அதே நேரம் கண்ணாடி முன்னே அமர்ந்து தலை அலங்காரத்தை களைத்து கொண்டிருந்தாள் வான்மதி. மஞ்சத்தில் அமர்ந்து அவள் செயலை கண்காணித்து கொண்டிருந்தான் நரேந்திரவர்மன். சுற்றி ஏற்ற பட்டிருந்த எண்ணெய் விளக்குகளால் அந்த அறையே தேவலோகம் போல காட்சி தந்தது.
மனம் நிறைந்த காதலியை ரசித்து கொண்டிருந்தவன் அவள் அழகை பார்வையால் பருகினான். அவனை பற்றி கவனியாமல் அலங்காரத்தை களைத்து கூந்தலை விரிய விட்டாள். அது அவள் இடையைத் தாண்டி தொங்கியது. அந்த கூந்தலில் முகம் புதைக்க ஆவல் கொண்டான் நரேந்திரவர்மன்
பின் அணிந்திருந்த அணிகலன்களை கழட்டி தனி தனியே எடுத்து வைத்தாள். மேலே போட்டிருந்த தாவணி போன்ற துணியை களைந்து தனியே வைத்தவள் அப்போது தான் அவன் அங்கே இருப்பதையே நினைவு கூர்ந்தாள்.
“ஐயோ இவனை மறந்து போனோமே”, என்று எண்ணி கொண்டு களைந்த தாவணியை மீண்டும் எடுத்து மேலே போட போகும் போது அவள் கரம் பற்றி கொண்டான் நரேந்திரவர்மன்.
திகைப்புடன் திரும்பி பார்த்தாள். அவன் அவள் அருகே தான் நின்று கொண்டிருந்தான். அவனை அருகில் கண்டதும் அவள் கண்கள் ஒளிர்ந்தது.
“தாங்கள் என்னருகே என்ன செய்கிறீர்கள் இளவரசே?”, என்று எங்கோ பார்த்து கொண்டு கேட்டாள் வான்மதி.
“உனக்கு உதவுவதற்காக வந்தேன் தேவி”, என்று கிசுகிசுத்தான் நரேந்திரவர்மன்.
“எனக்கு உதவியா? இப்போது நீராட தானே போகிறேன்? அதற்கு எதற்காக உதவி? தாங்கள் ஓய்வெடுங்கள்”, என்று செல்ல பார்த்தாள்.
“நானும் உன்னுடன் நீராட வருகிறேன் தேவி”
“என்ன? என்னுடனா? விளையாடாதீர்கள்? உங்களுக்கென்ற அமைக்க பட்டிருக்கும் தெப்பத்துக்கு சென்று நீராடுங்கள்”
“இன்று நாம் இருவரும் சேர்ந்து தான் நீராட போகிறோம்”, என்று கூறி கொண்டே அவளை தன் கைகளில் அள்ளி கொண்டான். அழுத்தி பிடித்ததால் அவன் கைகள் அவள் வெற்றிடையில் அழுத்தமாக பதிந்தது.
அவளும் குறுஞ்சிரிப்புடன் தன்னுடைய கரங்களை அவன் கழுத்தில் மாலையாக அணிவித்தாள்.
பூமாலையென மார்பில் கிடந்தவளை தூக்கி கொண்டே தெப்பத்தில் உள்ள படிகளில் இறங்கினான்.
நீரில் இறங்கியதும் இறக்கி விடாமல் கையிலே வைத்திருப்பதை பார்த்தவள் “இறக்கி விடுங்கள்”, என்றாள்.
“தவறு செய்து விட்டேனே? உன்னுடைய பட்டாடையை களையாமல் தண்ணீருக்குள் இழுத்து வந்து விட்டேனே?”, என்று கூறினான் நரேந்திரவர்மன்.
“மிக பெரிய வருத்தம் தான். ஆளை பாருங்கள். பட்டாடையை களைந்து விட்டு உள்ளாடையுடன் எல்லாம் என்னால் உங்கள் முன் நீராட முடியாது. இப்படியே நீராடலாம்”, என்று கூறி கொண்டே அவன் கைகளில் இருந்து நழுவி நீரில் விழுந்தாள்.
மீன் போன்று நீந்தி அந்த கரைக்கு சென்றாள். வாழை மீன் போன்ற உடல் கொண்டவளின் அந்த நீந்துதலை கண்டு சொக்கி போன நரேந்திரவர்மனும் அவனையே மறந்து நீரில் பாய்ந்தான். நீந்தி அவள் அருகில் சென்றவனின் ஈர மார்பை கண் கொண்டு காண முடியாமல் வெட்கம் கொண்டாள் வான்மதி.
