மனங்களை மதிக்காத
மதம்.,
உணர்வுகளை கொன்று
போடும் ஜாதி.,
காதலில் மட்டும்
இரண்டும் மறித்து
போகும்
இல்லை மறித்து
போக வைக்கும்,
காரில் செல்லும் போதே “எங்கே போறோம்., என்ன ஆச்சு பிரணவ்”., என்ற கேட்டாள்.
அவன் நண்பன் இப்போது கார் ஓட்ட பிரணவ் அருகில் அமர்ந்திருந்தான்.,
அப்போது தான் பிரணவ் அவளை பார்த்து லேசாக திரும்பிய படி “நாளைக்கு நம்ம கல்யாணம்”., என்று சொன்னான்.
அதிர்வோடு அவனைப் பார்த்தவளிடம்., “உண்மையா தான் சொல்றேன்., எங்க வீட்ல ரொம்ப அவசரப் படுறாங்க., உங்க வீட்டில ஒரு பக்கம் அவசரப் படுறாங்க., அது தான் யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்”., என்று சொன்னான்.
“எப்படி ரெடி பண்ணுனீங்க”., என்று கேட்டாள்.
“அதெல்லாம் இப்ப சாதாரணம் தான் போல., எல்லா ஆபீஸ்லையும் இருக்கிற லஞ்சம் எக்ஸட்ரா எக்ஸ்ஸட்ரா இதுதான்”. என்றான்.
“அப்படி எல்லாம் பண்ண முடியுமா”., என்று கேட்டாள் நீதா.,
“பணம் பாதாளம் வரை பாயும் ன்னு., சும்மாவா சொன்னாங்க., அப்படித்தான் பாஞ்சி இருக்கு., எல்லாம் ரெடி பண்ணியாச்சு., நாளைக்கு காலைல பத்து மணிக்கு மேல ரெஜிஸ்டர் ஆபீஸ் ல மேரேஜ்., நமக்கு 5வது தான்., சோ நம்ம 10 மணிக்கு அங்க இருக்கிற மாதிரி போயிட்டா கூட ஓகே தான்., நீ வந்துருவீயா”., என்று கேட்டான்.,
“கிளம்பிடுவேன்., ஆனா எங்க வீட்டில பேங்க் க்கு கிளம்புற மாதிரி கிளம்பினா பிரச்சனை இல்லை., பட்டு புடவை எல்லாம் கட்டினா சந்தேகம் வருமே”., என்று சொன்னாள்.
அவன் நண்பன் தான்., “வீட்ல வச்சு டிரஸ் மாத்திக்க வேண்டாம்., நீங்க எப்பவும் பேங்க் போற மாதிரியே கிளம்பி வாங்க., இங்க உங்களுக்கு மேரேஜ் க்கு ன்னு., ஒரு பார்லர்ல சொல்லி வச்சிருக்கோம்., அங்கே ட்ரெஸ் மாத்திக்கலாம்., அங்கே உங்களுக்கு எல்லாம் பண்ணி விடுவாங்க”., என்று சொன்னான்.,
நண்பனிடமும் அங்கேயே நீயும் மாத்திக்கலாம்., காலைல ஆபீஸ் கிளம்புற மாதிரியே கிளம்புங்க ரெண்டு பேரோட புது ட்ரஸ்ம் அங்கயிருக்கும்., காலையில அந்த பார்லர் வந்துருங்க., அங்க ஜென்ட்ஸ் க்கு தனியா., லேடிஸ் க்கு தனியா இருக்கு., அங்க வச்சு ரெடியான பிறகு அதுக்கப்புறம் ரெஜிஸ்டர் ஆபீஸ் வரலாம்”., என்று சொன்னான்.
“ஓ சரி”., என்று சொன்னவன்., “இது எப்படா ஏற்பாடு பண்ண”., என்று கேட்டான்.,
“நிச்சயமா ரெண்டு பேரும் வீட்டிலிருந்து கிளம்பி வர முடியாதுன்னு எனக்கும் தெரியும்., அதனாலதான் சொல்லி வச்சேன்., அப்புறந்தான் நம்ம ஆபீஸ் ல நாளைக்கு சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டு இருக்கேன் இல்ல., அவனுக்கு தெரிஞ்ச பார்லரில் தான் சொல்லி இருக்கேன்”., என்று சொன்னான்.,
“சரி”., என்று இருவரும் சம்மதித்து கொண்டனர்.,
ஆனால் மனம் முழுவதும் சிறு படபடப்பு இருந்தது., அவளை பேங்க் ல் கொண்டு போய்விட்டான்.,
அவனும் அவளோடு சேர்ந்து இறங்கிக் கொண்டவன்., “சரி ஏதோ குழப்பத்தில் இருக்குற மாதிரி இருக்கு”., என்று கேட்டான்.,
பெருமூச்சுடன் சோர்வாக அவனை பார்த்தாள்.
