Advertisement

நினைவினில் நிறைந்தவளே

அத்தியாயம் 18

உனக்கும் எனக்கும்
விழுந்த முடிச்சு தானாய்

விழுந்ததில்லை உலக
உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை…..????
மீனுவின் வீட்டிற்கு புதுமண தம்பதிகளை அழைத்துச் வந்தனர்.
அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் பெரியோர்கள் செய்ய ஆரம்பிக்க ,,அதை கடமைக்கே என்று நால்வரும் செய்ய தொடங்கினர்.
இரு தம்பதிகளும் சடங்குகளை செய்ய அவர்களது மனமோ கலங்கிக் கொண்டு இருந்தது. இதை எதுவும் அறியாத பெரியோர்கள் சந்தோஷமாக இருந்தனர்.அர்ஜுன் ஒரு ஓரமாக நின்று கொண்டு அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தப்படி இருந்தான். ‘இது தான் அர்ஜுனிடம் தனியாக பேசுவதற்கான சரியான நேரம் ‘என்று நினைத்த அபி அவனை நோக்கி சென்றான்.
அர்ஜுனிடம் வந்த அபி ” நான் அபி அபிஷேக் பிரேம் .மீனுவோட ஃபிரண்ட் ” என்று அறிமுகப்படுத்தி கொள்ள அர்ஜுனும் பதிலுக்கு அவனை அறிமுக படுத்தி கொண்டான் .
சிறிது நேரம் இருவரும் பொதுப்படையாக பேசிக்கொண்டு இருக்க ,,,அப்போது அபி” நான் உங்க கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும்” என்று கூற
என்னவாக இருக்கும் என்று மனதில் நினைத்த அர்ஜூன் ” சொல்லுங்க அபி ” என்க
” இங்க வச்சி எதுவும் பேச வேணாம் .. நைட் நீங்க மொட்ட மாடிக்கு வாங்க அங்க வச்சி நாம் பேசலாம் ” என்றான் அபி. அர்ஜுனும் சரி என்று கூற அதன் பிறகு அபி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
சடங்குகள் அனைத்தும் முடிபெற கதிரின் குடும்பத்தினர் கிளம்புவதாக கூற ..,,
“அதெல்லாம் வேணாம் இன்று ஒருநாள் நீங்களும் இங்கேயே இருங்க ” என்று சுசிலா சொல்ல
“அதெல்லாம் சரியா வராது சம்மந்தி ” என்று புவனா கூற
” எங்களுக்கு மீனு சிந்து அபி மட்டும் பசங்க இல்ல பவியும் எங்க பொண்ணு தான் ” என்று சுசிலா கூற பவி ஓடிச் சென்று சுசிலாவை அணைத்துக் கொண்டு விசும்ப தொடங்கினாள்.
பவியை அணைத்து ஆறுதல் படுத்திய சுசிலா ,,அவளை வலது பக்கத்தில் நிற்க வைத்துவிட்டு மீனுவையும் அழைத்து அவரது இட புறத்தில் நிற்க வைத்த பிறகு அனைவரையும் பார்த்து ” என்னோட ரெண்டு பொண்ணுங்களும் நாளைக்கு ஒரே நேரத்தில் அவுங்களோட புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்னு ஆச பட்றேன் ” என்றார்.
பவி புவனாவையும் கதிரையும் ஏக்கமாக பார்க்க ,,அதனை புரிந்து கொண்ட கதிர் புவனாவிடம் திரும்பி ” இன்று இங்கே இருக்கலாம் மா ” என்க பவியின் ஆசைக்காக அங்கே இருக்க சம்மத்தை கூறினார்.
பின்னர் ,,இரு பெண்களுக்கும் இரு அறைகள் கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி அனுப்பி வைத்தனர்.கதிரும் செல்வாவும் பெரியவர்களுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.
வெயில் சுட்டெரிக்கும் நேரத்திலே கண்ணை கசக்கிக்கொண்டே எழுந்தாள் அஞ்சலி .சிறு வினாடி பொழுதுக்கு பிறகே நேற்று நடந்த அனைத்தும் ஞாபகத்துக்கு வர தன்னையே திட்டிக் கொண்டவள் வேகமாக எழுந்து செல்வாவின் அறைக்கு செல்ல அங்கு அவன் இல்லை என்று தெரிந்ததும் கீழே சென்று பார்க்க வீட்டில் யாருமே இல்லை என்று தெரிய வர ,, உடனே சுபாவிற்கு அழைப்பு விடுத்தாள்.
