Advertisement

அத்தியாயம் 27
அல்லோல பட்ட மனது
அந்திமாலையில் உன்னருகே
அமைதி கொண்டது!
பெண்ணே! நீ என்ன செய்தாய்?
மாயம் செய்தாயோ?!
தன்னை இத்தனை நாட்களாய் சீராட்டி பாராட்டி ஊக்குவித்து வளர்த்து ஆளாக்கியது தன் சொந்த பாட்டி இல்லை என ரவி சொன்னதும் பெண்ணவள் ஆராதனா ஸ்தம்பித்து போனாள். செய்தி செவி வழி சென்று மூளையில் உரைக்கவே சில நொடிகள் எடுத்தது.
“என்ன சொல்றீங்க ரவி?”அதிர்ந்து கேட்டாள் ஆராதனா.
“ஆமா ஆரு. எனக்கும் இந்த விஷயம் தெரிஞ்சப்போ ஷாக்கா தான் இருந்தது. அவர்கள் என்னை பார்த்துக்க எங்க அப்பா ஏற்பாடு பண்ணியிருந்த லேடியாம். ஆனால் சொந்த பேரனை பார்த்துக்கிறது மாதிரி அவ்ளோ நல்லா பார்த்துக்கிட்டாங்க. எனக்கு அவர்கள் உறவு கிடையாது அப்படின்னு எப்பவுமே பீல் பண்ண முடியாத அளவு கேரிங்கா பார்த்துப்பாங்க. அல்சோ செம டலேண்ட் பெர்சன். அவங்களுக்கு தெரியாத விஷயம்னு எதுவும் கிடையாது. வயசானாலும் என்னோட வயசுக்கு ஈக்குவலா பேசுவாங்க. தான் ஒரு பெரிய ஆள் அப்படின்னு ஒரு நாளும் என்கிட்ட நடந்துகிட்டதே கிடையாது. அதனாலயே எனக்கு அவங்க ரொம்ப இஷ்டம்.
அப்போ தான் ஒருநாள் எனக்கு அவர்கள் என்னோட சொந்த பாட்டி இல்லைன்னு தெரிஞ்சி. ரொம்ப கஷ்டமா போயிடிச்சி. அம்மாவும் போயிட்டாங்க. உயிருக்கு உயிரான பாட்டியும் சொந்தமில்லை, கூட வேற எங்க அப்பாவுக்கு என்னோட உறவுகள் அடுத்த கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணாங்க. சோ எல்லாம் சேர்ந்து என்னோட மனசுல ஒரு குழப்பத்தை உண்டாக்கிற்று. அப்போ எனக்கு என்ன தெரியும்? சின்ன வயசு. ரொம்ப ஒர்ரி பண்ணிக்கிட்டு யார்கிட்டையும் சொல்லாம வீட்டை விட்டு வெளியே போயிட்டேன்”.
“ஹய்யய்யோ… அப்புறம் என்ன ஆச்சி”.
“டி.. முதல போண்டா வாயை மூடு. பொறுமையா இரு நானே சொல்றேன். ஆமா உன்னை உங்க அம்மா அப்பா தேட மாட்டங்களா? நைட் முழுசும் ஒரு வயசு பொண்ணை காணோம்ன்னு பதறி போக மாட்டாங்களா?”
“அய்யய்யயோ.. மறந்தே போயிட்டேனே! என் அம்மா என் தோலை உரிச்சி உப்புகண்டம் போடப் போறாங்க..” பதற்றத்தில் எழுந்து நின்று தலையில் இரு கைகளையும் மூடியபடி வைத்து கொண்டாள். விழியில் மெல்லியதாக நீர்படலம்.
“ஹேய் பேபி. அழுகிறியா நீ. ஓ. கம் ஆன். கண்ணை துட. நீ நேத்து என்னை பார்த்த அதிர்ச்சியில் பேசிக்கிட்டே இருக்கும் போது அப்படியே மயங்கி விழுந்துட்ட. சாரி சாரி கிஸ் பண்ணிக்கிட்டே. அப்போ உன் ட்ரஸ் எல்லாம் ஈரமானதுனால என்னோட ட்ரஸ் மாத்தி விட்டேன்”.
