Advertisement

அத்தியாயம் 36

காவியன் நிதினுக்கு செய்தி அனுப்பினான். ரணா எப்படி இருக்கா? விழித்து விட்டாளா? சாப்பிட்டாலா? என்று வரிசையாக அனுப்பி இருந்தான். நிதின் அவனுக்கு பதில் அனுப்பி விட்டு அவனறையில் படுத்தான்.

நடு இரவில் அதிரதன் நிதினை பார்க்க வந்து விசயமொன்றை சொல்ல, இந்த நேரத்திலா?

ஆமா, பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்.

ரதா, வினுக்கு தெரிஞ்சது நீ செத்தடா என்றான் நிதின்.

அவளுக்கெல்லாம் பயந்தால் நம்ம வேலைய நம்மால் செய்ய முடியாது. காவியன் வாரேன்னு சொல்லீட்டான். அவனுக்கு பாதுகாப்புக்கு யாராவது இருந்தா நல்லா இருக்கும் என்று அதிரதன் சொல்ல,

மாப்பிள்ள, உதவி வேணுமா? என்ற சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர். ரவிக்குமார் வந்திருந்தார்.

அப்பா, தூங்கலையா? நிதின் கேட்க, இல்லப்பா தூங்க முடியல. அதான் வெளிய வந்தேன். பேசும் சத்தம் கேட்டு உன் அறைக்கு வந்தேன் என்றார்.

என்னாச்சு? அவர் கேட்க, அதீபன் பாட்டி வீட்டில் எடுத்த அலைபேசியை பற்றி சொன்னார்கள். போஸ்ட் மாட்டர்ம் ரிப்போர்ட்டையும், அந்த அலைபேசி யாருடையது? வேறேதுவும் இருக்கா என்று கண்டறியணும். அதை யாருமில்லாமல் நாமாகவே செய்ய நினைத்தேன். இல்லை யார் மூலமாக வேண்டுமானாலும் விசயம் வெளிய தெரிந்து ஆதாரம் காணாமல் சென்று விடும். கண்டிப்பாக அதில் ஏதோ இருக்கு என்று தான் தோன்றுகிறது.

அதனால் தான் எங்களுக்கு தெரிந்தவனை வர வைத்து செய்யணும். அவனை அழைத்து வர உதவிக்கு ஆள் வேண்டும் என்றான்.

சரிப்பா, நம்ம ஜிம் பசங்கல்ல அனுப்பலாம் என்று அப்பொழுதே அவர் ஒருவனை அழைக்க, அவன் அவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து நின்றான்.

வாவ், சூப்பர் பாடிகார்டுன்னா இப்படி இருக்கணும்? என்ன மசில்ஸ் என்று நிதின் சொல்ல, அவன் பத்திரமா வந்தான்னா போதும் என்று அதிரதன் சொன்னான்.

அதிரதன் இடத்தை சொல்ல, வீடு வரை இல்லாது மெயின் ரோட்டிலே காரை நிறுத்தி ஜிம் பாய் காத்திருக்க, காவியன் நேத்ரா அறைக்கு சென்று, சின்ன நோட்டில் அவன் கிளம்பியதை எழுதி தன் நண்பர்களிடமும் ஜூவாவிடமும் சொல்லி விட்டு கிளம்பினான்.

அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் மார்ச்சுரிக்கு நேராக காவியன் வந்து விட்டான். அதிரதன், ரவிக்குமார் அங்கே இருந்தனர். நிதின் வீட்டினருக்கு பாதுகாப்பாக இருந்தான்.

ரிப்போர்ட்டை மூவரும் பார்த்தனர். அதில் யாருடைய கைத்தடமும் அதில் இல்லை. கத்தியால் குத்தி தான் மூவரையும் கொன்னுருக்காங்க. ஆனால் வீட்டில் எங்குமே இரத்தக்கறை இல்லாதது போல் ரிப்போர்ட்டில் இருந்தது.

கவரில் இருந்த அலைபேசியை காவியனிடம் கொடுத்து, உனக்கு தான் கை ரேகை எடுக்க தெரியும்ன்னு சொன்னேல்ல. எவ்வளவு நேரமாகும்? அதிரதன் கேட்க, அதற்கு தேவையாக பொருட்கள் வாங்க ஷாப் எதுவுமே திறந்திருக்காதே? என்றான் காவியன்.

“மாப்பிள்ள, சின்ன பையனா தெரியிறான்?” ரவிக்குமார் காவியனை பார்த்து அதிரதனிடம் கேட்க, சார் நான் எதிர்காலத்தில் பெரிய வக்கீலா இருப்பேன் என்றான் காவியன்.

காவியன் சட்டக் கல்லூரியில் படிக்கிறான் என்று மட்டும் தான் அதிரதனுக்கு தெரியும்

எந்த காலேஜ்ல படிக்கிற? அதிரதன் கேட்க,  உலறி விட்டோமே? என்று எண்ணிய காவியன், காலேஜை சொன்னான்.

மாப்பிள்ள, நம்ம பிரணா அங்க தான படிக்கிறா? ரவிக்குமார் கேட்க, குட்டிம்மா அங்க படிக்கிறாளா? உனக்கு என்னோட தங்கச்சியை தெரியுமா? அதிரதன் கேட்க, நல்லா தெரியும் சார் என்றான்.

நீ சொல்லவேயில்லை? அதிரதன் கேட்க, நீங்க கேட்கவில்லையே சார் என்றான் அவன்.

ரவிக்குமார் காவியன் சொன்ன பொருட்களை ஆட்கள் விட்டு எடுத்து வர சொல்ல, பைக்கில் ஒருவன் ஓடி வந்து கொடுத்து சென்றான்.

பரவாயில்லை கேட்டவுடன் கிடைத்து விட்டது? பெரிய ஆளா தான் இருக்கீங்க என்றான் காவியன்.

ரவிக்குமார் புன்னகையுடன், இந்த வயதில் இது கூட முடியவில்லை என்றால் எப்படி? உன்னை பார். நீ இந்த வயதிலே நிறைய தெரிஞ்சு வச்சிருக்க? அதான் ஆச்சர்யமா இருக்கு என்றார்.

