12

விழிகள் சொல்லும் இம்மொழி 
புதிய தடி கண்ணே..

கற்பனை தானா என்று 
கண்சிமிட்டி பார்க்கச் 
சொல்கிறது 
உன் விழி சொல்லும் 
காதல் மொழி..

அதித யோசனையோடு வண்டியை மெதுவாக ஓட்டிக் கொண்டு வந்தவள்.,  தங்கள் பகுதிக்கு திரும்பும் இடத்தில் திருப்பும் போது தான் கவனித்தாள்.,

அங்கு இருக்கும் கோயிலுக்கும்., பார்க்  க்கும் நடுவில் உள்ள சிறிய பாதை அருகே நந்தன் உடைய நண்பனின் வண்டி நிற்பதும்.., அவர்கள் இருவரும் அச்சிறிய பாதையில் உள்ளே செல்வதும்.., அவர்கள் சுற்றி இருப்பது எதையும் கவனிக்காமல் பேசியபடியே  உள்ளே செல்வதை கவனித்து விட்டவள்..,

அவனுடைய டென்ஷன் முகம் கண்ணில் வந்து செல்ல உடனே உள்ளே செல்லும் முடிவை எடுத்தாள்.

மெதுவாக வண்டியை நிறுத்தி காலை ஊன்றி அப்படியே பின்பக்கமாக வண்டியை தள்ளிக் கொண்டே சென்றவள் பார்க் கின் முன்பகுதியில் வண்டியை நிறுத்தி பூட்டி விட்டு.., செல்போனை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பேக்கை சீட்டின் உள்பகுதியில் வைத்து பூட்டி விட்டு நிதானமாக பார்க் கிற்குள்  நுழைந்தாள்…

பார்வையால் சலித்தபடியே உள்ளே செல்ல..,

அங்கு தலையைக் கோதிய படி தன் நண்பனிடம் ஏதோ பேசிய படி நின்ற நந்தனும்., அவன் தோழனும் அருகில் நின்றனர்..,

நந்தனின் தோழன்., அவன் தோளில் தட்டி ஏதோ செல்வது தெரிந்தவுடன் நிதானமாக அவர்கள் நின்ற இடத்திற்கு அருகிலுள்ள மரத்தடி பகுதிக்கு சென்றாள்.,

அதே நேரம் கோயிலில் உள் பகுதியில் இருந்து பார்க்கை நோக்கி வரும் பகுதிக்கு வந்து சேர்ந்தாள் மஞ்சரி.,

அதன்பிறகே நிவேதா அவன் எதற்கு வந்து இருப்பான் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.,

‘சரி என்னதான் பேசுகிறார்கள் என்று பார்ப்போம்’ என்று நினைத்துக் கொண்டாள்.

‘அந்த பக்கம் தள்ளி நின்னு பேசினா.,  நாம என்ன செய்ய.., அவங்க பேசுறது எப்படி கேட்கும்’ என்ற யோசனையோடு நின்றாள்.,

அவளுக்கு கஷ்டம் வைக்காமல் சரியாக அவள் நின்ற மரத்திற்கு மறுபுறமாக என்று பேசத் தொடங்கினர்.,

மஞ்சரி கோபமாக மரத்தடிக்கு வந்தாள்., யாரும் மரத்திற்கு அந்த பக்கம் நின்ற நிவேதாவை கவனிக்கவில்லை.,

மரத்தின் அடிப்பகுதி நல்ல பெரிய அடர்ந்த பகுதி என்பதால் அவள் நின்றது யாருக்கும் தெரியவும் இல்லை.., இவள் லேசாக நகர்ந்து அவர்கள் இவள் கண்ணில் விழும் அளவிற்கு நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்….

கோபமாக வந்த நந்தன் “உனக்கு அறிவே கிடையாதா.., எத்தனை தடவை சொல்லி இருக்கேன் போன் பண்ணாதே ன்னு.,  அசிங்கமா இல்ல கல்யாணம் ஆன அடுத்த ஆம்பளைக்கு போன் பண்ணிட்டு இருக்குற.., எவ்வளவு கேவலம் ன்னு தெரியாதா.., இந்த லட்சணத்தில் பெற்றவங்க உன்ன விட்டுருக்காங்க பாரு”., என்றான்..

