வில் 8

மனிதன் மதத்தை தோற்றுவித்த நாள் முதல்

கடவுள் மௌனியாகிப் போயிருக்கலாம்.

மதுரையின் அரசனூர் கிரமாத்தில் நுழைந்த நொடி முதல் வள்ளி தன் பணியைத் தொடங்கிவிட்டாள். அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல, அந்த இளைஞர் குழு விருப்பப்பட்ட போதும், வள்ளி தங்கள் பயணத்தை தாங்களே பார்த்துக் கொள்வதாய் சொல்லி அவர்களை தவிர்த்து இருந்தாள்

மதுரை பேருந்து நிலையத்தில் இருந்து, ஒரு சிற்றுந்து பிடித்து அவர்கள் அரசனூர் மண்ணில் கால் வைத்த பொழுது, சூரியன் கிழக்கில் உதித்திருந்தது.

இருபுறமும் பசுமை கண்ணனுக்கு விருந்தாக, நடுவில் நீண்டிருந்த தார்சாலை அவர்கள் அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க உதவியது

ஊரின் எல்லையில் பேருந்து நின்றதும், இவர்கள் சுமையை தூக்கிக் கொண்டு நடந்து வருவதைக் கண்ட  ஊர் மக்கள் சிலர், “யார் வீட்டுக்கு விருந்தாடி வந்து இருக்கீகப்பா…? பொட்டியை நாங்க கொண்டு வந்து தரோம் தாங்க…!’’ என்று அன்புடன் கேட்டனர்

இன்னும் சிலரோ தங்கள் வாகனத்தை நிறுத்தி, “ஊருக்கு புதுசா இருக்கீகளே…? யார் வீட்டுக்கு போகணும். சொலுங்க கொண்டு போய் இறக்கி விட்டுட்டுப் போறோம்.’’ என்று தாங்களாகவே உதவ முன் வந்தனர்

ஜேம்ஸ் மூச்சு வாங்கிக் கொண்டு பயணப் பொதிகளை சுமக்க முடியாமல் சுமந்து செல்வதை உணர்ந்தவள், “ஐயா எங்க பேக் எல்லாம் மட்டும் ஊர் பஞ்சாயத்து தலைவர் வீட்ல கொண்டுப் போய்  வச்சிடுறீங்களா..? நாங்க மெதுவா நடந்து வந்துகிறோம்.’’ 

அவள் அப்படி சொன்னதும், “.. தாராளமா கொண்டு வச்சிடுறேன் தாயி. ஆனா பெரியவர் வீட்டுக்கு நீங்க மூணு கல் தொலைவு நடக்கணும்களே….?’’ அவர் கேள்வியாய் நிறுத்தவும்

அது ஒன்னும் பிரச்சனை இல்லை. நாங்க மெதுவா ஊரை சுத்திப் பாத்தபடி நடந்துருவோம்.’’ அவள் அப்படி பதில் சொல்லியதும், ஜேம்ஸ் தன் பையில் இருந்த ஒரு புகைப்படக் கருவியை மட்டும் எடுத்துக் கொண்டு தன் மீத பைகளை எல்லாம் அவர் வசம் ஒப்புவித்தான்

வள்ளியும் தன் சிறிய பயணப் பொதியை அவரிடம் கொடுத்துவிட்டு, முதல் முறை சிறக்கடிக்க முயலும் சிட்டுக் குருவியின் உற்சாகத்தோடு சற்றே பனி சூழ்ந்திருந்த அக்கிராமத்தின் அதிகாலைத் தெருக்களில் நடக்க தொடங்கினாள்

வழக்கமாய் நடப்பதற்கு சற்றே முகம் சுளிக்கும் ஜேம்ஸ் கூட அங்கிருந்த சூழலில் தன்னை மறந்து வள்ளியின் உற்சாக நடைக்கு ஈடு கொடுத்தபடி நடந்துக் கொண்டிருந்தான்

