ஆதவனின் அறையிலோ மனையாளின் இதழை சுவைக்க ஆரம்பித்தவன் , தன் பின்னங்கழுத்து கேசத்தைப் பற்றியிருந்த விரல்களின் இறுக்கம் உணர்ந்து இதழைப் பிரிக்க .. “மா..மா…” என்றாள் தில்லைநாயகி.
அந்த இரவில் ஆதவனுக்கு ” மாமா” என்ற மெல்லிய அழைப்புக்கூட அவனது தாபத்தை அதிகமாக்க.. ” ம் ” என்றவாறு இப்போது தில்லையை இறுக்கி அணைத்து கழுத்தில் முகம் புதைக்க ஆரம்பித்தான். இளம் பெண்ணால் உணரப்பட்ட புதிய உணர்வுகள் தீயாக கொழுந்து விட்டு எரிய … அதன் வெப்பம் அவளால் தாங்க முடியாதாகினும் அந்த நேரம் அது வேண்டும் போலவே இருக்க… ஆதவனுக்கு இசைந்துக் கொடுத்தாள்.
அறைக்குள் வந்தவனுக்கு தில்லையை தொட வேண்டும்… அவளை அடைய வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையவே கிடையாது.ஆனாலும் சமீபமாக தான் ரசித்த, தன்னை ஈர்த்துக் கொண்டிருந்த பெண் அருகில் இருந்ததோடு … அந்நேரத்து அவளது பேச்சுக்கள் அவள் மீது மோக மழையை அதிகம் பொழிய வைத்ததோடு ஆதவனுக்கு அந்நேர மோகத்தில் யார் நினைவும் இல்லாமல் செய்து விட்டாள் என்பதே உண்மை.
சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட
ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
தாயின் மறைவுக் கொடுத்த இறுக்கத்திலும்…தந்தை மற்றும் தங்கையின் உடல்நிலைப் பாதிப்பிலும் இத்தனை நாட்கள் உழன்றுக் கொண்டிருந்தவனுக்கு தில்லையின் அருகாமை அத்தனையையும் மறக்கடித்துக் கொண்டிருந்தது.
சயன நேரம் மன்மத யாரம்
உலரி வரையில் நம்மோட யோகம்..
அவனது தேடல் தொடர்ந்து … முடிவில் தேடியது கிடைத்த நிம்மதியிலும் அயர்விலும் அப்படியே உறங்கி விட்டான். தன்னை இறுக்கிப் பிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்த நாயகியின் நாயகனை சிறிது நேரம் கண் விழித்துப் பார்த்தாள்.
இதுநாள் வரை அவனிடம் அதிகம் பேசியது கிடையாது. அப்படியே பேசினாலும் முழுதாக பார்வையை அவனிடத்தில் நிலைக்கவே விட்டதில்லை. சற்றுமுன் அவனோடு அவ்வளவு நெருக்கத்தில் இருந்தாலும் அவளது விழிகள் மயக்கத்திலும் தயக்கத்திலும் மூடியே தான் இருந்தது. அப்படியொரு அயர்ந்த உறக்கம் ஆதவனிடத்தில்.
மெல்ல அவனிலிருந்து பிரிந்து எழுந்தவளுக்கு தான் இருக்கும் கோலம் வெட்கம் , தயக்கம், பயம், கோபம்… ஏதோ தவறு செய்து விட்டோமோ என்ற பதற்றம் என பலவித உணர்வுகளையும் கொடுத்து அது கண்ணில் நீரைத் தேங்க வைத்தது. கட்டுப்படுத்திக் கொண்டவள் நேரம் பார்க்க சுவர் கடிகாரத்தைக் காண முற்பட அது மங்கிய ஒளியிலும் கண்ணீர் மறைத்ததாலும் சரியாகத் தெரியவில்லை.
