தலைகீழ் நேசம்

9

பசுபதி, சனிக்கிழமை மாலையே கிளம்பிவிட்டான். நந்தித்தா, சனிகிழமை காலையில் அழைத்து.. “எப்போ கிளம்புறீங்க” என கேட்டிருந்தாள்.

அதனாலோ என்னமோ பசுபதியின் மனது கொஞ்சம் கலக்கத்திலிருந்து விடைபெற்றிருந்தது.

பாதி இரவில் ஊர் வந்தான். தாத்தா வீட்டில் தங்கிக் கொள்ளுகிறேன் எனத்தான் முதலில் பசுபதி சொன்னது. நந்தித்தாதான், ‘முடியவே முடியாது வீட்டிற்கு வாங்கள்’ என பிடிவாதமாக அழைத்திருந்தாள். 

அதனால், அந்த நேரத்தில் மனையாளுக்கு முதல்முறை தானாகவே அழைத்தான் பசுபதி.

நந்தித்தாவும் முழுதாக உறங்கவில்லை.. கணவன் அழைக்கவும், எழுந்துக் கொண்டாள். கீழே வந்து கதவை திறக்க.. அவளின் அன்னை தந்தை எழுந்து வந்தனர். 

பசுபதியை பார்த்ததும் இருவரு முகமும் பிரகாசமானது.. “வாங்க மாப்பிள்ளை” என இருவரும் வரவேற்றனர்.

பசுபதிக்கு ஒருமாதிரி இருந்தது. தலையசைத்து அவர்களின் வரவேற்பினை ஏற்றுக் கொண்டான்.

நந்தித்தாவின் அன்னை தண்ணீர் கொடுத்தார்.. “பால் கொஞ்சம் சாப்பிடுறீங்களா மாப்பிள்ளை” என்றார்.

பசுபதிக்கும் மறுக்க தோன்றவில்லை சரி என் தலையசைத்தான்.

சற்றுநேரம் தனிமையில் மாமனாரும் மருமகனும் அமர்ந்திருந்தனர்.

வேதாந்தன் “சாப்பிட்டீங்களா மாப்பிள்ளை..” என்றார்.

பசுபதி “ம் சாப்பிட்டேன்” என  பதில் சொன்னான். அடுத்து என்ன பேசுவது என இருவருக்கும் தெரியவில்லை. அமைதியாக பெண்களின் வரவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர்.

நந்தித்தா பால் எடுத்து வரவும்.. வேதாந்தன் “சரி மாப்பிள்ளை, ரெஸ்ட் எடுங்க” என எழுந்தார்.

அதன்பிறகே பசுபதி எழுந்தான்.

நந்தித்தா மேலே செல்ல.. அவளோடு, தானும் மேலேறினான். முன்பு இருந்த அறைதான் இப்போது புதுப்பித்திருந்தனர் போல.. அட்டச்சிடு பாத்ரூம், தரை புதிததாக போட்டிருந்தனர். ரூமில் புது கட்டில்.. AC என அத்தனை அம்சங்களும் இருந்தது. 

பசுபதிக்கு, மாப்பிள்ளையாக அதனை சந்தோஷத்தோடு ஏற்க முடியவில்லை. தயங்கியவனாக அமர்ந்தான் சேரில்.

நந்தித்தா “ஷாட்ஸ் மாத்திக்கோங்க.. நான் வெளிய இருக்கவா” என்றாள்.

பசுபதி “இல்ல, நான் ரெஸ்ட்ரூம் போய்க்கிறேன். நீ தூங்கு” என்றான்.

பசுபதி உடைகளை எடுத்து கொண்டு.. மாற்றி, முகம் கழுவி வந்தான்.

நந்தித்தா போனினை பார்த்துக் கொண்டிருந்தாள். கணவனுக்கு பால் எடுத்து கொடுத்தாள்.

பசுபதி வாங்கிக் கொண்டான்.. குடித்து முடிக்கவும் இருவரும் விளக்கணைத்து விட்டு, உறங்கினர்.

மறுநாள் காலையில் கோவிலுக்கு முதலில் கிளம்பி சென்றனர் தம்பதி. அதை முடித்துவிட்டு, தாத்தா வீடு சென்றுவிட்டனர். 

