அத்தியாயம் 6

“இவ்வளவு நேரம் எங்கடி போன?” உன்னோட புருசன் தான செத்து ஆவியா வந்தான். இப்ப பாரு. அவன் ஆவி கதறப் போவதை என்று சுபிதன் அம்மா சொல்ல, அவன் உங்க பையன் என கத்தினாள் மிருளாலினி.

“என்னடி கத்துற?” என்று அவள் முடியை பிடிக்க வந்த சுபிதனின் அம்மா கையை இறுக பற்றினான் தமிழினியன். பூஜை செய்யும் மாந்திரீகவாதிகள் அவனை பார்த்து, “இவர்களை வெளியே துரத்துங்க” என்று கத்தினார்.

“துரத்தணுமா? இவ கெட்ட கெட்ட கேட்டுக்கு இன்னொருவன் வேறையா?” அவன் அம்மா பேச, சுபிதனின் அண்ணன் மிருளாலினியை கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தான். அவன் ஆட்கள் சிலர் அங்கே இருந்தனர்.

“வெளிய துரத்துங்க” மாந்திரீகர் கத்த, சாமி அவனை போல் இவனையும் கொன்று விட்டால் போச்சு என்று சுபிதன் அண்ணன் சொல்ல, “யாரும் இவர் பக்கத்துல்ல வரக் கூடாது” என்று தமிழினியனை மறைத்து நின்றாள் மிருளாலினி. அவன் உயரத்திற்கு இவள் சிட்டுக்குருவியாக இருந்தாள்.

அவளை பார்த்து மற்றவர்கள் சிரிக்க, தமிழினியன் குனிந்து..முதல்ல அவன் சொன்னதை செய். நான் இவங்களை பார்த்துக்கிறேன்.

“உங்களால தனியாக சமாளிக்க முடியுமா?” அவள் கேட்க, ம்ம்..பண்ணலாம். “நீ சீக்கிரம் எடுத்துட்டு வா” என்று அவன் செல்ல, அவள் அறைக்கு ஓடினாள். அவள் பின்னே சுபிதனின் அண்ணனும் சென்றான். தமிழினியன் நன்றாக சண்டை செய்தாலும் அவன் கண்கள் மிரு பின் சென்ற சுபிதனின் அண்ணன் மேல் கங்காய் இருந்தது.

சுபி..சுபி..என்று மிருளாலினி கத்த, அவ்விடம் வந்தது சுபிதனின் ஆன்மா. ஆனால் ஆன்மாவை அவர்கள் கட்டுக்குள் வைக்க, மிருளாலினி மேலும் கத்தினாள்.

தமிழ், “மிருகிட்ட போ” என்று கத்தியது ஆன்மா. அவன் அறைக்கு செல்ல, அவனிடம் அடி வாங்கியவர்கள் அவன் பின் வந்தனர். நொடிக்குள் உள்ளே சென்ற தமிழினியன் கண்டது மிருவின் ஆடை களைந்த தேகத்துடன் அவளது கதறல்.

சுபிதன் அண்ணனிடம் வந்த தமிழினியன் அவனை எட்டி உதைத்தான். அவன் தள்ளிச் சென்று விழ, மிருளா..என்று அவளிடம் சென்று அவளை தூக்கி விட்டு அவன் சட்டையை அவளிடம் கொடுத்தான். அவன் தலையில் வழிந்த இரத்தத்தை தொட்டு பார்த்து, இவனை நான் பார்த்துக்கிறேன். நீ எடுத்து வை என்று சொல்ல, அவள் சோர்வுடன் அமர்ந்தாள்.

அவளை பார்த்து விட்டு சுபிதனின் அண்ணனை விட்டு விலாசினான். அவன் தமிழினியனுக்கு பயந்து வெளியே வர, அவன் ஆட்கள் உள்ளே வந்தனர். அவர்களையும் அவன் விட்டு வைக்கவில்லை. எல்லாரும் சுருண்டு கிடக்க, மிருளாலினி பயத்தில் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். கண்களை மூடி திறந்த தமிழினியனுக்கும் மிருளாலினிக்கும் சுபிதனின் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது.

“சுபி” என்று அவள் பதற, அவளை விலக்கி விட்டு, அவர்கள் அறையிலிருந்த குளியலறைக்கு சென்று குடத்து நீரை எடுத்து வந்து பூஜை நடக்கும் இடத்தில் ஊற்றி அதை பாழாக்கிவிட்டான் தமிழினியன்.

மாந்திரீகர்களோ, “ஏய் என்ன பண்ணீட்ட? இனி எப்படி அந்த கொடூற ஆன்மாவை அனுப்புவது?” என்று அவனை அடிக்க வந்தனர்.

என்னோட கணவன் கொடூறமானவன் இல்லை. அவன் இப்ப கூட என்னை இவர்களிடமிருந்து காப்பாற்ற தான் இங்கே இருக்கான். அநியாயமாக என் கணவனை இவன் கொன்று விட்டான் என்று மிருளாலினி கதறி அழுதாள்.

