சென்னையில் தங்களின் வீட்டின் அருகே.. தங்களின் அப்பார்ட்மென்ட் ஒன்றில்தான் நந்தித்தாவின் குடும்பத்தினரை தங்க வைத்திருந்தனர், பசுபதி வீட்டார்.
நந்தித்தாவின் தந்தை அரசு அலுவலர், அதிகம் லீவ் எடுக்க முடியவில்லை. முக்கிய நிகழ்வுகளுக்கு வந்து சென்றார்.
நந்தித்தாவின் அண்ணன் பிரசன்னவெங்கடேஷ் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அதனால், அவன் அங்கே நண்பர்களோடு தங்கியிருந்தான். இப்போது தங்கைக்கு திருமணம் எனவும், குடும்பத்தோடு வந்து சேர்ந்துக் கொண்டான்.
வேதாந்தன், பசுபதியின் குடும்பம் இவ்வளவு பெரிய குடும்பமாக இருப்பார்கள் என அவர் நினைக்கவில்லை. பொருளாதர முறையிலும் சரி, சொந்தம் பந்தம் என எல்லா வகையிலும் பெரிய குடும்பமே இவர்கள்.
கெளவ்ரவ் குடுபத்தினர், ஒரு கார் சேல்ஸ் அன்ட் செர்விஸ் ஷோவ்ரூம் வைத்திருக்கிறார். சென்னையின் மத்தியில் இருக்கும் ஒரு பழமையான, பெரிய ப்ரண்ட் ஷோவ்ரூம் இது.
அவர்களின் சொந்தங்கள் பெரும்பாலும் சென்னையில் இருந்தனர். அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். வேறுபாடு பார்க்காமல் நந்தித்தாவை வந்து பார்த்தனர். அமுதா மாலை வேளையில் வந்து நந்தித்தாவை பார்த்தார். தங்களின் குடும்பம் பற்றி அவ்வபோது சொல்லினார்.
நந்தித்தாவையும் கூட்டிக் கொண்டே வெளியே சென்றனர். எந்த ஒதுக்கமும், பசுபதி வீட்டாருக்கு இல்லை போல. ப்ரகதீஷ்தான் கார் எடுத்தான் எல்லா நேரங்களிலும். பசுபதி வந்து பார்க்கவேயில்லை.. நந்தித்தாவை.. உடைகள்.. அணிமணிகள்.. என எங்கு சென்ற போதும்.. பசுபதி உடன் வரவில்லை.
நந்தித்தாவின் தந்தைக்கு சற்று உறுத்தலாக இருந்தது இந்த நிகழ்வு. எல்லோருக்கும் பொதுவாக தெரியும்.. இது மீறமுடியா திருமணம் என. ஆனாலும், ஒருமுறை.. எங்கேனும் ஒருமுறை.. பசுபதியை.. பெண்வீட்டார் பார்த்திருந்தால்.. கொஞ்சம் மனம் குளிர்ந்திருக்கும். பார்க்கவே முடியவில்லை பசுபதியை.
வேதாந்தன்.. ஒருமுறை தன் சம்பந்தியை கேட்டேவிட்டார்.. ‘எங்க மாப்பிள்ளைக்கு கோவமோ.. பார்க்கவே முடியவில்லை’ என.
கெளவ்ரவ் “அதெல்லாம் பீல் பண்ணாத வேதா. அவன் ஐஸூலேட் பெர்சன். நீங்க வாங்க.. நம்ம கல்யாண வேலையை பார்க்கலாம்” என்றார், ஒன்றுமேயில்லை எனும் விதமாக.
வேதாந்தனுக்கு பயம்.. தவறு செய்துவிட்டேனோ என.. ஆனாலும், குடும்பத்தார் நல்லவிதமாகவே இருக்க.. இருமனதாக இருந்தார் பெண்ணின் தந்தை.
திருமணம் மிகவும் பிரமாண்டமாக இருக்குமோ என பயம்.. நிறைய எதிர்பார்ப்பார்களோ என நிறைய எண்ணம் வேதாவிற்கு. ஒரே பெண் அதுவும் நினைத்து கூட பார்க்காத அளவில்.. ஒரு வரன், வசதி.. அன்பான சொந்தங்கள் என அமையவும்.. வேதாந்தனும் நன்றாக செய்தார் பெண்ணுக்கு.
திருமணநாள் வந்தது.
