல்லிக் கொண்டு சென்றான்.
இரவில் அவள் சொல்லும் செய்திகளை.. கேட்க தொடங்கினான்.. புருவம் உயர்த்தி.. அதை ஆமோதிக்கவும் செய்தான், பசுபதி.
ஆனாலும், அவள் அன்று பேசிய வார்த்தைகள்தான் நினைவில் வந்தது ‘ஒழுங்கா என்கூட வாழுற வழியை பாருங்க..’ என அவள் பேசியதுதான் நினைவு வருகிறது அவனுக்கு. அவளின் விருப்பத்திற்கு என்னை இழுக்கிறாலோ.. இது.. ஒருமாதிரி டிராமாக தானே இருக்கும் வாழ்நாள் முழுவதும் என பலநேரம் அவனுக்கு தோன்ற தொடங்கியது.
ஆனாலும், மனையாள் அவனை விடுவதில்லை. தன் கடமைகளை தடையில்லாமல் செய்தாள்.. கணவனிடம் உடலளவில் நெருங்கவில்லை.. ஆனால், தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தாள்.
பசுபதிக்கு, மனையாளின் இன்முகம்.. செய்கைகளை.. ஏற்பதா வேண்டாமா என குழப்பத்திலேயே நாட்கள் கடந்தது. பசுபதி மாதத்தில், ஒருமுறை பப் செல்லுவதை மட்டும் மாற்றிக் கொள்ளவேயில்லை.
அப்போதெல்லாம் திவி திவி என உளறுவதையும் நிறுத்தவில்லை.
இன்று பசுபதியின் பிறந்தநாள்.
ஒருவாரம் முன்பிருந்தே அமுதா, தன் மகனின் பிறந்தநாளினை பற்றி மருமகளிடம் சொல்லிவிட்டார். திருமணமாகி முதல் பிறந்தநாள்.. அத்தோடு நந்தித்தாவிற்கு, கணவன் என்ற நேசம் பிறந்து பலநாட்கள் ஆகியிருந்ததால்.. இந்த பிறந்தநாளினை ஆர்பாட்டமாக கொண்டாட ஆசைப்பட்டாள்.. தன் அன்பினையும் பகிர எண்ணினாள்.
காலையில், பசுபதி கண்விழிக்கும் போது.. கையில் சிவப்பு நிற பூங்கொத்தோடு நின்றாள் நந்தித்தா.
அழகான பிங்க் நிற சல்வார்.. முகம் முழுவதும் பொலிவு.. புது பெண்ணின் காதலான பொலிவு அது.. இத்தனை நாட்களாக கணவன் தன்னிடம் முகம் வாடாமல் பேசி சிரித்ததில் உண்டான பொலிவு… ஈரம் சொட்டும் தலைமுடி.. நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் கருகுமணியோடான தாலி கையில் பூங்கொத்து வைத்துக் கொண்டு “ஹாப்பி பர்த்டே பதிதேவ்..” என கண்ணில் ஆசையை நிரப்பிக் கொண்டு.. கணவனிடம் பூங்கொத்தினை நீட்டினாள், மனையாள்.
பசுபதிக்கு கரை உடைந்த நிலை.. தன்னை அவன் கொண்டாடியதே இல்லை.. கொண்டாட அவன் அனுமதித்ததும் இல்லை. ஏன்! காதலி என அவன் சுற்றிக் கொண்டிருந்த திவி.. திவ்யா கூட அவனை.. இந்த அளவு ரசித்ததில்லை.. கொண்டாடியதில்லை. ம்.. மனம் முழுவதும் ஒரு குளிர்.. சட்டென மோதும் குளிர் மேகத்தின் சாரல்களை உணர்ந்தான்.. எழுந்து நின்றான். அவனின் எல்லா தடைகளும்.. டிராமா என எண்ணிக் கொண்டிருந்த அவளின் நேசமும்.. புரிய.. தன்னவளையே பார்த்திருந்தான். அவளின் கண்களில் நிரம்பிருந்த நேசம்.. அவனுக்கு போதுமானதாக இருந்தது.
