நடு இரவு வேளையில் யாரும் இல்லாத அந்த ரோட்டில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது அந்த வாகனம். வழக்கமான வேகத்தை விட அதிகமாகவும் தடுமாறி கொண்டும் செல்லும் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தது நம் தீரன் தான்.
மனைவியின் பின்னால் செல்லும் மனதை அடக்க முடியாமலும், பழைய காதலை மறக்க முடியாமலும் தடுமாறியவன் தன் நிலை மறக்கும் அளவு குடித்துவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறான்.
சரியாக வீட்டிற்கு வந்தவன் தடுமாறி கொண்டே வீட்டிற்குள் வர அனைவரும் வேலை காரணமாக சீக்கிரமே படுக்க சென்றிருந்தனர்.
நேராக தன் அறைக்கு சென்றவன் அங்கு படுக்கையில் படுத்திருந்த தன்னவளை கண்டு சித்தம் கலங்கினான்.
வெள்ளை நிற இரவு உடையில் தேவதையாக உறங்கியவளின் அழகு அவனுள் ஏதேதோ உணர்வுகளை தோற்றுவிக்க, அவள் அருகில் சென்றவன் நெற்றி, கண்கள், மூக்கு, என ரசிக்க துவங்கி அடுத்ததாக அவள் இதழில் நிலைத்தது.
இளம்சிவப்பு நிறத்தில் ஆரஞ்சு சுளை போல் இருந்த அவளது இதழ் காலை நடந்த சம்பவங்களை நினைவுபடுத்த, உடல் சிலிர்த்தவன் மீண்டும் மலரிதழில் மடிய ஆசை கொண்டு அவள் இதழை முரட்டுதனமாக சிறை செய்தான்.
உறக்கத்தில் இருந்த ஸ்ரீ,இதழில் ஏற்பட்ட வலியால் முகத்தை சுழித்து கொண்டு கண்களை திறக்க, எதிரில் விழிகள் கிறங்க முத்தத்தில் திளைத்து போய் இருந்தவனை கண்டு திகைத்து, அவனை விலக்க முனைய,
அவன் பிடியோ உடும்பு பிடியாக மாறியது. வெகு நேரம் தொடர்ந்த முத்தத்தால் மூச்சு விட தடுமாறியவளின் நிலையை உணர்ந்தவன் இதழில் இருந்து விலகி, கழுத்தில் முகம் புதைக்க,
அவன் செயலில் விதிர் விதிர்த்து போய் எழ முயற்சித்தவளின் இடையில் கையிட்டு தன்னோடு இருக்கி “ஐ நீட் யூ…” என்றவன் குரல் ஆசையிலும் போதையிலும் கர கரப்பாக வர,
அவளோ என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினாள். கணவன்தான். மனம் கவர்ந்தவன். ஆனால்….. அவன் மனதில் தான் இருக்கிறோமா……என்றவள் யோசிக்கும் போதே கழுத்தில் உணர்வு மிகுதியில் அவன் கடித்ததில் வலி உண்டாக,
“ஆஆ…..” என்று அலறியவளின் உடைகள் ஆணவனால் கலைக்கப்பட, அதற்கு பின் யோசிக்கவும் அவனை தன்னிடம் இருந்து விலக்கவும் முடியாமல் போனது.
கணவனின் மோகத்தையும், வேகத்தையும் கண்டு அரண்டு போய் இருந்தவளுக்கு தானே உடையாக மாறி போனான் அவன்.
வெற்றிடையில் பதிந்த அவன் கரம் மனையாளின் உடல் முழுவதும் தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்க,
“ஹக்……” என்ற சத்தத்துடன் அவன் கண்களை எதிர் கொள்ள முடியாமல் உடல் குறுக்க முயன்றவளுக்கு முடியாமல் போக, விழிகளை தூக்கி அவன் முகம் பார்க்க, அதுவோ போதையிலும், அவள் மீது உண்டான மோகத்திலும் சிவந்து போய் இருந்தது.
இவன் என் காதல் கணவன். இவனுக்காக உள்ளதை கொடுப்பதில் என்ன தவறு என்று நினைத்தவள் தானே அவனுக்கு வளைந்து கொடுத்தாள். மீண்டும் அவன் இதழ் பெண்ணவள் இதழை மென்மையாக சிறை செய்ய,
மனம் கவர்ந்த மன்னவனின் இதழ் தீண்டல் மங்கையை உறைய வைத்தது.
