தண்ணீரில் கால் வைத்ததும் “நாம் எங்கு செல்கிறோம்?”, என்று கேட்டாள் வான்மதி.

“அதோ தெரிகிறது பார் அந்த குகைக்கு”, என்று கை காட்டினான்.

“அப்படி என்றால் நீந்தி செல்லலாமா? எனக்கு அந்த சிறையில் இருந்தது ஒரு வித அருவருப்பை தருகிறது. நான் நீராட வேண்டும்”

“உன் விருப்பத்துக்கு நான் தடை ஏதும் சொல்வேனா தேவி? உன் விருப்பம் போல் நீந்தி செல்”

“தாங்களும் வாருங்கள்”

“என்னால் இப்போது நீந்தவியலாது. நீ செல்”, என்று அவன் கூறியதும் வியப்பாக அவனை பார்த்தவள் முன்னே நீந்தி சென்றாள்.

இடுப்பளவில் இருந்த அந்த நீரில் மூழ்காமல் நடந்து சென்றான் நரேந்திரவர்மன். அவனுக்கு முன்னே நீந்தி சென்ற வான்மதியோ அந்த குகை அருகில் நீராடி கொண்டிருந்தாள். மூன்று முறை மூழ்கி எழுந்தவள் வானத்தை நோக்கி கரம் குவித்து வணங்கினாள்.

அப்போது தான் அவன் அருகில் வந்தான் நரேந்திரவர்மன். அவள் கரம் பற்றி இழுத்தவன் அங்கிருந்த மறைவான பாறையில் அமர வைத்தான். “இப்படி பட்ட இடங்களை எப்போது தான் தாங்கள் அறிந்தீரோ? சரி தாங்கள் நீராட வில்லையா?”, என்று கேட்டாள் வான்மதி.

“இப்போது நீராட தான் போகிறேன்”, என்று புன்னகைத்த நரேந்திரவர்மன் அவனுடைய போர் கவசத்தை கழற்றினான்.

அவனை பார்த்து புன்னகைத்தவள் அவன் கவசத்தை கழற்றி பாறை மீது வைத்ததும் அவன் முதுகை பார்த்து விட்டு அலறி விட்டாள்.

“சுவாமி, என்ன இது? இவ்வளவு பெரிய காயம்?”, என்று கேட்டு கொண்டே அந்த காயம் அருகே வருடியவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

“போரில் காயம் ஆகாமல் இருக்குமா தேவி. சிறிது நான் நீராட உதவி செய். இரண்டொரு நாளில் காயம் மாயமாகிவிடும். கவலை கொள்ளாதே”, என்றான்.

அவன் அருகே இருந்த கல்லில் அமர்ந்தவள் அவன் முதுகில் இருந்த ரத்த கரையை எல்லாம் நீரால் கழுவினாள். குளிர் நீர் பட்டதும் காயம் எரிச்சலை கொடுத்ததால் “ஸ்ஸ்”, என்றான் நரேந்திரவர்மன்.

“வலி அதிகமாக இருக்கிறதா சுவாமி?”

“இல்லை தேவி. சரியாகி விடும்”, என்று கூறி கொண்டே நீராடி முடித்தான்.

பின் பாறை மீது தாவி அவள் அருகே அமர்ந்து கொண்டான். பட்டாடை, ஆபரணம் எதுவுமே இல்லாமல் விரிந்த கூந்தலுடன், சாதாரண சேலையுடன், அமர்ந்திருந்தாள் வான்மதி. அவளுடைய ஈர உடை அவனுக்குள் மோக தீயை பற்ற வைத்தது.

அவள் அருகே நெருங்கி அமர்ந்தவன் அவளுடைய கழுத்து வளைவில் முகம் புதைத்து அவள் கூந்தல் வாசனையை சுவாசித்தான். அவனுடைய அருகாமையில் கிளர்ந்து அவன் மடியிலே முகம் புதைத்து கொண்டாள் வான்மதி.

