காயத்ரி “கூப்பிட்டுறேன்” என சொல்லி போனை வைத்தாள்.

பரணிக்கு முகம் மலர்ந்தது. சொன்னது போலவே உடனே அழைத்தாள் பெண்.

பரணி “இனி.. “ என அழைத்தான். இனியன் வந்து நின்றான் “உமேஷ் அம்மாகிட்ட தூங்கறான்” என்றான்.

பரணி “இந்த போன்” என கொடுத்துவிட்டு.. மேலே தனதறைக்கு சென்றான்.. போனை ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டே.

காயத்ரி “தேங்க்ஸ் மாமா.. அப்போவே சொல்லணும்தான் இருந்தேன். அப்புறம் மறந்துட்டேன் சாரி” என்றாள் கள்ளமே இல்லாமல்.

பரணி “பரவாயில்ல சும்மாதான் கேட்டேன்” என்றான் நிதான குரலில்.

காயத்ரி “அண்ணி அங்க வந்துட்டாங்களா.. இன்னிக்கே.” என்றாள்.

பரணி “ம்.. நான் புது கார் வாங்கியிருக்கேன்.. அதுக்குதான் வர சொல்லியிருக்கேன்” என்றான்.

காயத்ரி “ஓ.. காங்க்ரட்ஸ்” என்றாள்.

பரணி “தேங்க்ஸ்.. நீ.. நீங்க வாங்க, டிரைவ் செய்து பாருங்க” என்றான்.

காயத்ரி “ம்.. என்னை நம்பி சொல்றீங்க. நான் அப்புறம் வந்திடுவேன்” என்றான்.

பரணி தொலைந்தே போனான்.. “ம், கண்டிப்பா டிரைவ் செய்து பார்க்க வாங்க.. நான் காரை கொடுப்பேன்” என்றான்.

காயத்ரி “என்ன கார்..” என்றாள்.

பரணி காரின் பெயர் சொல்ல.. காயத்ரி “அஹ்ய்யோ… சூப்பர்.. நான் வருவேன்” என்றாள் சலுகையாக.

பரணி ஒன்றும் பேசவில்லை அமைதியாக ரசித்துக் கொண்டான்.

காயத்ரி “உங்ககிட்ட ஒன்னு கேட்க்கலாமா” என்றாள்.

பரணி “ம்..” என்றான்.

காயத்ரி “உங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சா” என்றாள்.

பரணியை சட்டென பரபரப்பு தொற்ற “இல்லையே.. யார் சொன்னாங்க” என்றான்.

காயத்ரி “இல்ல.. நீங்க முன்ன மாதிரி இல்ல.. இப்போவெல்லாம் என்கிட்டே நார்மலாக பேசறீங்களே.. அதான் கேட்டேன்.” என்றாள் குரல் ஒருமாதிரி ஆராய்ந்தது அவனை.

பரணி “அ..அது.. நான் எப்போதும் போலதான் பேசறேன். முன்பெல்லாம் நீங்க காலேஜ் போய்டுவீங்க, அதான் சரியாக பேச முடியாதில்ல. இப்போ, அடிக்கடி பார்க்கிறோம் போல, அதான் அப்படி தெரியுது” என்றான்.

காயத்ரி “ம்.. சரி, நான் வைக்கட்டுமா” என்றாள்.

பரணி “ம்.. கார் வெயிட் பண்ணுது உங்களுக்காக” என்றான் அழமான குரலில்.

காயத்ரி “என்ன… ஓ.. தேங்க் யூ” என சொல்லி போனை கட் செய்தாள். பெண்ணவளுக்கு பரணியின் ஆழமான குரல் என்னமோ செய்தது.. அழகான அவளின் நீல வானில்.. சின்சான்.. மோட்டு பட்டுளூ என உருமாறி.. கார்ட்டூன்களாக தெரிந்துக் கொண்டிருந்த நிலையில்.. பரணியின் பேச்சு.. ஒருசில சின்ன சின்ன  விண்மீன்களை கண்களுக்கு காட்டியது  பெண்ணுக்கு, இப்போது.