ஹல்தி.. மெகந்தி.. சங்கீத் என எல்லா நிகழ்வுகளும் நடந்தது. வேதாந்தன் பசுபதி வீட்டார் சொல்படி கேட்டு நடந்தார்.. உறவுகள் எல்லாம் ஒருவாரம் முன்பே வந்து தங்கினர். நிகழ்வுகள் எல்லாம் நடந்தது.
பசுபதியை மாப்பிள்ளை அழைப்பில்தான் மீண்டும் பெண் வீட்டார் பார்த்தனர்.
பசுபதி, அழகான பட்டு உடைகள் உடுத்தி.. அவர்கள் வழக்கப்படி அலங்காரமான தலைப்பாகை.. கையில் வாள்.. நெற்றியில் திலகம்.. முறுக்கிய மீசை.. என ராஜகலையில்.. சாரட் வண்டியில் உறவுகள் சூழ.. டோலக் வாத்தியங்கள்.. பட்டாசு சத்தங்கள் முழங்க.. வயது வித்யாசம் இல்லாமல் ஆடிக் கொண்டே உறவுகளோடு வந்தான், மாப்பிள்ளை.
அழகான காட்சி.. குளித்தலை சொந்தங்கள் எல்லோரும் இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
நந்தித்தாவின் வீட்டாரும் ஆரத்தி எடுத்து.. நந்தித்தாவின் அன்னையும்.. அவளின் அக்காமுறை உள்ள பெண்ணும் நிமிர்ந்து பசுபதியை பார்க்க.. ஒரு அலங்கார புன்னகை கூட மாப்பிள்ளையான பசுபதியிடம் இல்லை.. இறுகிய முகம்தான்.. அவர்களின் மனதை தைத்தது.
உள்ளே வந்தான். சில உபசரிப்புகளுக்கு பிறகு.. திருமண வைபவம் தொடங்கியது.
நந்தித்தா வந்து அமர்ந்தாள்.. பசுபதியின் அருகே. சிவப்புமும் தங்க ஜெரியும் சேர்ந்த உடை.. அவளின் கலங்கிய முகத்தினை.. தெரியாத அளவில் அவளின் முந்தானை மறைந்திருக்க.. கண்ணில் நிறைய கலக்கத்தோடும்.. நெஞ்சில் உறுதியோடும் அமர்ந்துக் கொண்டாள், பெண்.
பசுபதி, தொட்டு கொடுத்த, அந்த பொன்தாலியை(மங்கல்சூத்ரா) அன்னையும் பெரியப்பா பெண்ணும் சேர்ந்து நந்தித்தாவிற்கு அணிவித்தனர்.
அடுத்து, பசுபதியின் பெரியப்பா பெண்.. பசுபதியின் அங்கவஸ்த்ரத்தையும்.. நந்தித்தாவின் புடவை தலைப்பையும் முடியிட்டார். இப்போது புரோகிதர் சொல்லியபடி.. பசுபதி.. நந்தித்தாவின் கரத்தினை பற்றிக் கொள்ளவேண்டி, தன் வல கரத்தினை.. அவளை நோக்கி ஏந்தினான்.
நந்தித்தாவிற்கு.. புரோகிரதர் என்ன சொல்லுகிறார் என புரிந்தாலும்.. இன்னமும் மனது சமனாகவில்லை போல.. அவனிடம் தன் கையை சேர்க்காமல் நின்றாள்.
புரோகிதர் எதோ சொல்ல.. பசுபதியின் அக்கா வந்து.. நந்தித்தாவின் வலகரத்தினை எடுத்து.. பசுபதியின் கையில் வைத்தார். நந்தித்தாவின் உடல் சட்டென அவனின் வெம்மையில் சிலிர்த்தது.
பசுபதிக்கு, அவளின் கையை பற்றியதும்.. சில்லென இருந்தது. ஏழு முறை வலம் வந்தனர் மணமக்கள் இருவரும். பசுபதிக்கு அவளின் கரம் போக போக.. பிசுபிசுக்க தொடங்கியது போல.. வழுக்கியது.. சுற்றுக்கள் கூட கூட அவனின் பிடி இறுகியது.
