ஆனால் மித்ரா, தாய், தந்தையரின் செல்வ சீமாட்டி. பிறப்பில் இருந்தே ராஜ குமாரி போல வளர்க்கப்பட்டவள். அவள் வளர வளர யாரும் திணிக்காமலேயே மேல்தட்டு வர்கத்தின் கர்வம் அவள் மேல் படர்ந்திருந்தது. அதானல் அவள் இயல்பு போல எப்போதும்அவர்களை கண்டு கொள்வதில்லை.
கார்த்திக் பழைய சிந்தைகளில் உழன்ற படி வர, வீட்டின் மரகத நிற கதவுகள் கண் முன் தென்படவும் தான், பழக்க தோசத்தில் வீட்டிற்கு தான் வண்டியை விட்டிருப்பது அவனுக்கு புரிந்தது.
தலையை உலுக்கிக் கொண்டவன், வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவன் உள்ளே நுழைந்த நேரம், பால்கி, உளுந்த வடையை சூடான சாம்பாரில் மூழ்க விட்டு, சிறு கரண்டி கொண்டு அதை கொஞ்சம் பிய்த்து ஊதி வாய்க்குள் போடப் போன நேரம், கரண்டியை தன் வாய் நோக்கி திருப்பி இருந்தான் கார்த்திக்.
“டேய்…”பால்கி கடுப்பில் கத்த, “மம்மி… உங்க புருசரோட எச்.பி.ஏ ஒன் சி ( சர்க்கரை நோயாளிகளின் சிவப்பணுவில் உள்ள சர்க்கரை அளவு. பொதுவாக ஆறு அல்லது அதற்குள் இருத்தல் நலம்.) போன மாசம் பத்தை தாண்டிருச்சு. நியாபகம் இருக்கு இல்ல. நீங்க பாட்டுக்கு எண்னையில பொரிச்ச வடையை அவருக்கு கொடுத்துட்டு இருக்கீங்க. நேத்து நைட்டு சாதத்துல தண்ணி ஊத்தி வச்சி இருப்பீங்க இல்ல. அதை கொண்டு வந்து கொடுங்க. நிறைய பி.டுவல்ஸ் கிடைக்கும்.’’ என்றவன் அவரின் கையில் இருந்த பாத்திரத்தை கைப்பற்றினான்.
“யாரை கேட்டு வடையை எடுத்தீங்க. உங்களுக்கு இட்லி தானே வச்சிட்டு போனேன். ஆஞ்சநேயருக்கு படைக்க நான் வடை செஞ்சா உங்களை யாரு எடுத்து சாப்பிட சொன்னா…’’ என்று கேட்டபடியே சமையல் அறையில் இருந்து தூக்கி சொருகிய புடவையோடு வெளியே வந்து நின்று கத்த தொடங்கினார் மதுரா.
“வட போச்சே..’’ என்று அப்பாவியாக விழித்திருந்தார் பால்கி. “நான் டவுசர் போட தெரியாத பையனா..’’ என பால்கியின் அருகே குனிந்து கேட்ட கார்த்திக், அவரின் முன்னால் அந்த சாம்பார் வடையை சப்பு கொட்டி சாப்பிட்டான்.
அதே நேரம் சிறு மண் கலயத்தில் நேற்று ஊற வைக்கப்பட்ட பழைய சோற்றோடு சிறு வெங்காயமும், இரு இட்லியின் சாம்பாரும் அவர் தட்டின் முன் வைக்கப்பட்டன.
“சீக்கிரம் சாப்பிடுங்க. காலேஜ் கிளம்பணும். அவரை சொல்லிட்டு நீ அதையும், இதையும் சாப்பிடாத. உனக்கு ஊற வச்ச நட்ஸ் ப்ரிட்ஜ்ல இருக்கு. ப்ராக்டீஸ் போறதுக்கு முன்னாடி மித்துவை அவ நீட் கிளாஸ்ல ட்ராப் பண்ணிரு. ஆஞ்சநேயருக்கு நான் வடை செஞ்சா வீட்ல இருக்க அத்தனை குரங்கும் ஆட்டையை போடுது..’’ என்று புலம்பியபடி மதுரா வடை இருந்த ஹாட் பாக்சை மீண்டும் சமயலறைக்கே எடுத்து சென்றார்.
‘இப்ப இவங்க (இவ) யாரை குரங்குன்னு சொல்லிட்டு போறாங்க.’’ என்று மகனும் தகப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் உதட்டிலும் ஒரு அசட்டு புன்னகை மலர்ந்தது.