காயத்ரிக்கு, என்னவென வரையறுக்க தெரியவில்லை.. ‘அவர் குரல் என்னமோ போலிருக்கு இல்ல.. இழைகிறது என்னிடம்.. முன்பு எல்லாம் இப்படி இல்லையே. அன்னிக்கி கூட  என்னை காரிலும் திட்டவில்லையே.. என்னை கண்டாலே.. மேலும் கீழும் பார்ப்பாரே.. அவரின் காரை டிரைவ் செய்வதற்கு எனக்கு கொடுப்பாரா.. நீங்க முன் மாதிரி இல்லையேன்னு சொன்னதுக்கு.. தினறினாரோ.. ம்.. எதோ இருக்கு.. ம்..’ என மனது கண்டுக் கொண்ட பொழுதில் காயத்ரிக்கு சில்லென்ற மழை அவளுக்கென மட்டும் பெய்தது ‘பரணீஷ்வரன்’ என்ற பெயர் சொல்லி.

காயத்ரி, தனது போனில் “பரணி” என பெயர் சொல்லி.. எண்ணை சேவ் செய்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாளும் விடுமுறை. எனவே, சாரதா ஞாயிறு மாலைதான் தங்களின் வீடு வந்தாள். பரணி தன்னுடைய புது காரில் வந்து இறக்கிவிட்டான். 

சாரதா பொருட்களை எடுத்துக் கொண்டு உமேஷை அழைத்துக் கொண்டு லிப்ட் நோக்கி சென்றாள்.

பரணி, காரை பார்க்க செய்ய போனான். இனியன் இன்னும் காரிலிருந்து இறங்கவில்லை.. இனியனுக்கு அதன் லக்சுலேரி பிடித்து போய்விட்டது.. “மாமா நான் எப்போ இந்த வண்டி ஓட்டுவேன்” என்றான்.

பரணி இனியனை திரும்பி பார்த்தான்.. இனியன் அழகாக முன்சீட்டில் அமர்ந்துக் கொண்டு.. தன்னிரு கைகளை.. தலைக்கு கொடுத்து.. அந்த கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டே அசித்ரயாய் கேட்டான் பிள்ளை.

பரணி, மருமகனை பார்த்து .. அவனின் தோற்றம் பார்த்து.. புன்னகையை தன்னுள் அடக்கிக் கொண்டு.. காரை சரியாக நிறுத்துவிட்டு. கீழே இறங்கி.. மறுபக்கம் வந்து “அட பாவி, நானே இப்போதான் வாங்கியிருக்கேன்.. உனக்கு ஏழு வயதில் இந்த கார் வேண்டுமா ம்..” என சொல்லி அவனை தலைகீழாக தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான்.

இனியன் சுகமான மாமன் தோளில் படுத்துக் கொண்டே “க்கும்.. க்கும்… மாமா.. மாமா.. எனக்கு இந்த கார்தான் வேணும்” என்றான் கெக்க பிக்கவென சிரித்துக் கொண்டே.

பரணி இனியனை கீழே விட்டு.. அவனை துரத்த தொடங்கினான். அவனை பிடித்து மீண்டும் தன் தோளில் போட்டுக் கொண்ட பரணி “கண்டிப்பா வாங்கணும் நீ படிச்சு வாங்கணும்” என்றான் நிதானமாக.

இனியன் “மாமா.. நீ என்ன படிச்ச” என கேட்டான். இப்படியே இருவரும் பேசிக் கொண்டே மேலே வந்தனர்.

பரணிக்கு, காயத்ரியை இங்கே அழைக்க வேண்டும் போல இருந்தது.. ஆனால் மணி ஏழுக்கு மேல்.. எப்படி அழைப்பது என எண்ணிக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பிள்ளைகளோடு.

சாரதா, தம்பிக்கு பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தாள். நாளை பள்ளிக்கு செல்ல வேண்டும் என இனியனை சீக்கிரம் உறங்க வைக்க அறைக்கு கூட்டி சென்றாள். உமேஷ் மாமா மடியில் அமர்ந்து டிவி பார்த்தான்.

சாரதா வெளியே வரவும்.. பரணி விடைபெற்றுக் கிளம்பினான்.

காரில் செல்ல செல்ல.. காயத்ரிக்கு அழைத்தான் பரணி. முதலில் தயங்கினான் மணி 9க்கு மேல்.. கூப்பிடலாமா வேண்டாமா என தயங்கிக் கொண்டே பாதி தூரம் வந்துவிட்டான். பின் துணிந்து அழைத்துவிட்டான்.

