அத்தியாயம்- 21

கோபமாக அமர்ந்திருந்த தீரன் கண்ணாடியை பார்க்க. அவன் காருக்கு பின்னாடி நின்றிருந்தது மற்றொரு கார்.

முகத்தை மறைத்தவாறு அமர்ந்திருந்த உருவமோ கண்கள் கலங்க ஸ்ரீயை பார்க்க, அவளோ நகத்தை கடித்து அமர்ந்திருந்தாள்.

தீரன் காரை ஸ்டார்ட் செய்து செல்ல துவங்க, ஸ்ரீ முகம் தொங்கி போனது.

‘ச்ச…. பிளான் சொதப்பிடுச்சே. அவன்பாட்டுக்கு கிளம்பிட்டான். சரி பிளான் பிபிபி இஇஇ…’

“ஆஆஆஆ….. எவன்டா அது” என்று நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
தீரன் கார் வேகமாக அவர்கள் காரை மோதி கொண்டு இருந்தது.
‘அட பாவி சண்டாளா. என்னடா இது புது ட்ரெண்டா இருக்கு. இவனா வந்து பேச மாட்டனாம். காரைவிட்டு மோதுவானாம். என்னடா அராஜகம் இது’ என்றவள் யோசிக்கும்போதே மீண்டும் கார் முன்னால் சென்று வேகமாக வந்து காரை இடிக்க,
பக்கத்தில் இருந்த உருவமோ பீதியாக ஸ்ரீயை பார்க்க,

அவளோ “பயப்படாத…நானும் பீதிலதான் இருக்கேன்” என்றவள் தீரன் கார் முன்னால் செல்லவும், அவள் இருந்த காரைவிட்டு இறங்கியவள்.

வேகமாக அவன் அருகில் சென்று “ஹேய்…. என்ன பண்றீங்க. நிறுத்துங்க. அவன் கார்….” என்றவள் சொல்லி கொண்டிருக்கும்போதே முன்பை விட வேகமாக அந்த காரை இடிக்க,

நொந்து போனவள் தீரன் தோளில் கை வைத்து உலுக்கி “என்னாச்சுங்க உங்களுக்கு நிறுத்துங்க….. நிறுத்துங்க……” என்றவள் கத்த,
அவள் கையை தட்டிவிட்டவன் மீண்டும் காரை எடுத்து கொண்டு முன்னால் செல்ல, அவளோ தலையில் அடித்து கொண்டு நின்று விட்டாள்.

தீரன் கார் பின்னால் வந்து இடித்து நிற்க, கார் ஜன்னல் அருகே குனிந்தவள் அவன் சட்டையை பிடித்து தன் அருகே இழுத்து ஆணவன் இதழை சிறை செய்ய, தீரனின் கோபம் குறைய துவங்கியது.

பாதி டேமேஜ் ஆன காரில் இருந்த அஸ்வினோ இரத்த கண்ணீர் வடித்தான்.
“பாவி சண்டாளி. நான் அப்பவே சொன்னேன். இதெல்லாம் ஒர்க் அவுட் ஆகாது. போய் அண்ணாகிட்ட எல்லாம் சொல்லுன்னு. எங்க கேட்டா, ஹையோ என் கார் போச்சே” என்று புலம்பி கொண்டு இருக்க,
கணவனின் இதழில் இருந்து பிரிந்தவள் ‘இப்போ என்ன சொல்லி இவனை சமாளிக்கலாம்’ என்ற யோசனையில் இருக்க,
கார் கதவை திறந்த தீரன் அவளை உள்ளே இழுத்து மடியில் அமர வைத்து மீண்டும் முரட்டுதனமாக அவன் இதழை சிறை செய்ய, அவனது மற்றொரு கரமோ பெண்ணின் இடையை அழுத்தமாக இறுக்கி பிடித்தது.
முதலில் முரண்டு பிடித்த ஸ்ரீ. பின் கணவனின் முத்ததில் கரைய துவங்க, இருவரும் இருக்கும் இடம் மறந்து ஒருவருள் ஒருவர் மூழ்கி போயினர்.