அக்னி வலம் வந்து.. அமர்ந்ததும்.. புரோகிரதர், பசுபதியின் கையில் தங்க நாணயத்தை கொடுத்தார்.. கூடவே செந்தூரம்(குங்குமம்..). பசுபதி பெண்ணவளின் முக திரையை விளக்கி.. அவளின் நெற்றியில்.. குங்குமம் வைத்தான். அப்போதுதான் அவளின் முகத்தினை பார்த்தான்.. கண்மூடிக் கொண்டிருந்தாள்.. அவளின் கருவிழி இங்கும் அங்கும்.. உருண்டுக் கொண்டிருந்தது.. அவனுக்கு அவளின் நிலை புரிந்தது.. தனக்கும் இப்படிதானே இருக்கிறது என எண்ணிக் கொண்டு, திரும்பி அமர்ந்தான்.
அட்சைதைகள் தூவி.. ஆசீர்வதித்தனர்.
ஓவ்வொரு சடங்குகளால தொடர்ந்தது.
அதிகாலை திருமணம். பத்துமணிக்கு அவர்களின் சடங்குகள் முடிந்தது. அடுத்து கிரஹப்ரவேசம் என சொல்லி.. நந்தித்தாவை பசுபதி வீட்டிற்கு அழைத்துக் கொண்டனர். கணவனும் மனைவியும் சேர்ந்து சின்ன ஹோமம் செய்து.. பூஜை செய்வதுதான் அந்த சடங்கு.
ஹப்பா.. நந்தித்தா மிரண்டுதான் இருந்தாள் எனலாம். எத்தனை சடங்குகள். அதுகூட பரவாயில்லை. ஓவ்வொரு சடங்கு முடிந்ததும் எல்லா பெரியவர்களிடமும் தனித்தனியே ஆசீர்வாதம் வாங்குவதற்குள்.. தன் சோகத்தை கூட மறந்துவிட்டாள் பெண். அத்தனை முறை குனிந்து நிமிர்ந்து உடல்வலிதான்.
எல்லோரும் கலகலவென பேசிக் கொண்டே இருந்தனர். இப்போது கொஞ்சம் அவர்களின் பாஷை புரிகிறது போல.. நந்தித்தாவிற்கு. பசுபதி கிண்டல் செய்துக் கொண்டிருந்தது அவர்களின் உறவுகள்.. ‘அப்பா மாதிரியே தமிழ் பெண்ணுகிட்ட மாட்டிட்டான். அவளுக்குத்தான் பாஷை புரியாது.. பேச மாட்டான்னு நினைச்சிருப்பான் போல.. ‘ என கேலி பேசிக் கொண்டிருந்தனர்.
கௌவ்ரவ் தன் மருமகளுக்கு கைநிறைய பணத்தினை சுற்றி.. அங்கே ஆசீர்வதிக்க வந்திருந்த திருநங்கைகளின் கையில் கொடுத்தார்.
அது முடிந்தது.. மீண்டும் மண்டபம் சென்றனர். மதியம் இரண்டு மணிக்குதான் மணமக்கள் உண்டனர்.
நாளைதான் தொழில்முறை ரிஷப்ஷன், இனி ஓய்வுதான். உறவுகள் நிறையபேர்.. மண்டப்பத்திலிருந்து கிளம்பினர். கெளவ்ரவ் அமுதா.. மற்றும் அவர்களின் அண்ணன் குடும்பம் மட்டும் மண்டபத்தில் இருந்தனர்.
மணமக்கள் மீண்டும் நெருங்கிய உறவுகளோடு வீடு வந்தனர். நல்ல பெரிய வீடு. ஆடம்பரங்களுக்கு பஞ்சமில்லை.. அது அங்கே அத்யாவசியம் போல. நெருங்கிய உறவுகள்தான். நந்தித்தாவை ஓய்வெடுக்க என தனி அறைக்கு அனுப்பி வைத்தனர். நந்தித்தாவிற்கு வேறொன்றும் இப்போதைக்கு தேவையாக இல்லை.. அணிமணிகளை களைந்துவிட்டு.. ஒரு சுடி அணிந்துக் கொண்டு படுத்துக் கொண்டாள். அலைச்சலில் எதுவும் நினைக்கவில்லை.. உறங்கிவிட்டாள்.
இரண்டுமணி நேரம் சென்று.. கதவை தட்டி எழுப்பினர். நந்தித்தாவை வெளியே வர சொல்லினர்.
நந்தித்தா முகம் கழுவி.. காஞ்சிபட்டு கட்டி.. வெளியே வந்தாள்.
