1. உன் விழி பேசும்

    மொத்த வார்த்தைக்கும்

        அர்த்தம் தான்

        நம் காதல் என்றால்

        

       பேசடி நம் ஆயுள்

       முழுமைக்கும்

       கண்ணால் பேசடி

                      மறுபடியும் அவள் அம்மாவுடன் பேசியபடி ஹாலில் உள்ள சோபாவில் படுத்து விட்டாள்.

               அப்பா வங்கிக்கு  கிளம்பிக் கொண்டிருந்தார்., அவருக்கு உணவு எடுத்து வைக்க சென்ற நிவேதாவின் அம்மாவிற்கு அவள் மறுபடியும் கண் சொருக படுத்து இருப்பதை பார்க்கவும்.,

                திடீரென ஒரு சந்தேகம் வந்தது..,  அப்படியும் இருக்குமோ என்று எண்ணியவர்.,

               நிவி அப்பாவிற்கு அவசர அவசரமாக உணவை எடுத்து வைத்துவிட்டு “நீங்க இன்னைக்கு ஒரு மணி நேரம் பெர்மிஷன் போட்டு கொஞ்சம் லேட்டா போங்களேன்”., என்று சொல்லிவிட்டு வேகமாக வந்தார்.,

            “எதுக்கு” என்று கேட்கவும்.

               “வந்து சொல்றேன்”., என்றபடி நிவி படுத்திருந்த சோபாவின் அருகில் கீழே அமர்ந்தவர்., அவள் தலையை தடவி கொடுத்த படி “நிவி மா” என்றார்.

                  “என்ன அம்மா” என்றாள்., தூக்க கலக்கத்தோடு.,

             “அம்மா கேட்பதற்கு மட்டும் கரெக்டா சொல்லுவியா”., என்றாள்.

               “என்னம்மா”., என்றவள். “தூக்கம் வருது அம்மா”., என்றாள்.

              “உள்ளே போய் தூங்குறியா”., என்று கேட்கவும்.

           “உள்ள போய் ஏன் மா படுக்கணும்”., என்றாள்.

            “குளிச்சிட்டு அதுக்கப்புறம் தூங்குறியா.,  அப்படி ன்னா.,  நல்லா தூங்கலாம் இல்ல.., அம்மாவுக்காக வா.,  சாப்பிடுவதற்கு எழுப்புறேன்”., என்றார்.

            “அம்மா தூங்குறேன் ம்மா., கண்டிப்பா குளிக்கனுமா”., என்றாள்.

            “குளிச்சிட்டு தூங்கினா இன்னும் நல்ல தூக்கம் வரும் டா., அம்மா தலை அலசி விடுறேன்”., என்றார்.,

                   “வேண்டாமா”., என்று சொன்னாள்.

             “இல்லடா.,  நான் சொல்றத கேளு”., என்று சொல்லிவிட்டு அறைக்கு அழைத்து வந்தவர்.,

               அவளிடம் சில விஷயங்களைக் கேட்க அப்பொழுதுதான் அவளும் ஞாபகம் வந்தவளாக “அம்மா அது வந்து” என்று யோசித்தவள்.,

                 பின்பு தேதியை அவசரஅவசரமாக பார்த்து விட்டு அம்மாவை பார்த்து முழித்துக் கொண்டு நின்றாள்.,

                   “ஆமாம்மா எக்ஸாம் டென்சன்ல மறந்துட்டேன்., 20 டேஸ் தள்ளிப்போய் இருக்குமா”., என்று சொன்னாள்.

                   நிவேதாவின் அம்மாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை.,  தன் பாட்டியாக போகும் செய்தியை நினைத்து., அவளை அணைத்து உச்சியில் முத்தமிட்டார்.,

                         அவள் திரு திருவென முழிப்பதை பார்த்து.,  “நீ  இன்னும் சின்ன பிள்ளை இல்ல” என்று சொல்லிவிட்டு “எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்றார்.,

                  “அம்மா பயமா இருக்குமா”., என்றாள்.

            “அதெல்லாம் ஒன்னும் இல்லடா..,  டாக்டர் ட்ட போலாம் சரியா”., என்று சொன்னார்.

