நான்கு வருடம் முன் அருணாசலத்திற்கு உடல்நலம் சற்று மட்டுப்பட்டது.. அதுதொட்டு கிருபா வந்து கடையில் அமர்ந்தாள் உதவிக்காக. இப்போது முக்கால்வாசி அவள் பொறுப்புதான். இப்போது கணக்குளை கேட்க்கொள்வது மட்டும்தான் தாத்தாவின் வேலை.
மேலும், நிறைய சொத்துகள்.. பாதி கடைகளாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் வீடுகள்.. எனவே, எல்லாம் வருமானம் வர கூடிய சொத்துகள், அதை பார்வையிட ஷண்முகம் வந்திடுவார். ஏதும் பெரிதாக பிரச்சனைகள் இல்லை.
கிருபா கடைக்கு கிளம்பினாள். வெட்டி எடுக்கும் தங்கத்தில் உள்ள மண்ணை, தண்ணீர் விட்டு கழுவியதும் சூரிய ஒளியில் பழுப்பும் மஞ்சளுமாக மின்னுமே தங்கம்.. அந்த பொன்மஞ்சள் நிறம் கிருபாகரி. முதுகை மறைத்த.. அடர்த்தியான லேயர் கட் முடிகள் அலை அலையாய் படற.. கண்ணில் கூலர் அணிந்துக் கொண்டு தனது ஜுபிட்டர் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் பெண்.
கிருபாகரி 25 வயது, B.E (ECE) படித்தாள். வேலை வந்தது.. தாத்தாவின் முகம் பார்த்து வேலைக்கு செல்லவில்லை. தாத்தாக்கு உதவியாக கடையை பார்த்துக் கொள்ளுகிறாள்.
அருணாசலம், இப்போது செல்லும் பேத்தியை பார்த்திருந்தார். ஆறாத துயரில் இருக்கும் போது.. இரண்டு வருடம் ஏனோதானோவென இருந்தவனை உயிர்பிக்கவே வந்தவள்.. இவள். தன் அழுகையால், தளிர் நடையால்.. என்னை மீண்டும் உயிர்பித்து.. இப்போதும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கவும் இவள்தானே காரணம்.. என எண்ணி அப்படியே ஈசி சேரில் சாய்ந்துக் கொண்டார் தாத்தா.
அருணாசலம் சிவகாமி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் ஷண்முகம். இரண்டாவது மகன்.. இப்போது, இவர்கள் குடும்ப உறுப்பினாராக இல்லாத ஜெய்சங்கர். மூன்றாவது, மகள் கோகிலா.
கோகிலா சுந்தரேசன் தம்பதியின் பெண்தான் கிருபாகரி. சிங்கப்பூரில் வேளையில் இருந்தார் சுந்தரேசன். அருணாசத்தின் மாப்பிள்ளை சுந்தரேசன், திருமணமாகி.. மூன்று வருடத்தில்.. தன் மகள் கிருபாவின் முதல் வருட பிறந்தநாளிற்கு.. வந்துவிட்டு.. திரும்ப ஊருக்கு சென்றவர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். அதன்பின் மகள் கோகிலாவை தன்னுடைனையே அழைத்துக் கொண்டார் அருணாசலம்.
அன்றாட வேலைகள் நடந்தது,
மதியம் இரண்டு மணிக்கு உண்பதற்கு வந்தாள் கிருபா.
தாத்தா, கிருபா வரும் முன்பே உண்டு முடித்து படுத்துவிட்டார்.
பாட்டியும் கோகிலாவும் காத்திருந்தனர்.
பாட்டி “கிருபா, வாடா.. ஏன் லேட். தாத்தாவுக்கு முடியலை நீ வர லேட் ஆகும்ன்னு சாப்பிட்டு படுத்துட்டார். நீ வா, சாப்பிடு முதலில்..” என்றார், அவள் கையில் போன் எடுத்துக் கொண்டு சோபாவில் அமரவும், பாட்டி பொரிந்தார்.
கிருபா “வரேன் பாட்டி..” என்றவள் யாருக்கோ அழைத்துக் கொண்டே உண்பதற்கு சென்றாள். கோக்கிலா, பாட்டி பேத்தி இருவருக்கும் தட்டு வைத்து பரிமாறினார்.
கிருபா போனில் பேசி, பத்து நிமிடம் சென்றுதான் வைத்தாள் அழைப்பை.
