Advertisement

அத்தியாயம் 5

கோபமாக நித்தி வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்தின்  ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, கொஞ்ச நேரம் அழுது விட்டு கண்ணை துடைத்துக் கொண்டு,

இப்பொழுது நான் என்ன செய்வது? யாசு ஸ்ரீயை ஏதும் செய்து விடுவாளோ? அகிலிடம் யாசுவை பற்றி கூறவா? வேண்டாமா? கூறினால் அவர்களது நட்பும் கெட்டு விடுமே! ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்து சைலேஷ் இவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

கல்லூரி ஆசிரியை அங்கே வந்து, வகுப்பிற்கு செல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கேட்க, அவள் வகுப்பிற்கு சென்றாள்.

யாசுவும் இவளை போல் ஸ்ரீ பற்றிய உண்மையை ஜிதினிடம் கூறலாமா? வேண்டாமா? யோசித்துக் கொண்டிருக்க, அவளையும் சைலேஷ் பார்த்து விட்டு, அதே ஆசிரியையை அழைத்து வகுப்பிற்கு அவளையும் செல்ல சொல்லுங்கள் கூறி விட்டு, அவனும் யோசித்தான். இருவருக்கும் ஏதோ பிரச்சனை உள்ளது என்று புரிந்து கொண்டான்.

கல்லூரி முடிந்து அனைவரும் வெளியே வந்தனர்.நிவாசும், ஸ்ரீயும் நடந்து கொண்டிருக்கும் போது,

ஹே, நில்லுங்கள் என்று ஒரு குரல் அழைக்க,இருவரும் திரும்பி பார்த்தனர். நித்தி தான் இவர்களை அழைத்திருக்கிறாள்.

என்ன ஆயிற்று சீனியர்? என்று கேட்க….

நீ எங்களுடன் தோழியாக இணைந்து கொள்வாயா? நித்தி கேட்க, நிறைவான மனதுடன் மகிழ்ச்சியாக சரி சீனியர் என்றான் நிவாஸ். அவனை பார்த்து நித்தி சிரிக்க, ஸ்ரீயோ அவனை முறைத்தாள்.

என்னுடன் பேச விருப்பமில்லையா?குரல் தாழ்த்தி நித்தி கேட்க, அப்படியெல்லாம் இல்லை சீனியர்.

அப்புறம் எதற்காக யோசிக்கிறாய்?நித்தி கேட்க,

நாம் நட்புடன் இருக்கலாம். ஆனால் கல்லூரிக்கு வெளியே சென்றவுடன் நீங்கள் யாரோ, நாங்கள் யாரோ என்று தான் இருக்க வேண்டும் மீறினால் நம் நட்பு துண்டிக்கப்படும்.நீங்கள் ஒத்துக் கொண்டாள். எங்களுக்கு ஓ.கே என்றாள்.

ஏன் இவ்வாறு கூறுகிறாள் என்று தெரியவில்லையே? இப்பொழுதைக்கு ஒத்துக் கொள்வோம் என்று மனதினுள் நினைத்தவாறு சரி என்றாள் நித்தி.

சரிங்க சீனியர். நாங்கள் கிளம்புகிறோம் என்று ஸ்ரீயும்,நிவாசும் கிளம்பினார்கள். நித்தி அவளது விடுதிக்கு சென்றாள். கவினிடமிருந்து போன் வந்தது. நீ வரவில்லையா? அவன் கேட்க,

நான் வரவில்லை. எனக்கு சோர்வாக உள்ளது.

என்ன ஆயிற்று? நான் வரவா? மருத்துவமனைக்கு செல்வோமா? அவன் பதற,

அதெல்லாம் ஒன்றுமில்லை.நான் தூங்கி எழுந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்று போனை துண்டித்து விட்டாள்.நித்தியும் யாசுவும் ஒரே அறை தான். அவள் தூங்குவதை பார்த்து விட்டு, யாசு அவளது வேலை கவனித்தாள்.