சார், நான் பள்ளி விடுமுறை நாளில் ஹாஸ்பிட்டல் லேப்ல தான் வொர்க் செய்தேன். அதுமட்டுமல்ல எங்களை போல் யாரும் இல்லாதவர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வது தான் நல்லது. அப்பொழுது தான் யாரையும் எதுக்காக எதிர்பார்க்க தேவையிருக்காது. நான் யாரிடமும் உதவி என்று அதிகம் நிற்கமாட்டேன். எனக்கு பிடிக்கவும் செய்யாது என்றான்.

அதிரதனுக்கும் முதல் முறையாக “இவன் தன்னை போலே பேசுகிறானே?” என்று தோன்றியது.

சார், காவியன் அதிரதனை அழைக்க, ஹ்ம், சொல்லு என்றான் யோசனையுடன்.

இங்க வச்சு ஏதும் செய்ய முடியாது. என்ன செய்யலாம்? காவியன் கேட்க, வா வீட்டுக்கு போகலாம் என்றான் அதிரதன்.

உங்க வீட்டுக்கா? நான் வரலை சார். நான் நிலையத்தில் வைத்து பார்த்து சொல்லவா? காவியன் கேட்க, சும்மா வாப்பா. யாரும் உன்னை ஏதும் சொல்ல மாட்டாங்க என்றார் ரவிக்குமார்.

ஆமா, நீ சுபியை பார்க்கணும்ன்னு சொன்னேல்ல. அவன் எங்க வீட்ல தான இருக்கான். நீ பார்த்தது போல இருக்குமே? அதிரதன் கேட்க,

காவியனுக்கு சரி தான் எனப்பட்டாலும் ரணாவும் அங்க இருப்பால..பார்க்க கூட முடியுமே? என்று மனதில் எண்ணிய அவனுக்கு இப்பொழுது அங்கே செல்வது சரிப்படவில்லை.

இல்ல சார், நான் அவனை நிலையத்தில் வைத்தே பார்த்துக் கொள்கிறேன் என்றான் காவியன்.

அப்ப, எங்க தான் போறது? அதிரதன் கேட்க, ஏம்ப்பா, உனக்கு உண்மையிலே யாருமில்லையா? ரவிக்குமார் கேட்க, சார் யாருமில்லாததால் தான் சாரோட நிலையத்துல வளர்ந்தேன்.

ஆனால் உன்னை எங்கோ பார்த்தது போல் இருக்கே? என்று சிந்தனையுடன் ரவிக்குமார் கேட்டார்.

சார் ப்ளீஸ், எனக்கு யாருமில்லை. எல்லாரும் இதையே கேக்குறீங்க? திரும்ப திரும்ப கேட்டு என்னை கஷ்டப்படுத்தாதீங்க என்றான்.

கேட்டாங்களா? யார் யார் கேட்டாங்க? அதிரதன் கேட்டான். அவன் அம்மா தான் கேட்டாங்கன்னு காவியன் சொல்ல முடியுமா?

கேட்டாங்க சார், அதை விடுங்க. நேரமாகுது.கிளம்பலாமா? அவன் கேட்க, அதிரதனும் ரவிக்குமாரும் பார்த்துக் கொண்டனர். அவர்கள் வெளிச்சம் சூழப்பட்ட ஓர் வீட்டு திண்ணையில் அமர்ந்தான்.

உனக்கு வேற இடமா தெரியலை? அதிரதன் கேட்க, காவியன் அவனை பார்த்து ஏதும் கூறாமல் அவன் வேலையை தொடர, அதிரதன் கத்தி ஒன்றை எடுத்து வைத்து, இதிலும் செக் பண்ணு என்றான்.

சார், இது? கொலை நடந்த வீட்டில் கிடைத்தது என்று அதிரதன் சொல்ல, ரவிக்குமார் அதிர்ந்து, மாப்பிள்ள அங்க தான் நிறைய ஆட்கள் இருந்தாங்களே, நீங்க எப்படி இதை எடுத்தீங்க?

எப்படியோ எடுத்தேன் அங்கிள். அதை விடுங்க சீக்கிரம் பாரு என்று அவன் சொல்ல, அனைத்தையும் முடித்து எல்லாமே மேச் ஆகுற மாதிரி தான் இருக்கு என்று எதற்கும் லேப்லயும் செக் பண்ணிடலாமா? கேட்டான்.

இப்ப திறப்பாங்களா?

சார்கிட்ட பேசுறேன் என்று அவன் பேசி விட்டு, வாங்க போகலாம் என்று சிறிய ஹாஸ்பிட்டல் அருகே இருந்த “மாறன் லேப்” உள்ளே சென்று, ஓரிடத்திலிருந்து சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றான்.

சார், நீங்க இங்கேயே இருங்க என்று அவன் கணினி முன் அமர்ந்து அவன் கவனிக்கலானான். இருவரும் அவனை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். அது நூறு சதவீதம் என்று காட்ட, எழுந்து அவர்களிடம் வந்து கத்தியில் உள்ள கைரேகையும், அலைபேசியில் இருக்கும் கைரேகையும் ஒன்று தான். இது கொலை செய்தவனது அலைபேசி தான் என்றான்.

சார், பாஸ்வேர்டு இருக்குமே? எப்படி ஓபன் செய்து பார்ப்பது? காவியன் கேட்க, அதை கொடு பார்க்கலாம் ரவிக்குமார் கேட்டார்.

சார், இதை போட்டுக்கோங்க என்று கிளவுஸ் ஒன்றை அவர் கையில் மாட்டி விட்டான். எதுக்குப்பா? அவர் கேட்க, சார், கண்டிப்பாக கொலைகாரன் இதை தேடிக் கொண்டு தான் இருப்பான். ஒரு வேலை நாமும் இதை மிஸ் பண்ணிட்டா. நம் மேலே கொலைப்பலி விழுந்து விடும் என்றான்.

ஆமா அங்கிள், அவன் சொல்வதும் சரிதான். போட்டுக்கோங்க என்று அதிரதனும் வாங்கி போட்டுக் கொண்டு அதை ஓப செய்ய முயற்சித்தனர்.

சார், அவனது நோக்கம் என்ன? அதை வைத்து தான் கண்டிப்பாக பாஸ்வேர்டு போட்டிருப்பான் காவியன் சொல்ல, அங்கிள் எனக்கு சித்தப்பா மேல தான் சந்தேகமா இருக்கு என்றான் அதிரதன்.

