மயூராவிற்கு, மனது இப்போதுதான் நிம்மதியானது. கணவன் தன்னிடம் புன்னகை முகமாக வழியனுப்பி வைத்து அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.. ‘இந்த விழா முடித்து, சென்னை வந்ததும்.. எல்லாவற்றையும் பேசிடனும்..’ என எண்ணிக் கொண்டே சென்றாள் சென்னைக்கு.
அடுத்த நான்கு நாட்களும், அவனுக்கு, நத்தையாக நகர்ந்தது. அலுவலகத்தில் தங்குவதில்லை.. குவாரிக்கு என முன்பே ஒரு ஆட்களை வேலைக்கு அமர்த்திவிட்டான். எனவே, மேற்பார்வை மட்டுமே இவன் வேலை ஆனது.
மயூராவிற்கு, என்ன வேலையாக இருந்தாலும்.. கணவனை தனியே விடகூடாது என எண்ணினாள்.. சரியாக கணவனின் உணவு நேரத்திற்கு அழைத்தாள். ’நான் சாப்பிட போறேன்.. நீங்க சாப்பிடுங்க..’ என்பாள். ‘லைவ் லிங்க் அனுப்பியிருக்கேன்.. என் டான்ஸ் பாருங்க..’ என்பாள். ‘என்ன செய்யறீங்க.. நைட் வீடு வந்துட்டீங்களா’ என பேசி விடுவாள்.. இரண்டு வார்த்தை. கபாலியும் அந்த வார்த்தைகளுக்காக காத்திருபான்.. பேசுவான். தான் அழைக்கமாட்டான்.
மறுநாள் மயூராவின் விழா தொடங்கியது. கணவனுக்கு யூடியூப் லிங்க் அனுப்பினாள். கபாலி அன்று கோர்ட்டில் இருந்தான் கேஸ் விஷயமாக. ஆனாலும், இரவில் மனையாளின் நடனத்தை பார்த்துவிட்டு, அவளுக்கு அழைத்து “மயில் தாண்டி நீ” என்றான், காதலாக.
மயூராவிற்கு “ஷ்… வேண்டாம் வேண்டாம் ஏதும் சொல்லாதீங்க.. நான் பர்க்டீஸ்ல இருக்கேன்.. பை” என்றவள் கணவனோடு பேசவே தடுமாறினாள் நேரமில்லாமல், அதன்பிறகு.
அதன்பிறகு, கபாலிக்கு அவளின் நடனத்தை பார்க்க நேரம் அமையவில்லை. வேலை அவனை இழுத்துக் கொண்டது.
அன்று கபாலிக்கு, ஆனந்திடமிருந்து செய்தி வந்தது.. “இல்ல ஜி.. அவன் என்னமோ பணம் தருவது போலில்லை.. பொறுமையாக கேட்டாச்சி, நம்மை டீஸ் பண்றான்” என்றார் போனில்.
கபாலி மிகவும் சீரியசானான் “என்ன பண்ணலாம்” என்றான்.
ஆனந்த் “கேஸ் பையில் செய்திடலாம்” என்றார்.
கபாலி “ஹேய்.. கிட்டத்தட்ட ***” என்றான். அதை தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் சென்றது. கபாலி தன் நிலையில் நின்றான். ஆனந்த் என்னமோ செய்ங்க.. என சொல்லி.. அவன் சொல்லியதை ஏற்பாடு செய்தார்.
மயூரா, விழா முடிந்து.. மறுநாள் மகேஸ்வரியின் சொந்தகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, மதியமாக தன் இருப்பிடம் கிளம்பிவிட்டனர் மாமியாரும் மருமகளும்.
மகேஸ்வரி “மயூ.. நல்லா நடந்ததில்ல.. விழா.. எத்தனை பெரிய மனிதர்களை எல்லாம் பார்த்தோம்.. ப்பா.. நம்ம குரூப் நல்லா செய்துட்டாங்க” என பேசிக் கொண்டே வந்தார்.
மயூரா கேட்டுக் கொண்டே வந்தாள்.. பதில் பேசவில்லை.
வந்துவிட்டாள்.. இரவு பதினோரு மணிக்கு.