பனிச்சிலை போல உறைந்து போய் இருந்தவளின் அடி வயிற்றில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் படபடத்து சிறகடிப்பதைப் போன்ற உணர்வு அவளைத் தாக்க, தன் கண்களை இறுக மூடிக் கொண்டவள் கணவனின் கரங்களில் மண் ஆகிப் போனாள்.
குயவன் மண்ணில் நீரை ஊற்றி குழைத்து தடவி பக்குவப் படுத்தி தனக்கு ஏற்ற வடிவத்தை உருவாக்குவதைப் போலவே,
தீரனும் தன் கைகளில் மண்ணாய் குழைந்தவளை தன் தூண்டலுக்கு ஏற்ப துலங்க வைத்துக் கொண்டிருந்தான்.
பெண்ணவள் மனமோ கணவனின் உடலுக்கு ஈடாக படபடக்கத் தொடங்கியது.
கணவனின் தொடுகையில் மேனி சிலிர்த்தது அவளுக்கு. அவனோ அவள் உடலின் சிலிர்ப்பை உணர்ந்து முகம் காண,
ஆணின் கண்களை எதிர் கொள்ள முடியாமல் சிவந்து போய் விழிகளை மூடிக் கொண்டாள்.
மனையாளின் காதருகில் சென்றவன் “ஷல்….. ஐ……” என்று கேட்க,அவளோ முகம் சிவக்க, இதழ் துடிக்க கண் மூடி இருந்தாள்.
மூடிய கண்களில் இதழ் பதித்தவன் “என்ன பாருடி…”என்க,
அவளோ அரை கண் திறந்து பார்த்ததில் சொக்கி போனவன் அதற்கு மேலும் பொறுமை இன்றி செயல் பட துவங்க, கண்ணோரம் வழிந்த கண்ணீரை கணவன் அறியாது துடைத்தவள் பல்லை கடித்து வலியை தாங்கினாள்.
ஆணவனின் வேகம் பெண்ணின் உடலை நடுங்க செய்ய, “கொஞ்சம் மெதுவா…..” என்றவளின் மென் குரலுக்கு “ஐ நோ…
பட் கான்ட்…” என்ற வார்த்தையே உறுமலாக வர ,அங்கு தொடர்ந்து ஸ்ரீயின் கொலுசு சத்தம் மட்டுமே ஒலிக்க துவங்கியது.
மீண்டும் மீண்டும் தன்னை நாடியவனின் ஆசை அளவை கண்டு பெண்ணவள் மலைத்துதான் போனாள்.
விடியலின் துவக்கத்தில் பிரிந்து படுத்தவன் நல்ல உறக்கத்திற்கு போக, ஸ்ரீயோ அடுத்து… என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலை யோசித்து கொண்டே குளிக்க சென்றாள்.
காலை பத்து மணி வரை உறங்கிக் கொண்டிருந்த தீரன் போன் அடிக்கும் சத்தத்தில் எரிந்த கண்களை தேய்த்து கொண்டே எழ தலை வலி விண் விண்னென்று தெரித்தது.
“ச்ச….. என்ன தலை இப்படி வலிக்குது. ஆஆ…..” என்று தலையைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவன். போன் தொடர்ந்து அடிக்கவும் அதை ஆன் செய்து காதில் வைத்தவன் “ஹலோ….” என்று கோபமாக சொல்ல,
அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ “ம்ம்…. ஓகே. நான் பார்த்துக்கறேன்” என்றவன் மணியை பார்க்க. அது பத்து என்று காட்டியது.
‘ஹோ…. காட். இவ்ளோ நேரம் தூங்கிட்டனா. முதல்ல கிளம்பனும்’ என்றவாறு போர்வையை விலக்கியவன் தான் இருந்த நிலையை கண்டு அதிர்ந்து மீண்டும் போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு, இரவு என்ன ஆனது என்று யோசிக்க, நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மங்கலாக நினைவு வந்தது.
‘சிட்….’ என்று தலையில் அடித்துக் கொண்டவன். பிரிந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு, காதலி என்று ஒருத்தியை காண்பித்துவிட்டு இப்போது இப்படி நடந்து கொண்ட, தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன், ஸ்ரீயை எப்படி எதிர் கொள்வது என்று தயங்கி பின் ‘எப்படியும் பார்க்கத்தான் வேண்டும்.
பேசி ஒரு முடிவு எடுக்கதான் வேண்டும்’ என்று பெரு மூச்சுடன் நினைத்தவன், அந்த அறையை சுற்றி பார்வை ஓட விட, அவன் மனையாள் அங்கு இல்லை.