ஓங்கிய சத்தத்துடனான விசிலை பறக்க விட்டான் தமிழினியன். அவர்கள் வீட்டை சுற்றி இருந்த போலீஸார் வந்தனர். அவர்களை பிடித்தனர். மாந்திரீகர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு தப்பி ஓடினர். மிருளாலினியிடம் சுபிதனின் கொலையை பற்றி கேட்க, அவன் ஆன்மா சொன்னது என்று அவள் சொல்ல, அனைவரும் சிரித்தனர்.

சார், “நீங்க அவனிடமே விசாரிச்சுக்கோங்க. நான் இவங்களை அழைச்சிட்டு போறேன்” என்று தமிழினியன் மிருளாலினி கையை பிடித்தான்.

சார், அவங்கள நீங்க கூட்டிட்டு போக முடியாது. இவங்க கூட அவங்க கணவனை கொன்றிருக்கலாம் என்று கேட்ட அவளுக்கு மனம் வலித்தது.

சார், “என்ன பேசுறீங்க?” இவங்க எங்கேயும் போகலை. இது என்னோட விசிட்டிங் கார்டு. “ஐ அம் சைக்காட்டிஸ்டு தமிழினியன்”.  இவங்க எங்க வீட்ல தான் இருக்க போறாங்க. விசாரிக்கணும்ன்னா அங்க வந்து விசாரிங்க. இவங்க இந்த இடத்தில் இருந்தா மேலும் கஷ்டப்படுவாங்க என்றான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆமா சார், இவரை எனக்கு தெரியும். நம்ம லோகு கேஸ்ல கூட உதவி இருக்காரு போலீஸ் ஒருவர் சொல்ல, சரி என்று அவர்களை விட்டனர்.

பிரச்சனை முடிந்ததை பார்த்த சுபிதனின் ஆன்மா இருவரையும் பார்த்துக் கொண்டே சிம்மாவிடம் சென்றது. அவன் மந்திர வார்த்தைகளை படித்துக் கொண்டிருக்க, சுபிதன் கத்தி பார்த்தும் கேட்டவில்லை சிம்மாவிற்கு.

“சிம்மா ருத்ராட்சம் காரணமாக இருக்குமோ?” என்று சுபிதன் ஆன்மா சிந்திக்க, அதெல்லாம் கேட்குது என்று சிம்மா எழுந்தான்.

“சிம்மா கேட்குதா?” நான் கூட இந்த ருத்ராட்சத்தால் கேட்கவில்லையோன்னு நினைத்தேன் என்றது.

சுபி, “என்ன தான் ஆச்சு? உன்னுடையது தற்கொலை இல்லையா?”

“இல்லை” என்று அவன் நடந்ததை கூறி விட்டு, என் அண்ணன் மிருவை அடைய நினைக்கிறான். அவன் மிருகத்தை போல் எண்ணம் படைத்தவன். அவளை அடைய முடியவில்லை என்பதால் கொல்ல கூட தயங்க மாட்டான். இனி பிரச்சனை எனக்கு என்பதை விட மிரு, தமிழுக்கு தான். இருவரும் அவன் முன் ஜோடியாக நின்ற போது வந்தது பார் அவனுக்கு கோபம்..

“மிருவுக்காக உன்னை கொன்றானா?”

அதற்காக மட்டுமல்ல, நான் எங்களுக்கென தனியாக வீடு வாங்க சேர்த்து வைத்திருந்தேன். என் அம்மாவுடன் மிரு இருந்தால் அவங்க அவளை டார்ச்சர் செய்வாங்கன்னு தான் வாங்கினேன். பணம், சொத்து, மிரு எல்லாம் அவனுக்கு சொந்தமாகணுமாம்.

“உன்னோட அண்ணி?”

அவங்க நான் இறந்த பின் இரு வருடம் தான் இருந்தாங்க. அவங்களால் அவனை சமாளிக்க முடியாமல் அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.

ஆமா, “மிருவோட அம்மா, அப்பா என்ன ஆனாங்க?”

பத்திரமா அவங்க கிராமத்தில் இருக்காங்க. மிருவுக்காக காத்திருக்காங்க. அப்புறம் அண்ணன் என்னை கொலை செய்ய பணம் யார் யாரிடம் கொடுத்திருக்கான் என்ற ஆதாரம் ஓரிடத்தில் இருக்கு. அதை எடுத்து கோர்ட்டுல கொடுத்து அவனுக்கு தண்டனை வாங்கித் தரணும். அதில் அவன் பேசிய வீடியோ கிளிப்பும் இருக்கு. யாரையும் நம்பாத. நேராக சென்று எடுத்து அவனுக்கு தண்டனை வாங்கித்தா. அவன் எத்தனை பொண்ணுகளை பாலியல் பலாத்காரம் செய்தான் என்ற விவரம் என்னுடைய ஆபிஸ் பாக்ஸில் இருக்கு. எல்லாவற்றையும் மொத்தமாக கொடுத்து அவன் வெளியே வராமல் செய்திடு.  அவன் வெளியே வந்தால் உங்க யாரையும் வாழ விட மாட்டான். கவனமா இருங்க.

சிம்மா, “மிருவையும் தமிழையும் சேர்த்து வைக்க உதவேன்” என்று கேட்டது சுபிதனின் ஆன்மா.

“நான் என்ன செய்றது?”