கபாலி, வீடு வந்துவிட்டான். தங்களின் அறையில் அவன் இல்லை, அவள் அன்று தன்னை தீண்டி சென்றதிலிருந்தது.. என்னமோ அவளில்லாமல் தங்கள் அறைக்கு செல்ல மனதில்லை அவனுக்கு. அதனால், மற்றொரு அறையில் சோபாவில் அமர்ந்து கண்மூடிக் கொண்டு, யோசனையில் இருந்தான்.
மயூரா, தங்களின் அறைக்கு சென்றாள். அங்கே கணவன் இல்லை எனவும்.. அவன் எப்போதும் இருக்கும் அறைக்கு சென்றாள். கதவை திறந்துக் கொண்டு.. சத்தமில்லாமல் பூனை நடை நடந்தது.. கணவனின் அருகே வந்து நின்றாள்.. இதமான மல்லிகையின் வாசம்.. அவளின் வரவை கபாலிக்கு உணர்ந்தியிருந்தது. அவனின் சிந்தனை தடைப்பட்ட்டிருந்தது.. அதில்.
கபாலி, கண்களை திறக்கும் நேரம்.. அவனின் கண்களை மூடியது வெது வெதுப்பான.. ஈரமான விரல்கள். சட்டென அந்த தீண்டலில்.. அவனின் மனமும் கண்ணும் கசிந்தது.. ‘என்னை அவளை தவிர யார் தீண்டுவர்..’ என, தன்னவளை தேடியவனின் இதழ்கள்.. புன்னகையில் விரிந்தது.
கபாலி “மயூ..” என்றான் கரகரப்பான குரலில் அமைதியாக. அதிர்ச்சி.. ஆனந்தம் என எல்லாவற்றையும் தனக்குள் பொதித்துக் கொண்டு.. இயல்பானக் குரலில் அழைத்தான்.
மயூரா முன்னால் வந்து நின்றாள்.
அழகான கலம்காரி புடவை.. பயணத்தில் சற்று களைந்து இருந்தது.. முன்னுச்சி முடி ஆங்காங்கே பறந்துக் கொண்டிருக்க.. ஆர்வமாகவும் காதலாகவும் தன்னை பார்த்தவளை, இமைக்காமல் பார்த்தான் கபாலி.
மயூரா “நான் வந்தாச்சு..” என்றாள் தன் நெஞ்சோடு கைகளை கட்டிக் கொண்டு.. வெட்கமாக, குழந்தையாக மொழிந்தாள்.
கணவனையே இமைக்காமல் பார்த்தாள். தன்னுடைய நிலையை சொல்லியே ஆகவேண்டும் என இருந்தாள்.. அதற்கானதான் வந்தாள்.. இன்றே. மனதில் வேறு எண்ணமே இல்லை.. கணவன், அவனிடம் தன்னை பற்றி சொல்லிட வேண்டும் என்ற எண்ணம்.. அதுதான் இருந்தது.
‘நான் என்னவனை மதிக்காமல் இல்லை.. அவனுக்காகதான் அண்ணனிடம் பேசினேன்.. நான் எப்படி நெருங்குவது.. எனக்கு தெரியவில்லையே.. என்னை அவனும் மதிக்கவில்லையே.. அதனால், நான் அப்படி இல்லை என கணவனிடம் சொல்லிவிட வேண்டும் எனதான் இந்த நேரத்தில் வந்தாள் பெண். எனவே, வந்த பரபரப்பில்.. கணவனை பார்த்த நிம்மதியில்.. ஆசுவாசமாக அமர்ந்தாள்.
கபாலி “போ.. அந்த ரூமிற்கு, நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்” என எழுந்தான்.
மயூரா “அத்தை தூங்கிட்டாங்க, காலையில் பேசறேன்னு சொன்னாங்க” என்றாள்.
கபாலி சிரித்தான்.. அவளின் பதிலில். அவனுக்கும் சுவாரசியம் கூடியது.. அந்த கண்ணும் முகம் மின்னியதில்.
மயூரா “ஆனா, நான் பேசணும்.. பேசணும்.. டைம் வேஸ்ட் பண்ணமாட்டேன்” என்றாள்.
கபாலி அமைதியாகவே இருந்தான்.. அந்த பரபரப்பை பார்த்துக் கொண்டு.
மயூரா “என்ன.. யோசனை” என்றாள்.
கபாலி “போ.. பிரெஷ்ஷாகி வா..” என்றான்.
மயூரா “ம்கூம்..” என்றாள். பின் “தலையே வலிக்கிறது.. உங்ககிட்ட பேசாமல்.. பேசிட்டுறேன்” என்றாள்.
கணவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.. இமைக்காமல் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள்.. “ஏன் இவ்வளோ அமைதியாக இருக்கீங்க.. என்ன யோசனை.. ஏன் தனியா இருக்கீங்க” என்றாள், இதமான குரலில்…முன்பே அவளின் மொழி.. கொஞ்சல்தான்.. இப்போது இன்னும் கொஞ்சியது.
பதிலே வரவில்லை கபாலியிடமிருந்து.
மயூரா “வரேன் இருங்க” என தங்களின் அறைக்கு சென்றாள். ரெஸ்ட்ரூம் சென்றாள். அரைமணி நேரம் ஆகியது அவள் வெளியே வர.
கபாலியும் தங்களின் அறைக்கு வந்தான். அங்கேயும் அண்ட் சோபாவில் யோசனையோடு அமர்ந்தான். இருந்த இடம் விட்டு எழவில்லை.. அப்படியே இருந்தான்.. ‘ஏதும் அவளிடம் சண்டை போட கூடாது’ என எண்ணிக் கொண்டிருந்தான்.
மயூரா, உடை மாற்றி.. தனக்குள் என்ன பேச வேண்டும் என ஒத்திகை பார்த்துக் கொண்டு, கணவனின் எதிரில் அமர்ந்தாள் ஒரு சேரில். “நான் ஆபீஸ் வந்த போது ஏன் என்கிட்டே எதுக்கு வந்தேன்னு கேட்க்கலை.. உங்ககிட்ட பேசனும்ன்னுதானே தேடி வந்தேன்.. எப்போதும் இ..இப்படி.. இதுவரை.. நான் யாரையும் தேடியதில்லை..” என்றாள்.. இயல்பாக ஆரம்பித்தவளிடம்.. திணறல் மொழி வந்துவிட்டது இப்போது.
கணவன் இரண்டு நிமிடம் பார்த்தான், பின் மனையாள் அமர்ந்திருந்த சேரின் அருகில் வந்து நின்றான், அவளின் தோளில் கை வைத்தான் “என்ன மயூ.. இன்னும் என்ன சொல்லணும்” என்றான், கபாலிக்கு சங்கடமாக இருந்தது.. என்னடா இது நேரம் காலம் தெரியாமல் பிதற்றுகிறாள் எனத்தான் தோன்றியது.. வேலை செய்தாளா.. என்னமோ நான் ஒன்றுதான் முக்கியம் என வந்து நிற்கிறாள் என தோன்றியது.
ஆனாலும், அவளின் பரபரப்பு பிடித்தது. புது மலரென தன்முன் வந்து அமர்ந்துக் கொண்டு.. அதீத நேசத்தில் பிதற்றுபவளை பார்க்க பார்க்க.. இளகியது அவனின் மனம்.. தளர்ந்தான்.. தனக்காக இன்னொரு உயிர்.. தனக்கான இன்னொரு நிழல்.. தனக்கானவள் என பேரன்பு எழுந்தது அவனுள்.
கபாலி அவளின் அருகில் குனிந்து “சரி.. தெரியலை, அப்படி கேட்கணும்ன்னு தோனலை.. அதான் கேட்கலை. டா.. அப்போது. சொல்லு.. இப்போ” என்றான் உண்மையாக.
மயூரா, கணவனின் மறுமொழியில்.. தன்னை இப்போதுதான் உணர்கிறான் என தெளிந்தாள். கண்கலங்க அவனை திரும்பி பார்த்தவள் “போங்க, குளிச்சிட்டு வாங்க.. ஆபீசிலிருந்து வந்து அப்படியே இருக்கீங்க.. என்னால் பேச முடியலை.. ரொம்ப ரப்ஃபா இருக்கீங்க” என்றாள், எதோ போலானக் குரலில்..
கபாலி, காதலில் நிரம்பி.. அவளின் கண் பார்த்து நின்றுக் கொண்டிருக்க.. மனையாளின் வார்த்தை, அடக்க முடியாத சிரிப்பை தர, வெடித்து சிரித்தான் அவளவன். இறுக்கம் தளர்ந்து.. தன் உணர்வுகள் வடிய.. கண்களில் நீர் கசிய.. அழகாக சிரித்துக் கொண்டிருந்தான்.
