அழகு  29

 அரவிந்த் மற்றும் ரமேஷின் அதிர்ச்சியைப் பார்த்தவர் , “தம்பி … நேத்து அம்மா பேசினது வச்சு தான் இதை சொல்றேன். மற்றபடி எனக்கு எந்த விவரமும் தெரியாது. எந்தங்கச்சியும் ராதிகா அம்மாவும் திருப்பூர்ல ஒன்னாப் படிச்சவங்க , அது மட்டுமல்ல கீதா எங்க உறவுக்காரப் பொண்ணும் தான் , அம்மா இல்லாத பொண்ணுனு அப்பாவும் அண்ணனும் ரொம்ப அன்பா இருப்பாங்க …

இங்க படிச்சு முடிச்சதும் அவங்கப்பா கொடைக்கானல் கூட்டிட்டுப் போய்ட்டாரு.என் மச்சினரும் அப்ப வெளியூர்ல வேலைப் பார்த்தாரு , அப்பாவுக்கு உடம்பு முடியலனு வேலைக்குப் போன இடத்தில …. ..

தம்பி இதுக்கு மேல எனக்குத் தெரியாது…. அது மற்றவங்க சொந்த விஷயம் …. எனக்கு தெரிஞ்சது…. அந்த பொண்ணு ராதிகா பிறக்கிற வரை பித்துப் பிடிச்சது போல இருந்த கீதா இவ பிறந்தப்போ நினைவு திரும்பி அண்ணன் கையில ‘ ராதிகா ‘னு சொல்லிட்டு , என் புருஷன் கிட்டப் போறேன்னு கண்ண மூடிருச்சு.

 என் தங்கச்சி ராதிகாவ கவனிச்சுக்கிறதுக்காகவே கீதா அண்ணன கல்யாணம் பன்னிக்கிட்டா… மற்ற விவரங்கள் அன்னைக்கு நான் தந்த பையில இருக்கலாம். ஆனால் ராதிகாவுக்கு  அவங்கம்மாப்பா பத்தி தெரிஞ்சுக்கிறதில் விருப்பமே இல்லனு என் தங்கச்சி சொல்லுவா. அதனால அவ அந்த பையில உள்ளத பார்த்திருக்க மாட்டாங்கிறது என் அனுமானம் … முடிஞ்சா நீங்க பாருங்க …. எல்லாம் சரியா இருந்தா எல்லோருக்கும் சந்தோஷம் தானே… “

அவர் கூறியதைக் கேட்ட இருவருமே கலவையான உணர்வுகளால் அமைதியாய் இருந்தனர். அரவிந்த் தெளிந்து,

“மாமா… உங்க ஊகம் சரியா இருந்தா எங்களுக்கு அது மிகப் பெரிய சந்தோஷத்தை தரப்போறது உண்மை. கண்டிப்பா நல்ல செய்தியோட உங்கள சந்திக்கிறேன் . எத்தனைப் பெண்களை கடந்து வந்தாலும் ராதிகாவப் பார்த்ததும் ஏன் என் மனசு அவள திரும்ப திரும்ப பார்க்கணும்னு தோணிச்சுனு இப்பதான் புரியுது …. ரொம்ப தேங்க்ஸ் மாமா… ஆனா நானா தெளிவுபடுத்தி எல்லோர்கிட்டயும் சொல்றவரை ப்ளீஸ் நீங்க ராதிகாவுக்குக் கூட தெரியாம பார்த்துக்குங்க ….” என்றவன்  ரமேஷுடன் கிளம்பி விட்டான்.

திருப்பூர் வீட்டிலயே தங்கிக் கொள்வேன் என்றவனை திருமண வேலைகள் பார்க்க வேண்டும் என்றுக் கூறி கோவைக்கு தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். இருவரும் காரில் ஏறியதும் சிறிது நேரம் மெளனமாகவே வந்தனர்.