எப்போது ஜன்னல்களை அடைத்து திரையிட்டான். எப்போது விளக்கை அணைத்தான்… ஒன்றுமே தெரியவில்லை.. ஆதவனது கைக்கடிகாரம் அருகில் இருந்த மேஜையில் இருக்க , அதனை எடுத்துக் கொண்டு குளியலறை வாசலருகே சென்றுப் பார்த்தாள். அது இரண்டை நெருங்குவது தெரிந்தது… மூன்று மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும் என தேவராஜன் தேவகியிடம் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்தாள். எனவே வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்து தாமரையின் அறைக்குச் சென்று குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
ஒருபுறம் இது சரியா. தவறா.. என்ற கேள்விகள் … மறுபுறம் “திருமணமானால் இப்படித்தான் நடக்குமோ… இந்த அம்மா இதெல்லாம் சொல்லி.. ச்சீ… எப்படி சொல்லுவாங்க.. அதான் வெள்ளி டம்ளர் பால் கொடுத்துச்சே…அதுதான் மாமா…” என நினைத்தவளுக்கு இரவில் அவன் அவளது காதோரம் பேசிய பேச்சுக்கள் நினைவு வந்து இதெல்லாம் தவறே இல்லை என்று தானே உணர்த்தியது.. நீர் பட பட அவன் தொட்டு பிடித்திருந்த இடங்கள் சிவந்து போய் சுளீர் சுளீர் என எரிந்தாலும் வெட்கமே அதிகமாக வர தன்னால் இரு கைகளும் முகத்தை மூடிக்கொண்டன.
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள சாரக்காத்து…
தொட்ட பாகம் தொட்டு பாத்து
சாய்வதென்ன கண்கள் பூத்து…
குளித்து முடித்ததும் அந்த அறையிலிருந்த தாமரையின் பாவாடை தாவணி ஒன்றை அணிந்துக் கொண்டு ஈரத் தலையுடன் வெளியே வந்தவள் , ஈரம் வடியாதவாறு துண்டினை தலையில் சுற்றி கொண்டையாகப் போட்டுக் கொண்டு ,நேராகச் சென்று மீனாட்சியின் புகைப்படத்தைப் பார்த்தவாறு முன் இரவில் தாமரை சாய்ந்திருந்த அதே தூணில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
உறங்காதிருந்த தாமரையும் வெளியே கேட்ட கொலுசு சத்தத்தில் எழுந்து நடக்க .. கூடவே தேவகியும் ஆவுடையாளும் எழுந்து வந்து விட்டனர். தோழியை அங்குப் பார்த்த தாமரை , அவள் அந்நேரம் தலைக்கு குளித்திருப்பதை உணர்ந்து ,
“திலோ என்னடி இப்பவே குளிச்சிட்ட… ” என்றவாறே இருளில்அவள் முகம் பார்க்க முற்பட..தேவகி விளக்கை ஒளிர விட்டார். உடனே பரவிய வெளிச்சம் தில்லைக்கு அவளைப் பார்க்க முடியாமல் கண்களோடு மனதையும் கூச செய்தது. ஒரு நொடி அவளைப் பார்த்து விட்டு விழிகளைத் தாழ்த்த…
” என்ன திலோ கண்ணெல்லாம் சிவந்து வீங்கி இருக்கு..” எனும் போதே தேவகி மகள் அருகில் வந்து அவள் தாடையைப் பிடித்து முகம் பார்த்தார்.
தில்லையின் உடலில் மாற்றத்தை உணர்ந்தவர் மகிழ்ந்து, தனது அண்ணன் மனைவியின் புகைப்படத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவர் ,தாமரையிடம் ,
“அது சாமி உங்க அண்ணன் ஊருக்கு கிளம்புறாருல அதேன்… நீயும் அவுக கிளம்ப முன்ன போய் குளிச்சு தயாராகி வா சாமி… ” என்றார்.தில்லை பதிலும் சொல்லாமல் அவளையும் பார்க்காமல் இருந்தது சங்கடமாக இருந்தாலும், ‘சரி’ என தலையாட்டி விட்டு உடனே மாடியேறினாள்.
அவளது கண்களும் வீக்கமாக சிவந்து தான் இருந்தது. வேறொரு சமயமாக இருந்தால் தில்லை தாமரைக்கு முன்பே அவளைப் பார்த்துக் கேட்டிருப்பாள்.. ஆனால் இன்று தில்லையின் சிந்தனைகள் வேறுபுறம் இருக்க, தோழியின் முகம் பார்க்கவில்லை.
அதற்குள் இரவு முழுவதும் உறங்காதது தலைவலித்து தலை சுற்றலைக் கொடுக்க தில்லைக்கு வயிற்றைப் பிரட்டி உமட்டிக் கொண்டு வர..வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு ஓடினாள்.
