அவனிடம் இங்கே இருந்தே “பரிதி ப்ளாஸ்க் கொண்டு வந்திருக்காங்க” என்று சொல்ல,

      “வாங்கி வைமா வரேன்” என்றான்.

இவளும் தோளை குலுக்கியபடி வாங்கி வைத்துக் கொண்டாள்.

     ‘சின்ன பையன் மாதிரி பண்ணுது பாரு, ஐயோ கடவுளே இருக்குற போஸ்டிங் கும், இப்ப பண்ணுற வேலைக்கும்’, என்று சிரித்த படியே “பண்ற அலும்பு தாங்கல” என்று புலம்பி கொண்டிருந்தாள்.

அவள் புலம்பி கொண்டிருக்கும் போதே அருகில் வந்து அமர்ந்தவன், “என்ன தாங்கல” என்று கேட்டான்.

    அவளும் அதையே திருப்பி சொல்லும் போது, அவன் தான் “எல்லாருக்கும் உள்ள ஃபீல் இது, நான் தான் முடிவு பண்ணனும் அடுத்தவங்க சொல்லக்கூடாது சரியா”, என்றான்,

     “சரிங்க சார்”, என்று தலையசைத்தாள்,  தோளோடு சேர்த்து இறுக்கமாக அணைத்தவனிடம் “என்ன ஆச்சு” என்று கேட்டாள்.

“இங்கே இருப்போம், கடல் காற்று சூப்பரா இருக்குல்ல” என்று சொல்லவும்,

அவனை திரும்பி பார்த்தவள் “இருக்கலாமே” என்றாள்.

   அவளுக்கு பிடித்த பர்ஃபியூமை ஏற்கனவே வாங்கி இருந்தான். அதைப்பற்றி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவன் கையில் இருந்த பெர்ஃயூம் ஸ்மலை அவள் முகத்திற்கு அருகே கையை வைக்க,  முகர்ந்து பார்த்தவள்,

   அவனைப் பார்த்து சிரித்தபடி, “இந்த வேலையை தான் இவ்வளவு நேரம் பார்த்தீர்களா” என்று கேட்டாள்.

    அவனும் அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தவன், “இப்போ உள்ள போலாமா” என்றான்.

    “ஏன்” என்று கேட்டாள்.

    “பெர்ஃப்யூம் எப்பவுமே உடனே ஸ்மெல் வராது, கொஞ்ச நேரம் ஆக ஆக தான் அதோட ஸ்மெல்  ஸ்பிரட் ஆகும், அதனால் தான் உள்ள எல்லா இடத்துலயும் அடிச்சு வச்சிட்டு வந்தேன்” என்று சொன்னான்.

   அவன் கையைப் பிடித்து கிள்ளி வைத்தாள்.

     அவனும் “இனி கைல கிள்ளாம கன்னத்தில் கூட கிள்ளலாம்” என்றவன் முகத்தை பக்கத்தில் கொண்டு சென்றான்.

       அவளோ சிரித்தபடி அவன் மீசையை பிடித்து இழுக்கவும், அவன் தான் “ஏய் என்ன இது”, என்றான்.

“இனிமேல் மீசையும் இழுக்கலாம், நீங்க என் பக்கத்தில் வரும் போது எல்லாம் யோசிப்பேன், ஆனால் அப்போ ஒரு மாதிரி ஷையா இருக்கும்”,என்று அவளும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

  சிரித்தபடியே அவள் காதருகே வந்து “வேற என்னவெல்லாம் தோணுச்சு ன்னு சொல்லு” என்றான்.

    “வேற ஒன்னும் இல்ல” என்றவளுக்கு தான், ‘இவன் ட்ட போய் சொல்லுவேனா’ என்று நினைத்து கொண்டாள்.

   அறைக்குள் மட்டும் கேட்கும் அளவிற்கு மிகவும் சத்தம் குறைவாக மெலோடியான பாடல்களை வைத்து விட்டவன்,  அவளிடம் தன் கோரிக்கைகளை எல்லாம் வைக்கத் தொடங்கி இருந்தான். வாழ்க்கை அவர்களுக்கு அழகான பூந்தோட்டமாக மலரத் தொடங்கி இருந்தது.

  கலைத்து, கலந்து, களைந்து சரிந்திருந்தவர்கள் சற்று முன் இருந்த கெஞ்சல், கொஞ்சல் சத்தத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது,

சற்று நேரத்தில் தன் தலையை கையில் தாங்கியபடி சரிந்து அவளைப் பார்த்து படுத்தவன், இரவு விளக்கின் ஒளியில் அவளை மட்டுமே பார்த்திருக்க, அவளோ எதுவும் சொல்லாமல் அவனை பார்த்து இருந்தாள்.

     அவனும் “என்ன ஆச்சு எந்த கமெண்ட் ம் வரல,  இல்ல னா கண்டிப்பா ஏதாவது அது இதுன்னு ஏதாவது சொல்லி இருப்பியே” என்று கேட்டான்.

    “என்ன சொல்ல”, என்றாள்.

    “எப்பவும் சொல்ற பேட் பாய்” என்றான்.

   சிரித்துக் கொண்டே “உங்க கூட சேர்ந்து நானும் பேட் கேர்ள் ஆயிட்டேன் இல்ல, அதான் சொல்லல”, என்று சொன்னாள்.

  சிரித்தபடி அவளை அணைத்துக் கொள்ளவும், அவளோ அவன் மார்பில் முகம் வைத்து அவனுள் புதைந்து கொண்டாள்.