ரமேஷ் அரவிந்தைப் பார்த்தவன்” மச்சான் எப்பவும் நீயும் சரி நானும் சரி எந்தப் பொண்ணுகிட்டயும் சட்டுனு பேசினதில்லை. நம்மள தேடி வந்து அவங்களா பேசினா பதில் பேசி இருக்கோம். நான் எந்த லேடி ஸ்டாஃப்பையும்  அண்ணானு சொல்லுங்க , நீங்க என் தங்கச்சிப் போலனு ராதிகாவைத்தவிர யாருகிட்டயும் உரிமையா சொன்னதில்லடா… இப்போ … இப்போ .. ஏதோ பந்தம் இருக்கப் போய்தானே கடவுள் என்னை அப்படி சொல்ல வச்சுருக்கார். உன்னையும் பார்க்க வச்சுருக்கார்”

ரமேஷ் மிகுந்த உணர்ச்சிவசத்தில் இருப்பதைப் பார்த்த அரவிந்த் காரை ஓரமாக நிறுத்திவிட்டு , “டேய் மாப்ள கூல் டா… நானே எதிர்ப்பார்க்கல … இப்பப் பாரேன் என் மனைவி உன் தங்கை இல்ல , உன் தங்கை தான் என் மனைவி ” என்று அவன் கரத்தை அழுத்தவும்,

அவனைப் பாய்ந்து வந்து கட்டிக் கொண்ட ரமேஷ் “இது கேட்க … எனக்கு எப்படி இருக்குத் தெரியுமாடா…”

“மாப்ள  இந்த டெக்னிக்க உன் தங்கச்சி யூஸ் பண்ணா நல்லாருக்கும் “

” போடா டேய் ” என்று அவன் தோளில் தட்டி விலகியவன் , ” இது நிஜம்தானேடா “

“நம்புவோம் டா…” இருவரும்  கோவை வர இரவு பத்தாகிவிட்டது.

உள்ளே வந்தவர்கள் ஹாலில் ராதிகாவையும் அனன்யாவையும் எதிர்பார்க்கவில்லை.

தங்கையின் அருகில் வந்த அரவிந்த் “என்ன பாப்பா இன்னும் தூங்காம இருக்கீங்க .. அம்மா … அம்மா நல்லாருக்காங்க தானே… “

“அண்ணா அம்மா நல்லா இருக்காங்க. ஆனா எங்கண்ணி தான் எங்கண்ணன் வந்த பிறகுதான் சாப்பிடுவேன் தூங்குவேன் சொல்லிட்டாங்க அதான் உங்களுக்காக வெய்டிங் … சீக்கிரம் ரெப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம்”

ராதிகாவைப் புன்னகையோடுப் பார்க்க அவள் அப்பொழுதுதான் மிக தீவிரமாக சோஃபாவில் இல்லாத தூசியை தட்டி விட்டுக் கொண்டு இருந்தாள்.

“சரிமா நீ போய் தூங்கு “

” அனுவும் சாப்பிடல” என ராதிகா கூறவும் ரமேஷும் அரவிந்தோடு சேர்த்து அனன்யா முகம் பார்க்க ,

“அதுங்கண்ணா ….அண்ணி சாப்பிடாம நான் மட்டும் எப்படி சாப்பிட அதான் … “

“பாப்பா நீங்க போய் சாப்பிட எடுத்து வைங்க இதோ வந்துடுறோம்… ரமேஷ் வாடா” என்று அவனை அறைக்கு அழைத்தான்.

ராதிகா சென்று விட , அரவிந்தும் மாடியேற, ரமேஷ் அனன்யாவையேப் பார்த்துக் கொண்டு மாடியேறினான்.

“அத்தான் இப்படி மெதுவா போனா நாளைக்குத்தான் கீழவருவீங்க , சீக்கிரம் வாங்க சாப்பிடலாம்…. ” எனவும் திகைத்தவன் வேகமாகச் சென்றுவிட்டான்.

சாப்பிட்டு முடித்து அனைவரும் படுக்கச் செல்ல இருக்கையில் ” ரமேஷ் உன் மொபைலுக்கு பொண்ணு போட்டோவும் , அனுமா உன் மொபைலுக்கு மாப்பிள்ளை போட்டோவும் அனுப்பி இருக்கேன் …ரெண்டு பேரும் பார்த்துட்டு காலையில உங்க முடிவ சொல்லுங்க …. நான் ஏற்பாடு பன்னினா நீங்க ஏத்துக்குவீங்க அப்படிங்கிற நம்பிக்கைல இன்னும் பதினைஞ்சு நாள்ல கல்யாணத்த வச்சுக்கலாம்னு முடிவு பன்னிட்டேன்.”