ஆவுடையம்மாளோ , “ஏன் தேவி உன் மவ என்ன ஒரே ராவுல அதுவும் முழுசாக் கூட முடியல அதுக்குள்ள வாந்தி எடுக்கிறா… ” என தாடையில் கை வைக்க … ” தேவகி சங்கடத்துடன் “நீங்க வேற சின்னாத்தா.. பிள்ளை சரியா தூங்கல.. அதேன்…” என்றவாறு தில்லையின் பின்னால் நடந்தார்.
தாமரைக்கும் படியேறும் போதே தலைவலித்ததோடு , உறக்கமில்லாதது சிறிது தலை சுற்றலையும் கொடுத்தது.
அதே நேரம் தேவகி மகளிடம் , “பாப்பா வாய்க் கொப்பளிச்சுட்டு வா அம்மா தலை துவட்டி, புகை போட்டு விடுறேன்.. ” என்றவர் அந்த வேலைகளை செய்துக்கொண்டே , காஃபி எடுத்து வருவதாகக் கூறிச் சென்றார். மெதுவாக படியேறிக் கொண்டு இருந்த தாமரைக்கு, தில்லை மீதான தேவகியின் கரிசனம் மீனாட்சியின் நியாபகங்களைத் தூண்டி விட மீண்டும் அழுதுக் கொண்டே அவளது அறைக்குச் சென்று கதவைச் சாத்திய ஐந்து நிமிடத்தில் கதவுத் தட்டப்படும் ஓசை.. தலையைப் பிடித்துக் கொண்டே கதவைத் திறக்க , அந்நேரம் செண்பகா நின்றுக் கொண்டிருந்தார்.
“பாப்பா… இந்தா சுக்கு காப்பி .. குடிச்சா தலைவலி காணாம போயிரும்..” எனவும் , வியந்த தாமரை புருவங்களை உயர்த்தி,
“எனக்கு தலை வலிக்குதுனு எப்படித் தெரியும் செண்பாக்கா…”
“கலக்டர் தம்பிதேன் சொல்லிச்சு.. நம்ம ஆதவ தம்பி ஊருக்கு கிளம்ப முன்ன வாசப் பெருக்கி கோலம் போடணும்னு வெள்ளனவே வந்து போட்டுட்டு இருந்தவள மச்சியிலருந்து (இங்கு மாடி என்பதே மச்சி) பார்த்துட்டு “அக்கானு” கூப்புட்டு, கீழ வந்துப் சுக்கு காப்பி போடச் சொன்னதே அவுகதேன்… கொண்டு போய் கொடுக்கிறப்ப உன்னையப் பார்த்ததும் உனக்கும் கொடுக்க சொன்னாரு.. நேத்தெல்லாம் ரொம்ப அழுதல்ல.. இப்பவும் சீக்கிரம் எழுந்துட்ட, தலைவலிக்கும் அவங்களுக்கும் கொடுங்கனு… இப்ப நம்ம தம்பி பொண்டாட்டிக்கும் சுக்கு காப்பி போடப் போறேன் ” என்றவர் தேவகியின் அழைப்பில் உடனே சென்று விட்டார்.
கதவை அடைத்துக் கொண்டவளின் முகத்தில் மெல்லிய புன்னகை.. இத்தனை நேரம் விஜயிற்கு என்ன பதில் தர எனக் குழம்பிக் கொண்டு இருந்தவளுக்கு தீர்வுக் கிடைத்தது போல் இருக்க வேகமாக போட்டுக் கொள்ள ஆடைகளை தேர்வு செய்தவள் வேகமாக குளித்து விட்டு,தான் எடுத்து வைத்திருந்த ஆடைகளை அணிந்துக் கொண்டாள்.
ஆதவனறையில் முதல் நாளே நேரத்தோடு எழுந்திரிக்க டைம் பீஸில் அலாரம் வைத்திருந்ததால் அது ‘ட்ரிங்’ ட்ரிங் ‘ என்ற சத்தத்தை எழுப்ப , இமைகளை கஷ்டப்பட்டு பிரித்து வேகமாக எழுந்து அமர்ந்தான். அப்போதுதான் இரவின் நினைவுகள் வந்து மென்னகையோடு மனைவியைத் தேட,அவள் அந்த அறையில் எங்கும் தென்படவில்லை. மேலும் உட் தாழ்பாள் திறந்திருக்க அதனை அவன் தாழ்பாளிடுகையில் அவள் கேட்ட கேள்விகள் இன்னும் நியாபகத்தில் இருந்தது.
