Advertisement

மின்னல் 10

பொல்லாத வேலை! அதுக்கு ஹெல்ப்புக்கு இவ வேற போய் அடி பட்டு வந்து கிடக்கிறா? அவனோட வேலை அவனோட! இவளே இப்போ தான் கொஞ்சம் கொஞ்சம் வெளியில் வந்திருக்கா. அதுக்குள்ள இழுத்து விட்டு இருக்கான் பாருங்கண்ணா“, சாரதா புலம்பவும்


விடுமா! அதுதான் எதுவுமே பெருசா நடக்கலயே. அபி வேணும்னே பண்ணி இருக்க மாட்டான்னு உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும்! அவன் எப்போவும் இவளோட நன்மைக்கு தான் எல்லாம் செய்து இருக்கான். இனியும் செய்வான்என்ற படி கட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த மகளின் தலையைக் கோதியவர் கீழே இறங்கிச்செல்லவும் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடி சாரதாவும் பின் தொடர்ந்தார்.

 

அவர்கள் ஹாலிற்குள் நுழையவும் விக்ரமுடன் உள்ளே நுழைந்த அபியின் கண்கள்   யுவாவைத்தான் தேடின.


ம்மா! எங்கம்மா யுவா. எப்படி இருக்கு இப்போ அவளுக்கு?” என்று விசாரித்தவாறு அன்னையின் அருகில் விரையவும்

 அவனையும் விக்ரமையும் முறைத்தவர் மௌனமாக சென்று சோபாவில் அமரஇந்த மாதாஜி வேற கோவமா இருக்காங்களே! இப்பிடியே ரிட்டர்ன் ஆகிடுவோமாஎன்று யோசித்துக்கொண்டு இருந்தான் விக்ரம்

அன்னை பேசாததிலேயே அவரின் கோவம் உணர்ந்தவன் மாமாவின் அருகில் விரைந்து  “நீங்களாச்சும் சொல்லுங்க மாமா! யுவா எங்க? எப்படி இருக்கா இப்போ?” என்று கேட்டான். அதில் சற்று தவிப்பும் கலந்து இருந்ததோ?!

அபிஷிக்த்தின் கையைத் தட்டிக்கொடுந்த தயாபரன்அவளுக்கு ஒன்றும் இல்லை அபி. இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தா. இப்போ தான் லைட்டா தலைவலி என்று சொல்லி மேல போய்த் தூங்குனாஎன்று கூறவும் அவன்கிட்ட ஏன்ணா சொல்றீங்க? உங்க பொண்ணுக்கு ஆபத்தே இவனால தானே வந்திச்சுஎன்று சாரதா இடையிடவும்


லூஸு போல பேசாதம்மா! யுவாவுக்கு இப்படி ஆகும் என்று  எதிர்பார்க்கலை நான். அவனை போக விடாம பார்த்துக்க சொன்னேன். ஏதாச்சும் கதை குடுப்பா என்று நினைச்சேன் இப்படி நேரடியா மோதுவா என்று நான் நினைக்கலை மா!” என்றவன் மறந்தும் அவனின் கேஸின் விபரத்தைக் கூறவில்லை.

 
அவன் இவ்வளவு பேசுவதிலேயே அவனும் உணர்ச்சிவசப்பட்டு இருப்பதை உணர்ந்த சாரதாவும்எனக்கு உன்னோட வேலை எவ்வளவு முக்கியம் என்று தெரியுது அபி! ஆனா யுவா இப்போ தான் அவளோட பிரச்சனையில இருந்தே வெளியில வந்து இருக்கா. பார்த்துக்கோஎன்று கூறவும் புரிந்தது என்பதாக தலையாட்டியவன் விக்ரமை நேரமாகி விட்டதால் அங்கேயே தங்கக் கூறிவிட்டு தனது அறைக்கு விரைந்தான்.

