வீட்டிற்கு வந்தவளுக்கு ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை வந்தது.,
அவளால் அந்த நேரத்தின் கனத்தை தாங்க முடியாமல் கண்ணீர் வழிய ஹாலில் அமர்ந்து இருந்தாள்., தேற்றுவார் இன்றி அழுது முடித்தவள்., முகத்தை கழுவி சரி செய்தாலும்., கண்ணீரை வர வைத்தது. ஏனெனில் தேவகியின் அன்பும் அத்தகையது.,
வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்டவுடன் அவசர அவசரமாக கண்ணைத் துடைத்துக்கொண்டு முகத்தை சாதாரணமாக வைத்தபடி வீட்டில் வேலை பார்க்கும் பெண்மணிக்கு கதவை திறந்தாள்.,
அவள் ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பும் போதே அவருக்கு போன் செய்து சொல்லியிருந்ததால்., எப்பொழுதும் மதியநேர வருபவர்., இன்று இவள் உடனே திரும்ப ஹாஸ்பிடலுக்கு கிளம்ப வேண்டும் என்பதால் வந்திருந்தார்..,
எப்போதும் அவர் செய்யும் வேலைகளை செய்வதற்கும் டாக்டர் சொன்னவற்றை தயார் நிலையில் எடுத்து வைத்துக் கொண்டு அத்தை கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரியாது என்ற எண்ணத்தோடு தன் கையில் இருக்கும் தன்னுடைய ஏடிஎம் கார்டை எடுத்துக் கொண்டாள்.,
அப்போது தான் யாருக்கும் சொல்லாமல் இருப்பது சரியாக வராது என்ற எண்ணத்தோடு., மற்றவற்றை சொல்லாவிட்டாலும் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதை சொல்ல வேண்டுமென்று போன் செய்தாள்.,
ஸ்வேதாவோ “திருமண வீட்டில் இருக்கிறேன்., சத்தம் எதுவும் கேட்கவில்லை., மதியத்திற்கு மேல் கிளம்பிவிடுவேன்., அப்ப பேசுகிறேன்”., என்று சொல்லி விட்டு வைத்து விட்டாள்.
அவள் கல்லூரி நேரத்தில் அழைக்கிறாளே என்னவென்று கூட யோசிக்கவில்லை..,
ஆனால் நந்தனின் அப்பாவோ அப்படி யோசிக்கவில்லை.., “என்னமா இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்க காலேஜ்ல தான் இருக்க”., என்று கேட்டார்.
“அது ஒன்னும் இல்ல மாமா நீங்க எப்ப கிளம்புறீங்க., என்று கேட்பதற்கு தான் கூப்பிட்டேன்”., என்று சொன்னாள்.
“சீக்கிரம் கிளம்பிருவேன் மா., ஏன் உங்க அத்த தனியா இருப்பா ன்னு யோசிக்கீயா., சாயங்காலத்திற்க்குள் வீட்டுக்கு வந்து விடுவேன்”., என்றார்.
அவளும் சரி என்று அழைப்பை துண்டித்து விட்டாள் நிச்சயமாக நந்தன் மீட்டிங்கில் இருக்கும் போது போனை சுவிட்ச் ஆப் செய்து இருப்பான்., அவனிடம் இப்போது பேச வேண்டாம் என்ற எண்ணத்தோடு கிளம்ப தயாரானாள்.
அதற்குள் வேலை முடிந்து இருக்க தேவையான அனைத்தையும் எடுத்துக் கொண்டு வண்டியிலேயே மருத்துவமனைக்கு கிளம்பினாள்.,
ஏற்கனவே ஆட்டோ டிரைவரிடம் சொல்லி இருந்தாள்., “நான் போகும் போது ஹாஸ்பிடலுக்கு வண்டியில போகிறேன் ண்ணா., அத்தைய வீட்டுக்கு கூட்டிட்டு வரும்போது உங்களுக்கு போன் பண்றேன் நீங்க வந்துருங்க”., என்று சொல்லியிருந்தாள்.
சரி என்று சொல்லி விட்டு அவரும் இவளை வீட்டில் விட்டு கிளம்பி இருந்தார்….
