Advertisement

அத்தியாயம் 05

 

                            சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி பணம் கொண்டு வந்திருப்பதாக கூற, அந்த கவுண்டரில் இருந்தவரோ ஏற்கனவே பணம் செலுத்தி விட்டனர் என்று கூறிவிட, சரியாகத்தான் பார்த்தாரா?? என்று சந்தேகம் வந்துவிட்டது அவளுக்கு.

 

                          மீண்டும் ஒருமுறை தன் அன்னையின் பெயரை கூறியவள், அவரின் ஆஞ்சியோ சிகிச்சை பற்றியும் கூறி விசாரிக்க, பணம் செலுத்தி விட்டதாகவே கூறினர் அங்கு இருந்தவர்கள். அவள் திரும்பி சண்முகநாதனை பார்க்கவேற யார்கிட்டேயும் பணம் கேட்டு இருந்தியா துர்கா??” என்று அவன் வினவ, மறுப்பாக தலையசைத்தாள் அவள்.

 

                              சண்முகநாதன் அவள் கையை பிடித்து விட்டான் இப்போது. அவளின் வலது கையை இறுக்கி பிடித்துக் கொண்டவன் கவுண்டரில்என்ன பேர்ல பணம் கட்டி இருக்காங்க..” என்று விசாரிக்க

 

                             “திருநாவுக்கரசுஎன்று முடித்து விட்டு தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டனர் கவுண்டரில் இருந்தவர்கள். எதிரில் நின்றிருந்த இருவருக்குமே அதிர்ச்சிதான் என்றாலும் சண்முகநாதன் முதலில் சுதாரித்துக் கொண்டான். மலைக்கு சென்றிருந்தவன் இங்கே எப்படி ? அதுவும் இன்றே எப்படி வந்தான்? என்று உள்ளே ஓடிக் கொண்டிருந்தாலும்,இப்போது விட்டு விட்டால் துர்கா இனி எப்போதும் தன் கைகளில் சிக்க மாட்டாள் என்பதும் தெரிந்தே இருந்தது அவனுக்கு.

 

                           அவன் பார்வையில் படுவதற்கு முன்பாக அவளை அங்கிருந்து அழைத்து சென்று விடுவது ஒன்றே அவன் குறியாக இருக்க, அவள் கையை பிடித்திருந்தவன், அவளை வேகமாக வாசலை நோக்கி நகர்த்த, அதிர்ந்து நின்றிருந்தவளோ தெளிந்து கையை அவனிடம் இருந்து விலக்கி கொள்ள போராட, அவன் பிடியை அசைக்க கூட முடியவில்லை.

 

                   மெய்ன் கவுண்டர் மருத்துவமனையின் வாசலுக்கு அருகிலேயே இருக்க, அவனுக்கு வசதியாக போனது. அவன் இழுத்த இழுப்பிற்கு அவள் சென்று கொண்டிருக்க, அனாயாசமாக அவளை இழுத்து வந்தவன் வாசலை தாண்டி தன் காரின் அருகில் செல்ல, அவனை உரசிக் கொண்டு வந்து தன் வண்டியை நிறுத்தினான் திரு.

 

                  வண்டியை நிறுத்தியவன் அதே கருப்புநிற உடை, கழுத்தில் துண்டு என்று சாமியாகவே இருக்க சட்டைக்குள் இருந்த துளசி மணிமாலை காணாமல் போயிருந்தது. அதற்கு பதிலாக நடுவில் ருத்திராட்சம் கோர்த்திருந்த அவனின் தங்க சங்கிலி அவன் கழுத்தில் குடியேறி இருக்க, அவன் பார்வையில் உக்கிரம் தெறித்து கொண்டிருந்தது.

 

                    வண்டியில் அமர்ந்தவாறே நிதானமாக கைகளை கோர்த்து நெட்டி முறித்து, அதே நிதானத்துடன் இறங்கி சண்முகநாதனின் எதிரில் நின்றான் அவன். அவன் பார்வையில் பயம் வந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அவனும் தைரியமாகவே நிற்க, தன் வலது கையை நீட்டி துர்காவின் இடது கையை பற்றியவன் அவளை தன்னருகில் இழுக்க முற்பட, அவள் வலது கைதான் சண்முகநாதனின் கைகளில் இருந்ததே.

