ஷண்முகம், அப்படி சொன்னதும் முதலில் எழுந்துவிட்டாள் பெண்.. பின்னர், ஈசனின் அசையா பார்வையை உணர்ந்து.. “சஹா, வா சாப்பிட போலாம்” என அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள், கிருபா.
ஷண்முகம் ஈசனை முறைத்துக் கொண்டே, திண்ணையில் சென்று அமர்ந்தார். ஈசனுக்கு சண்முகத்தின் மேல் கோவம்மில்லை.. கிருபாவின் மீது கோவம் வந்தது. அதனால், சண்முகத்திடம் ஏதும் பேசாமல் அமர்ந்துக் கொண்டான்.
இப்போது மீனாட்சி, ஊருக்கு கிளம்பினார். சண்முகம் இங்கே நாளை ஒருவரை பார்க்க வேண்டி இருப்பதால்.. தங்கிக் கொண்டார். மீனாட்சிக்கு லீவ் இல்லை.
வழியனுப்ப அங்கே வந்த அருணாசலமும் அங்கே அமர்ந்தார், மகனின் அருகே. ஷண்முகம் அதற்காகத்தானே காத்திருந்தார் “என்ன ப்பா, சொல்றீங்க.. சதீஷ் நல்ல பையன். மீனாட்சியோட சொந்தம், அடுத்து என எந்த கமிட்மென்ட்டும் இல்லை.. நீங்க என்ன சொல்றீங்க” என்றார்.
அருணாசலம் “ஷண்முகா, உண்மையை சொல்லவா..அப்படி என்ன கிருபாவை, அவர்களுக்கு கொடுக்க வேண்டுமா? அத்தோட, நாம கிருபாவிற்கு முதலில் சொந்தத்தில்தான் பார்த்தோம். அ..ப்போது, மீனாட்சி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இதென்னமோ எனக்கு சரியாக வரும் போல தோன்றவில்லை ப்பா..” என்றார்.
சண்முகம் “இதெல்லாம் அனியாயம் சொல்லிட்டேன். அப்போது, மீனாட்சிக்கு தெரியாமல் இருந்திருக்கும் ப்பா, அதான் சதீஷ் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு இருந்தானாமே. அதனால், கேட்டிருக்க மாட்டாள்.” என ஏதேதோ பேசி சமாதனாம் செய்தார்.
தந்தை அருணாசலம் “இல்ல ஷண்முகா, அவன் தம்பிக்கு பார்த்த போது ஏன் கிருபாவை தெரியவில்லை. விடு, எனக்கு திருப்தியில்லை. இன்னும் கொஞ்சநாள் போகட்டும். இதை இனி பேசாத விட்டுட்டு” என்றார்.
சண்முகத்தின் முகம் வாடித்தான் போனது.
சற்று நேரம் அமைதியாக இருந்தனர் இருவரும்.
பின் சண்முகம் தந்தையிடம் “அப்பா, சொத்தை ஏன் இப்போவே பிரிச்சீங்க, நீங்க என்னமோ ஒரு அவசரத்தில் செய்தது போல இருக்கு. என்கிட்டே எப்போதும் கேட்பீங்க, ஆனால், இப்போவெல்லாம் ஏதும் சொல்றதில்லை. நீங்களாகவே இதை செய்துட்டீங்க..” என்றார்.
அருணாசலம் தன் பெரிய மகனையே பார்த்தார்.. மகன் சொல்லுவது உண்மை என தோன்றியது. ஆமாம் எப்போதும் இவனில்லாமல் எந்த முக்கிய விஷயமும் நான் செய்ததில்லை.. ஷங்கர் எப்போது போனானோ அப்போது முதல் பெரியவன் கொஞ்சம் நெருக்கமாகிவிட்டான்தான். ஆனால், இது சொத்து சம்பந்தப்பட்டது. இதை நான் இவனிடம் மட்டும் கேட்டு முடிவு எடுக்க கூடாதே.. என எண்ணிக் கொண்டவர்.. அதையும் தன் மகனிடம் சொன்னார் “ச்ச ச்ச அப்படி எல்லாம் இல்லை ஷண்முகா, இது உயில் சம்பந்தப்பட்டது. உங்க அம்மாவையே நான் கலந்துக் கொள்ளவில்லை. அதான் உன்னிடமும் சொல்லலை. இது முழுக்க முழுக்க என் கருத்தில் மட்டுமே நடக்க வேண்டியது, அதுதான் யாரிடமும் பேசலைம் ப்பா..” என்றார்.
