ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவரும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 91

பிரதீப்பிடம் அண்ணா, ரெசார்ட் வாங்க முடியுமான்னு பாருங்க? அர்ஜூன் கேட்டான்.

ஏன்டா? நம்முடையதே இருக்கே? பிரதீப் கேட்டான்.

நோ அண்ணா.

புதியதாக வாங்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் செலவு அதிகமாகும். நாட்களாகும். நஷ்டத்தில் போவதை கூட வாங்க முடியுமான்னு சொல்லுங்க. இனி நான் தனியே அனைத்தையும் தயார் செய்யுமளவு நேரமிருக்காது. அவங்க ஹோட்டல மூழ்கடிக்கணும்.நம் பக்கத்து ஊரிலும் விசாரியுங்கள்.

நஷ்டத்திலுள்ளதா? பிரதீப் யோசித்தான்.

நஷ்டத்தையும் இலாபமாக்குவது தான் ஒரு பிசினஸ்மேனுக்கு அழகு சைலேஷ் கூறினான். பிரதீப் யோசிக்க,

அண்ணா.என்னை நம்புங்கள். விசாரித்து நாளையே வாங்கிடுங்கள். அதன் குறை நிறைகளை பற்றி கோப்புகளை தயார் செய்து சாரிடம் கொடுங்கள். சார் நீங்கள் பார்த்து விட்டு அபியுடமும் மேம்மிடமும் ஒப்படையுங்கள்.

யாரும் பார்க்காமல் எப்படி உடனே வாங்குவது? தயங்கினான் பிரதீப். அனைவரும் ஊருக்கு செல்லும் நிலை வரப்போவதை யாரும் அறியவில்லை.

என்னிடம் ஆள் உள்ளது. நீங்கள் இரவில் அவனையும் அழைத்துச் சென்று பாருங்கள் சைலேஷ் கூறினான்.

கேரி என்று சந்துரூ கூற மற்றவர்கள் அவனை பார்த்தனர். அவனை இன்பா பார்த்தால்,

என்ன பார்த்தால்? சாயங்காலம் பார்க்கத் தான் போகிறாள் என்றான் சைலேஷ்.

சாயங்காலமா?

ம்ம்..காலை தான் வந்தான். என் வீட்டில் தான் இருக்கிறான் சைலேஷ் கூறினான். சந்துரூ கண்கள் கலங்கியது.அவனை அணைத்து சைலேஷ், வந்தவுடன் இன்பாவையும் உன்னையும் தான் பார்க்க கேட்டான். நான் தான் அவனை ஓய்வெடுக்க வைத்து விட்டேன்.

காரிலிருந்து அர்ஜூன் மருத்துவர் வெளியே வருவதை பார்த்து வேகமாக இறங்கி, அவரிடம் ஓடினான். கண்கள் சிவந்து,முகம் வீங்கியவனை பார்த்து, நான் தான் சொன்னேன்ல எல்லாமே சரியாகிடும். உன்னை நீயே கஷ்டப்படுத்தாதே என்றார்.

ஆருவின் பைக்கா? இன்னும் அவள் வீட்டிற்கு செல்லவில்லையா? அர்ஜூனை பார்த்தார். பின் அவர் மகனுக்கு போன் செய்து ஆருத்ரா பற்றி கேட்டார்.

ப்ரெண்டுக்காக தயார் செய்ய சொன்னாள். அடித்து அவளை நான் பார்க்கவேயில்லை என்று அவன் கூற, அப்பொழுது தான் அர்ஜூனிற்கு உரைத்தது. ஆருத்ராவின் காதல்.

சார்..அவள் இங்கே தான் இருப்பாள். வாங்க தேடலாம் என்று அர்ஜூன் முன் செல்ல, மற்றவர்கள் புரியாமல் பார்த்தனர்.

ஹாஸ்பிட்டல் வெளியே ஓரிடத்தில் தனியே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் ஆருத்ரா.

அவளது அப்பா பதறி, ஆரும்மா..என்று அவளருகே வந்தார்.அவள் தாவி அணைத்துக் கொண்டாள் அப்பாவை.

அப்பா..அப்பா..என்று அவள் அழ, எதுக்குமா அழற? சுற்றி பார்த்தார்.

அப்பா நிவி இன்னும் எழவேயில்லை. பயமா இருக்குப்பா.

நிவியா? யாரும்மா அது?