“ஹே.. உன் முட்டை கண்ணை விரிச்சி பயங்காட்டத. நான் முழுசா எதையுமே பார்க்கல”.
“அப்போ அரை குறையா பார்த்தியா?!”
“ஏய். நான் அப்படி சொல்லலடி”.
“பின்ன எப்படின்னு சார் விம் போட்டு விளக்குறீங்களா”.
“அடியே. நீ நினைக்கிற மாதிரிலாம் எதுவும் நடக்கலை. பாத் டவலால் உன்னை மூடிக்கிட்டு தான் ட்ரஸ் போட்டு விட்டேன். தப்பான்னா எண்ணத்துல நான் எதுவும் பண்ணல. பிளீஸ் நம்புடி”.
“ஹ்ம்ம்..சரி சரி. போகட்டும். இந்த ஒரு தடவை மன்னிச்சி விடுறேன். ம்ம்ம் அப்புறம்?”
“அப்புறம் என்ன உன்னை பெட்ல படுக்க வச்சிட்டு நான் என்னோட ஆபிஸ் ரூம்ல போய் படுத்துட்டேன்”.
“அது சரி. இப்போ என்னோட அப்பா அம்மாக்கு என்ன பதில் சொல்லுறது?”
“நான் நேத்தே உன்னோட ஃப்ரென்ட் கீதுவுக்கு போன் பண்ணி ஆரு உன் கூட நைட் ஸ்டே பண்ணியிருக்கிற மாதிரி உன்னோட அம்மாட்ட சொல்ல சொல்லியிருக்கிறேன். அவளும் அப்படி தான் சொல்லியிருப்பா. நீ தான் உன் ஃப்ரென்ட் வீட்ல தங்குறது சகஜம் ஆச்சே. சோ உன்னை பத்தி அவங்க எதுக்கு கவலைப்பட போறாங்க”.
“எனக்கு தெரியாம இவ்ளோ வேலை பர்த்திருக்கியா தேஜா வூ”.
“எல்லாம் உன் மேல உள்ள அக்கறையினால தான் பேபி” கண்ணடித்தபடி சொன்னான்.
“பேபி யாம் பேபி. இவ்ளோ கேர் பண்ணுறவர் நேத்து நான் தனியா கஷ்டப்பட்ட போது எங்கே போய் தொலைஞ்சீங்களாம்?”
“ஏன்டி என்ன நடந்து?”
“என்ன நடந்ததுன்னு தெரியுமா?” என்று நேற்று முகம் தெரியா நபர்களால் தான் கடத்தப் பட்டதையும் பின் அந்த மித்ரன் மனம் மாறியதையும் தான் கால் தடுக்கி பெரிய பள்ளத்தில் தலை குப்புற விழுந்ததையும் அந்த கற்களின் மாய சக்தியையும் பின் நடந்த டைம் ட்ராவல் பற்றியும் கடைசியில் ரவியிடம் வந்து சேர்ந்ததையும் சொல்லி முடித்தாள்.
“இனி அந்த ஆளால் உனக்கு ஒன்னும் ஆகாதுனாலும் அவரை எனக்கு ஒரு நாள் இன்ரோ பண்ணி விடு. அந்த ஆளால் தான் நீ அலறி அடிச்சி என் கிட்ட வந்துருக்க. என் காதலை சேர்த்து வச்ச தெய்வம் டி அந்த ஆள். ஹா ஹா ஹா..”
“அந்த இக்கட்டான நேரத்திலயும் என்னை தான் நீ எதிர்பார்த்திருக்க. ரைட்? அதுவும் இல்லாம என்னை உடனே பாக்கணும்னு வேற வெறித்தனமா ஆசை பட்டிருக்க. என் செல்ல பொண்டாட்டி” என்று சொல்லியபடி ஆருவின் கன்னங்களை அழுத்தி கிள்ளினான்.
“போடா. உனக்கு விளையாட்டா இருக்கு. நான் எவ்ளோ எமோஷ்னல் ஆகிட்டேன் தெரியுமா?”