அவள் மருத்துவமனைக்கு வரும் போது மெனோபாஸ் நேரத்தில் அதிக உதிரப்போக்கு இருந்தால் என்ன செய்வார்களோ அதை செய்திருக்க.., வாடிப் போய் படுத்திருந்தார்.,
படுக்கையில் இருந்தவரிடம் வந்து ஹாஸ்பிட்டல் உடையில் இருந்து வேறு உடை மாற்றிக் கொள்ள நர்ஸ் உதவியோடு அவருக்கு வசதியாக உடையை மாற்ற உதவி செய்துவிட்டு., டாக்டரிடம் போய் பேசி விட்டு வருவதாக தேவகியிடம் சொல்லிவிட்டு சென்றாள்.
டாக்டரை காண சென்றாள்., டாக்டரோ “வாம்மா., டெஸ்ட் க்கு அனுப்பியிருக்கோம்., ரிப்போர்ட் வரதுக்கு எப்படியும் மூன்று நாள் ஆகும்”., என்று சொன்னார்.
அவள் அறியாமல் கண் கலங்கினாலும்., ஒரு பெருமூச்சில் தன்னை நிதானித்தவள்., “டாக்டர் யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றாள் மறுபடியும்.,
“சரிம்மா., சொல்ல மாட்டேன்”., என்று சொல்லிவிட்டு டாக்டரும் தன் வேலையை பார்க்க சென்றார்.
இவள் தான் யோசனையோடு தேவகி தங்கியிருந்த அறைக்கு வர., தேவகி தூங்கி இருந்தார்., அதுவரை துணையிருந்த மருத்துவமனை ஊழியரை அனுப்பி விட்டு அவ்வறையின் ஜன்னல் வழியே வெளியே பார்த்தவளுக்கு உச்சிப்பிள்ளையார் கோயில் கோபுரம் மட்டும் தெரிய.., இங்கிருந்தே வேண்டிக்கொண்டாள்.
” ப்ளீஸ் காப்பாத்தி கொடுத்திடுடேன்., எனக்கு எங்கம்மா எவ்வளவு முக்கியமோ., அதே அளவு இவங்களும் முக்கியம்., ஏன்னா இந்த ரெண்டு மாசத்துல நான் வந்து இன்னொரு வீட்டில் இருக்கிறேன், அப்படிங்கிற எண்ணமே வராத அளவுக்கு என்ன பார்த்துகிட்டவங்க.,
மாமியார் சொன்னேனா அந்த வார்த்தை கூட தப்பு., எனக்கு இன்னொரு அம்மா மாதிரி., அவங்க என்ன மருமகளா பார்த்ததே கிடையாது., மகளா பாக்குறாங்க., எப்பவுமே நல்லவர்களை தான் சோதிப்பீயா” என்று மனமார கடவுளிடம் வேண்டியவள்.
அவருக்கு எந்த நோயும் இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள்., அந்த நேரத்தில் தன் சிறுபிள்ளைத்தனம் எல்லாம் மறைந்து போக ஒரு பொறுப்பான பெண்ணாக மாற தொடங்கியிருந்தது போல அவளே உணர தொடங்கியிருந்தாள்..
‘எப்படியும் மருத்துவமனைக்கு பீஸ் கட்ட வேண்டும்., எவ்வளவு வரும் என்று தெரியாது., அவள் அக்கவுண்டில் எப்பொழுதும் அப்பா ஒரு குறிப்பிட்ட அமௌன்ட் போட்டு வைத்திருப்பார் என்றாலும்., அந்த தொகை இப்போது பத்துமா’., என்ற எண்ணமும் தோன்றியதால் உடனடியாக எதையும் யோசிக்காமல் தன் தந்தைக்கு போன் செய்தாள்.
அவர் பேங்கில் வேலை பார்ப்பவர் என்பதால் எடுத்தவுடன் “என்னடா குட்டி காலேஜ் நேரத்தில் கூப்பிட்டிருக்க” என்று சொல்லவும்.,
அவள் “இல்லப்பா நான் இன்னைக்கு காலேஜ் போகல” என்றாள்.
“ஏன்டா உடம்புக்கு முடியலையா” என்றார்.
“இல்லப்பா” என்று சொன்னவள்., “அத்தைக்கு திடீர்னு சிக் ஆயிட்டாங்க., ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்திருக்கேன்”., என்று சொல்லி வீட்டு சூழ்நிலையை சொன்னவள்.,
“என்கிட்ட இப்ப நீங்க பேங்க்ல போட்டு வச்சிருந்தா அமௌன்ட் தான்பா இருக்கு., எவ்வளவு இருக்கு ன்னு கூட எனக்கு தெரியாது., நீங்க எனக்கு செக் பண்றீங்களா., பண்ணிட்டு எதுக்கும் கூட கொஞ்சம் போட்டு விடுகிறீங்களா ப்பா”., என்று கேட்டாள்.
