“பேசாம ஒன்னு பண்ணுடா., டிரன்ஸ்ஃபர் வாங்கிட்டு வேற ஊருக்கு போயிறேன்., அங்க போய் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போய் நல்லபடியாக குடும்பம் நடத்து” என்று சொன்ன தேவகியை பார்த்து முறைத்தான்.,
“ஏம்மா மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையா.., இருக்கணும் ன்னு நீங்க நினைக்குறீங்களா., இதுங்களுக்கு பயந்துட்டு நான் வேற ஊருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கனுமா.., நம்ம ஊர்ல வேலை கிடைச்சது எவ்வளவு பெரிய நல்ல விஷயம் ன்னு., நான் எவ்வளவு சந்தோஷப் பட்டுட்டு இருக்கேன்.., நீங்க என்ன ஊரு விட்டு போகச் சொல்லுங்க.., எவளோஒருத்திக்கு பயந்துட்டு நான் வெளியே போய் இருக்கணுமா”.. என்றான்.
“அதே தான் டா., நானும் சொல்றேன் மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையா., இவளுக்கு பயந்துட்டு நீ எதுக்குடா கல்யாணத்தை தள்ளி போடணும்., நான் நல்ல பிள்ளையா பார்க்கிறேன்.., உன்னை புரிஞ்சுக்க மாதிரி பிள்ளையா பாக்கறேன்”., என்றார்.
“ஏம்மா எந்த காலத்தில் இருக்கீங்க., இப்ப எல்லாம் எந்த பிள்ளையும் புரிஞ்சிக்காது.., அத புரிஞ்சுக்கோங்க.., உங்க காலத்தை மாதிரி நினைச்சிங்களா எல்லாத்துக்கும் சரி சரின்னு தலையாட்டிட்டு போற பொண்ணா கிடைக்கும் ன்னு நினைக்கிறீங்களா.., சண்டை வந்துச்சு ன்னா., நான் தான் முட்டிக்கணும்., திரும்பத் திரும்ப சொல்றேன் யோசிச்சு முடிவு பண்ணுங்க”., என்றான்…
“அதெல்லாம் ஒன்னும் வராது., கூனியூர் வரும் போது குனிஞ்சிக்கலாம்” என்றார்.
“அம்மா உங்களுக்கு எல்லாம் கிண்டலா போச்சு.., ரொம்ப சண்டை வந்துச்சுன்னா., நான் பேசாம உங்களை கையை காட்டிட்டு போயிடுவேன்., எங்க அம்மா தான் மருமகளே ன்னு., சொல்லுவாங்க அதனாலதான் பிரச்சினையும் வந்துச்சு ன்னு., உங்களை இழுத்து விட்டுட்டு போயிருவேன்., அப்புறம் வீட்டுல மாமியார் மருமகள் சண்டை தினமும் களைகட்டும் பார்த்துக்கோங்க”.., என்றான்.
“அடப்பாவி புள்ளையா டா நீயி.., நான் எனக்கு வர்ற மருமகளை மகள மாதிரி பார்த்துக்கனும் ன்னு நினைச்சா., நீ கடைசில என்ன சண்டை போடுறவளா மாத்தி குடுமிப்பிடி சண்டை போட வைச்சிருவ போலயே”., என்றார் வருத்தமாக..,
அவர்கள் பேசுவதை பார்த்து நண்பர்களும் நந்தனின் அப்பாவும் சிரித்துக் கொண்டிருக்க..,
“சிரிக்காதீங்க உங்களையும் சேர்த்து சொல்லி வச்சுருவேன் வந்து மாமனார் கூட பார்க்காமல் நல்ல சண்டை நடக்கப்போகுது பார்த்துக்கோங்க”., என்றார்.
அதற்குள் வெளியே பேச்சு சத்தம் கேட்க எப்போதும் சேர்ந்து அரட்டை அடிக்கும் அந்த தெருவில் உள்ளவர்கள் வந்தனர்.
அனைவரும் சேர்ந்து வாக்கிங் கிளம்பும் நேரம் “சரிடா நானும் அப்பாவும் அப்படியே ஒரு நடை போயிட்டு தெரு முக்குல இருக்க பார்க் வரை நடந்துட்டு வந்துருவோம்., இவ்வளவு நேரம் என்னை பேச வச்ச இல்லை நீயே டீ போட்டு குடி”., என்றவர்.