சண்முகம் எதோ ஒரு விலகளை தந்தையிடம் உணர்ந்தார் போல.. ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். தந்தைக்கும் மகனிடம் என்ன பேசுவது என தெரியவில்லை. ஒருமாதிரி இறுக்கமான சூழ்நிலை இருவருக்கும்.
தந்தைக்கோ.. நல்லவிதமாக பேச வேண்டும் என எண்ணம். ஆனால், சண்முகம் கேட்ப்பான என யோசனையில் இருந்தார். அதை கேட்கவும் செய்தார் “ஏன் ஷண்முகா, உனக்கு எதாவது நான் எழுதியிருப்பதில் அதிருப்தி இருக்கா” என்றார்.
சண்முகம் தந்தையையே பார்த்தார்.
அருணாசலம் “சொல்லு ப்பா.. தயங்காதே” என்றார்.
சண்முகம் “அதில்லப்பா, சங்கருக்கும்.. அவனின் மகனுக்கும் இத்தனை உரிமை உண்டாப்பா உங்ககிட்ட” என்றார், அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதே போல, தந்தையின் நடவடிக்கைகள்.. மூலம் ஈசனும் இந்த குடும்பத்தில் ஒருவருன் என்றாலும்.. எனக்கு நிகரானவனா? என்பதை அவரால்.. ஏற்கவே முடியவில்லை. அதை தந்தையிடம்.. மௌனமாக.. எதிர்ப்பாக சொல்லிவிட்டார். தந்தை அதை கண்டுக் கொண்டதாக தெரியவேயில்லை, அதனால், நேரடியாக கேட்டார்.
அருணாசலம் “கண்டிப்பா உண்டு.. பிள்ளைகள் தவறு செய்யலாம், பெற்றவன் ஒதுக்கலாமா ஷண்முகா. ஒதுக்கி வைச்சிட்டேன், அவனும் கஷ்ட்டபட்டுட்டான். அதைவிடவும் உடல் வாதையில் வந்தான்.. என்கிட்ட வந்து நிக்கிறான். நான் எப்படி வேண்டாம்ன்னு சொல்ல முடியும். அத்தோட, அவனின் பிள்ளைகள் அனாதையாக நின்னால், நமக்கு தானே ப்பா.. பாவம். நல்ல பசங்க ஷண்முகா. உன் தம்பியோட பசங்க.. நீ பார்த்துக்க மாட்டியா.. நம்ம மனசு என்ன.. அவ்வளவு சின்னதா..” என்றார் அர்த்தமான குரலில்.
ஆனால், ஷண்முகத்திற்கு கோவம் தீரவில்லை.. “அப்பா உங்களுக்கு என்னோட வருத்தம் புரியாது. நான் இங்கே இருந்தேன்.. இந்த குடும்பத்திற்காக நின்னேன். என்னை நீங்க கொஞ்சமும் மதிக்கலை தானே. அதை எப்படி சொல்றது. குடும்பமே முக்கியமில்லைன்னு போனவனும்.. குடும்பம்தான் முக்கியம்ன்னு.. என் வயது.. லட்சியம்.. கனவு.. எல்லாவற்றையும் குடும்பத்திற்காக தொலைத்த நானும் ஒண்ணுன்னு சொல்லறீங்க.. அது சரியில்லையில்ல அப்பா” என்றார் எங்கோ பார்த்துக் கொண்டே.
தந்தையினால் புரிந்துக் கொள்ள முடிகிறது.. ஆனால், பதில் சொல்ல முடியவில்லை. சண்முகம் கேட்பது.. ஒரு உணர்வு சார்ந்த விஷயம்.. அவர் ஜாதி பேசவில்லை.. காசு பணம் பற்றி பேசவில்லை.. அவர் இறந்தகாலத்தில்.. தான் பொறுப்போடு குடும்பத்தை காக்க என இருந்து.. தவறவிட்ட நிமிடங்களை பற்றி கேட்க்கிறார் தந்தையிடம். ம்.. எல்லாம் எனக்கு.. என் குடும்பம் என இருந்தேன்.. அவன் எந்த பொறுப்பையும் பார்க்கவில்லை. முடிவில் இந்த குடும்பம் எனக்கும்.. அவனுக்கும் ஒரே தராசின் அசையாத பங்குளை தருகிறதே.. இது நியாயமா என கேட்க்கிறார். பதில் சொல்ல முடியவில்லை தந்தைக்கு.