அமுதா ஏதும் சொல்லவில்லை.. அமுதாவின் ஓரகத்தில்.. “நம்முறைபடி கட்டனும்” என்றார் அமுதாவிடம். அமுதா “இல்ல, மணியாகிடுச்சி.. நாளைக்கு அதெல்லாம் பார்த்துக்கலாம்” என்றார்.
ஓரகத்தியோ முனகத் தொடங்கினார்.
நந்தித்தா “அத்தை, நான் புடவை மாத்திக்கனுமா” என்றாள்.
கெளவ்ரவின் அண்ணன் இப்போது தன் மனைவியை தனியே கூட்டி சென்றார்.. சத்தமில்லாமல் அதட்டினார் ஹிந்தியில் “காலையிலிருந்து நீங்க சொல்றபடிதானே நடந்துக் கொண்டாள். இப்போது வீட்டில் விளகேத்த போறா.. அதில் என்ன முறை.. நீ சும்மா இரு.. பாவம் கொஞ்சம் கொஞ்சமாக பழகட்டம். ஒரே நாளில் எல்லாவற்றையும் அவளிடம் திணிக்காதீங்க” என்றார்.
கெளவ்ரவ், அமுதா நந்தித்தா இருவரையும் பொதுவாக பார்த்துவிட்டு “மருமகளே..” என சிரித்தார். பின் “இது அழகா இருக்கு மீனாட்சி மாதிரி இருக்க.. வா.. பூஜை ரூம் வா..” என பாதிதூரம் சென்றவர் “எங்க உன் புருஷன்.. கூப்பிடு அவனை” என்றார்.
நந்தித்தா இதுவரை புன்னகையோடு.. தன் மாமனாரோடு சென்றவள்.. கணவனை கூப்பிடு என்றதும் அதிர்ந்தாள்.
மாமனார்.. மருமகளின் அதிர்வை பார்த்து சிரித்தவர் “ஏன் டென்ஷன்.. வா.. எனக்கு, உன்கையால்.. தண்ணீர் கொடு” என சொல்லி அமர்ந்துக் கொண்டார்.
கெளவ்ரவின் சித்தி போல ஒரு முதியவர் ஹிந்தியின் “ஏன் டா.. புது மருமகள் கிட்ட கேட்க்கிற, எங்க அவ.. புடவையை மாத்துன்னு சொன்னவளை கூப்பிடு.. எங்க பசுபதின்னு கேளு. பாவம் இப்போதுதான் வந்திருக்கா.. இன்னும் கொஞ்சநாள் போனதும் மருமகளிடம் பொறுப்பை கொடுக்கலாம். முதலில் அவன் பெரியம்மாவை கூப்பிடு” என்றார் புன்னகையோடு. வீட்டில் இப்போது சத்தமும் சிரிப்பும் கூடியது.
பசுபதியின் பெரியம்மா வந்தார் “அவன்கிட்ட போனில் சொல்லிட்டேன் வந்திடுவான், எல்லாம் ரெடியாகி வர சொல்லிட்டேன் வந்திடுவான்” என்றார்.
எல்லோரும் பசுபதியை தெரிந்தவர்களாக சிரித்தனர்.
தன் பேரனை அழைத்து பசுபதியை அழைத்துவர சொன்னார், பெரியம்மா.
பசுபதி வருவதாக சொன்னான் என அந்த சிறுவன் வந்து சொன்னான்.
நந்தித்தாவின் வீட்டார் வந்தனர் இப்போது. நந்தித்தா வேலையாட்கள் தண்ணீர் தட்டினை நீட்ட.. எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்தாள் மருமகளாக.
அடுத்து சில சொந்தங்கள் வந்தது.. அதே போல நந்தித்தா செய்தாள்.
இப்போது பசுபதியின் பெரியம்மா.. “ஹோனி(முக்காடு) போடனும்ன்னு சொல்லி கொடு அமுதா” என்றார்.
அமுதாவும் “நந்தித்தா.. தலையில் இப்படி போட்டுக்கோ” என முந்தானையை எடுத்து கொடுத்தார், நந்தித்தா எடுத்து போட்டுக் கொண்டாள்.
இன்னமும் பசுபதி வரவில்லை.
மீண்டும் பசுபதியின் பெரியம்மாவை.. வம்பிழுத்தனர், பசுபதியை கொண்டு எல்லோரும்.
பசுபதி ஒருவழியாக வந்து சேர்ந்தான். செர்வானியோ.. பைஜாமாவோ அணியவில்லை பசுபதி. ஒரு ஷார்ட்ஸ்சில் வந்து சேர்ந்தான்.