 

                 அப்போதுதான் பார்ப்பது போல் திருவும் அவன் கையை கூர்மையாக பார்க்க, அப்போதும் அவள் கையை விட்டானில்லை அவன். திரு பார்க்கவும் ஆட்களை உடன் அழைத்து வராத தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன் வெளியேஇங்கே பார் திரு.. இது சரியே இல்ல, என் அக்காப்பொண்ணு இவ.. நீ தேவ இல்லாம எங்க வழில வர்ற..” என்று அவன் சொல்லி முடிக்க

 

                          திரு அப்போதும் மாறாத சிரிப்புடன் அவன் இடது கை மணிக்கட்டை பிடித்து ஒரு அழுத்தம் கொடுக்க, சண்முகநாதனின் கை தானாகவே துர்காவிடம் இருந்து விலகிவிட்டது. இப்போது மணிக்கட்டை விட்டுவிட்டவன் கைகுலுக்குவது போல் அவன் கையை பிடித்து விரல்களில் அழுத்தம் கூட்டிவிட, அவன் முகத்தில் இருந்த சிரிப்பு மாறவே இல்லை.

 

                       ஆனால் அதற்கு நேர்மாறாக வலியில் துடித்துக் கொண்டிருந்தான் சண்முகநாதன். திரு அதே மாறாத சிரிப்போடுஉனக்கு நல்லவிதம்மா சொன்னா புரியவே புரியாது போலயேஹ்ம்ம்என்ன சொன்ன அக்கா பொண்ணா.. உள்ளே படுத்துட்டு இருக்கு பாரு வள்ளிம்மா.. அது வந்து சொல்லட்டும்.. நீ யாருன்னு..”

 

                    ” உனக்கு சொல்ல வேண்டி இருக்காது.. இருந்தாலும் சொல்றேன்அந்த மார்க்கெட்ல உனக்கு என்ன தெரியுமோ, அது அத்தனையும் எனக்கும் தெரியும். நாலு வயசுல இருந்து அங்கதான் இருக்கேன்எதுவும் வேண்டாம், வாழ்க்கை ஒழுங்கா இருந்தா போதும்ன்னு நினைச்சு தூரமா இருக்கேன்..

 

                    “இனி ஒருமுறை இவளை தொடணும்ன்னு நினைச்ச, எதுக்காகவும் பார்க்க மாட்டேன்.. உன்னை மொத்தமா ஒண்ணுமில்லாம முடிச்சு உள்ள வைக்க என்னால முடியும்போலீஸ் னாலும் சரி.. இல்ல மார்க்கெட் பசங்க ன்னாலும் சரி. முடிக்கனுன்னு நினைச்சிட்டா முடிச்சிடுவேன்

 

                 “பார்த்து நடந்துக்கோ சண்முகம்இனிஎன்றவன் ஒருவிரல் நீட்டி அவனை மிரட்டிவிட்டு, துர்காவை வலக்கையில் பிடித்துக் கொண்டு மருத்துவமனையின் உள்ளே நடந்து விட்டான். சண்முகநாதன் தான் அதிர்ந்து நின்றிருந்தான் திருவின் வார்த்தைகளில்.

 

                     அவனுக்கு தெரியும் திருவின் தொழில் தொடர்புகளும், அவன் நட்பு வைத்திருக்கும் இடங்களும். எதிலும் அவன் பெயர் இருக்காது, ஆனால் அவனுக்கு என்று கூறிவிட்டால் அவன் சொல்வதை செய்து முடிக்க அந்த மார்க்கெட்டிலேயே அத்தனை பேர் இருந்தனர்.

 

                                  மாநிலம் விட்டு மாநிலம் தொழில் செய்வதால் காவல் துறையிலும் அவனுக்கென்று சில நண்பர்களை வைத்திருந்தான் அவன். அந்த ஒரு விஷயத்திற்காக தான் சண்முகநாதன் அமைதியாக நிற்பது. அவன் அக்காவிடம் சொன்னது போல்போலீசாஎன்று அசால்டாக அவனிடம் சொல்லிவிட முடியாது என்பதும் தெரியும் அவனுக்கு.