அவனுடைய கம்பீரமான அந்த ஆண்மையில் மயங்கி போனாள். அவன் மார்பில் அணிந்திருந்த ஆபரணம் அவளுடைய கண்களை கூச செய்தது. அதை பார்த்து “கொடுத்து வைத்த ஆபரணம்”, என்று எண்ணி கொண்டு பெரு மூச்சு விட்டாள் வான்மதி.
“எதனால் தேவி இந்த பெருமூச்சு?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“தங்கள் மார்பில் இருக்கும் அணிகலன் கண்டு எனக்கு பொறாமை வருகிறது. அந்த ஆபரணமாக நான் இருந்திருக்க கூடாதா என்று எண்ணினேன் நாதா”, என்றாள் வான்மதி.
அவளுடைய விருப்பத்தை அறிந்து, அதுவும் அவள் நாதா என்று அழைத்ததையும் கண்டு கிறங்கி போனான் நரேந்திரவர்மன்.
“இதையே தான் நானும் எண்ணி கொண்டிருந்தேன் தேவி?”
“என்ன? இதையே வா? நான் ஆபரணங்கள் எதுவும் அணிய வில்லையே”
“ஆம், ஆனால் என் பொறாமை உன்னுடைய பெண்மையை மறைக்கும் அந்த ஆடை மீது”
அவன் கூறியதை கேட்டு வெட்கம் தாங்காமல் தன்னுடைய கைகளால் முகம் மூடி கொண்டாள்.
மென்மையாக அவள் கரங்களை பிரித்து எடுத்தவன் “முழுவதுமாக உன்னை தரிசிக்க எனக்கு பேராசை இருக்கிறது தேவி. ஆனால் அது கூட இப்போது நிகழ வேண்டாம். இந்த மேலாடையை களைந்து விட்டாவது எனக்கு தரிசனம் தரலாமே”, என்றான்.
அவனுடைய கோரிக்கையை நிறைவேற்ற ஆவல் எழுந்தாலும் வெட்கம் தடுத்தது. மௌனமாக இருந்தாள். அவள் மௌனத்தை சம்மதமாக எண்ணி கொண்டவன் அவளை எழுப்பி தன் அருகே நிறுத்தினான்.
நீர் இருவரையும் இடுப்பு வரை மூடி இருந்தது. எதிரில் நின்ற அவளின் பின் பக்கம் கரங்களை கொண்டு சென்றவன் அவளுடைய மேலாடையை முடிச்சை அவிழ்த்தான். அது அவிழ்ந்து விழும் முன் தண்ணீரில் கழுத்து வரை நீர் இருக்குமாறு மூழ்கி கொண்டாள்.
“இது நியாயமே இல்லை தேவி. உன்னை பார்க்க தான் நான் இதை செய்ததே. ஆனால் நீயோ நீரினுள் மறைந்து கொண்டால் எப்படி?”, என்று கேட்டான் நரேந்திரவர்மன்.
“எனக்கு வெட்கமாக இருக்கிறது”, என்று கூறி கொண்டே கண்களையும் மூடி கொண்டாள். அவளின் வெட்கத்தை ரசித்தவன் அவளை பழைய மாதிரி நிற்க வைத்தான். முழுவதும் களையாமல் இருந்த மேலாடையை தன் கரத்தால் இழுத்தவன் தூர எறிந்தான்.
ஒரு வெள்ளை துணி அவள் அழகை மறைக்க முயன்று தோற்று கொண்டிருந்தது. அந்த அழகை கண்டு தடுமாறி போனான் நரேந்திரவர்மன்.
வேகமாக நீந்தியதால் அவள் மார்பு வேகமாக ஏறி இறங்கி கொண்டிருந்தது. கண்களை அங்கிருந்து எடுக்க முடியாமல் இருந்தான் அவன். அவனிடம் இருந்து எந்த அசைவும் வராததால் கண்களை திறந்து பார்த்தாள் வான்மதி.
அவன் பார்வையில் நாணம் கொண்டவள் அங்கிருந்து நீந்தி செல்ல பார்த்தாள். ஆனால் அதை தடுக்க நினைத்து கையை அவள் மீது வைத்தான். அவளோ நீந்துவதில் குறியாக இருந்தாள். இருவர் முயற்சியில் அதே வெண்ணிற உள்ளாடை தோற்று கிழிந்து போனது.
அவன் கையோடு வந்துவிட்ட அந்த துணியை பார்த்தவனுக்கு உணர்வுகள் கிளர்ந்தன. அவள் அழகை காண அவன் உடலும் உள்ளமும் பரபரத்தது.
ஆனால் அதிர்ந்து போன வான்மதி அப்படியே நீரினுள் அமிழ்ந்து நின்று விட்டாள்.”இந்த நீர் இல்லாமல் இருந்திருக்கலாம் தேவி”, என்று புன்னகைத்தான் நரேந்திரவர்மன்.
