ராதாவும் சிரித்துக் கொண்டே அவரோடு ஹை பை அடித்துக் கொண்டாள், அவர்களை திரும்பிப் பார்த்த யாழினி சிரித்துக் கொண்டிருந்தாள்.

கதிரவனின் அக்கா தான், “பாத்துட்டியாடா போதுமா, வா போவோம்”, என்று சொன்னாள்.

“கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு வாறேனே” என்று சொன்னான்,

    “டேய் மானத்தை வாங்காதடா, இன்னும் ரெண்டே நாள் தான், அப்புறம் உன் கூடயே தான் இருப்பா, வா இப்போ”, என்றாள்.

“மெஹந்தி காயவிட்டு கழுவினதுக்கப்புறம் பாத்துட்டு வாறேன்”, என்று சொன்னான்.

   ராதா கிண்டலுக்கு “நாங்க இப்பல்லாம் அவ கையை கழுவ விட மாட்டோம், அது நல்ல காயனும்”, என்று சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

இவர்களுடைய கிண்டலை எல்லாம் பார்த்து யாழினி சிரித்துக் கொண்டிருக்க,

அவனும் “சிரிக்கவா செய்ற இரு வாறேன்” என்று சொல்லிவிட்டு,

“நான் அப்ப இங்கே உட்கார்ந்து இருக்கிறேன்”, என்று சோபாவில் அருகில் கீழே காலை நீட்டி சாய்ந்து அமர,  இவளோ “நீங்க கிளம்புங்க முதல்ல”, என்றாள்.

கதிரவன் அக்கா தான், “டேய் நீ ஒவ்வொரு காரியமும் டீன் ஏஜ் பையன் மாதிரியே பண்றடா, கெளம்பி வா வீட்டுக்கு, நாளைக்கு காலையில வந்து பாரு கைய கழுவி வச்சிருப்பா, அப்புறமா கையில எப்படி இருக்குன்னு பாரு, இப்ப வா”, என்று சொன்னாள்.

     “சரி வாரேன் வாரேன்” என்று சொன்னவன்,

    “இசை போட்டோ அனுப்புறேன், பார்த்துட்டு எது புடிச்சிருக்குன்னு செலக்ட் பண்ணு”, என்று சொன்னான்.

    ராதாவும் கதிரவன் அக்காவும் ஒன்று போல, “அது என்ன ஃபோட்டோ விஷயம், என்னத புடிச்சிருக்கா ன்னு பார்த்து சொல்ல சொல்ற” என்று கேட்கவும்,

“அய்யோ அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல முடியாது, அது எங்களுக்கு ஸ்பெஷல் ஆனது”, என்று சொல்லவும்,

   “இல்ல இல்ல நீ ஏதோ சொல்ற சொல்லு” என்று இவர்களும் கேட்டனர்.

அவன் “அவ கிட்ட கேட்டுக்கோங்க”, என்று சொல்ல .,

   அவளோ “நீங்களே சொல்லிட்டு போங்க, நானும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னாள்.

     “கண்டிப்பா எல்லாருக்கும் தெரிஞ்சுக்கணுமா”, என்று கேட்டான்.

    பெரியவர்கள் இவன் ஏதோ ஏடாகூடமாக சொல்லப் போகிறேன் என்ற எண்ணத்தோடு நகர்ந்து சென்றுவிட,

    நந்தன், ராதா, கதிரவனின் அக்கா இருக்க, இவனோ அனைவரையும் பார்த்துவிட்டு “கொஞ்சம் தள்ளிக்கோங்க” என்று சொன்னான்.

    “ஏன்” என்று கேட்டனர்.

அவனும் மெதுவாக நகர்ந்து வாசல் அருகே வந்து விட்டு, “ஹனிமூன் ரூம் எப்படி வேணும்னு கேட்டேன், டெக்ரேசன் எப்படி இருக்கணும் ன்னு போட்டோ பார்த்து சொல்லு ன்னு சொன்னேன்”, என்று சொல்லி விட்டு அவனும் ஓடி விட,

      ராதாவிற்கும், கதிரவன் அக்காவிற்கும் வெட்கமாக போய்விட்டது.