                 அவள் அறியாமல் பதட்டம் ஒட்டிக்கொள்ள.,  அம்மாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

            அவளை கட்டிலில் அமரவைத்து அருகில் நின்று தலையை கோதிக் கொடுக்கவும்., அம்மாவின் இடுப்பை கட்டி அவர் மேல் தலை சாய்த்துக்கொண்டாள்.,

              நிவிக்கு மனதிற்குள் ஒரு படபடப்பு வந்தது.,  அது சந்தோஷ படபடப்பா.., இல்லை பயமா..,  என்று தெரியாத அளவிற்கு ஒரு படபடப்பு இருந்தது.,

               “அம்மா இது நிஜமா”., என்று கேட்டாள்.

              “நீ இரு.,  நான் அப்பாவை அந்த டெஸ்ட் கிட் வாங்கிட்டு வர சொல்றேன்., டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரிஞ்சிடும்..,  அதுக்கப்புறமா ஈவ்னிங் டாக்டர் ட்ட போகலாம் என்ன”.,  என்று சொல்லவும்.,

          “அம்மா”., என்றவள் “பயமா இருக்கு”., என்று சொல்லவும்.,

              “அதெல்லாம் ஒன்னும் இல்லடா..,  இது எல்லாம் நார்மல் சரியா.., இதுக்கெல்லாமா பயப்படுவாங்க., என்னவாய் அடிக்கிற., நீ பயப்படுறியா”., என்று சொன்னார்.

              “ஐயோ அம்மா., நான் அசிங்கமா ஆகிருவேனா.,  வயிறு பெரிசாகுமே, மா”.,  என்று ஒன்றொன்றாக கேட்க..,

               “அடியே நீ என்கிட்ட அடிவாங்க போற., இப்ப  குளிக்க ரெடியாகு., அம்மா வாறேன்”.,   என்று சொல்லி விட்டு வேகமாக வெளியே சென்றவர்.,

                   அப்பாவிடம் சொல்லி பரிசோதித்து பார்ப்பதற்கான கிட்டை வாங்கி வரச் சொன்னவர்., சோதனை செய்து பார்த்ததில்  நாள் தள்ளி போனது உறுதியாகி விட்ட சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடாமல் சந்தோஷத்தை கொண்டாடிக் கொண்டார்.,

                 நிவேதாவின் அப்பாவிடம் “லீவ் போடுங்க., பேரனோ பேத்தியோ நமக்கு வரப்போகுது” என்று சொல்ல அவருக்கும் ஒருபுறம் சந்தோஷம் என்றாலும்..,

            நிவேதா குனிந்தபடி அமர்ந்திருப்பதை பார்த்தவர்., அவள் அறைக்கு வந்து தலையை தடவி கொடுத்து நெற்றியில் முத்தம் பதித்த உடன் அப்பாவை சேர்த்து அணைத்துக் கொண்டாள்.,

             அப்பாக்களை பொறுத்தவரை., பேரன் பேத்தி என்று வந்தாலும் அவர் மகள் அவருக்கு குழந்தை தான்..,

              மனதில் சந்தோஷம் என்றாலும்.., இதை எப்படி நந்தனிடம் சொல்வது., என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது., ஏனெனில் இதுவரை குழந்தை என்ற பேச்சு அவனிடம் வந்ததே இல்லை., அதுவே இப்போது யோசனையாக இருந்தது.

                  அதே நேரம் நிவேதாவின் அம்மா உடனே திருச்சிக்கு அழைத்து விஷயத்தை சொல்ல..,  நந்தனின் அம்மா தான் “நிவேதா ட்ட  சொல்லி நந்தன் கிட்ட பேச சொல்லுங்க..,  நாங்க கிளம்பி வர்றோம்., நிவியிடம் சந்தோஷத்தை பகிர்ந்தவர்.,  ஒரு பத்து நிமிஷத்துல பேசுறேன்., என்று சொன்னார்.,

              நிவேதா நந்தனுக்கு அழைத்தாள்.

           “பூனைக்குட்டி., என்னடா ஆபீஸ் வந்த உடனே கூப்பிட்டு இருக்க”., என்று கேட்டான்.

            அவளுக்கு அவனிடம் எப்படி சொல்வது என்று தயக்கத்தோடு “நந்து பிஸியா” என்றாள்.

              “இல்லடா பூனைக்குட்டி சொல்லு” என்று சொல்லவும்.,

                “நந்து” என்றாள்.,

             “சொல்லுடா காலைல தான் சொன்ன.,   ப்ரீயா இருங்கன்னு..,  இப்ப கொஞ்ச நேரம் கூட ஆகலை., மறுபடியும் கூப்பிட்டுட்ட  என்னை விட்டுட்டு இருக்க முடியல தானே”.,  என்று கேட்கவும்..,

               அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்து கொண்டே இருந்தவள் “எனக்கு உங்கள பாக்கணும் போல இருக்கே..,  வர்றீங்களா”., என்றாள்.