“டேய்… படவா…’’ என்றவர் மகனின் குறும்பை ஒரு தந்தையாய் ரசிதிருந்தார். அதன் பிறகு நண்பனிடம் மச்சானின் நிலை அறிந்து கொண்டு மனைவியோடு கல்லூரிக்கு கிளம்பினார் பால்கி.
“மித்து கிளம்பிட்டியா.’’ என்று மட்டை பந்து பயிற்சிக்கு கிளம்பி வந்து நின்ற கார்த்திக், மித்ராவின் அறையை தட்டிக் கொண்டிருந்தான். சற்று நேரம் சத்தமே இல்லை. பதறிய அவன், “மித்து..’’ என்று வேகமாக தட்ட, “அண்ணா. எனக்கு மதியம் தான் கிளாஸ். நான் என் வண்டியில போயிடுவேன். நீ கிளம்பு.’’ என்றாள்.
“சரி குளிச்சிட்டு சாப்பிட்டு அப்புறம் உக்காந்து படி. சும்மா ரூம்லேயே இருக்காதா. மதியம் உமா அக்கா வந்துடுவாங்க. நான் ப்ராக்டீஸ் கிளம்புறேன்.’’ என்றவன் கையில் இருந்த மட்டைப் பந்தை சுழற்றிக் கொண்டே படிகளை இரண்டிரண்டாக தாவி இறங்கினான்.
அறையில் இருந்த தங்கையின் நிலையை அவன் அறியவில்லை. மூடிய கதவின் பின் அறைகுறையாய் இருந்த தன் ஆடைகளை சரி செய்து கொண்ட மித்துவின் உடல் முழுதாக வேர்த்திருந்தது.
வேக வேகமாக ஆடைகளை சரி செய்து கொண்டவள் அப்படியே படுக்கையில் கவிழ்ந்தாள். மித்து போன வருடம் தான் பனிரெண்டாம் வகுப்பை முடித்திருந்தாள். சென்ற வருடம் எழுதிய நீட் தேர்வில் சில்லறை மதிப்பெண் வித்தியாசத்தில் அரசின் மருத்துவக் கல்லூரி கதவுகள் அவளுக்கு அடைக்கப்பட்டன.
சிறு வயதில் இருந்தே டாக்டர் செட் வைத்து விளையாடிய செல்ல மகள், மனம் வாடுவது பொறுக்காது, பால்கி, அவளை தனியார் கல்லூரியில் சேர்த்து விட முனைந்தார். ஆனால் மதுரா தான், “கொஞ்சம் தானே மார்க்ஸ் குறைஞ்சி இருக்கு. இன்னும் ஒரு வருசம் நீட் எக்ஸாமுக்கு படிக்கட்டும். அப்பவும் கிடைக்கலைனா அது பத்தி யோசிக்கலாம்.” என்று அவரின் துடிப்பிற்கு வடிகால் இட்டார்.
மதுராவின் யோசனைப்படி, மித்ரா சேலத்தில் புகழ் வாய்ந்த நீட் கோச்சிங் சென்டரில் சேர்க்கப்பட்டாள். அங்கு பாடங்கள் நடப்பதை விட தேர்வுகள் நடக்கும் நேரமே அதிகமாய் இருந்தன. அதிலும் மாணவர்களை வீட்டில் கூட நிம்மதியாக இருக்க விடாமல், ஆன்லைன் தேர்வுகள் வைத்து அவர்களின் நேரத்தை முழுமையாய் ஆக்கிரமித்தனர்.
தேர்வு முடிவுகளை நேரடியாக பெற்றோர்களின் அலைபேசி எண்ணுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தனர். பால்கி மதிப்பெண் குறையும் போது எல்லாம் மகளிடம் மென்மையாக தான் விசாரிப்பார். ஆனால் மதுராவோ, “பிசிகிஸ்ல ஏன் இவ்ளோ நெகடிவ் மார்க்ஸ். ஒழுங்கா இந்த வர்சம் நீட் கிளியர் செய்யாட்டி உங்க அண்ணா மாதிரி எஞ்சினியரிங் படி. வருசம் அம்பது லட்சம் கட்டி எல்லாம் உன்னை ப்ரைவேட்ல படிக்க வைக்க முடியாது.’’ என்று மகளிடம் பொங்குவார்.
அப்படி மிரட்டினால் ஆவது மகள் கவனம் எடுத்து படிப்பாள் என்பது அந்த தாயின் நம்பிக்கை. ஆனால் அது மித்ராவை மிகவும் வெருட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் மூப்பின் காரணமாக செண்பா இறைவனடி சேர்ந்திருந்தார்.