தேவையான நேரத்தில்.. அமைதியாக அருகேயே நின்றவன் சண்முகம். தெரிகிறது.. நீயும் முக்கியும்தான்.. எங்களுக்கு என தெரிகிறது அருணாசலத்திற்கு..’ ஆனால், வார்த்தைகளால் சொல்ல தெரியவில்லை. அமைதியானார், தந்தை.
ஒருவரை ஒதுக்கி வைப்பதால், இன்னொருவருக்கு கௌரவம் காக்கப்படும் என ஒரு சமுதாயம் நம்பினால்.. அது மூடநம்பிக்கைதானே. அதுதான் சண்முகத்தின் நிலை. எனக்கும் ஷங்கருக்கும் ஒரே.. கௌரவம் கிடைக்கிறது என்பதைத்தானே அவரால் ஏற்கவே முடியவில்லை. கௌரவம் என்பது.. ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு கொடுக்கப்படுவது அல்ல.. அது அவரவர்க்கானது.
தந்தைக்கு பதில் சொல்ல முடியவில்லை.. அமைதியாகவே அமர்ந்துக் கொண்டார்.
ஷண்முகத்திற்கு, தந்தையின் அமைதியில் ஒரு திருப்தி… கேட்க்க நினைத்ததை கேட்டுவிட்டேன் என ஒரு நிம்மதி. வெடுக்கென எழுந்து உள்ளே சென்றார். பாவம் அருணாசலம் சூழ்நிலை கைதியானார்.
பிள்ளைகள் மூவரும் உண்டு முடித்து.. திண்ணையில் பார்க்கும் வரை தாத்தா அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தார். மூவரும் வந்து பேச்சு கொடுக்க்வும்தான், தன் சிந்தனையை விடுத்து.. சற்று பேச தொடங்கினார் தாத்தா.
பேசி முடித்து, தாத்தாவும் பாட்டியும் உறங்க சென்றனர். சஹா, ஈசன் கிருபா கோகிலா என நால்வரும் பேக்கிங் வேலையை தொடங்கினர். ஈசனுக்கு, நாளை நடுநிசியில் விமானம்.. வெளிநாடு செல்ல. காலையில் பெங்களுர் கிளம்ப வேண்டும், அதனால், இப்போதே வேலையை தொடங்கினர்.
கிருபாவும் சஹாவும் அப்படியே படுத்துக் கொண்டு அரட்டை அடிக்க.. ஈசன் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். கோகிலாதான் உடைகளை மடித்து.. பொருட்களை எடுத்து கொடுத்து.. என உதவிக் கொண்டிருந்தார். பேசி பேசி அதுவும் மூன்று மணிவரை இழுத்தது.
காலையில் எட்டு மணிக்கு ஈசன் எழுந்து வர.. சஹா “அண்ணா, சீக்கரம் கிளம்பு கோவிலுக்கு போகணுமாம்” என்றாள்.
ஈசன் “என்னவாம் அவளுக்கு. ஊருக்கு போகும் நேரத்தில்.. டைம் இருக்காது.. சஹா சொல்லு அவகிட்ட” என்றான், இயல்பாக.
சஹா, அண்ணனை ஒருமாதிரி பார்த்துக் கொண்டே நின்றாள், பேச்சில்லாமல்.
ஈசன் ‘உளறிடமோ..’ என எதையும் காண்பித்துக் கொள்ளாமல், எழுந்தான். பேசாமல் பாத்ரூம் சென்றுவிட்டான்.
சஹா, அண்ணனின் அமைதியில் இன்னும் அதிகமாக யோசித்தாள்.
பாட்டி, ஈசன்.. சஹா.. கிருபா என நால்வரும் ஈசனின் காரில்.. ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றனர். கொற்றாவலீஸ்வரர் கோவில். அருமையாக தரிசனம் முடித்து பிரகாரம் வலம் வந்தனர்.. பாட்டியால் முழுவதும் நடக்க முடியாது ஆதலால்.. அமர்ந்துக் கொண்டார். பிள்ளைகள் மூவரும் வலம் வந்தனர்.
சற்று தூரம் சென்று.. கிருபா ஈசனை அழைத்து நிறுத்தினாள்.
