Advertisement

அத்தியாயம் 147

மிஸஸ் அர்ஜூன். இதை தான் தேடுறீங்களா? என்ற அர்ஜூன் குரல் கேட்க, பதட்டமுடன் எழுந்து ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள். அனைவரும் அவன் கூறியதில் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தனர். ஜோ, கிவியும் அதிர்ந்து பார்த்தனர்.

ஏய்..பார்த்தீங்களாடி? அந்த ஜோ தன்யாவிற்கு பிரப்போஸ் பண்ண எப்படி செட் பண்ணியிருக்கான். சூப்பரா இருக்குல்ல என்று பேசிக் கொண்டே செல்வதை கேட்ட அனு வேகமாக அவள் அம்மாவை தேடி வந்து கொண்டிருந்தாள்.

அர்ஜூன், நான்..நான்..எதுவும் செய்யலை. அந்த ஜோ..ஜோ..தான் என்று அவன் கையிலிருந்த தாலியிடம் கையை கொண்டு வந்தாள்.

அர்ஜூன் இருந்த கோபத்தில் பளாரென ஸ்ரீயை அறைந்தான்.

சார், அவள அடிக்காதீங்க என்று அதிரா ஓடி வந்தாள். வாய மூடு என்ற அர்ஜூன் ஸ்ரீ அருகே வர அவள் பயந்து அப்படியே நின்றாள். அவன் கோபம் குறையாது அவளை அடிக்க, ஸ்ரீக்கு ஒரு மாதிரி ஆனது.

அர்ஜூன், அடிக்காத. சாரி அர்ஜூன் என்றாள். அவள் நிற்க முடியாமல் அங்கிருந்து சுவற்றருகே சென்று அதை பிடித்துக் கொண்டு சாய்ந்து நின்றாள்.

ஸ்வேதாவிற்கு போன் செய்த அதிரா விசயத்தை சொல்ல, அவள் வேலையை போட்டு விட்டு அங்கே ஓடி வந்து கொண்டிருந்தாள்.

சார், ப்ளீஸ் அவளை விட்டுருங்க. அவ தாங்க மாட்டா அதிரா அழுதாள்.

ஜோ அர்ஜூனிடம் ஓடி வந்து, அவ எதுவும் செய்யலை. எல்லாம் நான் தான் என்றான். அவனை யாராலும் தடுக்க முடியலை. ஸ்ரீ கண்கள் இடுங்க தன் காதல் கணவனை பார்த்து, நாம பேசிக்கலாம் அர்ஜூன். என்னால முடியல என்று அழுதாள்.

அர்ஜூன் அப்பொழுதும் விடாது சுவற்றோடு வைத்து ஸ்ரீயின் கழுத்தை பிடித்து தூக்கினான். அர்ஜூன்..என்று அழைத்துக் கொண்டே ஸ்ரீ மயங்கி கீழே விழ, அவளை தாங்கிய அர்ஜூன் கோபமுடன் அவளை முறைத்தான்.

ஸ்ரீ மயங்கி அர்ஜூன் கையில் இருந்தாள். அர்ஜூனை கவனிக்காது ஸ்ரீ மயங்கியதை பார்த்து, அம்மா..என்று கத்திக் கொண்டே அனு வருவதை பார்த்த அர்ஜூனுக்கு அனுவுடனான பழைய நினைவுகள் எழுந்தது.

அனு அழுது கொண்டே, அம்மா..என்னாச்சு? எழுந்திரு.. எழுந்திரு..கத்தி அழுதாள். இடியுடனான மழை பொழிய..அம்மா..ஹாஸ்பிட்டல் போகலாம்ன்னு நான் தான் சொன்னேன்ல. கொஞ்சமாவது என் பேச்ச கேட்டியா?

எழுந்திரு..இல்ல. தம்பிக்கு ஏதாவது ஆகிடும்..எழுந்திரும்மா என்று அழுதாள்.

செகண்ட் ஏஞ்சல் என்ன சொன்ன? தம்பியா? அர்ஜூன் கேட்க, அவனை பார்த்து கோபமாக எதுக்கு வந்த? என்னோட அம்மாவ கொல்லப் பாக்குறியா? உன்னை யாரு வர சொன்னா? அம்மாவ என்ன செஞ்ச?  என்று அர்ஜூனை அடித்துக் கொண்டே அவளும் மயங்கினாள்.