அஞ்சலியின் அழைப்பை எடுப்பதா..??? வேண்டாமா..??? என்று மொபைலை பார்த்து சுபா யோசிக்க ,,’சரி எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் ‘என நினைத்து அவளது அழைப்பிற்கு உயிர் கொடுத்தாள்.
“ஹலோ…!!!சொல்லு அஞ்சலி..?? எதுக்கு கூப்பிட்ட “என்க ,,
“இப்போ நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க..???வீட்ல யாரையுமே காணோமே” என்று கேட்க 
அதற்கு சுபா அமைதியாக இருக்கவே ,”சொல்லு சுபா ..!!! எங்க இருக்கீங்க எல்லாரும்…??? “என்று பற்களை கடித்து கொண்டே கேட்க
இதற்கு மேல் அமைதியாக இருப்பது சரி இல்லை என்று உணர்ந்த சுபா நடந்த அனைத்தையும் கூறினாள் .
இதனை கேட்ட அஞ்சலியின் இரத்த கொதிப்பு அதிகமாக ” சரி சுபா…நீ எனக்கு அந்த பொண்ணு வீட்ட மெசேஜ் பண்ணு நான் அங்க வரேன் ” என்று அஞ்சலி சொல்ல
” வேணாம் அஞ்சலி …நீ இங்க வந்தா உனக்கு கஷ்டமா இருக்கும்.நீ வீட்லயே இரு .உனக்கு துணைக்கு நான் சாய்ங்காலாம் வந்தறேன் ” என்க “அதெல்லாம் வேணாம் சுபா . நான் இப்போ அங்க வரேன் ஈவினிங் ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு வரலாம் ” என்க சுபாவும் சரி என்று கூறி அழைப்பை அணைத்தாள்.
அழைப்பை அணைத்த பிறகு அடுத்த நொடி டிங்…டிங்… என்று சத்தம் வர அதில் சுபா மீனுவின் வீட்டு முகவரி அனுப்பி இருந்தாள்.
பத்து நிமிடத்தில் கிளம்பிய அஞ்சலி ,,வீட்டை பூட்டி விட்டு கேப் புக் செய்து விட்டு அதற்காக காத்திருக்க ,,கேப் வரவும் அதில் ஏறி மீனுவின் வீட்டிற்கு சென்றாள்.
******************************************************************
இடியுடன் மழை பெய்து கொண்டிருக்க,, மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.
உணவு கூட உன்னாமல் அந்த இருட்டு அறையில் கைதியாக இருக்கும் பெரியவர் கூட மகிழ்ச்சியில் காணப்பட்டார். அவரது செயல்களை பார்த்து அங்கு இருந்த ரௌடிகளே பயந்து நடுங்கினர்.
அந்த பெரியவரை அடிக்க அந்த தடியாளுகளுக்கே கஷ்டமாக இருந்தாலும் ,, அவர்களுக்கு வேறு வழி இல்லை.அவர்களது தொழில் ஞாயம் தலைவன் சொல்வதை கேட்டு நடப்பதே .
தலைவனிடம் போன் பேசி முடித்து வந்த ஒரு அடியால் மற்ற அடியாட்களிடம் சென்று ” டேய் அந்த ஆளை தலைவா அடிக்க சொல்லிடாரு . நம்மளையே எப்படி பயமுறுத்துறான் பாரு .அவனை இன்னைக்கு நான் சும்மா விட போவதில்லை ” என்றான் கை முஷ்டியை மடக்கிய படி… அதற்குள் அவன் கூட்டாளி ஒருவன் வந்து ” டேய்…!!! அந்த ஆள் ஆல்றடி ரெண்டு நாளா சாப்பிடாம இருக்கான்.இதுல நாம வேற அடிச்சோன்னா செத்து கித்து பொய்ட போறான் டா. அப்பறம் அதுக்கும் நம்ம தலைவரு நம்மல தான் ஏசுவாறு ” என்று நிதர்சனத்தை கூறினான் .
அவன் கூறுவதும் சரியென பட அந்த இடத்தை விட்டு சென்றனர்.
அந்த அறையில் இருந்த பெரியவர் பயங்கரமாக சிரிக்க தொடங்கி விட்டார்.