“என்னடா நீங்க எல்லாம் இருக்கீங்களா., நந்து டீ போட்டு தருவான் குடிச்சிட்டு போங்க”., என்றவர் “போறதுக்கு முன்னாடி அவனுக்கு கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுங்க டா”., என்றார்.
” நீங்க போங்க நாங்க உக்காந்து பேசிட்டு இவன் போடுற டீயை குடிச்சிட்டு போறோம்” என்று சொன்னார்கள்.
“அம்மா சொன்னது போலவே டீ போட்டு எடுத்து கொண்டு வந்து அமர்ந்தவன் நண்பர்களோடு அரட்டை அடிக்க தொடங்கினான் நந்தன்.,
நண்பர்கள் தான் “ஏன்டா நீ ஏதும் அந்த பிள்ளையை விரும்புகிறாயா” என்று கேட்டனர்.
“இருந்து இருந்து இவள ஒரு மனுஷன் லவ் பண்ணுவானா., அவளை பார்த்தாலே தெரியும் அவன் பார்வையும்., அவ பேச்சும்., அவ மூஞ்சிய எங்க அம்மா தான் ரொம்ம்பப நல்லவ ன்னு நினைப்பாங்க.., மற்ற எல்லாருக்கும் அவ குணம் தெரியும்” என்றான்
“பின்ன ஏன் இப்ப பயப்படுற”., என்றனர்.
“பயம் இல்ல அது., ஏழரையை இழுக்குது., நான் எழுதி வச்சுட்டு செத்து போயிடுவேன்னு மிரட்டி பார்க்கு., நாளைக்கு ஏதும் பிரச்சினை வரக்கூடாது ன்னு பார்க்கிறேன்., நம்ம இப்ப தான் கஷ்டப்பட்டு எக்ஸாம் எழுதி கவர்மெண்ட் வேலைக்கு வந்திருக்கோம்.., இவளால எல்லாம் கெட்டு போகவா”., என்றான்.,
“அவ புத்தி ஊருக்கே தெரியும் டா., உனக்கு மட்டுமா டிரைப் பண்ணிட்டு இருந்தா.., அடுத்த தெருவுல இருக்கானே என்று ஒருவனைச் சொல்லி அவனுக்கிட்டேயும் பேசிட்டு இருக்கா..,
உன்கிட்ட வழிந்து வழிந்து பேச ட்ரை பண்ணினா நடக்கலை., ஆனால் இப்ப பாரு வந்து வம்பு பண்ணிக்கிட்டு இருக்கா.., அவளால என்ன செய்யமுடியும்., தைரியமா முடிவு எடுடா., எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்., பொண்ணு பார்க்க தானே போறாங்க நீ சரின்னு சொல்ல வேண்டியது தானே”.., என்றான் நண்பர்களில் ஒருவன்.,
“சரின்னு சொல்லலாம்., ஆனா இந்த எதிர் வீட்டு விஷயம் தெரிஞ்சவங்க வர்ற பொண்ணு ட்ட ஏதாவது சொல்லிட்டா.., அது மட்டும் இல்லாமல் ஸ்வேதா கல்யாணத்துக்கு நடந்த பிரச்சனையை வேற சொல்லணும் தேவையா” என்றான்.,
அவனின் நினைவு அவன் தங்கை திருமணத்திற்கு முன் நடந்த பிரச்சினையில் போய் நின்றது., ஸ்வேதாவும்., நந்தனும் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் ஆக தேவகி., ராமராஜன் தம்பதியருக்கு பிள்ளைகள்.
தேவகி எதிர் வீட்டிலிருந்தவர்களுடன் நல்ல முறையில் பழக்கத்தோடு இருந்தனர். எதிர் வீட்டுப் பெண்ணை மருமகளே மருமகளே என்று சந்தோஷமாக தான் அழைத்துக் கொண்டிருந்தார்.,
அவர்களின் பழக்க வழக்கத்தை அன்பு என்று நினைத்துக் கொண்டிருந்தார்., ஆனால் அது நடிப்பு என்பது அதன் பிறகுதான் தெரிந்தது., அதை நம்பி அவர் மனதினுள் நல்லவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்க அதை சாதகமாகப் பயன்படுத்திய எதிர் வீட்டு பெண்ணின் அண்ணன் ஸ்வேதாவிடம் கையை பிடித்து இழுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சொன்னவன்.