“என்ன ஆச்சு நீதா”., என்று கேட்டான்.,
“இல்ல வீட்ல எப்படியும் சொல்லி தானே ஆகணும்”., என்று சொன்னாள்.,
ஆமா., மேரேஜ் முடிச்சுட்டு அதுக்கப்புறமா வீட்டுக்கு தெரியப்படுத்திக்கலாம்., உங்க வீட்டுக்கும். எங்க வீட்டுக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து போன் பண்ணி சொல்லிடுவேன்., அதுக்கப்புறம் என்ன வருதோ மீட் பண்ணுவோம்”., என்று சொன்னான்.
அவளிடம் “நாளைக்கு பேங்க் லீவு போட்டுரு., சாட்டர்டே உனக்கு பேங்க் வொர்க்கிங் டே வா”., என்று கேட்டான்.,
“லீவு தான்”., என்றாள்.
“சரி அப்ப ஓகே., இருக்கிற சிட்டுவேஷன் பார்த்துட்டு திங்கள்கிழமை வொர்க் போறதா., இல்ல லீவு போடுறதா ன்னு முடிவு பண்ணிக்கலாம்”., என்று சொன்னான்.
அவளும் சரி என்று சம்மதித்தாள்., இருவரும் குடும்பத்தின் மேல் பாசம் கொண்டவர்கள் என்பதால் இருவருக்குள்ளும் ஒரு கலக்கம் இருப்பதை இருவரும் உணர்ந்து இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை.,
மற்றபடி இருவருக்குமான அந்த நாள் நிறைவாக சென்றதாக தான் உணர்ந்தார்கள்., அவர்களுக்குத் தேவையானதை அவர்களே வாங்கிக் கொண்டார்கள்.,
அவள் மனதிற்குள்ளோ ‘எந்த பெண்ணின் திருமணத்திற்கும் இப்படி அவளுக்கு அவளை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டிருக்க மாட்டாள்’., என்று நினைத்துக்கொண்டாள்.,
ஆனால் அதற்கான பணம் அனைத்தையும் செலவு செய்தது என்னவோ பிரணவ் தான்.,
அதைப் பற்றி கேட்க வேண்டும் என்று நினைத்தவள்., அவனிடம் அமௌன்ட் நிறைய ஸ்பெண்ட் பண்ணிட்டீங்க இல்ல., எதுவும் தேவைப்படுமா”., என்று கேட்டாள்.
“எனக்கு என்ன செலவு இதுவரைக்கும் அப்படியே சேர்த்து வைச்சிருந்தேன்., கொஞ்சம் தான் இப்ப செலவு பண்ணி இருக்கேன்., இனிமேல் நம்ம லைஃப் ல எல்லாம் ஷேர் பண்ணிக்க போறோம் தானே., இப்ப எதுக்கு கணக்கு பார்த்துட்டு., காலையில் சீக்கிரம் கிளம்பு”., என்று சொன்னான்.
அவளும் “ஓகே”., என்று சொல்லிவிட்டு வங்கிக்குள் நுழைந்தாள்.,
வேலையை முடித்துவிட்டு மறுநாள் காலை லீவ் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு., தோழியிடம் மட்டும் விஷயத்தை சொல்லி “நாளைக்கு காலைல லீவு சொல்லு போதும்., இப்ப சொன்னா யார் மூலமாவது வீட்டுக்கு தெரிஞ்சிடக்கூடாது”., என்று சொன்னாள்.,
தோழியோ “ஆல் த பெஸ்ட்., கையெழுத்துப் போட வரட்டுமா”., என்று கேட்டாள்.,
“கேட்டு சொல்றேன்”., என்றவள் உடனே அவனுக்கு அழைத்து கேட்டாள்., அவன் ஆபிஸ் நண்பர்கள் இருவரை ஏற்பாடு செய்து இருந்ததால்., அவள் தோழி “வருவதாக இருந்தால் வரச்சொல்”., என்று மட்டும் அவளிடம் சொன்னான்.