தாத்தாவிற்கு இருவரையும் சேர்த்து பார்த்ததில் சந்தோஷேம். நேற்று நந்தித்தாவிடம் பேசியதை கொஞ்சம் பாலீஷ் செய்து பசுபதியிடம் பேசினார். அவனும் கேட்டுக் கொண்டான். ஆனந்தன் பேச்சின் நடுவில் எங்கும் வராமல் பெரியவர்கள் பார்த்துக் கொண்டனர். 

வீடு வரவும், நந்தித்தாவுடன் வேலை பார்த்தவர்கள்.. இப்போது டியூஷன் கற்கும் மாணவர்கள் என சிலர் வந்திருந்தனர்.. திருமணத்திற்கு வரமுடியாததால் பார்க்க வந்திருந்தனர். பசுபதி மாணவர்களிடம் ஒதுக்கம் காட்டாமல்.. சிரித்து பேசிக் கொண்டிருந்தான். வயது மாணவர்களும்.. ஏதும் பயமில்லாமல் டீச்சரை கலாய்ப்பதும்.. கிண்டல் செய்வதுமாக சென்றது நேரம். 

சொந்தங்கள் சிலர் ஊள்ளூரில் இருப்பவர்கள் வந்திருந்தனர்.

மதிய விருந்தினை சிறப்பாக செய்திருந்தார் வேதாந்தன்.. பசுபதி நந்தித்தா இருவரையும் பெரியவர்களோடு.. முதலில் அமர வைத்து உணவு பரிமாறினார். உறவுகள் பசுபதியிடம் பேசிக் கொண்டே இருந்தனர்.. பசுபதி, பதில் சொல்லிக் கொண்டே இருந்தான். 

நந்தித்தாவின் அண்ணன் பிரசன்னா ஒருநாள் மட்டும் வந்துவிட்டு சென்றுவிட்டான், ஊருக்கு. அவன் இப்போது, வீடியோ காலில் அழைத்து பசுபதியிடம் பேசிக் கொண்டிருந்தான். உண்பதற்குள்.. பசுபதியின்  பொறுமையை எல்லோரும் சோதித்துக் கொண்டிருந்தனர் எனலாம். பசுபதி முகத்தில் இயல்பை காப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. 

ஒருவழியாக உண்டு முடித்து.. ஹாலில் அமர்ந்தான். நந்தித்தாவிற்கு, கணவனை பார்க்கவே பாவமாக இருந்தது. அங்கேயே யாரிமும் இவ்வளவு பேசமாட்டான். ஏன் இத்தனை அலைச்சல் கூட அவனுக்கு இருக்கவே இருக்காது.. முகமே சோர்வாக இருப்பதாக தோன்றியது மனையாளுக்கு, அருகில் வந்து “மேல போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.. இல்லை, யாராவது வந்திடுவாங்க.. போங்க.. நான் சொல்லிக்கிறேன்” என்றாள் சின்ன குரலில்.

பசுபதி உண்மையாகவே அவளை கருணையோடு பார்த்தான்.. என் கஷ்ட்டம் இப்போவாது புரிந்ததே உனக்கு.. என. எதோ பொண்டாட்டி பேச்சினை மறுக்காமல் கேட்பவன் போல.. அமைதியாக அவள் பேசியதும் மேலே சென்றுவிட்டான்.

பசுபதி உடை கூட மாற்றாமல் அப்படியே உறங்க தொடங்கினான்.

மாலை காபியோடு நந்தித்தா எழுப்பும் வரை.. நல்ல உறக்கம் அவனுக்கு. இருவரும் கிளம்ப வேண்டும் என்றனர். இரவு ஏழு மணிக்கு கிளம்பினர் மணமக்கள் இருவரும். நந்தித்தாவின் கண்களில் கலக்கம்.. கண்ணீரோடு.. காரில் ஏறி அவனருகில் அமர்ந்தாள். கார் மெல்ல நகரந்த்து.

பசுபதிக்கும், அவளின் கலக்கம் புரிகிறது. இங்கே பாசமான பெண்.. பசங்களின் டீச்சர், வேலை. அங்கே.. வீடு.. வீடு தவிர வேறு ஏதும் அவள் பார்த்ததில்லை என எண்ணிக் கொண்டே காரினை எடுத்தான் பசுபதி.