“எல்லாம் ஒரு விதத்துல நல்லத்துக்கு தான். இல்லன்னா நீ இப்போ என் கூட சேர்ந்திருப்பீயா”.
“அந்த கற்கள் நீ தான் என்கிட்ட கொடுத்தியா ரவி? அன்றைக்கு காலனி பாங்சன்ல வந்தது நீ தானே?”
“ம்ம்ம். ஆமா. ஆக்ச்சுவலா என்னோட ஃப்ரென்ட் வீட்டுக்கு தான் வந்திருந்தேன். எதேச்சையா உன்னை பார்த்தேன். அது நீதான்னு என் மனசு சொல்லிச்சி. எனக்கு தான் உன்னை தெரியும். உனக்கு என்னை தெரியாது இல்லையா சோ முன்ன பின்ன தெரியாத நான் கூப்பிட்டா நீ வருவீயோ மாட்டியோன்னு தான் அவனை அனுப்பி உன்னை கூட்டிட்டு வர சொன்னேன். அவன் தான் உங்க காலனியை சேர்ந்த ஆள் ஆச்சே. உனக்கு எப்படியும் அவனை தெரிஞ்சிருக்கும். அவன் கூப்பிட்டா வருவன்னு நினைச்சேன்.
ஆனால் நீ அவன் உன்னை ரேப் பண்ண வந்தது கணக்கா டிராமா போட்டு ஒரு சீன் கிரியேட் பண்ணிட்ட”.
“ஏய். நீ என்ன சொல்லுற. அவன் மேல ட்ரிங்க்ஸ் ஸ்மெல் அடிச்சே”.
“அதுவா? உன்னை பார்க்க வர அவசரத்துல ஒரு குடிகாரன் மேலே மோதிட்டான். அவன் கையில இருந்த டிரிங்க்ஸ் அப்படியே அவன் மேலே சு..வா..க. சோ உனக்கு அந்த ஸ்மெல் அடிச்சிருக்கும்”.
“அப்படியா விஷயம். நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?” அன்றைய நாளின் நினைவில் பெண்ணவள் தேகம் சிறிது நடுக்கம் கொண்டது.
“ஷ்.. ஷ்.. ஆரு கூல் பேபி. ஏன் டென்ஷன் ஆகுற. ரிலாக்ஸா விடு”.
“ஹ்ம்மம்ம்…” அப்போது தான் நினைவுக்கு வந்தது அன்று இருளில் கையை பிடித்து இழுத்து மனிதன் தன்னை ரேப் பண்ணும் பொருட்டு நெருங்காததை. ‘சரி தான். அவன் ஒன்றும் செய்யாமலே நாமாக கற்பனை பண்ணி கொண்டு கத்தி கூப்பாடு போட்டிருக்கிறோம்’.
“அப்புறம் ஏன் நீ என்னை அன்றைக்கு பார்க்காமலே போயிட்ட?”
“அதுவா. நான் உனக்கு குடிக்க தண்ணீர் எடுத்துட்டு திரும்பி வந்து பார்க்கும் போது உன் ஃப்ரென்ட்ஸ் எல்லோரும் இருந்தாங்க. எல்லோரும் யாரோ உன்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணியிருக்காங்க அப்படின்னு நினைச்சி ஏதேதோ பேசிட்டிருந்தாங்க.
அந்த டைம்ல நான் என்ட்ரி ஆன என்னை வில்லன் மாதிரி பார்ப்பாங்க. சோ நான் திரும்பி போயிட்டேன். மனசுக்கு கஷ்டமா தான் இருந்து உன்கிட்ட பேச முடியலயேன்னு. ஆனாலும் என்னோட நினைவா அந்த கற்கள் உன்கிட்ட இருக்கட்டும்னு நினைச்சேன்.
அந்த கற்களோட சக்தி எப்படியாவது நம்மை சேர்த்து வைக்கும்ன்னு எனக்கு தோணிச்சி. இப்போ அதே மாதிரி நடந்திருச்சி”. இருவரது முகத்திலும் இப்போது மென்னகை தவழ்ந்தது.
