Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 7
தூக்கம் கண்களை நிறைக்க அதனை வலுக்கட்டாயமாகப் புறம் தள்ளி எழுந்து அமர்ந்தாள் கண்ணாம்பா நாள் முழுக்க வீடு,தோப்பு,தோட்டம்,வயல் என்று அவளுக்கு வேலை சரியாக இருந்தது.
உடல் அலுப்புத் தட்ட கால்கள் எல்லாம் சற்று ஓய்வு கொள்ளேன் என்று கெஞ்சியது இன்று ஹரிஷ்,திவ்வியாவிற்கு மறுவீடு அழைப்பு அவர்களுக்கு உணவு தயார் செய்ய வேண்டும் ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றதே முயன்று எழுந்து அமர்ந்தவள் ஆச்சியென்று குரல் கொடுக்க.
பேச்சி ஓடி வந்தார் பொதுவாகத் துரு துருவென்று இருக்கும் பேத்தி நேற்றில் இருந்து சோர்வு தட்டியது போல் இருக்க அவருக்கு அவளது உடல் நிலையை எண்ணி கவலையாக இருந்தது.
அடித்து பிடித்து ஓடி வந்த பேச்சியை என்னத்துக்கு இப்ப இளவட்டம் கணக்கா துள்ளிக்கிட்டு வர கிழவி எங்கனயாவது மண்டைய ஒடச்சு வைக்கவாஎன்று கடிந்து கொண்டாள் கள்ளி.
அவர் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இங்கன பாருடி சின்னவள கண்ணாலம் பண்ணி கொடுத்தாச்சு இனிமே அவுக பாத்துக்குவாக,
நீ! அவ பின்னால திரியாம உம்ம கண்ணாலத்தைப் பாக்குற வழிய பாரு விருந்துக்குத் தோட்டத்து ஆளுங்கள ஒத்தாசையா வச்சுக்க உடம்பு சூடு கண்ட மாதிரி இருக்கு மிளகு ரசம் வச்சு தரேன் இரண்டு கவளம் உண்டினா சோர்வு எல்லாம் காணாம போய்டும் இரு சோறு பொங்க உலைய போட்டுட்டு வரேன் செத்த படுஎன்று அவர் செல்ல பார்க்க.
அவரது கைகளைப் பற்றியவள் கிழவி நானே சமக்கேன் எனக்கு அங்கன யாரையும் நிக்க வைக்க முடியாது உனக்கே தெரியுமுள்ள பேச்சி சற்றுக் கோபமாக,
என்னமோ பண்ணி தொலை உம்ம கூட மல்லுக்கட்ட எனக்குத் தெம்பு இல்ல சாமி அடங்குறாளா பாரு சண்டி குதிரைஅவளைத் திட்டி கொண்டே சென்றார்.
சென்றவர் செய்த முதல் வேலை பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைத்து வீம்புக்கு போன் போட்டுக் கொடுக்கச் செய்து இங்கு நடந்த அனைத்தும் அவனுக்குச் சுட சுட பரிமாறினார் அங்கு என்ன சொன்னானோ
நீங்க சொன்னா சரி சாமி என் ராசா எது செஞ்சாலும் நல்லது தான்யா வெரசா வாக இந்தக் கிழவி காத்துக் கிடக்கேன்
அவர் போனை அணைத்து விட்டு ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அவர் வேலையைப் பார்க்க சென்றார் சேர வேண்டிய இடத்தில் பேத்தி சேர்ந்துவிட்டால்,
இனி கடைசிக் காலத்தில் நிம்மதியாகக் கண்ணை மூடலாம் என்று அந்த உள்ளம் அடித்துக் கொள்கின்றது அது புரியாமல் ஆட்டம் காட்டும் தனது பேத்தியை அவள் போக்கிலே போய் மடக்கினால் தான் உண்டு என்று எண்ணியவர் அதை தான் இப்போது கையாண்டார்.