மாப்பிள்ள, என்ன சொல்றீங்க? என்ன இருந்தாலும் அவரு பொண்டாட்டிய எப்படி கொலை செய்வார்?

அவருக்கு தான் யார் மீதும் அக்கறையே இல்லையே? அம்மாவை தவிர என்றான் அதிரதன்.

உன்னோட அம்மாவுக்காக செய்திருக்கான்னு சொல்றியா? ரவிகுமார் கேட்க, இருக்கலாம் என்றாள் பொங்கிய சினத்துடன்.

மாப்பிள்ள, உனக்கு எப்படி விசயம் தெரிஞ்சது? அவர் கேட்க, குட்டிம்மா தான் அனுப்பினா.

அங்கிள், அப்பா ஏன் இப்படி சாதாரணமா விட்டாங்க. நடக்குற எதுவுமே சரியா இல்லை. இப்ப குட்டிம்மாவுக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் ஆபத்து இருக்கு. நாம் கூட அடுத்தது தான் என்றான் அதிரதன்.

ரவிக்குமார் அதிரதனை அணைக்க, அதிரதன் கண்ணில் நீர் குளம் கட்டியது. அவரை விலக்கி விட்டு, நல்லா யோசித்து பாருங்க. அவரை நம் வீட்டிலிருந்து விரட்டிய பின் இங்கே தான் வந்திருக்கார். அதீபன் காட்டிய விவகாரத்து பத்திரத்தில் சித்தியும் சித்தப்பாவும் இரு நாட்களுக்கு முன் தான் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

கண்டிப்பா ஏதோ டீல் போட்டிருக்கார். சித்தியும் ஒத்துக் கொண்டு தான் கையெழுத்திட்டுருக்காங்க. இப்ப ஏதோ பிரச்சனையில தான் செஞ்சுருக்கார்ன்னு தோணுது?

மாப்பிள்ள, அவர் தான்னு முடிவே பண்ணிட்டியா? ரவிக்குமார் அதிர்ந்து கேட்க, ஆமா அங்கிள். அவராக தான் இருக்கும் என்றான்.

சார், தினமும் அவர் உபயோகிக்கும் பொருள் ஏதாவது தாங்க. அதையும் பார்த்திடலாம் என்றான் காவியன்.

மாப்பிள்ள, அந்த வீட்டுக்கு போய் பிளட் சாம்பிள்ஸ் ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாமா? ரவிக்குமார் கேட்க, இப்ப முடியாது அங்கிள். நாளைக்கு விக்ரமை வைத்து, நாம பார்க்கலாம் என்றான்.

சார், நான் இங்கேயே இருக்கேன். நீங்க எடுத்துட்டு வாங்க என்றான் காவியன்.

அங்கிள் இவனோட நீங்க இருங்க. நான் போயிட்டு வாரேன் அதிரதன் சொல்ல, சார்..பெயினோட கார் ஓட்டாதீங்க. நீங்க கூட போயிட்டு வாங்க சார். பழக்கமான இடம் தான். நான் இருந்துப்பேன் என்றான் காவியன்.

இல்ல காவியா, நீயும் வா. நாம மறுபடியும் இங்க வந்து செக் பண்ணிக்கலாம் என்றான்.

இருக்கட்டும் சார் என்று காவியன் தவிர்க்க பார்த்தான். ரவிக்குமாரும் அழைக்க, அவனால் அதற்கு மேல் தட்ட முடியவில்லை. மூவரும் அதிரதன் வீட்டிற்கு சென்றனர்.

அங்கிள், நீங்க ஓய்வெடுங்க. நான் பார்த்துக்கிறேன் அதிரதன் சொல்ல, மாப்பிள்ள நீங்க தான் ஓய்வெடுக்கணும்.

ஆமா சார், இன்று ரொம்ப அலைச்சலா இருந்திருக்கும். நீங்க போய் எடுத்து கொடுத்துட்டு ஓய்வெடுங்க. நான் பார்த்துட்டு ரிப்போர்ட்டை உங்களிடம் தாரேன் என்றான்.

அதிரதன் எடுத்து வரும் போது, அண்ணா அறை அந்த பக்கம் தான? இங்க என்ன செய்றான்? என்று அதீபன் அவனை பின் தொடர்ந்து வந்தான்.

வெளியே வந்த அதிரதன் ஓர் கவரை காவியனிடம் கொடுப்பதை பார்த்து, இவனா? இவன் என்ன செய்கிறான்? என்று அவன் பக்கமிருந்த ரவிக்குமாரை பார்த்து, இவரா? எல்லாரும் என்ன செய்றாங்க? என்று ஒளிந்து நின்று பார்த்தான் அதீபன். அதிகாலை மணி நான்காகி இருந்தது.

ரணா விழித்து அமர்ந்தாள். கை ரொம்ப வலித்தது. அவள் கண்ணீருடன் அதை பார்த்து விட்டு, தன் அம்மா, அப்பா உட்கார்ந்து கொண்டே தூங்குவதை பார்த்தாள். அவளுக்கு சங்கீதன் சொன்னதே ஓடிக் கொண்டிருந்தது. அவன் போல் இருந்தால் தான் தெரியும் என்று அவன் சொன்னது நினைவுக்கு வந்து, “ஏசி” யை அணைத்து விட்டு ஜன்னலை திறந்தான்.

கீழே காவியனை பார்த்து அதிர்ந்தாள். உடன் அதிரதனும் ரவிக்குமாரையும் பார்த்தாள். இந்த நேரத்துல என்ன செய்றாங்க? அவள் பார்த்துக் கொண்டே நிற்க, காவியனை அதிரதன் அணைத்தான்.

சார், நீங்க ஓய்வெடுங்க காவியன் சொல்ல, ரணா அறையின் விளக்கு ஒளிர்ந்தது. அரண்மனை போன்ற அவ்வீட்டின் அனைத்து அறையும் இருட்டாக இருக்க, புதிதாக ஒளிர்ந்த விளக்கின் வெளிச்சம் அனைவரையும் கவனிக்க வைத்தது.

ரணா அங்கேயே தான் நின்றாள். சிவநந்தினி அவளருகே வர, அவள் அவர் பக்கம் திரும்பி, அம்மா…போதும் ஏதும் பேச வேண்டாம் என்று மீண்டும் இவர்கள் பக்கம் திரும்பி கோபமாக நிலவை வெறித்தாள்.