“அதுமட்டும் இல்லாம நான் ஏதாவது ஒன்னு சாதிச்சத்துக்கு அப்புறம் தான் உன்னை வந்து சந்திக்கணும்னு நினைச்சிருந்தேன். சோ அந்த காலனி பங்சன்ல நடந்தது நல்லத்துக்குன்னு நினைச்சி திரும்ப அமெரிக்கா போயிட்டேன்”.
“நல்லா சாதிச்சி கிழிச்ச போ”.
“ஏன்டி?”
“பின்ன அந்த கற்கள் எப்படி என்கிட்ட வந்ததுன்னு தெரியாம குழம்பி அன்றைக்கு உன்னை நான் சந்திச்சேனா இல்லையா? அப்படி இப்படின்னு என்னை நானே குழப்பிக்கிட்டு அந்த ஆளுக்கு நான் தேஜா வூ அப்படின்னு பெயர் எல்லாம் வச்சேன்”.
“ஹா ஹா ஹா… இருக்கு ஆனால் இல்லை அதானே தேஜா வூ மீனிங்?”
“உனக்கு சிரிப்பா தான் இருக்கும். போடா. நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்”.
“என்னோட அம்மு இவ்ளோ ஓர்ரி பண்ணியிருப்பான்னு தெரிஞ்சிருந்தா ஓடோடி வந்திருப்பேனே. இவ்ளோ நாள் டிலே ஆகியிருக்காதே” என்றபடி அவள் காதோடு அவனிதழ்கள் சரசமாடின.
“ம்ம்ம்.. ஆசை தோசை அப்பளம் வடை தள்ளி போடா”.
“ஏய்..தள்ளி போகதே எனையும் தள்ளி போக சொல்லாதே..
இருவர் இதழும்..”
என்று தன் வசீகர குரலால் மேலே பாடப் போனவனின் இதழில் கைகளை பொத்தி அவனை தடுத்தவள் “போதும் ராசா. முதல சொந்த கதையை சொல்லி முடி. இப்பவே விடிஞ்சிருச்சி. நான் சீக்கிரம் வீட்டுக்கு போகணும்”.
“மனுஷனை கொஞ்சம் ரொமான்ஸ் பண்ண விட மாட்டாளே. இருடி. சொல்றேன்” என்றபடி தொடர்ந்தான்.
“நெஸ்ட் டைம் நான் உன்னை ரோடு கிராஸ் பண்ணுறப்போ காப்பதுனேன். என்னோட நடவடிக்கைகளை பார்த்துட்டு பாட்டிக்கு சந்தேகம் வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏனோ என்னை உடனே கிளம்ப சொல்லிட்டாங்க. அன்றைக்கு மீட்டிங் வேற அர்ஜெண்டா போக வேண்டி இருந்து. சரி தான் பாட்டிட்ட உன்னை ஒப்படைச்சிட்டு நான் போயிட்டேன்”.
“ஓ. அப்படியா. அன்றைக்கு பாட்டியும் இப்படி தான் சொன்னாங்க. ஆனா முழுசா சொல்லல”.
“உனக்கு ஒழுங்கா ரோடு கிராஸ் பண்ண கூடவா தெரியாது. லூசு லூசு. எப்படி பயந்துட்டேன் தெரியுமா?”
“ஹீ ஹீ ஹீ.. ஏதோ அவசரத்துல போயிட்டேன். காட் பிராமிஸ் இனி அப்படி பண்ணவே மாட்டேன்”.
“உங்களுக்கு அந்த கற்கள் எப்போ எப்படி கிடைச்சி ரவி? அந்த மேஜிக் ஸ்டோன் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும். சீக்கிரம் சொல்லுங்களேன். எனக்கு ஆர்வத்துல தலையே வெடிச்சிரும் போல இருக்கு” என்றபடி அவன் கைகளை அவள் கைகளுக்குள் அடக்கி கொண்டாள்.