அவன் அந்தப்புறம் சென்றதும் விக்ரமைப் பிடித்துக்கொண்ட சாரதா அவனுக்கும் சில பக்கங்கள் அறிவுரை என்ற பெயரில் அறுத்துத்தள்ள நொந்தே போய்விட்டான் அவன். வேலை நேரத்தில் அபி! வீட்டில் சாரதா என்று இரு பக்கமும் அடிவாங்கும் அவனைக் கண்டு தயாபரனுக்கும் இரக்கம் வந்ததோ என்னவோஅட விடு சாரதா! சும்மா பிள்ளைங்களைப் போட்டு படுத்தாமஎன்று கூறியவர் அவனின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு உள்ளே அழைத்துச் செல்லவும் தான் விக்ரமிற்கு   மூச்சே வந்தது.  

தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு வந்த அபி இன்டர்காமில் தாயிடம் உணவு வேண்டாம் என்று கூறி விட்டு கட்டிலில் சாய்ந்தான். விழிகளை மூடியவனுக்குள் நெற்றியில் இரத்தம் வழிந்தோட தனது கைகளில் கிடந்த யுவாவின் முகமே வந்து வந்து போக போகவும் அவளைக்காணாமல் உறக்கம் நெருங்காது என்று உணர்ந்தவன் ஒருமுடிவோடு எழுந்து யுவாவின் அறைக்குச் சென்றான்

அது தாளிடப்படாமல் சாற்றிக் கிடந்தது போலும்! இவனது ஒரு தள்ளிலேயே அகலத் திறந்து கொண்டது. ஏசியின் குளுமை முகத்தில் வந்து அறைய குளிரில் போர்வையை மார்பளவு போர்த்திக்கொண்டு கலைந்த ஓவியமாக உறங்கும் யுவாவின் அருகில் சென்று நின்றவனுக்கு அவள் நெற்றியில் இருந்த கட்டைப் பார்க்க இலேசாக மனதிற்குள் எதுவோ செய்தது. கட்டிலிலேயே இருந்த இடைவேளியில் அமர்ந்தவன் சற்று எக்கி அவளது நெற்றிக்காயத்தின் மேல் கையைக் கொண்டு போய்விட்டு மடக்கிக்கொண்டான்.  


இவள் இல்லை என்றால் அந்தப் பெண்ணைச் சீரழித்திருப்பார்களே!’ அத்திருடனின் பையை விடாது பற்றிக்கொண்டு நின்ற யுவாவின் நினைவு எழ ‘அந்த நிமிடம் பழைய யுவா வெளியில் வந்திருக்க வேண்டும்என்று எண்ணிப்புன்னகைத்தவன் இலேசாக தலையை வருடிவிட்டு எழுந்து வெளியில் சென்றான்

சென்றவனின் கால்கள் வாசலை அடைய முன்னமேமாமா!” என்ற குரல் கேட்க சட்டென்று திரும்பியவன் கண்களை மலர்த்தி தன்னை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த யுவாவைக் கண்டுயுவாஎன்றபடி அவளருகே விரைந்தான்.

 
என்ன யுவா? எப்படி இருக்கு இப்போ?” என்று அக்கறையாகக் கேட்கவும் எனக்கொன்றும் இல்லை மாமா! இலேசான காயம் தான். அந்தப் பொண்ணைக் கண்டு பிடிச்சுட்டீங்களா? அவன் தான் நீங்க தேடுனவனா?” என்று எதிர்பார்ப்புடன் கேட்கவும் புன்னகையுடன் அவள் அருகில் அமர்ந்தவன்


பின்ன! ஒரு ஜான்சி ராணியோட முயற்சியால அவனைக் கண்டு பிடிச்சோம்! அவன் தான் பொண்ணையும் பொன்னையும் கடத்தினது. நீ இல்லைனா அந்த நேரத்தில..” என்று கூறியவனின் வாய் மீது விரல் வைத்தவள்நான் இல்லனாலும் நீங்க கண்டு பிடிச்சிருப்பிங்க. எனக்குத் தெரியும்!” எனவும் 

அவள் விரல் பட்ட இடம் குறுகுறுக்க தலையை சற்று பின்னால் சாய்த்தவன்சரிதான்என்று கூறிவிட்டு   “நீ தூங்கு யுவா! நீயும் டயர்ட்டா இருக்க. நானும் கொஞ்சம் டயர்டா இருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்என்ற படி விலகிச் செல்ல புன்னகைத்தவள் ஒரு பெருமூச்சுடன் விழிகளை   மூடிக்கொண்டாள். அவனறியாமலேயே தனது வளையத்துக்குள் மெல்ல மெல்ல யுவாவை தானே நுழைத்துக்கொண்டு இருந்ததை பாவம் அபி அறியவில்லை!

********

அன்று கல்லூரியில் ஏதோ கலைவிழா நடந்து கொண்டு இருந்தது. அதற்கேற்றாற்போல பூம் பூம் என்று அரங்கையே அதிர வைத்த சப்தங்களும், பாடல்களும், கல்லூரிப்பெண்களின் சிரிப்பொலியும் என்று அந்த இடமே கல கலவென இருக்க சிறிது நேரம் தனது மாணவ மாணவிகளுடன் உதவியாக நின்ற யுவரத்னா சிறிது காற்றோட்டமாக இருக்கட்டும் என்று அரங்கத்திற்கு வெளியே வந்தாள். எப்போழுதும் அடைந்து இருக்கும் இடங்கள் யுவாவிற்குப் பிடிக்காது. மூச்சு முட்டுவதைப் போல இருக்கும். வீட்டிலும் இரவு வேளைகளில் சிறிது நேரம் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொள்வாள். 

அதனால் தானோ என்னவோ இப்பொழுதும் மூச்சு முட்டுவதைப் போல இருக்க வெளியே வந்து சற்று ஓரமாக இருந்த ஆலமரந்தின் கீழ் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்து ஆழ மூச்செடுத்துக் கொண்டாள்,

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியாது “ஏய்!” என்ற கர்ஜனையான குரல் கேட்கவும் திடுக்கிட்டு விழித்தவள் முன்னால் ருத்ரமூர்த்தியாக நின்ற அரவிந்தனைக் கண்டு நடுங்கியபடியே எழுந்து நின்றாள். கல்லூரி படிக்கும் காலத்திலேயே அவளுக்கு அரவிந்தனைத் தெரியும். கல்லூரித் தோழர்கள் அனைவரும் தோழர்களின் குடும்பத்தினருடனும் நல்ல பிணைப்பொன்றை வைத்திருந்தனர். 

“அங்..அங்கிள்!” நடுங்கிய படியே எழுந்தவளின் கழுத்தைப்பற்றி அழுத்தியவர்  “ச்சே! என்னை அப்படிக்கூப்பிடாத” என்று கத்தவும் கலங்கிய கண்களுடன் சுற்றிப்பார்வையிட்டவளுக்கு அங்கு யாரும் இல்லாத தனிமை ஒருவித பயத்தைத் தந்தது.

அவளது கழுத்தை இன்னும் கோவத்தில் அழுத்தியவர் அவள் மூச்சுக்குத் திணறத்தொடங்கவும் அப்படியே அவளைத் தள்ளிவிட தொப்பென்று அமர்ந்திருந்த பெஞ்சிலேயே மீண்டும் விழுந்தவளை நோக்கி ஆள்காட்டி விரலை ஆட்டியவாறே 

“உன்னைப் பார்த்தாலே கொலைவெறிதான் வருது! என்னோட பையனைக் கொன்று அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்ச. அபிஷிக்த்தையும் உனக்கு சாதகமா மயக்கி அவனையும் என்கிட்ட இருந்து பிரிச்ச. வீடு! அலுவலகம்! இரண்டுமே இப்போ நரகமா இருக்கு எல்லாம் உன்னால” என்று குரலுயர்த்திக் கத்தவும் கெஞ்சுவது போல கையை வைத்து 

“தயவுசெய்து நம்புங்க அங்கிள்! விதுரனை நான் கொல்லல!” என்று அவரது விழியைப் பார்த்து கூற இன்னும் ஆத்திரம் பெருக அவளது கன்னத்தில் தனது கையை பதித்து இருந்தார்.