சிவநந்தினி அவளை திருப்ப, நீங்க கிளம்புங்க. குட்டிம்மா விழிச்சுட்டா. அம்மாவும் உடன் இருப்பது போல் தெரியுது. மறுபடியும் அவர்கள் ஆரம்பிக்கும் முன் நான் போகணும் என்று பார்த்து போங்க காவியா, அங்கிள் கவனமா இருங்க என்று அவர்களை கிளம்ப சொல்லி உள்ளே ஓடினான்.

காவியன் அவ்வறையை பார்த்துக் கொண்டே நின்றான். காவியனை அங்கு பார்த்திருப்பாலே அவள் உள்ளே சென்று விட்டாள். ஆனால் இருவரும் சண்டை போடலை. செழியனும் விழித்தார்.

பாப்பா, அதிகமா வலிக்குதா? செழியன் கண்ணீருடன் கேட்க, இல்லப்பா. ரொம்ப அதிகமா எல்லாம் இல்லை. ஆனால் வலி இருக்கு என்று அவரை பார்த்து,

என்னை மன்னிச்சுருங்க. நான் அதிகமா தான் பேசிட்டேன் என்றாள் ரணா.

எங்க மேலையும் தப்பு இருக்கும்மா செழியன் சொல்ல, அப்பா என்று அவரை அணைத்துக் கொண்டாள். அதிரதன் உள்ளே வந்தான். ரணா அவனை பார்த்து கொண்டே இருந்தாள்.

என்னடா குட்டிம்மா? அதிரதன் கேட்க, ஏதாவது காரணம் இருக்கும் என்று பசிக்குது என்றாள்.

இருடா, கொஞ்ச நேரத்துல எடுத்துட்டு வாரேன் என்று நந்தினி நகர, வேண்டாம். எனக்கு சிக்கன் நூடுல்ஸ் வேணும் என்றாள்.

இந்த நேரத்திலா? உனக்கு தான் பிடிக்காதே? கேட்டான் அதிரதன்.

பிடிக்காததையும் ஏத்துக்கிட்டு தான ஆகணும். நான் பழகிக்கணும்ல்ல. சாப்பிட்டிலிருந்து ஆரம்பிக்கலாம்ல்ல? என்றாள் ரணா.

அதெல்லாம் தேவையில்லை. உனக்கு பிடித்த மாதிரியே நீ இருக்கலாம். இனி உன்னை ஏதும் சொல்ல மாட்டேன். இப்ப என்ன சாப்பிடணும் போல இருக்குன்னு சொல்லு? நான் தயார் செய்து எடுத்துட்டு வாரேன் என்றார் சிவநந்தினி.

ரணா அவரை அணைத்து, முதல்ல நீங்க உங்க அறைக்கு போய் நன்றாக ஓய்வெடுத்துட்டு வாங்க. அண்ணா எனக்கு வாங்கித் தருவான் என்றாள்.

இல்ல, நான் செஞ்சு தாரேன் என்று சிவநந்தினி கேட்க, அதான் பிள்ள சொல்றால்ல வாம்மா என்று செழியன் அழைக்க, அவர் அதிரதனை பார்த்தார். அவன் அவரை பார்த்தாலும் ஏதும் சொல்லவில்லை.

பாப்பாவை பார்த்துக்கோ அதி என்று செழியன் சொல்லி விட்டு தன் மனைவியை அழைத்து அவர் அறைக்கு சென்றார்.

அண்ணா, எனக்கு இட்லி போதும் என்று அவன் ஜூமோட்டோவில் ஆர்டர் சொல்ல, சற்று நேரத்தில் வந்து தந்தனர். சாப்பிட்டு விட்டு அமர்ந்தாள்.

நீ ஓய்வெடுக்க போண்ணா. நான் இருந்துப்பேன் என்றாள். அவனால் விட்டு போக முடியவில்லை. அங்கேயே படுத்து விட்டான். இரண்டு மணி நேரத்திற்கு பின் அவனுக்கு அழைப்பு வர, ரணா அதிரதனின் அலைபேசியை எட்டிப் பார்த்தாள். “நம்பர் ஒன்” என்று இருந்தது

அதிரதனே சத்தம் கேட்டு எழுந்து அலைபேசியை எடுத்து, சொல்லு காவியன் என்றான். “நம்பர் ஒன்” காவியனா? என்று அவள் அதிரதனை பார்த்தாள்.

அவன் பேசிக் கொண்டே ஜன்னலருகே சென்று, கையை காட்டினான். அதீபன் இப்பொழுது தூங்கிக் கொண்டிருந்தான்.

பின் குட்டிம்மா, நீ இரு. கொஞ்ச நேரத்துல வந்துடுறேன். “எதுவும் வேணும்ன்னா கால் பண்ணு” என்று கீழே சென்றான் அதிரதன்.

அங்கிள், நீங்க ஓய்வெடுங்க போங்க என்று அதிரதன் சொல்ல, அவர் உள்ளே சென்றாள். ரணா மேலிருந்து இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சாரி சார், உங்க சித்தப்பாவோடது தான் நூறு சதவீதம் பொருந்துது. அதிரதன் கண்கலங்கினான். காவியனாக அதிரதனை மெதுவாக அணைத்து ஆறுதல் சொன்னான்.

இவ்வளவு நெருக்கமா பழகி இருக்காங்களா? அண்ணா அழுவது போல் தெரியுதே? என்று இருவரையும் பார்த்தாள் ரணா.

சார், உங்க அம்மாவுக்கும், தம்பிக்கும் விசயம் தெரியாமல் பார்த்துக்கோங்க. அவங்க தான் ரொம்ப அதிகமா பாதிக்கப்படுவாங்க என்று காவியன் சொல்ல, அதிரதன் அவனை விட்டு விலகி “நன்றி” சொன்னான்.

சுபிர்தனும் காவியனை அதிரதன் அறையிலிருந்து பார்த்து, அழைப்பு விடுக்க, காவியன் அலைபேசியை பார்த்துக் கொண்டே, சார் உங்க அறை எங்க இருக்கு? காவியன் கேட்கவும் சுபிர்தனும் ஜன்னலை திறந்து அவனை பார்த்து கையசைக்க, காவியனும் கையசைத்து அலைபேசியில் பேசினர்.

