Advertisement

வெளியே சங்கி களைப்பாக நிற்கவும்,
“எரும.. எங்கடி போன..? என்று மீண்டும் ஆரம்பித்தாள்.
“கொஞ்சம் நிறுத்து வினி..! நானே டயர்டா வந்திருக்கேன்..! ஊரா இது..? பாஷையும் புரியலை ஒன்னும் புரியலை. நாம அப்பவே ஒழுங்கா ஹிந்தி கிளாஸ கட்டடிக்காம இருந்திருந்தா இப்ப இந்த தொல்லை இல்லை. ஒரு வழியா ஷாப்பிங் முடுச்சுட்டேன்..! என்றாள்.
“எரும உன்னோட நம்பருக்கு போன் போட்டா வேற யாருக்கோ போகுது. இப்போ தான் செம்மையா டோஸ் வாங்குனேன். பாவம் யாரு பெத்த புள்ளையோ…? தமிழ் தெரியாது போல, இல்லைன்னா இன்னும் என்னை பேசியே கொன்றுப்பான்..! என்றாள் அஸ்வினி.
“எனக்கு கால் வரவே இல்லை. புது நம்பரை மாத்தி சேவ் பண்ணி வச்சிருப்ப..ஒழுங்கா அதைப் பார்த்து சரி பண்ணு. இவ தப்பா சேவ் பண்ணிட்டு, என்னை முறைக்கிறா..? என்று சங்கி முறைத்துக் கொண்டே சொல்லி விட்டு செல்ல,
“அப்படியும் இருக்குமோ..? என்று அவள் செல்லைப் பார்க்க போக, அதற்குள் அவன் கட் செய்திருந்தான்.
ட்ரு காலரில் ‘வினி என்று இருக்க, அவர்கள் பேசியதில் இருந்து தெரிந்தது அவர்கள் தமிழ் பெண்கள் என்று. அந்த நிமிடத்தில் அவன் அவளை மறந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
“என்னடி வாங்கிட்டு வந்த..? இதுக்குத்தான் சொன்னேன், நானும் வரேன்னு..! என்றபடி இருவரும் சங்கி வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
அவள் அந்த ராங் நம்பரை சரி செய்ய அப்போதைக்கு மறந்து விட்டாள்.
“யாருடி அந்த ராங் நம்பர்..? ரொம்ப திட்டிட்டானா வினி..! என்றாள் சங்கி.
“ஐயோ இல்லைடி..! நான் தான் நீன்னு நினைச்சு போனை எடுத்த உடனே எருமை அப்படி இப்படின்னு திட்ட ஆரம்பிச்சுட்டேன்..! அவனுக்குத் தமிழ் தெரியலை. இல்லைன்னா அவ்வளவு தான். பதில் என்னமோ இங்கிலிஷ்ல தான் சொன்னான்… என்றாள்.
“அவனுக்கு தமிழ் தெரியாதுன்னு எப்படி சொல்ற..? ஒரு வேலை தெரிஞ்சிருந்தா..? நீ பேசுனது தமிழ்ன்னு தெரிஞ்சதால தான் அவன் உன்கிட்ட ராங் நம்பர்ன்னு சொல்லியிருக்கான். இல்லைன்னா நீ நம்பர் மாத்தி கால் பண்ணியிருக்கேன்னு அவனுக்கு எப்படித் தெரியும்..? என்றாள் சங்கி.
“அட ஆமாம்ல..! இதை நான் யோசிக்கவே இல்லை பாரு..! என்று தலையில் அடித்தவள், போனை எடுத்துப் பார்க்க,
“சங்கி என்று போட்டு இரண்டு நம்பரை மாற்றி சேவ் செய்து வைத்திருந்தாள்.
“அந்த செல்லை வச்சுட்டு வாடி..! ஏதாவது சமைக்கலாம் பசிக்குது. இந்த மங்கியும் நம்ம கூடவே வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..! என்றபடி அவள் புலம்ப, அந்த நேரத்திற்கு அவளுடைய போனில் இருந்து அந்த நம்பர் அழிக்கப்படவில்லை.
அதற்கு பிறகு அவளுடைய அம்மா போன் செய்ய, அவர்களுடன் பேசிக்கொண்டே நேரம் சென்றது அஸ்வினிக்கு. தூங்கப் போகும் போது அந்த ராங் நம்பர் நியாபகம் வந்தது. அந்த குரலில் இருந்த கம்பீரம் தான் அதற்கு காரணம்.