“இருக்கும் இருக்கும். தாங்கள் இப்படி ஒரு செயலை செய்வீர்கள் என்று நான் எண்ணவில்லை. இப்படியே நான் எப்படி தெப்பத்தை விட்டு மேலேறுவது ? அதை தாருங்கள்”, என்று சிணுங்கலுடன் கேட்டாள்.
“நீ என்னருகில் வா. நான் தருகிறேன்”
“எதற்கு, அருகே வந்தால் தாங்கள் கை அடக்கி இருப்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அங்கிருந்தே என் ஆடையை தூக்கி போடுங்கள்”
“வரமாட்டாயா? சரி அப்படியே இருந்து கொள். ஆனாலும் எனக்கு இந்த துணியை பார்த்தால் கோபம் வருகிறது”
“என்ன கோபமா? என்ன உளறுகிறீர்கள்?”
“இது உன் அழகை என்னிடம் இருந்து மறைக்கிறதே. இன்று இது கிழிந்தது மனதுக்கு ஆனந்தமாக இருக்கிறது. உன் அனைத்து உள்ளாடைகளையும் என் வாள் கொண்டு கிழிக்க வேண்டும்”
“உங்கள் வம்பு தாங்க வில்லை இளவரசே? ஒரு வீரன் இவ்வாறு பிதற்றுவதா?”
“பள்ளியறையில் வீரனாக எந்த முட்டாளாவது இருப்பானா? உனக்கு சேவகம் செய்யவே விருப்பம் கொள்கிறேன் தேவி”
“ஒரு சேவகம் மட்டும் செய்யுங்கள்”
“என்ன இதை உனக்கு அணிந்து விட வேண்டுமா?”
“ஐயோ வேண்டாம் வேண்டாம். தயை கூர்ந்து அதை கொடுத்து விடுங்கள். இரவு நேரம் வந்து விட்டது. இன்னும் நீராடுவது சரி அல்ல”
“நிச்சயம் தர மாட்டேன். உன் அழகை கண்ணால் காண்பது மட்டும் தான் இப்போதைய என் குறிக்கோள்”
“நல்ல குறிக்கோள் தான். அதை தாங்களே வைத்து கொள்ளுங்கள். நான் செல்கிறேன்”, என்று கூறியவள் அடுத்த கரைக்கு நீந்தி சென்று விட்டாள். “எப்படியும் உடை இல்லாமல் நீரை விட்டு வெளியே செல்ல மாட்டாள்”, என்று எண்ணி மிதப்புடன் அதே இடத்தில் நின்றவன் “என்னிடம் இருந்து துணியை பெற்று கொண்ட பின்னர் தானே தேவி நீ வெளியே செல்ல முடியும்? அதற்கு நான் தந்தால் தானே? நீ என்னருகே வந்து வாங்கி கொள். இருவரும் வெளியே செல்லலாம். அப்படி இல்லை என்றால் நீரில் தான் இருக்க வேண்டும்”, என்று புன்னகைத்தான்.
“நீங்கள் மட்டுமே நீரில் இருந்து கொள்ளுங்கள். நான் சென்று விடுவேன்”
“எவ்வாறு செல்வாய்? உன் மேலாடை என் கையில் இருக்கிறது. மாற்று உடை அதோ தொலைவில் இருக்கிறது. அப்படி இருக்கும் போது எவ்வாறு செல்வாய்?
“இதோ இவ்வாறு தான்”, என்று கூறி கொண்டே அவனுக்கு முதுகு காட்டி தெப்பத்தை விட்டு மேலேறி சென்று விட்டாள்.
அவளுடைய இந்த செய்கையை எதிர்பார்க்காமல் திகைத்து போனான் நரேந்திரவர்மன். அவள் அப்படி எழுந்து செல்வாள் என்று எண்ணவே இல்லை.
போகும் அவளையே அவன் கண்கள் வெறித்தன. பளிங்கு போன்ற அவள் வெண்ணிற முதுகு அங்கிருந்த விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தது. அதுவும் குறுகி இருந்த வெற்றிடையும் சேர்ந்து அவனை ஊமத்தம் கொள்ள வைத்தது.
அங்கே இருந்த உலர்ந்த உடையை எடுத்து மார்பில் மூடி கொண்டவள் அவனை திருப்பி வெற்றி பார்வை பார்த்தாள்.
“அவள் எழிலகை தரிசிக்கும் பாக்கியம் கிட்டாமல் போய் விட்டதே”, என்று சிணுங்கியது அவன் மனது.
“இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கலாம்”, என்று நினைத்து வேகமாக வந்தவன் அவளை நெருங்க முற்பட்டான். அவன் செயலை யூகித்தவள் அருகில் உள்ள அறைக்குள் ஓடி சென்று உடை மாற்ற ஆரம்பித்தாள்.