அஷ்வின்,‘ம்கூம்….. இவளை நம்பி வந்ததுக்கு நானே போய் செவுத்துல முட்டி இருக்கலாம்’ என்று கடுப்பாக நினைத்தவன் காரின் ஹாரனை அடிக்க,

அந்த சத்தத்தில் விலகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். பட படத்து தன்னை பார்க்கும் மான் விழியில் மயங்கியவன் கண்களில் இதழ் பதிக்க,

அவளோ “இப்போ கூட வாய திறந்து எதுவும் சொல்ல மாட்டிங்களா…”என்க,

தீரனோ,“சொன்னாதான் உனக்கு தெரியுமா?”என்றான்.

“ஆமா. சொல்லலைனா எப்படி தெரியும். சொல்லுங்க” என்றவளை அலட்சியமாக பார்த்தவன் ‘முடியாது’ என்பது போல் தலையை ஆட்ட,
“போக வேண்டாம்னாவது சொல்லுங்களேன்”.
“எங்க போயி பாரு” என்று அவள் இடையில் விளையாடி கொண்டே சொன்னவனின் அழுத்தத்தை வெறுத்தவள் “போகதான் போறேன் பாருங்க” என்றவள் சொல்லும்போதே, மீண்டும் காரை ஸ்டார்ட் செய்தவனை கண்டு, அவள் தலையில் கை வைத்துவிட ,
அவள் கையை விலக்கிவிட்டவன் “முக்கியமான ஆளை நான் பார்க்கல பார்த்துட்டு வரேன்” என்றுவிட்டு காரைவிட்டு தீரன் இறங்கி நொறுங்கி போய் இருந்த காரை நோக்கி செல்ல,
ஸ்ரீயோ கையை பிசைந்து கொண்டு நின்றாள்.
காரில் அமர்ந்திருந்தவனிடம் சென்றவன் “கீழே இறங்குடா” என்க,
அஷ்வினோ ‘போச்சு போச்சு மாட்டினேன். அண்ணா வந்துட்டான். இப்போ எப்படி நான் அவனை சமாளிப்பேன்னு தெரியலையே’ என்று புலம்பி கொண்டே இறங்காமல் இருக்க,
“அவன் கையை பிடித்து கீழே இறக்கிய தீரன். அங்கு அஷ்வினை நிச்சயமாக எதிர்பார்கக்கவில்லை.
“அண்ணா…….” என்று வழிந்து கொண்டு நின்ற தம்பியை கண்டு பல்லை கடித்தவன் திரும்பி ஸ்ரீயை பார்க்க,
அவளோ “ஈஈஈஈ……” என்று வலிசலாக சிரிக்க,
கடுப்பான தீரன்,“உங்க விளையாட்டுக்கு அளவே இல்லையா. இது என்ன நாடகம்”.

அஷ்வின் “நான் இல்லண்ணா. அண்ணிதான்……”
“அவ்வ்வா….. அவ்வ்வா…. பொய் பொய் இந்த உலகத்துக்கே அடுக்காது. உங்க தம்பிதான் அண்ணி…. அண்ணி…. இந்த மாதிரி அண்ணி…. அண்ணன் உங்களை நோக வச்சுட்டாரு. அதுக்கு கண்டிப்பா அவரை பலி வாங்கணும். அதுக்கு நான் சொல்ற மாதிரி அண்ணாட்ட சொல்லுங்க.
அப்போதான் உங்க அருமை அவருக்கு புரியும். நான் வந்து உங்களை பாதுக்காப்பா கூட்டிட்டு போறேன்னு”இவன்தான் சொன்னான்.
“எதே…. நான் சொன்னனா. அண்ணா பொய்…பொய்”
“நான் பொய் சொல்றன்னா. உங்களை பார்க்க பாவமா இருக்குன்னு கூட சொன்னேங்க. இந்த பயதான் கேட்கவே இல்லை. கல் நெஞ்சகாரன்” என்றவள் சொல்ல,
அஷ்வினோ ‘இது என்ன எனக்கு வந்த சோதனை. அண்ணன் மூஞ்ச பார்த்தா, அவள் சொல்வதை எல்லாம் நம்பிட்ட மாதிரி இருக்கே. என்ன சொல்லி இப்போ நான் இவரை நம்ப வைக்கறது’ என்று மனதில் புலம்பியவன் “அண்ணா…..” என்று இழுக்க,