அர்ஜூன் அவரிடம் ஸ்ரீயின் தம்பி என்று அவன் அட்மிட் செய்ததையும் கூறினான்.

அவனா? அவனுக்காக நீ எதற்கு?..கேட்டு புரிந்தவராக பெண்ணை நகர்த்தியவர். அவனை காதலிக்கிறேன் என்று மட்டும் சொல்லி விடாதே? என்றார்.

ஆமாம்பா. அவனை நான் காதலிக்கிறேன். அவனுக்கு என்னையும் தெரியாது. என் காதலும் தெரியாது என்றால் கேவலுடன்.

அது அப்படியே இருக்கட்டும்.நீ வீட்டிற்கு செல்.

அப்பா..நான்..அவள் பேசுவதற்குள் அவளை அறைந்து விட்டு, என்ன நினைச்சுகிட்டு இருக்க? அவனை பற்றி தெரியுமா? அவன் யாருடன் இருக்கிறான் தெரியுமா? அவன் அநாதையாக இருந்தால் கூட நான் ஏற்றுக் கொள்வேன். அவளை கொல்ல நினைக்கும் சொந்தத்துடன் இருக்கிறான். அவனை எப்படி என்னால் ஏற்றுக் கொள்ள முடியும்?

அவனை ஏற்று என் பிள்ளையை என்னால் இழக்க முடியாது என்று அவரது மகனை அழைத்து அவனுடன் ஆருத்ராவை அனுப்பி விட்டு அர்ஜூனை பார்த்தார்.

எனக்கு புரியுது சார். அவளை ஏதும் சொல்லாதீர்கள்? அவள் புரிந்து கொள்வாள். கொஞ்ச நாள் தான் இருவரையும் அந்த கயல் பார்வையிலிருந்து விடுவிப்பேன் என்றான் அர்ஜூன் உறுதியாக.

நீ என்ன வேண்டுமானாலும் செய்.வா நான் என் கடமையை ஆற்ற வேண்டும் என்றார். மற்றவர்கள் அவரை பார்த்து விழித்தனர்.அர்ஜூன் வீட்டை நோக்கி செல்லலாகினர். அப்பொழுது தான் அர்ஜூனிற்கு கைரவ் அழைப்பு வந்திருக்கும்.

மதிய உணவு நேரத்தில் பவி வீட்டிற்கு வந்தனர் அகில், நித்தி, யாசு, அபி. அவள் கேட்டின் வெளியிலிருந்து காலிங் பெல்லை அழுத்தினாள் நித்தி.

நித்தி இது தேவையில்லாதது அகில் கூறினான். அவனை பார்த்து முறைத்தாள்.கேட்டை ஒருவர் திறந்து, யாரென்று கேட்டார். பவியின் நண்பர்கள் என்று கூற, அவர்களை உள்ளே அழைத்து ஓரிடத்தில் அமர வைத்தார் அந்த வாட்ச் மேன்.

கொஞ்ச நேரத்தில் உள்ளே அழைத்துச் சென்றார். பிரம்மாண்டமான வீடு அழகாக இருந்தது.அங்கிருந்த சோபாவில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்க,

அம்மா..பசங்க வந்திருக்காங்க என்றார்.

அந்த பெண்மணி கையசைக்க, அவர் இவர்களை பார்த்துக் கொண்டே சென்றார்.

வாங்க உட்காருங்க.நான் பவியின் அம்மா என்று அவரை அறிமுகப்படுத்த இவர்களும் அவர்களது பெயரை கூறினர்.

ஓ..நீ தான் பாட்டு பாடுற பையனா? எல்லாருமே அந்த குழுவில் இருக்கிறீர்களா?

அகில் தலையசைக்க, எஸ் ஆன்ட்டி என்றாள் யாசு.

அவர்களது படிப்பை பற்றி விசாரித்தார் அவர். என்ன தான் நித்தி பேசிக் கொண்டிருந்தாலும் அவளது கண்கள் பவியை தேடின. அதை பார்த்த பவியின் அம்மா நித்தியிடம்,

பவியை தேடுகிறாயா? கேட்டார்.

ஆமாம் ஆன்ட்டி. அவளோட ப்ரெண்ட்ஸ் அவளை பற்றி தவறாக பேசினார்கள். அவர்கள் அருகே அவள் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதட்டமாக கூறினாள்.