ஏதும் பேசாமல் அமர்ந்துக் கொண்டிருந்தாள் நந்தித்தா.

பசுபதியும், டிரைவ்னில் கவனம் வைத்து.. பைப்பாஸ் பிடித்து பக்கவாட்டில் திரும்பி அவளை பார்க்க.. மனையாள் திவ்யமாக உறங்கிக் கொண்டிருந்தாள். பார்த்தவனின் முகத்தில் சொல்லாமல் கொள்ளாமல் ஒரு புன்னகை.

ஸ்பீக்கர் ஆன் செய்து பாடலை அளவான சத்தத்தில் வைத்துக் கொண்டு.. டிரைவ் செய்தான் பசுபதி.

ஒருமணி நேரம் கடந்துதான் நந்தித்தா விழித்தாள்.. இயல்பு போல “ரொம்ப நேரமாகிடுச்சோ.. நல்லா தூங்கிட்டேன்..” என சொல்லிக் கொண்டே எழுந்தாள். 

பசுபதி பார்த்து சிரித்தான் அவ்வளவுதான்.

அதற்கே மனையாள் “அய்யோ சிரிக்கிறீங்க” என்றாள் அதிசயம் போல.

பசுபதிக்கு வந்த சிரிப்பும் காணாமல் போனது.

நந்தித்தா அதையும் கவனித்து “சும்மா.. ஃபன்..” என்றாள்.

பசுபதி ஏதும் சொல்லவில்லை.

நந்தித்தா “எனக்கு ஒரு ஆசை” என்றாள்.

பசுபதி திரும்பவில்லை..

நந்தித்தா “என்னான்னு கேட்கமாட்டீங்களா” என்றாள்.

பசுபதி இப்போது திரும்பி பார்த்தான்.

நந்தித்தா “இன்ஸ்டால பார்த்திருக்கேன்.. கப்பில்ஸ் கோலில்.. நீங்க கொஞ்சம் கியரிலிருந்து கையை எடுங்களேன்” என்றாள்.

பசுபதி “எதுக்கு” என அவளை திரும்பி பார்த்து கேட்டாலும்.. கையை எடுத்தான்.

நந்தித்தா கியரீல் கையை வைத்து.. “இப்படி ரீல்ஸ் பண்ணனும்ன்னு ஆசை..” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. கணவன் அவள் என்ன சொல்லுகிறாள் என பார்த்தான்.

நந்தித்தா “இல்ல பழசுதான்.. 96 படத்தோடு ரீல்ஸ் இது.. நீங்க இப்படியே டிரைவ் பன்னுக்க.. எப்படி இருக்கும் பார்க்கிறேன்..” என ரசனையாக சொன்னாள்.

பசுபதி “நீ கையை எடு.. இதென்ன” என்றான் ரசனையே இல்லாமல் கடுப்பாக. 

நந்தித்தா “சும்மா பதிதேவ்..” என்றாள் புன்னகையோடு.

பசுபதி “வெட்கமே வராதா உனக்கு..” என்றான் ஹார்ஷாக கேட்கவில்லை.. கிண்டலாக கேட்டான்.

நந்தித்தாவின் முகம் வாடியது, ஆனாலும் “அதெல்லாம் நிறைய இருக்கு.. நான்.. இது எப்படி இருக்கும்ன்னு பீல் செய்யனும்” என்றாள், தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு.

பசுபதி “கையை எடு.. சீக்கிரம்..” என்றான்.

நந்தித்தா பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.

பசுபதி டிரைவில் கவனமாக “எனக்கு எந்த பீலிங்கும் இல்ல.. எனக்கு என்ன.. உனக்குதான் வலிக்கும்” என சொல்லிக் கொண்டே அவளின் கையில் கை வைத்து.. கீயர் மாற்றினான். அவன் சொன்னது போல.. எந்த உணர்வினையும் காட்டவில்லை அவனின் முகம்.. அழுத்தத்தைக் கொண்டது இப்போது.. அவளின் கைகளின் மென்மையை உணரவில்லை.. அவள் வாய்விட்டு சொன்ன.. உணர்வுகளை கிரகிக்க முற்படவில்லை.. முகத்தின் அழுத்தத்தை கைகளில் கொண்டு வந்தான் போல.. நந்தித்தாவின் கைகள் வலியை உணர்ந்தது.

