வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Part-2 Episode-9
195
அத்தியாயம் 9
கைரவிடம் நித்தி பேசி, அர்ஜூனை பார்க்க சொல்லி விட்டு தாத்தாவை பார்க்க சென்றாள். அவர் தூங்கிக் கொண்டிருக்க, அவரிடம் கொஞ்ச நேரம் இருந்து விட்டு வெளியே வந்தாள். சைலேஷ் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர். பின் அவள் அறைக்கு செல்ல சைலேஷும் அவள் பின்னே அவள் அறைக்குள் வந்து கதவை தாழிட்டு, நித்தியை அணைத்துக் கொண்டான்.
என்னாச்சு? அவள் கேட்க, எனக்கு மிகவும் அயர்வாக உள்ளது. இன்று உன் அறையில் இருக்கவா? ஓ.கே நான் தாத்தாவிடம் செல்கிறேன் என்று அவள் எழுந்தாள்.
நீயும் என்னுடன் தான் இருக்கணும் என்று அவளது கையை பிடித்தான்.
நானுமா? இல்ல இது சரியில்ல என்றாள்.
ப்ளீஸ்ம்மா. உன்னை நான் ஏதும் செய்யமாட்டேன்.
அவள் கட்டிலில் அமர, அவளருகே வந்து அவளது மடியில் படுத்துக் கொண்டான்.
ஏதும் பிரச்சனையா?
அவன் அவளை பார்த்து, நீ மனசுக்குள்ளே எதையும் வைத்துக் கொண்டு கஷ்டப்பட தேவையில்லை.பேசணும்னா பேசலாம்.
அவள் கண்ணீர் எட்டி பார்த்தது. பின் அவள் ஸ்ரீயை எண்ணி வெடித்து அழுதாள். சைலேஷ் எழுந்து அவளை அணைத்துக் கொண்டான் ஆறுதலாக.
கைரவ் ஹாஸ்பிட்டலில் ஸ்ரீ அறைக்கு செல்ல தாரிகா அமைதியாக அமர்ந்திருந்தாள். அர்ஜூன் லேப்பை கையில் வைத்திருந்தான்.
அர்ஜூன் ஸ்ரீக்கு என்னாச்சு? என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தான் கைரவ்.
வா..கைரவ் என்று லேப்பிடமிருந்து நகர்ந்தான்.தாரிகா இருவரையும் பார்க்காமல் கவனித்துக் கொண்டிருந்தாள்.
கைரவ் அர்ஜூனிடன், நான் அந்த பென்டிரைவை கேட்டேன் அர்ஜூன். அதில் ஜிதின் ஸ்ரீயின் அண்ணன் என்று பேசி இருந்தார்கள். வேறேதும் பெரியதாக என்றால் அவர்கள் ஸ்ரீயை கண்டிப்பாக கொன்று விடுவார்கள் என்பது போல் அவளும் அவள் ஆன்ட்டியும் பேசினாங்க.
ஜிதின் அவன் அண்ணனாம் அர்ஜூன்.
இல்ல கையூ. அவனுக்கும் இவர்கள் யாருக்கும் சம்பந்தமில்லை. அவன் அவன் யாருமில்லாதவன் என்றான் அர்ஜூன்.
என்ன சொல்ற அர்ஜூன்?
ஆமாம்டா என்றான் வருத்தமுடன்.
அது நல்ல விசயம் தானே அர்ஜூன். இதற்காக எதுக்கு நீ வருத்தப்படுற?
ஒன்றுமில்லை கையூ அர்ஜூன் கூற, அவனது அலைபேசி அர்ஜூனை அழைத்தது.அதை பார்த்து அப்படியே வைத்தான். மீண்டும் ஒலிக்க பார்த்து விட்டு மீண்டும் அணைத்தான்.
யாரு அண்ணா? தாரிகா கேட்டாள். அவன் ஸ்ரீயை பார்த்தவாறு மேகா என்றான். மீண்டும் போன் ஒலிக்க, அர்ஜூன் அதை வெறித்து பார்த்தான். எழுந்து வந்து போனை எடுத்து காதில் வைத்தாள் தாரிகா.
அர்ஜூன் அர்ஜூன் குரல் குழறியவாறு வந்தது.
ஏய்..நீ குடிச்சிருக்கியா? வாயில் கையை வைத்தாள் தாரிகா.