அதன் பின் வேலை விரைவாக நடந்தது மேல் வேலைக்கு மட்டும் ஆட்களை வைத்து சமைக்க ஆரமித்து விட்டாள் கண்ணாம்பா
கிராமத்து பெண்களுக்கே உள்ள சுறு சுறுப்பு குளித்து முடித்துத் தலையில் வெடுக்கட்டி சைவம் அசைவமென்று பதினேழு பதார்த்தங்களைச் சிட்டாகப் பறந்து பறந்து செய்து முடித்து விட்டாள் அவர்கள் வரும் வேளை நெருங்கவே வீட்டை இன்னொரு முறை பெருக்கி சுத்தம் செய்தாள்.
அவள் மட்டுமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று அன்னலட்சுமி அறிந்ததால் மாப்பிள்ளை பெண்ணை மட்டும் அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.
கண்ணாம்பா வற்புறுத்தவும் அவரும்,பெருமாளும் வருவதாக ஒத்து கொண்டனர் மறந்தும் யூஜீவனை அவள் அழைக்க வில்லை அதை ஒரு குறையாகப் பேச்சி சொல்ல.
எதுக்கு உம்ம ராசனுக்கு அங்கன போய் நீ சமைச்சு போடு கருவாயன சமாளிக்க என்னால முடியாது அவுக வந்தா சிவனேனு இருக்க மாட்டாக நான் விருந்த கவனிக்கவா இல்ல அவுக கிட்ட மல்லுக்கு நிக்கவாஎன்றுகிற அதற்கு மேல் நமது பேச்சி பேசும் ஹ்ம்ம்…………
அவனுக்கும் அவள் அழைக்காதது கோபம் தான் அங்குச் செல்ல கூடாது என்று முடிவு எடுத்தவன் பேச்சியின் போன் வரவும் முதல் ஆளாக கிளம்பி வெளியில் நின்றான்.
அனைவரும் கிளம்பி வர இவனைப் பார்த்த அனைவருக்கும் அதிரிச்சி கலந்த ஆச்சிரியம் தான் பெருமாள் வழக்கம் போல் அன்னலஷ்மியின் காதை கடித்தார்என்னம்மா உன் பையன் தானே இது? நேத்து கேட்டதுக்கு முடியாதுனு சொன்னான் நம்ம மருமக ஸ்பெஷல் அழைப்பு கொடுத்து இருக்குமோ
அன்னலஷ்மிக்கு சந்தோச ஆர்ப்பரிப்பு என்னங்க இன்னைக்கே பேசி முடிச்சுடலாம் ஆச்சிக்கும் விஷயம் தெரியும் போல இனியும் தள்ளி போட வேண்டாம்அவருக்கும் அதுவே சரியாக பட சரியென்று தலையை ஆட்டி வைத்தார். 
காரை புயலாக விரட்டி சென்றான் யூஜீவன் அவனை எதிர்த்துக் கேள்வி கேட்கும் தைரியம் இல்லாத பட்சத்தில் கண்களை இறுக்க மூடி கொண்டனர். 
அன்னலட்சுமி பெருமாளின் தோளில் சாய்ந்து கொள்ள திவ்வியா சாய்ந்து அமர்ந்து கண்களை இறுக்க மூடி கொண்டாள் ஹரிஷ் முன்புறம் சீட் பெல்ட்டை போட்டுவிட்டு கைகளைத் தூக்கி பின்ன தலையலில் வைத்துக் கண்களை மூடி கொண்டான்.
ரோலர் கோஸ்ட் ரைட் செல்வது போலக் குடும்பமே கண்களை மூடி கொள்ள சில மணி நேரம் தாண்டி கண்ணாம்பா வீட்டின் முன் க்ர்ச் ……..டயர் சத்தத்தோடு கார்  நின்றது.
சத்தத்தைக் கேட்டு வீட்டில் இருந்த பேச்சியும்,கண்ணாம்பாவும் ஓடி வர கார் நின்றது கூடத் தெரியாமல் அனைவரும் நடுங்கி போய் அமர்ந்து இருந்தனர்.
முதலில் ஹரிஷை உலுக்கியவன் கண்ணம்பாவை காட்ட அவனை முறைத்துக் கொண்டே ஹரிஷ் கீழே இறங்கினான் பின்பு தான் அனைவரும் தெளிந்தனர். 