பசுபதி கீயர் மாற்றிவிட்டு தன் கையை எடுத்துக் கொண்டான்.

நந்தித்தா கையை எடுக்கவில்லை “க்கும்.. நம்ம வாழ்க்கையை நாமே சரி செய்துக்க கூடாதா” என்றாள் உணர்வுகளை தேக்கிய குரலில். 

பசுபதி பதில்லாமல் டிரைவ் செய்தான்.

மீண்டும் கீயர் மாற்ற என நந்தித்தாவின் கையை அழுத்தினான் மீண்டும். இருவருக்கும் உணர்விழந்த தருணம், விரல்களின் நெருக்கத்தால் அல்ல.. மன விலகலால்.

நந்தித்தா “ஏதாவது சொல்லுங்க.. கல்யாணம் ஆகி ஐந்து மாசம் ஆகுது. ஆனாலும், எனக்கு எந்த நம்பிக்கையும் வரலை உங்ககிட்டிருந்து. நான் என்ன செய்யணும்” என்றாள்.

பசுபதி யோசிக்காமல் “டிவோர்ஸ் எடுத்துக்கலாம்..” என்றான், அழுத்தமான குரலில்.

நந்தித்தா, கீயரிலிருந்து கையை எடுத்துவிட்டு, கணவனையே பார்த்தாள் அதிர்ந்த தோற்றத்தோடு.

பசுபதி எந்த விளக்கமும் சொல்லவில்லை.

நந்தித்தாவின் கண்கள் கண்ணீரை சொறிந்தது ‘இதுக்குதான் என் வெட்கத்தை விட்டு.. இவனிடம் பேசினேனா. டிவோர்ஸ்.. அதுக்கு எதுக்கு, கல்யாணம்.. எதுக்கு இத்தனை பாடு.. எனக்கு குடும்பம் வேண்டும்.. வாழ்க்கை வேண்டும்.. அதெப்படி நீங்க முடிவெடுத்தால் ஆச்சா’ என எண்ணிக் கொண்டு.. திரும்பி அமர்ந்துக் கொண்டாள்.

பசுபதி இப்போது டிஷூஸ் எடுத்து நீட்டினான் அவளிடம்.

வாங்கவில்லை பெண்.

பசுபதிக்கு என்ன பேசுவதென தெரியவில்லை.. அவள் உண்மையாகவே, ஆனந்தனை மறந்துவிட்டாளா.. என்னால் இன்னமும் மறக்க முடியவில்லையே திவியை. எங்களால் எப்படி இயல்பாக வாழ முடியும்.. என யோசனையோடு டிரைவிங்கில் கவனம் வைத்தான்.

அவள் அமைதியாகவே பயணத்தை தொடர்ந்தாள்.. பசுபதி காரினை ஒரு ஹோட்டலில் நிறுத்தினான்.

பசுபதி “வா, சாப்பிடலாம்” என்றான்.

நந்தித்தா வேண்டாம் என்பதாக தலையசைத்தாள்.

பசுபதி அவள்புறமாக திரும்பி அமர்ந்தான் “உண்மையை சொல்லு.. உன்னால் ஆனந்தனை மறந்திட்டு.. என்னோடு சந்தோஷமா இருக்க முடியுமா” என்றான்.

நந்தித்தா திரும்பி கணவனை பார்த்தாள். நின்றிருந்த கண்ணீர் மீண்டும் வந்தது.

பசுபதி “எனக்கு உன்னை ஸ்கூல் படிக்கும் போதிருந்து தெரியும்.. அவனும் நீயும் எவ்வளவு க்ளோஸ்  என.. உண்மையை சொல்லு” என்றான்.

நந்தித்தாவிற்கு கணவனின் அருகில் அமர முடியவில்லை.. கதவை திறக்க எத்தனித்தாள்.

பசுபதி “பதில் சொல்லிட்டு போ” என்றான்.

நந்தித்தா “அதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே.. அடுத்து என்னான்னு சொல்லிட்டீங்களே.. நீங்க டிவோர்ஸ் வேண்டுமென சொன்னதுக்கு.. நியாயம் தேடுறீங்க அதானே” என்றாள்.