காயத்ரி அந்த அழைப்பை ஏற்கவில்லை. ஆனால், சற்று நேரம் சென்று.. அவன் வீடு வந்ததும் அழைத்தாள் பெண்.

பரணிக்கு, அவளின் அழைப்பை பார்த்ததும் பிடறியில் சில்லென்ற உணர்வு தாக்கி அவனின் முதுகு தண்டை.. காதலால் நிமிர  செய்தது, அந்த அழைப்பு. தன்னறையில்.. டேபிள் மேல் இருந்த போனை.. எடுத்தான் புன்னகையோடு பரணி.

காயத்ரி “என்னாச்சு, இப்போ கூப்பிட்டிருக்கீங்க” என்றாள்.

பரணி “இல்ல.. பார்க்கணும் போல இருந்தது..” என்றான் மென்மையான குரலில்.

காயத்ரி “என்ன” என்றாள்.

பரணி “இல்ல.. அக்காவை விட, அப்பார்ட்மென்ட் போனேன்.. நீ அங்க வருவீங்கன்னு நினைச்சேன், அதான்” என்றான் அமர்த்தலாக

காயத்ரி “நான் எப்படி வருவேன்.. நீங்க சொன்னால் தானே தெரியும்” என்றாள்.

பரணி “ம்.. இல்ல சும்மா” என்றான்.

காயத்ரி “சும்மான்னால் இந்த நேரத்தில் கூப்பிடுவீங்களா” என்றாள், பொய் கோவம் அப்பட்டமான தெரிந்தது அந்த குரலில். ஏதாவது சொல்லுவார்.. என எதிர்பார்த்து சொன்னால் பெண். என்னமோ அவனிடம் இருக்கிறது என புரிகிறதே பெண்ணுக்கு எனவே கேட்டாள்.

ஆனால், பரணி “ஏன் என்ன இப்போ” என்றான் ஆழ்ந்த மூச்செடுத்து.. அமர்ந்த்தலான குரலில்.

காயத்ரி “என்ன.. என்ன ன்னா.. இது சரியில்லையே” என்றாள் இப்போது பரணி அமர்ந்த்தலாக பேசவும்.. எதுவுமே நடவாத குரல்.. பாதித்தது அவளை.. சிடுசிடுத்தாள்.

பரணி “ம்.. என்ன இப்போ, நீ கூடத்தான் மாமான்னு சொல்லலையே” என்றான் அழமான குரலில்.

காயத்ரிக்கு ஏனோ கன்னம் சிவந்து போனது இந்த பேச்சில்.. காதுமடல் கூசி சிவந்தது.. தொண்டையில் இருந்து வார்த்தைகள் வரவேயில்லை ஏன் மூச்சு காற்றுக்கு கூட இதயம் தவித்தது. அமைதியானாள் பெண். 

பரணி “என்ன பேச்சே காணோம்” என்றான்.

காயத்ரி அமைதியாகவே இருந்தாள். கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.. எதோ தவறு செய்த உணர்வு வந்துவிட்டது.. 

பரணி “ஏதாவது பேசேன்” என்றான் நெகிழ்ந்த குரலில்.

காயத்ரிக்கு நடுக்கம் குறையவில்லை.. எதோ அவன்.. தான் எதோ தவறு செய்துவிட்டதாக சொல்லுகிறார் என தோன்றியது பெண்ணுக்கு  அழைப்பை துண்டித்துவிட்டாள். அழுகையோ அழுகை அவள்.

பரணி மீண்டும் அழைத்தான் அழைப்பை ஏற்கவில்லை பெண். 

“நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா..

நீயே வழங்கிட மனதில்லையா..

வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா..

உரிமை எனக்கில்லையா..”

 

பரணி பதறி போனான்.

மறுநாள் தன் புது காரோடு.. அங்கே அவளின் வீட்டிற்கு சென்றான். கார் பற்றி சொல்லிவிட்டு அவளை பார்த்து வரலாம் என காதலன் இறங்கிவிட்டான் களத்தில்.

ஆனால், அங்கே கமல் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தான்.