எல்லோரும் புன்னகையோடு.. பெரியம்மாவை பார்த்து கிண்டலாக சிரித்தனர்.
பசுபதி வந்தவர்களை பார்த்து வரவேற்பாய் தலையசைத்து அமர்ந்தான்.
பெரியம்மா இப்போது அவனின் அருகில் வந்து கிசுகிசுத்தார்.. கீழே, யாரிடமோ கேட்டு ஒரு தோத்தியை வாங்கி கொடுத்தார்.. தட்ட முடியாமல் பசுபதி வேட்டி அணிந்து கொண்டு வந்தான்.
ஹ்ப்பா.. என கெளவ்ரவ் ஒரு பெருமூச்சு விட்டார்.
பின்னர் புது மணமக்கள் இருவரும் சேர்ந்து பூஜை அறையில் தீபம் ஏற்றி.. ஹாரத்தி காட்டி, பூஜை செய்தனர். மூத்த பெண்மணிகள் எல்லோரும் அவர்களின் வழக்கமான பாடல்களை பாடினர்.
அடுத்து வெளியே வர.. இரவு உணவு தயாராக இருந்தது. பெரியம்மா.. மணமக்களை உண்ண வைத்தார். மீண்டும் மணமக்களை எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க வைத்தார்.
நந்தித்தா தன் மாமனார் மாமியார் காலில் விழுந்தாள்.. கெளவ்ரவ் “சந்தோஷமா இரும்மா.. அவனையும் அப்படி மாத்தனும். அது உன் பொறுப்பு” என்றார்.
மருமகள் லேசாக புன்னகைத்தாள்.
பசுபதி சட்டென தள்ளி நின்றான். நந்தித்தா இப்போதுதான் இதை கவனித்தாள். அமுதா உடனே “கிளம்புங்க.. சந்தோஷமா இருங்க” என்றவர், தன் மகனின் அருகே வந்து “அவளை நல்லா பார்த்துக்கோ..” என சொல்லி “கிளம்பு, அவளை கைபிடிச்சி மேலே கூட்டி போ” என்றார்.
பெரியம்மா “பேட்டா..” என குரல் குழைய பசுபதியை பார்க்க.. பசுபதி அவளின் கையை பிடிக்காமல் தன் கையை நீட்டினான். நந்தித்தா காலை போலல்லாமல் அவனின் கையில் தன் கரங்களை சேர்த்தாள்.. எல்லோருக்கும் ஏனோ நிம்மதி பெருமூச்சு.
பெரியப்பா “கிளம்புங்க..” என்றார்.
இருவரும் லிப்ட் ஏறினர்.
பசுபதி தன்னவளோடு தனது ராஜாங்கம் வந்தான்.
ம்.. மேலே முழுவதும் அவனின் ராஜாங்கம். இரண்டாம்தளம் அவனின் ராஜாங்கம். பெரிய ஹால்.. மூன்று பெரிய அறைகள்.. பால்கனி.. வராண்டா.. என அவனின் உலகம் இது. இங்கே அவன்.. அவனின் அம்மா பெரியம்மா வேலையாட்கள் தவிர வேறு யாரும் வந்ததில்லை. இப்போது தன் மனையாளை அழைத்துக் கொண்டு வந்தான்.
லிப்டில் ஏறியதும் அவளின் கையை விட்டுவிட்டான். மேலே வந்தனர். லிப்ட் தாண்டி ஒரு கதவு.. அதை திறந்துக் கொண்டே பசுபதி உள்ளே வந்தான். நந்தித்தாவும் உள்ளே வந்தாள். ஒரு தனி அப்பார்மென்ட் பீல் அவளுக்கு. சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்.. அழகான பால்கனி தெரிய, அங்கே சென்றாள்.. சிலுசிலுவென காற்று அவளை ஆற தழுவிக் கொண்டது.. யாருமில்லை என எண்ணியவளுக்கு.. அந்த காற்று ஆறுதலாக இருந்தது.. ஏதேதோ குழப்பமாக இருந்த போதும்.. என்னமோ ஒரு ஆறுதல் போல.. அந்த காற்று அவளிடம் விளையாடியது.
