எங்கும் எப்போதும் தனியாக சென்று வருபவளை முதல் முறை பயம் கவ்வியது.அச்சமிகுதியில் “யாரு…”என்றவள் கேட்க, அந்த பக்கம் எந்த சத்தமும் இல்லை. மீண்டும் கதவு வேகமாக தட்டப்பட அவள் இதயம் பயத்தில் வேகமாக துடிக்க துவங்கியது. எனவே கதவு அருகில் வந்தவள் மீண்டும் “யார்” என்று கேட்க,

“நான்தான் மேடம் வினய் சூர்யா பிரண்டு”என்ற குரல் கேட்டு, நிம்மதி மூச்சுவிட்டவள், வேகமாக கதவை திறந்தவள்,அவனை கேள்வியாக பார்க்க,அவனோ “சாரி மேடம்.காலையில் இவ்வளவு சீக்கிரம் வந்து டிஸ்டர்ப் பண்ணதுக்கு”என்க அவளும் ‘பரவாயில்லை’ என்பது போல் தலையசைத்தாள்.

வினய், “ஆக்சுவலா உங்களை நைட்டே பார்க்க சொல்லி சூர்யா சொன்னான் மேடம், ஆனா ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு அங்க போய்ட்டேன். அங்க பிரச்சனை முடியவே இவ்ளோ நேரம் ஆகிடுச்சு அதான் வீட்டுக்கு கூட போகாம உங்களை பார்க்க வந்தேன். அவன் வேற நைட் போன் பண்ணிட்டே இருந்தான். உங்களுக்கு போன் பண்ணி பார்த்தாங்களாம்.நீங்க எடுக்கலையாம் அதான்”என்று சொல்ல,பவியும் “நானும் நீயூஸ் கலெக்ட்பண்ண போய்ட்டேன் சார்.போன் சார்ஜ் இல்லாம ஆப் ஆயிடுச்சு. அதான் எடுக்கல. ரொம்ப நன்றி சார்.நான் அவங்களுக்கு போன் பண்ணி பேசுகிறேன் சார்” என்று சொல்ல வினயும் “ஓகே”என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.

பவி அவர் சென்றவுடன் கதவை மூடிவிட்டு சோபாவில் ஓய்ந்து போய் அமர்ந்தாள்.அப்போது மீண்டும் அவள் வீட்டு கதவு தட்டப்படவும் இப்போது யார் என்று எரிச்சலுடன் கதவை திறக்க,அங்கு முதலில் காஷ்மீரில் வேலை செய்த நபர்தான் நின்றிருந்தார்.அவரை ஆச்சரியமாக பார்த்தவள் “என்ன சார் அதுக்குள்ள வேலை முடிஞ்சிடுச்சா” என்று கேட்க,

அவரும் சோகமாக தலையசைத்து “எல்லாம் முடிஞ்சுது பவித்ரா.என்னதான் பாசம் இருந்தாலும் பணமும் வீட்டுக்கு முக்கியம் இல்லையா.அதான் வேலையை பார்க்க வந்துட்டேன்.நீங்க இங்க இருக்க ஆபத்தான இடத்துக்கு எல்லாம் போய் நீயூஸ் கலெக்ட் பண்ணுனீங்கன்னு சொன்னாங்க. வாழ்த்துக்கள்டா. எனக்காக இங்க வந்ததுக்கு ரொம்ப நன்றி.அப்புறம் நீ சென்னை கிளம்பறதா இருந்தா கிளம்புமா.இனிமே நான் இங்க பார்த்துக்குறேன்” என்று சொல்ல பவியும் சற்று முன்பு அதைத்தான் யோசித்து வைத்திருந்தாள் என்பதால் உடனே தான் கிளம்புவதாக சொல்லி சென்னைக்கு கிளம்பி விட்டாள்.

சென்னையில் சைந்தவியை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல சூர்யா வந்திருந்தான்.அங்கிருந்த நர்ஸ் ஒருவர் அவனை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கடுப்பான சைந்து அவள் காலை ஓங்கி மிதித்துவிட, அப்போதுதான் சூர்யாவிடம் இருந்து தன் பார்வையை திருப்பினார் அந்த நர்ஸ்.

சைந்து, “ஹாய் ரீட்டா.என்ன ஆச்சு?ஏன் இப்படி குறுக்க நிக்கிறீங்க?பாருங்க தெரியாம உங்க காலை மிதிச்சுட்டேன்.சாரி” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,அவளோ வலியில் முகம் சுருக்கியவாறு டாக்டரை திட்டவும் முடியாமல். “இட்ஸ் ஓகே மேடம்”என்று வலி நிறைந்த குரலில் சொன்னாள்.