‘ஸ்ரீ அங்கு இல்லாததால் புருவம் சுருக்கியவன். இவள் எங்கு சென்றாள்’ என்று யோசித்தவன் ‘ஒருவேளை கோவத்துல வீட்ட விட்டு போயிட்டாளோ’ என்று நினைக்கும்போதே பக்கென்று இருந்தது அவனுக்கு.
‘இல்ல…. கண்டிப்பா போய் இருக்கமாட்டா. கீழதான் இருப்பா. அங்க போய் பார்ப்போம்’என்றவன், உடனே வேகமாக குளித்து தயாராகி கீழே வர, அங்கு வேலையாட்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
மீனா சமையல் அறையில் நிற்பதை பார்த்தவன், ‘மீனாட்சி இங்கதான் இருக்கா. இவ எங்க போனான்னு தெரியலையே. என்று வீட்டை சுற்றிப் பார்த்தவன். அங்கு அவள் இல்லாமல் தோட்டத்திற்கு சென்று பார்க்க அங்கும் இல்லை.
உண்மையாகவே தன் மீது கோபத்தில் வீட்டை விட்டு சென்று விட்டாளோ என்று எண்ணியவன் அங்கிருந்த கல் பெஞ்சில் சோர்ந்து போய் அமர, அவன் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார் நந்தன். அவரைப் பார்த்த பின்பு உயிர் மீண்டவனாக மென்மையாக சிரித்தவன் “என்ன மாமா வாக்கிங்கா” என்று கேட்க,
அவரோ “பத்து மணிக்கு என்ன வாக்கிங் மாப்பிள்ளை. நீங்க ரொம்ப டென்ஷனா இருக்க மாதிரி தெரிஞ்சது. அதான் பிஸ்னஸ்ல எதுவும் பிரச்சனையோன்னு கேட்க வந்தேன்.
“ச்ச…ச்ச…. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா.ஸ்ரீகிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு பார்த்தேன். அவ எங்கயும் இல்ல அதான்….” என்று இழுக்க,
“அதான விஷயம் ஸ்ரீ கோயிலுக்கு போயிருக்காப்பா. இப்ப வந்துருவா முதலிலேயே கிளம்பிட்டா. ஏதோ பூஜைன்னு சொன்னாங்க. குமாரி தங்கச்சி தான் அனுப்பிவிட்டது” என்று சொல்ல அப்பொழுதுதான் நிம்மதியாக உணர்ந்தவன்,
“ஹோ…அப்படியா சரி மாமா. அவ வந்தவுடனே நான் பேசிக்கறேன்”என்றுவிட்டு தன்னறைக்கு சென்று லேட்டாப்பை எடுத்து கொண்டு ஹாலில் அமர்ந்து மனையாள் வருகைக்கு காத்திருக்க துவங்கினான்.
சற்று நேரம் கடந்து வீட்டிற்குள் நுழைந்த ஸ்ரீ முதலில் பார்த்தது ஹாலில் அமர்ந்திருந்த அவள் கணவனைதான். இரவு தான் எடுத்த முடிவின்படி அமைதியாக உள்ளே வர,
சீனியும் அப்போதுதான் அங்கு வந்தார். மனைவியை கவனிக்காமல் வேலையில் மூழ்கி போய் இருந்தவனிடம் வந்தவர் “என்னப்பா இன்னைக்கும் வேலையா”.
“நம்ம அக்கவுண்டண்ட் அங்கிள். அவர் பையன் கூட பாரின் போய்ட்டாரு. நாம வேற ஒருத்தர பார்க்கணும். அதான் உங்களுக்கு வேற யாரையும் தெரியுமான்னு….”
“என்னப்பா இப்படி சொல்லிட்ட. நம்ம அஷ்வின் கோயம்புத்தூர்ல ஒருத்தரை பார்த்துட்டேன்னு சொன்னானே. அவர் கூட நம்ம ஸ்ரீக்கு தெரிஞ்சவர்தான்னு சொன்னாங்க” என்று சொல்ல,
தீரனோ கோபமாக “என்னப்பா நீங்க. எவ்வளவு பெரிய விஷயம். அவன் சின்ன பையன் அவனை நம்பி விட முடியுமா? அவர் எப்படிப்பட்ட ஆளு. நேர்மையானவர்தானான்னு, நாம தெரிஞ்சுக்க வேண்டாமா”என்று கேட்க,
அப்போது அங்கு வந்த மீனா “அவர் ரொம்ப நல்லவர் அண்ணா” என்று வேகமாக சொல்ல, அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் “அது எப்படி உனக்கு தெரியும்” என்று கேட்க,
திரு திருவென விழித்தவள் “அது…அது….அ…அக்கா….ஸ்ரீஅக்கா சொன்னாங்க” என்று அங்கிருந்து ஓடி விட,
‘என்ன எல்லாரும் ஒரு மார்க்கமாவே இருக்காங்க’ என்றவன் யோசித்துக் கொண்டிருந்த சமயம் அஷ்வின் அங்கு வந்தான். ஸ்ரீ அவர்கள் பேசுவதை ஓரமாக நின்று பார்த்து கொண்டிருந்தாளே தவிர, எதுவும் பேசவில்லை.