அவளை தன் மடி  மீதிருந்து  எழுப்பியவன்  அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். அவள் உதடுகளை  வன்மையாக தன் உதடுகளால் சிறை செய்தான். உணர்ச்சி மிகுதியால் அவளுடைய தலை முடியை அவன் கரங்கள் இறுக்கி பிடித்தது.

அந்த வலியை கூட ஆனந்தமாக அனுபவித்தவள் அவனுடைய செய்கைக்கு தன் உடலை ஒப்புவித்தாள். அவளுடைய முழுசரணாகதியில் அந்த பாறை மீது அவளை படுக்க வைத்தவன் அவள் மீதே கவிழ்ந்து படர்ந்து பரவினான்.

அவளுடைய குழைவான மென்மையை அவன் கரங்கள் அனுபவித்தன.

உடல் முழுவதும் பரவிய அவனுடைய கரங்களின் ஆக்கிரமிப்பை தாங்க இயலாமல் துடித்தாள் வான்மதி.

அங்கே வெற்றி பெற்ற இளவரசனுக்காக ஒரு நாடே காத்திருக்கையில் இங்கே வெறும் பாறையில் தன் மனதுக்கு இனியவளுடன் கூடினான் நரேந்திரவர்மன்.

கூடி களைத்து அவளிடம் இருந்து விலகியவனுக்கு இது வரை இருந்த அவனுடைய மன போராட்டத்தில் இருந்து விடுதலை கிடைத்தது போல இருந்தது. எல்லை இல்லா நிம்மதியும் மனதுக்குள் ஒரு உற்சாகமும்  குடி கொண்டது.

காதலாக தன்னவளை பார்த்தான். அவனிடம் அல்லல் பட்ட சேலையை சரியாக சொருவி கொண்டிருந்தாள் வான்மதி. அவளை பார்த்து ரசித்தவன் “அதற்குள் சேலையை அணிந்து கொண்டாயா தேவி?”, என்று கேட்டான்.

அவனை பார்த்து பொய் கோபம் கொண்டவள் “தங்களுக்காக அங்கே அனைவரும் காத்து கொண்டிருப்பார்கள். அரண்மனை பிரவேசம் செய்ய அனைவரும் எல்லையில் காத்திருப்பார்கள். ஆனால் தாங்களோ இங்கே என்னுடன் சரசமாடிக் கொண்டிருக்கிறீர்கள்”,

என்று கடிந்து கொண்டாள்.

“இப்போது கிடைக்கிற நிம்மதி எனக்கு வேறு எதிலும் கிட்டாது தேவி.  அதை வார்த்தையால் சொல்லி புரிய வைக்க இயலாது. இப்படி பட்ட அமைதியை உன்னால் மட்டுமே தர இயலும். களைத்திருந்த உடலுக்கும், மனதுக்கும் உன் அருகாமையே மருந்து. இங்கே இளைப்பாறிய தருணத்தை என் வர்மன் வேகமாக  சென்று  சரி செய்து விடுவான்”, என்று கூறி கொண்டே அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளுடனே அந்த நீரில் மூழ்கினான்.

பின் அவன்  போர் கவசத்தை அணிந்ததும் இருவரும்  புரவி அருகே வந்தார்கள்.

அவர்களை பார்த்ததும் வர்மனும் பயணத்துக்கு தயார் என்று கூறுவது போல் மேலே பார்த்து கனைத்தது.

அவளுடைய வெற்றிடையில் கரம் வைத்து அவளை தூக்கி வர்மன் மீது அமர வைத்தவன் அவனும் ஏறி அவள் அருகில்  அமர்ந்து கொண்டான்.

காற்றை கிழித்து கொண்டு அந்த புரவியும் சீறி பாய்ந்தது.

நாட்டின் எல்லையிலே காத்திருந்த அனைவரும் இவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். அதுவும் வான்மதியை கண்டதும் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.