“இதுல என்ன இருக்கு., நானும் லவ் மேரேஜ் தான்., ஆனால் என்ன எங்க வீட்ல சண்டை போட்டு பிரச்சினை பண்ணி., சூசைட் பண்ணிப்பேன் மிரட்டி அதுக்கப்புறம் சம்மதம் வாங்கினேன்., அவரு எதிலும் தலையிடாமல் இருந்தாரு., அவங்க வீட்டிலும் நான் தான் போய் நின்னு அழுது சம்மதம் வாங்கினேன்.,
ஆனா உனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவர்றே சப்போட்டா இருக்காரு., எனக்கு அப்படி இல்ல., வேற வழி இல்லாம ரெண்டு குடும்பத்திலும் நான் போராடினேன்., இப்பவும் நான் தான் விட்டு கொடுத்து போறேன்., இப்ப நல்ல பிள்ளை மாதிரி இருக்காரு., ஆனா முன்னாடி அப்படி பயப்படுவார் தெரியுமா., அவங்க வீட்டுக்கு”., என்று சொன்னவள்.,
“சந்தோஷமா இரு., உனக்காக அவரே டிசைட் பண்ணி., முடிவு பண்றாரு., இனிமேலாவது நீ சரியா சாப்பிடு., எப்ப பாரு ஏதோ யோசனையில் எதையோ பறிகொடுத்த மாதிரி ஆபீஸ்ல வந்து உட்கார கூடாது”., என்று சொன்னாள்.,
சிரித்துக் கொண்டே சரி என்று சொன்னாள்.,
எப்போதும் போல வேலையை முடித்தவள் முகத்தில் சிறு மகிழ்ச்சி கூட காட்டக்கூடாது என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
இவள் வீட்டிற்கு வரும் நேரம் அவள் அப்பாவும் எப்போதும் இல்லாத அதிசயமாக அன்று வீட்டில் இருந்தார் .,
இவளுக்கு தான் ‘ஏன் திடீரென வீட்டில் இருக்கிறார்’ என்ற எண்ணம் வந்தாலும்., எதையும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.,
அவரும் போனில் பேசிக் கொண்டே இருந்தார்., அப்போது அவளுக்கு புரிந்தது.,
அவர் பார்த்த மாப்பிள்ளை வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது.,
நீதா வின் தந்தை தான்., “கண்டிப்பா ஞாயிற்றுக்கிழமை காலை சர்ச்சில் வைத்து பார்ப்போம்., பாத்துட்டு பாதர் முன்னாடியே பேசிடுவோம் வாங்க., மீதியை நாம ஈவ்னிங் ஹோட்டலில் டின்னர் அரேஞ்ச் பண்ணி போவோம்.., அங்க வச்சு நம்ம மிச்சதெல்லாம் பேசிக்குவோம்., அப்புறமா தேதி குறித்து விடுவோம்”., என்று சொல்லி பேசிக்கொண்டிருந்தனர்.,
இவளோ அமைதியாக பார்த்துக் கொண்டே கடந்து சென்றாள்., மனதிற்குள்ளோ ‘நல்ல வேலை ஏற்பாடு பண்ணினாங்க., இல்லாட்டி நான் கஷ்டப்பட்டு இருக்கணும்’., என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.,
அமைதியாக அவள் வேலையை பார்த்த பின் இரவு குடும்ப ஜெபத்தின் போது., அவன் தந்தையோ நீதாவின் அம்மாவை அழைத்து.,
“ஞாயிற்றுக்கிழமை காலைல சர்ச்சுக்கு அவளை சுடிதார் போட்டு வரக்கூடாது ன்னு சொல்லு., சேலை கட்டிட்டு வரச்சொல்லு., ஈவ்னிங் ஹோட்டலில் டின்னருக்கு டேபிள் புக் பண்ணிட்டேன்., அதுக்கு நல்ல வரணும் ன்னு சொல்லு அங்க வந்து எதையாவது மூஞ்சில காட்டவோ., இல்ல வாயை திறந்து ஏடா கூடமா பேசவோ இருந்தானா., நடக்கிறதே வேற”., என்று மிரட்டவும் செய்தார்.