தீரன், “என்ன அஸ்வின் புது அக்கவுண்ட் பார்த்து பேசினியா அவர் யாரு? என்னன்னு? முதல்ல நல்லா விசாரிச்சியா நம்பகமான ஆளு தானா”.
“எல்லாம் விசாரிச்சுட்டேண்ணா. நல்லா தெளிவான ஆளு நிறைய பெனிஃபிட்டோட தான் இதுவரைக்கும் கொண்டு போயிருக்காரு. பத்து கம்பெனிகள பாத்துட்டு இருக்காரு. எல்லாம் பெரிய பெரிய கம்பெனிகள். நான் சொல்லிட்டு வந்து இருக்கேன். ஆனா இன்னும் அவர் ஒத்துக்கல, யோசிச்சு சொல்றேன்னு தான் சொல்லி இருக்காரு”.
சீனி, “நானும் கூட விசாரிச்சேன் தீரா. நல்லவிதமாதான் தெரியுது. பெரிய ஆள் இல்ல. சின்ன பையன்தான். ஆனா திறமை இருக்கு. அவர் ஒத்துக்கிட்டாருன்னா பரவால்லைன்னுதான் எனக்கு தோணுது” என்று கூற,
தீரனுக்கோ ஆச்சரியமாக இருந்தது. “ஏன் யோசிச்சு சொல்றேன்னு சொன்னாரு. நம்ம கம்பெனி மாதிரி பெரிய கம்பெனிய பார்க்க அவருக்கு என்ன கஷ்டமாம்”.
அஷ்வின், “அவருக்கு உடம்பு முடியலையாம் அண்ணா. அதனால தான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்காரு”என்று சொல்லி கொண்டிருந்த சமயம்,
நித்யாஅவர்கள் அருகில் வர, மனையாளை கண்டு அமைதியாகி போனான் தீரன். அவனை கண்டுகொள்ளாமல் மற்றவர் அனைவருக்கும் பிரசாதத்தை கொடுத்தவள் திரும்பி செல்ல போக,
அவளை தடுத்த சீனி “தீரன் எடுத்துக்கலம்மா. அவனுக்கும் குடு” என்க,
சம்மதமாக தலையசைத்தவள் அவன் அருகில் செல்ல, அவளை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறியவன் தலையை லேப்டாப்பிற்குள் புகுத்தி கொள்ள, அவன் முன் அவளது மென் கரங்கள் நீட்டப்பட்டது.அதை எடுத்து கொண்டவன், “எனக்கு ஒரு போன் பேசணும். நான் மேல போறேன்” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட,
கணவனின் முதுகை வெறித்தவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள்.
அவர்கள் அறைக்கு வந்தவன் மனைவியிடம் என்ன பேசுவது. எப்படி துவங்குவது என்று புரியாமல் தலையில் கை வைத்தவாறு அமர்ந்துவிட்டான்.
சற்று நேரம் கடந்து அறைக்குள் வந்த ஸ்ரீ. தீரன் அமர்ந்திருக்கும் நிலை கண்டு பெரு மூச்சுவிட்டு, அவன் அருகில் சென்று “ம்கூம்….” என்று கனைக்க,
அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏதோ பேச துவங்க, அவனை பேச வேண்டாம் என்பது போல் சைகை செய்தவள் “நான் முதலில் பேசிடறேன்” என்க,
அவனும் அமைதியாக அவள் பேசுவதை கவனிக்க துவங்கினான்.