நந்தித்தா “பதி.. வாங்கிக்கோங்க” என்றாள் ராகமாக.
பசுபதியின் கண்கள் ரசனையாக மாறியது.. அப்படியே நின்றான்.. லேசாக உதடுகள் வளைந்ததோ..
நந்தித்தா.. கொஞ்சல் மொழியை கைவிட்டு “என்ன யோசனை” இயல்பான அவளின் அதிகாரமான குரலில்.
பசுபதி “அஹ.. இப்படி பேசு.. அந்த மெலடி குரல் உனக்கு செட்டாகல.. இந்த ஹய் பிட்ச்தான் சரியா இருக்கு” என்றான், அலட்டாத குரலில்.
நந்தித்தா முறைத்தாள்.
பசுபதி, இப்போது அவளின் கையிலிருந்த பூக்களை வாங்கிக் கொண்டான்.. பின் ஓரடி அவளின் முன்னே வந்து.. தன் இடது கையால் அவளின் இடை பற்றி தன்னோடு இழுத்துக் கொண்டு.. அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
நந்தித்தாவிற்கு, கண்ணீர்தான் வந்தது.. பேச்சுகளே வரவில்லை.. நேசத்தின் பிரதிபலனை உணர்ந்தாள் எனலாம். என்னதான் எனக்கு.. தோற்பின் வலி இல்லை.. நான் காயம்படவில்லை என பெண்ணவள் காட்டிக் கொண்டாலும்.. இப்போது முழுமையான நேசத்தின் பிரதிபலன் கிடைக்கவும்.. கைகள் நீட்டி தன்னவனை கட்டிக் கொள்ளகூட இல்லை.. அப்படியே கணவனின் நெஞ்சில் சாய்ந்து அழுகை.
பசுபதிக்கும் அதே நிலை.. அன்பு மட்டும்தானே நிரந்தரமானது. அதை சொல்லும் நபர்கள் மாறலாம்.. உறவுகள் மாறலாம்.. ஆனால், அன்பு என்ற ஒன்று அனைவரையும் வசிகரீக்குமே.. பசுபதி மட்டுமென விதிவிளக்கா.. அவனையும் பூக்களோடு வசிகரீத்துக் கொண்டது. கணவனாக ஒரு நிறைவு.. அவளின் இந்த கண்ணீரில். அப்படியே நின்றான்.. எப்படி பேசி சமாதானம் செய்வது என தெரியாமல்.
இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை தாங்களே சரி செய்துக் கொள்ள வேண்டும் என சரி செய்துக் கொண்டனர். அதனால், இருவருக்கும் ஒரு சங்கோஜம். எப்படி பேசிக் கொள்வது என.. ஆனால், அணைப்பு என்பது.. மொழிகளால் புரிய வைக்கப்படாத ஒன்றை.. உணர்த்துவது தானே. பசுபதி தன் இறுக்கமான அனைப்பினால், தன்னவளுக்கு எதையோ உணர்த்திக் கொண்டிருந்தான்.
இதமான உணர்வுகள் இருவருக்கும். பசுபதி தன் இறுக்கமான அணைப்பாள் அதை அவளுக்கு உணர்த்த.. பெண்ணவளோ, தன் கண்ணீரால் அவன் டி-ஷர்ட்டினை நனைத்து உணர்த்திக் கொண்டிருந்தாள்.
நொடிகள் கடந்தும்.. நந்தித்தா நிமிரவேயில்லை.. கணவன் “ஹேய்.. எனக்கு பர்த்டே கிஃப்ட் இதுதானா” என்றான். அவளின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு.
ஆனாலும் நிமிரவில்லை.. கணவன் மனையாளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான்.. நந்தித்தாவின் தலை தாழ்ந்தே இருந்தது.. பசுபதி பூக்களை டேபிளில் வைத்துவிட்டு.. அவளின் முகத்தினை நிமிர்த்தி “போதுமே அழுதது.. அதான், எல்லாம் சரியாகிடுச்சே..” என சொல்லிக் கொண்டே.. அவளின் கண்ணீரை துடைத்தான்.