“எனக்கு அந்த கற்கள் எப்படி என்கிட்ட வந்ததுன்னு சரியா நியாபகம் இல்லை ஆரு. அப்போ நான் ரொம்ப சின்ன பையன். நடந்தது எதுவும் சரியா தெரியல. ஆனால் எனக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் போது தான் அந்த கற்களோட பவர் பற்றியும் அந்த கற்கள் ஏன் என்கிட்ட இருக்குதுன்னும் முழுசா தெரிஞ்சிகிட்டேன்”.
“எப்படி எப்படி?”
“என் அம்மா”.
“என்ன சொல்றீங்க? உங்க அம்மாவா?”
“ம்ம்ம். என்னோட அம்மா தான் தந்துருக்கணும். ஏன்னா அந்த கற்கள் கூடவே என்னோட அம்மாவோட ஹேண்ட் பாக் இருந்து. கூட அந்த கற்கள் பற்றின குறிப்பும் எங்க அம்மா கையெழுத்தில்”.
“ஓ. அப்படியா. அப்போ உங்க அம்மாக்கு தான் அந்த கற்கள் எப்படி எதுக்காக உன்கிட்ட வந்ததுன்னு தெரியும். சரி சரி. அப்புறம் என்ன ஆச்சி”.
“பொறுடி. எனக்கு குளிருது. எவ்ளோ நேரம் தான் வெறும் டவலோட இருக்கிறது போய் ட்ரஸ் மாத்திட்டு குடிக்க உனக்கு ஏதாவது எடுத்துட்டு வாறேன். நேத்து நைட்டும் சாப்பிடல. இப்போ வரேன் அது வரை ஒழுங்கா அமைதியா இரு”.
‘தன் மேல் எத்தனை அக்கறை இவனுக்கு தான். ஒரு ஆண்மகனுடன் ஓரரிரவு தனித்து இருந்திருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த பயமும் குற்றஉணர்ச்சியும் இல்லையே. பாதுகாப்பாய் அல்லவா தோன்றுகிறது.
யார் இவன்? என் வாழ்வில் ஏன் வந்தான். சுனாமியாய் ஒரு நொடிக்குள் என் வாழ்வை மாற்றி விட்டானே. இனி இவன் இன்றி என்னால் எப்படி ஒரு நொடியையும் கடந்திட முடியும்’. காதல் கொண்ட மனம் உலகம் மறந்து அவன் காலடியிலே தஞ்சம் புகுந்தது.
கருப்பு நிறத்தில் மரத்திலான கலைநயமிக்க ட்ரேயை கையில் ஏந்தியபடி ஸ்கை ப்ளூ கலரில் சட்டையும், டார்க் ப்ளூ கலர் ஃபேண்டும் அணிந்து தனக்கே உரிய வசீகர புன்னகையுடன் அவளை நோக்கி வந்தான் ரவி. அவனது அழகிற்கு அந்த நிறம் வெகு கச்சிதமாக பொருந்தி அவனழகை தூக்கி காட்டியது. பெண்ணவள் இப்பொழுது அவளாகவே இல்லை.
“போதும் போதும். என்னை சைட் அடிக்கிறதை நிப்பாட்டிட்டு முதலில் இதை எடுத்துக்கோ”.
சிறு நாண சிரிப்புடன் அவனிடமிருந்து தன் கண்களை வலுகட்டாயமாக பிரித்து அவன் நீட்டிய ட்ரேயில் பார்வையை பதித்தாள். அந்த ட்ரேயில் இரண்டு வெள்ளை நிற பீங்கான் குவளைகளும் ஒரு ஜக்கும் அதனை தொடர்ந்து ஒரு கூரை வீடு போன்ற பொம்மை வீடும் அதனை சுற்றிலும் ஒரு சின்ன நீரோடை செல்ல நேராக பாத்தி போல அமைத்து அதில் குட்டி குட்டி கூழாங்கற்கள் பதிக்க பட்டிருந்தது. இதனை வடிவமைத்தவன் உண்மையிலே திறமைசாலி.
“மேடம்க்கு இதை சாப்பிடுற ஐடியா இருக்கா இல்லையா? ம்ம்ம்?”