எனக்கு எல்லாம் தெரியும் என்றார்.

ஆன்ட்டி என்றாள்.

உனக்கு அவளை பிடிக்குமா?

பிடிக்கும்.

எதற்காக பிடிக்கும்?

அகிலிடம் கூறியது போல் அடுக்கினாள் நித்தி.

அவங்க புன்னகையுடன், நீ சொன்ன அனைத்துமே அவளது நெகட்டிவ் என்றார்.அனைவரும் புரியாமல் விழித்தனர்.

புரியவில்லையா? என்று சிரித்தார்.

நீங்க கண்டிப்பானவர் என்று கூறினாள்.

ம்ம்..என்னோட பொண்ணுக்கு மட்டும். நீ சொன்ன அந்த அப்பாவித்தனம் தான் பிரச்சனை. அதை வைத்து அவளை ஏமாற்றுவார்கள். ஆனால் இம்முறை அவளுடைய தோழிகளை பற்றி அவளே கண்டு கொண்டாள்.

தெரியுமா? அகில் கேட்டான்.

ம்ம்..தெரியும். அவளை அவர்கள் பயன்படுத்துவதை தெரிந்து கொண்டாள். ஆனால் இந்த தடவை அந்த பொறுக்கியுடன் அவளை அவளுடைய தோழிகள் தான் பேச வைத்திருக்கிறார்கள். உடனும் சென்றிருக்கிறார்கள். அவனிடம் பணம் வாங்கி இருக்கிறார்கள்.

ஏதோ நல்ல நேரம் அவள் தப்பித்து வந்தாள். பின் மாட்டிய போது தான் நீங்கள் உதவி இருக்கிறீர்கள். ரொம்ப தேங்க்ஸ்.

அவள் எதற்காக, அவர்களை பற்றி தெரிந்தும் பழக வேண்டும்? யாசு கேட்டாள்.

அவள் தனிமையை தவிர்க்க தான் அவர்களை நாடி இருக்கிறாள் அபி கூறினான்.

வாவ். சூப்பர்..அழகா கண்டு பிடிச்சிட்ட? விழி விரித்து அபியை பார்த்தார்.

அவள் வீட்டிலும் தனியே தான் இருப்பாள். எங்கே வெளியே விட்டால் அவளை யாராவது ஏமாற்றி ஏதாவது செய்து விடுவார்களோ என்று தான் அவளை நான் வெளியே விடுவதில்லை.ஆனால் இந்த பொண்ணுங்க இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கலை என்று கண்கலங்கினார்.

அதான் அவள் வீட்டிலே இருக்கட்டும் என்று நினைத்தேன். ஆனால் அவளுக்கு காய்ச்சல் வேறு வந்து விட்டது.

காய்ச்சலா?

ஆமாம் நேற்று வீட்டிற்கு வந்ததிலிருந்து காய்ச்சல் தான்.இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை தான்.

அவளை பார்க்கலாமா? என்று கேட்டாள். பின் ஆன்ட்டி ஜூலி எங்கே? கேட்டாள் நித்தி.

அவளையும் தெரியுமா? ம்ம்..அவளை பார்த்தவுடன் எனக்கு பிடித்து விட்டது. அதுவும் அவளுக்கு அகிலை ரொம்ப பிடித்து விட்டது என்றாள் குறுஞ்சிரிப்புடன். அவன் அவளை முறைக்க, பவியின் அம்மா அவனை பார்த்து புன்னகைத்தார்.

இருவரும் சேர்ந்தே தான் இருப்பார்கள். அவளுக்கு காய்ச்சல் அல்லவா? கூடவே தான் இருப்பாள். அவளும் வெளியே வரவேயில்லை.

அறையை சுட்டிக் காட்டி,இது தான் அவள் அறை. சென்று பாருங்கள் என்றவுடன் எழுந்தனர். தலை களைந்து சிறு பிள்ளை போல் சிணுங்கியவாறு இரவு உடையில் பவி.

ராமு அண்ணா ஜூலி எங்கே போனாள்? அவளை காணோம் என்ற படி இறங்கிய பவியை அனைவரும் ஆவென்று பார்த்தனர்.

அவள் அவர்களை பார்த்து தடுமாறி கண்ணை கசக்கி இது கனவா? நினைவா? தடுமாறியவாறு நித்தி நீ தானா? கேட்டுக் கொண்டே, படியிலிருந்து தவறினாள்.

