“அதுதான் பட்டி டிங்கரிங் பெயிண்டிங் டச்சிங் வெட்டிங்.,  ஒட்டிங்.”  என்று சொல்லவும்.,

“தாயே நீயும் உன் பாசையும்”., என்றார்.

“நான் இப்படியே தான் வருவேன்”., என்று சொல்லவும்.

“உன்னை மாற்றவா முடியும்., அட்லீஸ்ட் முகத்தை துடைக்கவாவது  செய்.., என்றார்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல போதும் போதும்.., இப்படி பார்த்தா போதும்”.., என்று சொன்னாள்.

“உன்னை வைச்சிட்டு நான் படுற பாடு இருக்கே”.., என்கவும்.

“அதனால தான்  வீட்ட விட்டு துரத்துறீங்க”., என்றாள்.

“வாயை மூடிட்டு பேசாம இருக்க முடியாதா உன்னால.,  பேசுறது  வெளியே கேட்கக் கூடாது”., என்று சொல்ல.,

அதற்குள் அவள் அப்பா அம்மாவை அழைக்க  வேகமாக வெளியே சென்றாள்.

“நானும் வரேன்”., என்று சொல்லவும்

“வாய மூடிட்டு இருடி.., கூப்பிடும்போது வந்த போதும்”., என்றார்.

“அம்மா என்னைய  பார்க்க தானே வந்து இருக்காங்க அப்புறம் நான் தானே வரணும்”.., என்று சொல்லவும்.

“கொஞ்ச நேரம் பேசாம இருடி., என்னால உன்னை சமாளிக்க முடியல”.,என்றார்.

“என்ன சமாளிக்க முடியல னா.,  அவங்க வீட்டுக்கு பேக் பண்ணுறீங்க”., என்று கேள்வி கேட்டாள்.

“தாயே கொஞ்ச நேரம் இரு.,  உங்க அப்பா கூப்பிடுறாரு என்னன்னு கேட்டுட்டு வந்துடறேன்” என்று சொன்னப்படி.,  வெளியே சென்றவர்..,

” இங்க பாரு மாப்ள வரல.,  மாப்பிள்ளையோட அம்மா அப்பா தங்கச்சி தங்கச்சி மாப்பிள்ளை மட்டும் தான் வந்து இருக்காங்க.., நீ வாய் திறந்து எதுவும் பேசக்கூடாது”., என்று சொன்னார்.

“அம்மா என்னை தானே பார்க்க வந்திருக்காங்க.., அப்ப நான் தானே பேசணும்”., என்றாள்.,

” சத்தியமா முடியல டி., ஏன் இந்த பாடு படுத்துற., கல்யாணம் பண்ணி அனுப்பின பின்னே தான் வீட்டு அருமை எல்லாம் தெரியும்”., என்றார்.

“ஏன் என்னை காட்டுக்கா  கல்யாணம் பண்ணி அனுப்ப போறீங்க.. அங்கே வீடு இல்லயா”.., என்றாள்.

“நிவி., சின்ன பிள்ளை மாதிரி பண்ணாத”, என்றார்.

‘இவ ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கா’என்ற நினைவோடு.., “இரு நான் காபி கொடுத்துட்டு வர்றேன்., காபி கொடுத்துட்டு வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்று சொல்லவும்.,

“ஏம்மா இந்த சினிமா ல எல்லாம் பொண்ணு பார்க்க வந்தா.,  பொண்ணு கையில தானே காபி எல்லாம் கொடுத்து விடுவாங்க..,  இது என்ன நீங்க போய் காபி கொடுக்குறீங்க..,  நான் வரேன் நான் வந்து காபி கொடுக்கிறேன்”., என்றாள்.

” தாயே நீ கொடுக்க வேண்டாம்., நீ இங்கேயே இரு நான் வந்து கூட்டிட்டு போறேன்”., என்றார்.