அவன் வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் தறுதலை., அவனுடைய பேச்சு நடவடிக்கை வந்து ஸ்வேதா சொல்ல பெரிய பிரச்சினையாகி இரண்டு குடும்பங்களும் சண்டைபோட்டு கொண்டு நின்றார்கள்.,
அதன்பிறகு எதிர் வீட்டு பையன் அடாவடியாக பேசுவதை வைத்து அவனுக்கு அவன் வீட்டினர் உறவுமுறையில் பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தனர்.
இவர்களும் அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் ஒருவனை திருமணம் செய்துகொள்ள பிரச்சனை ஓய்ந்தது., ஆனால் இதையெல்லாம் வரும் பெண்ணிடம் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் தலைதூக்கி இருந்தது..,
அது மட்டுமல்லாமல் அம்மா மட்டும் தான் மருமகளாக நினைத்தார்கள் என்று சொன்னாள்.., எப்படி அந்தப் பெண் தன் குடும்பத்தை ஏற்றுக்கொள்வாள்.., தன்னையும் சேர்த்து அல்லவா தவறாக நினைப்பாள் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்து கொண்டே இருந்தது.., அதுதான் இப்போது திருமணம் வேண்டாம் என்று அவன் மறுப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது.,
நண்பர்கள் ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர்., ஏனெனில் அனைவருமே திருமணம் ஆனவர்கள் தான்., இவனை தவிர..,
இப்போது தான் அவனுக்கு திருமணம் பேச்சை எடுத்திருக்க எப்படியாவது திருமணம் முடித்து விட வேண்டும் என்று தேவகி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.,
நண்பர்கள் கிளம்பிய பிறகு அறைக்கு சென்றதும் தன்னை ரெப்பிரஷ் செய்து கொண்டு யோசனையோடு வந்தான்.
‘இப்போது எல்லாம் அதிகமாக கோபப்படுகிறோம்., அலுவலக டென்ஷன் எல்லாவற்றையும் இங்கே வந்து கொட்டுகிறோம் என்றே தோன்றியது., ஊழல் பேர்வழிகள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள்., நாம் நேர்மை என்றால் நம்மோடு நிறுத்தி கொள்ள வேண்டும்., இல்லையெனில் நம்மை பிரச்சனையில் இழுத்து விடுவார்கள்’., என்று நினைத்து கொண்டான்.
அதே நேரம் ஸ்வேதாவிடம் இருந்து போன் வந்தது., எடுத்தவுடன் “ஏன் ண்ணா கல்யாணம் வேண்டாம் ன்னு சொல்லுற” என்று வறுத்தப்பட்ட குரலில் கேட்டாள்.,
” நீ அதை பத்தி பேசாதே.., அத அப்புறம் யோசிக்கலாம்., நீ எப்படி இருக்க., அவன எங்கே”., என்று தன் நண்பனை கேட்டான்.
“அவர் இன்னும் வரல வந்தவுடன் உன் ட்ட பேசுவார்” என்றவள் அழும் குழந்தையை சமாதானப்படுத்திபடியே அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“அண்ணா ரொம்ப லேட் பண்ணாத சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடி., உன்கூட சேர்ந்ததெல்லாம் 27ல கல்யாணம் முடிச்சிட்டு குழந்தை குட்டின்னு சுத்திகிட்டு இருக்காங்க., நீ மட்டும் தான் பொண்ணு பார்க்கவே யோசிக்கிற., வயசு 29 ஆகுது.., என்றாள்.
” உங்களுக்காக நான் உடனே கல்யாணம் பண்ண முடியுமா., லூசு மாதிரி பேசாத நீ நல்லா இருக்க இல்ல”.., என்றான்.
“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன்., நீ ஏதோ இன்னைக்கு பழைய விஷயத்த காரணம் சொல்லி கல்யாணம் வேண்டாம் ன்னு சொன்னீயாம்., அம்மா சொன்னாங்க”., என்று சொன்னாங்க..,
“வாக்கிங் போறேன்னு தானே சொல்லிட்டு போனாங்க.., அதுக்குள்ள உனக்கு எப்படி விஷயத்தைச் சொன்னாங்க”., என்றான்.