“அடேய்..!!!லூசு பசங்களா இந்த ஊருக்கு நல்ல காலம் பொறந்துருச்சி டா.இனி யார் நினைச்சாலும் உங்கள அவ கிட்ட இருந்து காப்பாத்த முடியாது. அவளால தான் டா உங்க உயிர் எல்லாம் போக போகுது . உயிர் முக்கியம்னு நினச்சிங்கனா ஓடி பொய்டுங்கடா” என்று தன் போல் பேசிக்கொண்டு இருந்தார்.
ஒருவாரமாக தண்ணீர் மட்டுமே ஆகாரமாக சென்று கொண்டிருந்த அவருக்கு ,,இந்த மழையின் வருகை அவருக்கு விருந்தளித்தது போல் இருந்தது.
ஆதி மற்றும் முகில் அந்த புகைப்படத்தை வீடு முழுவதும் தேட தொடங்கினர்.ஆனால் அவர்கள் கைக்கு மட்டும் அந்த புகை படம் கிடைக்கவே இல்லை.
” டேய் ஆதி…!!!! இப்போ என்ன டா பண்றது..???அந்த ஃபோட்டோ கிடைக்கவே இல்ல டா .எல்லா இடத்திலும் தேடி பாத்துட்டேன் . ஆனா அந்த ஃபோட்டோ மட்டும் இல்ல டா ” என்றான்.
ஆதியிடமிருந்து எந்த பதிலும் வராமல் போக முகில் ஆதியை பார்க்க அவன் இந்த உலகத்தில் இல்லை என்று அவன் செயலிலேயே தெரிந்தது.
” டேய் ஆதி…!!! “என்று முகில் அவன் தோளை பிடித்து உழுக்க சுயநினைவுக்கு வந்த ஆதி “என்ன டா..?? என்ன எதுக்கு உழுக்கிகிட்டு இருக்க…?? என்று கேள்வியாய் நோக்கினான்.
“டேய் அத நான் தான் டா கேக்கணும். நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு தெரிஞ்சு தான் பண்றியா..??? “என்றான்.
“நான் என்ன டா பண்ணேன்” என்க அப்போது தான் கையில் இருந்ததை பார்த்து “ச்சீ..ச்சீ “என்று அதை தூர வீசினான்.
அதை கண்ட முகில் சிரிக்க தொடங்கி விட்டான்.
“ஏன் டா உனக்கு தேட எந்த ஒரு பொருளும் கிடைக்கிளையா…???” என்றான் சிரித்துக்கொண்டே .
அதனை கண்ட ஆதிக்கு கோபம் வர “போதும் நீ சிரிச்சது ,, டெட்டால் எதாவது வச்சிறிக்கியா..??? “என்று கேட்க இல்லை என்பது போல் தலை அசைத்தான்.
“சரி நான் போய் அம்மாகிட்ட கேட்டு கைய கழுவிட்டு வரேன்” என்று அந்த இடத்தை விட்டு நகர…,,, “நான் தான் என் உள்ளாடையை டெட்டால் போட்டு துவைக்கனும்” என்றான் .
“ச்சீ பே “என்று முறைத்துக் கொண்டே கீழே அன்னையை காண சென்றான்.
“அம்மா …அம்மா… “என்று கத்திக்கொண்டே சமையலறைக்கு வர ,,அங்கே வளர்மொழி இல்லாமல் போக சரி என்று அவர்களது அறையில் இருப்பாங்க என்று அங்கே சென்றான்.
கதவு அருகே சென்ற ஆதி ,, தன் தந்தை யாரோ ஒருவருடன் ஃபோனில் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றான்.
இந்த ஊரே மதிக்கும் அளவுக்கு இருந்துவிட்டு அவர்களுக்கு பின்பு இப்படி ஒரு காரியத்தை தன் தந்தை செய்வார் என்று ஆதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
பேசி முடித்துவிட்டு சக்கரபாணி திரும்ப ,,அங்கே நின்ற ஆதியை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் ,,அடுத்த நொடியே சமம் படுத்திக்கொண்டு “வா ஆதி…!! ஏன் வெளியவே நிக்கிற உள்ள வா” என்க “இதோ வரேன் பா” என்று உள்ளே வந்தான்.
“சொல்லு ஆதி..!!! “என்ற குரலில் சிறு பதட்டம் இருக்கவே செய்தது.