             “ஏய்ய்., என்னடா திடீர்னு”., என்றான் நந்து…

             “நந்து நான் உங்ககிட்ட ஒன்னு கேட்பேன்., தப்பா எடுக்க மாட்டீங்க இல்ல”..,  என்றாள்.

             “எடுக்க மாட்டேன்னு சொல்லு” என்றாள்.

            “அது வந்து” என்று இழுக்கவும்.

           ” சொல்லுடா”., என்றான்.,

           “நீங்க ஏன் என்ட்ட குழந்தை பத்தி பேசினதே இல்ல”., என்றாள்.

           “எக்ஸாம் முடிஞ்ச உடனே பேசனும் ன்னு நினைச்சேன்., நீ தான் ஊருக்கு போயிட்டேயே”., என்றான்.

             “நமக்கு ஒரு பேபி வந்தாலும்., நான் இப்ப இருக்குற மாதிரி இருக்க நீங்க அலவ் பண்ணுவீங்களா.,  இல்ல பேபி வந்துருச்சு நீ இப்படித்தான் இருக்கணும்.., அப்படித்தான் இருக்கணும் ன்னு., கண்டிஷன் போடுவீங்களா”., என்றாள்.

                “கண்டிஷன் போட மாட்டேன்.,  யார் சொன்னா., இந்த மாதிரி எல்லாம் ஏதாவது பயங்காட்டி வைச்சாங்களா.,  நீ எப்பவும் நீயாவே  இருக்கலாம்.,  எனக்கு அதுதான் பிடிக்கும்”., என்று சொல்லவும்..,

             “நிஜமா தானே” என்றாள்.

              “நிஜமா நீ நீயா இருக்கலாம்.,  நான் உன்னை ஒண்ணுமே சொல்ல மாட்டேன்”.,  என்று சொல்லவும்.

                “அப்ப  பேபி வந்தா  நீங்களே பாத்துப்பீங்களா”., என்றாள்.,

              ” நான் பாத்துக்குறேன்., அம்மா இருக்காங்க., அம்மா பாத்துப்பாங்க., ஏன் இப்ப என்ன  ஆச்சு, திடீர் ன்னு கேட்குற”.,  என்றான்.,

                   “இல்ல நமக்கு பாப்பா வரப்போகுது” என்று சொல்லவும்.,

            “நிவி மா”  என்று சொன்னவன் அதன்பிறகு தான் புரியவும்.., “ஏய் என்ன சொன்ன இப்போ”.,  என்றான்.

              “அது உங்க பாப்பா வரப்போகுதுன்னு சொன்னேன்”.,  என்று தயங்கி தயங்கி அவள் சொல்ல.,

                சற்று நேரம் நந்தனின் பக்கத்தில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.., நந்து என்று அவள் மெதுவாக அழைக்க..,

            “சொல்லுடா”., என்றான் குரல் சற்று  கலங்கியிருந்தது போல உணர்ந்தாள்.,

            “நந்து  அம்மா சொன்னாங்க.,  ஈவினிங் ஹாஸ்பிடல் போகனுமாம்.,  நீங்க வந்துருவீங்களா”., என்றாள்.,

             “இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல, லீவு போட்டு கிளம்பிட்டேன் சரியா .,  அம்மா கிட்ட சொல்லனும் இல்ல”., என்றான்.

            “அத்தை ட்ட  அம்மா சொல்லிட்டாங்க”.,  என்றாள்.,

           “சரி நீ வை., நான் பேசிட்டு உனக்கு திருப்பி கூப்பிடுறேன்”.,  என்று சொல்லி அவள் போனை வைக்க.., அதே நேரம் ஸ்வேதா நிவி க்கு அழைத்தாள்…

                   ஆளாளுக்கு அழைத்து வாழ்த்து சொல்லி பேசி முடிக்க அவர்களெல்லாம் கிளம்பி வருவதாக சொல்லவும்.,

            விளையாட போனவன் அவளுக்கு அவள் கேட்ட மிட்டாயோடு வந்து நின்றான்.