தீரன், “ஷு…. எதாவது பேசுன. அவ்ளோதான் சொல்லிட்டேன். எனக்கு உன்னையும் தெரியும், அவளையும் தெரியும்.
அவகூட கூட்டு சேர்ந்து நடிச்சதால உனக்கான பனிஷ்மென்ட் உன்னோட காரை உன்னோட பாக்கெட் மணிலயே ரெடிபண்ணிக்கோ”.
“என்ன….. என் பாக்கெட் மணியா. ஐயோ எனக்கு மயக்கம் வருதே”.
“கூடவே என் காரையும் நீதான் சரி பண்ணனும். இனி நீ கிளம்பலாம்” என்று சொல்ல,
“எது…….” அந்த காரையுமா என்று நெஞ்சில் கை வைத்தவன் அவன் முறைப்பில் அமைதியாகி “ஓகேண்ணா….” என்று தலையை தொங்க போட்டு கொண்டு சொன்னவன், காரை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்.
அடுத்து ஸ்ரீயை நோக்கி சென்றவன் எதுவும் அவளிடம் பேசாமல் அமைதியாக காரில் ஏறி அமர்ந்துவிட,
அவன் எதுவும் பேசாமல் சென்றதில் திகைத்து போனவள் அப்படியே நின்றிருக்க,
காரை ஸ்டார்ட் செய்தவன் ஹாரன் அடித்து அவள் ஏறும் வரை காரை உறுமவிட,
உடனே வேகமாக காரில் ஏறியவள் அவனிடம் பேச திரும்ப அவன் முகமோ பாரங்கல்லை போல் இறுகி போய் இருந்தது. அதை கண்டு அரண்டு போனவள் மௌனமாகிவிட காரில் மிகுந்த அமைதியே நிலவியது.
வீட்டிற்கு வந்தவுடன் வேகமாக தன்னறைக்கு சென்றவன் பின்னோடு சென்றவள் மனம் அவன் என்ன சொல்ல போகிறானோ என்ற பயத்தோடு வந்தவள், மெதுவாக அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வர,

