சாரதா, புனே சென்று.. கணவருடன் குடித்தனம் தொடங்கினாள் பெண். திருமணம் முடிந்து ஒருமாதத்தில் சாரதாவிற்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்திருந்தான் கமல்.
சாரதாவிற்கு அத்தனை சுதந்திரம் தந்திருந்தான். ம்.. கமல் அப்படிதான் எண்ணிக் கொண்டான்.. அவள் ஜீன் போடலாம், பொன் தாலியை எப்போதும் அணிந்திருக்க வேண்டியதில்லை.. ஸ்லீவ்லெஸ்.. வெளியே போவது வருவது.. அவள் சம்பாதிப்பதை அவள் செலுவு செய்து கொள்ளலாம்.. வீட்டிற்கு இருவரும் சேர்ந்து ஒருதொகை.. செலவழிப்பது என எல்லாவகையிலும் அவளை சுதந்திரமாக செல்பட அனுமதித்திருப்பதாக உணர்ந்தான் கமல்.
கமல் தனக்கு ஏற்றார் போல சாரதாவை மாற்றினான். சாதம், குழம்பு, ரசம் என செய்வதை மாற்றினான். காலையில் கிரீன் வெஜ்ஜிஸ்.. சூப் ப்ரெட், ஆம்லெட் பிரெஷ் ஜூஸ் எனவும், மதியம் சப்பாத்தி ஏதேனும் ஒரு க்ரேவி. இரவு பாஸ்தா.. நூடுல்ஸ்.. சிக்கன் என மெனு சொன்னான். எல்லாம் அதிகம் வேலை இழுக்காத உணவுகள் என மனையாளிடம் பாராட்டும் வாங்கிக் கொண்டான்.
வேலைக்கு என ஆட்கள் வைக்கவில்லை.. காலையில் தானும் சமையலில் மனையாளுக்கு உதவினான். பாத்திரம் துலக்க உதவினான். துணி உலர்த்தினால் எடுத்து மடித்து வைத்தான் கமல். கமலநாதனுக்கு, இதெல்லாம் பழக்கம் இத்தனை வருடங்களாக என்பதால்.. ஓரளவு வீட்டை மனையாளுடம் சேர்ந்து நிர்வகித்தான்.
ஆனால், திருமணம் முடிந்து இருமாதம் ஆனா நிலையில், வேலை வீடு புது குடித்தனம்.. என எல்லாம் புதிதாக இருந்த சாரதாவின் நிலை மிகவும் மோசமானது.. திணறினாள். ஆனால், கமல் உதவினான். அவள் லேட்டாக எழுந்தால்.. காலையில் உணவை தானே தயாரித்தான். மதியம் அவளுக்கு காய் எல்லாம் நறுக்கி கொடுத்தான்.. இப்படி நிறைய உதவினான். மனையாளை ஒன்றும் சொல்லவில்லை, புரிந்துக் கொண்டான். வார இறுதி நாட்களில் பார்ட்டி நண்பர்கள் என வெளியே சென்றனர்.
நாட்கள் இனிமையாக சென்றது. நான்கு மாதத்தில் சாரதா கருவுற்றாள். ஆனால், வீக்காக இருப்பதாக மருத்துவர்கள் சொல்லினர். எனவே, வேலையை விட வைத்தனர் பெற்றோர். கோவை வந்தாள் பெண். இரு பெரியவர்களும் சாரதாவை பார்த்து அதிர்ந்து போக்கினர். இளைத்து கருத்து என்னமோ போலிருந்தால் பெண். இரு வீட்டு மூத்த பெண்மணிகளும் சாரதாவை தேற்றினார்.
சாரதா, புனே செல்லுவது.. கோவை வருவது என மாதங்கள் கடந்தது. பிரசவம் நெருங்க.. தாய்வீடு கிளம்பினாள் பெண்.
அழகான ஆண் குழந்தை பிறந்தது. தம்பதி இருவரும் சேர்ந்து இனியன் என பெயர் சூட்டினர் மகனுக்கு. அடுத்த ஐந்து மாதம் வரை குழந்தையோடு தாய் வீட்டில் இருந்தாள் சாரதா. என்னமோ சாரதா, கணவனை அதிகம் தேடினாள். கருவுற்றது முதல்.. அதிகமாக கணவனோடு சேர்ந்திருக்கவில்லை. எனவே, பெண்ணின் மனம் கணவனை தேடியது.
கமல் இயல்பாக இருந்தான். அவனுக்கு எந்த வித்யாசமும் தெரியவில்லை போல.. தினமும் அலுவலகம் செல்லும் முன் அழைத்து பேசுவான். மகனை பார்ப்பான்.. ஆனால், இரவில் பெரும்பாலும் தாமதமாக வருவதால் பேசுவதில்லை. மற்றபடி மனையாள் எப்போது அழைத்தாலும் பேசுவான். ஆனால், அது போதவில்லை சாரதாவிற்கு. என்னமோ கணவனின் காதலை அதிகமாக தேடினாள் பெண்.