கொஞ்ச தூரம் நடந்ததும் வழியில் தென்பட்ட ஒரு தேநீர் கடையில் சிறுவர்கள் சிலர் முதியவர்களுக்கு உரத்த குரலில் செய்தித்தாள் வாசித்து காண்பித்துக் கொண்டிருக்க, அவர்கள் மிகக் கவனமாய் அந்த செய்தியை உள்வாங்கிக் கொண்டிருந்தது அவர்கள் முகத்தில் வெளிப்பட்ட பாவத்தில் தெரிந்தது

அவர்களை பார்த்துக் கொண்டே தேநீர் கடையை நெருங்கியவள், “ரெண்டு டீ ஒன்னு ஸ்ட்ராங்கா..’’ என சொல்ல, அந்த தேநீர் கடைக்காரரோ

ஏந்தாயி தூரம் தொலைவு பயணம் செஞ்சி வந்த களைப்பு முகத்துல தெரியுது. தெம்பா ஒரு சத்துமா கஞ்சி போட்டு தாரேன் குடிக்கிறீகளா..?’’ 

அவர் அப்படிக் கேட்டதும், முகத்தில் புன்னகை மலர, “டீக் கடையில சத்துமாக் கஞ்சியா..?’’ என்று அவள் ஆச்சர்யத்தை முகத்தில் தேக்கி வினவினாள்

பின்ன எங்க கடையில பதினஞ்சி வயசுக்கு குறைவான குழந்தைகளுக்கு நாங்க டீயை விக்கக் கூடாது தாயி. சின்னவர் உத்தரவு. பால் சேக்குற டி, காபி எல்லாம் உடம்புக்கு நல்லது இல்லையாமே.. ஹும் நமக்கு என்ன தெரியுது. முப்பது வருசமா இந்த தொழில்ல தான் இருக்கேன். இப்போ நாலு வருசமாத்தேன் இந்த சத்துமாக் கஞ்சி விக்குறேன். முன்ன விட தொழில் நல்லா தான் தாயி போகுது.’’  

அவர் பதிலில் வள்ளியின் முகத்தில் மேலும் புன்னகை விரிய, “ஓகேஉங்க சத்துமாக் கஞ்சியையே கொடுங்க தாத்தாஎப்படி இருக்குன்னு பாப்போம்..’’ என்று சொல்லிவிட

இரண்டு பெரிய கண்ணாடி தம்ளர்களில், ஆரியக் கூலோடு, வெல்லம், இஞ்சி, ஏலக்காய் மற்றும் தேங்காய்ப் பூக் கலந்து அவர் கொடுத்த பானம் அதிகாலைப் பசிக்கு அமிர்தமாய் இருந்தது

ஜேம்ஸ் சற்றும் தயங்காமல், “ஐயா இன்னொரு டம்ளர் கொடுங்க..’’ என கேட்டு வாங்கி தன் உணவுத் தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள, வள்ளி அவர்கள் அருந்திய பானத்திற்கு பணம் கொடுத்து முடித்ததும், ஊர் தலைவர் வீட்டிற்கு வழியைக் கேட்டுக் கொண்டு இருவரும் நடக்க தொடங்கினர்

செல்லும் வழியில் அவர்கள் ஒரு மேல் நிலைப் பள்ளியை கடக்க வேண்டி வர, அங்கே மாணவ மாணவிகள், கராத்தேவோடு, சிலம்பம் சுற்றவும் பழகிக் கொண்டு இருந்தனர். ஜேம்ஸ் அந்தக் காட்சிகளை நிழற்படமாக்க, வள்ளி அங்கிருந்த சூழலை ரசித்தபடி மேலும் நடக்க தொடங்கினாள்

அதோடு அங்கிருந்த தெருக்களின் பெயர்களை அழித்து ஏதோ அடையாள எண்களை பதித்து இருந்தனர். வள்ளி அழிக்கப்பட்ட எழுத்துகளை முயன்று படிக்க, அது ஜாதிகளை குறிக்கும் சொல் என உணர்ந்த நொடி அவள் முகம் பெருமிதத்தில் மலர்ந்து

அமேசிங் வொர்க்..’’ என அவள் வாய் விட்டு சொல்ல, அவள் எதை சொல்கிறாள் எனப் புரியாவிட்டாலும், ஜேம்ஸ் அந்தத் தெருக்களையும் தன் புகைப்படக் கருவியில் பதித்துக் கொண்டான்