கேட்ட இருவரும் திகைத்து நிற்க … என்ன அப்படித்தானே … ” என்று கேட்கவும் ,

“ஆன்… ஆமாண்ணா… ஆனா … ஆனா … “

“என்னம்மா என்ன ஆனா ” என்று கேட்கவும் …

“நான் காலையில சொல்றேன்” என்று செல்லப் போனவளின் காதில் , ” ரமேஷ் நீ… எப்படிடா”

“ம்…. ஆன் .. ஆம் ஆமாடா நீ சொன்னா சரிதான் “என்றான்.

பட்டென்று ரமேஷைப் பார்த்தவள் கண்கள் கலங்க திரும்பி மேலே அறைக்குச் சென்று விட்டாள். ரமேஷிற்கும் அவள் கலக்கம் என்னவோ செய்ய … அவனும் மேலே எதுவும் பேசாமல் அறைக்குச் சென்றான்.

அவர்கள் இருவரையும் பார்த்த அரவிந்த் சிரித்துக் கொண்டு இருக்க , அவனருகில் வந்த ராதிகா , “அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம்ங்கிறத ஏன் சொல்ல மாட்டிக்கிறீங்க … அவங்க முகமே சரியில்ல “

“இப்ப நான் போட்டோ அனுப்பியிருக்கேன் பாருங்கனு சொன்னேனே … ரெண்டு பேரும் உடனே போய் பார்ப்பாங்கனு நினைக்கிறியா … நெவர் … ” என்றவன் அவன் மொபைலிலிருந்து அனன்யாவிற்கும் ரமேஷிற்கும் அழைப்பு விடுக்க இரண்டுமே ‘ஸ்விட்ச் ஆப் ‘ என்ற தகவலைத் தான் தந்தது.

ராதிகாவைப் பார்த்து சிரித்தவன்” பார்த்தியா டியர் ரெண்டும் ஃபோனை’ ஸ்விட்ச் ஆப் ‘பன்னிருச்சுங்க … பாரேன் நாளைக்கு காலைல நான் கேட்டா, நீங்க சொன்னா சரிதான்னு சொல்லிருங்க” என்று வாய் விட்டு சிரித்தான்.

” நீங்க சொல்றது , செய்றது ஒன்னுமே புரியல …” என்று சலித்தவளிடம் ,

“இதுவும் காதல் டியர் , நான் உன்னை காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு சொல்றது ஒரு வகைனா… இப்படி.. ஒருத்தரை ஒருத்தர் மனசுல விரும்பிட்டு … ஆனா நாம காதலிக்கிறோமானு தெரியாம காதலிக்கிறாங்க பாரேன் … இதுவும் ஒரு அருமையான காதல் தான்.. ” என்றவனை ,

“ஐயோ பாஸ் நீங்க என்ன சொல்றீங்கனே எனக்குப் புரியல …, அதுலயும் காதல் காதல்னு நீங்க பத்து வாட்டி சொல்றத என்னால கேட்கவே முடியல… நான் தூங்கப் போறேன் …நீங்க அவங்களுக்குள்ள ஏதோ விளையாடிப் பார்க்கறீங்க …. கன்டினியூப் பன்னுங்க ” என்று கிளம்பப் போனவளை , மிகுந்த வலியுடன்

“ஒரு நிமிஷம் டா… உனக்கு புரியும் போது புரியட்டும் … இனிக்காதல்ங்கிற உனக்குப் பிடிக்காத வார்த்தைய உன் முன்னாடி நான் சொல்லல. ஆனால் உன்னை உணர வைப்பேன்டா. “

எப்போதும் தன்னிடம் குறும்பாக பேசும் அவன் குரல் வேதனையைச் சுமந்து பேசுவது போல் இருக்கவும் , அவனருகில் வந்து நின்றவள் , அவன் வேதனையைப் போக்கும் பொருட்டு ..