 

                               தான் எதுவும் வாயை விட்டுவிட்டால்பேசினாய்தானே வாங்கிக்கொள்என்று முடித்துவிடுவான் என்று புரிந்தவன் அப்போதைக்கு அமைதியாகி விட்டான். அவனுக்கு, துர்காவை பார்த்த திருவின் பார்வையில் தெரிந்த நெருக்கம் வேறு கதையை சொல்ல, அதுவேறு கொதித்துக் கொண்டு வந்தது.

 

                            ஆனால் அனைத்திற்கும் மேலாக கைவலி உயிரைக் குடிக்க, அந்த நிமிடம் கைதான் முக்கியம் என்று முடிவெடுத்து அவனும் அதே மருத்துவமனைக்குள் நுழைந்தான் வைத்தியத்துக்காக. “பாவிப்பய.. எத்தனை எலும்பை ஒடச்சானோ, தெரியலையே…” என்று புலம்பிக் கொண்டே வைத்தியம் முடித்து கிளம்பி இருந்தான் அவன்.

                                                 இங்கு திரு துர்காவை அழைத்துக் கொண்டு உள்ளே நடக்க, அவள் கையை விடுவித்துக் கொள்ள பார்த்தும் கூட கையை விலக்கவே இல்லை அவன். அவன் பாட்டிற்கு நடக்க, அசையாமல் நின்று விட்டாள். அவன் திரும்பி பார்க்கவும்கையை விடுங்கஎன்றாள் அவன் கண்களை பார்த்து.

 

                            “ஏன் உன் மாமன் பிடிச்சிருந்தானே.. அவன்கிட்ட சொல்ல வேண்டியதுதானே.. கையை விட சொல்லி”  என்று அவன் ஆத்திரமாக அவளை முறைக்க, பதில் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

                     அவளின் பார்வையில் மேலும் கொதித்தவன்அறிவில்ல.. படிச்சிருக்க தானே.. எங்க போகணும், வரணும்?? யார்கிட்ட பேசணும் ?? எதுவும் தெரியாதா..? அவன்லாம் ஒரு ஆளுன்னு அவன்கிட்ட உதவி கேட்க போயிருக்க..” என்று அவன் பொரிந்து கொண்டிருக்க

 

                      “ப்ளீஸ்.. அவன்கிட்ட உதவி கேட்டு போனது எவ்ளோ பெரிய தப்பு ன்னு அவனே புரிய வச்சிட்டான்..

 

நீங்க அதை திரும்பவும் எனக்கு புரிய வைக்க வேண்டாம். அதோட நீங்கதான் இப்போ அவன்கிட்ட இருந்து காப்பாத்தி இருக்கீங்க.. அதுவும் புரியுது எனக்கு..”

 

                 “ஆனா.. அதுக்காக இப்படி என்னை நடத்த வேண்டாம்.. என்னால சுத்தமா முடியல.. எனக்கு அழறது பிடிக்காது, நான் அழுதா என் அம்மாவும் அழும்.. அதுக்காகவே அழ மாட்டேன் எப்பவும்ஆனா இன்னிக்கு கத்தி அழணும் போல இருக்கு..”

 

                “இன்னிக்குதான் என் அப்பா என்னைவிட்டு போனதுக்காக ரொம்ப வருத்தப்படறேன்.. நீங்களும் எதுவும் பேசி வைக்காதிங்க.. விட்டுடுங்கஎன்றவள் அவன் முகம் பார்க்கவே இல்லை.

 

                 எதிரே தெரிந்த ஒரு போர்டை பார்த்துக் கொண்டே அவள் சொல்லி முடிக்க, அவள் கைகளை விட்டுவிட்டான் திரு.அவன் கையை விடவும் அமைதியாக சென்று அவள் தேவா, சரத்துடன் அமர்ந்து கொள்ள, உள்ளே வள்ளிக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

 

                அவள் அமைதியாகவே இருக்க, அடுத்த இரண்டு மணிநேரத்தில் வள்ளியின் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்று கூறி விட்டனர் மருத்துவர்கள். அவர் வார்டுக்கு மாற்றப்படவும், உள்ளே சென்று பார்த்து வந்தாள். அப்போதும் முகத்தில் அமைதி மட்டுமே. அவள் என்ன நினைக்கிறாள் என்று யூகிக்கவே முடியவில்லை யாராலும்.