காலையில் அவளை கஷ்டப்பட்டு எழுப்ப வேண்டியதாக இருந்தது,

   “இசை டைம் ஆயிடுச்சு டா எழுந்துக்கோ, போய் பிரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு வந்துடலாம், அவனே காம்ப்ளிமென்ட்ரி கொடுக்குறான், நம்ம லேட்டா போன ஒன்னும் கிடைக்காது, வா வா” என்று சொன்னான்.

     “லேட்டா தானே தூங்கினோம், கூட கொஞ்ச நேரம் தூங்க விடுங்க”, என்று சொன்னாள்.

    “சாப்பிட்டு வந்து தூங்கிக்கலாம்”, என்று சொன்னான்.

  “நீங்க தூங்க விட மாட்டீங்க, எனக்கு தெரியும்” என்று சொல்லி போர்வையை இழுத்து மூடிக்கொள்ள,

  அவனும் அவளிலிருந்து போர்வையை பிரிக்க முயற்சி செய்ய, போர்வை இழுத்து பிடித்தவள், “நோ வேண்டாம் அப்புறம் நீங்க பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட போக மாட்டீங்க, எனக்கு தெரியும்”, என்று சொல்லி அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

அவனும் “எழுந்துக்கோ” என்று எழுப்பிக் கொண்டிருந்தான்.

எழுந்து குளித்து கிளம்பி வந்தவள், சாப்பிட போகும் போது, அவன் கையைப் பிடித்த படியே அவன் தோளில் சாய்ந்த படி நடந்து கொண்டிருந்தவள், “அது எப்படி அவ்வளவு லேட்டா தூங்கிட்டு, அவ்வளவு ஏர்லியரா எந்திரிச்சிட்டிங்க”, என்று கேட்டாள்.

   “என்னோட வேலையில் இதுவும் ஒன்னு, எப்ப டைம் கிடைக்கோ, அப்ப தூங்கிடுவோம், அந்த பழக்கம்”, என்று சொன்னான்.

  “அப்ப நான் தூங்க வேண்டாமா”, என்று கேட்டாள்.

    “நீயும் இனி பழகிருவ பாரேன்” என்று சொல்லி சிரித்தபடி அவள் கையோடு கைகோர்த்துக் கொண்டவன்,

   அவளிடம் ‘மிகவும் சந்தோஷமாக இருப்பதாக’ சொல்லிக் கொண்டே நடந்தான்.

காலை உணவை முடித்து விட்டு மீண்டும் கடற்கரையில் நடை பயில தொடங்கியவர்கள், என்ன பேசினார்கள் என்றால் அவர்களுக்கே தெரியாது, ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்வதும், கேலி செய்வதும், சிரிப்பதும் என்று அவர்களுக்கான பொழுது நன்றாக சென்றது.

கிடைத்த நேரங்களில் கிடைத்த வாய்ப்பை அழகாக பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவனாக அவனும், அவனுடைய ஆசைகளை நிறைவேற்ற தெரிந்தவளாக அவளும் மாறிப்போய் இருந்தனர்.

அங்கு இருந்த மூன்று நாளும் வீட்டிலிருந்து போன் வந்தால் ஒரு சில வார்த்தைகளோடு போனை வைத்து விடுவார்கள்.

மீதி நேரங்களை எல்லாம் தங்களுக்கு மட்டுமே என பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவர்களாக மாறி போயிருந்தனர்.

    வீடு வந்து சேரும் போது இருவரும் பார்த்த உடனே தெரிவது போல அத்தனை மகிழ்வாகவே இருந்தனர். அனைவருக்கும் அவர்கள் மகிழ்ச்சியை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது.

இவர்கள் கீழே வந்து விட்டார்கள் என்ற உடன் இரு வீட்டினரும் வெளியே நின்றனர்.

லிஃப்ட் டில் வந்து இறங்கியவர்கள்  பார்த்தது, இரண்டு வீட்டிலும் நின்றவர்களை தான்.

கதிரவன் தான் “இப்ப நாங்க எந்த வீட்டுக்குள்ள வரணும், இந்த வீட்டுக்குள்ள வரணுமா, அந்த வீட்டுக்குள்ள வரணுமா”, என்று கேட்டான்.

     நந்தனோ “பேசாம நடுவுல இருக்குற சுவரை எடுத்துட்டா, ஒரே விடாயிரும்”, என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான்,

    அதே நேரம் “பின்னாடி தான் பால்கனியில் உங்களுக்கு இன்னொரு பாதை விட்டு வச்சிருக்கே, அப்புறம் என்ன”, என்று சொல்லிவிட்டு “முதல்ல உங்க வீட்டுக்குள்ள போயிட்டு, அதுக்கப்புறம் இங்க வாங்க, ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொன்னார்கள்.

   எதிர் வீட்டு ஆன்ட்டி தான், “வீட்டு வாசலை அடைக்கக் கூடாது, அதனால இரண்டு வீட்டு வாசலையும் உபயோகப்படுத்துங்க, நீங்க பின்பக்க பாதையை பொதுவா உபயோகப் படுத்திக்கோங்க”, என்று சொன்னார்.

     அனைவரும் சரி என்று கேட்டுக் கொண்டனர்.

கதிரவனின் அக்கா தான்,     “முதல்ல இங்க வாங்கடா, அதுக்கப்புறம் அங்க போங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

   அது போலவே முதலில் கதிரவன் வீட்டிற்கு செல்ல, இப்போது அவளுக்கு அவர்கள் வீட்டிற்கு செல்வது எதுவும் தோன்றவில்லை.