மிருவுக்கு உன் மேல் தனி மரியாதை இருக்கு. அவளை ரித்து போல நினைத்து உதவு என்றான்.

ம்ம்..செய்யலாம்.

அப்புறம் நம்ம நட்சு..அவளை தனியா விட்றாத.

“நானா அவளை தனியா விட்டேன்? எனக்கு அவள் மீது சந்தேகமா இருக்கு?”

சந்தேகப்படாதப்பா. நட்சு ரொம்ப நல்லவ. எல்லாருக்காகவும் வாழ்பவ. பார்த்துக்கோ.

“இப்ப நீ போயிடுவியா?” சிம்மா கேட்க, இல்லை..இப்ப போக முடியாது.

எனக்கான விசயம் நிறைவேறணும். முதலில் என் அண்ணன் மிரு, நட்சு அருகே வர முடியாத இடத்திற்கு போகணும். என்னோட மிரு தமிழுடன் ஒன்று சேரணும். அதுவும் எனக்கான குறிப்பிட்ட காலத்திற்குள் நடக்கணும். இல்லை மேலுலக தண்டனையில் காலத்திற்கும் எனக்கு வலியும் வேதனையும் தான் மிஞ்சும் என்றது.

ம்ம்..”கண்டிப்பாக இருவரும் சேர உதவுகிறேன்” என்றான் சிம்மா.

அர்சு குட்டி, வீட்ல போய் சமத்தா அம்மாவோட தூங்கணும். அவளை தொந்தரவு பண்ணாத.

சிம்மா..அர்சுவை விட்டு நட்சுவால் கொஞ்ச நேரம் கூட இருக்க முடியாது.

நட்சு வெட்டிங் பிளானர். முகூர்த்த திருமண நேரத்தில் அவள் இரவு வர நேரமாகும். அர்சு தமிழுடன் தான் இருப்பான். அத்தனை முறை கால் பண்ணிடுவா என்று சிரித்தது.

அர்சு அமைதியாக இருந்தான். அவனை பார்த்து, “என்னாச்சுடா?” ஆன்மா கேட்க, “நீ எங்களை விட்டு போகப் போறீயா?” வருத்தமாக கேட்டான்.

போகணும். ஆனால் இப்ப இல்லை. என் மிருவையும் தமிழையும் சேர்த்து வைக்கணும். சிம்மா நீ மிருவிடம் பேசு. மற்ற விசயத்தை நான் பார்த்துக்கிறேன்.

நீ ஆன்மாவானாலும் உன்னால அவளை மறக்க முடியாதுல்ல. இப்ப முடியாது. என் இடம் சென்ற பின் மறக்க வச்சிருவாங்கன்னு நினைக்கிறேன் என்றது ஆன்மா.

சிம்மா, போ..நீ நட்சுவுடன் நன்றாக பேசணும் என்று அவர்களை கிளம்ப வைத்தது சுபிதனின் ஆன்மா.

வீட்டிலிருந்து வெளியே வந்த மிருளாலினி தமிழினியன் கையை விடுத்து தன் ஆருயிர் கணவன் சுபிதனுடன் திருமணம் முடிந்து உள்ளே வந்தது; இருவரின் செல்லமான சண்டை; கொஞ்சல்கள்; காதல் என்ற அனைத்து நினைவுகளையும் மனதில் ஓட்டிய படி அவ்வீட்டை கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த தமிழினியன் வீட்டை மறித்து நின்று அவளது கண்ணீரை துடைத்து விட்டான். நடந்த பிரச்சனையில் இருவருக்கும் அடிபட்டிருக்கும். அவனது காயத்தை பார்த்து சுபிதன் கூறியதை நினைத்து பார்த்தாள். பின் தமிழினியனை பார்க்க, அவன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

சார்..நான் என்று பேச தொடங்கியவளுக்கு அவளது மனவலிமை குறைந்து கண்கள் இருள, கண்களை மூடி சுபி..சுபி..என்று அழைத்துக் கொண்டே மயங்கினாள்.

அவ்விடம் உடனே சுபிதனின் ஆன்மா வந்தது. தன் மனைவியை பார்த்து அருகே வராமல் அப்படியே நின்றது. தமிழினியன் மிருளாலினியை தூக்கிக் கொண்டு காரிடம் சென்று கொண்டிருந்தான்.

பின் மெதுவாக அவர்களிடம் சென்றது. அவளை காரின் பின் சீட்டில் போட்டு விட்டு தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்து விட்டான். அவள் விழித்தாள். காரிலிருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவளருகே அமர்ந்தான்.

அவன் மருந்தை எடுக்க, “நான் போட்டுக்கிறேன் சார்” என்று அவள் அவனிடம் மருந்தை கேட்க, அவள் கையை நகர்த்தி விட்டு மருத்துவராகி அவன் மருந்தை அவள் தலை, கன்னக்கீறல், கழுத்து, உதட்டில் வழிந்த இரத்தத்தை துடைத்து விட்டு அவன் மென்மையாக போட்டுக் கொண்டிருக்க, அவள் அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டே உதட்டில் மருந்தை போட, ஷ்..என்றாள்.