யாழினியோ அடித்துப் பிடித்து எழுந்து ரூமிற்குள் ஓடி சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

    கதிரவனின் அக்கா தான் “அடக்கடவுளே இவன் ட்ட , இத போய் கேப்பனா நானு,  வேற என்னமோ சொல்றான் ன்னு நினைச்சேன், அவள் ட்ட வேற குசு குசு ன்னு அமைதியா பேசினானே ன்னு சொல்லி கேட்டா, இவன் இத போய் கேட்டு இருக்கானே, நான் தெரியாம கேட்டுட்டேனே”, என்று சொன்னார்.

ராதாவும் சிரித்துக் கொண்டே திரும்ப, நந்தனோ தலை குனிந்த படி சிரித்து கொண்டிருக்க, ராதா எங்கே போவது தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

   கதிரவனின் அக்கா யாரையும் திரும்பி பார்க்க முடியாமல், அவசரமாக வெளியே வந்து, அவர்கள் வீட்டிற்குள் நுழையவும் கதிரவன் அவன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டிருந்தான்.

    அவன் அம்மா தான், “ஏண்டி அவன் அங்க இருந்து ஓடி வந்தவன், போய் கதவை சாத்திக்கிட்டான்”, என்றார்.

     இவளோ அதை எப்படி சொல்வது என்று தெரியாமல், “அது வேற ஒரு விஷயம் விடுங்க” என்று சொன்னாள்.

    அங்கு வீட்டு பெரியவர்களுக்கு அறையும், குறையுமாக கேட்டாலும் ராதாவின் வெட்க சிரிப்பும், நந்தன் குனிந்து உட்கார்ந்து சிரிப்பதையும் பார்த்தவர்கள்,

    ‘ஏதோ ஏடாகூடமா சொல்லிட்டு போய்ட்டான்’ என்று நினைத்துக் கொண்டே யாழினியை தேட, அவளோ அறைக்குள் இருப்பதை தெரிந்து கொண்டவர்கள்,

    ‘நிச்சயமாக ஏதோ ஏடாகூடமாக தான் சொல்லி இருக்கிறான்’ என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.

    அறைக்குள் இருந்த யாழினிக்கும் அவனது பேச்சை நினைத்து சிரிக்காமல் இருக்கவே முடியவில்லை, சிரித்துக் கொண்டே இருந்தவள், அவன் பேசியதை நினைத்து கொண்டாள்.,

அவன் கேட்டது, ‘அந்த பெர்ஃப்யூம் எங்க வாங்கினாள் என்றும், அந்த பெர்ஃப்யூம் வேண்டும் எனக்கு , நாளைக்கு வேறு ஏதும் வைத்திருந்தால் தா, என்றவன் ரெசார்ட் ல் புக் செய்த குடில் ஃபோட்டோ அனுப்புறேன்’ என்று தான் மெதுவாக சொல்லியிருந்தான்,

   இவர்கள் கேட்கவும் தான் வேண்டுமென்றே இப்படி சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

     அவனுக்குமே அறைக்குள் சென்றவனுக்கு, ‘அய்யோ நாளைக்கு அவங்க மூஞ்செல்லாம் எப்படி பார்க்க’ என்று நினைத்தவன்,

    ‘இதெல்லாம் யோசிக்க கூடாது’ என்று நினைத்துக் கொண்டான், ‘கல்யாண வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமடா’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவன், யாழினிக்கும் ஃபோனில் வீடியோ காலில் அழைத்தான்.

   அழைப்பை எடுத்தவள் சிரித்த முகமாக அவனைப் பார்த்து இருந்தாலும், “இதெல்லாம் ஓவர் தெரியுமா, நாளைக்கு யார் மூஞ்சில எப்படி முழிக்கிறது, நீங்க பேசாம சொல்லீட்டிங்க, காலைல உங்களுக்கு டியூட்டின்னு கிளம்பி ஓடிடுவீங்க, என் நிலைமை யோசிச்சு பாத்தீங்களா, எல்லாரும் என்னை எப்படி பார்ப்பாங்கன்னு”, என்றாள்.

    அவனும் சிரித்துக்கொண்டே “எப்படியாவது சமாளி, ஏன் யார் லைஃப்லையும் ஹனிமூன் போயிருக்க மாட்டாங்களா, ஏன் யார் லைஃப்லையுமே அவங்க வாழாம தான் இத்தன புள்ள குட்டி பெத்து  இருக்காங்களா, சும்மா இருப்பியா, நீ வேற”, என்று அவளை சொல்லிக் கொண்டிருந்தான்.