            குளித்துமுடித்து தலையை காயவைத்துக் கொண்டிருந்தவள்  கையில் கொண்டு வந்து கொடுக்க அவனை பிடித்துக் கொண்டு அமர்ந்தவள்.,

      “தேங்க்ஸ் டா” என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே.,

               “அக்கா உனக்கு பிடிச்ச இன்னும் ஒன்று கொண்டு வந்திருக்கேன்., என்னன்னு சொல்லு”., என்றான்.

            “தெரியலைடா”., என்றாள்.

                “இந்தா பாரு” என்று சொல்லி அந்த விளையாட்டு கிரவுண்டில் இருக்கும் கொடுக்காப்புளி மரத்திலிருந்து அதையும் பறித்து வந்திருந்தான்.

    “சூப்பர்டா தேங்க்ஸ் டா”., என்று சொல்லி அவளிடம் வாங்கி சாப்பிட..,

           அம்மா தான் “எதை எடுத்தாலும் நிறைய சாப்பிடாத இந்த நேரத்துல ஒத்துக்காம போயிறக்கூடாது” என்றார்.,

          அவனும் “அம்மா அக்காவுக்காக நான் எவ்வளவு ஆசை ஆசையாக பறிச்சிட்டு வந்து இருக்கேன்., அதை சாப்பிடாதே ன்னு சொல்லாதீங்க”., என்று சொல்லவும்.

            “டேய்” என்று சொல்லி அவனிடமும் “அக்காக்கு பாப்பா வரப் போகுது அப்போ நீ மாமாவாக போற”.,  என்று சொல்லவும் அவனும் சிறிய பையன் என்றாலும்

                தங்கள் வீட்டில் ஒரு குழந்தை வரப்போகிறது என்று சந்தோஷமே அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது….

                அவர்கள் வருவதற்கு மதிய நேரம் ஆனாலும் அனைவரும் வந்து சேர்ந்தனர்.,

        ஆனால் அவர்கள் வரும் நேரத்தில் இங்கு நிவேதா நல்ல தூக்கத்தில் இருந்தாள்.,

               எட்டிப் பார்த்துவிட்டு அனைவரும் வெளியே சென்று அமர்ந்து கொள்ள.,  நந்தன் மட்டும் அவள் அருகிலேயே இருந்து., அவள் தலையை தடவிக் கொடுத்தவன் தூங்கிக் கொண்டிருந்த அவளின் நெற்றியில் முத்தம் வைத்தான்.

                 தூக்கக் கலக்கத்திலும் அவன் வாசம் உணர்ந்தவள் கையை தூக்கி தூக்கக்கலக்கத்தில் நந்து என்றாள்.,

            “வந்துட்டேன் பூனைக்குட்டி”என்று சொல்லி மீண்டும் நெற்றியில் முத்தம் வைக்க.,  சிரித்தபடி மீண்டும்  தூங்கி போனாள்.,

            அதன் பிறகு சற்று நேரம் அவள் அருகில் அமர்ந்திருந்த அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் பின்பு எழுந்து வெளியில் சென்று அமர்ந்துகொண்டான்.,

                       மாலை நேரம் டாக்டரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்ததால் நந்தனின் அம்மாவும்., நிவேதா அம்மாவும் நந்தன் நிவேதா வோடு மருத்துவமனை சென்று முதல் செக்கப்பை முடித்து குழந்தை தான் என உறுதி செய்து கொண்டு.,  அவளுக்கு தேவையான சத்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு திரும்பும் போது தான் பேசிக் கொண்டு வந்தனர்.,

              தூக்கம் என்பது ஒரு சிலருக்கு வாந்தி வருவது போல.., ஒரு சிலர் தூங்கிக் கொண்டே இருப்பார்கள் அது சில மாதம் வரை அப்படித்தான் இருக்கும்.., என்று டாக்டர் சொல்லி இருந்ததை வைத்து பேசிக் கொண்டு வரும் போதே அவள் தூங்கியிருந்தாள்.,

           இப்போது அவளை திருச்சிக்கு அழைத்து செல்வதா  இல்லை திண்டுக்கலில் விட்டு செல்வதா என்று பேச்சு இருந்தது…

                திருச்சிக்கு அழைத்து செல்ல ஆசை இருந்தாலும்.., நிவேதாவின் உடல்நிலை கருதி திண்டுக்கலில் விட்டு விட்டு சென்றனர்.,

                    நந்தன் இடையிடையே வந்து பார்த்துக்கொள்வதாக சொல்ல அவளும் சரி என்று விட்டுவிட்டாள்., ஏனெனில் அவளுக்கு இப்போது தூக்கம் முக்கியமாகப் பட்டது..,

                   அவளுக்கு வேலைக்கு செல்வது பிடித்தாலும் இப்பொழுது அவளுக்கான குடும்பம் அவளுக்கு மிக முக்கியமாக பட்டதால்.,  எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலை வேண்டாம் என்றாள்.,  இப்போது குழந்தை முக்கியம் என்பதை பற்றி மற்றும் யோசித்தாள்.