பெருமாள் யூஜீவனை முறைத்தாலும் அதையெல்லாம் அசட்டை செய்து பேச்சியிடம் நெருங்கியவன்ஹாய் டார்லிங் எப்படி இருக்கீங்க?” என்று கேட்க அதில் பூரித்துப் போன பேச்சி, 
எனக்கென்ன ராசா ராணி கணக்கா இருக்கேன்” என்று சொல்ல அவர்களுது உரையாடலை கேட்ட கண்ணாம்பாவிற்குத் தான் எரிச்சலாக இருந்தது.
அதை மறைத்துவாங்க அம்மா!… வாங்க அப்பா!… வாங்க கொழுந்து!… வாடி திவி!…என்று எல்லாரையும் அழைத்தவள் என்னதான் இருந்தாலும் வீடு தேடி வந்த யூஜீவனை அழைக்காமல் இருக்க முடியாதே அவனிடம் திரும்பி வாங்க” என்று சொல்ல
அனைவர் முன்னிலையிலும் கண் அடித்து அவளைக் கதற விட்டான் இருக்கும் சூழ்நிலை கருத்தில் கொண்டு அவள் அமைதி காத்தாள் வேறு என்ன செய்ய?…
அனைவரும்  வந்து அமர அனைவரையும் நலம் விசாரித்த பேச்சி திவியை அழைத்து அவளை நலம் விசாரிக்க அவர் தோளில் சலுகையாகச் சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
சிறுது நேரம் பேசி கொண்டு இருக்க அதன்பின் கண்ணாம்பா சாப்பிட அழைக்க அதற்கு முன் பேச வேண்டுமென்று அன்னலட்சுமி அவர்களைத் தடுத்தார் பேச்சிக்கு அவரது எண்ணம் தெரிந்தாலும் தெரியாதது போல் முகத்தை வைத்துக் கொண்டார்.
அம்மாடி இங்க வந்து உட்கார்” என்று தனது பக்கத்தில் கை காட்ட பதுமையாக அமர்ந்தாள் கள்ளி அவளது கையை பற்றி கொண்ட அன்னலட்சுமி பேச்சியிடம் எந்த வித உள் பூச்சுமில்லாமல் நேரடியாக விஷயத்தைப் போட்டு உடைத்தார்.
பேச்சியம்மா உங்க பெரிய பேத்திய என் பெரிய மகனுக்குக் கட்டி கொடுக்கிறிங்களா? நாங்க நல்ல பாத்துக்குறோம்” என்று சொல்ல
அதற்குத் தானே காத்துக் கடந்தார் பெரும் மகிழ்ச்சியுடன் என்னம்மா இப்படி கேட்டுபுட்ட எங்க ராசன கட்டிக்கக் கசக்குதா அவளுக்கு” என்று அவர் தன் சம்மதத்தைத் தெரிவிக்க அவரை முடிந்த மட்டும் முறைத்தாள் கள்ளி.
அவர் பேச்சில் சிரித்த பெருமாள் என்ன எங்க பொண்ண பார்த்து அப்படி சொல்லிட்டீங்க பேச்சியம்மா கண்ணாம்பா எங்க ஆச்சியாக்கும் இந்த பையல அடக்க என் மருமகளால தான் முடியும்
பெரியவர்கள் அவர்கள் சம்மதத்தை தெரிவிக்க தனது அக்கா தன்னுடன் தான் இருக்கப் போகிறாள் என்ற சந்தோஷத்தில் திவியும்.தனது அண்ணன் சரியான ஜோடிய தான் பிடித்திருக்கிறான் என்ற களிப்பில் ஹரிஷும் மனம் நிறைந்து இருந்தனர்.