மயூரா ஆசையாக பார்த்தவள்.. தன்னவனை.. “இல்ல, நான் இன்னும் பேச ஆரம்பிக்கலை” என்றாள்.
கபாலி, அவளை எழுப்பி தனக்கு எதிரே நிறுத்தினான் “நீ இப்படி எல்லாம் ஆசையாக பார்த்தால், நான் உன்னை கட்டி பிடிப்பேன்.. அப்புறம் நீ என்னை தட்டி விடுவ.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. உ..ன்னை அன்னிக்கு, அப்படி கேட்டது.. என் தப்புதான். சாரி” என்றான், அவள் தன்னிடம் பயம் கொள்ளுகிறாள் பேசுவதற்கு என எண்ணி, விளக்கினான்.
மயூரா “நான் அண்ணன்கிட்ட கூட உங்களுக்காகதான் பேசினேன்” என்றாள்.
கபாலி அவள் மிகவும் சீரியசாக பேசுகிறாள் என உணர்ந்தவன்.. பெருமூச்சு விட்டான். “இரு குளிச்சிட்டு வரேன்” என்றான். இருவருக்கும் தங்களை தாங்களே விளக்கி கொள்ள எண்ணினர். கபாலிக்கும் அவளின் அண்ணின் பேச்சு பிடிக்கவில்லை..மீண்டும் அதேவா ஈண் தோன்ற குளிக்க சென்றான்.
மயூராவிற்கு எதோ தன்னால் இன்னமும் பேச முடியவில்லை கணவனிடம்.. என உணர்ந்தாள். எப்படி தொடங்குவது என அமர்ந்திருந்தாள்.
மயூரா, என்ன யோசித்தும்.. ப்லொவ்வில் வந்தால் உண்டு.. என எண்ணிக் கொண்டு எழுந்தாள்.. தங்கள் அறையின் வாசலில் இருந்த இரண்டு பெட்டிகளையும் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். சத்தம் செய்யாமல் ட்ராலி என்பதால் நகர்த்திக் கொண்டு சென்றாள்.
கபாலி குளித்து, மடியாக வெளியே வந்தான் டவலோடு. மனையாள் பெட்டிகளை நகர்த்தி சென்றதை.. பார்த்தவன், அவளின் பின்னோடு வந்து.. அதை உள்ளே வைத்து.. மனையாள் உள்ளே வந்ததும் கதவை சாற்றி தாழிட்டான்.
மயூரா, புன்னகைத்தபடியே கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
மயூரா “இல்ல, நான் குழப்பலை.. இருங்க சொல்லி முடிச்சிடுறேன்” என்றாள்.
கபாலி “என்ன ஆத்திசூடியா” என்றான் புன்னகை முகமாக.
மயூரா, கணவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தாள்.. “கல்யாணத்திற்கு முன்.. நான் இவ்வளவு பயந்ததில்ல.. இ..இந்த கல்யாணம்.. வாழ்க்கை.. என. ஆனால்.. நம்ம” என அவள் கண்கலங்கி சொல்லித் தொடங்கினாள்
மயூராவின் கண்கள் தன்போல கசிந்தது.. அவனின் வெற்று மார்ப்பில்.. சூடான கண்ணீர் இறங்க.. கபாலி “அழாதடி.. எனக்கு ஒருமாதிரி இருக்கு” என்றான் கரகப்பான குரலில்.
மயூரா “என்னமோ தப்பாகிடுச்சில்ல..” என்றாள்
கபாலி, தன்னவளை.. தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தி “அதெல்லாம் ஒண்ணுமில்ல. எல்லாம் சரியாதான் இருக்கு. என்ன இப்போ.. நம்ம கொஞ்சமா சண்டை போட்டுட்டோம்.. நாம என்ன லவ் மேரேஜ்ஜா?.. நமக்கு இப்போது ஒரு பாத்(path) கிடைச்சிருக்கு. ரெண்டுபேரும் தினமும் கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணாலே போதும்ன்னு தோன்றுது.” என்றான்.