அதற்கு நேர்மாறாக சாரதாவை இரண்டு வீட்டிலும் தாங்கினார். பிறந்த வீட்டில் பிரசவம் முடிந்து இருந்தாள் சாரதா. தினமும் காயத்ரியும் கௌசல்யாவும் வருவர் தாயையும் சேயையும் பார்ப்பதற்கு.
இன்றும் அப்படிதான்.. இருவரும் வந்தனர். கௌசல்யா நேராக வந்தவர்.. வள்ளி வரவேற்க.. அப்படியே பேசிக் கொண்டே கிட்சென் சென்று தான் கொண்டு வந்திருந்த பூண்டு குழம்பை கொடுத்துவிட்டு, அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
காயத்ரி, நேரே இனியனை பார்க்க தன் அண்ணி இருக்கும் அறைக்கு சென்றாள். நேரம் எட்டு. காயத்ரிக்கு, குழந்தையை கையில் எடுக்க தெரியாது.. அவளின் கையிலும் கொடுக்க பயம் சாரதாவிற்கு.. துறுதுறுவென விழிகள் உருள.. குழந்தையை வாங்க கைகள் துடிக்க பாவை நின்றாள். சாரதாவினால், மறுக்கவும் முடியாதே.. இனியனை கையில் கொடுத்தாள்.
காயத்ரி, இனியனை கையில் ஏந்திக் கொண்டாலும்.. சரியாக கழுத்தில் கை வைத்திருக்கிறோமா என பயம் நிமிடத்தில் வர.. “அண்ணி, பயமா இருக்கு.. மடியில் கொடுங்க” என்றாள்.
சாரதா காயத்ரி அமர்ந்ததும், வாகாக அவளின் மடியில் வைத்தாள் இனியனை. காயத்ரி “என்ன தூங்குறான்.. என் விரலை பிடிச்சிக்கவே மாட்டேங்கிறான்..” என மனதில் பட்டதை எல்லாம் கேள்வியாக கேட்டு.. குழந்தையை வைத்துக் கொண்டு அவனின் கன்னத்தை தொட்டு.. “பாய் எழுந்துக்கடா.. காயத்ரி வந்திருக்கேன்..“ எழுப்பினாள்.
சாரதா ரசனையோடுதான் பார்க்க முடிந்தது காயத்ரியை.. உறங்கும் தன் மகனும் வளர்ந்தால் இப்படிதான் இருப்பானோ என ரசனை வந்தது காயத்ரியின் பேச்சில்.
ம்கூம்.. குழந்தை அசதியாக சோம்பல் முறித்து மீண்டும் உறங்கத் தொடங்கியது.
இப்போது வள்ளியும், கௌசல்யாவும் அந்த அறையின் உள்ளே வந்தனர்.
வள்ளியிடம் காயத்ரி “அத்த வாசனையாக இருக்கான் அத்தை.. என்ன அத்தை பவுடர் போட்டுக்கிறான் இந்த ஸ்வீட்டன்.” என்றாள்.. இனியனை.
இவளின் பேச்சை கேட்டு, வள்ளி.. சாரதா, கௌசல்யா எல்லோரும் சிரித்தனர் சத்தமாக.
அப்போதுதான், அந்த அறையின் வாசலில் குழந்தையை பார்க்க.. வந்தான் பரணி. வண்டியை நிறுத்திவிட்டு.. எதோ அலைந்து திரிந்து வந்தவன் போல.. கையில் எதோ லாப்டாப்போடு.. அந்த அறையின் வாசலில் வந்து நின்றான்.
அந்த வியர்வை வாசம் காற்றில் கலந்து காயத்ரியின் நாசியை தாக்க.. “டேய் என்னடா, ஸ்வீட்டா.. புது ஸ்மெல் வருது. சுச்சா போயிட்டியா இல்ல காக்காவா” என சொல்லிக் கொண்டே, குழந்தையின் நாப்பியை தொட்டு பார்த்தாள் பாவை. இல்லை எனவும், சுற்றிலும் பார்வையை சுழற்ற.. சாரதா தன் தம்பி வந்ததை உணர்ந்து “வா பரணி” என்றாள்.
காயத்ரி விளையாட்டாய்.. பரணியை பார்த்துக் கொண்டே “அதான் ஸ்மெல் வருதா அண்ணி” என்றாள்.
பரணி “வாங்க அத்தை” என்றான். பின் காயத்ரியை பார்த்து புன்னகைத்தான்.
கௌசல்யா, மகள் பேசியதில் “காயத்ரி” என்றார் அதட்டலாக.
பாவைக்கு முகமே வாடி போனது.. அமைதியாகி குழந்தையை பார்த்தப்படி தலை குனிந்துக் கொண்டாள்.