“ஐயோ அப்படி இல்லைங்க. … இந்தக் காதல் தானே எங்கம்மாவுக்கு பைத்தியக்காரினு பட்டம் கொடுத்து , என்னைய அனாதையா விட்டுட்டுப் போக வச்சது …. ஏன் இப்ப இங்க அத்தை, மாமா மேல வச்ச காதல் தான அவங்க பெத்த பிள்ளை உங்களக் கூட மறக்கடிச்சு வச்சுருக்கு….இப்படிப்பட்ட காதல் எனக்கு பிடிக்கலங்க… அதை தான் சொல்ல வந்தேன் .. ஆனா ஆனா நீங்க என்கிட்ட நடந்துக்கிறதுதான் காதலானு எனக்கு தெரியல ” என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பிக்கவும்,

அது வீட்டின் நடுக்கூடம் என்பதையும் மறந்து அவளை இறுக அணைத்துக் கொண்டான். அழுகை அடங்கியதும் அவளை விடுவித்தவன் ,

 “சரி அந்தக் காதல் உனக்கு வேண்டாம் … ஆனா வேற மொழில சொல்வேன் … பியார் , பிரேமம் , லவ் … ..அப்புறம் கூகிள் சேர்ச் தந்து எல்லா மொழியிலயும் சொல்வேன்…” அவள் அழுகையை நிறுத்திவிட்டு முறைக்க ஆரம்பிக்கவும் ,

“சரி சரி  இப்ப அந்த டாபிக் விட்டுறலாம்…, கூகிள் சர்ச்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது … வேற டாபிக் பேசலாம் … நான் காலையில உன்கிட்ட சொன்ன வேலையை நீ செய்திருக்க மாட்ட தானே”

” என்ன வேலைங்க … இன்னைக்கு அனுக் கூடயும் அத்தைக்கூடயும் பேசிட்டு இருந்ததுல… நீங்க என்ன வேலை சொன்னீங்கனு மறந்திட்டேனுங்க” என்று கேட்டவளிடம் ,

தன் ஷார்ட்ஸ் பாக்கெட்டிலிருந்து ஒரு புத்தம் புதிய போனை எடுத்தவன்” இந்தாங்க மேடம் , டச் போன் லேட்டஸ்ட் மாடல் உங்களுக்காக வாங்கினது, காலைல சொன்ன வேலைய லேப் விட இதுல ஈஸியா பன்னலாம்” என்றுக் குறும்புடன் கூறவும் ,

“ஐயோ எனக்கு உபயோகிக்க தெரியாதுங்களே ..”

“ஹேய் எப்படி எப்படி டச் பன்றதுனு எல்லாரும் படிச்சிட்டா  வாறோம் …. எல்லாம் தானா கத்துக்குறதுதான்…” என்று இரு அர்த்தத்தில் கூறி புன்னகைக்கவும்..,

“சரி நானே கத்துக்கிறேன் … இல்ல அனுகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன் … ஆமா நீங்க இப்ப என்ன சொன்னீங்க” என்றுக் கிளம்பியவளின் பின்னேயேச் சென்றவன்,

“ம்… நேரடியா சொன்னேன் நான் தொலைஞ்சேன்.. ” என்று முனுமுனுத்துக் கொண்டான்.

ராதிகா அனன்யா அறையைத் திறக்க முற்பட அது திறக்கவில்லை என்றதும் .. அரவிந்தைப் பார்க்க ,

“நாம புருஷன் பொண்டாட்டிடா… அண்ணி அண்ணன் ரூமுக்கு போயிருவாங்கிற நினைப்புல அவ லாக் பன்னிட்டா .இதுக்கு முகத்தை இப்படி வச்சுப்பியா.. வா நம்ம ரூம் போகலாம்” என்று நகர்ந்தான் .அவள் நகராமல் அப்படியே நிற்கவும்  ,

“ஓ.. ஸ்வீட்டி நியாபகப்படுத்திட்ட ” என்றவன் அவளை அலேக்காக தூக்கிக் கொண்டு அறைக்குள் வந்தான்.

“இறக்கி விடுங்க , ப்ளீஸ் … ப்ளீஸ்.. நீங்க பன்றது சரியே இல்ல… கைல புதுபோன் கீழ விழுந்துராம… நானே நடந்து வந்துருப்பேன்” என்று திமிறினாள்.