மேலும் சில தொலைவு அவர்கள், நடக்க அங்க அவர்கள் கண்ட காட்சியில் இருவரும் அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து நின்றனர்

பரந்து விரிந்த ஏரி ஒன்று, அவர்கள் காட்சிக்கு விருந்தாகியது. அது சாதாரண ஏரியாக இல்லாமல், முற்றிலும் கம்பிவலைகள் கொண்டு தடுக்கப்பட்டு, மரக் காவலர்கள் புடை சூழ கம்பீரமாய் காட்சி அளித்தது

எங்கள் வயது நான்காண்டுகள் தான் இருக்கும் என அங்கிருந்த மரங்கள் கட்டியம் கூற, ஏரியின் நுழை வாயிலில்

மாரி என்றால் மழை….

மழையின் வீடு இந்த ஏரி..

தயவு செய்து அசுத்தம் செய்யாதீர்கள்..” 

என்ற பலகையோடு…. 

நடைபயிற்சி நேரம் என்று காலை இரண்டு மணி நேரமும், மாலை இரண்டு மணி நேரமும் குறித்திருந்தனர். மற்ற நேரங்களில் ஏரியின் நீர்ப் பரப்பை கம்பி வேலிக்கு அப்பால் இருந்து மட்டுமே தரிசிக்க முடியும் என்பதை வள்ளி உணர்ந்துக் கொண்டாள்

ஏரியின் உள்ளேயும் வெளியேயும், கல் மேடைகள் அமைக்கப்பட்டு இருக்க, வீசி சென்ற காற்று ஏரி நீரில் தோற்றுவித்த அலைகளை அந்தக் கல் மேடையில் அமர்ந்து ரசிக்க தொடங்க, ஜேம்ஸ் இம்முறை லயித்திருந்த வள்ளியோடு ஏரியை புகைப்படமெடுக்கத் தொடங்கினான்

அங்கு சற்று நேரம் கழித்த பின் மீண்டும் அவர்கள் நடக்க தொடங்கும் போது காற்றில் சுழன்ற பெரிய பெரிய காற்றாலைகள் அவர்களை வரவேற்றது

சுய மின் உற்பத்தி திட்டம் என்பதை உணர்ந்தவள், உதட்டில் மலர்ந்த முறுவல் மறையாமல் அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தபடி நடந்தாள்

மூன்று மைல் தூரம் நடந்த களைப்பு சற்றும் தெரியாமல், அவர்கள் ஊர்த் தலைவர் வீட்டை அடையும் பொழுது, வீட்டின் முற்றத்தில், நெல், மிளகாய் வகைகள் காய்ந்துக் கொண்டிருக்க, மர நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் அங்கு சுற்றி திரிந்துக் கொண்டிருந்த புறாக்களுக்கு தானியத்தை வீசிக் கொண்டிருந்தார்

இவர்களின் வரவை உணர்ந்தவர், நிமிர்ந்துப் பார்க்க, வள்ளியும், ஜேம்சும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்

மலர்ந்த முகத்துடன் அவர், “அடடேவாங்க வாங்க…. பயலுக போன வாரமே சொல்லிட்டு கிடந்தாய்ங்க. எங்க ஊரைப் பத்தி எழுதப் போறீகளாம்ல…! ரொம்ப சந்தோசம்…! நான் ஒரு கூறு கெட்டக் கிழவன், வந்தவீங்கள நிக்க வச்சி பேசிக்கிட்டுதிண்ணையில உக்காருங்கப்பா. தனம் தனக்கொடி..’’ அவர் உள்நோக்கி குரல் கொடுக்க, முகத்தில் காருண்யம் தாங்கிய முதிய பெண்மணி ஒருவர் வெளியே வந்தார்