அர்ஜூன்..நந்து காலேஜூக்கே வரவில்லை.என்னால் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று உலறிக் கொண்டிருந்தாள்.
அர்ஜூன், அவன் காலேஜூக்கு வரல..நான் இப்பவே அவனை பார்க்கணும் என்று அழுது கொண்டு, நான் அவன் வீட்டுக்கு போனேன். அவன் அம்மா என்னை வீட்டுக்குள்ள விடலடா மீண்டும் அழுதாள்.
வீட்டுக்கு போனீயா?
ஹேய் பேபி, வா டான்ஸ் பண்ணலாம் என்று ஒருவன் பேசும் சத்தம் கேட்டு சட்டென எழுந்தான்.
மேகா, எங்க இருக்க? பதட்டமாக கேட்டான்.
ஏய்,..ராஸ்கல் என்னை தொடாதே. கொன்னுடுவேன் அவள் கூற, என்ன பேபி என்று ஒருவனின் குலையும் சத்தம் கேட்டது.
நோ..என்று போனை அணைத்து விட்டு, நந்துவிற்கு போன் செய்தான். அவன் எடுக்கவில்லை.
பிக் அப் டா பதறியவாறு மீண்டும் அழைத்தான். இம்முறை நந்து போனை எடுத்தான். அர்ஜூன் விசயத்தை சொல்ல,
கூல்டா அர்ஜூன். அவ நடிப்பா. நீ பதறாதே..
நந்து..நிஜமாகவே அவள் குடித்திருக்கிறாள். பக்கத்தில் எவனோ தவறாக நடந்து கொள்வது போல் உள்ளது அர்ஜூன் கூற, நந்து அமைதியாக இருந்தான்.
நந்து பேசுடா..அவள் எந்த கிளப்பிற்கு செல்வாள் என்று உனக்கு தெரியும் தானே?
சிறிது யோசித்த நந்து போகிறேன். அவள் இங்கே தான் செல்வாள் என்று இடத்தையும் கூறினான்.
ஓ.கே சீக்கிரம் போ..என்று அர்ஜூன் கூறி விட்டு கைரவ் தாரிகாவை பார்த்து, உங்கள் உதவியும் வேணுமே? என்றான் அர்ஜூன்.
அண்ணா..என்று அர்ஜூனிடம் கைரவை பார்த்து தாரிகா தயங்க, வாம்மா..உன்னை நான் ஏதும் செய்து விட மாட்டேன் என்று கைரவ் அழைத்தான். அவள் அர்ஜூனை பார்த்தாள்.
போங்க சீக்கிரம் என்று அவன் மேகாவிற்காக பதட்டமானான். மறந்தும் ஸ்ரீயை விடவில்லை. பின் அமைதியான அர்ஜூன் கைரவிற்கு மேசேஜ் செய்தான். கைரவ் அதை பார்த்து புன்னகையுடன் அனுப்பிடா போச்சு என்று அனுப்பினான் அர்ஜூனிற்கு.
காரில் ஏறிய கைரவ், தாரிகாவிடம் நெருக்கமாக வந்து சீட் பெல்ட் போட்டு விட்டான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல் எடுத்தான் புகைப்படம்.
சீனியர் என்ன பண்றீங்க? எதுக்கு புகைப்படம் எடுத்தீங்க? அவனது போனை பறிக்க வந்தாள். அவளை சீட் பெல்ட் தடுக்க,அதை பட்டென விலக்கினான் கைரவ். அவன் மீது அவள் விழ அப்பொழுதும் எடுத்தான். அவள் சினத்துடன் அவனை அடிக்க, அவளை நிறுத்த கையை அழுத்தமாக பிடித்தான் கைரவ். அவளுக்கு கை வலித்தது.
சீனியர் நேரமாகுது. சீக்கிரம் செல்லுங்கள் என்று பல்லை கடித்தாள். இருவரும் உள்ளே சென்றனர். ஏற்கனவே நந்து உள்ளே வந்திருப்பான்.
மேகா அருகே ஒருவன் உரசியவாறு இருக்க, அவனை முறைத்தவாறு நின்று கொண்டிருந்தான் நந்து. கைரவ் அவனிடம் வந்து, இன்னும் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாய்?
அவனை பார்த்த நந்து, நீ என்று கையை நீட்டினான். முதல்ல ஆக வேண்டிய காரியத்தை பாரு. பின் நாம் பேசிக் கொள்ளலாம் என்றான். தாரிகாவை பார்த்து, அர்ஜூனை தேடினான்.