சார், நான் உங்க காரை கொஞ்ச நேரம் பயன்படுத்திக் கொள்ளலாமா? காவியன் கேட்க, என்னாச்சு? அதிரதன் கேட்டான்.

சுபியும் நானும் எங்க நிலையத்துக்கு கிளம்புகிறோம். அவன் வர பத்து நிமிடமாகும். அதுவரை உங்க காரில் இருந்து கொள்ளவா? காவியன் கேட்க, வீட்டுக்குள்ள வாடா என்று அதிரதன் காவியனை அழைத்தான்.

இல்ல சார், எனக்கு விருப்பமில்லை. விடுங்க சார். எனக்கு கார் மட்டும் போதும் என்றான். அதிரதனும் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் விட்டு விட்டான். காவியன் காரில் கண்ணை மூடி படுத்திருந்தான்.

சுபிர்தன் தயாராகி முதலில் பாட்டியை பார்த்து விட்டு, ரணா அறைக்கு வந்தான். அனைவரும் அவளுடன் தான் இருந்தனர்.

சார், உங்க தங்கையிடம் தனியாக பேசணும்? என்றான் சுபிர்தன். அனைவரும் யோசனையோடு அவனை பார்க்க, நம்பினால் பேசுகிறேன் என்றான்.

அதிரதன் பார்வையில் அனைவரும் வெளியே சென்றனர். அதிரதன் நிதினிடம் காவியன் வெளியே இருப்பதை சொன்னான். அதை கேட்ட ஆத்விகா நிதினை “அவனை பார்க்கணும்” என அரிக்க ஆரம்பித்தாள். அவனும் வேறு வழியில்லாமல் அழைத்து சென்றான்.

சுபிர்தன் ரணாவிடம், உனக்கு காவியனை பிடிக்கும் என எங்களுக்கு தெரியும் என்றான்.

“தெரியுமா?”

ஆமா, ஹாஸ்பிட்டல்ல நீ அழுததை வைத்தே எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அப்புறம் உன்னோட அம்மா சொன்னது சரி தான். பசங்களோட நெருக்கமா பேசாத, பழகாத. அது அவங்க மனதை மாற்றும் என்றான்.

என்ன சொல்ற? புரியல? ரணா கேட்க, நேற்று எனக்கு மருந்து போட்டு விட்டேல்ல என அவனுக்கு ஏற்பட்ட உணர்வுகளை சொல்லி விட்டு, இதை நான் மறக்க முயற்சிக்கிறேன். ஆனால் இது போல் யாருக்கும் உதவாத என்று அவளை நிமிர்ந்து கூட பாராமல் கீழே இறங்கி வந்தான். அவள் அதிர்ந்து அவனை பார்த்து விட்டு அவளும் வெளியே வந்தாள்.

குட்டிம்மா என்னாச்சு? ஏதும் திட்டினானா? அதிரதன் கேட்க, அவன் திட்டவாது செய்திருக்கலாம். அவன் நம்பர் இருந்தா கால் பண்ணு அவன் சென்று விடாமல். அவனிடம் நான் பேசணும்.

அதிரதன் யோசனையுடன் அழைப்பு விடுத்து ரணாவிடம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வெளியே ஓடினாள். காவியன் கிளம்பி இருப்பான் என்று அவள் நினைத்திருப்பாள். ஆனால் விரைந்து வந்த சுபிர்தன், நிதின் ஆத்விகா காவியனுடன் பேசுவதை பார்த்து,

காவியா, வா..என்று அவன் கையை பிடித்து இழுக்க, அடிப்பட்ட கையாயிற்றே. ஷ்ஆ..என்னடா பண்ற? காவியன் சத்தமிட்டான்.

சாரி சாரி..சாரிடா. வா சீக்கிரம் என்று காவியனை அழைக்க, அதிரதன் மற்றவர்களிடம் உள்ளேயே இருக்க சொல்லி ரணா பின் வேகமாக வந்தான். செழியன், சிவநந்தினி, அதீபன், ரவிக்குமார், ரேவதி அனைவரும் அறையில் இருந்தனர்.

குட்டிம்மா, நில்லு..மெதுவா போ என்று அதிரதன் சத்தமிட, இதை கேட்டு வெளியே நின்ற நிதின், ஆத்விகா, காவியன் அவளை பார்த்தனர். அவள் அடிப்பட்ட கையுடன் கண்ணீருடன் வெளியே வந்தாள். அவள் தேடியது சுபிர்தனை என்பதால் முதலில் காவியனை கவனிக்ககூட இல்லை.

சுபி, கால் வருது என காவியன் ரணாவை பார்த்துக் கொண்டே அவனிடம் சொல்ல, அவள் கையில் இரத்தமுடன் பெரியதாக கட்டு போட்டிருப்பதை பார்த்த காவியன் பேச்சு நின்றது. அவள் கையை அவன் பார்க்க, நிதினும் ஆத்விகாவும் அவனை பார்த்தனர்.

எங்க போற? சொல்றதை கேட்டுட்டு போ..என்று அழுதவாறு ரணா, தப்பு என் மேல தான். நீ மறந்து தான் ஆகணும் என்று சத்தமிட்ட பின் தான் காவியனை பார்த்தாள். அவள் கண்ணீர் அப்படியே நின்று விட, காவியனை பார்த்து கையை பின்னே மறைத்தாள். அதிரதன் அவள் மறைப்பதை பார்த்து காவியனை பார்த்தான்.

காவியன் கண்கலங்க மறைத்த அவள் கையையும் அவளையும் பார்த்துக் கொண்டிருந்தான். அதிரதன் அவனது கலங்கிய கண்கள் தன் தங்கை மீது இருப்பதை பார்த்து, குட்டிம்மாவை இவனுக்கு நன்றாக தெரியுமோ? தெரிய மட்டும் தான் செய்யுமா? இல்லை என யோசிக்கும் முன், சுபிர்தனும் ரணாவிடம், நீ சொல்ல தேவையில்லை. எனக்கு தெரியும் என்றான்.