“சாரி” என்று அவளை பார்த்து விட்டு அவளது உதட்டை ஊதிக் கொண்டே மெதுவாக மருந்து போட்டு விட்டான். அவளுக்கு தமிழினியன் சுபிதனை போல் தெரிய, அவனது கன்னத்தில் கை வைத்தாள். கையை எடுத்து மருந்துடன் அவளை பார்த்தான்.

மெதுவாக மிருளாலினி அவனை நெருங்க, “மிருளா..”என அழைத்தான் காதலுடன் தமிழினியன்.

அவனது அழைப்பில் பதட்டமாக நகர்ந்தாள். ஆனால் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சார், “கிளம்பலாமா?” அவள் கேட்க, அவன் பதிலளிக்காமல் அவளையே பார்த்தான். அவள் பயம் புரிந்த தமிழினியன், நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். உன்னை கட்டாயப்படுத்தவும் மாட்டேன். நீ என்னை திருமணம் செய்து கொண்டாலும் இல்லை என்றாலும் இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ ஸ்டார் வீட்ல கூட தங்கிக்கோ. அவளும் தனியா கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருப்பா என்று நகர்ந்தான்.

தலைகவிழ்ந்து அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த மிருளாலினி அவனை பார்த்து அவன் கையிலிருந்த மருந்தை வாங்கி, அவன் தலையிலும் கையிலும் பட்ட காயத்திற்கு மருந்திட்டாள். அவன் கண்ணீர் அவள் அவனை கவனிக்க வித்திட்டது. அவன் கண்ணீரை துடைத்து விட்டு, “சாரி சார்” சுபி சொல்வது போலெல்லாம் என்னால செய்ய முடியாது.

இந்த ஐந்து வருடம் அவன் இல்லை என்றாலும் அவனை எண்ணியே என் வாழ்க்கையை நகர்த்தினேன். அது போலவே நான் இருந்துப்பேன். அவன் நம்மை விட்டு முழுதாக என்று போகிறானோ அதன் பின் நான் என் அம்மா, அப்பாவிடம் சென்று விடுவேன் என்று அழுதாள்.

“எனக்கு நீ பாதுகாப்பாகவும் சந்தோசமாகவும் இருந்தால் போதும்” என்று முன் சென்று காரை எடுத்தான். அவன் கவனம் அவ்வப்போது மிருளாலினியை ஏறிட்டது. இருவரும் வீட்டிற்கு சென்றனர்.

சிம்மாவும் நட்சத்திராவும் கோவிலில் சந்தித்த அதே தருணத்தில் பெங்களூர் “சைனிங் ப்ளூ” ஆராய்ச்சி கூடத்தில் லிஃப்டின் இடையே காலை வைத்து மூட விடாமல் தடுத்த ஸ்ரீ, “மேம் சீக்கிரம் வாங்க” என்று கத்தினாள். உள்ளிருந்த ஆட்கள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, தன் கையிலிருந்த கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டே வெஸ்டர்ன் சுடியில் தன் கூந்தலை சரி செய்து கொண்டே உள்ளே வந்தாள் ரித்திகா.

ஹே, “கம் ஆன்”. ”க்விக்” என்று அவள் அழைக்க, பிரகவதி, வர்சன், தக்சனா உள்ளே வந்தனர்.

லிஃப்ட்டில் இருந்தவர் பட்டனை அழுத்த வந்தார்.

சார் ஒன் மினிட், “வர்சன் பாலா எங்க?” என்று ரித்திகா கேட்டாள்.

மேம், இப்ப வந்திருவான் என்று “டேய் எங்க இருக்க?” என்று வர்சன் அலைபேசியில் குரல் கொடுக்க, “மேம் வந்துட்டேன்” என்று ஓடி வந்து லிஃப்ட்டில் ஏறினான் பாலா.

ரித்திகா அவனை முறைக்க மேம், “இது உங்களுக்காக” என்று டியூலிப் மலரை ரித்திகாவிடம் நீட்டினான். அதன் காம்பு உடைந்து பூ தொங்கியது. அவள் மேலும் முறைத்தாள்.

பாலா, “நல்லா மொக்க வாங்குற? தேவையா இது?” வர்சன் கேட்க, வர்சு உனக்கு தெரியாது. நம்ம ரித்து மேம்முக்கு ப்ளார்ஸ் ரொம்ப பிடிக்கும். என்ன அவங்கள கரெக்ட் பண்ண தான் முடியல என்றான் வருத்தமாக பாலா.

அய்யோ, “எவ்வளவு வருத்தம்?” பாஸ்.. “பாலா உங்களிடம் ஏதோ சொல்லணுமாம்” தக்சனா சொல்ல, “பாஸ் நானில்லை” என்று ரித்திகா முன் மண்டியிட்டான். அனைவரும் சிரித்தனர்.

லூசுப்பயலே, பாஸ் நம்முடன் வரலை. “என்ன நினைப்புல இருக்க?” என்று பிரகவதி கேட்டாள்.

ஆமால்ல, “சாரி மேம்” என்று ரித்திகா பின் நின்று கொண்டு, மேம் “நீங்க என்ன கண்டிஸ்னர் யூஸ் பண்றீங்க?” தூக்குது என்றான் பாலா.