அவன் வரலை என்று மேகாவை பார்த்தாள் தாரிகா.
அவள் சொன்னதையே உலறிக் கொண்டிருக்க. அருகே இருந்தவன் அவளது தோளை தடவ, அவனை எட்டி உதைத்த நந்து, மேகாவை பிடித்து இழுத்தான்.
நந்து வந்துட்டியாடா? என்ற மேகா, ஏன்டா காலேஜ் வரல இடியட் என்று அவனது கையை பிடித்து கொண்டு தள்ளாடி அவனை நெருங்கினாள்.பின் அவனுடன் நெருக்கமாக நின்று, எட்டி அவனது கண்ணை பார்த்தாள்.
நந்து குட்டி, சோ…ஸ்வீட்டா என்று அவனது கன்னத்தை பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தாள்.அவன் விறைத்தவாறு அவளை முறைக்க, உன்னோட அம்மா மோசம்டா. அவங்க என்னை உங்க வீட்டுக்குள்ள விட மாட்டேன்னு சொல்லிடாங்க. வா..வீட்டுக்கு போகலாமா என்று அவள் கேட்க, அவளை தள்ளி அவளது கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவளுக்கு போதை லேசாக தெளிந்தது.
அமைதியாக இருந்த கீழே விழுந்தவன் தள்ளாடியவாறு எழுந்து மேகாவின் அருகே வந்து அவளது இடுப்பை பிடித்து இழுக்க, அவள் பயந்து அவனை தள்ளி விட்டு கீழே விழுந்தாள். நந்து வேடிக்கை பார்த்தான்.மேகா அவனை பார்த்து கையை அவன் பக்கம் நீட்டினாள்.
அவன் ஏதும் பேசாமல் அமைதியாக தள்ளி அமர்ந்தான். அவளால் எழ முடியாமல் எழ தாரிகா அவளுக்கு உதவினாள்.
அவளை பார்த்து, அர்ஜூன்..என்று அவள் அழைக்க, நந்துவிற்கு சினம் தலைதூக்கியது. அவன் அங்கிருந்து செல்ல எழுந்தான்.
மேகா தாரிகாவை விட்டு நந்துவின் முன் தள்ளாடிக் கொண்டு வந்து, என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ.
நான் எதற்கு கூட்டிட்டு போணும்? இன்னும் எவன் பின் சுற்றணுமோ? போய் சுற்று. எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கல. அர்ஜூன் சொன்னதால் தான் வந்தேன் என்று அவன் வெளியேற அவளும் அவன் பின்னே சென்றாள்.கைரவும் தாரிகாவும் பின் சென்றனர்.
நந்து நில்லு..என்று வாந்தி எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தாள். அவள் ஆடை முழுவதும் பாழாகி விட தாரிகா அவளிடம் வந்து, அவளது தலையை பிடித்துக் கொண்டாள்.
ஹேய்..எனக்கு தலை சுற்றுது. நந்து எங்க போற? நானும் வாரேன் என்று அதோடு எழுந்து தாரிகா மீதே மயங்கினாள்.
அண்ணா..நில்லுங்க.அவங்க மயங்கிட்டாங்க என்று தாரிகா அவளை கீழே விட்டு நந்துவை நிறுத்தினாள். அங்கே வந்த இருவர், இங்க பாருடா ப்யூட்டி என்று அவளருகே நெருங்கி வந்தனர். கைரவ் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தான்.
ஏய்,.என்னடா பண்றீங்க? தாரிகா மேகா அருகே வந்தாள். நந்துவும் வேகமாக அவளை நோக்கி வர, அவர்களுள் ஒருவன் தாரிகா கையை பிடித்து, இன்னொரு ப்யூட்டிடா என்று தாரிகாவை பிடித்து இழுத்தான். அதையும் புகைப்படமாக எடுத்த கைரவ். அதை வீடியோவாக்கினான். பின் அவனும் அவர்களிடம் சென்று நந்து மேகாவை தூக்க வர அவன் அவனுடன் சண்டை போட்டு, நீ அவங்கள அந்த காருக்கு அழைத்து செல் என்று நந்துவை மேகாவுடன் அனுப்பி விட்டு, தாரிகா கையை பிடித்தவனை இழுத்து சென்று கொண்டவன் முன் வந்து அவனது கையில் அடித்து விட்டு, தாரிகாவை கைரவ் கையில் பிடித்துக் கொண்டு கோபமுடன் அவனை அடித்தான்.
