ஜெர்மன் வந்தவளுக்கு வேலை சரியாக இருப்பது போலவே தோன்றியது. ஏற்கனவே அவளுக்கு ஜெர்மன் ப்ராஜெக்ட்டில் உதவிய மார்ட்டின் தான் இந்த முறையும் உதவி செய்தார்.
அவள் வேலையை முடிந்த அளவு சீக்கிரமாக முடிக்கவே முயற்சி செய்தாள்.
அவ்வப்போது சந்தேகத்தை மட்டும் நந்தனுக்கு அழைத்து கேட்டுக் கொள்வாள், இரு இடங்களுக்கும் நேர மாறுபாட்டால் இவளால் கதிரவனிடம் சரியாக பேச முடிவதில்லை, ஒன்று இருவரும் மெசேஜ் பரிமாறி கொள்வார்கள், இல்லை எனில் வாய்ஸ் மெசேஜை அனுப்பிக் கொள்வார்கள்.
எப்போதாவது வாய்ஸ் காலில் மட்டுமே இருவரும் ஒரிரு நிமிடங்களே பேசிக்கொள்ள முடிந்தது,
அவனுடைய வேலையும் நெருங்கி விட்டதாக சொல்லியிருந்தான், போதை கும்பலின் முக்கிய ஆட்களை எல்லாம் பிடித்தாயிற்று, இன்னும் ஒரு சிலர் மட்டும் பிடித்துவிட்டால் தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் வரும் வழியை அடைத்து விடலாம் என்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தான்.
இவளோ “இதெல்லாம் அரசியல் ஆட்கள் சப்போர்ட் நல்லவே இருக்க கூடியது, நீங்க எதுக்கும் சேஃபா இருங்க” என்று சொன்னாள்.
“அதெல்லாம் நான் பாத்துக்குவேன்”,என்று சொன்னவன், “நீ எப்ப வருவ” என்று கேட்டான்.
“வேலை முடிய போகுது, சீக்கிரத்துல வந்துருவேன்”, என்று சொன்னவள், “கிளம்பும் போது போன் பண்றேன்”, என்று சொன்னாள்.
“ம்ம், நீ சொல்லும் போது நான் ஃப்ரீயா இருந்தேனா ஏர்போர்ட் வருவேன், இல்லாட்டி நந்தன் வருவாப்ல இல்ல, கூட வந்துரு”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவர்கள் பத்து நாளில் வேலை முடியும் என்று நினைத்திருக்க, கிட்டத்தட்ட கூட இரண்டு மூன்று நாள் சென்று விட்டது,
குழந்தை பிறந்து 16 நாள் கழிந்திருந்தது, அவர்கள் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லும் போது, ராதா தான், “இல்ல யாழினி வரட்டும், அவ வந்ததுக்கு அப்புறம் வச்சுக்கலாம்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அப்போது யாழினி அம்மா தான், “அவ எதுக்கு நாம செய்யலாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
சரியாக இவள் வேலை முடிந்து அங்கிருந்து கிளம்பும் நாள் குழந்தைக்கு 21 வது நாளாக இருக்க, அன்றே பெயர் வைக்கும் விசேஷம் வைக்க இருப்பதாக சொல்லப்பட்டது.
அவள் எந்த நேரத்தில் கிளம்பி வருவாள் என்று தெரிந்ததால், நந்தனோ ஏர்போர்ட்டுக்கு வர முடியாதே என்று யோசனையோடு, “நீ வந்துருவியா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
அவளோ “அதெல்லாம் நான் வந்துருவேன் எதுக்கு பயப்படுற, எனக்கு என்ன சென்னை தெரியாத ஊரா”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அங்கு வீட்டில் பெயர் வைக்கும் விசேஷம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அவளுக்கு நினைத்த ஃப்ளைட் ல் கிடைக்காமல் வேறு ஒன்றில் கிடைத்திருக்க, மாலை நேரத்தில் தான் வீடு வந்து சேரும் படி தான் கிடைத்தது.
ஆனால் காலையிலே விசேஷம் என்பதால் மற்ற வேலைகளை பார்த்து விட்டு, அவள் வரும் நேரம் முடிந்த அளவு நந்தன் போய்விடலாம் என்று நினைத்திருந்தான்.
ஆனால் வீட்டில் விருந்தினர் போவதும் வருவதுமாக இருக்க,
நந்தன் யாழினியை அழைத்து வர செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் போது தான், கதிரவனின் இடமிருந்து நந்தனுக்கு போன் வந்தது.