“நந்தன் மீட்டிங் போய் இருக்காங்க அவங்களுக்கு இப்போ போன் பண்ண முடியாது., அத்தையும் எவ்வளவு கையில் வைத்து இருக்காங்கன்னு தெரியல., அதைவிட கேட்பதற்கு ஒரு மாதிரி இருந்துச்சு., அதனால தான் உங்ககிட்ட சொல்றேன்”., என்று சொன்னாள்.
“நான் பாத்துக்குறேன்மா., வேற எதுவும் ஹெல்ப் வேணுமா டா… அம்மாவ வேண்ணா வர சொல்லவா”., என்று சொன்னார்.,
பொறுப்புள்ள தகப்பனாக தன் மகளை கட்டிக் கொடுத்திருக்கும் குடும்பமும் தனக்கு முக்கியம் என்பது எப்பொழுதும் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் ஒவ்வொரு தந்தையின் நினைப்பிலும் இருக்கும் போல.,
“இல்லப்பா நான் பார்த்துப்பேன்., அம்மா அலைய வேண்டாம்”., என்றாள்.
மதியம் தாண்டிய நேரத்தில் ஸ்வேதா அழைத்தாள். “ஆமா கேட்க நினைச்சேன்., நீ காலையில போன் பண்ணி இருந்த காலேஜ்ல இருந்தா கூப்பிட மாட்டீயே”., என்று நிவேதாவிடம் கேட்டாள்.
“அண்ணி கிளம்பிட்டீங்களா” என்றாள்.
” நான் இப்பதான் கிளம்ப போறேன்”., என்று சொன்னாள்.
“இல்ல நான் அண்ணன் கிட்ட பேசுறதுக்கு தான் கூப்பிட்டேன்., அண்ணன் கிட்ட கொஞ்சம் கொடுக்கறீங்களா”., என்றாள்.
ஷ்யாம் பேசவும் “அண்ணா கொஞ்சம் தள்ளி வந்து பேசுங்க”., என்று சொல்லிவிட்டு அங்கு உள்ள நிலையை எடுத்துக்கூறினாள்.
அங்கிருந்தே வருவதாக சொல்லிக் கொண்டிருந்தான்.
நந்தனின் அப்பாவும் அவளைத்தான் அழைத்தார்., “என்னமா கூப்பிட்டயே டா எதுவும் முக்கியமான விஷயமா.., சரியா பேச முடியல., இதோ கிளம்பிட்டேன் மா., எதுவும் சொல்லனும் மா” என்று அவராக ஞாபகப்படுத்த..,
“ஆமா மாமா திருச்சி பஸ் ஸ்டாண்ட்ல இறங்கின உடனே எனக்கு பேசுங்க”., என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
அவரும் “இதோ வந்து கொண்டிருக்கிறேன்” என்று மட்டுமே சொன்னார்.
“சரி மாமா”., என்று சொல்லி போனை வைத்து விட்டு யோசித்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்…..
தூக்கம் கலைந்து எழுந்த தேவகிக்கு சற்று மிருதுவான உணவாகக் கொடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி இருந்ததால்.,
வீட்டில் இருந்து கஞ்சி செய்து எடுத்து வந்திருந்தால்., அந்த கஞ்சியில் ஸ்பூன் போட்டு அவரை சாப்பிட வைத்துக் கொண்டிருக்க அவரோ நிவேதாவை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.,
சிறுபிள்ளைத்தனமாக விளையாடிக்கொண்டே சுற்றிக்கொண்டு வந்தாலும் எத்தனை பொறுப்பான பெண்ணை கடவுள் தன் மகனுக்கு கொடுத்து இருப்பதற்கு.., ஒரு வகையில் சந்தோஷமே அடைந்தார்., “நீ சாப்பிடலையா மா”., என்று கேட்டார்.
“இருக்கு அத்தை பசிக்கல சாப்பிடுகிறேன்”., என்று சொல்லிவிட அவர் தான் கட்டாயப்படுத்தி சற்று உணவு உண்ண வைத்தார்.,
அவரை சற்று சாய்ந்து போல் இருக்க வைக்க இவளோ டாக்டரிடம் சென்று “எப்போது வீட்டிற்கு செல்லலாம்”., என்றாள்.