அவன் பேச்சில் தன் சிந்தனையை ஒதுக்கி விட்டு அந்த குவளையை எடுத்துக் கொண்டாள். அதன் வாசம் அவளை வெகுவாக ஈர்த்தது. அதிலும் அதன் நிறம் பெண்ணவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
“ரொம்ப நல்லா இருக்கு. இது என்ன?”
“ஹ்ம்ம்… இப்பவே சொல்லணுமா”.
“ஏன் சொல்ல கூடாதா?!” அவனிடமே கேள்வியை திருப்பினாள்.
“சொல்லாமல் சொல்றேன். நீயே கண்டு பிடிச்சிக்கோ” சொல்லிவிட்டு அவளிடம் இருந்த காலி குவளையை வாங்கி அந்த ட்ரேயில் வைத்தான்.
“சொல்றேன் கேட்டுக்கோ” என்றபடி தன் புதிர் பெட்டியிலிருந்து ஒரு புதிரை அவிழ்த்து விட்டான்.
“அச்சு அசலனா வதனத்தின் தோலை
மணங்களின் ராஜாவோடு மணமுடித்து
தேகத்தை சீராக்கும் சிங்கத்தை
வெற்றி ரிப்பனை வெட்டி
அதன் நுனியை,
சிங்கிள் பாயாய் ஜொலிப்பவனோடு தன்னந்தனியாக மோத விட்டு,
கருங்காலி பயலை காளிக்காக
தீக்குளிக்க வைத்து,
கடைசியில்
ஏழு அரக்கர்களையும் நைய புடைத்து ஜலத்திலே நீராட செய்து
ஒரு சிட்டிகை சொடுக்கி
ஆற பொறுத்தால் வருவேனே நான்
கன்னிப் பெண்ணின் நாணத்தை போல
கதகளி ஆடி கண்ணை கவர்ந்து
கண்ணுக்கு தெரியாதவனை துவம்சம் செய்வேனே.”
“ம்ம்ம். சொல்லு பார்ப்போம்”.
“டேய் இது உனக்கே அடுக்குமாடா. ஒரு சின்ன விஷயத்துக்கு இவ்ளோ பில் டப் குடுக்கிறீயே?”
“ஏய். இதுல எவ்ளோ நல்ல விஷயம் இருக்கு தெரியுமா? அதை போய் இப்படி ஈஸியா சொல்லுற”.
“சரி விடு. என்னால கண்டுபிடிக்க முடியல. நீயே சொல்லிடு”.
“ஆங். அஸ்கு புஸ்கு. இப்போ சொல்ல மாட்டேன். அப்புறம் சொல்றேன். அப்போ தான் நீ இதை யோசிச்சி யோசிச்சி மண்டைய போட்டு பிச்சுக்குவ”.
“என்ன ஒரு சந்தோசம் உனக்கு”.
“இப்போதைக்கு என்னோட ஹிஸ்டரி வேணா சொல்லட்டுமா?”.
“வேற வழி. கேட்டு தானே ஆகணும். சொல்லி தொலைடா”.
“என்னடி ‘டா’ லாம் போட்டு பேசுற. இரு இரு உனக்கு அப்புறமா வச்சிக்கிறேன்.
அவ்ளோ நாளா யாரை பாட்டின்னு நினைச்சிக்கிட்டு இருந்தேனோ அவங்க என்னோட ஒரிஜினல் பாட்டி இல்லை, அப்பாவும் எப்போ அடுத்த மேரேஜ் பண்ணிப்பாரோன்னு அன்றைக்கு எல்லோர் மேலேயும் ஒரு வெறுப்பு. யாரும் எனக்கு நிரந்தரமில்லை, எனக்காக யாருமே இல்லை அப்படின்னு. சோ எதை பற்றியும் யோசிக்கமா யார்கிட்டயும் சொல்லாம வீட்டை விட்டு வெளியே போயிட்டேன்.