பசுபதி “இல்ல.. உண்மையை சொல்றேன்.. காலம் முழுக்க.. மனதில் ஏதாவது நெருடலோடு வாழ முடியுமா..” என்றான்.

நந்தித்தா “கல்யாணம் செய்யும் போது, நான் லவ் செய்தேன்னு தெரியும். எதுக்கு கல்யாணத்திற்கு ஒத்துகிட்டீங்க.” என்றாள்.

பசுபதி அமைதியானான்.

நந்தித்தா “ஆனால், நீங்களும்.. யாரையோ லவ் செய்திருக்கீங்க.. அதைபற்றி நான் கேட்டேனா.. திடீர்ன்னு டிவோர்ஸ் சொல்றீங்க.. ஒழுங்கா என்கூட வாழற வழியை பாருங்க.. எனக்கு குடும்பம்.. குழந்தை குட்டின்னு எல்லாம் வேண்டும் சொல்லிட்டேன்” என்றாள் திடமான குரலில். அவனின் சீரியஸ்சான முகம் பார்த்து.. கொஞ்சம் இளகிய திடமான குரலில் பேசினாள் பெண்.

பசுபதி கோவமாக “எனக்கு எந்த பீலிங்கும் இல்லை உன்மேல” என்றான், அவளை எப்படியாவது கோவப்படுத்திட வேண்டும் என இந்த ஷணம் எண்ணி.. சொன்னான்.

நந்தித்தா “அந்த திவி மேல மட்டும் நிறைய இருக்கோ..” என்றாள், காரின் கதவினை திறக்க முற்பட்டுக் கொண்டே. பேசுவது அதிகப்படி என தெரியும், ஆனாலும் அவர்மட்டும் என்ன குறைவாகவா பேசுகிறார் என எண்ணிக் கொண்டு.

அது திறக்கவில்லை..

பசுபதி “ஆமாம் நிறைய இருக்கு.. அதனால்தான் சொல்றேன்.. என்னை விட்டு போன்னு.. வெட்கமில்லாமல் ஏதேதோ பேசிக்கிட்டு” என்றவன்.. லாக் ரிலீஸ் செய்து இறங்கினான்.

நந்தித்தாவிற்கு, கோவமும் அழுகையும் சேர்ந்தே வந்தது.. மூக்கு விடைக்க.. எழுந்து ரெஸ்ட்ரூம் சென்று.. முகத்தினை நீர் அடித்து கழுவிக் கொண்டாள்.. அழுகையை விழுங்கிக் கொண்டு வந்து அமர்ந்தாள், கணவனின் அருகே.

பசுபதிக்கு அவளின் முகத்தினை பார்க்க.. பரிதாபமாக இருந்தது.. அதே நேரம் எவ்வளவு திமிரா பேசுகிறாள் எனவும் தோன்றியது. அமைதியாகவே இருந்தான்.

வெயிட்டர் வந்து ஆர்டர் எடுத்து சென்றார்.. பசுபதி உண்டான். நந்தித்தாவிற்கு, உணவு தொண்டையில் இறங்கவில்லை.. அங்கேதான் எல்லா சோகமும் தேங்கி நிற்கிறதே.. எப்படி இறங்கும் உணவு. விடுவாளா நந்தித்தா.. நிறுத்தி நிதானமாக தண்ணீரை குடித்து குடித்து.. தொண்டையை சரி செய்துக் கொண்டு உணவினை உண்டாள்.

மீண்டும் எதோ ஆர்டர் செய்து உண்டாள்.. பசுபதி உண்டு முடித்தும்.. நந்தித்தா உண்டுக் கொண்டிருந்தாள்.. இன்னமும் ஆர்டர் செய்து. முதலில் தோசை.. அடுத்து சப்பாத்தி அடுத்து நூடுல்ஸ் என சென்றது ஆர்டர்.

பசுபதி பயந்தான்.

ஒருவழியாக அவள் உண்டு முடித்ததும்.. கிளம்பினர் இருவரும்.

நந்தித்தா காரில் ஏறியதும்.. கண்மூடிக் கொண்டு உறங்க முற்பட்டாள்.

பசுபதிக்கு, அவளின் எல்லா செய்கைகளும் திமிராக மட்டுமே தெரிந்தது. 