திரும்பி அவனை முறைத்து ரித்திகா பார்க்க, மேம் எப்ப பாரு. முறைக்காதீங்க.

“சிரிங்க. நாம செல்ஃபி எடுக்கலாம்” என்று பாலா செல்ஃபி எடுக்க, அவன் பின் நின்றவனை பார்த்து, சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. நாங்க எங்க மேம்மோட செல்ஃபி எடுத்துக்கிறோம் என்றான் பாலா. அவன் அமைதியாக நகர்ந்து நின்றான்.

மேம், “ஸ்மைல் ப்ளீஸ்” என்றான் பாலா.

ரித்திகா சினமுடன் அவன் அலைபேசியை வாங்கி, வந்தது லேட். “இதுல இதான் குறையா கிடக்கு?” இங்க அவார்டு பங்சன் நடக்க போகுதாம். அது முடியவும் நாம சாரை மீட் பண்ணனும். ஏடா கூடாமா நீ ஏதாவது செஞ்ச உன்னோட வேலை போயிடும். “புரியுதுல?” முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு சத்தமிட்டாள்.

மேம்..அவன் அழைக்க, ஷ்..“சும்மா இருடா” என்று பிரகா பாலா காலை மிதிக்க, அய்யோ! “என் கால் போச்சு. இவ்வளவு பெரிய கீல்ஸ் போட்டு எப்படி நடக்குற?” பாலாவை மிதிக்கிறேன்னு என் காலை மிதிச்சிட்ட என்று வர்சன் கத்தினான்.

வர்சா..என்று சினமுடன் ரித்திகா அழைக்க, மேம் “பிரகா என் காலை மிதிச்சுட்டா” என்று வர்சன் குனிய ரித்திகா மேல் இடித்து விட்டான். அவன் கன்னத்தில் சப்பென அறைந்தாள் ரித்திகா. அனைவரும் அமைதியானார்கள்.

“யாரும் ஏதும் பேசணுமா?” ரித்திகா கேட்க, நோ மேம் என்று பாலா, சாரி மேம் என்றான். அவள் பதில் கூறாமல் நின்றாள். அவர்களை கவனித்த வந்த பின்னிருந்த பொண்ணு அவளருகே இருந்த பையனை பார்த்தாள். அவன் ரித்திகாவையே பார்த்துக் கொண்டிருந்தான். பின் அனைவரும் இறங்கினர். அவர்கள் பின் அந்த பொண்ணும், பையனும் இறங்கினர். ரித்திகா அவர்கள் அங்கிருப்பதை கவனிக்க கூட இல்லை.

பாலா..என்று ரித்திகா அழைத்தாள்.

மேம் என்று அவன் முன் வர, அவனது டையை காட்டி, “இதை கூட சரியாக செய்ய மாட்டாயா?” என்று சினமுடன் மெதுவாக கேட்டுக் கொண்டே நடந்தாள். அவன் டையை மெதுவாக பிடிக்க, ரித்திகா நின்று அவனது டையை இழுத்தாள்.

பாலா ரித்திகா அருகே நெருக்கமாக நின்று அவன் அவளையே பார்க்க, படாரென டையை உருவி, அவளாக மடித்து அவனுக்கு போட்டு விட்டாள்.

அங்க பாரு. “திட்டு வாங்கினாலும் வாழுறான் தக்சி” என்று வர்சன் அவள் தோளில் கையை போட்டான்.

“கையை நீயே எடுத்தா உனக்கு மரியாதை” என்றாள் அவள். அவர்கள் சென்றனர். அந்த பொண்ணும் பையனும் அவர்களை பார்த்துக் கொண்டே நின்றனர்.

ஹலோ சார், “உங்க சீஃபை பார்க்கணும்” என்றாள் ரித்திகா.

அவருக்கு அவார்டு மீட்டிங் இருக்கு மேம். நீங்க வெயிட் பண்ணுங்க என்றார் வரவேற்பறையாளர்.

“சைனிங் ப்ளூ” ஆராய்ச்சி நிறுவனத்தின் “நாற்பத்து ஆறு வயதையொத்த” பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தலைவர் “ரட்சகன்”. அவர் அறையிலிருந்து வெளியே வந்தார்.

ரித்திகா அவரை பார்த்து அவரிடம் அவர்கள் வந்ததன் நோக்கத்தை கூற, பார்க்கலாம். நீங்களும் எங்களுடைய அவார்டு விழாவில் கலந்து கொள்ளுங்கள். எல்லா இடத்திலிருந்தும் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். விழா முடியவும் நாம சந்திக்கலாம் என்று அவர் சென்றார்.

வாங்க காய்ஸ், என்று அவளும் அவர் சென்ற இடத்திற்கு சென்றார். ஏகப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர்.

மேம், “இஸ்ரோல இருந்து வந்திருக்காங்க பாருங்க” என்று வர்சன் ஆர்வமாக எழுந்தான்.