கைரவ் பார்வையில் பயந்த அவன், கைரவ் அடிக்கவும் ஓடி விட்டான். தாரிகா அவனை ஆவென்று பார்க்க கையை உதறிக் கொண்டே அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தான்.
அவள் அவனை முறைத்து விட்டு, நந்து மேகாவிடம் சென்றாள். வீடியோவை அப்பொழுது தான் அணைத்தான் கைரவ்.
பின் அவன் எடுத்த அனைத்தையும் கவினிற்கு அனுப்பி விட்டு, அர்ஜூனிடம் அனுப்பிட்டேன்டா என்று மேகா பாதுகாப்பா இருக்கா என்று அனுப்பினான்.
கைரவ் காரை எடுக்க தாரிகா அவனருகே உட்கார்ந்தாள். தாரிகா ஊருக்கு வரவில்லை என்று கூறியவுடன் கவின் அவளை சினத்துடன் பார்த்ததை நினைத்த தாரிகா கண்கலங்க போனை பார்த்தாள். கவினும் தாரிகாவும் எடுத்த புகைப்படத்தை பார்த்து உதட்டில் புன்னகையுடன் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள். அதை பார்த்த கைரவ் எட்டிப் பார்த்து அமைதியாக அவளை பார்த்துக் கொண்டே காரை ஒட்டினான்.
அவர்கள் சென்றது நந்துவின் வீட்டிற்கு. அவன் அம்மா வீட்டில் வேலையாக இருக்க, மேகாவை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தவனை பார்த்து,
இவளை எதுக்குடா தூக்கிட்டி வர்ற? அவளை அவள் வீட்டில் விட்டு வா என்று அவனது வழியை மறைத்தார்.
அம்மா..வழி விடுங்க. அவள் மயக்கத்தில் இருக்கா. அவள் ஆடை மாற்ற வேண்டும்.
அதுக்கு ஏன்டா இங்க அழைத்து வந்த? அம்மா அவனை திட்ட, தாரிகாவும் கைரவும் அவன் வீட்டிற்குள் வந்தனர்.
அவ வீட்டில அவளுக்கு உதவ யாருமில்ல.கொஞ்ச நேரம்மா. ஆடையை மாற்றி விட்டு அவங்க வீட்லயே விட்டுட்டு வந்திடுவேன் என்று அவன் அறைக்கு அவளை தூக்கிக் கொண்டு சென்றான். அவளை கட்டிலில் கிடத்தி விட்டு தாரிகாவை அழைத்தான். அவள் அமைதியாக இருக்க, அவன் அம்மா அவளை பார்த்தார்.
அவள் உள்ளே சென்றாள். ஆடை வாங்கி வரவா? என்று தாரிகா கேட்டாள்.
தேவையில்லை என்று அவனது கப்போர்டை திறந்தான். அதில் இரண்டு செல்ப் முழுவதும் அவனதும் மீதியிருந்த அனைத்தும் பெண்களுக்கான ஆடைகளும் இருந்தது.
உனக்கு சிஸ்டர்ஸ் இருக்காங்களா?
இல்லை. இது முழுவதும் அவள் பிறந்தநாளுக்காக நான் வாங்கியது. அவளுக்கு சரியாக இருக்கும் என்று வெளியே சென்று கைரவிடம் அவனை பற்றி கேட்டு அறிந்து கொண்டான். ஸ்ரீயை பற்றி கைரவ் கூற, நாம் அவளை விட்டு ஸ்ரீயை பார்க்க செல்வோமா? நந்து கேட்க கைரவும் ஆமோதித்தான்.
நந்து கூறியதை கேட்ட தாரிகா மேகாவை வெறித்து பார்த்து விட்டு, அவளை குளிக்க வைக்க, அவளுக்கு போதை தெளிந்தது. அவள் நன்றாக விழித்து விட தாரிகா வெளியே வந்தாள்.
