மிர்த்திக்கு, யோகி தன்னிடம் ஒரு பெண் தன்னை புகார் சொன்னதாக சொல்லியது முதல்.. குழப்பம். ‘தன்னிடம் அன்பாக இருக்கிறான்.. அதுவும் தன்னிடம் இதுவரை யாரும் உணராத நெருக்கத்தில் அன்பாக இருக்கிறான்.. பின் எப்படி மற்றொரு பெண்ணை பார்த்திருப்பான்.. அதுவும் அந்த பெண் புகார் சொல்லும் அளவு என.. யோசனை. அந்த வயதிற்கே உண்டான புரிதலில்லா குழப்பம். எனவே, யோகியிடம் போனில் பேசுவதில்லை.. அவன் அழைத்தால்.. ‘படிக்கணும் யோகி’ என்று விடுகிறாள்.
யோகி, அந்த வாரம் முழுவதும் கல்லூரியில் நடக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தினான். பெண்ணவளை காலையில் பார்ப்பது.. தன் லஞ்ச் கொடுப்பது.. அவளுடையதை வாங்கிக் கொள்ளுவது என எப்போதும் போல இருவரும் பார்த்துக் கொண்டனர். யோகிக்கு புரிகிறது.. எதோ அவளுக்கு கோவம் என் முகம் பார்க்கவில்லை என.. ஆனால், கேட்க்க முடியவில்லை நேரில். போன் செய்தாலும் அவள் எடுத்து ‘படிக்கணும் என்று விடுகிறாளே.’ அவன் அழைத்த நான்கு நாட்களிலும். எனவே, அவனுக்கு அதைவிட கல்லூரியில் அழுத்தம் நிறைய இருந்ததால் ‘வார இறுதியில் பேசிக்கலாம்’ என எண்ணிக் கொண்டிருந்தான்.
அந்த வார இறுதியிலும் பெண்ணவள்.. யோகி போனில் அழைத்தும் எடுத்து பேசவில்லை. அப்போதுதான் யோகிக்கு எதோ தோன்ற.. “ஜெகா “ என அழைத்துக் கொண்டே அவர்கள் வீட்டிற்கு சென்றான்.
வாசு அப்போது கடையில் இருந்தார். யோகியை பார்த்து.. “ஜெகன் வீடியோ கேம் விளையாடிட்டு இருப்பான்.. உள்ள போய் பாரு யோகி” என சொல்லியவர் வேலையை பார்த்தார்.
மிர்த்திக்கு இவன் குரல் கேட்க்கவில்லை.. யோகி உள்ளே எட்டி பார்க்க.. ஜெகனை ஹாலில் கானோம்.. அறையில் இருந்தான், ஜெகனை பார்த்துவிட்டு.. உள்ளே மிர்த்தியை தேடினான்.. யோகி.
மிர்த்தி கிட்செனின் இருப்பது கேட்டது. யோகி கிட்சென் அருகே சென்று நின்று “லட்டு” என்றான், ரகசியக் குரலில் ஆசையாகத்தான் அழைத்தான்.
மிர்த்திக்கா திடுக்கிட்டு திரும்பினாள்.. காண்பது கனவோ என்பது போல.. அந்த கிட்சென் வாசலில் எப்போதும் கனவில் வருபவன் போல.. கருப்பு வெள்ளையில் நின்றான், அவளையே பார்த்துக் கொண்டு யோகி.
மிர்த்திக்காவின் முகம் இன்ப அதிர்வில் மலர்ந்தது “எப்படி வந்த” என்றாள்.
யோகிக்கு, என்னமோ அவளின் அதிர்வில் கோவமே வந்தது சட்டென.. பேசாமல் இருந்தால்.. பார்த்ததும் சிரிக்கிறா பாரு..’ என பேசாமல் நின்றான்.
மிர்த்தி அவன் அருகில் வந்தாள்.. சுற்றிலும் பார்த்தாள்.. ரகசிய குரலில் “எப்படி வந்த” என்றாள் இப்போது முகம் கலவரமாக தொடங்கியது.