நந்தித்தா நிமிர்ந்து பார்த்து “எல்லாம் சரியாகிடுச்சா.. இனி, நாம இப்படியேதானே இருப்போம்..” என்றாள்.
பசுபதி “ம்.. பழசெல்லாம் அழிச்சாச்சி.. போச்சு.” என கைகளை உதறி பாவனையாக சொன்னவன் “இதுதான் நிஜம். இப்படி அழாத.. போதும்.” என்றான் சாந்தமான குரலில்.
பசுபதி கணவனாக மீண்டும் அவளை தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான். இந்தமுறை மனையாளும் காதலோடு கணவனை அணைத்துக் கொண்டாள்.
அன்றைய நாள் அன்பால் தொடங்கியது.
இன்று, எல்லாம் நந்தித்தாவின் விருப்படி பசுபதிக்கு நடந்தது.
காலையில் ஆயுஷ்ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் கெளவ்ரவ். அதனால் காலையில் அந்த ஏற்பாடுகள் நடந்தது.
மருமகள் நந்தித்தா கீழே இறங்கி வந்தவள்.. மதியம் விருந்திற்கு உறவுகளை அழைக்கலாம் மாமா.. என்றாள் தன் மாமனார் மாமியாரிடம்.
உடனே ஏற்பாடுகள் நடந்தது. கெளவ்ரவ், தன் அண்ணன்.. அக்கா.. சித்தி சொந்தங்கள் என அருகில் இருந்தவர்களை அழைத்தார் மதிய விருந்திற்கே. சமையல் ஏற்பாடுகள் நடந்தது. மருமகள் ஆசைபடுவதை செய்தனர் பெரியவர்கள்.
மகன் மருமகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும்.. ஹோமம் செய்த அழகினை பார்த்த பெற்றோருக்கு நிம்மதி.
பூஜைகள் முடிந்து.. பசுபதி அலுவலகம் கிளம்பி கீழே வந்தான்.
பசுபதியும் இயல்பு போல “ஹேய் LKG பையன் மாதிரி லீவ் போட சொல்ற.. நீ செய்கிற அலப்பறைக்கு எல்லாம்.. இங்க என்னால் இருக்க முடியாது.. டிராமா குயின். எனக்கு நிறைய வேலை இருக்கு..” என்றான், உண்பதற்காக டேபிளில் அமர்ந்தபடி.
பசுபதி பெண்ணவளை நிமிர்ந்து பார்த்து சின்ன குரலில் “மெலடி டோன் வேண்டாம்..” என்றான்.
நந்தித்தா சுதாரித்தாள்.
பெரியவர்கள் இவர்கள் எப்போது உண்பதற்காக வந்தாலும் நகர்ந்து சென்றிடுவர். இன்று.. மாற்றமாக.. கெளவ்ரவிற்கும் பசி வந்திட வந்து அமர்ந்தார் இவர்களின் பேச்சுகளை காதில் வாங்கிக் கொண்டே.
அமுதா “நந்தித்தா, சொல்றதை கேளேன் டா.. ஒருநாள் லீவ் போடேன்” என்றார்.
பசுபதியின் முகம் இப்போது இறுகி கொண்டது.. “இல்ல ம்மா, உங்களுக்கு தெரியாதா.. எனக்கு இந்த செலப்ரேஷன் எல்லாம் பிடிக்காது தானே. இவதான் எதோ செய்திட்டு இருக்கா.. எனக்கு வேலை இருக்கு ம்மா.. அதான் பூஜை எல்லாம் முடிந்ததே..” என்றான் உண்டுக் கொண்டே.
நந்தித்தா கணவனுக்கு புன்னகையோடுதான் பரிமாறினாள். இத்தனை நாட்களில் அவனை பற்றி தெரியுமே.. அதனால் “மதியம் லஞ்ச்க்கு வந்திடுங்களேன்” என்றாள்.