மேகா ஆடையை மாற்றி விட்டு, அவனது அறையினுள் உள்ள பொருட்களை பார்த்தாள். அதில் அர்ஜூன், மேகா, நந்து இருக்கும் புகைப்படம் இருந்தது. அதை ப்ரேம் போட்டு வைத்திருந்தான்.அதை எடுத்து பார்த்தாள். அதனுள் இருந்த மற்றொரு புகைப்படம் அவளுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்வை தந்தது. மேகா நந்து மட்டும் சேர்ந்து எடுத்த புகைப்படம் இருந்தது. பின் கண்ணாடி முன் வந்து அவளை பார்த்தாள். அழகான பிங்க் நிற லாங் சுடியில் அவளை அவளே ரசித்தாள். மீண்டும் அவனது அறையை பார்த்தாள். அந்த கப்போர்டை திறந்து பெண்களுக்கான ஆடைகளை பார்த்தாள்.
அவளும் இந்த ஆடைகளை வாங்க அவனுடன் சென்றிருப்பாள். ஆனால் அது அவளுக்கு தான் அவன் வாங்கினான் என்று அவளுக்கு தெரியாது. இப்பொழுது தான் அவளுக்கு புரிந்தது. அனைத்தையும் பார்த்து வெளியே வைத்து விட்டு அந்த ஆடைகள் இருந்த இடத்தில் ஒரு மார்கர் எடுத்து “ஐ லவ் யூ” என்று எழுதி மீண்டும் அதே போல் அடிக்கினாள்.
பின் அவளது ஆடையை எடுத்து குப்பை கூடையில் போட்டு விட்டு வெளியே வந்தாள். அவர்கள் மூவரும் அவளை விழிவிரித்து பார்த்தனர். அழகாக இருந்தாள்.
அவன் அம்மாவும் அவளை அமைதியாக பார்த்தார். வாங்க கிளம்புவோம் என்று தாரிகா எழுந்தாள். பின் கைரவிடம்,
சீனியர் உங்க போனை கொடுங்கள் என்று கேட்டாள்.
முடியாது என்று அவன் கையை தூக்க, மற்றவர்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர். ப்ளீஸ் சீனியர் என்று அவள் முகம் வாட, அவளது புகைப்படத்தை காட்டி அழித்தான். அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவன் ஏற்கனவே கவினிற்கு அனுப்பி விட்டதை கைரவ் சொல்லவும் இல்லை. தாரிகாவிற்கு தெரியவும் செய்யாது.
மேகா நந்து அம்மாவிடம், சாரி ஆன்ட்டி என்று சொல்லி விட்டு வெளியே வந்தாள்.மற்றவர்களும் அவள் பின் வந்தனர். கைரவ் அவளை நிறுத்தி காரில் ஏற பணித்தான்.
அவளும் மறுக்காமல் ஏறினாள். தாரிகாவும் ஏற,மேகா நந்துவை பார்த்தாள். நீங்கள் அவளை வீட்டில் விட்டு விடுங்கள். நான் அந்த கிளப்பிற்கு சென்று என் வண்டியை எடுத்துக் கொள்கிறேன்.
நீயும் வா. அங்கே நிறுத்துகிறேன். நீ ஹாஸ்பிட்டல் சென்று ஸ்ரீயை பார்த்து விட்டு கிளம்பு என்றான் கைரவ். அவன் அம்மாவிடம் கூறி விட்டு உள்ளே ஏறினான். அவன் அம்மா மேகாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
காரின் முன்புறம் கைரவும் தாரிகாவும் இருக்க, பின்னே மேகாவும் நந்துவும் அமர்ந்திருந்தனர்.மேகா அமைதியாக இருப்பதை முதன் முறையாக நந்து பார்க்கிறான். அவன் கோபம் குறையவில்லை. ஆனால் அவள் ஏதோ வித்தியாசமாக இருப்பது போல் தெரிந்தது. அவன் அவளை பார்க்க, அவள் அவனை நேரடியாக பார்க்கவில்லை என்றாலும் புதிதாய் உதித்த காதல் உணர்வுகளை அனுபவித்த படி வந்தாள்.
அவன் காரிலிருந்து இறங்கும் முன், ஒரு நிமிடம் நந்து என்று அவனை நிறுத்தினாள். கைரவும் தாரிகாவும் நந்துவை பார்த்து விட்டு அவளை பார்த்தனர். என்னால் இனி நீ கல்லூரிக்கு வராமல் இருக்க வேண்டாம். நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று அவனை முகத்தை கூட பாராது சொல்லி விட்டு காரை எடுங்கள் என்றாள். நந்து அங்கேயே நின்று அவளையே பார்த்தான் கார் மறையும் வரை. கைரவ் நேராக மேகா வீட்டில் நிறுத்த, வெளியே இறங்கி தாரிகாவை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள்.