இவர்கள் அவரிடமும் அறிமுகம் செய்துக் கொள்ள,“சீனு உங்க பையை எல்லாம் விடிகாத்தாலையே கொண்டு வந்து கொடுத்திட்டு போனான். நீங்க ஏன் இம்புட்டு தாமதமா வந்து இருக்கீக. சரி சரி ஜோலி எல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சூடா இட்லியும், ஆட்டுக் கால் குழம்பும் தயாரா இருக்கு.வாங்க குளிச்சிட்டு சாப்பிட்டு பைய உக்காந்து ஐயாவோட பேசுவீகளாம். அவுக பேச ஆரம்பிச்சா பொழுதையே மறந்துடுவாக….’’ என்றபடி அவர்களை வீட்டிற்குள் வரவேற்க, ஆட்டுக் கால் குழம்பு என்ற ஒற்றை வார்த்தையில் ஜேம்ஸ் சொடுக்கிவிட்டவன் போல கூடம் நோக்கி நடந்தான்

வள்ளி சற்றே தயங்கி நிற்க, “உள்ள வா தாயி..’’ என்று தனம் அவள் கைப்பிடித்து உள்ளே அழைத்து சென்றார்

இருவருக்கும் தனித் தனியாய் அறைகள் ஒதுக்கப்பட்டு இருக்க, வீட்டின் கொல்லைப் புறத்தில் இருந்த பொதுவான குளியல் அறையில் ஒருவர் பின் ஒருவராய் குளித்துவிட்டு தயாராகி வந்ததும், தலை வாழை இலையில் தனம் உணவை பறிமாறினார்

ஜேம்ஸ் வந்ததே உண்பதற்காக என்பதைப் போல கொஞ்சமும் லச்சையின்றி வெளுத்து வாங்க, வள்ளிக்குத் தான் சங்கடமாய் போயிற்று. அவளின் கூச்சத்தை உணர்ந்தார்ப் போன்று தனம் அவளுக்கு பார்த்துப் பார்த்து பரிமாறினார்

சாப்பிட்ட வேகத்தில் ஜேம்சிற்கு புரை ஏறிக் கொள்ள, அவன் தலையில் வாஞ்சையாய் தட்டியவர், “பாத்து சாப்பிடுங்க தம்பிபைய…’’ என்று கனிவுடன் கூற, இம்முறை வள்ளி அவனை வெளிப்படையாய் முறைத்தாள்

நீ என்ன வேண்டுமானாலும் முறைத்துக் கொள்..’’ என்பதைப் போல அவளை ஒரு பார்வை பார்த்தவன், இலையில் மீதம் இருந்த இட்லியை ஒரே கவளத்தில் வாயிற்கு அனுப்பிவிட்டு, உணவு அடைத்த வாயோடு

ட்லி…’’ எனக் கேட்க, தனம் அவன் இலையை உணவால் நிரப்பத் தொடங்கினார். ஒருவழியாய் இருவரும் உண்டு முடிக்க, கை கழுவி விட்டு வெளியே வந்த ஜேம்ஸ், பெரிய ஏப்பம் ஒன்றை வெளியேற்றி விட்டு

மேம்…. சூப்பர் சாப்பாடுபேசாம.. கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு…. அப்புறமா நம்ம வேலையை தொடங்குவோமா..’’ எனக் கேட்டான்

அவனைக் கொலை வெறியோடு பார்த்தவள், “ஜேம்ஸ் எப்படியும் மத்தியானம் பொறிச்ச கோழி வறுத்த மீன் எல்லாம் போடுவாங்கஅதையும் சாப்பிட்டுட்டு…. மொத்தமா சாயங்காலமா நம்ம வேலையை தொடங்கலாமா..?’’ எனக் கேட்க

அவள் குரலில் தேங்கி இருந்த எரிச்சலை உணராதவன், “ஐயோசூப்பர் ஐடியா மேடம்…. கலக்குறீங்க போங்க…’’ என சொல்லிக் கொண்டே, தன் அறை நோக்கி திரும்ப

ஜேம்ஸ்போங்க போய் நல்லா தூங்குங்க. அப்படியே உங்க மூட்டை முடிச்சையும் கட்டிடுங்க.. நான் இப்பவே எடிட்டர் சாருக்கு போன் பண்ணி எனக்கு வேற நல்ல கேமரா மேனா பாத்து அனுப்பி வையுங்கன்னு கேக்குறேன்.’’ என சொல்லி தன் அலைபேசியை கையில் எடுக்க