அவளை இழுத்து தன்னோடு இறுக்கியது ஒரு முரட்டு ஆண் கரம்.
“என்னங்க……” என்றவள் இதழ் ஆணவனால் சிறை செய்யப்பட, அவள் இதழில் மூழ்கி முத்தெடுத்தவன், அவள் முகம் எங்கும் முத்தமிட துவங்க, அவன் செயலில் பெண்ணவள் திக்கு முக்காடி போனாள்.
“ஏங்க…” என்று பேச வந்தவளின் பேச்சை கவனியாதவன் அவளை தனக்குள் ஒழித்து வைத்து கொள்வது போல் இறுக்கமாக அணைக்க,
அதில் உண்டான வலி தாங்க முடியாதவள் அவனிடம் இருந்து விலக முயற்சிக்க,
“நீ என்கிட்டதான் இருக்கேன்னு நான் உணரணும். ப்ளீஸ்டி கொஞ்ச நேரம் அப்படியே இரு” என்றவன் குரலுக்கு அமைதியானவள் அவனுடன் ஒன்றி போனாள்.
சற்று நேரம் கடந்து அவளிடம் இருந்து விலகியவன் அவளை ஓங்கி ஒரு அறைவிட, கடுப்பானவள் தானும் அவனை அறைய,
இருவரும் ஒரு சேர கண்கள் கலங்க, கன்னத்தில் கை வைத்து கொண்டு நின்றனர்.
“என்ன எவ்ளோ டார்ச்சர் பண்ணிட்டடி” என்று சொல்ல,
அவளோ “உங்களைவிடவா. நீங்களும்தான் என்னை படுத்தி எடுத்தீங்க. இதையே நீங்க பண்ணுனீங்களே, அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்.” என்றவளை கண்டு கண்களை இறுகி மூடி திறந்தவன்.
“சரி எல்லாத்தையும் நானே சொல்றேன்” என்றவனை நெருங்கி சென்றவள்,
அவன் இதழில் கை வைத்து “முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும். இனி அதைப்பத்தி பேச வேண்டாம். இனி நடக்க போறது நல்லதாகவே நடக்கட்டும்னு நினைப்போம்” என்றவளை ஆச்சர்யமாக அவன் பார்க்க,
அவளோ “ஹீஹீஹீ…. அப்படி பார்க்காதீங்க. நான் அவ்ளோ நல்லவ எல்லாம் இல்ல” என்றவள் தன் தோழி மூலம் தான் தெரிந்து கொண்டதை சொல்லி,
மேலும் “ஒரு பிளாஷ்பேக் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாமேனுதான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்”. என்க,
அவளை நெருங்கி சென்றவன் அவள் நெற்றி முட்டி சிரித்து “அந்த காரணம்தான் உண்மையான காரணமா….”
“வேற என்ன காரணம். உங்கள் காதல் கதையை கேட்க முடியாமன்னு நினைச்சீங்களோ. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல” என்று முகத்தை கோணி கொண்டு சொல்ல,
சத்தம் போட்டு சிரித்தவன் “ம்ம்…. சரி நம்பிட்டேன். ஆனா…. சில விஷயங்களை நான் சொல்லிதான் ஆகணும் நிதி”.
“முடிஞ்ச கதையை பேசி எதாவது மாற்றம் வரும்னு நீங்க நினைக்கறீங்களா. உங்களை நீங்க எப்படி இருக்கீங்களோ அப்படியே ஏத்துக்கறேன் இனி அதைப்பத்தி பேச வேண்டாம். எனக்கு தூக்கம் வருது.
‘ச்ச….. பிளான் போடறேன்னு நடு ராத்திரி முழிச்சு வெளிய சுத்தி, இப்போ நாலு மணி ஆச்சு, நைட் தூக்கம் போச்சு’ என்றவள் சென்று பெட்டில் விழ,
“இனியும் உனக்கு தூக்கம் இல்ல…” என்றவன் அவள் மேல் விழ,
“ஆஆ……” என்று கத்தியவள் சத்தம் அவனவளால் அடைக்கப்பட, மனம் நிறைந்த மகிழ்வுடன் அழகான இல்லறம் அங்கு அரங்கேறியது.