“ரொம்ப திமிர் தாண்டா.., உனக்கும் உன் பொண்டாட்டிக்கும்.., அன்னைக்கு என்ன அடிச்சது உன் பொண்டாட்டியாமே.,  அதுக்கப்புறம் தான் தெரியும்., அன்னைக்கு தெரியாத மாதிரியே நீயும் இருந்த இல்ல..,

அவ கைல கொடுத்த லெட்டருக்கு ஒரு எபெக்டையும் காணோம்.., கண்டிப்பா இதுக்குள்ள உன்கிட்ட  கேட்டிருப்பா ன்னு எதிர்பார்த்தேன்.,  உன் மேல அந்த அளவுக்கு நம்பிக்கையா.,

அது எப்படிடா நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜா.., நான் லட்டரில் அவ்வளவு டீடெயிலா எழுதிக் கொடுத்தும் உன்னை கேள்வி கேட்கலையா.., நீங்க லவ் மேரேஜா இருக்கணும்.., இல்ல உன் ட்ட மயங்கிட்டா ன்னு நினைக்கிறேன்.,  அப்படித்தான் இருக்கணும்”.,  என்று சொன்னாள்.

“ஏய் வாய அளந்து பேசு.., ஒரு அளவுக்கு மேல நான் பொறுக்க மாட்டேன்.., வேலை போனாலும் பரவால்ல ன்னு., உன்ன வெட்டி போட்டுட்டு போய்டுவேன் பார்த்துக்கோ”.,  என்றான்.

“அட அவளை சொன்னா உனக்கு கோவம் வருதா., பரவாயில்லையே”..,  என்று சொன்னவள்…

“உன் பொண்டாட்டிய உங்க அம்மா ரொம்ப பாராட்டுது போல., அதுதான் லேசா விளையாடிப் பார்க்கலாம் ன்னு இருக்கேன்.,

அன்னைக்கு நீ உன் பொண்டாட்டிக்கு ஒரு கிப்ட் வாங்கின இல்ல”., என்று சொல்லி திருச்சியின் பிரபலமான துணிக்கடையை சொல்லி “நீ வாங்குன அதே மாதிரி நான்  வாங்கி வச்சிருக்கேன்.,  அதை நாளைக்கு போட்டுட்டு வந்து உன் பொண்டாட்டி ட்ட.,  நீ தான் வாங்கி கொடுத்த ன்னு சொல்ல போறேன்”.,  என்று சொல்லவும் நந்தனின் முகம் சற்று நேரத்தில் மாறியது.,

“இவளுக்கு எப்படி தெரியும்னு பார்க்கிறாயா.., அன்னைக்கு அதே கடையில் தான் நான் இருந்தேன்”.,  என்றால் அழுத்தமாக…

“உன் பொண்டாட்டி ரொம்ப நல்லவ., பொறுப்பு., பொறுமை ன்னு உன் அம்மா ஒரு பக்கம் பெருமை பிடித்துட்டு இருக்கு.,  நாளைக்கு அத்தனையும் உடைச்சு காண்பிக்கிறேன் பாரு”..,  என்று சொடக்கு போட்டு அவன் முன்னாடி பேச.., அவனும் என்ன செய்வது என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் தான் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.,

ஆனால் அவளோ மீண்டும் பேசத் தொடங்கினாள்., “நாளைக்கு தெரிஞ்சிடும் நான் காமிக்கிற எவிடன்ஸ்.., நான் சொல்ற டீடெயில்ஸ் வச்சு., உன் பொண்டாட்டி உன்னைய ச்ச்சீ.,  அப்படின்னு சொல்லிட்டு போக வைக்கல அப்புறம் பாரு”., என்றாள்..

“தாங்குறீயாம்., படிப்பு முடியுற வரை குழந்தை வேண்டாம் ன்னு சொன்னீயாம்., வெளியே இதை சொல்லியே பெருமை பேசுறாங்க உன்னை பற்றி.., நாளைக்கு உன் பொண்டாட்டி பெட்டிய கட்டிட்டு போன பிறகு பீல் பண்ணுவ… குழந்தை ன்னு ஒன்னு இருந்தா அத சாக்கு வைச்சி சேர்ந்து இருக்கலாமே ன்னு”.., என்கவும்.