அப்படியே போய் ஒரு பீச்ல உக்காந்துட்டேன். மணிக்கணக்கா. இருட்ட ஆரம்பிச்சுது. முதல கோவத்துல வெளியே வந்தது ஒன்றுமே தெரியல. நேரம் ஆக ஆக தான் எனக்கு பயம் கொடுக்க ஆரம்பிச்சது. இதுக்கு அப்புறம் எங்கே போறது, என்ன பண்ண, அப்படின்னு. குழப்பத்துல இருக்கும் போது தான் ஒரு தேவதை வந்தாள்”.
“வந்து..?”
” அவள் மட்டும் வரல. கூடவே ஒரு சின்ன நாய் குட்டியும்”.
“வில்லங்கம் தனியா வரல. கூட ஒரு சகுனியையும் கூட்டிட்டு வந்திருக்குன்னு சொல்லு”.
“என்ன சொல்லுற? யாரு வில்லங்கம்?”
‘உனக்கென்னப்பா. நீ கொடுத்து வச்ச மகராசன். உன் வாழ்க்கையில ஒரே தேவதைகளா வருது. ஆனால் எனக்கு அப்படியா. நானே இப்ப தான் லவ் பண்ண ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள எனக்கு போட்டியா ஒரு பொண்ணு. அவளை நீ தேவதைன்னு கொஞ்சுவ. அதையும் நான் விதியேன்னு கேட்கணும். எல்லாம் என் தலை எழுத்து’.
“ஒன்றும் இல்லை ராசா. நீ மேலே சொல்லு உன் தேவதையை பற்றி”.
“பொம்மேரி ரகத்துல அது குட்டி டாக் பார்த்துக்கோ. அதை விரட்டிட்டே வந்துகிட்டு இருந்தா. நான் உக்காந்து இருந்ததை கவனிக்கலை போல. ஓடி வந்த வேகத்துல கால் தடுக்கி என் மேல விழுந்துட்டா”.
“ஹேயய்யோ! மேலேயே விழுந்துட்டாளா?அப்புறம் என்ன ஆச்சி?”.
“பாவம். சின்ன பொண்ணு. பயந்துட்டா”.
“சின்ன பொண்ணா?”
“ஆமா. அப்போ எனக்கு ஒன்பது வயசு இருக்கும்னு நினைக்கிறேன். அந்த பெண்ணுக்கு மூன்று வயசு வேணா இருந்திருக்கும்”.
“அட கடவுளே அப்படின்னா பாப்பான்னு சொல்ல வேண்டியது தானே. நான் என்னடான்ன்னா உன் வயசுக்கு ஏத்த மாதிரி பெரிய பொண்ணா இருக்கும்னு நினைச்சிட்டேன்”.
‘ஷ் ஷ் ஷ்.. ஷப்பாடா வில்லங்கம் தீர்ந்தது. நாம நினைச்ச மாதிரி எதுவும் இல்லை’ மனதுக்குள் ஆறுதல் பட்டு கொண்டாள் ஆரு.
“ம்ம்ம். நீ கன்டினியூ பண்ணு ராசா”.
“அந்த பொண்ணு யாருன்னு கேட்க மாட்டியா?”
“அப்போ உனக்கு அந்த பொண்ணை தெரியுமா?”
“அப்போ தெரியாது. ஆனா இப்போ நல்லா தெரியும்”.
“ஹேய்.. என்ன சொல்லுற. அப்போ இப்போ வரை கான்டாக்ட்ல தான் இருக்கிறீங்களா?”
“யெஸ் பேபி”.
“டேய். நீ என்னடா சொல்லுற?”.
“அந்த பொண்ணு யாருன்னு சொல்லு பார்ப்போம்”.
“எனக்கு எப்படிடா தெரியும்”.
“அப்போ தெரியாதுங்கிற”.
“ஆமாடா”.
“சரி விடு. அந்த பெண்ணை பற்றி சொல்லுறேன் கேட்டுக்கோ”.
‘டேய் மவனே ஓவர் பம்மாத்து எல்லாம் வைக்கிற. எசக்கு மசக்கா எதுவும் சொல்லு உனக்கு இருக்குடா’.
“அந்த பொண்ணோட நேம்..”
அடுத்த epi ல சொல்றேன். டா டா… :D  ;)

Advertisement