எப்போது அந்த பால்கனியிலிருந்து திரும்பி பார்த்தாலோ.. அப்போதுதான் தெரிந்தது.. அங்கே யாருமில்லை என.. அதான் கணவன் இல்லையென. இப்போது என்ன செய்வது என தெரியவில்லை.. ஹால் சோபாவில் அமர்ந்தாள்.. அந்த காற்று வீட்டுக்குள் வரவில்லை. உடைகளை மாற்றிக் கொள்ளலாம் போல இருந்தது.
ஆனால், என்ன செய்வதென தெரியவில்லை. கணவனை காணவில்லை. தன் மாமியாருக்கு போனில் அழைத்தாள்.
அமுதா, மருமகளின் அழைப்பை பார்த்ததும் தனியாக வந்து பேசினார். தன் உடைகள் எங்கே அத்தை என்றாள்.
அமுதாவிற்கு.. இருந்த பயம் உறுதியானது.. “ஏன் டா, உங்க ரூமில்தான் இருக்கு. நீ பார்க்கலை.. உன் நாலு ட்ராலியும் அங்கேதானே இருக்கு..” என்றார் திணறும் குரலில்.
நந்தித்தா “அத்த.. அவர் ரூம் எது.. நான் வெளியே இருக்கேன்” என்றாள்.
அமுதாவிற்கு அப்படியொரு கோவம் வந்தது.. ஆனாலும், வழி சொல்லி அழைப்பை துண்டித்தார்.
அடுத்து, மகனுக்கு அழைத்தார் அமுதா, பசுபதி போனை எடுத்தான் “என்ன டா உன் பிரச்சனை. உன்னை நம்பி வந்திருக்கா டா.. எப்படி அவளை ட்ரீட் பண்ணனும்ன்னு உனக்கு தெரியாதா?. இதுதான் நீ படித்த லட்சணமா.. எது வேண்டுமானாலும் நடந்திருக்கட்டும்.. இதுதான் ஒரு ஆண் பெண்ணை நடந்ததும் விதமா. வாழ்க்கையை பாழக்காத.. வாழு” என்றார் அழுத்தமாகவும் அதிகாரமாகவும்.
பசுபதிக்கு சலிப்புதான் வந்தது. நேராக வந்து கதவை திறந்தான்.. எதிரில் நந்தித்தா நின்றிருந்தாள்.. “சாரி, என் லக்கேஜ் இங்கே இருக்காம்” என்றவள் உள்ளே சென்றாள், அவனின் பதிலை எதிர்பாராமல்.
அவனை போல அல்ல, அவனின் அறை.. ஜில்லென்ற ஏசி காற்று வாசனையாக அவளை வரவேற்றது. சுவர் முழுவதும் அலங்காரம்.. இப்போதுதான் பெட்ஸ்ப்ரெட் எடுத்திருப்பான் போல.. பெட் கலைந்திருந்தது.. டீபாய் மேல்.. பால்.. ட்ரை ப்ரூட்ஸ்.. ஸ்வீட்ஸ்.. என இருந்தது. நந்தித்தா எல்லாவற்றையும் ஒரு சுற்று பார்த்துவிட்டு இரண்டு இரண்டு பெட்டிகளாக நகர்த்திக் கொண்டே வந்தவள்.. “சாரி, நான் அந்த ரூமில் ஸ்டே செய்துக்கவா” என்றாள்.
பசுபதி தலையசைத்தான்.. இருவருக்கும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பது ஈசியாக இருந்தது.. எந்த தயக்கமும் இல்லை.. இருவருக்குள்ளும் எந்த உணர்வும் இல்லை போல.. நாசூக்காக நகர்ந்து செல்ல முடிந்தது அவர்களால். இது சரியில்லையென அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் குற்றயுணர்வில்லாமல் நகரவும் முடிந்தது. சடங்களுக்கும்.. மனிதர்களும்.. இருமனங்களை இனைத்திட முடிந்திடுமா. அப்படி முடியுமென்றால்.. எல்லாவற்றையும் சில பரிகாரங்கள்.. கோவில்கள் சென்றும்.. பண்பட்ட மனிதர்கள் பேசியுமே.. சரி செய்திருக்க முடியுமே. ஏன் நிறைய மனங்கள்.. காயம்பட்டே எதிரெதிராக கிடைக்கிறது. மனம் விசித்திரமானது எல்லா சடங்குகளுக்கும் கட்டுப்படும்.. சிலசமயம் எந்த சடங்குகளுக்கும் கட்டுப்படாது. மனமே விருந்து.. மனமே மருந்து. இப்போது மனம் இரும்பாகியிருந்தது இருவருக்கும்.