“ஏய்., ச்சீ அசிங்கமா இல்லை., இப்படி பேச… பொண்ணா நீயெல்லாம் பிசாசு”., என்றான்.

“என்னமோ சொல்லிக்கோ., இப்போ போன்ல உன் பொண்டாட்டிய கதற அடிச்சிடுவேன் அப்படி ன்னு சொல்ல போய்த்தானே வந்த.., இல்லாட்டி வந்திருக்க மாட்ட இல்லை”.., என்று அகங்காரமாக பேசினாள் மஞ்சரி…

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மரத்திற்க்கு அந்த பக்கமாக நின்ற நிவேதாவிற்கோ சிரிப்புதான் வந்தது..,

‘ம்ஹூம் நீ  சொல்லித்தான் அப்படியே நான் நம்பிட தான் போறேன்.., அது எப்படி கல்லு மாதிரி பக்கத்திலேயே நான் இருக்கேன்., முத்தமே யோசித்து தான் தந்தாங்க., அத தவிர வேற ஒன்னும் கிடையாது., உனக்கு பொறுக்கலையா., இனி முத்தம் தரவே யோசிப்பாங்க ளே.,  நீ அப்படி என்ன எவிடன்ஸ் தரப் போற’., என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக்கொண்டாள்.,

‘உனக்கு மஞ்சரி ன்ற பேரை விட மிரட்டல் மஞ்சரி ன்னு  பெயர் வைத்திருக்கலாம்.., தப்பு பண்ணிட்டாங்க.., ஆமா வீட்டுல எப்படி இப்படி அலைய விடுவாங்களோ’ என்று நினைத்துக்கொண்டே அவள்  மஞ்சரியின் தாய் தந்தையை சேர்த்து திட்டிக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கூட பார்க்காத அளவில் உள்ள பெற்றோர்கள் நினைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை யோசித்துக் கொண்டிருந்தாள்..

அதுவரை அமைதியாக நின்ற நந்தன்  “அவ என்கூட சண்டை போட்டாலும் பரவாயில்லை.., ஆனா அவளுக்கு ஏதாவது பிரச்சனை பண்ணின., அவளை சொன்ன ஒரே காரணத்துக்காக நான் ஓடி வந்தேன்.,  இந்த மாதிரி மிரட்டின., இல்ல வேற ஏதாவது னா விட்டு வைக்கமாட்டான்..,  ஞாபகம் வச்சுக்கோ”.., என்று சொன்னாலும் நண்பனை இழுத்துக் கொண்டு வேக வேகமாக அவ்விடத்தை காலி செய்தான்..

மறைவில் நின்ற நிவேதாவுக்கு தான்.,  ‘இவ்வளவு தான் பேச வந்தாங்களா இதுக்குதான் அவசரஅவசரமாக வந்தாங்க ளா.,  லூசு நந்தன்  மூஞ்சை உர்ர்ர் என்று வச்சு இருந்துச்சா..,  நான் ஏதோ டென்ஷனா ஒரு மாதிரி போகுதே முகம் ஒரு மாதிரி இருக்கேன்னு இல்ல பயந்து போய் ஓடி வந்தேன்.., இந்த மிரட்டலுக்கு தான் தெரிந்தால் நான் நேரிலேயே போய் நின்னுருப்பேன்.,

அத்தைய சொல்லணும் இப்படி ஒரு பிள்ளையை வளர்த்து வச்சிருக்காங்க பாரு..,  அந்த லூசு பயந்துகிட்டு இருக்கும்., எதையுமே செய்யாது.., எல்லாம் நம்ம தான் ஹேண்டில் பண்ண வேண்டியதா இருக்கு’ என்று மனதிற்குள் நினைத்தபடி அங்கு இருந்த நகர போனவளை மீண்டும் கேட்ட மஞ்சரியின் குரல் நிற்க வைத்தது..,