அதிரதனும் காவியனும் ஒன்று போல் அவனை பார்த்தனர். அதிரதன் குழப்பத்தில் இருக்க, ரணா காவியனை பார்த்து விட்டு, “நான் தப்பு செய்துட்டேன் காவியா? அவன் உன் தோழன். எனக்கு தவறான எண்ணமில்லை. இதை அவன் உன்னிடம் சொல்வானா? சொன்னால் நீ தோழியாக கூட என்னை ஏற்றுக் கொள்ள மாட்டாயே?” மனதில் எண்ணிக் கொண்டே கண்ணீருடன் உள்ளே சென்றாள்.

சார், நாங்க கிளம்புகிறோம் என்று காவியன் ரணா செல்வதை பார்த்துக் கொண்டே சொல்ல, சுபிர்தனும் காவியனையும் ரணாவையும் பார்த்துக் கொண்டே அதிரதனிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.

அண்ணா, என்ன நடக்குது? உனக்கு ஏதாவது புரியுதா? ஆத்விகா கேட்க, நீ என்ன பண்ற? அதிரதன் கேட்டான். நிது காவியனை பற்றி சொன்னான். அதான் ஹலோ சொல்ல வந்தேன் என்றாள். அவன் சந்தேகமாக பார்க்க, நண்பனை அறிந்த நிதின், நான் தான் அவனிடம் பேச வேண்டி இருந்தது. அதனால் தான் இவளையும் அழைத்து வந்தேன் என்று இருவரும் உள்ளே சென்றனர். அதிரதன் இரு பக்கமும் செல்பவர்களை பார்த்து சிந்தித்தான்.

இவனுக எல்லாருமே எதையோ சொல்ல மாட்டேங்கிறாங்க? என்று நினைத்துக் கொண்டான் அதிரதன். காவியன் நடந்து கொண்டே சுபிர்தனிடம், என்ன மறக்கணும்? என்று கேட்டான்.

அவன் அதற்கு பதில் சொல்லாமல், உனக்கு அவளை பிடிக்க ஆரம்பித்து விட்டதோ? என்று கேட்டான். காவியன் அவனை முறைத்து விட்டு ஏதும் பேசாமல் நடந்தான்.

ரணா அழுவதை பார்த்த பாட்டி, என்னாச்சுடி? எதுக்கு அழுற? கேட்க, அதிரதன் உள்ளே வந்தான்.

அண்ணா, நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும் என்றாள். அனைவரையும் அனுப்பிய அதிரதன், சுபி என்ன சொன்னான்? என்று அதிரதன் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ கிளம்பு என்றாள் ரணா.

சரி, காவியனை உனக்கு தெரியும் தானே?

ஆமாம்.

அப்புறம் ஏன் இருவரும் பேசவில்லை?

எங்களுக்குள்ள சண்டை?

சண்டையா? பேசி இருக்கீங்களா? அதிரதன் கேட்க, ஒரே வகுப்பு பேசாம இருப்பேனா? ரணா கேட்டாள். சங்கீதனுக்கும் தெரியும் தான?

என்ன? என்ன தெரியும்? பதறினாள் ரணா.

அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு, சும்மா தான் கேட்டேன். நீ ஓய்வெடு என்று வெளியே வந்தான் அதிரதன்.

நல்லா பேசியும் காவியன் எதுக்கு ரணாவை மறைக்கணும்?அவன் அவனாக பேசிக் கொண்டே செல்ல, அவன் பின் வந்த ரணா, அவன் உன்னிடம் இதை சொன்னால் என்னையும் உன்னையும் அவன் பயன்படுத்திக் கொள்வதாக நீ நினைத்துக் கொள்வாய் என்று தான் அவன் சொல்லவில்லை.

என்ன இதுக்கா சொல்லாமல் இருந்தான்? அதிரதன் சிரிக்க, அண்ணா, அதான் எங்களுக்குள் சண்டை. நான் அப்படி தான் நினைத்துக் கொண்டேன் என்றாள்.

இப்படியா நினைக்கிறது?

இப்ப புரியுது அண்ணா.

அப்ப சாரி கேளு.

காலேஜ்ல வச்சி கேட்டுக்கிறேன் என்றாள். பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.

அதிரதன் மனதினுள், நான் கூட சித்தியை அந்த கொலைகாரன் தான் கொன்று விட்டான்னு நினைச்சுட்டேன். அப்பா எழுந்தவுடன் அவரிடம் சொல்லணும் என நினைத்துக் கொண்டான் அதிரதன்.

சிவநந்தினி அறையை விட்டு வெளியே செல்வதை பார்த்த அதிரதன், ராமவிஷ்ணுவை பற்றி பேச தான் சேகரித்ததை எடுத்துக் கொண்டு செழியன் அறைக்குள் சென்றான். ஏற்கனவே அண்ணன் ஏதோ செய்கிறான் என்று சந்தேகித்த அதீபன் அவனை தொடர்ந்து செழியன் அறைக்கு வெளியே நின்றான். அவனை பார்த்து தாட்சாயிணி அவனிடம் வந்து,

“உள்ள போகாம என்ன செய்றீங்க மாமா?” கேட்டாள். அவள் அவனை முழுமனதாக “மாமா” என்றே அழைக்க ஆரம்பித்து விட்டிருந்தாள்.

“அமைதியா இரு. அதிரதன் ஏதோ செய்திருக்கான்” என்று அதிரதன் அவன் அப்பாவிடம் பேசியதை கேட்டு உடைந்தான் அதீபன்.

தன் அம்மாவையும், தாத்தா பாட்டியையும் அப்பா தான் கொன்றிருக்கிறானா? என்று தாங்க முடியாத வலி, கோபம், ஏமாற்றம் அனைத்தையும் தாங்க முடியாமல் சீற்றமுடன் வெளியே நடந்தான்.

மாமா, எங்க போறீங்க? என்று தாட்சாயிணி அவனை தடுத்தாள். அவன் எண்ணம் முழுவதும் அவன் அம்மாவிடமே சென்றது. அவளை தள்ளி விட்டான். ரேவதி அதை பார்த்து ஓடி வந்தார். தன் மகளை தூக்கி விட்டு அதீபனை திட்ட அவன் காதிலே ஏதும் ஏறவேயில்லை.

அம்மா, திட்டுறத நிப்பாட்டிட்டு மாமாவை போக விடாமல் தடுக்கணும் என்று பயத்துடன் சொல்ல, என்னாச்சுடி? அம்மா அப்புறம் சொல்றேன்.