            ஒரு மாதம் கழித்து அவளை திருச்சிக்கு அழைத்துச் கொண்டு செல்ல.., அங்கும் தேவகி கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டார்…

             நந்தன் ஏற்கனவே அவளை தாங்க.,  இப்பொழுது இன்னும் கேட்கவேண்டுமா என்னும் அளவில் அவளை பொத்தி வைத்து பார்த்துக் கொண்டான்.,

             ஏழாவது மாதம் வளைகாப்பு மிகவும் சீரும் சிறப்புமாக நடக்க மீண்டும் திண்டுக்கலுக்கு பயணப்பட்டாள் நிவேதா…

              நந்தனும் நந்தனின் அம்மாவும் மாறி மாறி நிவேதா வோடு இருக்கும்படி பார்த்துக்கொண்டனர்.,

              இங்கு ஸ்வேதா இவர்கள் வீட்டையும் சேர்த்து பார்த்துக் கொள்ளும் படி இருந்தது…

              டாக்டர் கொடுத்திருந்த தேதிக்கு ஒரு வாரம் முன்பே நந்தனின் மகன் நிவேதாவை சற்றே கஷ்டப்படுத்தி பார்த்துவிட்டு அதன் பிறகு பிறந்தான்.

                   அதன்  பிறகு நிவேதாவின் நேரம் குழந்தையோடு சென்றது.,

            அவள் உடல் நிலையைத் தேற்றுவதே நிவேதாவின் அம்மாவிற்கும் நந்தனின் அம்மாவிற்கும் பெரும் பொறுப்பாக இருந்தது.,  ஏனெனில் சற்று கஷ்டப்பட்டு விட்டாள் என்ற காரணம் தான்..

                  பொறுப்பாக மாறியிருந்தாலும் விளையாட்டு தனமும் அவளிடம் இருக்கதான் செய்தது.,  எதையும் பொறுமையுடன் கையாளும் அவளுடைய குணம் அதற்கு கை கொடுத்தது..,

                    மூன்று மாதம் சென்று அவளை மீண்டும் திருச்சிக்கு அழைத்து செல்லும் நேரத்தில் நந்தன் நிவேதாவிடம் “குழந்தைகாகவும் எனக்காகவும் வேலைக்கு போகாமல் இருந்துட்ட.., ஆனால் உன்னுடைய கனவை நனவாக்குவது இப்பொழுது என்னுடைய பொறுப்பு”., என்றான்.,

           “ஏன் சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்க போறீங்களா”., என்றாள்.

             “ஒஒ அப்படி ஒரு ஆசை இருக்கா”., என்றவன்.

                 அவளை ஆபீஸர் லெவலிலுள்ள பரீட்சைக்கு தயார்படுத்த புத்தகங்களோடு காத்திருந்தான்.,

             இவளோ அவனைப் பார்த்து முறைத்தபடி “இது என்னது” என்று கேட்க.,

              “நீ வேலைக்கு ஆசைப்பட்ட இல்ல” என்றான்.

             “ஆசைப்பட்டேன்.., ஆனால் திருப்பியும் படிக்கனுமா”.,  என்றாள்.

              “அதெல்லாம் படிக்கலாம்., நான் சொல்ற மாதிரி படி எக்ஸாம் கண்டிப்பா கிளியர் பண்ணிறலாம்”., என்றான்.

           “இல்ல முடியாது” என்று சொல்லவும்.,

                 “நீ  இப்ப தானே கம்ப்ளீட்  பண்ணிருக்க., இத்தோட  படிச்சா உனக்கு ஈஸியா இருக்கும்., நான் சொல்லி தர்றேன்.,  அம்மா இனிமேல் தம்பியை பார்த்துக்குவாங்க..,

                 நீ என்ன பண்ற.,  நான் சொல்லுற மாதிரி படிக்க ஆரம்பிச்சா., தம்பிக்கு இரண்டு வயசு ஆகுறதுக்குள்ள.,  நீ கண்டிப்பா எக்ஸாம் கிளியர் பண்ணி வேலைக்கு போகலாம்”., என்றான்.