“யாருன்னே தெரியலை..? இதுல குரல் எப்படி இருந்ததுன்னு ஆராய்ச்சி வேற..?சீ..போய் தூங்கு..! என்று மனசாட்சி காரித் துப்ப, படுத்தபடியே யோசித்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.
அந்த நம்பர் டிலீட் செய்யலாம் என்று எண்ணியவள், அதை அழிக்க போக..
“ரொம்ப பேசிட்டோம்..! ஒருசாரி சொல்லி மெசேஜ் அனுப்பிட்டு டிலீட் பண்ணிடலாம் என்று எண்ணி மெசேஜ் செய்ய போக, அந்த  எண்
வாட்ஸ்அப் எண் என்று காட்டியது.
“பேசாம வாட்ஸப்லயே அனுப்பிடலாம்.. என்று நினைத்தவள்,
“சாரி சார்..! இட்ஸ் மை மிஸ்டேக்..! என்று டைப் செய்துவிட்டு, அனுப்பலாமா, வேண்டாமா என்று நூறு முறை யோசிக்க, கடைசியில் மனமே இல்லாமல் அனுப்பிவிட்டாள்.
அனுப்பிய பிறகும், கைகள் சும்மா இல்லாமல் அந்த நம்பரின் ப்ரோபைல் பிக்ச்சரைத் தொட, அந்து விரிந்து அவள் கண் முன்னால் நின்றது.
டை கட்டியபடி, மேல்கோட்டை கழற்றி இடது கையில் வைத்துக் கொண்டு அவன் நின்றிருந்த தோற்றம், அவளையும் அறியாமல் அவள் மனதில் இறங்கினான் மித்ரன்.
“செம்மையா இருக்கான்..! என்று அருகில் படுத்திருந்த சங்கி பார்த்துவிட்டு சொல்ல,
“நீ எப்படி இங்க வந்த..? என்றாள் அஸ்வினி.
“ம்ம்..நீ சாரி சார், மை மிஸ்டேக்ன்னு மெசேஜ் அனுப்புன பார்த்தியா அப்பவே வந்துட்டேன்..! என்றாள்.
“அதை ஏன் இப்படி கிட்ட வந்து சொல்லி பயமுறுத்துற..? என்றாள்.
“ஆள் செம்மையா இருக்கான்ல..? ம்ம்ம் எவளுக்கு குடுத்து வச்சிருக்கோ..? என்று பெருமூச்சு விட்டாள் சங்கி.
“ஏண்டி இப்படி பேசுற..? கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம..? என்று வினி கேட்க,
“இதென்னடி வம்பா இருக்கு? அவன் அழகா இருக்கான். கொஞ்சம் கருப்பு தான்..! ஆனா எப்படி நிக்குறான் பாரு..! அதைத்தான் சொன்னேன். அழகா இருந்தா சைட் அடிக்கலாம் தப்பில்லை..! என்றாள்.
“அவனுக்கு கல்யாணம் ஆகி இருந்தா..? என்றாள் வினி.
அவளை ஒரு மாதிரி பார்த்தவள்.. நான் என்ன இப்ப அவனை லவ் பண்றேன்னா சொன்னேன்..! சைட் தாண்டி அடிச்சேன்..! அதுக்கு அவன் கல்யாணம் ஆகாதவனா தான் இருக்கனும்ன்னு அவசியம் இல்லை. அப்படி பார்த்தா கல்யாணம் ஆனா ஒரு ஆக்டரை கூட சைட் அடிக்க முடியாது..! என்றாள் சங்கி.
“அம்மா தாயே..! தெரியாம கேட்டுட்டேன். நீ சைட் அடி இல்லை அடிக்காம போ..! என்னை ஆளை விடு.. என்றபடி படுத்துவிட்டாள்.
“இவனைப் பார்த்தா பாம்பே கலர் மாதிரி இல்லையே..? மீசை எல்லாம் வெச்சிருக்கான். இங்க இருக்கவனுக ஆசை வைக்கிற அளவுக்கு மீசை வைக்க மாட்டனுகளே…? இவன் நிச்சயம் தமிழ் பையனா தான் இருக்கணும்..! என்றாள்  சங்கி.
“நான் கேட்டனா..? இல்ல நான் கேட்டனா..? என்றாள் வினி.