அதை பார்த்த அவள் அம்மா,” பாப்பா” என்று அழைக்க, பசங்க இரண்டு பேரும் அவள் கீழே விழுவதற்குள் அவளை பிடித்தனர்.அபி சட்டென அவளை விட, அகில் அவளை விடாது பிடித்திருந்தான் படியில் நின்றவாறு.

பவி ஒன்றுமில்லையே? நித்தி யாசு அவர்களிடம் வந்தனர். அவள் நீங்க? என்றவளது பார்வை, அம்மாவிடம் சென்றது.

அம்மா, நீங்க எப்படி கூப்பிட்டீர்கள்?

அகில் அவளை இறக்கி விட்டான். அவனுக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது.

நான் உன்னை கூப்பிடலை?

இல்ல, பொய் சொல்லாதீங்க. நீங்க என்னை கூப்பிடீங்க? என்று திரும்பி அகிலிடம் வந்து, அம்மா என்னை கூப்பிடாங்க தானே? அவனது கையை பிடித்து கேட்க, அவனால் பேச முடியவில்லை. அவன் விழித்துக் கொண்டே அவளை பார்த்தான்.

ஆமா பவி. பாப்பான்னு கூப்பிடாங்க என்று ராகத்துடன் இழுத்து யாசு கூறி காட்ட, நித்தி அகிலை பார்த்து என்னடா? கேட்டாள்.

ஒன்றுமில்லை என்று அமைதியானான்.

அம்மா..எனக்கு தெரியும் என்று அவளது அம்மாவை கட்டிக் கொண்டாள்.

நீங்க எல்லாரும் என்னை பார்க்கவா வந்தீர்கள்?

ஆமாம். நீ உன்னுடைய தோழிகளிடம் விலகியே இரு என்றாள் நித்தி. பவி அவள் அம்மாவை பயந்தவாறு பார்த்தாள்.

அவளது அம்மா அதை தவிர்த்து, பவி எல்லாருக்கும் வீட்டை சுற்றி காட்டு என்றார்.

அவள் தலையசைத்து திரும்ப, பாப்பா..ஜூலியை காணோம் என்றார் ராமு அண்ணா பதட்டமாக.

ஜூலி..ஜூலி..அழைத்துக் கொண்டே வந்தவர்களையும் கவனிக்காது பதட்டமுடன் தேட ஆரம்பித்தாள்.

அவளை பார்த்துக் கொண்டே எத்தனை மாதமாய் இந்த.. என்று நிறுத்திய அகில், ஜூலி அவளுடன் இருக்கிறது? என்று கேட்டான்.

இதற்கு முன் ஒரு பப்பி அவளது சிறு வயதிலிருந்து கூடவே இருந்தது. அது இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போனது.அதிலிருந்து யாருக்காவது ஒரு சிறு அடி என்றாலும் அவளால் தாங்க முடியாது. மருத்துவரை பார்த்தோம்.அவர் தான் வேற நாய்க்குட்டியை ஏதாவது காரணம் கூறி அவளிடம் வளர்க்க கொடுங்கள் என்றார்.

அவளை சமாளித்து ஜூலியை அவளுடன் ஒட்ட வைப்பதற்குள் போதும் போதும் என்றானது. என்னை விட அவள் அப்பாவிற்கு பவி என்றால் உயிர். அவர் தான் தன் வேலையை அவரது உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு முழுதாக அவளை கவனித்துக் கொண்டார். நானும் என்னுடைய கம்பெனியை நடத்த, அவர் வேலையை கவனிக்க ஆரம்பிக்கவும் அவள் தனியே இருக்க ஆரம்பித்தாள்.அதனால் தான் அவளது குணமும் முற்றிலும் மாறியது என்று வருத்தப்பட்டார்.

அவளது சிரிப்பலைகள் வர, எல்லாரும் வெளியே வந்தனர்.ஜூலியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.அதுவும் அவள் மீது ஏறி, இறங்கி விளையாடியது.

அவளுக்கு நல்ல ப்ரெண்ட்ஸ் கிடைத்தால் சரியாகி விடுவாள் என்று தான் அந்த பொண்ணுங்க கூட வீட்டிற்கு தனியே வர அனுமதித்தேன்.ஆனால்.. என்று கண்கலங்கினார்.