“அப்பா..!! அம்மா எங்க இருக்காங்க..??? கிட்சென் போய் பார்த்தேன் .அங்க அவுங்க இல்ல பா. அதான் அம்மா ரூம்ல இருக்காங்களான்னு பாக்க வந்தேன் “என்றான்.
“அம்மா இங்க இல்ல டா.ஸ்டோர் ரூம்க்கு போனா எதோ பொருள்ள எடுக்க நீ போய் அங்க பாரு டா ” என்றார்.
” சரிங்க அப்பா நான் போய் பாக்குறேன் ” கிளம்பவும் சாந்தாயி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
வளர்மொழிக்கு தன் அண்ணன் குடும்பத்தின் நினைவு வர ,, ஸ்டார் ரூமிற்கு சென்று அங்கே இருந்த ஒரு பெட்டியை எடுத்தார்.
தன்னிடம் இருந்த சாவிக் கொத்தை எடுத்து அதில் இருந்த ஒரு சாவியை வைத்து அந்த பெட்டியை திறந்தார்.
அதில் வீரராஜேந்திரனின் குடும்ப புகைப்படம் இருந்தது. அவர் அண்ணன் குடும்பத்தின் நினைவாக இருக்க கூடியவை அது ஒன்று மட்டுமே.
அதில் இருந்த ஒரு புகைப்படம் மட்டும் எவர் கண்ணுக்கும் படாமல் பறந்தது.
ஆதி தன் அன்னையை தேடி ஸ்டோர் ரூம் சென்றான்.அங்கு சென்று பார்த்தால் ஒரு புகைப்படத்தை கட்டிக்கொண்டு விசும்பிக் கொண்டு இருந்தார்.
“அம்மா’ என்ற அழைப்புடன் அவரை நெருங்கி இருக்க ,,அவரோ அவனை அணைத்து விசும்ப ஆரம்பித்தார்.
“அம்மா அழாதீங்க மா ப்ளிஸ்…எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீங்க இப்போ அழுகிறதுனால போன உயிர் வர போறது இல்ல மா. அழுகாதீங்க ‌… அவுங்களோட விதி முடிச்சிட்டு மா அதான் அவுங்கள கடவுள் கூட்டிட்டு பொய்ட்டாரு “என்று அவரை தேற்ற முயன்றான்.
“இல்ல ஆதி .இது விதியோட சதி கிடையாது. இது சில பேரோட சதி டா . அவுங்க ஆசைக்காக என் அண்ணன் குடும்பத்தையே அழிச்சுடாங்க . முகில்ல மட்டும் தான் எங்களால காப்பாத்த முடிஞ்சிது . இந்த குடும்பத்தோட மகாலட்சுமியை இழந்துட்டோம் டா” என்று வளர்மொழி கூற ஆதி அதிர்ந்து நின்றான்.
“டேய் சக்கர…!!! எதுக்கு இப்போ என்ன வர சொன்ன..??? என்ன விஷயம்…???” என்று சாந்தாயி சக்கரபாணியிடம் கேட்க ,,
“சித்தி சீக்கிரமா அந்த வீரராஜேந்திரன முடிக்கனும் “என்க
“அப்படி என்ன நடந்துச்சின்னு இப்படி சொல்லிட்டு இருக்க..??? “என்று சாந்தாயி கேட்க அடியால் ஃபோனில் சொன்ன அனைத்தையும் சொன்னான்.
“அவன் சொல்ற மாதிரி அவனோட பொண்ணு அதான் நமலோட உயிர எடுக்க பொறந்தான்னு ஒரே காரணத்துக்காக தான அன்னைக்கு அவ்ளோ பெரிய சதி பண்ணி அவள அழிச்சோமே .அவ எப்படி திரும்பி வர முடியும்..நீ பாட்டுக்கு அவன சாக அடிச்சிறாத அப்பறம் நம்ம கஷ்ட பட்ட எல்லாம் ஒரே நொடில்ல வீனா பொய்டும் “என்க
அவரது மனம் அதை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்க ,,”சரி வா நாம போய் சாமிய பாத்துட்டு வந்தரலாம் கிளம்பு “என்று சொல்லிய பின்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் சாந்தாயி.
“என்னடா இது இந்த ஆதி கை கழுவ தான போனான் .வீட்ல டெட்டால் இல்லன்னு டௌனுக்கே பொய்டானோ” என்று எண்ணி கீழே வர சக்கரபாணி கார் கீயை எடுத்து கொண்டு வெளியே செல்ல அவர் பின்னாடியே சாந்தாயும் சென்றார்.