பாட்டியும் தன்னுடன் உண்ணுவதை பார்த்து கிருபா “ஏன் பாட்டி, தாத்தா கூட சாப்பிட்டு படுக்கலாமில்ல.. எதுக்கு வெயிட் பண்றீங்க..” என்றாள்.
பாட்டி “ம்.. அலைஞ்சிட்டு வர, சின்னபிள்ள.. நீயே இன்னும் சாப்பிடலை.. வீட்டில் இருக்கிற எனக்கு என்ன.. அவசரம். சாப்பிடு சாப்பிடு.. தூங்கி எழுந்துக்கோ.. சாயங்காலம் கொஞ்சம் லேட்டா போடா.. கடைக்கு.” என்றார். குரலில் அத்தனை கரிசனை.
கிருபா சிரித்தாள் ஏதும் பதில் சொல்லாமல்.
பாட்டி “புடைவை கட்டி பழகுடா தங்கம்.. கல்யாணம் ஆக போற பொண்ணு. இதென்ன குழாய் மாட்டிகிட்டு எப்போதும் போவது வருவது. இந்த மாப்பிள்ளை வீட்டில் சரின்னு சொல்லிட்டாங்கன்னா, கடைக்கு எல்லாம் நீ போக வேண்டாம் சொல்லிட்டேன்” என்றார் கண்டிப்பான குரலில்.
கிருபா ஏதும் மறுப்பு சொல்லவில்லை “பாட்டி நிச்சயம் ஆகட்டும் கண்டிப்பா புடைவை கட்டிக்கிறேன். அதுவரை.. இந்த குழாய்தான். ம்.. ப்ளீஸ் பாட்டி” என்றாள்.
அப்படியே பேசியபடியே உண்டனர்.
கிருபா உண்டு, சற்று நேரம் ஓய்வெடுக்க சென்றாள்.. தனதறையில் போன் பார்த்து அமர்ந்துக் கொண்டாள்.
மாலையில் 6 மணிக்கு மேல்.. கிருபா கடைக்கு சென்றாள். பாட்டி கோவிலுக்கு கிளம்பி சென்றார். இன்று பிரதோஷமாம் அதனால் கிளம்பிவிட்டார்.
தாத்தா இரவு ஷண்முகத்திற்கு போன் செய்து, மாப்பிள்ளை வீட்டாருக்கு பேச சொன்னார். அவர்கள் நேற்று வந்து பார்த்துவிட்டு போனார்களே.. அதைபற்றி விசாரிக்க சொன்னார்.
பேத்தி 8:30 வீடு வந்தாள்.
தாத்தாவும் பேத்தியும் பேசியபடியே உண்டனர்.
இரண்டுநாட்கள் இப்படியே சென்றது.
ஷண்முகம் அன்று காலையிலேயே தந்தைக்கு அழைத்தார்.. “அப்பா, அவங்களுக்கு எட்டு பொருத்தம் இருக்கனுமாம்.. கிருபாவுக்கும் அந்த பையனுக்கும் ஐந்து பொருத்தம்தான் இருக்காம், வேண்டாம் அப்படின்னு சொல்றாங்க.. நானும் இரண்டுநாளாக பேசி பார்த்துட்டேன். சரியா வராதுன்னு சொல்றாங்க.. விடுங்க பா, பார்த்துக்கலாம்” என்றார்.
அருணாசலம் சோர்ந்து போனார். வேலையே ஓடவில்லை.
இந்த வரன் அவர்களாகவே வந்து கேட்டனர் ஜாதகத்தை. அதனால், நம்பிக்கையோடு இருந்தார்.. இந்த வரன் முடிந்திடும் என. இப்போது காலையிலேயே ஒத்துவராதுன்னு மகன் சொல்லவும் மனது எதிலும் பதிய மறுத்தது தாத்தாவிற்கு. என்னமோ அந்த நாளே அவருக்கு சரியாக இல்லை.. பேத்தி காலை உணவு முடித்து கணக்கு எடுத்து அமர்ந்தாள்.
தாத்தா “நாளைக்கு பார்த்துக்கலாம் கிருபா” என்றார்.
கிருபா “என்ன தாத்தா.. என்ன ஆச்சு.. காலையில் நல்லாதானே இருந்தீங்க.. டாக்ட்டர்கிட்ட போயிட்டு வரலாமா” என்றாள்.