யோகி, பெண்ணவளின் கைபற்றி.. லேசாக இறுக்கி பிடித்துக் கொண்டே “ஏன் டி, போன் எடுக்கலை.. எத்தனை கால்செய்திருக்கேன் பாரு” என்றான் முகம் சாதாரணமாக இருந்தாலும்.. அவனின் பிடியும் குரலும்.. இறுக்கமாகவே இருந்தது.
மிர்த்தி சுற்றிலும் பார்வையை சுழற்றிக் கொண்டே.. தன் கையை விலக்கி கொள்ள முற்பட்டாள். யோகியிடம் அது முடியவில்லை. யோகி “மேல வரியா” என்றான் வார்த்தைகளை கடித்து துப்பிக் கொண்டே.
மிர்த்தி வேறு வழியில்லாமல் “வரேன்” என்றாள் முகத்தை சுருக்கிக் கொண்டே. வலி தாங்க முடியவில்லை.
யோகி அவளின் கையை விட்டான். யோகி, முறைத்துக் கொண்டே.. ஜெகன் இருந்த அறைக்கு சென்றான். அவனிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு வெளியே வந்து வாசு அங்கிளிடம் விடைபெற்று வீடு வந்தான்.
நேரே மொட்டை மாடிக்கு வந்து அமர்ந்துக் கொண்டான். அங்கே மாடி ஏறும் இடத்தோடு சேர்த்து.. சின்ன அறை உண்டு.. அங்கே அமர்ந்து.. பக்கத்துவீட்டு மாடியை பார்த்துக் கொண்டிருந்தான். என்னமோ அவள் பேசாதது அவனுள் கனன்றுக் கொண்டிருந்தது. ம்.. இன்றும் அவள் என்னிடம் போனிலேயே பேசவில்லை.. நேரிலும் சரியாக பேசவில்லை.. என உறுத்த தொடங்க.. போன வாரத்தில் நான் சொன்னதிலிருந்து அவள் விலகி.. பேசவில்லை என தோன்றி.. அவனை கொஞ்சம் கடுப்பாகி இருந்தது. அதனால், வீட்டிற்கு நேரில் வந்து நின்றுவிட்டான்.
மிர்த்திக்கு, அவன் வந்தது.. முதலில் சந்தோஷமே.. ஒருமாதிரி இன்ப அதிர்ச்சி. ஆனால், யோகியின் முகம்.. அப்படி கடுமையாக இருப்பதை பார்த்து.. ஒரு சின்ன பயம். அதிலும் இப்படி வீட்டினுள் வருமளவுக்கு என்ன ஆகிற்று.. ஒருவாரம் பேசவில்லை என்றால்.. என்ன இப்போ.. ஒரு பெண்ணு கம்ப்ளைன்ட் செய்கிற அளவுக்கு போகியிருக்கு.. என்கிட்டே அவர் உண்மையை சொல்லவில்லை.. இந்த ஒருவாரமாக தெரியாதா.. நான் பேசவில்லை என.. என்ன செய்தாங்க.’ என பொருமிக் கொண்டே ஜெகனுக்கு தோசையை ஊற்றி எல்லோருக்கும் எடுத்து வைத்துவிட்டு.. ஜெகனிடம் “மேல போயிட்டு வரேன்” என சொல்லிக் கொண்டு மேலே வந்தாள்.. மிர்த்திக்கா. இருபது நிமிடம் ஆகியிருந்தது.
யோகி அவள் வந்ததும்.. தான், அவள் வீட்டு மாடிக்கு ஏறி குதித்தான். யோகிக்கு பொறுமையே இல்லை.. “என்ன போன் பேசமாட்டியா.. ஏன் என்ன ஆச்சு..” என்றான் அவளின் முன் நின்று எகிறிய குரலில்.
மிர்த்தி அமைதியாகவே இருந்தாள்.