 

                திரு சற்று தூரமாக நின்று இருந்தாலும், அவளை தான் பார்த்திருந்தான். அவள் ஏன் இப்படி இருக்கிறாள்? என்று யோசனையாகவே கழிந்தது அவனது நாள். இரவு வீட்டிற்கு கிளம்ப சொன்னபோது, வேண்டாம் என்று மறுத்து விட்டவள் அன்னையின்

                     சென்று அமர்ந்து விட்டாள். திரு தேவாவையும், சரத்தையும் வீட்டிற்கு அனுப்பி விட்டவன் தானும் அந்த மருத்துவமனையிலேயே தங்கி கொண்டான். அவளை மட்டும் தனியாக விட்டு எங்கே செல்வான் அவன்?..

 

                     அடுத்த நாள் காலையில் வள்ளி கண்விழித்துவிட, அவரிடமும் எண்ணி சில வார்த்தைகள் மட்டுமே அவள் பேசியது. அவரின் உடல்நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டவள் காலையில் தேவாவை துணைக்கு வைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். வீட்டிற்கு சென்று குளித்து முடித்து, அன்னைக்கும் தேவை என்று நினைத்ததை எடுத்துக் கொண்டவள் அங்கிருந்தவர்களுக்கு உணவை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு திரும்பி விட்டாள்.

 

                  வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அவள் தேறி விட்டது போலவும், திடமாக இருப்பது போலவும் காணப்பட்டாலும் வள்ளிக்கு பார்த்த கணத்தில் அவளிடம் தெரிந்து ஒதுக்கம் பிடிபட்டு விட்டது. பின்னே இதே தன் மகள் இயல்பாக இருந்திருந்தால் எத்தனை வார்த்தைகள் பேசி இருப்பாள் இந்த நேரத்திற்கு?? என்று அறியாதவரா அவர்.

 

                  இப்போது திரும்பி வந்த பின்னும் கூட அவர் அருகில் வந்து அமராதவள் அங்கிருந்த டேபிளில் உணவை எடுத்து வைத்துவிட்டு தேவாவை அழைத்து சாப்பிட சொல்லிவிட்டு அமர்ந்து விட்டாள். அவன் சாப்பிட்டு முடிக்கவும் பாத்திரங்களை எடுத்து வைத்து அவள் எழுந்துவிடஇவள் சாப்பிட்டாளாஎன்று சந்தேகம் வள்ளிக்கு.

 

                    மகளிடம்துர்காம்மா நீ சாப்பிட்டியா..?” என்று அவர் கேட்க

 

           “ஹான்.. சாப்பிட்டேன்மா..” என்றவள் மீண்டும் அமைதியாக அமர்ந்துவிட

 

அம்மாகிட்ட என்னடா கோபம் ?? பேசமாட்டியா?” என்று அவர் கேட்டுவிட

 

அழாதம்மா..” என்றவள்ஏற்கனவே நிறையஇன்னும் அழுது உடம்புக்கு வேற இழுத்து விட்டுடாத..போதும்.” என்று அதட்டினாள் அவள்.

 

            “துர்கா.. அம்மா வேணும்ன்னு பண்ணலடாஎன்று அவர் மீண்டும் ஆரம்பிக்கவும்

 

                           “ம்மாஇப்போ எதுவுமே பேசாத. சரியாகி வெளியே வந்துட்டா அதுவே போதும் எனக்கு.. சும்மா சும்மா என் முகத்தையே பார்க்காத.”

 

              “எனக்கு எதுவும் செய்யணும்ன்னு நினைச்சா சரியாகி வீட்டுக்கு வந்திடு.. எனக்கு யாருமே இல்லநீயும் விட்டுட்டு போயிடாத.. எனக்கு வேற எதுவுமே வேண்டாம்மாஎன்றவளுக்கு குரல் கமறியது. தன்னை சமாளித்துக் கொண்டவள் அவரை அமைதியாக பார்க்க

 

               மகள் படும் வேதனை புரிந்தவராகஅம்மாக்கு ஒன்னும் ஆகாதுடா.. உன்னைவிட்டு எங்கே போய்டுவேன்.. சரியாகிடும்டா..” என்று அவள் கன்னம் தடவ, அமைதியாகவே நின்றாள் அவள். வள்ளிக்கு கண்கள் கலங்கம்மாஎன்று மீண்டும் அதட்டினாள் அவள்.