காலையிலிருந்து.. அண்ணனை கவனித்துக் கொண்டிருந்த சஹா, கிருபாவின் அழைப்பில்.. ஷன நேரம் நின்றவள்.. ஏதும் கண்டுக் கொள்ளாமல் முன்னே நடந்து சென்றுவிட்டாள்.
கிருபா, ஈசனை முறைத்தாள்.. கண்கள் லேசாக சிவக்க ஆரம்பித்தது.. தன் கையில் வைத்திருந்த ஒரு சின்ன பர்ஸிலிருந்து.. ஒரு ரோஸ் நிற காகிதத்தை பிரித்து.. ஒரு வெள்ளி காப்பினை எடுத்தாள் பெண்.
ஈசனின் முகம் மாறி போகிற்று.. புன்னகையில்.. “என்ன டா இது” என்றான்.
கிருபாவிற்கு புன்னகையும் கண்ணீரும் கலந்து முகம் விகாசித்தது..
ஈசன் விரல்களை அழுத்திபிடித்துக் கொண்டான். கிருபாவின் விரல்கள் அவனின் கைகளில் சிறைதான்பட்டது, காதலால்.
ஈசன் “ம்.. கிளம்பலாம்.. வா” என சொல்லி அவளின் விரல்பிடித்துக் கொண்டே மீதி தூரத்தை கடந்து வந்தனர்.
பாட்டியும் சஹாவும் அமர்ந்திருக்க.. இருவரும் இயல்பாக வந்து அருகில் அமர்ந்துக் கொண்டனர். சஹா.. என்ன என இருவர் முகத்தையும் ஆராய்ந்தாள். கைகளை பார்க்கவில்லை. அவளுக்கு கிருபாவிடம் வித்யாசம் தெரிய.. எதோ என நூல் பிடித்துக் கொண்டாள்.
நால்வரும் கிளம்பி வந்தனர் வீட்டிற்கு, வந்து சேர்ந்தனர். காலை உணவினை விடுத்து.. மதிய உணவாகவே எடுத்துக் கொண்டனர் சஹாவும் ஈசனும். உண்டு கொடிருந்தனர், கிருபா பரிமாறிக் கொண்டிருந்தாள்.
பாட்டி, அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தார் இருவரிடமும்.
சண்முகம், வெளியே சென்றிருந்தவர்.. ஈசனும் சஹாவும் கிளம்பும் நேரம் வந்தார். பட்டாசாலையில் எல்லோரும் நின்றனர்.. தாத்தா “உடம்பை பார்த்துக்கோ..” என பேரனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
சண்முகம் ஒரு கிண்டல் பார்வை பார்த்து உள்ளே சென்றார். டைனிங் டேபிளில் அமர்ந்தார்.. “கண்ணம்மா காபி கொடு” என்றார்.
இப்போது கிருபா ஈசனிடம் கண்களால் “சொல்லிக்கோங்க” என்றாள்.
ஈசன்.. நக்கலாக அவளை பார்த்து நின்றான்.
தாத்தா “என்ன ப்பா” என்றார்.
ஈசன் தாத்தாவிடம் “உங்க பேத்தி.. சமாதானம் பேச சொல்றா” என்றான், அவருக்கு மட்டும் கேட்க்கும் குரலில்.
தாத்தா கிருபாவினை பார்த்தவர்.. சத்தமாக “ஈசா, சண்முகத்திடம் சொல்லி கொண்டு வா” என்றார்.
வீடே ஈசனை பார்த்தது.. ஈசனுக்கு போவதை தவிர வேறு வழியில்லை. ஈசனும், டைனிங் அறைக்கு சென்றான்.
ஷண்முகம் காபி குடித்துக் கொண்டிருந்தார்.. அவன் வருவது தெரியவில்லை.
சண்முகம் புருவம் உயர்த்தினார்.. ஒரு ஷணம், மீண்டும் அதே நக்கல் புன்னகை.. லேசாக உதாசீன சிரிப்பு.
பார்த்த ஈசனுக்கு.. என்னமோ போலாக “என்ன நினைக்கிறீங்க சொல்லிடுங்க..” என்றான்.
சண்முகம் “ஒண்ணுமில்ல.. இந்த டிராமா எல்லாத்தியும், அத்தோட நிறுத்திக்கோ.. ம்.. அதுதான் உன் லிமிட்..” என நக்கலாக மொழிந்தவர்.. மீண்டும் காபியில் கவனமானார்.