மேம்…’’ என்று குரலில் சோக கீதம் வாசித்தவன், மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசாமல், தன்னுடைய அறைக்கு சென்று தன் புகைப்படக் கருவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்

அதுஎன்று அவனை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் வெளி வாசலுக்கு வர, இம்முறை அம்முதியவரை அங்க காணவில்லை

வெளியே முற்றத்தில் இருந்த நெல்லை மண் பானைகளில் அள்ளிக் கொண்டிருந்த தனம், “அவரு மச்சுல இருப்பாரு போய்ப் பாருங்க..’’ என சொல்ல, ஜேம்ஸ் அவர் பேசிய வட்டார வழக்கு புரியாமல்

என்ன மேம் நம்மளை மச்சுக்கு போக சொல்றாங்கமச்சுனா இந்த ஊர் சினிமா தியேட்டரா இருக்குமோ….? மேம் மேம்நான் இன்னும் பாகுபலி 2 பாக்கலை மேம். வாங்க மேம் சீக்கிரம் போலாம்..’’ என அவளிடம் பேச்சை வளர்க்க

முயன்று கோபத்தை அடக்கியவள், “ஜேம்ஸ் மச்சுன்னா மாடின்னு அர்த்தம். தயவு செஞ்சி நாம இங்க இருந்து போற வரைக்கும் இவங்க பேசுற ஸ்லங்க்கு எல்லாம் மீனிங் சொல்லிட்டு இருக்காதீங்க…. என்னால முடியல…. இருபத்தி மூணு வயசுல பி.பி வந்துடும் போலவாங்க..’’ என்றவள் கூடத்தின் வெளியே நீண்டிருந்த மாடிப் படிகள் நோக்கி நடந்தாள்

இனி ஒரு முறை வாயைத் திறந்தால் வள்ளி வெடித்து விடக் கூடிய அபாயம் இருந்ததை உணர்ந்தவன், ஒன்றும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தான்

இவர்கள் சென்று அடைந்த மாடியறை கீழே இருந்த மொத்தக் கூடத்தையும் உள்வாங்கி விசாந்திரமாய் இருந்தது. அறையின் எல்லா திசைகளிலும் மர அலமாரிகள் இருக்க, ஒரு மாவட்ட நூலகம் அமைக்கும் அளவிற்கு அங்கு நூல்கள் வீற்றிருந்தன

அதோடு எல்லா வயதிலும் மாணவர்கள் கையில் ஆளுக்கு ஒரு புத்தகத்தோடு அங்கிருந்த நீண்ட இருக்கைகளில் அமர்ந்திருக்க

பெரியவரை சுற்றி மிகச் சிறியக் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் வயது மிஞ்சி மிஞ்சிப் போனால் மூன்றில் இருந்து ஆறுக்குள் இருக்க வேண்டும்

நடுவில் ஏதோ ஒரு வண்ண புத்தகத்தை விரித்து வைத்து அமர்ந்திருந்தவர், அவர்களுக்கு கதை சொல்லியாய் கையை விரித்து, முகத்தைக் கோணி, கண்ணை சுருக்கி எதையோ அழகாய் விவரித்துக் கொண்டிருக்க, அவர் சொல்லும் கதைக்கு குழந்தைகள் கை தட்டி ஆர்பரித்துக் கொண்டிருந்தனர். அந்தக் காட்சியே ஏதோ ஒர்க் கவிதைப் போல இருந்தது

அவர்களை நெருங்கியவள், யாரையும் கலைக்க மனமின்றி முழங்காலிட்டு அந்த சிறுவர்களோடு சிறுமியாய் தானும் சென்று அமர்ந்துக் கொள்ள, ஜேம்ஸ் தன் வழக்கமான பணியைத் தொடங்கினான்

மாடி அறையின் சாளரத்தின் வழியே, கதை கேட்டுக் கொண்டிருத்த கவிதைப் பெண்ணை ரசித்துக் கொண்டிருந்தான் கள்வன் ஒருவன்

உனக்கென வலை விரித்து காத்திருக்கிறேன்..

உன்னை வீழ்த்துவதற்கில்லையடி…..

உன்னிடம் வீழ்ந்துவிட

வில் நாண் ஏறும்.