பெண்ணவள், கணவன் என அதிக உரிமையெடுத்து.. தன் வெட்கம் மறந்து கணவனோடு வாழ வேண்டுமென.. பேச எண்ணியவள், தோல்வியை தழுவினாள். முழுதான தோல்வி.. என்ன செய்வதென தெரியவில்லை.. இன்னும் ஏதேனும் பேசி, ஏதாவது பாதி வழியில் இறக்கிவிட்டு விட்டால் என்ன செய்வது என.. கண்மூடி உறங்க தொடங்கினாள்.

அதிகாலையில் வீடு வந்தனர்.. நந்தித்தா தன் அறைக்கு சென்று உடைமாற்றிக் கொண்டு.. தங்களின் அறைக்கே வந்து உறங்கினாள். முகத்தில் பசுபதி நினைப்பது போல திமிர்.. ஆனாலும் கண்கள் வீங்கி.. முகமே பொலிவிழந்துதான் இருந்தது. 

பசுபதி, விளக்கணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்றான். தன் கோவம் தன் எதிரி.. என தெரியும் அவனுக்கு. ஆனால், ஒரு பெண்ணினை அவனது கோவம் இதுவரை ஏதும் செய்ததில்லை. வருந்த வைத்ததில்லை.. கண்ணீரை கொண்டு வந்ததில்லை. இன்று தன் கோவத்தின் தாக்கத்தினை முழுதாக கண்டான் பசுபதி.

ஒருமாதிரி அவளை வாயடைக்க செய்துவிட்டேன் எனத்தான் எண்ணி வண்டி ஒட்டி வந்தான். ஆனாலும், அந்த திமிர் குறையாத.. கலையிழந்த முகம் அவனை என்னமோ செய்கிறது.. பாரேன்! ரூமிலேயே வந்து படுத்திருக்கா.. என கோவம் வருகிறது.. ஏன் ரூமிற்கு வந்தால் என பதட்டத்தையும் தருகிறது. எப்படி மனதினை மாற்றிக் கொள்ள முடிகிறது அவளால்.. சரியான சரியான பச்சோந்தி. திட்டினான் உள்ளுக்குள். 

மீண்டும் குழப்பம்.. எப்படி முடிகிறது என்னோடு போய் வாழ்கிறேன்னு சொல்றா.. என குழப்பமும் எழுந்தது. யாரிவள்?.. என்ன பெண்ணிவள்.. சரியானவள்தானா?.. என்னை ஏன் குடைகிறாள்.. இங்கேயே ஏன் இருக்கிறாள்.. எங்காவது போக வேண்டியது தானே.. என இங்கும் அங்கும் நடந்து திட்டி தீர்த்தான்.

நேரம்தான் கடந்தது. விடைமட்டும் கிடைக்கவில்லை. கால்கள் ஓய்ந்தது.. உறக்கத்திற்கு கண்கள் ஏங்கியது. அறைக்கு வந்தான்.

லைட் போடாமல், போனின் டார்ச் உதவியோடு படுக்கையை நெருங்க.. ஒரே உப்புசம் அறை முழுவதும். Ac போடாமல் உறங்குகிறாளா.. என எண்ணிக் கொண்டு..  AC ரிமொர்ட் தேடினான். சைட் டேபிளில் இல்லை.. பெட்டில் தேட.. டார்ச் அடித்து தேடினான்.. அப்போது அவளின் அருகே ரிமொர்ட் இருந்தது. அத்தோடு.. அவளின் முன்னுச்சியில்.. வைத்திருந்த குங்குமம்.. லேசாக வியர்வையில் நெற்றியில் வழிய.. அந்த குங்குமம் யாரிவள் என பதில் சொல்லியது அவனுக்கு. 

கைகள் நடுங்க.. AC ரிமொர்ட்டினை எடுத்துக் கொண்டு.. அவளின் குங்குமம் வழிந்ததை, தன் விரலால் துடைத்தான். மனது நெருடியது.. இவள் என் பத்னி.. என உண்மையை மனம் சொல்ல.. அப்படியே ஒருநொடி அமர்ந்தான்.

“ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் 

எனை கத்தியில்லாமல் கொய்யும்..

இதில் மீள வழியுள்ளதா..”