சைந்தவி,”அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்.அவரு என்னோட ஹஸ்பண்ட். இன்னொரு டைம் அவர் பக்கம் உங்க கண்ணு போச்சுன்னா…. கண்ணு இருக்குல்ல…. கண்ணு… அத அப்படியே நோண்டி வெளியே எடுத்துடுவேன்.சரியா”என்றவள் சிரித்துக்கொண்டே சொல்ல,அந்த நர்ஸோ அவளை அதிர்ந்து போய் பார்த்தாள்.

“சரி ஓகே நான் கிளம்புறேன். எனக்காக என் புருஷன் ஒரு வெயிட்டிங்”என்று சொல்லிவிட்டு சென்று சூர்யாவுடன் காரில் ஏறிகொண்டாள்.

காரில் செல்லும்போது வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சைந்து “ஏங்க பீச்சுக்கு போலாமா.உடனே வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம்” என்று சொல்ல,அவனும் “சரி”என்றவன் காரை கடற்கரை நோக்கி செலுத்தினான்.

பீச்சில் அமர்ந்து சைந்தவியிடம் பேசலாம் என்று சூர்யா நினைத்திருக்க, அங்கு நடந்ததோ வேறு. அவனை அங்கிருந்த படகின் அருகில் அமர வைத்துவிட்டு, சைந்து அங்கு இருந்த குழந்தைகளுடன் குழந்தையோடு குழந்தையாக கடல் அலையில் கால்நினைத்து விளையாடி கொண்டிருந்தாள்.

‘நமக்கு டைம் கிடைக்கிறதே அதிசயம்.இப்போ அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு பார்த்தா, குழந்தைங்க கூட விளையாட்டிட்டு இருக்கா’என்று மனதில் திட்டி கொண்டே, அவளை கடுப்பாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

ஒரு வழியாக விளையாடி முடித்து ஓய்ந்து வந்த சைந்து அவன் அருகில் “ஹப்பாடா….”என்று அமர,அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

சைந்து, “என்னங்க. ஏன் என்னை இப்படி பார்க்குறீங்க”

சூர்யா, “ஆக்சுவலா நீ லவ் சப்ஜெக்ட்ல மக்கு தானே”என்று சீரியசான குரலில் கேட்க, அவளோ உடனே கோபமாக பொங்கி “யாரு…யாரு….நானா நானா ரொமான்ஸ்ல மக்கு”.

சூர்யா, “நீதான் வேற யாரு. புருஷன் இங்க உட்கார்ந்து இருக்கேன். என்கூட உட்கார்ந்து பேசலாம்னு இல்லாம, போய் விளையாடிட்டு இருக்க”என்று கேட்க, அவளோ “ஹி…. ஹி…. ஹி…” என்று வழிசலாக சிரித்தவள், “அ…அது…. குழந்தைங்கள பார்த்தவுடனே கொஞ்சம் குஷி ஆகிட்டேன் அதான் அங்க போய்ட்டேன். அதுக்காக என்னை எப்படி நீங்க அப்படி சொல்லலாம்.இப்ப பாருங்க என்னோட ரொமான்ஸ என்றவள் அவனின் இரு கன்னத்தில் கை வைத்து தன் அருகில் இழுக்க, ‘அச்சச்சோ என்ன பண்ண போறா, பப்ளிக்ல’என்று மனதில் அரண்டாலும், என்ன செய்ய போகிறாளோ என்ற ஆர்வமும் ஏற்பட அவளையே காதலுடன் அவன் பார்க்க, அவளோ அவன் முகத்தருகில் நெருங்க, அவன் கண்கள் எதிர்பார்ப்போடு தானாக மூடினான்.

சைந்து, “ஏங்க நான் ரொமான்ஸ் பண்ணும்போது கண்ண மூடுனா என்ன அர்த்தம், கண்ணை திறங்க கண்ணை திறங்க”என்று சொல்ல அவனும் புரியாமல் கண்களை திறந்தான்.அவன் கண்களையே உற்று பார்த்தவளின் கருவிழிகள் இருபுறமும் உருண்டு உருண்டு ஓட, அதன் அழகில் மயங்கி அப்படியே அமர்ந்திருந்தான்.அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் பின் விலகி எப்படி என்னோட ரொமான்ஸ். கண்ணு பேசுச்சா”என்று சொல்ல,

மனைவியை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன் “பேசுச்சு பேசுச்சு”என்று சொல்ல, உடனே குதூகலமானவள் “என்னங்க சொன்னுச்சு”