இதுக்கு தான் அடிக்காதீங்கன்னு சொன்னேன். உங்க ஏஞ்சல் கர்ப்பமா இருக்கா அதிரா சொல்ல, அர்ஜூனுக்கு சிரிக்கவா அழவான்னே தெரியலை.

ஸ்வேதா அங்கு வந்து, தன்யாவுக்கு என்ன ஆச்சு? பதறினாள்.

வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம் அர்ஜூனை அழைக்க, தேவையில்லை..என்ற அதிரா..அவளுக்கு மயக்கம் தான் இன்று ஸ்கேன் செய்ய தான் போவதாக இருந்தாள். ஆனால் என்று அதிரா அர்ஜூனை பார்த்து,

நீங்க இன்று பார்ட்டி முடிஞ்சு கிளம்பிடுவீங்கன்ம்னு தான் உங்களை தள்ளி நின்று பார்த்துட்டு போக தான் வந்தாள். அவள் எனக்காக வரலை என்று மழை நீரை பிடித்து பிடித்து அனு முகத்தில் தெளிக்க அனு விழித்தாள்.

எழுந்த அனு அர்ஜூனை கண்டு கொள்ளவேயில்லை. அம்மா..அம்மா..என்று அழுது கொண்டே ஆன்ட்டி தண்ணீர் எடுத்துட்டு வாங்க..இரு நான் தெளிக்கிறேன் என்று அர்ஜூன் வாங்க.

போ..இங்கிருந்து போயிரு. எங்க கண்ணு முன்னாடியே வராத கத்தினாள் அனு.

அர்ஜூனுக்கு அனுவின் வார்த்தைகள் அவன் இதயத்தில் ஊசியை இறக்கியது போல் இருந்தது. அவன் கண்ணீருடன் அமர்ந்திருந்தான்.

என்ன செய்வதென்று அனு அனைவரையும் பார்க்க, டார்லிங் வீட்டுக்கு போகலாமா? என்று ஜோ அழைக்க,

என்னோட அம்மாவை தொட்ட, அவ்வளவு தான் பார்த்துக்கோ? அவங்கள கழுத்துல தாலி இருக்கிற தெரிஞ்சும் பின்னாடியே சுத்திக்கிட்டு திரியுற? உனக்கு வெட்கமாவே இல்லையா?

என்னோட அம்மாவ பத்தி உனக்கு என்ன தெரியும்?

இதோ உட்கார்ந்திருக்கானே இவன் தான் என்னோட அப்பான்னோ அவங்க புருசன்னோ தெரியுமா உனக்கு? அர்ஜூன் கண்ணீருடன் அனு என்னை அப்பான்னா சொன்னா? என்று அவளை பார்த்தான்.

ரெண்டு பேரும் எந்த அளவு காதலிச்சாங்கன்னு தெரியுமா உனக்கு?

இவங்க பிரிய உன்னை போல் கேவலமான பிறவி ஒருவன் தான் காரணம்ன்னு தெரியுமா உனக்கு? தெரியுமா? என்று கத்தினாள்.

சும்மா பின்னாடியே சுத்துனா காதலா? போடா..அங்கிட்டு என்று அம்மாவை தூக்குங்க. என்னால முடிஞ்சா அப்பவே தூக்கி இருப்பேன் என்றாள் கோபமாக அர்ஜூனிடம்.

அவள் அனுவை பார்க்க, ஸ்ரீ அருகே வந்த அனு..ஆன்ட்டி.. அம்மா செயின், தாலியை காணோம் என்று பதறி கேட்டாள்.

என்னிடம் தான் இருக்கு அர்ஜூன் காட்ட,.நீ.. உன் கையில் எப்படி வந்தது? நீ எதுக்கு இதை கையில வச்சிருக்க. அதை குடு அனு கேட்க,

அவர்கள் அருகே வந்த பாவனா..அட கதை நல்லா போகுதே? அர்ஜூன் சார் தான் ஒன்றுமில்லாத இவளோட புருசனா?