    “அதற்கு மேல் யாரும் எதுவும் கேட்டால், போன போடு நான் பேசுகிறேன்”, என்று சொன்னான்.

   “போதும் போதும், இன்னைக்கு நீங்க பேசுனதுக்கே, நாளைக்கு நான் யார் முகத்தையும் பார்க்க முடியாது, இதுல நாளைக்கு வேற நீங்க பேச போறீங்களா”, என்றாள்.

அவனும் அவளைப் பார்த்துக் கொண்டே, “நீ ஹேப்பியா இருக்கியா”,என்றான்.

    அவளும் “ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்” என்று சொல்லி விட்டு அவனையே பார்த்தபடி, “நீங்க” என்றாள்.

“என்னுடைய மொத்த சந்தோஷமே நீதான்,இனி மேல் நீ என் கூட இருக்க போறேங்கிறது அதைவிட பெரிய சந்தோஷம், ஹேப்பியா தான் இருக்கேன்”, என்று சொன்னான்.

“நீங்க லீவ் போடலையா”, என்று கேட்டாள்.

“நாளைக்கு லீவு போட்டு விடுவேன், நாளைக்கு மத்தியானதுக்கு அப்புறம் வீட்ல தான் இருப்பேன்”, என்றான்.

  “சரி ஓகே நாளைக்கு பாக்கலாம், குட்நைட் சொல்லிருவோமா”, என்றாள்.

  “வெறும் குட் நைட் தானா”,என்றான்.

“வேற என்ன வேணும்” என்று கேட்டாள்.

அவனும் கண்ணைச் சிமிட்டி அவளைப் பார்த்து, “நீ தான்” என்று சொன்னான்.

“உதை விழும், ஒழுங்கா அடிச்சு முடி தூங்குங்க” என்று சொல்லி விட்டு போனை கட் செய்தாள்.

   மறுநாள் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமலேயே சுற்றிக் கொண்டிருந்தவளை,

    ராதா தான் பிடித்து, “அவர் சொல்லிட்டு போனதுக்கு, நீ எதுக்குடி இப்படி வெக்கப்பட்டு கிடக்கிற” என்று சொல்லி சாதாரணமாக இருக்க வைத்தாள் .

திருமணத்திற்கான நாள் அழகாக விடிந்தது காலையில் இங்கிருந்தே கிளம்பி கோயிலுக்கு செல்வதாக சொல்லி இருந்ததால், வீட்டிலேயே அவளுக்கு அலங்காரம் செய்ய ஆள் வந்திருந்தனர். புடவையை கட்டுவதற்கு தயார் செய்யும் போது தான் அந்த புடவையை பார்த்தவுடன், திருமண புடவை எடுத்த என்று அவன் செய்த அலும்புகள் நினைவுக்கு வந்தது.

    புடவை எடுக்கும் போது அலுவலகத்திலிருந்து நேராக யூனிஃபார்மிலே வந்து இறங்கியவன்,  அவர்கள் தேர்வு செய்து கொண்டிருக்கும் போதே வந்து அவனுக்கு பிடித்தது போன்ற ஒரு புடவையை எடுத்து “இது இருக்கட்டும்” என்று சொன்னான்.

அவன் அம்மாவோ “மூஹுர்த்த புடவை முழுவதும் சிகப்பு அல்லது மெருனில் இருப்பதாக தான் எடுப்பார்கள், நீ என்ன இப்படி எடுத்திருக்கிறாய்”, என்று சொன்னார்.

அவனும் ‘நல்ல சிவப்பில் ஆங்காங்கு கொடிகள் ஓடியது போல ஜரிகை வேலைபாடும், பச்சை வண்ண இலைகளுமாக இருக்கும் படியும், அதில் கொத்துக் கொத்தாக பூக்கள் இருப்பது போலவும் டிசைன் செய்யப்பட்ட சேலையை எடுத்தான்’ அதன் விலை எல்லாம் அவன் பார்க்கவில்லை,

   “இந்த புடவை அழகா இருக்கு, அவளுக்கு நல்லா இருக்கும், மேல வச்சு பாருங்க”, என்று சொன்னான்.

அவர்கள் எடுத்திருந்த புடவையும் வைத்துப் பார்க்க அதையும் ஃபோட்டோ எடுத்து வைத்துக் கொண்டான், பின்பு அவன் தேர்வு செய்ததை வைத்து பார்க்க, அதையும் ஃபோட்டோ எடுத்தான்.