வேரூன்றிய காதலும் சிறு வயது நண்பர்களும் Episode-67
169
ஹாய்..ப்ரெண்ட்ஸ்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 67..
அபி தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருக்க,தருண் அபி அருகே அமர்ந்தான். அபி போன் ஒலிக்க அவன் பார்த்து விட்டு எடுக்காமலிருந்தான்.மீண்டும் போன் ஒலிக்க,.
டேய்..எடுத்து பேசுடா என்றான் தருண்.
இல்லடா. நான் பேசுனா டென்சனா இருக்கேன்னு மாமா கண்டுபிடிச்சிருவாங்க.ப்ளீஸ் டா..நீ ஏதாவது பேசி சமாளி.
அய்யோ! அண்ணா கிட்ட என்னால முடியாதுடா தருண் எழுந்தான்.
அபி அவன் பின்னே சென்று.. ப்ளீஸ்டா.. ப்ளீஸ்.. கெஞ்சினான்.இதயாவும், அவர்களது அம்மாவும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
டேய், நான் எப்படி பேசுறது? அண்ணா கண்டிபிடிச்சா நான் தொலைஞ்சேன்.
அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டாங்கடா.நீ உன்னோட அம்மா பத்தி பேசுவது போல் பேசேன் என்றான்.
என்னோட போனை பற்றி கேட்பார்டா?
அது ஹாஸ்டல்ல இருக்குன்னு சொல்லு என்றான் அபி.
ப்ளீஸ் தருண்.நான் போனை எடுக்கலைன்னா.அவர் ஜானுவை என் வீட்டில் விட்டு என்னை தேடி இங்கே வந்து விடுவார்.
யார் கிட்ட பேச அந்த பையன் இப்படி பயப்படுறான்? இதயா அம்மா அவளிடம் கேட்டார்.
தெரியவில்லையேம்மா. அம்மா..அபி என்று இதயா கேட்க, அம்மா அவளை முறைத்தார். இன்பா அவளது அறைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டிருந்தாள்.
சாப்பிட அந்த தம்பியை கூப்பிடு என்று தருணை அம்மா கை காட்ட,அம்மா…அபி என்றாள்.
ஒரு நிமிடம் அமைதியாக யோசித்தவர், வரச் சொல் உதவி செய்ததற்காக மட்டும் என்றார்.
அப்பாடா..என்று வேகமாக வெளியே ஓடி வந்தாள் இதயா. அபிக்காக பிரதீப்பிடம் பேசி சமாளித்து போனை வைத்து விட்டு,
டேய்..இனி இது போல் அண்ணாவை சமாளிக்க முடியாது. ஜானுவை கூட சமாளித்து விடலாம்.அவரையெல்லாம் முடியாதுப்பா என்று பெருமூச்சு விட்டான் தருண்.
அவர்களிடம் வந்து கொண்டிருந்த இதயா இதை கேட்டு, யாரு ஜானு, அன்று பேசினீங்கள அந்த பொண்ணா? அபியை பார்த்தாள். அவன் இதயாவை பார்த்ததும் திரும்பி நின்றான்.
அவள் அவன் முன் வர,அவன் விலக புரிந்து கொண்ட இதயா. நில்லு அபி..என்று அவனை நிறுத்தி, கங்கிராட்ஸ்டா. சொல்லிட்ட சூப்பர். பொண்ணுங்களுக்கு இப்படி சொன்னா பிடிக்காதுடா மட்..இன்பா இதையெல்லாம் விரும்ப மாட்டா. அவளோட மனச ஜெயிச்சா போதும்.இன்னும் நீ ட்ரை பண்ணு. நீ சொன்னதில் ஏதும் பேசாமல் அறைக்குள் சென்று விட்டாள். நீ தப்பா எடுத்திடாத. அவளுக்கு யோசிக்க டைம் வேண்டும் என்றாள்.
உங்க அம்மா கோபமா இருக்காங்களா?தருண் கேட்டான்.
இல்லாத மாதிரி தான் தெரியுது. ஆனால் அவங்க அபியை ஏத்து கிட்டது போலவும் தெரியல. சீக்கிரமே ஒத்துப்பாங்கன்னு எனக்கு தோணுது.
சரி,வாங்க ரெண்டு பேரும் என்றாள்.
என்ன? வீட்டிற்குள் வரவா? இருவரும் திகைத்தனர்.
எவ்வளவு பெரிய கெல்ப் பண்ணியிருக்கீங்க. அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க.
சாப்பாடா..நானுமா? அபி கேட்டான்.
வா டா..ரொம்ப யோசிக்காத. உதவி செய்தேல.அதான் அம்மா கூப்பிட்டாங்க.
