“உன் காதலுக்கான எதிரொளிப்பு உன்னை நோக்கி வந்து விட்டது போல சுதமன்?”, என்று குறிஞ்சிரிப்புடன் கேட்டான் நரேந்திரவர்மன்.
“ஹா ஹா ஆம். சாந்தா என்னை விட்டு ஒரு நொடி கூட பிரியாமல் இருக்கிறாள். இருவருக்கும் இடையில் நந்தி போல மாமன் குடும்பம் வந்திருக்கிறது. எப்போது அவர்கள் போவார்கள் என்று இருக்கிறது. உன்னிடம் சொல்வதற்கு என்ன? அவள் விரலை தீண்டி கூட மூன்று நாட்கள் ஆகி விட்டன”
“ஹா ஹா, நீ பாவம் தான். சரி எப்போது செல்கிறார்கள் அவர்கள்?”
“அவர்கள் போவது போல் இல்லை. ஆனால் சாந்தா விரட்டி விடுவாள். சரி நான் வர வில்லை என்று காத்து கொண்டிருப்பாள். நான் செல்கிறேன்”
“போய் வா சுதமன்”, என்று கூறி நண்பனை அனுப்பி வைத்தான் நரேந்திரவர்மன்.
அதன் பின் அவன் மனதில் வான்மதி நினைவு வந்தது. காலையில் முடி சூடி கொண்ட போது அவளை பார்த்தது. அதன் பின் இருவருக்குமான தனி தனி சடங்குகளை செய்வதில் அவளை கண்ணால் காண முடிய வில்லை.
அவளை அவன் மனம் வெகுவாக தேடியது. தலையை திருப்பி அந்த அறையை கண்களால் அளவிட்டான். பரந்து விரிந்த மைதானத்தை போல இருந்தது. அந்த அறையில் நடு மையத்தில் இருந்த மஞ்சத்தில் மலர்கள் தூவி பரப்ப பட்டிருந்தன. வாசனை திரவியத்தால் அந்த அறையே நறுமணத்துடன் காண பட்டது. அதில் தன்னவளின் வாசனையை அவன் நாசி தேடியது.
என்றைக்கும் இல்லாத வகையில் அவனுடைய மனம் வெகுவாக அவளை தேடி தவித்தது.
அவன் தேடலில் ஒளியை கொடுக்க வந்தவள் போல விரைந்து வந்த வான்மதி உள்ளே வந்ததும் அந்த அறையை தாளிட்டு விட்டு அவனை நோக்கி ஓடி வந்தாள்.
புள்ளி மான் போல ஓடி வந்தவளின் பேரழகில் தன் வசம் இழந்தான் நரேந்திரவர்மன். வேகமாக ஓடி வந்தவளோ, அடுத்த நொடி அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள். அவளுடைய இந்த செய்கையில் இன்பமாக அதிர்ந்தான் நரேந்திரவர்மன்.
தன்னை தேடி வந்து நெஞ்சில் சாய்ந்ததில் அவன் ஆண்மை கர்வம் கொண்டது. அவன் மீதான அவளுடைய காதலில் அவன் நெஞ்சிலும் காதல் ஊற்று பெருக்கெடுத்தது.
அவள் அழகில் சொக்கி போனான் மன்னவன். அவன் கரங்களும் அவள் முதுகை சுற்றி படர்ந்தது.
“தேவி, உன் தரிசனத்துக்காக அதிக நாழிகை காத்திருந்து விட்டேன். நீயானால் இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாய்? இவ்வாறு இருக்கும் போது உன் முகத்தை மறைக்கலாமா? எனக்காக உன் முகத்தை சிறிது காட்ட கூடாதா?”, என்று அவள் தலையை தூக்க முயன்றான்.
அவளோ மாட்டேன் என்னும் விதமாய் தலை அசைத்து அவன் மார்பிலே முகத்தை மறைத்து கொண்டாள். சிறு பிள்ளை தனமான அவள் செய்கையில் புன்னகை சிந்தியவன் வலுக்கட்டாயமாக அவள் முகத்தை திருப்பி தன்னை பார்க்க வைத்தான்.