“ம்ம்ம்….இந்த போலி டாக்டர் மக்கு. இதை நம்பி ரொமான்ஸ் எல்லாம் பிளான் பண்ணாதன்னு சொல்லுச்சு”என்று சொல்ல, திகைத்து போனவள் “எதே…. என்னோட கண்ணா அப்படி சொன்னுச்சு. உங்களுக்கு அது சொன்னது புரியலன்னு நினைக்கறேன். வாங்க மறுபடியும் பேச வைக்கறேன்”என்று அருகில் செல்ல, உடனே வேகமாக எழுந்தவன் ‘இவளும் இவ ரொமான்ஸும் எந்த லவ் ஜோடிய பீச்ல இருக்கும்போது பிரிச்சு விட்டேனோ தெரியல. எனக்கு இப்படி ஒரு பொண்டாட்டி’ என்று புலம்ப, அது சைந்தவி காதில் தெளிவாக விழுந்தது. தனக்குள் சிரித்து கொண்டவள் வேண்டுமென்றே “ஏங்க போலிஸ்கார் எதாவது சொன்னீங்களா”என்று கேட்க, அவனோ “ஒன்னும் இல்ல டாக்டரே ஒன்னுமே இல்ல. வா போலாம்’என்று செல்ல, அவன் பாத தடத்தின் அருகில் தன் பாதத்தை பதித்து நடந்தாள்.

இருவரும் அமைதியாக காரில் வர எதிரில் கல்யாண ஊர்வலம் வந்தது. செண்ட மேளம் அடித்து இளவட்டங்கள் ஆடி கொண்டு வர, அதை பார்த்த சைந்து “வண்டிய நிப்பாட்டுங்க போலிஸ்கார். வாங்க நாமளும் போய் ரெண்டு குத்து போட்டுட்டு வரலாம்”என்று அழைக்க, அவனோ “எதே …”என்று அதிர்ந்து வாயை பிளக்க,

“என்ன போலிஸ்கார் வாங்க போலாம். என்னையவே எவ்ளோ நேரம் பார்ப்பீங்க”.

“ஹேய் என்ன விளையாடுறியா. ரோட்ல ஆட கூப்பிடற, யாரவது தெரிஞ்சவங்க பார்த்தா மானமே போய்டும். பேசாம உட்காரு”என்றவன் பீதியாக சொல்ல, அவளோ அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, பின் தன் ஷாலை எடுத்து கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை சுற்றி கட்டியவள் “போலிஸ்கார் நான் போறேன்”என்று காரில் இருந்து குதித்து இறங்கியவள். அங்கிருந்தவர்களோடு சேர்ந்து ஆட, காரில் இருந்த சூர்யாவிற்கு அவள் புதிதாக தெரிந்தாள்.

படித்து பொறுப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம் என்று தன் சின்ன சின்ன ஆசைகளை ஒதுக்கி வைப்பவர்கள் மத்தியில், நான் நினைப்பதை நான் செய்வேன் என்று செய்யும் சைந்தவி தேவி அவளுக்கு புதியவள்தான்.

முதலில் ஆச்சர்யபட்டாலும் பின் அவள் ஆடுவதை ரசித்தவன் ‘சரியான கேடி. எப்படி இருக்கா பாரு. இவளையா அம்மா கல்யாணத்தன்னைக்கு அமைதியான பொண்ணுன்னு சொன்னாங்க. சரியான அடாவடி’என்று திட்டுவதாக நினைத்து மனைவியை கொஞ்சி கொண்டு இருந்தான் காரில் அமர்ந்திருந்த சூர்யா.

சற்று நேரம் கடந்து ஆடி முடித்து வந்த சைந்து மூச்சு வாங்க சீட்டின் பின் பக்கம் சாய்ந்தவள். ஆசுவாசம் ஆன பின் “செம்ம பீல் போலிஸ்கார் இது. நானும் பவியும் நிறைய டைம் இப்படி பண்ணி இருக்கோம். தூரமா எங்கயாவது ஓரமா வண்டிய விட்டுட்டு வந்து ஆடுவோம். ஆனா…. இப்போ….”என்று அவ்வளவு நேரம் இருந்த மகிழ்ச்சி போய் தங்கையின் நினைவில் அவள் முகம் வாடினாள்.

சூர்யா, “பவித்ராவ மிஸ் பண்றியா தேவி”

“ம்ம்…. ரொம்பவே. நாங்க ரெண்டு பேரும் எப்போவும் சண்டை போட்டுப்போம். ஆனா இதுவரை பிரிஞ்சு இருந்ததே இல்ல.ஆனா….முதல் முறை ஏன் போக நினைச்சானே தெரியல”என்றவள் சொல்லி வருந்தி கொண்டிருக்க, பவி அங்கு சென்னை செல்லும் விமானத்தில் வாழ்க்கையே முடிந்து போனது என்பது போல் விரக்தியான முகத்தோடு அமர்ந்திருந்தாள்.

சைந்தவி எதிர்பார்க்கும் பழைய பவி இல்லை அவள் என்பதை புரிந்து கொள்வாளா…..பவிக்கு என்ன ஆனது? ஏன் இப்படி இருக்கிறாள் அடுத்தடுத்த எபியில் பார்க்கலாம்…..

அணைப்பாள்…..