பாப்பா..நீ சரியா தான் சொல்றியா? இவன் தான் உன் அப்பாவா? இல்லை மாத்தி சொல்றீயா? அவள் கேட்க, அனு பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை அடிக்க செல்ல, அவள் நடிகையாயிற்றே? தொடவாது முடியுமா?

அர்ஜூன் அவளிடம் வந்து, என் பொண்டாட்டி, பிள்ளைய எனக்கு தெரியாதா? போயிரு. இல்ல நான் மனுசனா இருக்க மாட்டேன்என்று கத்தினான்.

கோபத்தை பாருடா. விட்டா உன்னோட பொண்டாட்டி இந்த பயலோட குடும்பமே நடத்தி இருப்பா? அவள் சொல்ல, அர்ஜூன் அவள் கழுத்தை பிடிக்க, அனைவரும் அவனை தடுத்தனர்.

என்னோட பொண்டாட்டிய பத்தி எல்லாத்தையும் உரசிக்கிட்டு திரியிற நீ பேசாத? இப்ப கூட அவளை அவன் ஏதும் செஞ்சிறக்கூடாதுன்னு ப்ரெண்டுன்னு பார்க்காம அவன் கையை கிழிச்சா. அதை நீ பார்க்கலை.

நீயா இருந்தா பணத்துக்காக கூட படுத்திருப்ப? என்று அர்ஜூன் கத்த, பார்ட்டிக்கு வந்த பத்திரிக்கையாளருக்கு அர்ஜூன், ஸ்ரீ, பாவனா விலையாகினர்.

ஏய்..என்ன பேசுற? என்று அவள் அர்ஜூனை கையை ஓங்க, அவன் செக்கரட்டரி அவளை தடுத்தான்.

எல்லாரும் நிறுத்துங்க என்று கத்திய அனு..அம்மா..என்று ஸ்ரீயிடம் ஓடினாள்.

உன்னிடம் பேசுறதுக்கு?

காரை அவ்விடம் எடுத்து வந்த ஸ்வேதா..தன்யா என்று ஸ்ரீ விழித்ததை பார்த்து அழைக்க, ஸ்ரீ எழ சோர்வில் முடியாமல் படுத்துக் கொண்டாள்.

அர்ஜூன் அவளிடம் சென்று அவளை தூக்க, நோ..நானே பார்த்துக்கிறேன் என்றாள்.

அம்மா..ப்ளீஸ் எனக்காக? அனு கேட்க, ஸ்ரீ அமைதியானாள். அர்ஜூன் அவளை தூக்கி காரில் போட்டுக் கொண்டு அனுவிடம் வந்தான். அனு ஓடிச் சென்று அவள் அம்மாவிடம் அமர்ந்து, அம்மா..தம்பிக்கு ஒன்றும் இருக்காதுல்ல..என்று கேட்க..அம்மாவுக்கு தான்டா சோர்வா இருக்கு. தம்பிக்கு ஒன்றுமில்லை என்று சொல்ல, அர்ஜூன் இருவரையும் பார்த்துக் கொண்டே காரில் ஏற, அனுவுடன் அதிராவும் செல்ல, கிவி கெஸ்ட்ட பார்த்துக்கோடா என்று சொல்ல..

மேம், நீங்க கிளம்புங்க. நீங்க அங்க இல்லைன்னா எல்லாரும் தப்பா நினைப்பாங்க. அதான் அதிரா இருக்காங்கல்ல..அவன் சொல்ல, ஆமா மேம்..நீங்க பார்த்துக்கோங்க.

ஆனால் அதிரா..நீ தான் இருக்கணுமே? அவர் கேட்க, இருவருமே கிளம்புங்க அர்ஜூன் சொன்னான்.

நோ..என்று ஸ்ரீ அதிரா கையை பிடிக்க, அவளோட கரியர் முக்கியமில்லையா? அர்ஜூன் கேட்க, போ அதி, பார்த்துக்கிறேன் என்று ஸ்ரீ சொல்ல, அங்கிள் என்று அனு கிவியை அழைத்து ஏற சொன்னாள்.

அர்ஜூன் அவளை பார்த்தான். அவள் காரை எடுக்கிறீங்களா? நாங்க டாக்சி பிடிச்சி போகணுமா? கேட்க, காரை கிளம்பினான் அர்ஜூன்.