ஆனால் அவள் கண்களோ கலங்கி சிவந்திருந்தது. அதை பார்த்து நெஞ்சம் பதைத்தவன் “என்னவாயிற்று தேவி?”, என்று கேட்டான்.
“தாங்கள் எனக்காக அரியாசனத்தையே துறந்தீர்களா அரசே?”, என்று கண்ணீருடன் வினவினாள் வான்மதி.
“இதை இப்போது யார் உன்னிடம் கூறியது? அதற்காக நீ ஏன் தேவி கண்ணீர் சிந்துகிறாய்? எனக்கு நீ மட்டும் தானே வேண்டும்? மக்களுக்கு என்னால் உதவ இயலாது என்னும் போது அந்த அரியாசனத்தை நான் எப்படி தக்க வைத்து கொள்ள முடியும்? ஆனால் அரியாசனத்தை எனக்கே பெற்று தந்த பெருமை உன் தந்தையே சாரும் வான்மதி”
“இப்படி பட்ட சூழ்நிலையில் தங்களின் மாமன் மகளை மணந்திருந்தால்….”
“அவ்வாறு கூறாதே தேவி. அப்படி ஒருநாளும் செய்திருக்க மாட்டேன். அவளை மணந்திருந்தால் போர் இழப்புகளை தவிர்த்திருக்கலாம் தான். ஆனால் உனக்கு கொடுத்த வாக்கு என்னாவது? வாக்குக்காக மட்டும் அல்ல. எதற்காகவும் உன்னை தவிர வேறு பெண்ணை என் மனதும் உடலும் நாடாது தேவி. அன்று கூறியதை தான் இன்றும் கூறுகிறேன். இப்போது இந்த மேலை தேசத்தின் மகாராஜா நான். இந்த சாம்ராஜ்யத்தின் மகாராணி நீ. என்னுடைய சாம்ராஜ்யத்துக்கு மட்டும் அல்ல தேவி. என் மனதின் சாம்ராஜ்யத்துக்கும், காதல் சாம்ராஜ்யத்துக்கும் உரிய மகாராணி நீ மட்டுமே. அரசன் என்ற பட்டம் எப்போது வேண்டுமானாலும் என்னை விட்டு செல்லலாம். ஆனால் என் மனதின் மகாராணி நீ மட்டுமே”
“இந்த காதலுக்கு நான் தகுதியானவளா என்னவரே?”, என்று கண்ணீருடன் கூறியவளின் கண்ணீரை தன் விரல் கொண்டு துடைத்து விட்ட நரேந்திரவர்மன் அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.
“உன்னை தவிர வேறு யாரும் தகுதி உடையவர் அல்ல தேவி. சரி அது என்ன அரசே, என்னவரே, இளவரசே என்று அழைக்கிறாய்? உன் நாதா, சுவாமி என்ற அழைப்புகள் எங்கு போயின? அதெல்லாம் கூட வேண்டாம், நரேந்திரா என்று ஒரு முறை அழையேன்”
“என்ன? தங்களை நாமம் சொல்லி அழைப்பதா? அதெல்லாம் என்னால் முடியாது. தாங்கள் மகாராஜா”, என்று கூறியவள் முகத்தில் நாணம் படர்ந்திருந்தது.
“மகாராஜா என்பது நாளை காலையில் தான். இப்போது நமக்கான நேரம்”, என்று கூறி கொண்டே அவள் வெற்றிடையில் தன் கரங்களை வைத்தான்.
“ஸ்.. ஆ”, என்று அவன் தீண்டலில் மேனி முழுவதும் நடுக்கம் கொண்டாள் வான்மதி. அவள் இமை கிறக்கத்தில் மூடி கொண்டது. அவளுடைய கிறக்கத்தை கண்ட நரேந்திரவர்மனும் தன் வசமிழந்து அவளை தழுவி கொண்டான்.
அவளது முகத்தை தன் விரலால் நிமிர்த்தியவன் அவளுடைய பிறை போன்ற நெற்றியில் தன் உதடுகளை பதித்தான்.