சக்கரபாணி சாந்தாயி காரில் ஏறிய அடுத்த நொடி வண்டியை எடுக்க அந்த நேரம் பார்த்து குடுகுடுப்பு காரன் அவர்களது வீட்டின் முன் நிற்க ,,”சக்கர வண்டியை நிறுத்து” என சாந்தாயி கூற அவரும் வண்டியை நிறுத்த குடுகுடுப்பு காரன் கூறுவதை கேட்க தொடங்கினர்.
“இந்த வீட்டுக்கு அழிவு காலம் வந்துடுச்சிங்கோ வந்துடுச்சி . அவ வர போறா தப்பு பண்ணவுங்கல அழிக்க வரப் போறா தாயி. என் தாயி இத என்கிட்ட சொல்லுச்சிங்கோ . அவள அழிக்க நினைச்ச எல்லாத்தையும் அழிக்க பிறந்துருக்கா .நீங்க அவள அழிச்சிடோம்ன்னு நினைக்கிறீங்க . ஆனா அவ உங்கள அழிக்கிறதுக்காக வருவா .இது என் தாய் மேல் சத்தியம் ” என்று குடுகுடுப்புகாரர் கூறிய அந்த நேரம் பார்த்து காற்றில் பறந்து கொண்டு இருந்த புகைப்படம் சக்கரபாணி முன் விழுந்தது .
குடுகுடுப்பு காரர் குரல் கேட்டு ஆதி வளர்மொழி முகில் முவரும் வெளியே நின்று இதை கேட்டனர்.
காரை விட்டு இறங்கிய சக்கரபாணி,,அந்த புகைப்படத்தை எடுத்து பார்க்க ,,அவரது கை கால்கள் எல்லாம் நடுங்க தொடங்கியது.. அவரை தொடர்ந்து இறங்கிய சந்தாயியும் அந்த புகைப்படத்தை பார்த்து பேர் அதிர்ச்சி கொண்டார்.
“சித்தி அப்போ வீரராஜேந்திரன் சொல்றது உண்மையா…????”என்க
“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு சக்கர …வா நாம போய் சாமிய பாத்துட்டு வந்தரலாம் “என்று கூற பலத்த காற்று அடித்ததால் சாந்தாயி கையில் இருந்த புகைப்படம் பறந்தது.
சக்கரபாணி மற்றும் சாந்தாயி காரில் ஏறி சாமியை பார்க்க சென்றிட …,, வளர்மொழி ஆதி மற்றும் முகில் முவரும் வீட்டினுள் சென்றனர்.
அம்மா ஒரு நிமிஷம் நில்லுங்க.. என்றான் ஆதி.” சொல்லு ஆதி ” என்க ஆதி “அம்மா இந்த வீட்ல என்னமோ எங்களுக்கு தெரியாம நடக்குது . கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க மாமா ஃபோட்டோவ வச்சி அழுத்துட்டு இருந்தீங்க . அவங்களோட டெத் அக்சின்டளா நடந்தததா தான இந்த ஊரே சொல்லுது . ஆனா நீங்க அது கொலைன்னு சொல்றீங்க .முகில மட்டும் தான் காபாத்த முடிஞ்சதுன்னு சொன்னீங்க. சொல்லுங்க ம்மா இந்த வீட்ல என்ன நடக்குது…??? என்றான் ஆதி.
ஆதி சொல்வதை கேட்டு முகிலுக்கு பேர் அதிர்ச்சியாக இருந்தது. அவன் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
இதனை பார்த்த ஆதி முகிலின் வலது கையை இறுக பிடித்துக்கொண்டான். முகிலுக்கு அந்த பிடிப்பு தேவையாக இருந்தது.
“இப்பவாவது சொல்லுங்க அம்மா …,,மாமாவ கொலை பண்ணாங்கன்னு சொன்னது உண்மையா…???”என்க வளர்மொழியோ முகிலையே பார்த்து கொண்டு இருந்தார்.
*********
அஞ்சலியை எதிர் பார்த்து சோஃபாவிலே சுபா அமர்ந்திருக்க ,,லதா அவளை அழைத்து மீனுவுடன் இருக்குமாறு அனுப்பி வைத்தாள்.
மீனு பல கேள்விகளை மனதில் வைத்துக்கொண்டு நிம்மதிக்காக உறங்கிக்  இருந்தாள்.