வர்சன், உட்காரு. இப்ப வேண்டாம் விழா முடியவும் மீட் பண்ணலாம் என்று ரித்திகா சொல்ல, அனைவரும் அமர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். இரு மணி நேரமாக ஆராய்ச்சியாளர்களின் ஊக்குவிக்கும் பேச்சு நடந்தது. பின் புதிதாக செய்த ஆராய்ச்சிக்கான விருதை வழங்க ஆரம்பித்தனர். பத்து பேர் விருது வாங்க இருப்பதாக சொன்னார் ஆர்.ஜே.

பின் பெயரும் அவர்களது ஆராய்ச்சியையும் சொல்லி விருது கொடுத்து அவர்களை அதே மேடையில் அவர்களது ஆராய்ச்சி கட்டுரையை விளக்க சொன்னார்கள். மூன்று பேருக்கு கொடுத்து விட்டு,

நான்காவதாக “தேனீ மாவட்டத்தை சேர்ந்த உதிரன்” என்று உதிரன் பெயரையும் அவனது ஆராய்ச்சியையும் சொல்லிய ஆர்.ஜே, திருப்பூரை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி உதிரனுக்கு விருதை வழங்குவார் என்று சொல்ல, வானநிறத்து ப்ளூ கோர்ட் பேண்டுடன் அழகாக மேடை ஏறிய உதிரன் கை கூப்பி அனைவரையும் கும்பிட்டு விருதை வாங்கினான்.

அவனை பார்த்த ரித்திகா கண்ணில் ஆனந்த கண்ணீர் நிரம்ப, வலியுடன் அதை மறைத்து வாயில் வைத்திருந்த கையை எடுத்தாள். அவள் நெஞ்சமோ, “மாமா யூ ஆர் கிரேட்” என்றது.

விருதை வாங்கிய உதிரனை பேச சொல்ல, அவன் பேசிக் கொண்டே இடப்பக்கம் அமர்ந்திருந்த தன் அத்தையின் தங்கை புதல்வி ரித்திகாவை பார்த்துக் கொண்டே பேசினான்.

மேம், இவர் தான் நம்ம லிஃப்டில் உடன் வந்தவர்கள். இவருடன் ஓர் பொண்ணும் இருந்தாங்க என்றான் பாலா.

ஓ..என்ற ரித்திகா உதிரனை பார்ப்பதை தவிர்த்தாள். ஆனால் அவன் இவளை பார்த்துக் கொண்டே பேசினான்.

மேம், “அவர் நம்மை பார்ப்பது போல் தெரியுதே?” வர்சன் கேட்க, ஆமாடா, “லிப்ட்டுல நீங்க செய்த அலப்பறையை பார்த்திருப்பார்ல்ல” என்று ஸ்ரீ கூறினாள். ரித்திகா அமைதியாக இருந்தாள்.

உதிரன் நகர்ந்த பின் மற்ற அனைவரும் பேசினர். விழா முடியும் சமயம் ரித்திகாவிற்கு அழைப்பு வந்தது.

நீங்க முடிந்தவுடன் வெளிய வாங்க. நான் பேசிட்டு இருக்கேன் என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள். உதிரன் அவளை காணோம் என்று தேடினான்.

உதி, “நீ யாரையோ தேடுற மாதிரி இருக்கே?” நிஷா கிண்டலாக கேட்டாள்.

“தேடுகிறானா?” என்ற ரட்சகன், “யார உதிரா தேடுற?” என்று கேட்டார்.

“தெரிந்தவர் போல இருந்தது சார்” என்றான் உதிரன்.

முடிந்தவுடன் என்னோட அறைக்கு போங்க. அங்க “பாடி லோசன் பிராடெக்ட்” டெஸ்டிங்கிற்காக சென்னையில இருந்து ஒரு டீம் வந்திருக்காங்க. நியூவா லாஞ்ச் பண்ணனுமாம். நம்ம லேப்ல செக் செய்து சீல் வாங்க வந்திருக்காங்க. எத்தனை நாட்களாகும்ன்னு தெளிவா சொல்லிட்டு அவங்க தங்க அரேஜ் பண்ணுங்க என்று அவர் சொன்னார்.

ஓ.கே டாட், “நாங்க பார்த்துக்கிறோம்” என்றாள் நிஷா.

ஓ.கேம்மா, நான் வந்தவங்களை கவனிக்கணும். நீங்க பார்த்துட்டு இருங்க. நான் வந்துடுறேன் என்றார்.

வரவேற்பறையில் ரித்திகாவும் அவள் குழுவினரும் அமர்ந்திருந்தனர்.

சற்று நேரத்தில் உதிரனும் நிஷாவும் அங்கு வந்தனர். ரித்திகாவும் உதிரனும் பார்த்துக் கொள்ள, “இவர் எதுக்கு? இங்கேவா வேலை செய்கிறார்?” என்று யோசனையுடன் உதிரனை ரித்திகா பார்த்தாள்.

ரித்தி, “ஏதாவது பேசு” என்று அவள் பேசுவதற்காக மௌனம் காத்தான் உதிரன்.

ஹாய்..ஹலோ, “என்னோட அப்பா உங்களை தான் சொன்னாரா? நீங்க சென்னையிலிருந்தா வந்திருக்கீங்க?” நிஷா கேட்க, எஸ் மேம்..என்று வழிந்தவாறு  வர்சன்  கூற, அவன் காலை மிதித்தாள் தக்சனா.