“யார் அவளை கூப்பிட போய் இருக்கா” என்று கேட்டான்.
“இல்ல அவளே வந்துடுவேன்னு சொன்னா, இங்க வீட்ல பெயர் வைக்கும் பங்க்ஷன்”, என்று சொன்னான்.
கதிரவனுக்கு ஏற்கனவே அவன் அக்கா மூலம் இன்று குழந்தைக்கு பெயர் வைக்கிறார்கள் என்பது தெரியும், யாழினியும் சொல்லி இருந்தாள், அவனோ “இல்லை யாராவது உடனே கிளம்பி போங்க, அவ வர்ற நேரம் யாராவது அங்க நிக்கணும்”, என்று சொன்னான்.
“ஏன் ஏதும் பிரச்சனையா” என்று கேட்டான்.
“இல்ல இல்ல போங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
சற்று நேரம் முன்பு அவனுக்கு ஒரு மிரட்டல் போன் வந்திருந்தது.
“ஏர்போர்ட்டில் இருந்து உன்னை கட்டிக்க போறவளை நாங்க கடத்த போறோம் முடிந்தால் காப்பாத்து, போதைப்பொருள் தடுக்குறேன்னு சொல்லிட்டு சுத்திக்கிட்டு இருக்குற இல்ல, அதே போதைய பழக்கி அனுப்பி விடுறோம், எங்க ஆட்கள் எல்லாம் வெளிய விட்டா, நீ கட்டிக்க போறவ பத்திரமா வருவா”, என்றனர்.
இவனோ ‘யாரோ மிரட்டலுக்கு சொல்றாங்க’ என்று நினைத்தவன் பின்பு பயம் கொடுக்கவும்,
அவளிடம் சொல்ல நினைத்திருந்தான், அதே நேரம் அவளுக்கு முயற்சி செய்ய அவளுடைய போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது.
அதன் பிறகு தான் நந்தனுக்கு அழைத்து சொன்னான். பின்பு அவளுக்கு ஒரு மெசேஜ் போட்டதோடு, வாய்ஸ் மெசேஜ் ம் போட்டு வைத்தான்.
மூன்று மணி போல இறங்கியவள் இறங்கிய சற்று நேரத்தில் எல்லாம் ஃபோனை ஆன் செய்துவிட்டு ஏர்போர்ட்டில் உள்ள மற்ற புரசீஜர்களை முடிப்பதற்காக காத்திருந்தாள், அதன் பிறகே லக்கேஜை எடுக்க வேண்டும் என்று லக்கேஜ் கலெக்ட் செய்யும் இடத்திற்கு சென்றாள்.
அங்கு வைத்து தான் அவனுடைய மெசேஜ் வந்ததற்கான அறிகுறி தெரிந்தது,
எடுத்து காதில் வைத்திருந்த ஹியற்பாட்டில் கேட்க துவங்கினாள்.
அவன் வாய்ஸ் மெசேஜில் ‘ஏர்போர்ட்டில் இறங்கின பிறகு பத்திரமா வா, சுத்தி முத்தி பாரு, யாரும் உன்னை பாஃலோ பண்ற மாதிரியோ, இல்ல உன்கிட்ட ஏதோ வித்தியாசமா நடந்துக்குற மாதிரியே இருந்தா ஜாக்கிரதையா இரு, கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு, முடிஞ்சா மாஸ்க் போடு’ என்ற மெஸேஜ் கேட்ட உடனே ஹேண்ட் பேக்கில் இருந்த மாஸ்க்கை எடுத்து மாட்டிக்கொண்டவள்.
‘என்ன விஷயம் தெரியலையே’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள்,
அவளுடைய லக்கேஜ் வர ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு இருந்தாள்.
‘ஒருவேளை அவங்க பார்க்கற கேஸ்ல எதுவும் பிரச்சனையா, அதனால எதுவும் பயப்படுகிறார்களோ’ என்று யோசித்துக் கொண்டே,
‘வந்தா மண்டையை உடைச்சிற மாட்டேன்’ என்று யோசித்தபடி ‘எஸ்பி ஆவதற்கு முன்னாடி உங்க தலையிலேயே தையல் போட வைச்சேன்’ என்று தனக்குத்தானே சொல்லி சிரித்துக் கொண்டே,
‘இருடா வந்து பேசுறேன்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
அங்கே அவனோ செல்லை பார்க்க, மெஸேஜ் ல் பார்த்ததற்கான அறிகுறி மட்டுமே தெரிய, ‘பதில் சொல்லலையே, இந்த பக்கி வந்துட்டா போலையே’ என்று நினைத்துக் கொண்டு,
நந்தனுக்கு அழைத்தான்.