அவளோ அவள் அம்மாவையும் அப்பாவையும் நேர்கொண்ட பார்வையாக பார்த்தவள்., அங்கிருந்து நகர்ந்து அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.,
தம்பிதான் பதட்டத்தோடு இருந்தான்., அவளுக்கு போன் செய்து “என்னக்கா இது அவங்க இவ்வளவு சொல்றாங்க., நீ வாய் திறந்து இப்பவாது உன் லவ் மேட்டர சொல்லேன்”., என்று கேட்டான்.,
” நீ என்னடா எல்லாம் தெரிஞ்ச மாதிரி சொல்லு சொல்லுங்க”., என்று கேட்டாள்.,
“எனக்கு முன்னாடியே தெரியும் க்கா சந்தேகமா இருந்துச்சு., ஆனா அதுக்கப்புறம் உன்னையும் அவரையும் ஒரு நாள் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் பார்த்தேன்.., அவர் கூட பேசிட்டு இருந்த.., உன்ன ஸ்டேஷன்ல ஏத்தி விட்டுட்டு அவரு வெளிய வந்து காரில் கிளம்பி போனார்., பார்த்தாலே தமிழ் காரங்க ன்னு தெரிஞ்சது., ஆனா நல்லா இருந்தாரு., எனக்கு புடிச்சி இருக்கு க்கா., உனக்கு நீ விரும்பின லைஃப் கிடைக்கனும் ன்னு தான் எனக்கு ஆசை..,
ஆனா நீ வாயே திறக்காமல் இப்படி இருந்த னா., உன்னோட லைஃப் என்ன ஆகும்னு யோசிச்சு பாரு., வாய் திறந்து பேசு.., இப்பவாது அப்பாட்ட பேசு., நான் சொல்ல முடியாது., நான் பேசக்கூட முடியாது., நான் பேசப் போனாலே அப்ப நீயும் உடந்தையா ன்னு கேட்பாரு புரிஞ்சுக்கோ அக்கா”., என்று சொல்லிக்கொண்டே இருந்தான் தம்பி.,
அவனிடம் நாளை திருமணம் என்பதை மறைப்பது கஷ்டமாக இருந்தாலும்., திருமணத்தை செய்து கொண்டே தம்பியிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
“இதைப்பற்றி நாளைக்கு பேசுறேன் இப்ப போனை வைச்சிட்டு போய் தூங்கு”., என்று சொல்லி விட்டு போனை வைத்தவள்., அவளும் அமைதியாக படுத்து விட்டாள்.
பின்பு நினைவு வந்தவளாக., ரெஜிஸ்டர் ஆபீஸ் ல் சமர்ப்பிக்க வேண்டிய சர்டிபிகேட்டுகளை எடுத்து தன் ஹேன்ட் பேக்கில் கவரில் இட்டு பத்திரப்படுத்தினாள்.,
மாற்றிக் கொள்வதற்கு ஒரு உடை கூட இல்லாமல் எப்படி போவது என்ற எண்ணத்தோடு இருந்தவள்., பின்பு அவளுடைய ஏடிஎம் கார்டு., அவளது சம்பளம் ஏறும் பேங்க் பாஸ்புக் மட்டும் எடுத்துக் கொண்டாள்.,
வேறு எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை., கழுத்தில் எப்போதும் போட்டிருக்கும் சிறிய செயின் மட்டும் போட்டு இருந்தாள்., பின்பு அதையும் வேண்டாம் என நினைத்தவள்.,
அவள் கல்லூரி சேர்ந்த புதிதில் அவள் தாத்தா வாங்கி கொடுத்தது., அதில் சிறிய மாதாவின் உருவம் பொறித்திருக்கும்., எனவே அதை மட்டும் கழுத்தில் போட்டுக் கொண்டவள்., இது தாத்தா வாங்கி கொடுத்தது தானே., இதை கலட்ட வேண்டாம் என்ற எண்ணத்தோடு கழுத்தோடு போட்டுக் கொண்டாள்.,
அது போல வீட்டில் இருந்து அவள் அம்மா அப்பா வாங்கிக் கொடுத்த எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தோடு., அவள் பெரியவள் ஆன புதிதில் அவள் பாட்டி வாங்கிக்கொடுத்த ஜிமிக்கி இருந்தது., அதை எடுத்து காதில் போட்டுக் கொண்டாள்.,
போதும் இது மட்டும் போதும் என்று நினைத்து கொண்டவள்., கையில் போட்டிருந்த பிரைஸ்லட் அவளுடைய சம்பாத்தியத்தில் வாங்கியது தான்., எனவே அதை கலட்ட வில்லை., வாட்ச் தம்பி அவளுடைய பிறந்தநாளுக்கு பரிசாக கொடுத்தது., எனவே அதையும் எடுத்துக்கொண்டாள்., வேறு எதையும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தாள்.,
இதே நினைவுகளோடு அவனிடம் இரவு பேசும் போது., அவற்றை சொன்னாள்.,
அவனும் “உன் தம்பிட்ட சொல்ல வேண்டாம்., நீ சொல்ற மாதிரி மேரேஜ் முடிச்சுட்டு சொல்லிக்கலாம் விட்டுடு”., என்று மட்டுமே பதில் சொல்லி இருந்தான்.
ஒரு படபடப்போடு பாதி இரவு சரியான தூக்கம் இல்லாவிட்டாலும்., பாதி இரவிற்கு மேல் நாளை காலை அவனின் மனைவி ஆகிவிடுவோம் என்று நிம்மதியோடு கண்ணுறங்கி இருந்தாள் நீதா.
நமக்கு நாமே ஆறுதல் கூறும்
மன தைரியம் மற்றும்
நம்பிக்கை இருந்தால்
அனைத்தையும்
கடந்து போகலாம்..!.