“சென்னையா?” என்று உதிரன் ரித்திகாவை பார்த்தான்.

சார், “உங்க ரிசர்ச் வேற லெவல்” என்று பாலா பேச, அவனை முறைத்து பார்த்தான் உதிரன்.

“என்ன கேட்டுட்டேன் மேம்? இப்படி முறைக்கிறார்?” என நிஷாவிடம் பாலா கேட்க, அவன் அப்படி தான். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. நாங்க அழைக்கும் போது வாங்க என்று நிஷா ரித்திகாவை பார்த்து கூறினாள்.

ரித்திகா பேசும் முன், நிறைய நேரம் எடுத்துக்கோங்க மேம். உங்களுக்காக கொஞ்ச நேரம் என்ன? எத்தனை வருடமானாலும் காத்திருக்கலாம் என்று வர்சன் கூற, ரித்திகா அவனை பார்த்தாள். அவன் பல்லை காட்டிக் கொண்டு நிஷாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹே, ராசா..”இங்க பாரு” என்று பாலா அவன் மண்டையை திருப்பி ரித்திகாவிடம் காட்டினான். அவள் பார்வை முறைப்பாக மாறியது.

மேம், சும்மா..

“என்ன சும்மா?” முறைப்புடன் கேட்டாள்.

நோ..மேம்.

வர்சன், உன்னோட ஆட்டிட்யூட அப்புறம் பார்த்துக்கோ என்று அவள் சொல்ல, ஓ.கே மேம் “நீங்க பேசுங்க” என்று வாயில் கை வைத்து அமர்ந்தான்.

ஓ.கே மேம், “நாங்க வெயிட் பண்றோம்” என்று ரித்திகா அமர்ந்தாள். இருவரும் அவளை பார்த்துக் கொண்டே நகர்ந்தனர்.

“என்னடா இவள்? கோபக்காரியா இருக்கா?” நிஷா உதிரனிடம் கேட்டாள். அவன் மனதினுள், ரித்து “உனக்கு என்னாச்சு? உன்னுடைய சிரிப்பையே நான் பார்க்கலையே?” என்று சிந்தனையுடன் இருந்தவனை நிஷாவின் குரல் மீட்டெடுத்தது.

“முதல்ல வேலைய பாரு” என்று அவர்கள் அரேஞ்ச் பண்ணி விட்டு, ரித்திகாவையும் குழுவினரையும் அழைத்தனர். ரட்சகனும் உள்ளே வந்தார்.

டாட், “நேராகும்ன்னு சொன்னீங்க?”

இல்லம்மா, “பெரிய ஆளுங்க எல்லாரும் கிளம்பிட்டாங்க” என்றார். அவரை பார்த்த உதிரன், தன் பக்கமிருந்த ஆரஞ்ச் ஜூஸ் பொத்தானை அழுத்தி, அதை எடுத்து அவருக்கு குடிக்க கொடுத்தான்.

பாரும்மா, ”உதிராவை பார்த்து கத்துக்கோ” என்று தன் பொண்ணு நிஷாவிடம் அவர் கூறினார்.

டாட்..என்று நிஷா அவரை முறைத்தாள்.

“கங்கிராட்ஸ் உதிரா” என்று அவனுக்கு கை கொடுத்தார் ரட்சகன். “தேங்க்யூ சார்” என்றான் அவன்.

ரித்திகாவையும் மற்றவர்களையும் பார்த்துக் கொண்டே அவர் நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு இட,வலப்பக்கம் உதிரனும் நிஷாவும் இருந்தனர்.

ரித்திகா அவர்களது பிராடெக்ட்டை பற்றி விளக்கினாள். இதை யார் தயாரித்தது? ரட்சகன் கேட்டார். எல்லாரும் ரித்திகாவை பார்த்தனர்.

நான் தான் சார்.

எத்தனை மாதங்களாய் தயாரித்தீர்கள்?

சாம்பிள் தானே! ஒரு மாதத்திற்குள் தயாராகி விட்டது சார்.

சைடு எபெக்ட் பத்தி யோசித்தீர்களா?

எஸ் சார், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம். ஸ்கின் அலர்ஜி இருப்பவர்களும் பயன்படுத்தலாம். ப்யூட்டி பிராடெக்ட் என்பதை விட இதை மருந்தாக தான் தயாரித்து இருக்கோம். பார்முலாஸ் தான் என்னுடையது சார். மற்ற எல்லாரும் சேர்ந்து தான் என்னுடன் தயாரித்தார்கள் என்றாள்.

சரிம்மா, “நீங்க இதுக்காக இவ்வளவு தூரம் வரணுமா?” கேட்டார்.

சார், எதையும் நேரிலே சென்று செய்தால் தானே அடுத்ததை தயாரிக்க ஒரு ஐடியா கிடைக்கும். இப்ப கூட இங்கே வந்ததில் நிறைய தெரிந்து கொண்டோம். நிறைய ஆராய்ச்சியாளர்களையும், அவர்களது உழைப்பையும் பார்த்தோமே? என்று உதிரனை பார்த்தாள் ரித்திகா.