யோகி “என்ன டி பிரச்சனை.. அந்த மேட்டர் சொன்னதிலிருந்து நீ சரியாகவே என் முகம் பார்க்கவே இல்லை.. என்ன டி ஆச்சு” என்றான் எதிரே நின்று அவளை நகர விடாமல் செய்துக் கொண்டு.
பெண்ணவளுக்கு, அவனின் அருகாமையும்.. கோவமான பார்வையும்.. அவளுள் மின்சாரமாக தாக்கியது. ஆனாலும் ஏதும் பேசவில்லை.
மிர்த்திக்கா “நான் எதுக்கு பேசணும்.. அதுதான் லஞ்ச் வருது, நீங்களும் இந்த வாரம் ஜாலியா தானே இருந்தீங்க.. என்ன திடீர்ன்னு” என்றாள்.
யோகி “ஹேய், நான் போன் செய்தேன் நீதான் எடுக்கலை” என்றான்.
மிர்த்தி “நீ நாலுநாளா போன் செய்யலை..” என்றாள்.
யோகி லேசாக புன்னகைத்துக் கொண்டே “அதுக்கு முன்னாடி போன் செய்தப்ப எல்லாம் என்ன சொன்ன.. படிக்கணும் படிக்கணும்.. அப்புறம் நான் எதுக்கு டிஸ்டர்ப் செய்யறதுன்னு” என்றான்.
மிர்த்தி திரும்பி நடந்தபடி “இப்போவும் எனக்கு படிக்க இருக்கு..” என்றாள்.
யோகி “டப்பர்.. படுத்தாதடி” என்றான், எரிச்சலாக.
மிர்த்தி அங்கேயே நின்றுக் கொண்டு “நீங்கதான் படுத்திறீங்க யோகி” என்றாள் ஒருமாதிரி வருந்திய.. தளர்ந்த குரலில்.
மிர்த்தி “எனக்கு ஏதும் புரியலை யோகி” என்றாள் குரல் கமற.
யோகி அவளின் அருகில் வந்து நின்றான் “என்ன புரியலை..” என்றான்.
மிர்த்தி அமைதியாக இருந்தாள்.
யோகி “மிர்த்தி” என்றான் அதட்டும் குரலில்.
மிர்த்தி “நமக்குள் என்ன யோகி, நான் ஏன் உங்ககிட்ட தினமும் பேசணும்” என்றாள்.
யோகி, அவளையே பார்த்தான்.. அவள் தன்னை பார்க்க முடியாமல் கீழே பார்த்துக் கொண்டிருப்பதும்.. அவளின் கலங்கிய குரலும்.. கண்களில் தழும்பி நிற்கும் கண்ணீரும் அவனின் பலத்தை சோதித்தது. அவனின் மனமோ ‘என்ன வார்த்தைகள் வேண்டும்.. என்ன விளக்கங்கள் வேண்டும்..’ என்பதனாகதான் இருந்தது. யோகி ஒரு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு “இது தெரியாமல்தான் இத்தனை நாள் இருந்தியா” என்றான்.
மிர்த்தியின், கண்ணீர் கரை தாண்டி கன்னத்தில் வழிந்தது.
யோகியின் பலம் அவளின் கண்ணீர் போல கரைந்துக் கொண்டிருந்தது. யோகி “என்னை பாரேன்” என்றான்.
மிர்த்தி நிமிரவில்லை.. யோகி அவளை தன்னை நோக்கி இழுத்தான். அவள் முதலில் தடுமாறினாலும்.. அழுத்தமாக காலூன்றி நின்றாள்.
யோகி, இன்னும் அலட்சியமாக தனது இடது கையால் அழுத்தமாக அவளின் முழங்கையை பற்றி இழுத்தவன்.. திருப்பி நிறுத்தி.. அவளின் பின்னால் தான் இருக்கும்படி அணைத்துக் கொண்டான்.. இமைக்கும் நேரத்தில்.