காலை வெகு நேராமகியும் வெளி வராத ஸ்ரீயை எண்ணி வருந்திய மீனா.
மாடியை பார்ப்பதும், டீவியை பார்ப்பதுமாக இருக்க, அப்போது அங்கு வந்து சேர்ந்தான் அஷ்வின்.
“டிங்கிரி டிங்காலே மீனாட்சி தோசை சுட்டாளே…..” என்று பாட,
அவளோ “அட என்னங்க…. நீங்க வேற. நானே இன்னும் அக்கா கீழ வரலன்னு கவலைல இருக்கேன். உடம்பு எதுவும் சரியில்லையா என்னன்னு தெரியல. அவங்கள போய் பார்க்கவும் சங்கடமா இருக்கு”.
“ஏன் சங்கடமா இருக்கு”.
“நான் இதுவரை அவங்க ரூமுக்கு போனது இல்ல. அதான்”.
“நல்லவேளை போகல”
“ஏங்க அப்படி சொல்லறீங்க”
“ஏன்னா….. அண்ணனும் இன்னும் எழும்பி வரல”.
“அச்சச்சோ…. அண்ணா சீக்கிரம் கிளம்பி ஆபிஸ்க்கு போவாங்களே”
“போவான்தான். அது எல்லாம் அப்போ…இப்போ….. எல்லாம் மாறிடுச்சு. ஆமா. நீ என்ன எப்போ பாரு சும்மா வீட்ட சுத்தி வர, அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க”.
“ஏங்க. நான் இங்க இருக்கறது. உங்களுக்கு வருத்தமா இருக்கா” என்று முகம் வாடி கேட்க,
“ஆமா. வருத்தமாதான் இருக்கு”என்றவன் சொன்னவுடன் அவள் முகம் விழுந்துவிட,
அதை ஓரகண்ணால் பார்த்தவன் “பின்ன என்ன. நான் எல்லாம் காலைல போயிட்டு நைட்டுதான் வரேன். நீமட்டும் எப்போ பாரு ஜாலியா வீட்ட சுத்தி வர்ற.
நாளைல இருந்து நீயும் ஹாஸ்பிடல் வா”
“இல்லங்க. எனக்கு அங்க எல்லாம் ஒன்னும் தெரியாது. ஸ்ரீ அக்கா அவங்க ஸ்கூல்க்கு வேலைக்கு வர சொன்னாங்க….” என்றவள் இழுக்க,
சற்று நேரம் யோசித்தவன் “ம்ம்…அதுவும் சரிதான். அண்ணி இனி அங்க வர முடியாது. நீ அங்கிள் கூட போய், அவர்கூட இருந்துக்கிட்டே ஸ்கூல் மேனேஜ்மண்ட் கவனிச்சுக்கோ”.
“ஹையோ…சார்…என்ன நீங்க. நான் டீச்சர் ட்ரெயினிங்தான் படிச்சிருக்கேன். என்னால எப்படி முழு ஸ்கூலையும் பார்த்துக்க முடியும்”.
“எது சொன்னாலும் எப்படியாவது எஸ்கேப் ஆகணும்னுதான் நினைப்பியா. அண்ணி உன்கூட வந்து எல்லாம் சொல்லி தருவாங்க கத்துக்கோ. சும்மா எதாவது காரணம் சொல்லிட்டு இருக்காத” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே,
“கரெக்ட்டுடா நண்பா. நான் நினைச்சேன். நீ செஞ்சுட்ட. ஆமா மீனம்மா. நான் உனக்கு எல்லாம் சொல்லி தரேன். கத்துக்கோ. உன்னால முடியாதுனு நீ ஏன் நினைக்கற” என்றவாறு அங்கு வந்தாள் ஸ்ரீ.
“அக்கா….. என்ன பேசுறீங்க. நான் எப்படி எனக்கு என்ன தெரியும்னு, நீங்க….”
ஸ்ரீ, “உன் குழந்தை பியூச்சர் நல்லா இருக்கணும்னா, நீ கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் ஆகணும்” என்று சொல்ல,
மீனாவும் குழந்தை என்றவுடன் தன் சம்மதத்தை தெரிவித்துவிட்டாள்.
தீரன் அங்கு வந்தவன் மனைவி அருகில் அமர, கணவன் மனைவி இருவரையும் முறைத்த அஷ்வின், “சரி நான் ஹாஸ்பிடல் போறேன். இங்க ஒரே பேட் வைப்பா இருக்கு” என்றுவிட்டு செல்ல,
ஸ்ரீயோ, “நண்பா என்னை மறந்துட்டியா…. தோழா என்னை மறந்துட்டியா……” என்று பாட,
அஷ்வினோ “வேணாம். என் வாயில நல்லா வண்ண வண்ணமா வருது. ஒழுங்கா ஓடி போயிடு……” என்றவன் அண்ணனை பார்த்துவிட்டு “போயிடுங்க அண்ணி…. இஇ இ……” என்றுவிட்டு திரும்பி செல்ல,
தம்பி சொன்னவிதம் தீரனிற்கு சிரிப்பை உண்டாக்க, வெகு நாட்கள் கடந்து சத்தமாக சிரிக்க துவங்கினான்.