தாத்தாவிற்கு, பேத்தியிடம் எதையும் மறைக்க முடியாது.. “எங்க உன் பாட்டி “ என்றார், ரகசியமாக.
கிருபா “சாப்பிடுறாங்க” என்றாள்.
தாத்தா “ம்.. அவள் காதில் கேட்டாக்க சங்கடபடுவா.. நாலுநாள் புலம்புவாள்.” என்றவர் அமைதியாக இருந்தார்.
தாத்தா மேலே எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு “ம்..” என்றார்.
கிருபா “சரி தாத்தா, நான் கிளம்பறேன்” என்றாள், ஒன்றுமில்லா குரலில்.
தாத்தாவிற்கு மனது என்னமோ செய்தது.. “டீ எடுத்துகிட்டியா கிருபா” என்றார்.
கிருபா “இதோ போறேன் தாத்தா” என்றவள் உள்ளே செல்ல எத்தனிக்க.. தபால்காரரின் அழைப்பில் நின்றாள் பெண்.
தபால்காரர் தாத்தாவை பார்த்து “ஐயா, ரெஜெஸ்ட்டர் போஸ்ட் வந்திருக்கு” என்றார்.
கிருபா தபால்காரரிடம் வந்து நின்றாள்.
தாத்தா “எங்கிருந்து” என்றார்.
தபால்காரர் கிருபாவிடம் கையெழுத்து வாங்க.. சீட்டை காட்டினார். இயல்பாக கிருபா கையெழுத்திட்டு.. தபாலினை வாங்கிக் கொண்டாள்.
தாத்தா சற்று பதறியவராக “என்ன ம்மா, யாரு பாரு” என்றார்.
கதபால்காரர் “வரேங்க ஐயா” என கிளம்பினார்.
கிருபா பிரித்தாள் தபாலினை. வாசித்தாள் “தாத்தா.. வக்கீல் ஞானமூர்த்தியாம்..” என சின்ன குரலில் சொன்னவள், சற்று அமைதியானாள்.
தாத்தா “என்ன ம்மா” என்றார்.
கிருபா “தாத்தா.. யரோ தியாகீசன், ஆகிய நான் s/o. ஜெய்சங்கர்.. அவர்களின் மகனும், தங்களின் மகன் வழி பேரனாகிய நான், இங்கே சென்னை.. இந்த விலாசத்தில் வசிக்கிறேன். நீங்கள் அனுபவிக்கும் சொத்தில்.. எனக்கும், என் தங்கை சஹானாவிற்கும் உரிமை உள்ளது. மேற்படி எங்கள் பாத்தியத்திற்கான சொத்தினை முறைப்படி பெற விரும்புகிறோம்.. இன்னபிற..’ என அந்த நோட்டீஸ் விலாவாரியாக சென்றுக் கொண்டிருந்தது.
தாத்தா “யாரு மாமா.. ராஸ்கல்.. திமிரெடுத்தவன் சொத்து வேனும்மாமா.. ராஸ்கல்.. சரியான காரியவாதி.. எதுவும் வேண்டாம்ன்னுதானே போனான்.. நாயி.. சொத்து மட்டும் வேணுமம்மா.. அதுவும் நான் உயிரோட இருக்கும் போதே.. எவ்வளவு அகம்பாவம்.. என்கிட்டே கேட்ட்கிறானா..” என தான் அணிந்திருந்த வேட்டியை கால் கொண்டு எடுத்து.. இரு கைகளிலும் லாவகமாக பிடித்தவர்.. இறுக்கமாக இடுப்பில் கட்டிக் கொண்டு.. நிமிர்ந்து நின்று நெஞ்சினை நிமிர்த்தி நின்றார்.
கிருபா அப்படியே இமைக்காமல் பார்த்திருந்தாள். பாட்டியோடு.. ஒரு புகைபடத்தில் இருப்பார்.. இதேபோல.. நெஞ்சு நிமிர்த்தி.. இறுகிய தாடையோடு.. பாட்டியின் தோள்கள் மீது கை வைத்து நின்றுக் கொண்டிருப்பார்.. தாத்தா. பார்க்கவே, எதோ பழைய ஹீரோ ஞாபகம் வரும்.. அப்படி நின்றார் அருணாசலம் இப்போது.