பசுபதி “தெரியலை.. இன்னிக்கு ஆபீஸ்சில் ட்ரீட் கேட்ப்பாங்க.. அதனால் அது ஏற்பாடு பண்ணனும் நந்தித்தா. இந்த போர்மாலிட்டிஸ் எல்லாம் அங்க பார்க்கணுமே. நீ சாப்பிடு.. அம்மாக்கு தெரியும் இதெல்லாம்.. நான் சீக்கிரம் வந்திடுரேன், ஈவ்னிங்” என்றான். இயல்பான உரையாடலாக நடந்தது.
எப்போதும் போல அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
மாலையில் சீக்கிரமாக வந்துவிட்டான் பசுபதி. நந்தித்தா கணவனுக்கு என வேட்டி சட்டை வாங்கி வைத்திருந்தாள்.. தன்னவனை ராஜாவாக உணர்ந்தவளாக.. பழைய ஸ்டைலில் புலி பல் செயின் என சொல்லும் பழைய மாடல் செயினினை மாமனாரின் உதவியோடு.. முன்பே செய்ய சொல்லி வாங்கியிருந்தாள்.. அதுதான் கணவனுக்கான, அவளின் பிறந்தநாள் பரிசு.
பசுபதி வேட்டி சட்டை அணிந்து வர.. பெண்ணவளும் புது புடவையில் வந்து சேர்ந்தாள்.
பசுபதி, முதல்முறை தன்னவள் என உணர்ந்து ரசித்தான்.. மனையாளை “நீ ஏன் அதிகமா புடவை கட்டுவதில்லை” என்றான், அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே. கணவனின் பார்வையும் பேச்சும்.. புதித்தான வெட்கத்தை.. கொடுத்தது.
பசுபதிக்கு, முதல்முறை பார்க்கும் அவளின் வெட்கம் பிடித்தது. பட்டும் படாமல் அனைத்துக் கொண்டு.. விழாவிற்கு கிளம்பினர்.
பசுபதி நந்தித்தா இருவரும் கீழே இறங்கி வந்தனர். பெரியவர்களிடம் சேர்ந்து ஆசி வாங்கிக் கொண்டனர்.
பசுபதி முன்போல இல்லை என.. அவனின் சின்ன புன்னகை காட்டிக் கொடுத்து. விழா இனிதாக சென்றது. பசுபதி கேக் கட் செய்யமாட்டேன் என்றான்.
நந்தித்தாதான், சிறுபிள்ளை போல.. கேக் கட் செய்தாள்.. அவன் சார்பாக.
நிறைய புகைப்படங்கள் எடுத்தான் பிரகதீஷ்.
இந்தமுறை பசுபதி நந்தித்தாவோடு.. தானாகவே வந்து, அவளோடு செல்பி எடுத்துக் கொண்டான், அவளை தன்னோடு கட்டிக் கொண்டு.
“விழியால் ஒரு வேள்வியா
விடையா இது..
கேள்வியா..
உலகை மறந்தேன்..
பறந்தேன்.. பறந்தேன்..
யார் எழுதியதோ
எனக்கென ஒர் கவிதையினை.. ”
யாரின் பிரிவையும்.. யாரின் இடத்தையும்.. மற்றொருவர் இட்டு நிரப்ப முடியாது என்றாலும்.. மற்றொரு நேசம்.. மற்றொரு அன்பு.. கையில் பூவோடு நிற்கும் போது.. நிஜம் ஏற்க தயங்கி.. அதை ஆராய்ந்து.. கொஞ்சம் கொஞ்சமாக..
ஒருமாதிரி சங்கோஜமாக உணர்ந்தான்..
அவனுக்கு இதெல்லாம் எதோ காரியமாக செய்வது போல தோன்றியது. நான் அவ்வளவு சொல்லியும் இவள்.. ஏன் இப்படி நடந்துக் கொள்ளுகிறாள்.. இதென்ன என் மனது உடனே அவளிடம் சரிந்திட வேண்டுமா.. அவளுக்குத்தான் வெட்கமே இல்லையே.. கொஞ்சம் ஆண் என்ற கர்வம் கூடி போனது போல..