வள்ளி “விடுங்க சம்பந்தி, விளையாட்டா பேசுறா.. விடுங்க, நாங்க யாரும் ஏதும் நினைக்கமாட்டோம். இவனே சில நேரம் சாரதாவை கிண்டல் செய்வான்.. “ என சொல்லினார் சமாதானமாக.
காயத்ரி கீழே குனிந்துக் கொண்டே “ம்.. எப்போதும் சீரியசாவே பேசணுமா அத்தை. முடியாதில்ல” என்றாள் பாவமான குரலில்.
சாரதா ‘எப்படி எல்லாம் கிண்டல் பண்றா இவ’ என தோன்ற.. தம்பியின் முகத்தை பார்த்தாள். பரணி எல்லா விஷயத்திலும் அளவுதான். எதிலும் கலந்து கட்டி நிற்கமாட்டான். தன் எல்லைக்குள் நிற்பான்.. எனவே, இந்த பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை.. தன் எரிச்சலை வெளியே காட்டாமல் நிற்கிறான் என புரிந்தது, தமக்கைக்கு.
அப்படியே அந்த வார்த்தைகளும்.. அவளின் செய்கையும்.. பரணியின் முகத்தில் ஒவ்வாமையை காட்ட.. ஏதும் சொல்லாமல், அக்காவிடம் தலையசைத்து பின்னால் சென்றான் பரணி.
ம்.. பரணி இப்போதெல்லாம் அலுவலகம் செல்லுகிறான்.
அதாவது பரணியின் படிப்பு முடிந்ததும்.. நல்ல கம்பெனியில் கேம்பஸ்சில் வேலை கிடைத்தது. ஆனால், பரணியை வேலைக்கு அனுப்ப தந்தை மறுத்துவிட்டார்.. ‘அலுவலகம் வா’ என சொல்லிவிட்டார். எனவே, வேலைக்கு செல்லவில்லை.. பரணி. அதனாலோ என்னமோ அவனின் முகம்.. கடுகடுவென இருந்தது. அவனுக்கு ஒருவருடம் வேலைக்கு போக வேண்டும்.. பின் MBA படிக்க வேண்டும் என விருப்பம். ஆனால், தன் அலுவலகம் வந்தது.. என்னமோ இந்த நேரத்தில் அவனுக்கு பிடிக்கவில்லை.
பரணி, அலுவலகம் வந்தால், தந்தையோடு அமர்வது கணக்கு பார்ப்பது என இல்லாமல்.. வேலைகளை பழக் தொடங்கினான். அத்தோடு, பலதரப்பட்ட மிஷின்களை இயக்கவும் கற்றுக் கொண்டான். என்னமோ அதுதான் அவனுக்கு பிடித்தது.. க்ரே கலர் யூனிபார்மில், எங்கேனும் பழைய மிஷினின் அருகில் நின்றான் பரணி.. அதனை இயக்குவது.. சரி செய்வது.. எப்படி வேலை செய்கிறது என பார்ப்பது என லபௌர்களோடு நின்றான். அலுவல் பக்கமே வருவதில்லை. ம்.. தந்தை இங்கே என்றால், அவன் தூரத்தில் நின்றான்.
தணிகாசலத்திற்கு, மகன் டிப்டாப்பாக அமர்ந்து மேலாண்மை பார்த்தாலே போதும்.. இவன் எதற்கு இப்படி நிற்க வேண்டும் என உள்ளுக்குள் எண்ணம். ஆனால், நமது அடிப்படையை கற்பதும் நல்லதுதான், அத்தோடு அவனின் கோவம் தீரட்டும் என எண்ணி சமாதானம் ஆனார்.
ஆக, பரணி வேலை வீடு என இருந்தான். அடுத்த வருடம் MBA படித்திட வேண்டும் என மனதில் எண்ணிக் கொண்டிருந்தான். அவனை சற்று இலகுவாக்கியது என்றால் இனியனின் அழுகை சத்தம்தான். அவன் மாலையில் வீடு வரும் போது.. அதை கேட்டால்.. சற்று நேரம் ஹாலில் அமர்ந்து இனியனை கையில் எடுத்துக் கொண்டு விளையாடுவான். இப்போதும் அவனை பார்க்க வந்தான். எப்போதும் இவர்கள் வருவார்கள்தான், ஆனால், அவன் ஒன்பது மணிக்கு மேல்தான் வீடு வருவான். எனவே, காண்பது அரிது. இன்று, பார்த்ததும் காயத்ரி வேறு கிண்டல் செய்யவும் என்னமோ அவளின் மரியாதையில்லா பேச்சு பிடிக்காமல் போனது. அவர்கள் இருக்கட்டும் என வெளியே வந்துவிட்டான்.
இப்போது கௌசல்யா, பேரனை வாங்கிக் கொண்டார் காயத்ரியிடமிருந்து. சாரதாவிடம் எதோ கேட்டு பேச தொடங்கினார்.
காயத்ரி, தன் அன்னை எப்படி குழந்தையை தூக்குகிறார் என பார்த்திருந்தாள்.