              “நிஜமாத்தான் சொல்றீங்களா”., என்றாள்.,

        “பின்ன விளையாடவா செய்றேன்., நீ தானே வேலைக்கு போகனும் ன்னு., ஆசைப்பட்ட..,  அப்ப உன்னோட கனவை நனவாக்கி கொடுக்கிறது என்னோட பொறுப்பா இருக்கணும்”.., என்று சொல்லி அவளை தேர்வுக்கு தயார்படுத்த தொடங்கியிருந்தான்…

           நிவேதா ரகுநந்தனின் குழந்தையோ குடும்பத்தினரின் அன்போடு அழகாய் வளர தொடங்கியிருந்தான்..

                அவளுடைய கனவை அவன் நிச்சயம் நிறைவேற்றுவான்., எல்லோரும் இன்புற்று இருக்க ஆண்டவனை வேண்டுவோம்.

                வாழ்க்கையை 

    க்ளோசப்பில் பார்த்தா சோகமா தான் இருக்கும்.., 

    லாங் ஷாட்டில் பாருங்க காமெடியா இருக்கும்.., 

                                      –சார்லி சாப்ளின்

             வாழ்க்கை வரம் தான் எல்லோருக்கும் வாழ தெரியும் வரை.., விட்டுக் கொடுப்பது என்றும் முடிவு செய்தபின் அளவுகள் எல்லாம் வைத்து அளந்து கொண்டு இருக்கக் கூடாது.,  அதுதான் வாழ்க்கை.

            புரிதல் என்பது எங்கிருந்து வருகிறது என்றால் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அன்பிலிருந்து வருகிறது., அந்த அன்பு யாரிடம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் மற்றவரை புரிந்து கொள்ள முன் வருவார்கள்., புரிதல் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாக இருக்காது..,  முடிந்தவரை வாழ்க்கை துணையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.,

           புரிந்து கொள்ளாத வாழ்க்கை நரகத்திலும் கொடியது.. வாழ்க்கைத் துணையை யாரோ ஒருவர்.., மற்ற ஒருவரைப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் அது நரகம் தான்..,

    இங்கு நிறைய பேரின் வாழ்க்கை நரக வேதனையில் தான் சென்று கொண்டிருக்கிறது.., கதைக்காக மாற்றி எழுதலாம்., ஆனால் வாழ்க்கையில் இருவருக்கான புரிதல் என்பது அன்பு அதிகரிக்கும் போது தான் வருகிறது.,

             ஒருவர் விட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் மற்றவர் விட்டுக் கொடுக்க முயற்சி செய்யுங்கள்.., புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.., மற்றொருவர் தானாகவே அந்த புரிதலையும் அன்பையும் ஏற்றுக்கொள்ள தொடங்கும் போது தானாகவே வாழ்க்கை பாதை மாறும்..

      இருப்பது ஒரு வாழ்க்கை.., 
    ஒரே முறைதான் வாழப்போகிறோம்.., 
    வாழ்க்கையே வாழ்க்கையாக 
    வாழ்ந்து விடுங்கள்.

    என்றும் அன்புடன்.,
    ஆதிபிரபா.

என்னுரை

 

நான் த.ஆதிலெட்சுமி பிரபாகரன் (ஆதிபிரபா) திருநெல்வேலி எனது சொந்த மண்.. நெல்லை பொண்ணு  என்று சொல்லிக் கொள்வதில் பெருமைபடுகிறேன்.  என் கணவர் வழக்கறிஞர். எழுத்துக்களின் அறிமுகம் கிடைத்தது என் தந்தையால்…எழுத்துக்களின் மேல் தீராத காதல் கொண்டவள். எழுத்துக்களோடு கைக்கோர்க்கும் வாசகி நான் .. ஒரு வீட்டுப் பறவையின் எண்ணச் சிதறல்களே என் எழுத்துக்கள் .

என் எழுத்துக்களை ஊக்கப்படுத்தும் குடும்பத்தினர் மற்றும் பிரதிலிபி தளத்தில் உள்ள தோழமைகள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்  .

 

             ‌‌என்றும் நட்புடன்

                                                                                                                                                                                                                                                  த.ஆதிபிரபா

கருத்துக்களை தெரிவிக்க [email protected]