மீனு அறைக்கு சென்ற சுபா ,,அவள் உறங்குவது தெரிந்த பின் அந்த அறையை சுற்றி பார்த்த பின் அறையை விட்டு வெளிய கிளம்ப எத்தனிக்க அதற்குள் மீனு எழுந்துக்கொண்டு ,,சுபாவை பார்த்து “எங்க போறீங்க…??? “என்றாள் மீனு.
” இல்ல அண்ணி அம்மா தான் உங்க கூட இருக்க சொன்னாங்க . அதான் வந்தேன்,,நீங்க தூங்கிட்டு இருந்தீங்க அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நினைச்சேன் “என்றாள் சிறு தயக்கம் கலந்து.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை வாங்க வந்து இங்க உட்காருங்க “என்க அவளும் மீனு பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
“அண்ணி..!!! உங்க நேம் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..??? “என்று தயங்கியபடியே சுபா கேட்க ,,
“இதுக்கு எதுக்கு உங்களுக்கு தயக்கம் என்று கூறிவிட்டு என்னோட பேரு அஞ்சனா வீட்ல எல்லாரும் மீனுன்னு கூப்பிடு வாங்க “என்றாள்.
பின்னர் அவளுக்குள் இருந்த தயக்கம் உடைந்து மீனுவுடன் சகஜமாக பேசத் தொடங்கினாள் சுபா.
பவியின் அறையிலோ பவி அழுது கொண்டே இருக்க ,,அவளை சமாதானம் செய்ய வழி தெரியாமல் விழி பிதுங்கி போனாள் திவ்யா.
சுசிலா பரப்பரபாக வேலைப் பார்த்து கொண்டிருக்க யாரோ ஒருவர் வீட்டினுள் நுழைவதை பார்த்து நிற்க….
“ஹலோ ஆண்டி…!!! என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று சுசிலாவின் காலில் விழ “நல்லா இரு மா “என்று ஆசிர்வாதம் செய்து விட்டு..,,
“யாரு மா நீ..???”என்க
“அவ வேற யாரும் இல்ல அண்ணி என் அண்ணன் பொண்ணு நம்ம அர்ஜுனோட தங்கச்சி அஞ்சலி” என்று கூறிக்கொண்டே லதா அங்கே வந்தாள்.
“பத்மாவதி பசங்களா அர்ஜுனும் அஞ்சலியும் “என்று கேள்வியாய் நோக்க
“ஆமா அண்ணி ரெண்டு பேரும் பத்மா அண்ணி பசங்க தான்” என்க சுசிலாவிற்கு சந்தோஷமாக இருந்தது. அடுத்த நொடி ஜோசியர் அன்று கூறிய அனைத்தும் அவருக்கு மனதில் படமாக ஓட அந்த சந்தோஷம் கூட
காணாமல் போனது.
அதன்பிறகு ,, அனைவரிடமும் அறிமுக படுத்திய அஞ்சலி இறுதியாக மணமக்களை வாழ்த்தினாள்.
மீனுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது மேலும் வஞ்சகத்தை அஞ்சலி வளர்த்துக் கொண்டாள்.
விருந்தினர்கள் அனைவரும் கிளம்பிவிட ,,இரவு உணவை அனைவரும் சேர்ந்து உண்டு முடித்தனர் .
பின்னர்,,மீனுவின் கையிலிலும் பவியின் கையிலும் புடவையை கொடுத்து மாற்றி விட்டு வர சொல்ல,,இரு பெண்களும் அவர்களது கணவன்மார்களை நோக்க அவர்கள் இருவரும் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் அமைதியாகவே இருந்தனர் .
“அம்மா” என்று இருவரும் ஒரே சமயம் கத்த ,,
“போங்க டி போங்க ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று அவர்களை விரட்டி விட்டார் சுசிலா.
“திவ்யா மா நீயும் அவுங்களோட போ மா.. இல்லன்னா அவுங்க ரெண்டு பேரும் கிளம்ப மாட்டாங்க” என்றார் புவனா.
கதிரையும் செல்வாவையும் அபி மற்றும் அர்ஜுன் இருவரும் சேர்ந்து வகுப்புகள் எடுத்தனர். ஆனால் பாவம் அவர்கள் இருவரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை , ஏதோ யோசனையிலே இருந்துவிட்டனர். இதுவே இவர்கள் இருவரும் நார்மலாக இருந்திருந்தால் இங்கு நடப்பதே வேறாக இருந்திருக்கும்.