வீட்டினருகே வந்தவுடன் ஸ்ரீ மெதுவாக கீழிறங்கி வந்தாள். அவள் தடுமாற, அனு பதறினாள். அர்ஜூனும் கிவியும் பிடிக்க வந்தனர். அனு அர்ஜூனையும் ஸ்ரீ கிவியையும் முறைத்தனர்.

ஏய்..நீ கிளம்புடா அர்ஜூன் சொல்ல கிவி அனுவை பார்த்தான். கிளம்புன்னு சொல்றேன்ல..என்ற அர்ஜூன் ஸ்ரீயை தூக்கினான்.

என்னோட அம்மாவை விடுடா..அனு கத்தினாள். பெரிய அப்பார்ட்மென்ட்டின் முன் நின்றனர். அதில் நிறைய வீடுகள் இருந்தது.

நீ வீட்டு கதவை திற..இல்லை உன்னோட அம்மாவை பொத்துன்னு கீழ போட்ருவேன் அர்ஜூன் சொல்ல, அவனை முறைத்த அனு வேகமாக படி ஏறினாள். மூன்றாம் மாடியில் முப்பத்து ஏழாவது அறைக் கதவை திறந்து உள்ளே சென்றாள்.

அர்ஜூன் உள்ளே வந்து அறையை பார்த்தான். இரு அறைகள் இருந்தது. ஒன்றில் நுழைய சென்றவனை நிறுத்திய அனு, இங்க நீ போகக்கூடாது. இது அதிரா ஆன்ட்டி அறை என்று சொல்ல, ஸ்ரீ அறைக்குள் நுழைந்து அவளை படுக்கையில் படுக்க போட்டு அறையை பார்த்தான். அர்ஜூன் ஸ்ரீயின் திருமண புகைப்படமும், மூவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படமும் இருந்தது.

உதவிக்கு நன்றி. நீ கிளம்பு என்றாள் அனு.

அனு..ஸ்ரீ அழைக்க, அம்மா நீ வாய மூடிக்கிட்டு படு என்று அர்ஜூனிடம் கையை நீட்டி காட்ட, அவன் கையை கொடுத்தான்.

உன்னோட கைய கேட்கலை. அம்மாவோட தாலி செயினை தா..

உன் அம்மாவுக்கு நான் வேண்டாம். அது மட்டும் வேண்டுமோ?

ஆமா, இப்ப பார்த்தேல்ல..இதே மாதிரி எவனாவது என்னோட அம்மாவை தொந்தரவு செஞ்சா. இதை வச்சி தான் தப்பிக்கணும்.

ஓ..இதை பார்த்தால் விட்டுருவாங்களா?

தேவையில்லாம பேசாம அதை கொடுத்திட்டு போயிரு.

அனுவை அலாக்காக தூக்கிய அர்ஜூன். என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது செகண்டு ஏஞ்சல்?

முட்டாள்..முட்டாள்ன்னு தெரியுது. பொண்ட்டாட்டிய பார்த்துக்க தகுதி இல்லாதவன்னு தோணுது..அனு சொல்ல அர்ஜூன் கோபமானான்.

பல்லை கடித்த அர்ஜூன், அனுவை ஏதும் சொல்ல முடியாமல் “ஸ்ரீயிடம் வந்து, என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது?” கேட்டான். அவள் அமைதியாக அர்ஜூனை பார்த்தாள்.

என்ன சொல்லணும்? என்று அனு கோபமாக வெளிய போ என்று கத்தினாள். அனு..கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பட்டும்.

அனுவிடம், நல்லா வளர்ந்துட்ட. நல்லா பேசுற செகண்டு ஏஞ்சல்..என்றான்.

ப்ளீஸ் போயிரு.

அர்ஜூன் ஸ்ரீ அருகே வந்து அமர அவள் பயத்துடன் அர்ஜூனை பார்த்தாள். அவன் கையை மெதுவாக அவள் வயிற்றில் வைத்து, எத்தனை மாசம்? கேட்டான்.

அவன் கையை விலக்கிய ஸ்ரீ கண்ணீருடன், சீக்கிரம் கிளம்பிடு அர்ஜூன் என்றாள்.