“ஏம்மா.,  நான் தான் நல்ல நடப்பேனே.,  நீங்க எதுக்கு வந்து கூட்டிட்டு போகணும்”., என்றாள்.

“உன்னோட  எனக்கு முடியலடி.,  கொஞ்சம் போயிட்டு வர்றேன்., எந்த கோல்மாலும் பண்ணாம., அமைதியா இரு”., என்றார்.

“போங்க போங்க”., என்று சொல்லிவிட்டு அறைக்கு உள்ளே அமர்ந்திருந்தவளுக்கே தன் தாயை தான் படுத்தும் பாடு ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும்.., மறுபுறம் ‘கல்யாணம் வேண்டாம் என்று சொல்லச்சொல்ல அவசரப் படுறாங்க இல்ல.., அப்ப  இப்படி தான் பண்ணனும்’ என்று சொல்லிக் கொண்டாள்…..

சற்று நேரத்திற்கெல்லாம் உள்ளே வந்த அம்மா., “இங்க பாரு வெளியே வந்தவுடன் அவங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு அமைதியா இருக்கணும் சரியா.,  அப்பா இருக்காங்க.,  எல்லாரும் இருக்காங்க அவங்க சொன்ன மட்டும் தான் உட்காரனும்., அதுவும் அப்பாகிட்ட தான் உட்காரணும் புரிஞ்சிச்சா”., என்று சொல்லவும்.,

திருதிருவென்று முழித்தபடி மண்டையை இலேசாக ஆட்டிக்கொண்டு., ”    “ஏன் மா.,  குட் மார்னிங் எல்லாம் சொல்லக் கூடாதா”., என்று கேட்கவும்.,

அம்மாவிற்கு தான் “தலையில் அடித்து கொள்ளலாம் போல இருக்குடி”., என்றார்.

“ச்சு., அடிச்சுக்காத ம்மா., பாவம் உனக்கு வலிக்கும்” என்றாள் பாவமாக முகத்தை வைத்தபடி.

அவளை முறைத்து பார்த்தபடி., “உன்னைய கால்ல விழச் சொல்லலையே னு சந்தோஷப்பட்டுக்கோ”., என்றார்.

“ஐயையோ காலுல வேற விழச் சொல்லுவாங்க லாமா.,  எத்தனை பேர் வந்துருக்காங்க..,  ரெண்டு காலுக்கு சேர்த்து விழனுமா., இல்லை தனித்தனியா வா”.,   என்று கேட்டாள்.

“அதெல்லாம் வேண்டாம்., நீ வந்து அமைதியா நில்லு போதும்”., என்று சொல்லவும்,

மனதுக்குள் சிரித்தபடி “ஓட ஓட விரட்டுறேன் பாரு” என்று நினைத்துக் கொண்டு வெளியே வந்தாள்…

அவள் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு சாதாரணமாக வரவும்.,  ஷியாமிற்கு தான் சிரிப்பு வந்தது.,

அவள் சுவர் ஏறி குதித்தது மட்டும் தான் அவனுக்கு ஞாபகம் வந்தது.., சுற்றி முற்றி பார்த்துவிட்டு ஒரே தவாக  தாவி சுவர் ஏறி குதித்து இன்னும் கண் முன் நிற்பது போலவே தோன்றியது..

மனதிற்குள் தன் நண்பனுடன் ‘மச்சான்  நீ எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல..,  ரொம்ப சேட்டை புடிச்ச பொண்ணு மாதிரி தெரியுது பார்த்தாலே’..,  என்று நினைத்துக்கொண்டான்…

அவள் வரவும் எழுந்த நந்தனின் அம்மா  வந்து இப்படி உட்காரு என்று அழைக்கவும்..,  வணக்கம் எதுவும் சொல்லாமல் அவர் அழைத்தவுடன் போய் அவர் அருகில் அமர்ந்து கொண்டாள்.