மாமாவ தடுக்கணும் என்றாள். அவன் யாரையும் ஏதும் செய்து விடுவானோ? என்பதை விட அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ? என்று பதறினாள் தாட்சாயிணி.

அம்மா, நீ மாமாவ நிறுத்து. நான் செழியன் மாமாவையும், அதிரதன் மாமாவையும் அழைச்சிட்டு வாரேன் என்று செழியன் அறைக்கு ஓடினாள்.

ரேவதி கத்துவது அதீபன் காதில் ஏறவேயில்லை. அவன் நடைக்கு சரிசமமாக ரேவதியும் நடந்தார். செழியனிடம் வந்து தாட்சாயிணி விசயத்தை சொல்ல,

ஓ..காட்..என்று அதிரதன் வேகமாக வெளியேறினான். செழியனும் அவன் பின் வந்தார்.

ரேவதி கோபமாக அதீபனுக்கு முன் சென்று அவனை ஓங்கி அறைந்தார். அவன் நடை நின்று துவண்டு அழுதான். சத்தம் கேட்டு எல்லாரும் கூடினர். சிவநந்தினி அவனை பார்த்து விரைந்து வந்தார்.

அடித்த ரேவதியையே அணைத்துக் கொண்டு அதீபன் அழுதான். “எதுக்குடா அழுற?” சொல்லு என்று அவர் சத்தமிட்டார்.

அதிரதனும் செழியனும் அவனிடம் வர, வராதீங்க என்று ரேவதியிடமிருந்து விலகினான் அதீபன்.

அதீபா, ஒன்றுமில்லை. இது சரியா இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் என்று அதிரதன் சொல்ல, ஏமாத்த பார்க்காதடா. அவரு இப்படி பண்ணுவார்ன்னு நினைக்கலை.

இல்லடா, இதை மட்டும் வைத்து சொல்ல முடியாதுடா செழியன் சொல்ல, இல்ல கண்டிப்பா அவர் தான் செய்திருக்கணும். என்ன தான் விவாகரத்து செய்ய முடிவெடித்தாலும் கோர்ட் வரை இவங்க போகல. அவரு அம்மாவை பார்க்க கூட வரலைன்னா. அவர் தான் அம்மாவை கொன்றுக்கணும் என்று அழுதான். எல்லாரும் அதிர்ந்தனர்.

இல்ல, என் பிள்ள கொலைகாரனெல்லாம் இல்லை என்று பாட்டி கூற, அவர் தான் செய்திருக்கிறார் என்று தினகரன் உள்ளே வந்தார்.

என்னய்யா, சொல்றீங்க? பாட்டி கேட்க, ஆமாம்மா, உங்க பிள்ள விஷ்ணு தன் மனைவியை கொன்று இருக்கிறார். அதற்கான ஆதாரம் இவர் தான் என்று நிர்மலா பிறந்த வீட்டு தெருவில் வசிப்பவர் வந்து, அன்று நடந்ததை கூறினார்.

சார், நீங்க வந்ததை பார்த்தேன். நீங்க சென்றவுடன் நிம்மிம்மா புருசன் வந்தார். ஏதோ சொத்து பற்றி கேட்டு விவாகரத்தை பத்திரத்தில் கையெழுத்திட்டிருக்காங்க. ஆனால் மிலிட்டரி அய்யாவுக்கு இதில் விருப்பமில்லை. அந்த பொண்ணு கேட்காமல் தன் மகனுக்கு ஏதும் ஆகக்கூடாதுன்னு சொல்லி தான் கையெழுத்திட்டார்.

இதை என் வயதான அம்மாவிடம் நிம்மியோட அம்மா சொல்லி இருக்காங்க. நான் அவன் கருப்பு உடையுடன் நேற்று அதிகாலையிலே மறைந்து மறைந்து வந்தான். சத்தம் ஏதோ கேட்டது. மிலிட்டரி அய்யா முடியாதுன்னு கத்தியது மட்டும் நன்றாக கேட்டது. பாத்திரம் அனைத்தும் கீழே விழும் சத்தம் கேட்டது. “ஆ..வென” அந்த பொண்ணு அலறிய சத்தம் மட்டும் கேட்டது.

சத்தம் கேட்டதுன்னா? நீங்க என்னன்னு பார்க்கலையா? அதிரதன் கேட்டான். தம்பி, அந்த பொண்ணு அவ அம்மா வீட்டுக்கு வந்த அன்றிலிருந்து அவன் ஒரு நாளிலே நான்கு ஐந்து முறை வந்து செல்வான். அப்பப்ப இப்படி தான் அந்த பொண்ணு அழும் சத்தம் கேட்கும்.

ஒரு முறை என் அம்மா போய் கேட்டதற்கு என் பொண்டாட்டிய நான் அடிக்கிறேன். உனக்கென்ன? என்று அவதூறாக பேசினார். அதிலிருந்து பேசாமல் தான் இருந்தார் என் அம்மா. அந்த பொண்ணோட அம்மா தான் கடைக்கு போகும் போது என் அம்மாவிடம் இதை சொல்லி இருக்காங்க.

எந்த சத்தமும் இல்லை. பின் வெகு நேரமாகியும் யாருகே வெளியே வரவில்லை. மிலிட்டரி அய்யா..வெகு நேரம் உள்ளே இருக்க மாட்டார். அதனால் சந்தேகப்பட்டு நானும் என் பொண்டாட்டி, அம்மா எல்லாரும் போனோம். எல்லாரும் கத்தியால் குத்தி இறந்து கிடப்பதை பார்த்து தான் உடனே போலீஸிற்கு போன் செய்து விட்டு, தம்பிக்கு என் பொண்டாட்டி விசயத்தை சொன்னார்.

சார், பாத்திரம் உருளும் சத்தம் கூட நன்றாக கேட்டது. ஆனால் நாங்கள் போய் பார்க்கும் போது, பாத்திரங்கள் மட்டும் அடுக்கப்பட்டு இருந்தது. மற்ற பொருட்கள் அங்கங்கு உடைந்து இருந்தது என்றார்.