எப்போது தூக்கி வைத்து கொண்டாடிய தாய் தந்தை அறிவுரை வழங்க, தமையனும் மட்டை பயிற்சியால் ஆட்கொள்ளப்பட, பள்ளியில் உடன் படித்த தோழிகளும் மேற்படிப்பில் காலடி எடுத்து வைத்திருக்க, மித்ரா வாழ்வில் முதன் முறையாக தனிமையை உணர்ந்தாள்.
அந்த நேரம் அவளுடன் நீட் கோச்சிங் சென்டருக்கு வரும் அரவிந்த் அவளுக்கு நண்பன் ஆனான். அவனின் தாய், தந்தை இருவருமே மருத்துவர்கள். கடந்த இரண்டு வருடமாக அவன் நீட் எழுதி கொண்டு இருந்தான்.
இருவரும் தங்கள் அலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டனர். ஆரம்பத்தில் பாடம் குறித்து சந்தேகம் என தொடங்கிய பேச்சு வார்த்தை, மெல்ல மெல்ல நல விசாரிப்புகள், பிடித்த விஷயம் என்று திசை மாறியது.
அவனுடன் பேச்சை வளர்ப்பது ஏனோ மித்துவிற்கு பிடித்து இருந்தது.அவளின் தனிமை துயரை அவன் விலக்குவதாக அவள் உணர்ந்தாள். பிடித்த படங்கள், பாடல் என்றெல்லாம் பகிர்ந்து கொண்டவர்களின் பேச்சு மெல்ல மெல்ல ஆண் பெண்ணின் ஆதி ரகசியங்கள் தேடி பயணிக்க தொடங்கியது.
மகள் இரவு, பகலாக படிக்கிறாள் என்று பெற்றவர்கள் எண்ணி இருக்க, மித்துவோ, மூடிய அறைக்கு பின் அரவிந்தனுடன் சாதா சர்வ காலமும் அலைபேசிக் கொண்டிருந்தாள். அவள் ஒரு நாள் சாட்டில் சோர்வாக இருப்பதாக அவனிடம் தெரிவிக்க, “என்ன ஆச்சு பீரியட்ஸா…’’ என கேட்டு தன் வரம்பு மீறலை செம்மையாக ஆரம்பித்தான் அரவிந்த்.
“ஏய்… என்ன நீ இப்படி பேசுற..’’ என்று மித்ரா அதிர்ச்சியாக, “ஹே… கூல். வீ ஆர் ஃப்யூசர் டாக்டர்ஸ்…’’ என்று அவளை மலை இறக்கினான். தன் அந்தரங்க தகவல்களை ஆண் ஒருவனுடன் முதன் முதலில் பகிர்வது அவளுக்கு சற்றே பயத்தோடு போதையையும் கொடுத்தது.
“இப்போ நீ நிறைய தண்ணி குடிக்கணும். சானிடரி பேட் எல்லாம் சிக்ஸ் அவர்ஸ் ஒன்ஸ் சேஞ் செஞ்சிடு.’’ என்று அவளுக்கு தொடர்ந்து செய்திகள் அனுப்பி அவளின் கூச்சத்தை போக்கினான்.
மித்து மெல்ல மெல்ல அவன் வலையில் விழுந்தான். இப்படியே சில நாட்கள் தொடர, “ஹே…! கண்டினியூவா எக்ஸாமுக்கு படிச்சா ப்ரைன் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகும். அப்போ அப்போ அதை கொஞ்சம் கூல் செஞ்சிட்டு படிச்சா… ஈசியா படிச்சது எல்லாம் ப்ரைன்ல அப்சர்வ் ஆகும்.’’ என அவளுக்கு செய்தி அனுப்பினான்.
“அப்படியா… என்ன செய்யணும்.’’ என மித்து கேட்க, சில நீல வலை தளங்களின் சொடுக்கியை அவளுக்கு அனுப்பி வைத்தவன், “இது ட்ரை செஞ்சி பாரு.’’ என்ற தகவலோடு.
முதலில் அது என்னவென்றே தெரியாத மித்து தன் அலைபேசியில் அந்த வலைதளத்தை திறந்திருந்தாள். ஆனால் அதில் உடையற்ற பெண்களை கண்டதும் வேக வேகமாக அதை மூடி, “பொறுக்கி…! இனி என்கிட்ட பேசாதடா…’’ என்று அவனுக்கு செய்தியை அனுப்பிவிட்டு, அவன் எண்ணை கருப்பினால்.
ஆனால் பாவம் அப்போது மித்ரா அறியவில்லை அந்த மன திடத்தை தன்னால் ஒருவாரம் கூடம் தூக்கி சுமக்க முடியாது என்பதை.