யோகி, அவளின் உயரத்திற்கு தனது உடயரத்தை லேசாக குறுக்கி.. அவளின் தோள் வளைவில்.. அவளின் காதுமடலை உரசியபடி “ம்க்கும்.. நான்.. உனக்கு இப்படிதான். எப்போதும்.. ம்.. எ..ன்ன.. புரியனும் இன்னும். இல்லை இன்னும் ஏதாவது சொல்லனுமா” என்றான், அவளை தன் கைவளைவில் இறுக்கிக் கொண்டு. பெண்ணவள் அழுத்தமாக நின்றாள் அவனோடு ஒன்றாமல். ஆனால், திமிறி ஆர்பாட்டம் செய்யவில்லை.. ஒருமாதிரி விடை கிடைத்த ஆனந்தத்தில் நின்றாள்.
யோகி, அவளின் முன் இடையை அழுத்தியிருந்த தனது வலக் கையை எடுத்து.. அழுத்தமாக அவளின் தாடையை பற்றிக் கொண்டே “நீ தினமும் எதுக்கு பேசணும் புரியுதா.. “ என்றான்.. தன்னை நோக்கி அவளின் கழுத்தை வளைத்து திருப்பிக் கொண்டு. பெண்ணவளின் தனங்கள் அவனின் வலிமையான கரங்களில் அழுந்தியது. பெண்ணவளின் உடல் சட்டென நடுங்கியது.. முகம் வாடியது வலியில்.
யோகி “எ..ன்ன..” என்றபடி அவள் கண்களை பார்த்தான். ஒன்றும் புரியவில்லை. கைகள் அசைந்ததில் அவளின் முகம் மீண்டும் சுருங்கிக் கொள்ள.. யோகி, தன்னை தானே பார்க்க.. அவனின் கண்கள் எதையோ கண்டுக் கொண்டது.. லேசாக தனது வலக்கையின் அழுத்தத்தை தளர்த்தினான். பெண்ணவளின் முகம் இயல்பாகவும்.. இப்போது தனது மணிக்கட்டை.. லேசாக பெண்ணவளின் மென் உடலில் பட்டும் படாதவாறு இடமும் வலமும்மாக திருப்ப.. பெண்ணவளின் மேனி.. சிலிர்த்து.. நாணி.. சிவந்தது.
யோகிக்கும் உணர்வுகள் கிளர்ந்தெழ.. பெண்ணவளை தன்னை நோக்கி திருப்பி அணைத்துக் கொண்டான் அழுத்தமாக. இருவருக்கும் என்ன நடக்கிறது என தெரியவில்லை.. அதை தெரிந்துக் கொள்ளும் எண்ணமும் இல்லை.. பேச்சுகள் இல்லாத.. தேக மொழிகள் பிறந்த நேரம். ‘இனி கேட்ப.. நான் யாருன்னு..’ என அவன் தன் அணைப்பில் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அவளுக்கும் சந்தேகம் எல்லாம் தீர்ந்தது போல.. அமைதியாக “அப்புறம் எதுக்கு அந்த பொண்ணு கூட பேசினீங்க.. பார்த்தீங்க” என்றாள்.
யோகிக்கு ஒன்றும் புரியவில்லை சில நொடிகள்.. பின் அவளை விலக்கி “யார் கூட பேசினேன்” என்றான்.
மிர்த்திக்காவும் நிமிர்ந்து நின்று “அதான் காலேஜ்ஜில்” என்றாள் சண்டையிடும் பார்வை பார்த்துக் கொண்டு.
யோகி பெண்ணவளின் உச்சியை பிடித்து.. இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைத்துக் கொண்டே “என்ன நல்ல எண்ணம் டி, என்னை பற்றி உனக்கு.. அதான் அம்மணி.. திருப்பிகிட்டு போனீங்களா” என்றான்.
மிர்த்தி “ஒரு பெண்ணு கம்ப்ளைன்ட் செய்திருக்கு.. அதுவும் பார்க்கறான்.. கமென்ட் செய்யறான்னு.. நான்தானே கேட்க்கனும் சொல்லுங்க என்ன செய்தீங்க” என்றாள், இப்போது மலர்ந்த முகமாக.