ஏன் ஸ்ரீ? நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். என்னை விட்டு பயந்து ஓடுற?

அப்ப முன்னாடியே அம்மாவை பார்த்துட்டேல்ல..அனு கேட்க, ஆமா பார்த்தேன் என்ன? நீங்க இங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சு தான் வந்தேன் அர்ஜூன் சொல்ல,

தெரிஞ்சி எதுக்கு வந்த? என்னையும் தம்பியையும் கொல்ல வந்தியா? கேட்க,

அனு..என்று கத்திய அர்ஜூன். அப்பொழுதும் இப்படி தான் பேசுன? இப்பொழுதும் இப்படி தான் பேசுற? நான் என்ன செய்தேன்? கத்தினான்.

நீ செய்யலைன்னாலும் உன் மேல தப்பு இருக்கு அர்ஜூன் அனுவும் கத்தினாள்.

அனு வேண்டாம்..ஸ்ரீ எழ, அம்மா சும்மா இரு. இவங்க எல்லாரும் பணக்காரவங்க. நம்ம இவங்களுக்கு அசிங்கமா தான் தெரிவோம்.

அனு..என்று ஸ்ரீ எழுந்து அமர்ந்து, வேண்டாம் அனு. அவனை கஷ்டப்படுத்தாத..

அர்ஜூன் புரியாமல், ஸ்ரீ எதை சொல்ல வேண்டாம்ன்னு சொல்ற?

அர்ஜூன் வெளிய போ..ஸ்ரீ கத்தினாள்.

அம்மா..நாம தப்பு செஞ்ச மாதிரி கேள்வி கேக்குறான்? அனு மரியாதையா பேசு ஸ்ரீ கோபமாக, மரியாதையா? என்று ஏளனமாக அர்ஜூனை அனு பார்த்தாள். அர்ஜூனுக்கு ஒருமாதிரி ஆனது.

நான் கேட்பதற்கு பதில் சொல்லு என்ற அனு அர்ஜூனிடம், அம்மா வயித்துல இருக்குற தம்பி யாருடையவன்? அனு கேட்க, என்ன பேச்சு பேசுறா ஸ்ரீ? அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, அவள் அழுதாள்.

ஸ்ரீ என்னாச்சு? அர்ஜூன் அவளருகே செல்ல, இதுக்கு மேல அம்மா பக்கம் போன சாவடிச்சிடுவேன். முதல்ல பதில் சொல்லு என்றாள் அனு.

உன்னோட தம்பிபாப்பா தான் அர்ஜூன் சொல்ல, அது எனக்கு தெரியும்? உனக்கும் தம்பிக்கும் என்ன சம்பந்தம்?

எனக்கா? பையானாவோ இல்ல பொண்ணாவோ இருக்கலாம் அர்ஜூன் சொல்ல, ஸ்ரீ அழுவதை நிறுத்தவில்லை.

தன்யா எதுக்கு அழுற? ஸ்வேதா, அதிரா, ஜோ, கிவி உள்ளே வந்தனர்.

அதிரா அர்ஜூனை முறைத்துக் கொண்டே, சார் இங்கிருந்து போங்க என்றாள்.

நான் எதுக்கு போகணும்? என்ற அர்ஜூன் அனுவிடம், எதுக்கு கேட்ட அனு? கோபமாக கேட்டான்.

போய்..உன்னோட அம்மாகிட்ட கேளு என்றாள் அனு.

அம்மாவா? என்ன சொல்ற? நடந்ததை சொல்லு..என்றான் விறைப்புடன்.

அர்ஜூன்..ஒன்றுமில்லை. நீ போ..ஸ்ரீ கத்தி விட்டு, அனு தேவையில்லாததை பேசாத.. என்று சோர்ந்தாள்.

அனு சொல்லு, அம்மா என்ன சொன்னாங்க?..அர்ஜூன் கேட்க, சார் முதல்ல வெளிய வாங்க. ஸ்ரீக்கு இப்ப சாதாரணமான பிரக்னென்சி இல்லை. அவளோட கர்ப்பப்பை வீக்கா இருக்கு. அவள கஷ்டப்படுத்தாதீங்க என்றாள் அதிரா.