இதயா..என்று அம்மா அழைக்க, சீக்கிரம் வாங்கடா என்று அபியை பிடித்து இழுத்தாள்.மேம்…தருண் கேட்டான்.அவள் அறையில் இருக்கிறாள்.
பேசியது போதும்.வாங்க என்று இருவரது கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
அம்மா சமையற்கட்டில் தோசை சுட்டு தர, இருவருக்கும் பரிமாறினாள். அபி தயங்கிக் கொண்டு இருக்க,ஒன்றும் பிரச்சனை இல்லை.நல்லா சாப்பிடு என்றாள் இதயா.
அவளையும் கூப்பிடு என்றார் இதயாவிடம். இன்பா அறைக் கதவை தட்டி விட்டு, அக்கா..சாப்பிட வா என்று அழைத்தாள் இதயா.உள்ளிருந்து சத்தமேயில்லை. பசங்க இன்பா அறையையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவள் பதில் கூட கூறாமல் அமைதியாக இருக்க, படபடவென கதவை தட்டினாள் இதயா.
இன்பா கதவை திறந்து, ஏன்டி இப்படி கதவை தட்டுகிறாய்? வெளியே வந்தாள். அவள் நைட் டிரஸில் தலையை விரித்து வேறு மாதிரி இருப்பதை பசங்க பார்க்க, அபி வேகமாக எழுந்தான்.
அவனை பார்த்த இன்பா, யாரோ போல் ஒரு பார்வையை பார்த்து விட்டு, உள்ளே சென்று அவளுக்கு தோசை எடுத்து வந்து அமர்ந்தாள்.
அபியை முறைத்துக் கொண்டே சாப்பிடாள். அவள் பார்வை அவன் மீதே இருந்தது. அவனால் அங்கே இருக்கவே முடியல.
இதயா இன்பாவை மறைத்து அபியை பார்த்து சாப்பிடு என்று சைகை செய்தாள். இன்பா உள்ளே செல்லவும் தருண் அருகேயே நின்றாள் இதயா.அவன் அவளை பார்க்க, அவள் தோளை குலுக்கினாள்.அவள் தருணின் கல்லூரி ஐடியை எடுக்க முயன்றாள். முடியவில்லை. சரி முகவரியையாவது பார்த்து விடுவோம் என்று அவனருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் சாப்பிட்டு எழும் போது.
ஏய்..நில்லு. ஐடியை வச்சிட்டு போற.ஈரமாகி விடும்.
பைத்தியமா நீ? அவன் கேட்க, அம்மாவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சொன்னா கேளு என்றாள்.
அவன் தெனாவட்டாக செல்ல, அவனது ஐடியை பிடித்து இழுத்தாள். அவள் கவனம் அவனது ஐடியில் மட்டும் இருக்க, அவன் அவள் அருகே வந்து, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு பிரச்சனை போதாதா? என்று அபி இருவரையும் பார்த்தான். அவள் அவனது முகவரியை பார்ப்பதை கவனித்த அபி,இதயா தண்ணீர்? கேட்டான்.
அவள் அவனை விடுத்து, அபியிடம் தண்ணீரை கொடுக்க அருகே வந்தாள். உங்க அம்மா இருக்காங்க.இரண்டு பேரும் என்ன பண்றீங்க? அபி கேட்டான்.
அவள் திரும்பி தருணை பார்க்க, அவன் சமையலறைக்குள் சென்றான். அம்மா அவனிடம் ஏதோ பேச, அபி..இதயாவிடம் அவன் அட்ரஸ் எதற்கு உனக்கு? கேட்டான்.
அபி…அவன் தங்கைக்காக தான் என்று அவளுக்கு சுடிதார் வாங்கி கொடுத்ததை சொன்னாள்.
நீயும் வாங்கி அனுப்ப போகிறாயா? அவனுக்கு தெரிந்தால் கோபப்பட மாட்டனா? கேட்டான் அபி.
ப்ளீஸ் அபி..அவனிடம் சொல்லாதே என்றாள்.
நான் சொல்லவில்லை என்றாலும் புவனா சொல்லிடுவாளே! என்றான்.
என்ன செய்வது?எனக்கு முகவரியுடன், அந்த பொண்ணோட நம்பரையும் தருகிறாயா? கேட்டாள் இதயா.
போன் நம்பரா? அவ்வளவு தான். என்னை கொன்னுடுவான் அவன் என்றான் அபி.
ப்ளீஸ்..ப்ளீஸ்..அபி. அம்மா கிட்ட சொல்லிட்டே வாங்கி தாரேன். நான் அந்த பொண்ணுகிட்ட பேசி அவனுக்கு தெரியாம தடுத்திடுறேன் கெஞ்சினாள்.
ஓ.கே அவனுக்கு தெரியாமல் மட்டும் பார்த்துக்கோ என்றான் அபி.