 

              அவர் கண்ணீரை விட்டு புன்னகைக்க, அதுவே போதும் என்றாகிவிட்டது அவளுக்கு. இவர்கள் இவர்களின் உலகத்தில் மூழ்கி இருக்க, இவர்களின் பேச்சு ஆரம்பிக்கும்போதே உள்ளே நுழைந்திருந்தான் திரு. பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருமே அவனை கவனித்திருக்க வில்லை.

 

                   இப்போது நர்ஸ் வந்தவர் கதவை திறக்க முற்பட, அந்த சத்தத்தில் திரும்பும் போது தான் திருவாய் பார்த்தனர் இருவரும். அவனும் அப்போதுதான் வந்தவன் போல் வள்ளியை பார்த்து சிரிக்க, அவரும் தலையசைத்து அவனை வரவேற்றார்.

               நர்ஸ் வள்ளியை சோதித்து அவள் உடல்நிலையை குறித்துக் கொண்டு வெளியே செல்ல, துர்காவும் வெளியே செல்ல முற்பட்டாள். வள்ளிக்கு என்ன தோன்றியதோ!! திருவிடம்சாப்பிட்டீங்களா தம்பி..” என்று கேட்க, பதில் சொல்லாமல் புன்னகைத்தவன்சாப்பிடலாம் வள்ளிம்மா..நீங்க எப்படி இருக்கீங்கஎன்று கேட்க

 

                 வள்ளி மகளிடம்துர்கா. இட்லி இருந்தா தம்பிக்கு வச்சு கொடு. ஏன் வெளியே வாங்கணும்..” என்றவர் திருவிடம்சாப்பிடுங்க தம்பிஎன்று கூறிவிட்டார். துர்கா அவன் மறுத்து விடுவான் என்று அவனை பார்க்க, அவனோ எதுவுமே பேசவில்லை.

 

                  வள்ளிதான்என்ன துர்கா.. வச்சு கொடு..” என்று மீண்டும் கூறினார். துர்கா அன்னையை ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாக சென்று உணவை எடுத்து வைக்க, திரு கை கழுவி வந்து அமர்ந்துவிட்டான். உணவின் சுவை நன்றாகவே இருக்க, பரிமாறுபவளும் பிடித்தவளாக மாறிக் கொண்டிருக்க உணவு திருப்தியாகவே உள்ளே இறங்கியது.

 

                       அவன் உண்டு முடிக்கவும், தட்டை கழுவி வைத்தவள்நான் பக்கத்துல கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன்மா..” என்று அன்னையிடம் கூறினாள் மகள்.

 

                             இதுவரை மறந்திருந்த வள்ளிக்கு மகள் தனியாக செல்கிறேன் என்று கூறவும் தான் சண்முகநாதனின் நினைவு வந்தது. அவர் பதட்டமாக மகளை பார்க்க, அவருக்கு முன்பாகவே திருதனியா போக வேண்டாம். தேவா இருந்தா கூட்டிட்டு போஎன்றுவிட்டான்.

 

                       “தேவா, அம்மாகூட இருக்கணும்.. அம்மா எப்படி தனியா இருப்பாங்க.” என்று கேட்டு நிற்க

 

 “நீங்க வரவரைக்கும் நான் இங்கே இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க.” என்று முடித்தவன் வள்ளியின் அருகில் அமர்ந்து விட்டான்.

                                        துர்கா எதுவும் பேசாமல் அன்னையின் முகம் பார்க்க, அவர் தலையசைக்கவும் கிளம்பி சென்றாள் அவள். திரு அவள் கிளம்பும்வரை அமைதியாக இருந்தவன் அவள் கிளம்பவும் வள்ளியிடம்என்னாச்சு வள்ளிம்மா.ஏன் இப்படி?” என்று கேட்க கண்ணீர் நிறைந்தது வள்ளியின் கண்களில்.

 

                  “தம்பிஎன்று அவன் கைகளை பிடித்துக் கொண்டவர் சண்முகநாதன் ஏற்கனவே ஒருமுறை தன்னிடம் வந்து பேசியது, இரண்டு நாட்களுக்கு முன் கடைக்கு வந்தது, மிரட்டியது என்று அத்தனையும் அவனிடம் கூறி விட்டார்.