அண்ணன் சிரிக்கவும் கண்கள் கலங்க அவனை திரும்பி பார்த்த அஷ்வின் முகத்திலும் புன்னகை நிறைந்திருந்தது.
தீரனின் மாற்றம் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, ரொம்ப நாள் கடந்து அந்த வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
அடுத்த ஒரு மாத காலம் ஸ்ரீயும், தீரனும் புது மண தம்பதிகள் போல் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கொண்டு செல்ல,
சத்யா அஷ்வினுக்கு போன் செய்து அவர்கள் கம்பெனியையும் தானே பார்த்து கொள்வதாக சொல்லிவிட, ஸ்ரீ, அஷ்வின் இருவரும் மிகவும் மகிழ்ந்து போயினர்.
அன்று இரவு வழக்கத்தைவிட மிகவும் மகிழ்ச்சியாக சுற்றி வந்த மனைவியை கண்ட தீரன் “என்ன இன்னைக்கு என் நிதி ரொம்ப துள்ளலா சுத்தி வரா”.
“ம்ம்…. ஆமாங்க. நம்ம கம்பெனிய பார்த்துக்க சத்யா ஒத்துக்கிட்டாருல்ல அதான்”
“இதுல குஷியா சுத்தி வர என்ன இருக்கு”.
“இருக்குங்க. நம்ம மீனா வாழ்க்கையே இதுலதான் இருக்கு” என்றவள் மீனா வாழ்வில் நடந்த அனைத்தையும் சொல்ல,
அதை கேட்ட தீரனின் தாடை இறுகியது. “அவங்க எல்லாம் மனுஷங்களா…மிருகங்களா… புள்ளைய விட, வேற என்ன முக்கியம்னு இவங்க எல்லாம் உயிர் வாழறாங்க, ச்ச…பாவம் இந்த சின்ன வயசுல அந்த பொண்ணுக்கு எவ்வளவு கஷ்டம்.
கடைசில நீங்க யாரும் வேணான்னு, மீனா வீட்டைவிட்டே வெளிய வருதுன்னா அந்த குழந்தை மேல எவ்ளோ பாசம் இருக்கணும்”
“ஆமாங்க. அன்னைக்கு என் கார்ல விழும்போதும் என் குழந்தைனு வயித்தை பிடிச்சுட்டேதான் விழுந்தா. மயக்கம் தெளிஞ்ச அப்புறமும் என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலதானே…. என் குழந்தை… என் குழந்தைனு ரொம்ப பதறி போனா.
நாம அவ வாழ்க்கையை சரி பண்ண எதாவது பண்ணனும்”
“கண்டிப்பா. ஆனா சத்யா இப்போ என்ன மனநிலைல இருக்காருன்னு நமக்கு தெரியல. அதை தெரிஞ்ச அப்புறம்தான். நாம எதா இருந்தாலும் பண்ணனும்”.
“ஆமாங்க. அவ வாழ்க்கையை நல்லபடியா அமைச்சு குடுக்கனும். அப்போதான் எனக்கு நிம்மதி”.
“ஆமா…. உனக்கு ஏன் அந்த பொண்ணு மேல இவ்ளோ அக்கறை”
“அக்கறைனு இல்லைங்க. அவ சின்ன பொண்ணு. அவளை பார்க்கும்போது எல்லாம் என் இறந்து போன தங்கச்சி நியாபகம் வருது.
அவளும் அக்கா…அக்கானு…. ரொம்ப பாசமா சுத்தி வருவா. ரொம்ப இன்னொசன்ட் பொண்ணுங்க” என்க,
“ம்ம்…. கண்டிப்பா அவளுக்கு அண்ணனா. நான் இருக்கேன். நம்ம மாதிரி அவளும் சந்தோஷமா இருக்கறதை நாம பார்போம் போதுமா” என்று சொல்ல,
“ம்ம்ம்……” என்று கணவனின் தோளில் சாய்ந்து கொண்டவள் முகம் காதல் வாழ்க்கை வாழ்வதால் உண்டான விகசிப்போடு இருந்தது.

மீனா வாழ்க்கையை இவர்கள் சரி செய்வார்களா சத்யா மனைவியை ஏற்று கொள்வானா இல்லை இங்கும் சென்னப்பன் வந்து மகளை அழைத்து செல்வாரா பொருத்திருந்து பார்ப்போம்.