“நீ கேட்கலை..! இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை பாரு..! என்றபடி சங்கி சிரிக்க, அங்கே மித்ரனோ அந்த நம்பரில் இருந்து வந்த மெசேஜை வெறித்துக் கொண்டிருந்தான். ஆனால் பதில் அனுப்பவில்லை. அவனுக்கு இப்படி பெண்களை பொதுவாக பிடிப்பதில்லை. தன்னுடன் பேச இதை வாய்ப்பாக ஏற்படுத்த முயல்கிறாள் என்று எண்ணினான்.
அவன் யார் என்றே அவளுக்குத் தெரியாது என்று சொன்னால் மித்ரன் நம்பவா போகிறான்.
நாம் அறியாமல் செய்யும் ஒரு சின்ன விஷயம், ஒரு சின்ன பிழை சிலரின் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும். அஸ்வினியின் நிலையும் அப்படி தான் ஆனது.
அந்த நம்பரை அவள் செல்லில் இருந்து அழிக்கவும் இல்லை. அதே சமயம் அவன் பதில் அனுப்பாதது அவளுக்கு பெரிதாகத் தெரியவுமில்லை. ஆனால் ஏதோ ஒரு உணர்வு. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது அவனின் போட்டோவைப் பார்த்து விடுவாள்.
அவளும், சங்கியும் தங்களுடைய ஒரு ப்ராஜெக்டிற்காக மும்பை வந்திருந்தனர். அந்த நகரம் அவர்களுக்கு முற்றிலும் புதிது. அவர்களுடைய சீனியர் பெண்கள் மூவர், உடன் தங்கியிருந்தனர்.
இப்படியே ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் சென்றது அஸ்வினிக்கு. ஏதோ மித்ரனின் போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம்..அவளுக்குள் ஒரு உற்சாகம் தானாக வந்துவிடும். அவனின் அந்த புகைப்படத்தை சேமித்தே வைத்து விட்டாள்.
எதற்காக அவன் போட்டோவைப் பார்க்கிறாள்..? ஏன் பார்க்கிறாள் என்றாள் அதற்கு அவளிடம் பதில் இல்லை.ஆனால் பார்க்கிறாள்.
அஸ்வினி மும்பைக்கு வந்து ஆறுமாத காலம் ஓடியிருந்தது. இப்போது மும்பையை கொஞ்சம் அவளுக்குப் பிடிக்கக் கூட செய்தது.
“இன்னைக்கு லீவ்… என்ன பண்ணலாம்..? என்று சங்கி யோசித்துக் கொண்டிருக்க,
“ஒன்னும் பண்ண முடியாது. சீனியர் மூணு பேரும் ஆபீஸ் போய்ட்டாங்க..! என்றாள் அஸ்வினி.
“அவங்க இல்லைன்னா…இந்த மும்பைல ஒரு இடத்துக்கு கூட நம்மால போக முடியாதா…? இன்னைக்கு நாம வெளிய போறோம்..! ஊர் சுத்துறோம்..! என்றாள் சங்கி.
“வேண்டாம் சங்கி..! என்றாள் அஸ்வினி.
“என்னா வினி..! நாம இங்க வந்ததுல இருந்து எங்கயுமே போகலை. இன்னும் ஆறுமாசம் கழிச்சு திரும்பியும் சென்னைக்கு தான் போகப் போறோம்..! சோ இன்னைக்கு கண்டிப்பா வெளிய போறோம்..! என்று சங்கி ஆணித்தரமாக சொல்லி விட்டாள்.
மனமே இல்லாமல் கிளம்பினாள் அஸ்வினி. ஜீனும், வெள்ளைக் குர்தியுமாக கிளம்பி வந்தாள்.
“இந்த முடியை வெட்டுன்னு சொன்னா கேட்குறியா..? இவ்வளவு முடியும், இந்த ஜீனும் பட்டிக்காடு மாதிரியே இருக்கு வினி..! என்றாள்.
“நான் என்ன பண்ண..? அம்மாகிட்ட கேட்டுட்டு வெட்டிக்கிறேன்..! என்றாள்.
சங்கி அவளை முறைக்க…சரி சரி நேரமாகிட்டது வா..! என்று அவளைத் தள்ளிக் கொண்டு சென்றாள். இருவரும் ஊர் சுற்ற தயாராகினர்.இனி நடப்பதை அறியாமல்.
 

Advertisement