“ஆமா நான் அந்தால அஞ்சாறு ஊரு தள்ளியிருக்கேன் பத்தியா., என்கிட்ட சொல்லாம இருப்பாங்க.., இந்தா இங்கே இருக்குற இரண்டு தெரு தள்ளி இருக்கேன்., என் ட்ட சொல்லாமல் இருப்பாங்க பாரு., உன் பிரண்ட் வரட்டும் நான் வாறேன்”., என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.,
“அம்மாக்கு வேற வேலையே இல்லை” என்று புலம்பியபடி யோசனையோடு இருந்தான்.,
எதிர் வீட்டில் இருப்பவளின் குணத்தை பற்றி யோசித்துக் கொண்டான்.
முன்பெல்லாம் அப்பெண் கல்லூரி போகும் வரை குனிந்த தலை நிமிராமல் நல்ல பிள்ளையாக சுற்றிக் கொண்டிருப்பது போல தான் இருந்தது.,
கல்லூரி வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்த பின் அவளுடைய பழக்க வழக்கங்கள் மாறியது மட்டுமல்லாமல்., நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் என்ற பேச்சு இருந்தது.,
இவனுக்கு ஏற்கனவே பெண் பிள்ளைகள் அடுத்த வீட்டில் போய் நின்று கதை பேசுவது பிடிக்காது என்பதால்., அந்த பெண் இங்கு வருவதை அவன் விரும்ப மாட்டான்.., அவன் அம்மாவிடமும் சத்தம் போடத் தான் செய்வான்.
“அடுத்த வீட்டு பிள்ளை எல்லாம் வீட்டுக்குள்ள கூப்பிட்டுச் பேசாதீங்க., இது நல்ல பழக்கம் இல்ல., என்று சொல்லி வெளியே வைத்து பேசி அனுப்புங்கள்” என்பான்.
இவன் இப்படி சத்தம் போடத் தொடங்கிய பிறகுதான். வாசலில் வைத்து பேசத் தொடங்கியிருந்தார்.,
ஆனாலும் அவருக்கு மனதிற்குள் ‘தெரியாத இடத்தில் பெண் எடுத்து கஷ்டப்படுவதை விட தெரிஞ்ச பிள்ளையை கட்டிவைச்சா நல்லாதான் இருக்கும்’என்ற எண்ணம் இருக்கத்தான் செய்தது.
ஆனால் அப்பெண்ணின் அண்ணன் அதையே தப்பாக உபயோகிக்க யோசிப்பான் என்று எண்ணவில்லை., ஒரு நாள் கல்லூரி முடிந்து வந்த ஸ்வேதாவை வழியில் மறித்து “உங்க அண்ணனுக்கு தான் என் தங்கச்சி கல்யாணம் பண்ண போறாங்க., நீ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா.., பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்த மாதிரி இருக்கும்” என்று சொன்னான்.,
அவனோ ரோட்டில் சுற்றிக் கொண்டிருப்பவன் வேலை வெட்டி இல்லாதவன்., அவர் அப்பா கடை வைத்து நடத்த.., அந்த கடையில் கூட அமராமல் அப்பாவின் சம்பாத்தியத்தில் இப்போதுவரை அவனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வான்., பற்றாக்குறைக்கு இப்போது அவனுக்கு ஒரு மனைவி வேறு என்று நினைத்துக் கொண்டான்.
அதுவும் வேலைக்கு போன பிறகு தான் தொல்லை ஜாஸ்தி ஆனது. அதன் பிறகு தான் ஸ்வேதா வை வழிமறித்து அவன் பேசியது.,
இந்த பிசாசுகளை வச்சுட்டு நம்ம கல்யாணம் வேற பண்ணனும் என்று மனதிற்குள் கோபமாக நினைத்தாலும்., அம்மாவிடம் எப்படி சொன்னாலும் அம்மா பிடித்த பிடியில் நிற்கிறார்களே என்று நினைத்து யோசித்துக் கொண்டிருந்தான்…
ஒரு பெருமூச்சோடு ‘சரி எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்., இன்னும் சற்று நேரத்தில் அம்மா வந்து விடுவார்கள்., பின்னாடியே ஷியாம் வந்தவுடன் அவனும்., ஸ்வேதாவும் வந்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொண்டான். எப்படியும் இன்று நம்மை பிடித்து வைத்து பேச தான் செய்வார்கள்.., பார்ப்போம் ஏதாவது ஒரு முடிவு எடுத்து தானே ஆக வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டான்.