“உனக்கு இதுல சம்மதம் தானடா?” என்று கண்ணாம்பாவின் தலையைத் தடவி கேட்க ஆச்சியை ஒரு முறை பார்த்தவள் அவரது பார்வை கெஞ்ச தலை தானாகவே ஆடியது சம்மதம் என்பது போல் அப்போதுதான் அவர் அவள் உடல் சூட்டை கவனித்தார்
என்னம்மா உடம்பு இப்படி அனலா கொதிக்குது?” அவர் பதற
விடியல் தட்டவுமே காக்கையா கரையுறேன் சாமி கோட்டி சிறுக்கி காதுல போடாம திரியுறா.அம்புட்டு வேலையும் அவதேன் பாத்தா ஒத்தாசைக்குக் கூட என்ன அண்டவிடலதனது பேத்தியின் உடல் நிலையில் கண்கள் கரிக்க அவர் புலம்ப
கிழவி கத்தி சனத்தைக் கூட்டத செத்த கம்முனு கெட” என்று அதட்ட
வீம்பு,திவியிடம்திவ்வியா இங்க ஹாஸ்பிடல் எங்க இருக்கு
இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கு மாமாசுற்றி இருக்கும் யாரை பற்றியும் கவலை கொள்ளாமல் அலேக்காக அவளைத் தூக்கினான் நமது வீம்பு அவள் அதிர்ந்து விழிக்க அவளைக் கண்டு கொள்ளாமல் பொதுவாக அனைவரையும் பார்த்து “நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு வரோம்என்று சொல்லியவன் யாருடைய பதிலையும் எதிர் பார்க்காமல் சென்று விட்டான்.
காரில் அவளைக் கிடத்தியவன் அதி விரைவாகக் காரை செலுத்தயோவ் கருவாயா அவள் எதையோ பேசவர அவளை அவன் பார்த்த பார்வையில் கப்பென வாய்யை மூடி கொண்டாள்
ஆத்தி கருவாயனுக்கு விசயகாந் கணக்காலக் கண்ணு செவக்குது நம்ம விட கோபம் வருமோ?அதன் பிறகு அவள் அந்தப் புறம் திரும்பவே இல்லை.
ஹாஸ்பிட்டல் சென்று மருத்துவர் அவளைப் பரிசோதித்து மருந்துகள் வாங்கிக் காரில் ஏறும் வரை அமைதியாக இருந்தவன் அவள் கதவை சாத்தியவுடன் அவளை இழுத்து எலும்புகள் நொருங்கும் அளவிற்கு அணைத்துக் கொண்டான்.
அவனது இதயத் துடிப்பு அவள் காதுகளில் இனிமையாக இறங்க மென்மையான குரலில் யோவ் எதுக்கு எடுத்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கட்டிக்குற எலும்பு உடைஞ்சு புடும் போல உடுய்யா” என்று அவள் போராட அவளை மெதுவாக விலக்கியவன் எதுவும் பேசாமல் காரை கிளப்ப அவளும் அமைதியாக வந்தாள்.
அவர்கள் வந்ததும் விருந்து நடக்க வெகு சிறப்பாகவே கண்ணாம்பா செய்த உணவை அனைவரும் ரசித்து உண்டனர் வீம்பு வீம்பு கொண்டு இலையை அளக்க சற்று நேரம் பொறுமையாக இருந்த கண்ணாம்பா ஒரு காச்சலுக்கு அவன் செய்யும் அலும்பு தாங்காமல் அவனிடம் விரைந்தவள்
யோவ் எங்க ஊருல பொண்ணுகத்தேன் கோலம் போடும் நீர் என்ன இலையில கோலம் போடுதிக?” என்று கேட்க அவளை பார்த்து முறைத்தவன் மீண்டும் அதையே தொடர..
 இது சரி பட்டு வராதுஅவன் எத்தனை கேட்டும் தான் அவனுடன் உண்ண மறுத்ததைக் கண்டு அவன் செய்யும் அலும்பை ரசிக்காமல் ரசித்தவள் அவனுடன் அமர்ந்து வேலை செய்யும் ஆளை பரிமாறப் பணிய..
பேச்சிக்கு அத்தனை ஆனந்தம் அவள் இலையில் இருந்து யாரும் அறிய வண்ணம் ஒரு கவளம் உணவை எடுத்து உண்டவன் அதிர்ந்து பார்க்கும் கண்ணம்பாவை வழமை பார்த்துக் கண் அடித்தான்.
சிறு சீண்டல்கள் எல்லாம் காதலன் அழகு போலும்
வீம்பு வீம்பு வீம்பு புடிச்ச கருவாயன்“……………….மெல்ல முணு முணுத்தது கள்ளியின் தேன் ஊறிய அதரங்கள்.
 

Advertisement