நிவியின் அம்மாவிற்கு தான் கடுப்பாக இருந்தது., மெனக்கெட்டு சொல்லி இருக்கார்.,  அப்பாகிட்ட உட்கார் என்று சொல்லியிருக்க., இவளோ அவங்ககிட்ட உட்கார்ந்துட்டாளே என்று நினைத்துக் கொண்டிருந்தார்.,

பின்பு அனைவரும் அமர்ந்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்க..,  நந்தனின் அம்மா “என்ன படிக்கிற”என்று கேட்க திருதிருவென்று முழித்தபடி.,

அப்பாவை பார்த்துக் கொண்டே., அவள் “ஏன் ஆன்ட்டி எங்கப்பா பயோடேட்டா குடுக்கலையா” என்று கேட்டாள்…

“நிவி அவங்க கேக்கறதுக்கு பதில் சொல்லு., இது என்ன பேச்சு”., என்று அவள் அம்மா அதட்டி  சொல்ல..,

“அவங்க  என்ன இன்டர்வியூ பண்ணவா வந்திருக்காங்க., அவங்க கேட்கிறது எல்லாம் பதில் சொல்லணும் சொல்றீங்க.,  அவங்களுக்கு தான் தெரிந்திருக்குமே”., என்றாள்.

ஷியாமிற்கு சிரிப்பை ஒருபக்கம் அடக்க முடியவில்லை., ஸ்வேதா சிரித்தபடி “எல்லாம் சொன்னாங்க., நீங்க பி.ஈ பைனல் இயர்., இன்னும் ஆறு மாசம் படிப்பு இருக்கு எல்லாம் தெரியும்” என்று சொன்னாள்.

” எனக்கு கேம்பஸ் ல வேலை கிடைச்சிருக்கு..,  அதை எங்க அப்பா சொல்லி இருக்க மாட்டாங்க  உங்ககிட்ட.,  நீங்க அதையும் சேர்த்துக்கோங்க” என்றாள்.

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தான் ‘இவளை என்ன செய்வது வேண்டும் என்றே  இப்படி பேசுகிறாளே’ என்று நினைத்துக் கொண்டனர்.

சற்று நேரம் கல்லூரி படிப்பு என பேசிக்கொண்டிருக்க., பின்பு சாதாரணமாக பொதுப்படையான விஷயங்கள் பேசும்போது நிவேதா தான் சும்மா இருக்காமல்..,

நந்தன்  அம்மாவிடம் “ஆன்ட்டி உங்களுக்கு சமைக்க தெரியுமா”., என்று அவர்கள் கேட்பதற்கு முன் இவள் கேட்டாள்…

“அது எப்படிமா எனக்கும் இவ்வளவு வயசு ஆயிடுச்சு.., சமைக்க தெரியாமல் எப்படி இருப்பேன்”.,  என்று கேட்டார்.

“அப்படி கேட்கல ஆன்ட்டி., எல்லாரும் தான் சமையல் பண்ணுவாங்க., ஆனால் நல்ல டேஸ்டியா சமைக்க தெரியுமா., ன்னு கேட்டேன்”., என்று சொன்னாள்.,

‘என்னடா இந்த பொண்ணு இப்படி எல்லாம் கேட்குது’ என்று யோசித்தாலும் சிரித்தபடி “நல்ல டேஸ்டியா செய்வேன்” என்று சொன்னார்.

“அப்போம்., சூப்பர் ஆன்ட்டி., ஏன்னா எனக்கு நல்ல சாப்பிட மட்டும் தான் தெரியும்”., என்று சொன்னாள்..,

“அதுக்கு என்னடா நல்ல செஞ்சு தரேன்”., என்று சொல்லவும்.,

“எங்க அம்மா  சுமாரா தான் சமைப்பாங்க.., எங்க அம்மாக்கு எல்லாம் டேஸ்டியா சமைக்க வராது”.,  என்றாள்.