முத்தம் பெற்றுக் கொண்டு முகம் சிவந்தாலும், தில்லையின் உணர்வுகள் தூண்டப்பட்டாலும் , பெண்மையின் இயல்பான கூச்சம் தடுக்க … அவனது கைகள் பட்ட இடத்திலிருந்து தள்ளி விட்டுக் கொண்டே இருந்தவள் , “மாமா நீங்க என்ன கெடுக்க பார்க்கறீங்க” என்றவள் அவனை கிள்ளிய தடம் பதித்த கையினைப் பார்த்தவனுக்கு புன்னகை வந்து அந்நேர நினைவுகள்.. இனிமையாக நியாகத்தில் வந்தது. அவள் சொன்ன அந்த வார்த்தையில் ,
” என்ன கெடுக்கிறேனா..” என்றவனிடம் , “ஆமா சினிமால வில்லன் லாம் இப்படி தான் பண்ணுவாங்க.. என்ன விடுங்க… ” என்றவளின் பதிலில் வாய் விட்டு சிரித்த ஆதவனின் வாயை கைக்கொண்டு மூடி …
“ஷ்… இருட்டுக்குள்ள இப்படி பேய்மாதிரி சிரிச்சா எனக்கு பயமா இருக்காதா… நீங்க வில்லனே தான்…” என்றவள் அவனிடமிருந்து விலகப் பார்க்க… இன்னமும் இறுக்கியவன், அவள் உள்ளங்கையில் முத்தமிட .. சிலிர்த்தவள் விலக்கினாலும்… அதனைப் பிடித்து தனது விரல்களைக் கோர்த்துக் கொண்டவன் ,
கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்…
முகத்தை அவள் காதோரம் கொண்டு போய் , இந்தப் பாடலைப் பாடிக் கொண்டே
” சினிமால வில்லன் பண்றத தான் பார்த்தியா … ஹீரோ என்ன செய்வான்னு தெரியாதா.. அதுவும் நாம இப்ப ஹஸ்பன்ட் அன்ட் வொய்ஃப்.. சோ ஹீரோ ஹீரோயினியே நீயும் நானும் தான் …அப்ப நமக்கு இது முதல் இரவாச்சே.. நீ சினிமால பார்த்ததில்ல… அதுவும் இந்தப் பாட்டு ” என்றவன் கழுத்திலும் காதிலும் இதழ் பதிக்க … அது கொடுத்த உணர்வுகள் தில்லையை பேச்சிழக்கச் செய்தாலும்…
“ஹீரோவா… முதல் இரவா …எங்கம்மா அப்படி சீன் வந்தாலே மடியில படுக்க வச்சுக்கும்.. இந்தப் பாட்டு டெக்ல பார்த்தப்ப என் மண்டைல கொட்டிடுச்சு… அதோட … ” என்றவளின் கூந்தலில் விரல் நுழைத்து அவளின் உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டே அவளின் பதிலில் திரும்பவும் சிரித்தவனிடத்திலிருந்து விலகப் போக .. அசையவிடாமல் பிடித்தவன் , அவனது விழி அருகே அவனது விழிகளை கொண்டு போய் … “அதோட … ” என கன்னம் தேய்க்க ஆரம்பிக்க..
“அதோட ரெண்டு பூ ஒட்டுறத காட்டுவாங்க.. ” என்றதும் ஆதவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு …
“வாய மூடுங்க மாமா… ” எனச் சிணுங்கியவளின் அந்த அறியாமை அவனை மேலும் கவர…,
“வாய தான மூடப் போறேன்..” என நெருங்கியவன் ,
“பூ ஒட்டுனதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாதா..” என குறும்புடன் கேட்டுக் கோண்டே தன் வசப்படுத்த ஆரம்பித்தவனிடம் , ” தெரியாது…” என்பது போல் தலையாட்டியவளின் நெற்றியில் ஆரம்பித்த முத்தத்தை முடிவில்லாமல் தொடர்ந்துக் கொண்டே , கிசுகிசுப்பாக…
“அப்புறம் என்ன நடக்கும்னு நான் இப்ப உனக்கு சொல்லித்தாரேன்…” என்றவாறு தில்லைநாயகியை முழுவதும் தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் அவளின் நாயகன்.