பின் ஒளி பொருந்திய கண்கள், மென்மையான கன்னம் என்று அவன் உதடுகள் பயணித்தது. கடைசியில் அவனுடைய உதடுகள் அவளுடைய உதடுகளை கவ்வி கொண்டன. பூவில் இருந்து தேனெடுக்கும் வண்டு போல அவளுடைய உதடுகளை சுவைத்தான். மீண்டும் மீண்டும் அவள் உதடுகளை நாடினான். பின் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டவன் அவளை இறுக்கி அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அவள் கூந்தலின் வாசனையை முகர்ந்தவனுக்கு எல்லையில்லா நிம்மதி கிடைத்தது. காலையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது கிட்டாத ஆறுதல் இப்போது கிடைத்தது.
“நான் என் மதியை தரிசிக்க போகிறேன். இனி உன்னை பார்த்து என்ன செய்ய?”, என்று அந்த வானத்து மதியை பார்த்து கூறியவன் வான்மதியை தன் கரங்களில் அள்ளி கொண்டு மஞ்சத்தை நோக்கி நகர்ந்தான்.
மஞ்சத்தில் அவளை கிடத்தி விட்டு அவள் காலடியில் அமர்ந்தவன் அவளுடைய வெண்ணிற பாதத்தில் தன் அதரம் பதித்தான். அதில் அவளுடைய தளிர் உடல் நடுங்கியது. சுவாசம் தடை படுவது போல மூச்சு வாங்கினாள்.
பின் மெதுவாக மேலேறி அவள் மேல் சரிந்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்தான். காதல் வேட்கையில் நெருங்கிய அவனுடைய மோக பார்வையை தாங்க முடியாமல் அவன் முதுகில் கரங்களை அலைய விட்டாள் வான்மதி.
அவனுடைய செய்கைகளில் அவளின் கரம் அவன் முதுகில் படிந்து நகக்கீறலை ஏற்படுத்தியது.
அந்த இன்பமான வலியுணர்ந்தவனும் மயக்கும் மோகினியான அவளை காதல் போதையுடன் அணுகினான்.
அவளை மயக்கும் பேரழகனாக இருந்த அவன் செய்கையில் தன்னையே ஒப்படைத்து அவனுடன் புதியதொரு உலகத்தில் பிரவேசித்தாள் வான்மதி.
அந்த மாய உலகில் இருவருக்கு மட்டுமே அனுமதி என்பது போல் இருவரும் நடந்து கொண்டார்கள். அவளிடம் தன் இச்சைகள் அனைத்தையும் தீர்த்து கொண்டான் அவன். அவளும் என்னவேண்டும் என்றாலும் செய்து கொள் என்று சராணாகதி அடைந்து சிலிர்த்து சிவந்து போனாள்.
மோகத்துடன் அவளை ஆக்கிரமித்த நரேந்திரவர்மனின் காதல் கடலில் மூழ்க ஆரம்பித்தாள் வான்மதி.
மோகம் என்பதே இருவருக்குள்ளும் நெருப்பாக பற்றி, அதுவே நெருப்பை அணைக்கும் நீராகவும் மாறி அவர்களை படுத்தி எடுத்தது.
தளிர்கொடி போல் நடுங்கி கொண்டிருந்தவளை நடுக்கம் குறைய என்று கட்டி அணைத்து மேலும் நடுங்க வைத்தான். அவனுடைய கரம் அவள் உடம்பில் பயணித்தது. வீணையை விரல் மீட்டுவது போல இருந்த அவனுடைய விரலின் மாயாஜாலத்தில் வெட்கமும் சிணுங்கலும் அவள் முகத்தில் பிரசன்னமானது.
சிலிர்ப்புடன் கூடிய அவளுடைய சரணாகதியை ரசித்தான் நரேந்திரவர்மன். வான்மதியின் மேல் கவிந்திருந்தவன் அவள் காதில் வார்த்தைக்கு வலிக்குமோ என்னும் விதமாய் “தேவி”, என்று மோகத்துடன் அழைத்தான். “ம்ம் என்று முனங்கி அவனுடைய மோகத்தீயை ஏற்றி விட்டாள் வான்மதி. காதல் கொண்ட இருவரின் மனதிலும் பற்றி கொண்ட மோகத்தீ அவர்களை சுற்றி பரவி ஜுவாலையுடன் எரிந்தது.
நரேந்திரவர்மனின் காதல் சாம்ராஜ்யத்தின் மகாராணியான வான்மதி மீது அவன் வைத்திருந்த காதல் தொடரும்.