தன் மகளை நெஞ்சோடு அனைத்து கண்ணீர் விட்டார் வாசுதேவச்சக்கரவர்த்தி. அவள் தலையை அன்பாக வருடி விட்டார் இந்திரவர்மர். அனைவரின் கால்களிலும் வணங்கி எழுந்தாள் வான்மதி.

அவள் செய்கைகள் அனைத்தையும் ஒரு புண் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன்.

பின் வாசுதேவரும் அவர் அழைத்து வந்த படைகளும் தங்கள் தேசத்துக்கு செல்ல ஆயத்தமாகின. இன்னும் ஏழு நாளில் பட்டாபிஷேகம் இருக்கிறது என்று கூறி வாசுதேவரை அழைத்தார் இந்திரவர்மர்.

“என் மகள் ராணியாக முடிசூட போகும் காட்சியை நான் காண வராமல் போவேனா? அனைவரும் வந்து விடுவோம். இப்போது விடை பெறுகிறோம் மகாராஜா”, என்று கூறி விட்டு சென்று விட்டார் வாசுதேவச்சக்கரவர்த்தி.

பின் பட்டத்து யானையில் கம்பீரமாக ஏறி அமர்ந்தார் இந்திரவர்மர். அவர் வந்த ரதத்தில் நரேந்திரவர்மனும், வான்மதியும் ஏறி கொண்டார்கள். வெற்றி ஊர்வலம் ஆரம்பமானது. பலவிதமான கோஷங்களை எழுப்பி மக்கள் ஆர்பரித்தார்கள்.


அரண்மனையை நோக்கி சென்றார்கள் அனைவரும். அரண்மனைக்கு சென்றதும் நீராடி புத்தாடை அணிந்து ஆலய தரிசனம் செய்ய சென்றார்கள்.

இரவு உணவை முடித்து விட்டு அறைக்குள் வந்த வான்மதியை அன்று இரவு முழுவதும் தூங்க விட வில்லை அவன்.

தனக்காக போர் நடந்தது, அதற்காக அவள் தந்தை உதவியது இதை மட்டும் தான் வான்மதி அறிவாள். மகாராஜா நரேந்திரவர்மனை திருமணத்துக்கு வற்புறுத்தி, அரியாசனம் கிடையாது என்று கூறியது, அதை நரேந்திரவர்மன் மறுத்தது எதுவும் வான்மதி அறியாதது. அதனால் அவள் எப்போதும் போல் இருந்தாள்.

சரியாக ஒரு வாரம் கழித்து நரேந்திரவர்மனுக்கும், வான்மதிக்கும்  பட்டாபிஷேகம் நடந்தது. இருவரும் அலங்கரிக்க பட்டு சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்கள். இருவர் முகமும் பூரித்து போய் இருந்தது.

கம்பீரமாக அமர்ந்திருந்த அவர்களின் அழகை அனைத்து மக்களும் புகழ்ந்தார்கள்.

இந்திரவர்மர் ராஜாவுக்குரிய பொற்கிரீடத்தை தன் கரங்களால் தன் மகனுக்கு அணிவித்தார். ராணிக்குரிய கிரீடத்தை அவள் தலையில் சூட்டினார். பாண்டிமாதேவி இருவருக்கும் ஆரற்றி எடுத்து திலகமிட்டாள்.

இந்த காட்சியை கண்டு வாசுதேவர், அருந்ததி, மேகவேந்தன் மனங்கள் நிறைந்தன. வராக சித்தர்  செங்கோலை எடுத்து நரேந்திரவர்மன் கையில் கொடுத்தார். அதை பணிவுடன் பெற்று கொண்டான் நரேந்திரவர்மன்.

மணிமுடி சூட்ட பட்ட புதிய மகாராஜாவை அனைத்து மக்களும் கோஷமிட்டு வாழ்த்தினார்கள்.