ஜிதின் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து சமையலறைக்குள் நுழைந்து, இனிப்பு ஏதேனும் உள்ளதா? வேலைக்கார அம்மாவை கேட்டான். அவர்களும் அவனுக்கு எடுத்து கொடுத்து விட்டு,

என்னப்பா, மகிழ்ச்சியாக இருப்பது போல் தெரிகிறது. ஏதேனும் நல்ல விசயமா?

ஆமாம். நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.எங்களுடைய கல்லூரியில் அனைவர் முன்னிலையிலும்,நான் ஸ்ரீயை திருமணம் செய்ய போகவதாக கூறி விட்டேன்.

அந்த வேலைக்காரம்மா…அதிர்ச்சியுடன், என்ன கூறுகிறீர்கள்? அம்மா என்னிடம் ஏதும் கூறவில்லையே?

கூறுவார்கள். கூற வைப்பேன்…… என்றான் உறுதியாக.

இனிப்பை சாப்பிட்டுக் கொண்டே ஜிதின் வெளியே வந்தான். ஸ்ரீயும்,நிவாசும் உள்ளே நுழைந்தார்கள்.அவர்கள் அறைக்கு செல்லவே…. ஜிதின் கதவை தட்டினான்.நிவாஸ் எட்டி பார்த்தான். அவனை தள்ளி விட்டு ஜிதின் உள்ளே நுழைந்து ஸ்ரீ அருகே நெருக்கமாக வந்தான். அவள் பதட்டப்பட்டு கொண்டிருக்க, அவன் கையிலிருந்த இனிப்பை அவளுக்கு கட்டாயப்படுத்தி ஊட்டி விட்டு,அவளது இதழ்களை பார்த்தவாறு இருக்க, நிவாஸ் அவனை தள்ளி விட்டு,இங்கிருந்து சென்று விடு என்று கத்தினான்.

ஜிதின் வேண்டுமென்றே….ஒன்றுமில்லைடா மச்சான். என் பொண்டாட்டிக்கு இனிப்பு கொடுக்க வந்தேன் அவ்வளவு தான்.

அவனது வாயிலே ஓங்கி ஒரு குத்து விட்டு நிவாஸ், அவனை வெளியே தள்ள, ஜிதின் வெளியே வந்து, நீ என்னை காதலிக்கவே மாட்டாயா? நான் இவ்வாறு நடந்து கொள்ளவில்லையெனில் உன்னை அவர்கள்…..கண்கலங்கிக் கொண்டே அவனது அறைக்கு சென்றான்.

நிவாஸ் ஸ்ரீயிடம் கோபமாக, ஏன் உன்னால் அவன் என்ன செய்தாலும் மறுக்க முடியவில்லை. அவனை திருமணம் செய்ய போகிறாயா?

அவள் ஏதும் கூறாமல் அங்கேயே படுத்தாள் முகத்தை சோகமாக வைத்தவாறு….

அவன் கோபமாக உள்ளே சென்றான். இருவருக்கும் ஒரே அறை தான். அதிலும் உள்ளே ஓர் அறை உள்ளது. அவள் வெளியேயும்,அவன் உள்ளிருக்கும் அறையிலும் தங்குவார்கள்.

நிவாஸ் அறைக்கு சென்றவுடன் ஸ்ரீ தேம்பி தேம்பி அழுது கொண்டே, நடந்ததை நான் எவ்வாறு உன்னிடம் கூறுவேன்? அவர்கள் நினைப்பது படி நடந்தே ஆகும். நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக என்னால் முடிந்ததை நான் செய்தே தீருவேன் என்று மனதினுள் எண்ணினாள்.ஜிதின் அறையும் இவர்கள் அறை பக்கத்தில் தான்.

கொஞ்சநேரம் கழித்து ஜிதின் அவனது அம்மாவிடம், கல்லூரியில் நடந்ததை கூறி, நீங்கள் கூறியது போல் தான் அவர்களிடம் நடந்து கொள்கிறேன். எனக்கு அவள் என்னுடன் இருந்தாலே போதும். தயவுசெய்து அவளை ஏதும் செய்யாதீர்கள். என்னால் முடியவில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது என்றான்.