ஆமா சார், “இவரு உங்க அசிஸ்டென்ட்டா?” செம்ம சார் என்ற வர்சன், “கங்கிராட்ஸ் சார்” என்று உதிரனுக்கு கை கொடுத்தான். உதிரன் கையை நீட்டிக் கொண்டே ரித்திகாவை பார்த்தான். எல்லாரும் அவனுக்கு வாழ்த்தை கூறினார்கள்.

ரித்திகாவும் அவனுக்கு வாழ்த்தை கூற, உதிரன் கையை நீட்டினான். அவள் வணங்கி காட்ட, பரவாயில்லை நம்ம ஊரு பொண்ணுன்னு காட்டுறம்மா என்றார் ரட்சகன்.

“என்ன சார்?” அவள் பதற, சென்னை வாசி தானம்மா..

“ஆமா சார்” என்று அவரிடம் பைல்லை நீட்டினாள் ரித்திகா.

அட, “நம்ம தயாளன் கம்பெனி ஆட்களா நீங்க?” என்று புன்னகைத்தார்.

“எஸ் சார்” என்றாள்.

சார், “நாங்க எத்தனை நாட்கள் தங்கணும்?” என்று ரித்திகா கேட்க, நாங்க எல்லாமே முடித்து கொடுக்க ஒரு மாதம் ஆகும் என்றார் அவர்.

“என்னது ஒரு மாதமா?” என்று ஸ்ரீ கேட்க, “என்னாச்சும்மா?” ஒரு மாதம் தானே!

இல்ல சார், “நாங்க இரு வாரத்துக்குள்ள கிளம்பணும்” என்றாள் ரித்திகா.

ஆமா சார், “எங்க ரித்திகா மேம்மிற்கு என்கேஜ்மென்ட்” என்றாள் தக்சனா.

“என்கேஜ்மென்டா?” என்று நிஷா உதிரனை பார்த்தாள். உதிரனுக்கு மனம் வலித்தது.

அப்படின்னா, “என்கேஜ்மென்ட் முடிந்த பின் ரிப்போர்ட் வாங்கிக்கலாமே?” ரட்சகன் கேட்டார்.

சார், அடுத்த மாதம் மேரேஜ். அப்படியிருக்க எப்படி அவங்க வருவாங்க? அவங்க இல்லாமல் நாங்க வர முடியாது.

“மேரேஜா?” என்று உதிரன் அதிர்ச்சியுடன் ரித்திகாவை பார்த்தான்.

“நாங்க எங்க பாஸ்கிட்ட கேட்டு சொல்றோம்” என்று அவள் சொல்லி முடிக்க, அவள் அலைபேசி ஒலித்தது.

ஓ.ஹோ..என்று அனைவரும் சத்தமிட்டனர்.

ஷ் என்றாள் ரித்திகா.

“இதோ வந்துருச்சுல்ல” என்று வர்சன் கிண்டலாக சொல்ல, எல்லாரையும் முறைத்து பார்த்து விட்டு அலைபேசியை துண்டித்தாள். அனைவரும் அமைதியானார்கள்.

சாரி சார், “நான் பாஸ்கிட்ட பேசிட்டு சொல்றேன்” என்று அவள் சொல்ல, மீண்டும் அலைபேசி ஒலித்தது. அணைத்து விட்டு அவருடன் பேசினாள் ரித்திகா.

ஸ்ரீயின் அலைபேசி ஒலிக்க, மேம்..”உங்களுக்கு தான்” என்றாள் அவள்.

எம்மா, “யாரும்மா அந்த பையன்?” விடாம போன் போடுறான் ரட்சகன் கேட்க, அவள் தயங்கினாள்.

சார், நீங்க சொன்னீங்களே தயாளன். அவர் மகன் பிரணவ். எங்க பாஸ் தான்.

தயாளன் வீட்டு மருமகளாகப் போறீயாம்மா. நைஸ். பிரணவை பார்த்து வெகு வருடமாகி விட்டது. “இப்ப எப்படி இருப்பான்னு தெரியலை?” என்றார் அவர்.

நாங்க இருக்கும் போது நீங்க ஃபீல் பண்ணலாமா சார்? என்ற பாலா அவன் அலைபேசியில் இருந்த பிரணவின் புகைப்படத்தை காட்டினான்.

வில்லென வளைந்த அடர்ந்த கருமையான புருவம். அனைவரையும் கவரும் கண்கள், தடித்த உதடுகளாயினும் ரோஜா நிறம்.

“பரவாயில்லை சிறந்த ஜோடியாக தான் இருப்பீர்கள்” என்று அவர் ரித்திகாவிடம் கூற, “தேங்க்யூ சார்” என்று உதிரனை பார்த்தாள். அவன் அவளை முறைத்து பார்த்தான்.

சார், “எங்க பாஸ் ஆர்ட்டிக்கிள் கூட இருக்கு” என்று வர்சன் காட்ட, உதிரனுக்கு மேலும் எறிந்தது. நிஷா ரித்திகாவை உற்று பார்த்தாள்.

அடுத்த எபியில் ரித்திகாவை பற்றிய மிகச் சில குழப்பமான உண்மைகளே வெளியே வரும். வாருங்கள் பார்க்கலாம்.