 

              “நான் என்ன செய்வேன் தம்பி. ஒத்த மகளிர் பெத்து அவளை வளர்த்து ஆளாக்க நான் பட்டபாடு எனக்குதான் தெரியும். இப்போ எவனோ ஒருத்தன் அவ வாழ்க்கையை பணயம் வைச்சா நான் என்ன செய்யட்டும் தம்பிஎன்று அழுதுவிட

 

                  அவன் கையிலிருந்த அவரின் கைகளில் தட்டிக் கொடுத்தவன்அதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது வள்ளிம்மா.. அப்புறம் நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.” என்று கூற

 

            “நீங்க பக்கத்துல இருந்திருந்தா பயந்திருக்க மாட்டேன் தம்பி. யாருமே இல்லாம என்னென்னவோ தோணிடுச்சு. என் மக வாழ்க்கை அவ்ளோதான்னு நினைச்சு பயந்துட்டேன் தம்பி..”

 

            “எல்லாம் சரியாகிடுச்சு வள்ளிம்மா. உங்க தம்பி விஷயம் இனி உங்களுக்கு கவலை வேண்டாம். நான் பார்த்துக்கறேன்.நீங்க கவலைய விடுங்க..” என்று நம்பிக்கையாக கூறினான் அவன்.

 

                  மேலும் சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தவன், நேற்று நடந்த விஷயங்களையும் பேச்சோடு பேச்சாக அவரிடம் கூறி முடித்தான். நேற்று துர்கா அவன் வீடு சென்றது முதல் மருத்துவமனையில் திரு அவனை மிரட்டியது வரை அனைத்தையும் அவன் வள்ளியிடம் கூறி முடிக்க, அதிர்ந்து போனார் அவர்.

 

                     அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை திடப்படுத்தும்படி தான் கூறி முடித்தான். ஆனாலும், வள்ளி பெண்ணை பெற்றவர் ஆகிற்றே.. பயந்துதான் போனார். அவரின் பதட்டத்தை உணர்ந்தவன்வள்ளிம்மா.. அமைதியா இருங்க.. உங்க பொண்ணு வந்தா என்னை கொன்னே போட்டுடுவா.. என்னாலதான் ன்னு கழுத்தை பிடிச்சாலும் பிடிப்பா..” என்று அவன் சிரிப்போடு கூற, மகளை நினைவு படுத்தவும் அவர் முகம் சற்றே அமைதியானது.

 

                    கொஞ்ச நேரத்திற்கு முன் மகள் பேசியவையும் நினைவு வர, நேற்றிலிருந்து பார்த்த அவளின் அருளில்லாத முகமும் நினைவுக்கு வந்தது கூடவே. அவள் வாழ்க்கையை எண்ணிக் கொண்டு அவர் அமைதியாகி இருக்க, திரு என்ன நினைத்தானோ சட்டென அவரிடம்எனக்கு துர்காவை கொடுக்கறீங்களா..வள்ளிம்மாஎன்று சாதாரணமாகவே கேட்டுவிட்டான் அவன்.

 

                  வள்ளிக்கு சட்டென பிடிபடவில்லை அவனின் வார்த்தைகள். ஒரு கணத்திற்கு பிறகே அவன் வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மகளை நினைத்து கவலையாக இருந்தது. அவளுக்கு திருவை எவ்வளவு பிடிக்கும் என்று அறியாதவரா அவர். அதை நினைத்து அவர் கவலையாக, திருவோஉங்களுக்கு விருப்பம் இல்லன்னா தயங்காதிங்க வள்ளிம்மா.. சொல்லிடுங்க.” என்று அதையும் வேறு சொல்லிவிட்டான்.

 

           வள்ளி தான் பதறியவராகஐயோ.. அதெல்லாம் இல்ல தம்பி.. உங்களுக்கு என்ன தம்பி.. எங்க தகுதிக்கு அவளுக்கு நல்ல வாழ்க்கைதான்.. ஆனா அவள் என்ன சொல்வாளோ தெரியலையே..” என்று அவர் புலம்ப

 

                  “நிச்சயமா ஒத்துக்க மாட்டாஎன்று வார்த்தையை முடித்தான் அவன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                    

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement