Advertisement

மின்னல் 1 

லூஸாப்பா நீ?” பிதாமகன் படத்தில் லைலா கத்தியதைப்போல கத்தியபடி தன்னைத் திரும்பிப்பார்த்த தனது அழகு மகள் யுவரத்னாவைப்பார்த்துஉன்னைப் பெத்தேன் ? நான் லூஸுதான் மாஎன்று கூற தயாபரனுக்கும் ஆசைதான். ஆனால் அவள் புறம் தவறு இல்லாததும் அப்படி அவர்  கூறியபின்னர் அவள் ஆடப்போகும் ஆட்டத்தை எழுந்த பயமும் அவரின் வாயை இறுக  மூட வைத்தது

தங்கையாம்அவர் மகனாம்! இவங்க குடும்பப் பிரச்சனைக்கு நாங்க ஊறுகாயாமுணுமுணுத்தபடி தோசையைத் திருப்பிப் போட்டவளின் கன்னங்களில் சினச்சிவப்பு ஏறி இருந்தது.  

மீண்டும் கரண்டியுடன் திரும்பி அவரை நோக்கி ஆட்டியபடியேஇல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்! உங்களை மாப்பிள்ளை பார்க்க சொன்ன ஒரே ஒரு காரணத்துக்காக இப்படி ஒரு ரௌடிக்கிட்ட மாட்டி விடப்பார்க்கிரீங்களே! இவன் உங்க மேல கோவமா இருந்தால் நான் என்ன பண்ண? பெரிய மகாராஜா அவன் கோவமா இருக்கான் என்று அவனை சமாதானப் படுத்த மகளைக் கட்டிக்கொடுக்க போறாராம்மீண்டும் அடுப்பின் புறம் திரும்பிக் கொண்டாள்.

அவ்வளவு கத்தியும் மனமே ஆறவில்லை போலும். தந்தையின் தட்டில் தோசையை வைத்தவாறேசரி! உங்களுக்கு உங்க மருமகனோட ராசியாக நான் தான் வழி என்று எப்படித் தோணிச்சு பா? ஒரு வேளை நான் பொண்ணா இல்லாம ஆண் பிள்ளையா பிறந்து இருந்தால் என்ன செய்து இருப்பீங்க?” மனதில் வில்லங்கமான கேள்வி எழ தந்தையிடம் கேட்கமுடியாமல் அதை உள்ளே புதைத்தவள் ஒரு அனல் பார்வையுடனே  சென்றாள்.

உண்மையில் தந்தை தனக்கு மாப்பிள்ளை பார்த்து இருப்பதாகக் கூறவும் இயல்பாக தான் அந்தப்புகைப்படத்தை பார்த்தாள் யுவரத்னா! ஆனால் புகைப்படத்தில் புன்னகைத்துக் கொண்டு இருந்தவனைப் பார்த்ததும் உடலெங்கும் அனல் பரவிப்போனது. அத்துடன் அவனை சந்தித்து இருந்த இரு  சந்தர்ப்பங்களும் கண்முன்னால் விரிந்தது.

****

யுவரத்னா ஒரு பிரபல சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அதே கல்லூரியில் தற்காலிக விரிவுரையாளராகவும் சட்டத்தரணி ஒருவரிடம் பயிற்சியாளராகவும் இருக்கின்றாள். ஒன்பது மாதங்கள் இருக்கும்! அவளும் அவளது கல்லூரித்தோழியும் வார இறுதி நாளொன்றில் ஷாப்பிங்க் என்று கிளம்பிய போது பாதை முழுதும் வாகன நெருக்கடியின் காரணமாக வாகனங்கள் நிறைந்து இருந்தது. இவர்களின் இரு சக்கர வாகனத்தை செலுத்தும் அளவு கூட இடைவெளியில்லாமல் மக்களும்  வாகனக்களும் நிறைந்திருக்க வாகனத்தில் கையை ஊன்றியபடியே எக்கி பார்த்தவளின் கண்களின் அவன் விழுந்தான்.

ஜீப்பொன்றின் ஹூடின் (Hood) மேல் ஏறி இருந்தவனை சுற்றி  நாலைந்து பேர் பின்னால் கைகளைக் கட்டியபடி நிற்க அவன் முன்னால் இரத்தம் வழியும் முகத்துடன் கைகளைக் கூப்பியபடி ஒருவன் வீழ்ந்து கிடந்தான். அவனை இரக்கமே இல்லாமல் சிவந்த விழிகளுடன் உறுத்து விழித்தவன் ஜீப்பில் இருந்து குதித்து இறங்கினான். ஆறடி உயரமும் அலையலையான கேசமும் தாடி மழிக்கப்பட்ட கன்னங்களில் வளர்ந்திருந்த ஒரு நாள்த் தாடியும் முறுக்கி விட்டிருந்த மீசையும் அழகன் தான் என்று மனம் விமர்சனம் செய்தது. கருப்பு நிற ஷர்ட்டை முழங்கை வரை இழுத்துவிட்டிருக்க அவனது ஒரு கையில் இருந்த வெள்ளிக்காப்பு சூரியஒளி பட்டு தகதகத்துக் கொண்டு இருந்தது.

காப்பை இழுத்து முழங்கைக்கு அருகில் விட்டுவிட்டு வலக்கையால் இடது பக்க மீசையை முறுக்கியபடியே கீழே வீழ்ந்து கெஞ்சிக்கொண்டு இருந்தவன் அருகில் குனிந்தவன் அவனது கூப்பிய கையைப்பற்றி பின்னால் முறுக்கினான். வலியில் கதறியவனின் குரலில் அந்தப்பாதையே கிடுகிடுக்க யாருக்கும் அதை தட்டிக்கேட்க தைரியம் இல்லாமல் அமைதியாக நடப்பதைப் பார்த்தபடி இருந்தனர்.

யுவரத்னாவிற்கு அதைக்காண்கையில் உடல் முழுவதும் கொதித்தது. என்ன மக்கள் இவர்கள்? ஒருத்தனைப் போட்டு இப்படி அடிக்கின்றான் தட்டிக்கேட்காமல் படம்பார்ப்பது போல பார்த்துக்கொண்டு இருக்கின்றார்களே! கோவத்தில் பைக்கில் இருந்து இறங்கியவள் தோழியின் கைகளில் பைக்கைக் கொடுத்துவிட்டு அங்கு நின்றவர்களை ஒதுக்கியபடி முன்னேறினாள்

யுவா! யுவாதோழி அழைத்ததையும் கேட்காமல் முன்னேறியவளின் கண்களில் வெறியுடன் வீழ்ந்து கிடந்தவனின் கைகளின் மேல் தனது பூட்ஸ் காலால் மிதித்தவன் தான் விழுந்தான். அவனையும் அவனுடன் இருந்தவர்களையும் பார்வையிட்டவளுக்கு ஒரு யோசனை தோன்றவும் அப்பகுதி பொலிஸ் ஸ்டேஷனின் இலக்கத்தை கூகிள் பண்ணி எடுத்தவள் அவர்களுக்கு அழைத்தாள்.

வலியில் கத்தமுடியாமல் வீழ்ந்து கிடந்தவனின் மெல்லிய முணகல் ஒலியும் வாகனங்களின் இரைச்சல் தவிர வேறு எந்த ஒலியும் அங்கு இருக்கவில்லை. அதனால் அபிஷிக்த்தின் (தேஜ்) காதுகளில் யுவரத்னாவின்ஹலோ பொலிஸ் ஸ்டேஷன்என்ற குரல் தெளிவாகவே விழுந்தது. விழிகளைத் திருப்பி தன்னை முறைத்த படி போனைக் காதில் வைத்திருந்த அழகியை கல்லோ மண்ணோ என்று  பார்த்தவன் அவளை நோக்கி நகர முயன்ற தன்னுடன் இருந்த ஒருவனை விழிகளாலேயே தடுத்தான். அவள் போலீஸிற்கு தகவல் கூறிக்கொண்டு இருக்கவும் அவளைப் பார்த்தபடி மீண்டும் கீழே கிடந்தவனை ஓங்கி மிதித்தவனின் விழிகளில் என்ன இருந்தது என்று அவளுக்கு இன்றுவரை தெரியவில்லை.

சிறிது நேரத்தில் பொலிஸ் வந்து பாதையைக் கிளியர் பண்ண பொலிஸைப் பற்றிக் கவலையே படாமல் தன்னை நோக்கிக் கொண்டு பான்ட் பாக்கெட்டில் கை வைத்தபடி நின்றவனைப் பார்த்தபடியே தோழியுடன் சென்றவளின் பக்கக் கண்ணாடியில் பொலிஸ் இன்ஸ்பெக்டர் அவனை நோக்கி செல்வது விழிகளில் பட்டது

****

அத்துடன் அவள் அந்த நிகழ்வை மறந்து இருந்தாலும் சில நேரங்களில் தன்னை நோக்கியபடியே கீழே விழ்ந்திருந்தவனை மிதித்தவனின் விம்பம் அவளது மனக்கண்ணில் மின்னி மின்னி மறையும். அந்த நிகழ்வு நிகழ்ந்து மூன்று மாதங்களின் பின்னர் அவள் அவனை அந்த நட்சத்திர விடுதியில் மீண்டும்  சந்தித்தாள். அவள் நினைத்துப்பார்க்கவே விரும்பாத நிகழ்வு!

மாலை தந்தைக்கும் தனக்கும் உணவு தயாரித்துக்கொண்டு இருந்தவளின் காதுகளில் தொலைபேசி அழைப்பின் ஒலி விழவும் அழைப்பை ஏற்றபடி கரண்டியால் சட்டியைக் கிளறியபடி இருந்தவளின் கைகள் அப்புறம் தோழி கூறிய விடயத்தில் ஒரு நொடி அசைவை நிறுத்தியது

விதுரனை இன்னொரு பொண்ணோட பார்த்தேன் டி” 

என்னடி சொல்ற? சகோதரியா இருக்கப்போறாங்ககூறும் பொழுதே அவனுக்கு  சகோதரிகள் இல்லை என்பது நினைவில் ஆடியது.  

இல்ல யுவா! கொஞ்சம் நெருக்கமா.. நீ..நீ இங்க வாஎன்று  தோழி தடுமாறியபடி கூறியது நெஞ்சை பதைபதைக்கச் செய்ய தந்தையிடம் கூறிக்கொண்டு வண்டியை கிலப்பி சென்றவளுக்கு அங்கு காத்திருந்த விடயத்தை அதிர்ச்சி என்ற சொல்லில் அடக்கி விட முடியாது

விதுரன்! அவளின் பின்னால் கல்லூரியின் கடைசி ஒரு வருடம் சுற்றி சுற்றி  காதலைக் கூறியவன். உண்மையில் விதுரன் மேல் மயக்கமோ காதலோ இல்லாவிடினும் அவனது ஒரு வருட உறுதி யுவாவின் மனதை அசைத்து இருந்தது.

அவனைப் பற்றி தந்தையிடம் கூறி அவர் சம்மதித்தபின்னரே விதுரனிடம் சம்மதத்தைக் கூறி இருந்தாள். ஆயினும்இங்க பாருங்க விதுரன்! எனக்கு ஏதாவது தொழில்ல சாதிக்கனும்! ஸோ உங்களை சந்திக்கிறது, பார்க் பீச் என்று சுற்றுவது இதெல்லாம் என்னிடம் இப்போதைக்கு எதிர் பார்க்கலை என்றால் எனக்கு சம்மதம் தான்என்று கூறியவள் அவன் அதற்கு ஒத்துக்கொண்ட பின்னரே அவனை ஏற்றுக்கொண்டாள். அவனை தொட்டு பேசக்கூட அனுமதிக்கவில்லை தான் ! ஆனால் மனதில் அவன் தான் தனது எதிர் காலத்தில் தன்னுடன் வரப்போகின்றான் என்று எண்ணி இருந்தாளே! இப்பொழுது தோழி கூறுவதைப் பார்த்தால்.. தலையைக் குலுக்கியவள்இல்லை! ஏதும் தப்பா பார்த்து இருப்பாள்என்று எண்ணியபடியே அக்கட்டிடத்தினுள் உள்நுழைந்தாள்.

உள்ளே நுழைந்து தோழி கூறிய இடத்திற்கு விரைந்து தோழியைக் கண்டவள் தன்னை நோக்கி விரைந்து வந்த தோழியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவளது தோழிக்கும் அவளது நிலை விளங்கியது போலும்! யுவாவின் கைகளைப் பற்றி அழுத்தியபடியே லிப்டின் அருகில் கைகாட்டினாள். திரும்பிப் பார்த்தவளுக்கு முதலில் தன் கண்களை நம்புவதே கஷ்டமாக இருந்தது. “விதுரனா? அவனா இப்படி? எப்படித் தவறினேன்எண்ணியபடி தோழியின் கைகளை விலக்கியவள் விதுரனை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.  

அருகில் இருந்த அழகியின் இடையில் கைபோட்டு அழுத்தி விளையாடியபடியே நிமிர்ந்த விதுரனும் அங்கே யுவாவை எதிர்பார்க்கவில்லை போலும். அவளைக் கண்டதும் தடுமாறியபடி எழுந்தவன்யு..யுவா”  என்று திக்க எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ அவனின் முன்னால் இருந்த நீர் நிறைந்த குவளையை எடுத்து அவனது முகத்தின் மேலே ஊற்றியவள் அவனையும் அவன் அருகில் இருந்தவளையும் அருவருப்பாக பார்த்தபடித்தூஎன்று அருகிலே துப்ப விதுரனின் தோள்களில் தொங்கிக் கொண்டு இருந்த அழகியோஏய்”  என்ற படி விரலை நீட்டினாள்.

தன்னை நோக்கி நீண்ட சுட்டுவிரலைப் பற்றி அப்படியே முறுக்கியவள் அவள் அலறலை சிறிது நேரம் இரசித்துவிட்டு  முறுக்கியவிரலை விடுவித்தாள். நிமிர்ந்து விதுரனை நோக்கியவள்பொறுக்கி நாயே! இப்படி நேரத்துக்கு ஒருத்தியை வைத்து இருப்பவனுக்கு எதுக்குடா காதல்? அந்தப் புனிதமான வார்த்தையை அழுகிப்போன மனசு இருக்கிற நீயெல்லாம் உச்சரிக்கலாமா? இனிமேல் என் முன்னால் உன்னோட முகம் தெரிந்தால் உன்னை கொண்று போட்டுடுவேன்! ப்ளடிஎன்ற படி திரும்பி நடந்தாள்.

யுவா விலகி செல்லவும் அவள் புறம் சென்று அவள் கைகளைப் பற்றிய விதுரன்யுவா! என்னை மன்னிச்சிரு! ப்ளீஸ்என்று கெஞ்சவும் அவள் கையைப் பற்றிய அவனது கையை பின்னால் அப்படியே முறுக்கி  ” ஜஸ்ட் கால் மீ மிஸ்.யுவரத்னா தயாபரன்என்று கடித்தப் பற்களின் இடையே வார்த்தைகளைத் துப்பியவளைப் பார்க்க பார்க்க விதுரனுள்ளே ஒரு பயப்பத்து எழுந்து உடல் முழுவதும் ஓடத் தொடங்கியது. அப்படியே அவனை உதறியவள் கோவத்தில் நிறைந்த விழிநீர் பாதையை மறைக்க நடக்கும் பொழுது யார் மீதோ மோதி நின்றாள்.

விழிகளை அழுந்த துடைத்தபடி நிமிர்ந்தவள் சத்தியமாக அபிஷிக்த்தை அங்கு எதிர் பார்க்கவில்லை. பதற்றத்திலும் பயத்திலும் அவனை விலகிச்சென்றவள் தடுமாறி சரியப் பார்க்கவும் இன்னதென்று விளங்காத பார்வையுடன் அவளின் இடைபற்றி தூக்கி நிறுத்தியபடி பின்னால் நின்ற விதுரனை நோக்கினான். கறுத்துப்போன முகத்துடன் நின்ற விதுரனை அலட்சியமாக பார்த்தவன் யுவாவின் கைகளை பற்றியபடியே வெளியில் நடக்கத்தொடங்கவும் தான் சிலையாக நின்ற யுவாவிற்கு உணர்வே வந்தது

அவனின் கைகளை விலக்கப்போராடியவளின் காதுகளில் விதுரனின்ஹேய் யாரு நீ? யுவா போகாதஎன்ற குரல் விழவும் போராட்டத்தை நிறுத்திக்கொண்டவள் திரும்பி அவனை முறைத்தபடியே அபிஷிக்த்தின் இழுப்பிற்கு சென்றாள். விடுதியில் இருந்து வெளியில் வந்தவுடன் தனது கைகளை விலக்கியவனைப் பார்த்து யுவா எதுவோ கூற வரவும் தனது வாயின் மேல் விரலை வைத்துஉஷ்ஷ்என்ற அபிஷிக்த்இது என்னோட நட்சத்திர விடுதி! எல்லோருக்கும் முன்னால கத்திட்டு இருந்ததால் தான் இழுத்திட்டு வந்து வெளியில் விட்டேன்என்றவனின் கண்களுக்குயுவாஎன்றபடி அவளை நெருங்கிய தோழி படவும் யுவரத்னாவைப் பார்த்தவாறே கூலிங்க் கிளாசை அணிந்தவன் தனது ஜீப்பில் ஏறி அமர்ந்து விரைந்து அங்கிருந்து அகன்றான்.

Advertisement