மயூரா “நான் மேரேஜ் இவ்வளோ கஷ்ட்டமாக இருக்கும்ன்னு நினைக்கலை.. எனக்கு, ப்ரோக்ராம் ஷெட்டியூல் எல்லாம், இதுவரை மேனேஜர் பார்ப்பார். மேனேஜர் அண்ணன்கிட்ட சொல்லிடுவார்.. அண்ணன் எங்க ஸ்டே.. யார் வரணும்ன்னு எல்லாம் ஏற்பாடு செய்திடுவார். எனக்கு ப்ராக்டீஸ் பண்றது.. ப்ரோக்ராம் நல்லா பண்றது இதுதான் தெரியும். அதனால், யார்கிட்டயும் நான் சொன்னதில்ல.. அதான், இப்போதும் அப்படியே இருந்துட்டேன்.. சாரி.” என்றாள்.
கபாலிக்கு, வசீகரனை பற்றி, அவள் பேசியதும்.. கொஞ்சம் கோவம் வரத்தான் செய்தது, ஆனால் அவ்வளவு பொறுப்பாக.. தான் இருப்போம் என தோன்றத்தால், மனையாளின் அந்த பேச்சை பொறுத்துக் கொண்டான் ‘டேய்.. நல்ல நேரத்தில் ஏதாவது பேசிடாத..’ என தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக நின்றான்.
மயூரா அமர்ந்தாள் கட்டிலில்.
கபாலி “ம்.. சரி மயூ.. நான் அன்னிக்கு கேட்டதால.. இப்போ வரைக்கும் உன் முகமே சரியாக இல்லை. நான் பேசினது அவ்வளோ பாதிச்சிடுச்சா.. சாரி. பங்க்ஷன் எப்படி நடந்தது.” என்றான்.
மயூரா தலையசைத்தாள்.
கபாலி “நான்.. எப்போதும் போல.. எதோ அவசரத்தில் கேட்டுட்டேன்.. டென்ஷன் ஆகாத.. நீ எப்போதும் போல, உன் வேலையை பாரு, நான் ஏதும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.” என்றான் அருகில் அமர்ந்து. தன்னால் அவள் வேலை பாதிக்க கூடாது என எண்ணம்.
கணவனின் இரும்பான தேகம் சிலிர்த்தது.. அந்த எஃக்கான மனமும்.. அந்த முத்தத்தில் இளகியது. ஒருமாதிரி ஸ்தம்பித்தான் கபாலி.. இதுவரை பேசிக் கொண்டிருந்தவன்.. தன்னவளின் ஒரு முத்தத்தில்.. உருகுநிலைக்கு சென்றான், கணவன். சடசடவென மழையாய் மீண்டும் அவனின் கண்களில் தன் இதழ் பதித்தாள் மனையாள்.. வெதுவெதுப்பான அவளின் இதழொற்றல்.. தன் காயங்களை எல்லாம் கழுவி சென்றதாக உணர்ந்தான்.. கணவன். கன்னம் அவனின் தாடிகாடு என இதழ் பதித்தாள் பெண்.. முத்தத்தால் சுத்தம் செய்தாள். கபாலிக்கு, என்னமோ தன்னை.. முழுவதுமாக வாரி சுருட்டிக் கொண்டதாக தோன்றியது.. என்னுடைய குறைகளை மறந்து அவளோடு என்னை இணைத்துக் கொண்டாளா.. என தனக்குள் எண்ணிக் கொண்டவன்.. அமர்ந்த்திருந்த படியே.. அவளை தனக்குள் இழுத்துக் கொண்டு.. சுருண்டான் மெத்தையில்.
மயூரா “ஹேய்.. கபி.. கபில்.. நா” என அவள் ஆரம்பிக்கவோ முடிக்கவோ.. நேரம் கொடுக்கவில்லை கணவன்.. நீண்ட நாளின் தன் காயங்களை அவள் முத்தம் ஆற்றியதால்.. தனக்காக என அவளின் முத்தங்களை திருட தொடங்கினான்.. தன்னவள் இதழ்களில் கபாலி.
இருவருக்கும் தடுமாற்றம்தான்.. ஒருவருக்கு ஒருவர்.. தங்களை தாங்களே.. விளக்கிக் கொள்ள எண்ணினர்.. அது பேசி.. புரிந்திட முடியாது என தெரிய.. அடுத்த கட்டத்திலான முத்த பாஷையை நாடினர்.. அத்தோடு அவர்களின் தேடலும் விளக்கமும் நிற்க போவதில்லை.. இது வளரும் மலரும்.. தினம் தினம்.. அதன் தொடக்கம் தான் இன்று.. ஆக இந்த நாள் இருவருக்கும் மறக்க முடியாத நாளாக அமைந்தது.