அப்படியா? சரி…அவளை விட்டு விடுவோம். ஆனால் இவ்வளவு நடந்து பின்னும்,உண்மை தெரிந்தால் அவள் உன்னுடன் இருப்பாள் என்று உனக்கு தோன்றுகிறதா? என்ன? மிரட்டும் தொனியில் கேட்டார் கயல்.

அவன் மெளனமாகவே இருந்தான்.பின் நான் தான் அவளை காயப்படுத்திக் கொண்டிருக்கிறேனே!அவளை வேறெதுவும் செய்யாதீர்கள் என்று கெஞ்சினான்.

சரி பார்ப்போம்…உனக்காக யோசிக்கிறேன் என்று கயல்விழி கூறி விட்டு, நீ அவளை காதலிக்கும் வரை எனக்கு எல்லாம் நன்றாகவே செல்லும் என்று மனதினுள் நினைத்தார்.

நான் அவளை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் ஜிதின் கூற,

ஆடு தானாக மாட்டுகிறது என்று நினைத்துக் கொண்டு,சரி இரண்டு வாரங்கள் செல்லட்டும்.இப்பொழுது தான் கல்லூரி ஆரம்பித்திருக்கிறது என்றவுடன், தேங்க்ஸ்மா என்று மகிழ்ச்சியோடு ஜிதின் கிளம்ப, அவள் இன்னும் அனுபவிக்கணும். அப்பொழுது தான் என் மனது ஆறும்…..இது கூட எனக்கு நல்ல வாய்ப்பு மனதினுள் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள் கயல்விழி.

மறுநாள் காலையில் அனைவரும் கல்லூரிக்கு வந்தனர்.நித்தி கல்லூரியில் வருத்தத்துடனே இருந்தாள்.அனைவரும் பத்து முப்பது மணியளவில் கல்லூரி கலை அரங்கில் புதிதாக வர இருக்கும் நம் கல்லூரி உரிமையாளரின் வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் அங்கே வந்து விட்டனர்.

நித்தியோ மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.அப்பொழுது கார் ஒன்று வேகமாக வந்தது.யோசனையிருந்த நித்தி கவனிக்காமல் இருக்கவே, ஸ்ரீ அதை பார்த்து அவளை அறியாமலே நித்தி என்று கத்தி விட்டு அப்படியே உட்கார்ந்தாள்.அதே நேரத்தில் யாசுவும் நித்தியின் பின்னே தான் வந்திருப்பாள். யாசு தான் நித்தியை தள்ளி விட்டு, அவள் காரினிடயே வந்திருப்பாள். கார் ஓட்டுனர் சட்டென காரை நிறுத்த, யாசுவிற்கு அடிபடவில்லை இருந்தாலும் கால் சுளுக்கி விட்டது.நித்தி யாசுவை பார்க்காமல்..வெகு நாட்கள் கழித்து என் பெயரை சொல்லி ஸ்ரீ அழைத்திருக்கிறால்…என்று மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே அவளருகே செல்ல, யாசு கோபமாக எழ அவளால் முடியவில்லை. ஓட்டுனர் கீழிறங்கி வந்து அவளை தூக்கி விட, கண்கலங்கி கொண்டே நின்றாள் யாசு.

எனக்கு ஒன்றுமில்லை என்று அவரை விலக்கி விட்டு கோபமாக, நித்தி அப்பொழுது தான் அதனை உணர்ந்தாள். யாசு ஸ்ரீயை அடிக்க கையை ஓங்க, கவின் அங்கே வந்து யாசு கையை தடுத்தான்.