அதிரதா, நீ இவரை போலீஸிடம் அழைத்து செல். பார்த்து கவனமா இரு..என்று செழியன் சொல்ல, இல்லப்பா..நீங்க தான் இந்த ஆதாரம் போதாதுன்னு சொன்னீங்க? அதனால இவர் இன்று நம்ம வீட்ல இருக்கட்டும். பத்திரமா பார்த்துக்கோங்க. நான் பாட்டி வீட்டுக்கு போய் அந்த பாத்திரங்களில் உள்ள ரேகையை ஆட்கள் வைத்து பார்த்து அதை ரிப்போர்ட் எடுத்திட்டு வாரேன். பின் நேராக போலீஸ் என்ன? கோர்ட்டுக்கே போகலாம் என்றான்.

அதீபன் கதறி அழுதான். இல்ல போகக் கூடாது. இதை இப்படியே விட்டுருங்க என்றார் பாட்டி.

அம்மா..செழியன் சத்தமிட, அதீபனே கோபமாக பாட்டி அவர் மட்டும் என் கண்ணு முன்னாடி வந்தார்ன்னா வெட்டி பொடி போட்ருவேன் என்று சீறினான்.

என்னடா பேசுற? அவன் உன்னோட அப்பா?

அவனா? அப்பா? மேலும் அவன் கோபமாக, உன்னோட அம்மா ஒரு நாளாவது நல்ல படியா உங்கப்பாவை கவனிச்சிருக்காலா பாட்டியும் சத்தமிட,

ஓ..உனக்கு உன்னோட பையன் முக்கியமா போயிட்டான்ல்ல. உனக்கு தெரியாத விசயத்தை சொல்லவா? எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து அம்மாவும் அப்பாவும்  ஒரே அறையில் ஒரு நாள் கூட தங்கியதில்லை. நான் புறந்தது கூட விபத்தா தான் இருக்கும் என்று கத்தி விட்டு,

எப்ப பாரு அம்மாவையே குற சொல்றியே? ஒருநாள் உன் பிள்ளை என் அம்மாவிடம் ஆபிஸ் போகும் போது சொல்லிட்டு போயிருக்காரா? இல்லை அம்மாவை பரிமாற தான் விட்டுருப்பாரா? ஆசையா ஏதாவது வாங்கி குடுத்திருப்பாரா? உனக்கு தெரியாமல் அவங்க இரவில் போடு சண்டை தெரியுமா? அம்மா தினமும் என்றையில் என்னுடன் தான் எப்பொழுது இருப்பாங்க. என்றாவது அதை கவனிச்சிருக்கிறியா? எப்ப பாரு என் பிள்ளை.. என் பிள்ளை தான்..

செழியன் அப்பா, நந்தும்மாவிடம் பழகுவதையும், என்னோட அப்பா, அம்மாவிடம் நடந்து கொள்வதையும் நிறைய முறை கவனித்து இருக்கேன். எனக்கு ஏன்ன்னு புரியல. வளர்ந்த பின் கூட புரிய வரல.

அம்மாவை விடு. அப்பா என்னிடம் ஏதாவது பேசியாவது நீ பார்த்திருக்கிறாயா? கேட்டான். பாட்டி உடைந்து கண்ணீருடன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார்.

நந்தும்மாவையும் நீ பெரிதாக கவனித்ததில்லை. அவங்களுக்கு துணைக்கு செழியன் அப்பா இருந்தார். என்னோட அம்மாவுடன், ஒன்றும் புரியாத நிலையில் நான் தான் இருந்தேன். எனக்கு அன்றே புரிந்திருந்தால் என் அம்மாவுடன் இங்கிருந்து சென்றிருப்பேன் என்று சத்தமிட்டான்.

எங்கே எங்கள தனியா விட்ருவீங்களோன்னு பயத்தில் தான் ஆபிஸிக்கு அம்மா என்னை போக சொல்லி கட்டாயப்படுத்தினாங்க. எனக்கு தெரியும். ஆனால் எனக்கு விருப்பமில்லை.

அப்பாவுக்கு அம்மாவை பிடிக்கலைன்னு கல்லூரி முடிந்த பின் தான் தெரிந்தது. அப்பவே அவங்கள வெளிய போயிடலாம்ன்னு அழைத்தேன். வர மாட்டேன்னு பிடிவாதமா இருந்து எல்லாரிடமும் கெட்ட பெயரை சம்பாதிட்டு என்னை யாருமில்லாதவனாக்கிட்டு போயிட்டாங்க என்று அழுதான்.

சிவநந்தினி அவனை அணைத்து, யாருமில்லைன்னு சொல்லாதடா, நீ எங்க புள்ள தான்டா. நான் அப்படி தான் உன்னை பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று கண்ணீர் வடித்தார்.

அவரை விலக்கி விட்டு, அண்ணா யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. அந்த ஆளை உள்ளே அனுப்பாமல் விடக் கூடாது என்று அதிரதனை பார்த்து கத்தினான். அவனும் அதீபனை அணைத்து, கண்டிப்பாடா. ஆனால் யாருமில்லைன்னு சொல்லாத. நாம எல்லாரும் ஒரே குடும்பம் தான் என்றான். அதீபனும் அதிரதனை அணைத்து, பாட்டியை முறைத்து விட்டு,

சாட்சி சொல்ல வந்தவரிடம், வாங்க அங்கிள் என்னோட அறையில தங்கிக்கோங்க. அவனை விடக்கூடாது. அது தான் எல்லாருக்கும் பாதுகாப்பு என்றான்.

வேண்டாம்டா. அவரை நான் அழைத்து செல்கிறேன். அங்கிள் இங்கேயே இருங்க வந்துடுறேன் என்றான் அதிரதன்

செழியனும் மனவருத்தமுடன் அறைக்கு செல்ல, அதிரதன் அவர் பின் சென்றார்.

அப்பா, அவன் அழைக்க, விசு ஏன் இப்படி செய்கிறான்? ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. தாங்க முடியாத வலிய குடுக்கிறானே என்று செழியனும் கதறி அழுதார். சிவநந்தினி வெளியே அமைதியாக அமர்ந்தார்.

ரணாவும், ஆத்விகாவும் அவர்கள் அம்மாவிடம் வந்து அவரை அணைத்தபடி அமர்ந்தனர். ரவிக்குமார் தன் நண்பனை காண சென்றார்.

எல்லாரையும் பார்த்த அதீபன், ரேவதியிடம் வந்து “நன்றி” கூறி விட்டு, நிதினையும் தாட்சாயிணியையும் பார்த்துக் கொண்டே சென்றான்.

Advertisement