இருவரும் கிளம்பினார்கள்.சாப்பிட்டு விட்டு உள்ளே வந்த இதயா கண்ணாடி முன் நின்று அவளது இதழ்களை வருடியவாறு தருணுடன் நினைத்ததை யோசித்து வெட்கத்துடன் நின்றிருந்தாள்.
அடுத்த அறையில் இன்பா,அபியை சந்தித்தது முதல் நடந்தவற்றை மனதினுள் ஓட்டியவாறு படுத்திருந்தாள்.
இரண்டு பசங்களும் தன் பொண்ணுகளுக்காக நின்றதை நினைத்து விட்டு, இன்பா என்ன செய்ய போகிறாளோ?சிந்தித்த வண்ணமிருந்தார்.
அர்ஜூன் அனுவுடன் விளையாடிக் கொண்டிருக்க, தருண் அவனுக்கு போன் செய்து அபி மேம் கிட்ட காதலை சொல்லிடான்டா மகிழ்ச்சியுடன் கூறினான்.
அர்ச்சுவும் மகிழ்ச்சியுடன்,அவங்க என்ன சொன்னாங்க? கேட்டான். அவன் நடந்ததை சொல்லவும்,
டென்சனா இருக்கானா?
இருந்தான். இப்பொழுது பரவாயில்லை என்று பேசினார்கள். தருண் போனை துண்டிக்க, அர்ஜூன் சந்தோசமாக அனுவை தூக்கிக் கொண்டு விசிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான். மற்றவர்கள் அவனை பார்க்க, அமைதியாக அமர்ந்து..அபி இன்பாவை பற்றி சொல்ல,
ஒரு வழியா சொல்லிட்டானே அதுவே போதும் என்றாள் யாசு.
நித்தியை போன் அழைக்க,ம்ம்..சொல்லுங்க என்றாள்.
என்னமா..எதுவும் பிரச்சனையா? கேட்டான் சைலேஷ்.
ஏன் உங்களுக்கு இல்லையா? என்றாள் சலிப்பாக.
கிளம்பலாமா? என்று சைலேஷ் கேட்டான்.
கிளம்பவா? எங்கே? யாருடன்?
யாருடனா? நான் தான் இருக்கிறேனே!
அதான் அவன் தெளிவாக தானே சொன்னான். அப்புறம் எப்படி சந்திப்பது?
ஏன்? முடியாதா? நீ என்னுடன் வர மாட்டாயா?
வெறுப்பேத்தாதீங்க! சும்மா இருங்க.
நீ வெளிய வந்தா கிளம்பலாம் என்றான் சைலேஷ்.
வெளியவா? என்று அர்ஜூனை பார்த்தாள் நித்தி. அவன் புன்னகையுடன் வெளியே கையை காட்ட,
டேய்..என்னடா பண்றீங்க? புரியாம அவள் அர்ஜூனை பார்த்தாள்.
போம்மா.சார் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணுவாரு கேட்டான்.
விளையாடலையே! என்று வெளியே அவள் எட்டி பார்த்தாள்.
கையில் பஞ்சு மிட்டாயுடன் கண்ணில் கூலருடன் கெத்தாக அவனது காரின் முன்னே உட்கார்ந்திருந்தான் சைலேஷ்.
நித்தியை பார்த்தவுடன் காரிலிருந்து குதித்து,கையை விரித்த படி நின்றாள்.
கண்ணை கசக்கி விட்டு, அர்ஜூன் அவர் நிஜமாகவே இருக்கிறாரா? கேட்டாள்.
போம்மா என்றான்.மற்றவர்களும் வந்து அவனை பார்த்தனர். அவள் வேகமாக அவனை நோக்கி ஓடி வந்தாள்.கவினும் வந்து, அவளை நிறுத்தி,அவன் சைலேஷ் அருகே சென்று, உனக்கு பஞ்சு மிட்டாய் வேணுமா? இல்லை சார் வேணுமா? கேட்டான்.
அவள் மாறி மாறி பார்க்க, சைலேஷ் கூலரை கழற்றி விட்டு என்னம்மா பாக்குற? அவளருகே அவன் வர, தடுத்தான் கவின். அவளே தேர்ந்தெடுப்பாள் என்றான்.
நீங்க நாளைக்கு பஞ்சு மிட்டாய் வாங்கி தருவீங்களா? கேட்டாள்.
கண்டிப்பா தினமும் கூட வாங்கி தாரேன்.
அவள் அவனை கட்டிக் கொண்டு, கவினை பார்த்து புருவம் உயர்த்தினாள்.
ம்ம்..ஓ.கே..ஓ.கே என்றான்.
நாம மீட் பண்ண வேண்டாம்னு தான இருந்தோம் என்று சைலேஷை பார்த்தாள்.