யோகி “லூசு.. அதை போய் பார்க்கிறாங்க.. அப்படியே பேசுறாங்க. அந்த.. பொண்ணை, இவன்.. விஜய் .. ரூட் விட்டுட்டு இருக்கான். அதை நாங்க எல்லோரும்.. பேசி கலாய்ச்சிட்டு இருந்தோம்.. அது அந்தம்மாக்கு, இர்ரிட்டேட் ஆகிடுச்சாம். “ என்றான்.
மிர்த்திக்கா “ப்ராமிஸ்..” என்றாள்.
யோகி “என்னை பார்த்தால்.. அப்படியா தெரியுது. நான் என்ன அப்படியா.. போடி” என்றான்.. விளையாட்டு கோவமாக.
மிர்த்தி “என்ன போடி.. போடா.. காலேஜ்க்கு எப்படி ஆகிட்ட.. பஸ்சில் புட்போர்ட் அடிக்கிற.. நீங்க படிச்சி நான் பார்க்கவே இல்லை.. ஈவ்னிங் எல்லாம் எங்க போறீங்க.. டெய்லி நீங்க வெளியில் போய்ட்றீங்க..” என்றாள்.
யோகி “எவ்வளோ நோட் பண்ற என்னை பத்தி” என்றான் சிரித்துக் கொண்டே ஆச்சர்யமாக.
பெண்ணவளின் கன்னம் இரண்டும் மினுமினுப்பாக.. காதுமடல் வரை சிவந்து நாணி அவனின் நெஞ்சில் கைவைத்து “போ..டா..” என்றாள் நாணி சிவந்து.
யோகி “என்னது போடா.. வா..” என்றான், குரல் அவளிடம் இழைந்தது.
நட்சத்திர கூட்டம் மேலே.. கீழே.. மாடியின் கீழே.. பரபரப்பான ஜனநடமாட்டத்தின் சத்தம்.. நடுவில் இவர்களின் பால் மழைகாதல்.
!@!@!@!@!@!@!@!@!@!@!
நாட்கள் இருவருக்கும் எந்த சிக்கலும் இல்லாமல் கடந்தது.. மிர்த்திக்காவிற்கு பனிரெண்டாம் வகுப்பின் பாடங்கள் தொடங்கியது. பிள்ளைக்கு படிப்பில் கவனமா தப்பவில்லை. சமையல் வேலை இப்போது குறைந்திருப்பதால்.. அதிகமாக படிப்பில் கவனம் கொண்டாள்.
யோகி எப்போதும் போல.. இப்போது டிஸ்ட்ரிக் லெவல் கபடியில் அவன் இடம் பெற்றிருந்தான். அதனால், கல்லூரியில் படிப்பதை விட.. விளையாட்டே அதிகம்.
யோகியின் கவனம் எல்லாம் விளையாட்டில்.. நண்பர்களோடு படம் பார்ப்பது. ஊர் சுற்றுவது எனதான். படிப்பு என்பது.. இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது. நன்றாக விளையாடினான். எப்போதும் இவனோடு ஒரு கூட்டம்.. நான்கு ஐந்து பேர்.. சேர்ந்தே இருப்பார். பஸ்சில் இவன் செல்லும் போதே.. நான்குபேர் சேர்ந்துதான் இருப்பர்.. எப்போதும் பேச்சு.. பாட்டு.. டிரைவரிடம் இந்த பாட்டை போடுங்க.. என கேட்பது அளப்பரைகளுடன் நாட்கள் சென்றது. அவன் வார இறுதியில் மிர்த்தியை பார்ப்பது பேசுவது.. கொஞ்சுவது.. என தனது நாட்களை அழகாக கழித்தான்.
மாதங்கள் கடந்தது.
மிர்த்திக்காவிற்கு பனிரெண்டாம் வகுப்பு. அதாவது அடுத்த வருடம் தொடங்கியது. யோகியும் இரண்டாம் வருடம்.
வாசு, நண்பர்களோடு நீண்ட வருடங்கள் சென்று டூர் சென்றிருந்தார்.