என்னை விடுடா, நான் அவளை விட மாட்டேன். அவள் மீண்டும் என் காதலையும், நண்பர்களையும் என்னிடமிருந்து பிரித்து விட்டாள் கத்த, நித்தி அவளருகே வந்து சமாதானப்படுத்த, நித்தியை கீழே தள்ளினாள். கவின் அவளை பிடித்து விட்டான்.பின் யாசு கையை பிடித்து தனியே இழுத்து சென்றான். அகிலின் அறை தோழன் மூலம் உள்ளே வந்திருப்பான் கவின். ஏற்கனவே நித்தியை காண வந்திருப்பான்..அதனால் கிருத்திக் கவினிடம் நடந்து கொண்டிருப்பதை கூறியவுடன் வந்து விட்டான் கவின்.

ஸ்ரீயும், நிவாசும் யாசு சென்ற திசையை பார்த்தபடியே நின்றனர். நான் பிரித்து விட்டேனா? நித்தியிடம் கேட்க,அவளே சோர்வாக தான் இருந்திருப்பாள். அங்கேயே ஓரிடத்தில் அமர்ந்து, உன்னை போலவே எனக்கு தோழி இருந்தாள் என்றேனே! அவளை கவனிப்பது போல் உன்னை பார்க்கிறோம் அதற்காக தான் யாசு உன் கோபப்படுகிறாள் கூறினாள்.

அப்படியென்றால் நாம் விலகி இருப்பது தான் நல்லது.நானும் அந்த குக்கூ போல் இருக்க விருப்பமில்லை என்றவுடன், இங்கே பார் ஸ்ரீ, அவளை பற்றி தவறாக நினைக்காதே! யாசு கொஞ்சம் பொறாமைபடுகிறாள் அவ்வளவு தான்.

இருக்கட்டும் சீனியர் நாம் விலகியே இருப்போம் கூற, நித்தி வருத்தத்துடன் எழுந்தாள். அவளால் நிற்க முடியவில்லை.சீனியர் உங்களுக்கு என்ன ஆயிற்று? ஸ்ரீ நித்தியை தொட,அவளுக்கு உடல் நெருப்பாக கொதித்தது.

காய்ச்சலா? ஸ்ரீ அவளை தொட,நித்தி அவளது கையை எடுத்து விட்டு, அங்கிருந்து சென்று கலை அரங்கத்தில் நுழைந்து, ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். நிவாஸ் ஸ்ரீயை முறைத்து விட்டு நித்தி அருகே சென்று அமர்ந்தான்.

கவின் யாசுவிற்கு புரிய வைக்க, அவள் மனது ஏற்றுக் கொள்ளவில்லை இருந்தாலும் அவள் அமைதியானாள்.அவன் நித்தியை தேட,அதை கவனித்த நித்தி அவனுக்கு போன் செய்து, நீ கொஞ்ச நேரம் வெளியே இரு.நான் உன்னிடம் பேச வேண்டும் என்று சைகையிலே கூறினாள். ஆனால் அவனுக்கு புரிந்தது நித்தி உடல்நிலை சரியில்லை என்று அவன் நித்திக்கு மருந்து வாங்க வெளியே சென்றான்.

நடந்த அனைத்தையும் காரினுள்ளே இருந்தவாறு சைலேஷும் அவனது தாத்தாவும் பார்த்துக் கொண்டிருந்தனர். நித்திக்கு அதிகமாக காய்ச்சல் இருப்பது மட்டும் ஸ்ரீ, நிவாஸ் தவிர யாருக்கும் தெரியாது. நிவாஸ் நித்தியிடம் மருத்துவமனைக்கு அழைக்க,

நான் யார் உங்களுக்கு? உங்களுடன் எதற்காக வர வேண்டும்? ஸ்ரீயோ மனமிறங்குவதாக இல்லை.

கவின் நிவாஸிற்கு போனில், ஸ்ரீயை பார்த்துக் கொள்ள சொல்லி அனுப்பினான். நிவாஸ் நித்தி உடல் நிலை பற்றி அனுப்ப, கவின் அவளை பார்க்க வந்து கொண்டிருந்தான்.