அவரே அதை எதிர்பார்க்கவில்லை போலும் தனது கையையே ‘நானா இப்படி ஒரு பெண்ணை அறைந்தேன்’ என்பது போலப் பார்த்தவர் அதற்கும் காரணமாக யுவாவையே எண்ணி கன்னத்தில் கை வைத்து அதிர்ந்து நின்றவளை 

“உன்னை நான் பார்க்கவே கூடாது என்று நினைச்சேன். பார்த்ததால இப்படி என்னையும் அரக்கனா மாத்திட்ட ல? இனி எப்போவும் என்னோட முகத்தில முழிக்காத. முழிச்ச உன்னோட உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை” என்றுவிட்டு விருட்டென விலகிச்செல்ல அப்படியே முகத்தை மூடி அழத்தொடங்கிய யுவரத்னாவிற்கு இந்தக் களங்கம் தன்னை விட்டு போகவே போகாதா என்று பயமாக இருந்தது.

********

விக்ரமும் அபியும் அபியின் வீட்டு ஹாலில் அமர்ந்து ஏதோ தீவிர விவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அபி சிலவேளைகளில் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே தகவல்கள் தெரியக்கூடாது என்று எண்ணும் வேளைகளில் இப்படி வீட்டில் சில டிஸ்கஷன்களை வைத்துக்கொள்வான். அன்றும் அவ்வாறே விவாதித்துக்கொண்டு இருக்க கல்லூரி விழாவில் பங்கேற்காமல் நேரத்துடன் வந்த யுவா ஹாலில் நடுநாயகமாக அபியை எதிர்பார்க்காமல் தயங்கி நின்றாள்.

அத்தையும் தந்தையும் யாரோ உறவினர் வீட்டில் திருமணம் என்று செல்வதாகக் கூறி இருக்கவும் வேலைக்காரியிடம் கூறிவிட்டு அறையிலே அடைந்து கிடந்தால் அவர்களுக்கு நடந்ததைத் தெரிவிக்காமல் மறைத்துவிடலாம் என்று பெரிய திட்டத்துடன் வீட்டிற்கு வந்தால் மிகப்பெரிய சுழல் ஹாலில் அல்லவா இருக்கின்றது. 

தயங்கி நின்றவளைக் கவனிக்கும் நிலையில் அபி இருக்கவில்லை போலும். ஏதையோ தீவிரமாக விக்ரமிற்கு விளக்கிக்கொண்டு இருந்தவனை கடைக்கண்ணால் நோக்கியவல் மெல்ல அடி எடுத்து வைத்தபடி மாடிப்படியை நோக்கி விரைந்தாள். பாவம் அபிஷிக்த்திற்கு சாரதா கூறுவதைப் போல முதுகிலும் கண்ணிருப்பதை அவள் அறியவில்லை போலும்.

மாடியை நெருங்கி ‘ஹப்பா’ என்று பெருமூச்சை வெளியேற்றிவிட்டு மாடிப்படியில் காலடி எடுத்து வைத்தவளின் உடல் “யுவா” என்ற அபியின் அழைப்பில் தூக்கிவாரிப்போட்டது. ‘அய்யோ’ என்று கையை உதறியவள் “யுவா!” என்ற அபியின் அழைப்பு இப்பொழுது அழுத்தமாகவும் “அபி மா..மாமா” என்று தந்தி அடித்தவாறே அசையாமல் நின்றாள்.

அபிக்கென்ன தெரியும் அவளது பதட்டம்? “என்ன யுவா அங்கேயே நிற்கிற? இங்க வா” என்று அழுத்திக்கூறவும் மெல்ல அடியெடுத்து வைத்து தங்களை நோக்கி வந்தவளைக் கண்ட விக்ரமின் கண்கள் சாசர் போல விரிந்தது. அவளையும் தனது பாஸையும் மாறி மாறிப்பார்த்தவன் எதையோ சொல்லப்போக “வேண்டாம்” என்றதாக யுவா காட்டிய பாவனையில் சட்டென்று வாயை மூடிக்கொண்டான்.

“யுவா! எங்களுக்கு இந்தக்கேஸில உன்னோட ஹெல்ப் தேவைப்படும் என்று நினைக்கிறேன்”

“எ..என்ன.. என்ன உதவி மாமா?” 

“அது கொஞ்ச நாளா” என்றபடி நிமிர்ந்தவன் தலை குனிந்தபடியே தன் முன்னால் நின்ற யுவாவை விநோதமாகப் பார்த்தான். 

“என்ன யுவா? ஸ்கூல்ல பனிஷ்மென்ட்ல நிற்கிற மாதிரி நிற்கிற? நிமிர்ந்து என்னைப் பாரு” என்று கூறவும் தலையை ஒரு புறம் திருப்பியபடி நிமிர்ந்தவள் “கழுத்து வலி மாமா அதுதான்” என்கவும் அபிஷிக்த்தின் புருவம் சுருங்கியது. 

இப்பொழுது அபிஷிக்திற்கு அவளது வலக்கன்னம் மட்டுமே தெரிய “கழுத்து வலிக்குதா?” என்றபடி எழுத்தவன் யுவாவை நெருங்கவும் அவளின் கால்களோ பின்னடைந்தன.

அவளின் அச்செய்கையில் சந்தேகம் உறுதிபெறயுவா!” என்று அழுத்தி அழைத்தவனின் குரலில் சட்டென்று நிமிர்ந்தவளின் இடக்கன்னம் சிவந்துபோய் இருந்ததைக் கண்டவன் ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டான். அதுமட்டுமன்றி கழுத்தும் சிவந்து போய் இருந்தது

ஹேய்! யுவா?” என்றபடி அவளை ஓரெட்டில் நெருங்கியவன் அவளின் கன்னத்தைத் தொடவும் வலியில்ஸ்ஸ்என்று முணகியபடி தலையைசாய்த்தவளுக்கு அந்த நேரத்திலும் அபியின் தொடுகை என்னமோ செய்தது.

என்னாச்சு? ஏன் இப்படி சிவந்து..” என்று ஆராய்ந்தவனுக்கு அது விரல்த்தடம் எனப்புரியவும் கோவத்தில் விழிகள் சிவக்கயார் யுவா? யாரு அடிச்சது?” என்று உறுமினான். அவனது உறுமலில் உள்ளே உதறல் எடுத்தாலும் 

யாரும் என்னை அடிக்கல மாமா! காலையில இருந்து கடிச்சுட்டே இருந்திச்சு வலி தாங்காம நான் தான் அறைஞ்சேன். அலேர்ஜி போலஎனவும் 

என்றவன்அப்போ கழுத்துல?” என்று நக்கலாகக் கேட்க பேந்தப் பேந்த முழித்தவள்அய்யய்யோ இதுக்கு எதையும் யோசிக்கலையேசற்றுநேரம் திணறிவிட்டுஅது..அது தான் கழுத்தும் கடிச்சுட்டே இருந்திச்சு. அப்போ தேய்ச்சதுல.. நா..நாளைக்கு சரியாகிடும்என்று கூறவும் அவளது விழிகளை கோவமாக பார்த்த அபிஷிக்த்தின் விழிகள் 

அப்போ நீ சொல்ல மாட்ட?’ என்று கேட்டன. 

 

உயிர் போனாலும் சொல்ல மாட்டேன்என்பதைப் போல நிமிர்ந்து நின்றவளைப் பார்த்து இயலாமையால் தலையை அழுந்தக் கோதிக்கொண்டவன்போடிஎன்பது போல சோபாவில் சென்று அமர்ந்து தலையைத் தாங்கிக் கொள்ளவும் விக்ரமை பார்த்துக்கொள்ளுமாறு கண்களால் ஜாடை காட்டிவிட்டு அப்படியே மாடியை நோக்கி ஓடிப்போனாள் அபிஷிக்த்தின் உயிரில் சதிராடப்போகும் யுவரத்னா!

Advertisement