சண்முகம் “டேய்.. கிளம்பு.. உன் கதையை யாரும் கேட்க்கலை..” என எழுந்தார் ஆவேசமாக.
கண்ணம்மா அக்கா பதறினார்.
பட்டாசாலையில் இருந்தவர்களும்.. இவர்கள் மேல் இரு கண் வைத்திருக்க.. கோகிலா உள்ளே வந்தார் சத்தம் கேட்டு.
ஈசனோ, அவரின் வார்த்தையில் பற்றிக் கொண்டான்.. சண்முகத்தின் எதிரே வந்து நின்றவன்.. சத்தமாக “நீங்கதான் டிராமாவை நிறுத்தனும்.. இன்னும் கிருபா மேல் பிரியம் இருப்பது போல நீங்க போடுற ட்ராமாவை நிறுத்துங்க. எங்க அப்பாவை.. குடும்பத்தோட சேர விடாமல் செய்தது போல.. இப்போ நீங்க கிருபாவிற்காக போடும் டிராமாவை நிறுத்துங்க. வந்தது போனதுன்ற.. ஜாதகத்தை எல்லாம் கொண்டு வராதீங்க.. புரியுதா.. எங்க அப்பாவின் வாழ்க்கையில் நீங்க பண்ண டிராமாவே போதும். அதற்கே.. எல்லோரும் ஆடிட்டோம். இன்னமும் கிருபாவின் வாழ்வில் நீங்க எந்த சீனும் கிரியேட் பண்ணாதீங்க. அது நடக்கவும் நடக்காது, நானிருக்கும் வரை. நான் டிராமா போடுரேனாம்.. அத்தை, இவர் பேச்சை நம்பி.. அவளை கேட்க்காமல் ஏதும் செய்திடாதீங்க.. நான் டிராமா போடுறேனாம்..” என கோகிலாவை பார்த்து இறுதி வார்த்தைகளை பேசி ஞாயம் கேட்டான் ஈசன்.
சண்முகம் “ஓ.. இப்போதானே புரியுது..” என இப்போது வந்து நின்ற தந்தையை பார்த்தார் ஷண்முகம். அருணாசலம் தாத்தா.. ஓய்ந்து போனார்.. பங்களின்னா சரியாக இருக்கிறது. அதுவும்.. ஈசனும் சண்முகமும் ஒரே தராசு என நினைத்தவர்.. பெரிய மகனின் பார்வையை தாங்க முடியாமல் நின்றார்.
சண்முகம் “என்ன ப்பா.. இது.” என்றார்.
தாத்தா பதிலின்றி நின்றார்.
ஈசனுக்கு, எல்லோரையும் பார்த்ததும்தான் என்ன நடந்திருக்கும் என புரிந்துக் கொள்ள முடிந்தது.. தலையை கோதிக் கொண்டே.. பின்னால் இரண்டடி சென்றவன்.. அப்படியே பட்டாசாலையில் சென்று அமர்ந்துக் கொண்டான்.
கிருபாவிற்கும் தாத்தாவிற்கும் பார்வையால் கூட எந்த உணர்வையும் காட்ட முடியாத நெருக்கடி. எல்லோரும் கிருபாவையே பார்த்தனர்.
சண்முகம், தன் தந்தையையே பார்த்தார்.
அருணாச்சலத்திற்கு முடியவில்லை.. பட்டாசாலையில் வந்து அமர்ந்தார்.
ஷண்முகம் “கோகிலா, என்ன நடக்குது தெரியுதா” என்றார்.
கோகிலாவிற்கும் பாட்டிக்கும், ஈசனுக்கு.. கிருபா மீதிருக்கும் அக்கறையா.. இல்லை வேறேதுமா என புரிந்தும் புரியாத நிலை.. ஒருபக்கம் சந்தோஷம் ஒருபக்கம் பயம் என கலவையான உணர்வில் நின்றனர்.
சஹா, அண்ணனின் அருகே சென்று நின்றாள்.. ஏதாவது கேட்க்கலாமா என பார்க்க.. ஒன்றும் முடியவில்லை.
சண்முகம் பரபரப்பாக நின்றார்.
தாத்தா “ஈசா, நீ கிளம்பு மனியாகிடுச்சி” என விரட்டினார்.