நம்ம காதல் விசயம் தான் அவங்களுக்கு தெரிந்து விட்டதே!
ஒன்றுமில்லைம்மா. உன்னை விட்டு தள்ளி இருக்க சொல்லி போன் பண்ணா அந்த பொம்பள.
அவள் அவ்வளவு தூரம் போயிட்டாளா? கேட்டான் கவின். ஸ்ரீ முகம் மாறியது. நிவாஸ் அவளது கையை பிடித்து அவளை அமைதியாக்கினான். அகிலும் அர்ஜூனும் ஸ்ரீயை பார்த்தனர்.
அதை விடு..வா கிளம்பலாம் என்றான்.
உங்களுக்கு பிரச்சனை வந்து விடுமோ? நித்தி சோகமாக.
ஓய்.அதை பத்தி நீ கவலைப்படவே வேண்டாம். நாங்க தான் இருக்கோம்ல என்று அகில், அர்ஜூன் கையை பிடித்து கூறினான்.
அகிலையே அனைவரும் உறுத்து பார்த்தனர். அர்ஜூனிற்கு சந்தோசம் தாங்கவில்லை.
தாத்தா உன்னை பார்க்க வேண்டும்னு சொன்னாங்க. வா போகலாம்.
அவர் இன்னுமா தூங்கவில்லை?
அவன் தலையசைக்க,விடுதிக்கு சென்று என்னுடைய பொருட்களை எடுத்து விட்டு கிளம்பலாம் என்றாள். பின் நித்தி யாசுவை பார்த்தாள்.அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான் அகில்.
யாசு ஆச்சர்யமாக அகிலை நோக்க, என்ன போகலாமா? கேட்டான்.
நில்லுடா..அர்ஜூன் கவினை அழைக்க,அய்யோ மச்சான் நேரமாகுதுடா,பை என்று தாரிகாவை இழுத்துக் கொண்டு நழுவினான்.
அர்ஜூன் ஸ்ரீயையும் நிவாஸையும் பார்த்தான். ஜிதினை வர சொல்லி இருக்கிறேன். நாங்கள் அவனுடன் செல்கிறோம் என்றான் நிவாஸ்.
நான் அனுவுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வருகிறேன் என்றாள் ஸ்ரீ.
ஸ்ரீ என்று நிவாஸ் அழைக்க,அவனை தனியே அழைத்து சென்று ப்ளீஸ்டா..நான் அடுத்து பாப்பாவுடன் இருக்க முடியுமான்னு தெரியல.உனக்கே நம் பிரச்சனை தெரியும் தானே? என்றாள்.
சரி..சீக்கிரம் வீட்டுக்கு போயிடு என்று அவன் பேசும் போதே ஜிதின் அங்கே வந்தான்.அவனுடன் நிவாஸும் கிளம்பினான்.
அர்ஜூன் ஸ்ரீ அனுவுடன் வெளியே நின்று கொண்டிருக்க, மேகா உள்ளிருந்து அவர்களை பார்த்தாள்.அர்ஜூன் அருகே மேகா வர, அவன் ஸ்ரீயிடம் பாப்பாவை கொடுத்து விட்டு பேசாமல் உள்ளே சென்றான்.
ஸ்ரீ மேகாவிடம்,அவன் பேசுவான். வருத்தப்படாதே! என்று ஆறுதலாக பேச “தேங்க்ஸ்” என்று மேகா ஸ்ரீயிடம் கூறி விட்டு மீண்டும் உள்ளே செல்ல அர்ஜூன் அமர்ந்திருந்தான். அவனை பார்த்து விட்டு உள்ளே சென்று,
வினிதாவிடம் அக்கா, எனக்கு ஒரு உதவி வேண்டும்கா. எப்பொழுதும் நந்து தான் என்னை அழைத்து செல்வான். உங்க டிரைவர் யாரையாவது அனுப்புங்களேன் ப்ளீஸ் அக்கா. எனக்கு தனியே எங்கும் சென்று பழக்கமில்லை என்றாள் பாவமுடன்.
வா..என்று அக்கா மேகாவை அனுப்பி விட்டு ஸ்ரீயிடம் வந்தார்.
அக்கா..பாப்பாவுடன் நான் கொஞ்ச நேரம் இருக்கலாமா?ஸ்ரீ கேட்டாள்.
எப்பொழுது வேண்டுமானாலும் வாம்மா என்றார்.
இல்லைக்கா.இன்றோடு அவ்வளவு தான் என்றாள்.
நான் தான் இப்படி எல்லாம் பேசாதே என்று கூறினேன்ல.கேட்கவே மாட்டேங்கிற.ஏதாவது செய் என்று கோபமாக உள்ளே சென்று இடத்தை சரி செய்ய வேலையாளிடம் கட்டளையிட்டு அமர்ந்தார்.