“ஏர்போர்ட் போயிட்டீங்களா” என்று கேட்டான்.
“போயிட்டே இருக்கேன்” என்று சொன்னான்.
இவனுக்கு மீண்டும் ஒரு பயம் கொடுக்க, வேகமாக அங்கிருந்து கிளம்ப தொடங்கினான்.
அதே நேரம் அவனுக்கு கீழ் வேலை செய்பவர் ஒருவர் வந்து, “சார் த்ரெட்டனிங் கால்” என்று சொல்லி “அவங்க கும்பல்ல இருக்குற சிலரை மட்டும் பேர் சொல்லி, அவங்கள விடுவிக்கணும் அப்படின்னு சொல்லி சொல்றாங்க, இந்த கேஸ் அ வித்ட்ரா பண்ணனும் அப்படிங்கற மாதிரி சொல்றாங்க, இது அரசியல் செல்வாக்கு உள்ள இடதிலிருந்து பிரஷர் வர்ற மாதிரி இருக்குன்னு மேலிடம் சொல்லுது, என்ன பண்ணலாம்”, என்று கேட்டார்.
“அப்ப இவ்வளவு நாள் நாம கஷ்டப்பட்டு புடிச்சவங்கள, என்ன சும்மவா விட முடியும், வாரேன்”, என்று சொல்லி விட்டு வேகமாக ஏர்போர்ட்டுக்கு செல்ல காரில் கிளம்பினான்.
சென்று கொண்டே முக்கியமாக பேச வேண்டிய கால்களை பேசி இருந்தவன், அவளுக்கு அழைப்பு விடுத்தான். அவளோ அட்டென்ட் செய்து போனை தன்னுடைய பேக்கில் வைத்த படி ஹியற்பாட்டில் பேச துவங்கினாள்.
“சொல்லுங்க”, என்றாள்.
“என்ன மேடம் வந்துட்டியா” என்று கேட்டான்.
“வந்துட்டேன், ஆனா என்ன இப்படி ஒரு மெஸேஜ், பயம் காட்டுற மாதிரி பண்றீங்க” என்றாள்.
“வெளியே வந்துட்டியா”, என்றான்.
“இப்பதான் லக்கேஜ் எடுத்துட்டு இருக்கேன், இன்னும் ஒரு பேக் வர வேண்டியது இருக்கு, வந்த உடனே கிளம்பிடுவேன்”, என்று சொன்னாள்.
அது போலவே பேக் வர அனைத்தையும் டிராலியில் வைத்தவள், அதை தள்ளிக் கொண்டே நடக்கும் போதே, “கிளம்பிட்டேன்” என்றாள்.
“இசை ஜாக்கிரதையா பாரு, உன்னை சுத்தி யாரும் வாரங்களா ன்னு மட்டும் பாரு” என்று சொன்னான்.
சும்மா சுத்தி பார்ப்பது போல திரும்பி பார்த்தவள், அவளின் இரண்டு பக்கமும் ஒன்று போல உடை அணிந்த இருவர் வருவதை பார்த்தவள் , அவனிடம் ஆங்கிலத்தில் சொல்ல துவங்கினாள்.
பின்பு திரும்பி பார்த்துக் கொண்டே, ‘இவங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா, இல்லையா, ன்னு தெரியலையே’ என்று யோசனையோடு “சரி பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே “சொல்லுங்க” என்றாள்.
அவனும் “பாத்தா எப்படி தெரியுது, ஹலோ நான் ஒன்னும் டிடெக்டிவ் ஏஜென்சியில வேலை பார்க்கல, உங்களுக்கு ஆள் எப்படி இருக்கு, ஏது இருக்குன்னு சொல்ல முடியாது, நானே அவங்களுக்கு என்ன லாங்குவேஜ் தெரியும், தெரியாது ன்னு முழிச்சிட்டு வாரேன்”, என்று சொன்னாள்.
“பார்க்க எப்படி இருக்காங்க ன்னு மட்டும் சொல்லு போதும்”,என்றான்.
“பார்க்க நார்த் இந்தியன் மாதிரி தான் இருக்கு, ஆனா இங்கிலீஷ் தெரியுமா, தமிழ் தெரியுமா, என்று தெரியாது இல்ல”, என்று இங்கிலீஷில் சொல்லிக் கொண்டு வந்தாள்.