நிவேதாவின் பெற்றோர்களோ அவளை பார்த்துக்கொண்டே இருந்தனர். “இந்த பிள்ளை என்ன பாடுபடுத்துது”என்ற யோசனையோடு ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது..

ஷியாம் சிரித்தபடி “நீங்க பேசாம எங்க கிட்ட உங்க அம்மா நல்லா சமைக்க மாட்டாங்கன்னு சொல்றீங்க..,  நாங்க போனதுக்கப்புறம் உங்க அம்மா வேணும்னே கஷாயம் வைத்து கொடுத்திற போறாங்க”., என்றான்.

“எங்க அம்மா போடுற காபியே கஷாயம் மாதிரி தான் இருக்கும்”., என்றாள்.

“அக்கா காலையில பூரியும் குருமாவும் சூப்பரா இருக்கு.., மதியத்துக்கும் இதே தாங்க னு கேட்ட”., என்றான் தம்பி.

“அப்படி சொன்னா தான் டா.. பூஸ் னு இருக்குற பூரி தருவாங்க”., என்றாள்.

“உங்கம்மா காபி நல்லா  போட்டிருந்தாங்க” என்று சொல்லவும்.,

“எப்பவாவது ஏதோ கொஞ்சம் நல்லா சமைப்பாங்க”.,  என்று சொல்லிக் கொண்டு இருக்கவும்.

வெளிப்படையாக பேசும் பெண்ணை பார்த்தவர்களுக்கு சிரிப்புதான் வந்தது…

அதே நேரம் நந்தனின் அப்பா “ஆன்ட்டி நல்ல சமைப்பாளா ன்னு.,  நீ என்கிட்ட லாமா  கேக்கணும்.,  ஏன்னா இத்தனை வருஷமா நான் தானே சாப்பிட்டுகிட்டு இருக்கேன்”., என்றார்.

அவர் சொன்னதற்காக  மறுபடியும் கேட்க  “சமையல் நல்லா தான்  இதுக்கும்., ஆனால்  நீ  எதுக்கு மா கேட்குற”., என்றார்.

“அது ஒன்னுமில்லை அங்கிள்.,  ஹாஸ்டல் சாப்பாடு ரொம்ப மோசமா இருக்கும்.,  எங்க அப்பா சொன்னாங்க., உங்க  வீட்டிலிருந்து  நான் காலேஜ் போலாம்னு., ஒருவேளை ஆன்ட்டி சமையல் சுமாராத்தான் இருக்கும் அப்படின்னா.,  நான் ஹாஸ்டலில் உட்கார்ந்துப்பேன் இல்லையா.., அதான் கேட்டேன்”., ன்று சொன்னாள்..,

ஸ்வேதாவோ., “நீங்க எங்க அம்மாவை பக்கத்தில் வச்சிட்டே அப்படி சொல்றீங்க.,  பேசாம ஹாஸ்டல் இருக்கங்க ன்னு  விட்டுறப் போறாங்க”., என்றாள்.

“சூப்பர்.., அப்ப ஹாஸ்டலில் இருந்துக்குவேன்”., என்றாள்.

அனைவரும் அவளோடு பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்., அவளோடு பேசும் போது அனைவருக்கும் சிரிப்பு தான்..,  அவளும் சிரித்த முகத்துடன் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அதேநேரம் நந்தனின் அப்பாவிடம் திரும்பி “அங்கிள் நீங்க என்ன என்ன ஹெல்ப் பண்ணுவீங்க ஆன்ட்டிக்கு..,   ஆன்ட்டி மட்டும் சமைப்பாங்களா.,  நீங்களும் சமைப்பீங்களா”.,  என்றாள்.

“சில சமயம் வெங்காயம் உரிக்க கொடுத்துடுவா ம்மா., அதுக்கப்புறம் நான் தான் புல்லா வெங்காயம் உரிக்குறேனா பாறேன்”., என்று சொன்னார்.,