அஞ்சலி தனக்குள் ஏற்பட்ட கோபத்தை கஷ்ட பட்டு தாக்கு பிடித்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
மீனுவிற்கு பவியை பார்க்கும் போதெல்லாம் ஏதோ குற்ற உணர்வாகவே இருந்தது. அதற்கு மேல் பவியும் அதே போல் தான் யோசித்து கொண்டு இருந்தாள்.
மீனுவும் பவியும் கிளம்பிவிட ,,திவ்யா அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.மீனு பவியை பார்த்து ” பவி நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்க
“சொல்லு மீனு …என்ன விஷயம்..???” என்று கேட்க
” எனக்கு இங்க என்ன நடக்குன்னே தெரியல..??ஏதோ மாயம் மாதிரி இருக்கு ..நேத்து வரைக்கும் எனக்கும் கதிருக்கும் திருமணம் என்று இருந்தது.ஆனா இப்போ நான் செல்வா கட்டுன தாலியை சுமந்துட்டு இருக்கேன்.எனக்கு இதுல மனச போட்டு குடையிற ஒரே கேள்வி உனக்கும் கதிருக்கும் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க…???” என்று தன் மனதில் உழன்று கொண்டிருந்த கேள்வியை கேட்டாள்.
அதற்கு பவியோ ” இது எல்லாமே விதியோட விளையாட்டு மீனு. யாருக்கு என்னன்னு இருக்கோ அது தான் அவுங்க வாழ்க்கைல நடக்கும். அத மாத்தனும்ன்னு நினைச்சா அது அவுங்களையே அழிச்சிடும் . கிருஷ்ணர் சொன்னது தான் நான் இப்போ உனக்கு சொல்றேன் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். இது தான் இப்போதிக்கு சொல்ல முடியும்” என்றாள். மீனுவிற்கு மேலும் குழப்பம் தான் ஏற்ப்பட்டது.
அதற்குள் அவர்களை காண அங்கே லதா ,புவனா மற்றும் சுசிலா வந்தனர்.
“இரண்டு பேரும் தேவலோகத்தில இருக்கிற தேவதை மாதிரியே இருக்கீங்க டா “என்று கூறி நெட்டி கழித்தார் புவனா .
பின்னர்,, அவர்கள் இருவரையும் சுபா அஞ்சலி திவ்யா மற்றும் சிந்து சேர்ந்து அழைத்து சென்று,, ரூமிற்குள் விட்டனர்.
இருவரும் பதட்டாமாகவே அறைக்குள் சென்றனர். ஆனால் அவர்களுக்கு இருக்கும் பதட்டம் வேற மாதிரியாக இருந்தது.
அபி சொன்ன படியே அர்ஜுன் மாடிக்கு வந்திருந்தான். அபி இன்னும் வராததால் அவனுக்காக காத்திருக்க தொடங்கினான்.
அங்கே சுசிலா அறையில் கவலையாக அமர்ந்திருக்க ,,அதனை கண்ட ராஜன் அவர் அருகே வந்து அமர்ந்து ” சுசி மா என்ன ஆச்சி உனக்கு..??? ஏன் இப்படி மூஞ்ச தூக்கி வச்சிருக்க…???” என்று கேட்க
” ஏங்க அந்த ஜோசியர் சொன்னது போல் ஒவ்வொன்னா நடக்குதுங்க . எனக்கு ரொம்ப பயமா இருக்கு ” என்று கூறி அழுக தொடங்கினார் .
“இங்க பாரு சுசி மா‌…நீ ஒன்னும் பயப்பிடாத சரியா..!!! அந்த மாதிரி எதுவும் நடக்காது .நீ கவல படாம இரு…. ஜோசியர் சொன்னது போல் நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகாது .நீ பயப்படாம இரு “என்றார் ராஜன்.
“ஜோசியர் என்ன சொன்னனாரு அண்ணா..???? மீனுக்கு என்ன பிரச்சினை…??எதுக்கு அண்ணி இப்போ இப்படி பயப்படுராங்க..???” என்று கேள்வி கேட்டுக்கொண்டே அறைக்குள் வந்தார் லதா .
சுசிலாவுக்கும் ராஜனிற்குள் என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் இருவரும் லதாவை பார்த்தப்படி நின்றனர்..

Advertisement