காரிலிருந்து சைலேசும், அவனது தாத்தாவும் கீழிறங்கி மேடை அருகே வர, நித்தி அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவன் நேற்று பேசியது நினைவு வந்தது.அவர்கள் மேடையில் ஏறி செயலாளர்,துணை செயலாளர்,காசாளர்,முதல்வர் அனைவருக்கும் கை கொடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்தான்.

முதலில் அவனது தாத்தா பேச ஆரம்பித்தார்.என் பெயரனை இந்த இடத்திற்கு முன்பே கொண்டு வர நினைத்தேன். அவன் தான் கம்பெனியை கவனித்துக் கொள்கிறேன் என்று சென்று விட்டான்.மறுபடியும் கேட்டு பார்க்கலாம் என்றும் கேட்டேன். ஒரு நாள் உள்ளிருந்து கவனித்து விட்டு பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்றான். அதுபோலவே பார்த்தான். அவனுக்கு பிடித்துவிட்டது என்றான். நான் ஓய்வெடுக்க போகிறேன்.அவன் பார்த்துக் கொள்வான். எனக்கு நீங்கள் எப்படி ஒத்துழைப்பு கொடுத்தீர்களோ!அதே போல் அவனிடமும் நடந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நான் ஓய்வில் இருந்தாலும் இங்கே தான் இருப்பேன் என்றார்.இந்த கல்லூரியின் முழு பொறுப்பும் என் பெயரன் சைலேஷையே சாரும். உங்களுடைய தேவைகளை தீர்த்து வைப்பான் என்று கூறி முடித்தார்.பின் இருவர் சைலேஷ் பற்றி பேசினார்கள்.

சைலேஷ் பேச ஆரம்பிக்கும் முன்னே கை தட்டல் பலமாக ஒலித்தது. ஏற்கனவே அனைவருக்கும் என்னை தெரியும் என்று நினைக்கிறேன்.

ஆமாம் என்று பசங்க சத்தமிட மாணவ, மாணவிகளுக்கு பிடித்த மாதிரி ஊக்குவிக்கும் விதமாய் பேசிக் கொண்டிருக்கும் போது நித்தியை பார்த்தான். அவள் சரியில்லாதது போல் தெரிந்தது. அவளும் மெதுவாக எழுந்து செல்லலாம் என்று நினைத்தால் சரியாக அவளது மேடம் பார்த்து அவளை இருக்க சொல்லி கையசைக்க, அவளும் உட்கார்ந்தாள். காய்ச்சல் அதிகமானதால் அவளால் உட்கார முடியவில்லை.நிவாஸ் உதவலாம் என்று எழுந்தால் அவனையும் உட்கார வைத்து விட்டனர்.

சைலேஷ் ஒரு வழியாக பேசி முடித்தான். அனைவரும் கிளம்ப, நெரிசலில் ஸ்ரீ தனியேயும் நிவாஸ் தனியேயும் இருந்தனர். சைலேஷ்  நித்தியிடம் பேசலாம் என்று நினைத்து வேகமாக அவளருகே வர,நித்தி முடியாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.அவளது பக்கம் வரும் போது இருவருக்கும் இடையிலே ஒரு ஆசிரியை வந்து நின்றார். அவன் அதிர்ச்சியோடு அவர்களை பார்க்க, அவர் நித்தியை மறைத்து நின்றார். அவன் எட்டி அவளை பார்க்க,அவள் முகமே மாறியிருந்தது. அவள் அப்படியே உட்கார்ந்திருக்க, இவள் முன் ஏதும் பேசக்கூடாது என்பதற்காக அவன் சட்டென, அந்த ஆசிரியை கையை பிடிக்க, நித்தி கையிலிருந்த போன் கீழே விழுந்தது. இருவரும் அவளை பார்த்து விட்டு, இழுத்து சென்றான் சைலேஷ். நித்தியின் போன் உடைந்தது போல் அவளது மனமும் உடைந்தது.

 

 

 

Advertisement