“நான் பாரின் போலாம்னு இருக்கேன்” என்றவளை அவன் ஆராய்ச்சியாக பார்க்க,
“ஒன்னும் பயப்பட வேண்டாம். அதான் கல்யாணம் முடிஞ்சுடுச்சே. காலேஜ் படிக்கும்போது ஒருத்தர் என்னை லவ் பண்ணுனாரு அவர போன மாசம் சென்னைல நடந்த கான்பிரன்ஸ் மீட்டிங்ல பார்த்தேன். இன்னும் எனக்காக வெயிட் பண்றதா சொன்னான். இன்னும் ஒன்பது நாளுக்கு அப்புறம் எப்படியும் இந்த வீட்டவிட்டு போக போறேன். அதான் அடுத்து என்னன்னு பிளான்பண்ணிட்டேன்.
தீரன், “ம்கூம்…. எல்லாம் தெளிவா முடிவெடுத்துட்ட போல” என்று கனத்த மனதோடு கேட்டவனுக்கு ஏனோ மனம் பாரமானது.
“ஆமா. என் வாழ்க்கையை பத்தி நான் யோசிக்காம வேற யார் யோசிப்பா”.
“ரைட்…. ஆனா……” என்று தடுமாறியவன் “நே…நேத்து…. நைட்…”.
“அது ஒரு ஆக்சிடண்ட். அதை ரெண்டு பேருமே மறந்தர்றது நல்லது. நீங்க என்ன நினைக்கறீங்க” என்றவள் சொல்லும்போதே அவன் நிலை மோசமாக துவங்கியது.
நடந்த விஷயங்களை மறந்து அவளிடம் உண்மையை சொல்லி, தங்கள் வாழ்க்கையை துவங்கிவிடலாம் என்று எண்ணி இருந்தவனுக்கு அவளது பேச்சு தலையில் இடியை இறக்கியது போல் இருந்தது.
பேச முடியாமல் தடுமாறியவன் அடைத்த தொண்டையை செருமி சரி செய்து “இ…. ம்கூம்…இ…இந்த விஷயம் உன் காதலனுக்கு தெரிஞ்சா”.
“சோ…எல்லாம் தெளிவா பேசி முடிவெடுத்துட்டுதான் வந்திருக்க” என்று கேட்டவனுக்கு மூச்சு முட்டும் உணர்வு ஏற்பட, நெஞ்சை தடவி அதை சரி செய்து கொண்டவன் சிவந்த தன் கண்களை அவளுக்கு காட்டாமல் திரும்பி கொண்டவன் “சரி. ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் வெளிய போயிட்டு வரேன்” என்றவன் கதவை நோக்கி வேகமாக நடக்க,
“நீங்க ஒன்னும் சொல்லலையே” என்றவள் கேள்வி அவன் நடையை தடை செய்ய,
அப்படியே நின்று “அதான் எல்லாம் தெளிவா யோசிச்சு முடிவெடுத்துட்டியே நான் என்ன பேச. உன் விருப்பம்” என்றுவிட்டு திரும்பாமலே சென்றுவிட,
முகத்தில் எதையோ சாதித்த உணர்வுடன் அவன் முதுகையே வெறித்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.
“ம்ம்…. இப்போ கூட வாய திறந்து, நீ என் பொண்டாட்டிடி. நீ எனக்குதான், எனக்கு மட்டும்தான். எவனுக்கும் உன்னை தூக்கி குடுக்க முடியாதுனு உங்களால சொல்ல முடியல்லல, சொல்ல வைக்கறேன்.
உங்க மனசுல நான் இருக்கேங்கற விஷயம் நேத்துதான் கன்பார்ம் ஆச்சு’ என்று நினைத்தவள் கை கழுத்தில் அவனால் உண்டான காயத்தை தடவ, வெட்கத்தில் முகம் சிவந்து போனாள்.
‘நைட்டு நிதி…. நிதினு கொஞ்சிட்டு. அத்தனை லவ் யூ சொல்லிட்டு, இப்போ வாய திறக்கராரா பாரு’ என்று முணு முணுத்தவள் துள்ளலுடன் வெளியே ஓடி வர,
எதிரில் வந்த அஷ்வின் மீது மோதி நின்றாள். தோழி முகத்தில் இருக்கும் குதூகலத்தை கண்டவன் என்ன விஷயம் என்று கேட்க,
அவளும் தனது பிளானை சொல்ல, நெஞ்சில் கை வைத்தவன் “இது சரி வருமா நித்தி. இதுனால எதுவும் பிரச்சனை வர போகுது”.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பயப்படாம வா” என்றவள், கணவனின் காதலை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் சந்தோசமாக சுற்றி வர துவங்கினாள்.
ஸ்ரீ நினைப்பது போல் தீரன் மவுனம் கலைப்பானா, இல்லையென்றால் அவளது நிலை என்ன பொருத்திருந்து பார்ப்போம்.