ஸ்ரீ என்ன சொல்றா? அர்ஜூன் கேட்க, ஸ்வேதாவும் கோபமாக இதை பற்றி சொல்லவேயில்லை. கர்ப்பப்பை வீக்கா இருந்தா எப்படி குழந்த பெத்துக்க முடியும்? அபாட் பண்ணியிருக்கலாமே?

சொன்னா கேட்டா தான? அப்பவே சொன்னேன். கேட்கவேயில்லை. டாக்டருமே வேண்டாம்ன்னு சொன்னாங்க.

அம்மா, ஆன்ட்டி என்ன சொல்றாங்க? எனக்கு புரியல. உனக்கு ஒன்றுமாகாதுல்ல. நீயும் என்னை தனியா விட்டு போயிறாத அனு அழ, ஸ்ரீ கவலையுடன் அவளது தலையை வருடினாள்.

ஆன்ட்டி, அம்மாவுக்கு ஒன்றுமாகாதுல்ல அனு கேட்க, குழந்தை நார்மலா பிறக்க வாய்ப்பில்லை. ஆப்ரேசன் தான். ஆனாலும் தன்யா உடல் நிலை பாதிக்கப்படும் என்று அதிரா அழுதாள்.

ஏன் ஸ்ரீ? என்னை விட்டுட்டு போறதில்லயே இருக்க அர்ஜூன் கோபமாக கேட்க, சார்..வெளிய வாங்க..என்று அதிரா அழைத்தாள்.

அதிரா வேண்டாம் ஸ்ரீ தடுக்க, தன்னு..அவருக்கும் தெரியட்டும். உன் மேல தப்பு வந்துறக்கூடாது என்றவள் கூற ஆரம்பித்தாள்.

நீங்க இருவரும் சேர்ந்து வாழ்ந்ததே ஆறு மாதங்கள் தான? ஆமா..என்றான் அர்ஜூன்.

அப்புறம் எப்படி இந்த குழந்தை உன்னுடையதுன்னு சொல்ற? அதிரா கேட்க,

என்ன எல்லாரும் இதையே கேக்குறீங்க? அவ என்னோட பொண்டாட்டி. அவ வயித்துல வளர்ற குழந்தை எங்களுடையதில்லாமல் யாருடையதா இருக்க போகுது?

உன்னோட அம்மா அப்படி சொன்னா? என்ன செய்வீங்க?

எப்படி சொன்னா?

தன்யா வயித்துல வளர்ற குழந்தை வேறொருவருடையதுன்னா..நீ ஏத்துப்பியா?

என்ன பேசுற?

நான் பேசல. உன்னோட அம்மா தான் அவங்க ப்ரெண்டு கிட்ட பேசிகிட்டு இருந்திருக்காங்க.

அம்மா ஸ்ரீய பேசினாங்களா? என்று அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். அவள் அமைதியாக இருந்தாள்.

நாங்க வீட்டை விட்டு வருவதற்கு முன் ஒரு வாரம் என்ன செஞ்ச? உனக்கு நினைவிருக்கா? அனு கேட்டாள்.

நான் என்ன செஞ்சேன்? என்று சிந்தித்த அர்ஜூன்..எப்பவும் போல் தான இருந்தோம்.

இல்ல. நீ அப்படி இல்லை. அந்த ஒரு வாரத்திற்கு முன் நம்ம வீட்டுக்கு பாட்டி வந்தாங்க. உனக்கு நினைவிருக்கா? அன்று சன்டே..நானும் அம்மாவும் ஷாப்பிங்க போயிட்டு வீட்டுக்கு வந்தோம். பாட்டி வீட்ல இருந்தாங்க. முதலில் பேச்சு சத்தம் கேட்டு, பாட்டின்னு சந்தோசமா தான் வந்தோம்.

வேற ஒருத்தவங்க சத்தம் கேட்டு அங்கேயே அம்மா நின்னுட்டாங்க. என்னை பேச கூட விடாமல் என் வாயை மூடினாங்க. நானும் அவங்க பேசியதை கேட்டேன்.

அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, அவள் முகம் வெறுமையை தத்தெடுத்து இருந்தது.

பாட்டிக்கு அம்மாவை பிடிக்காதாம். ஆனால் இப்ப பிடிச்சிருக்கு. அதனால உங்களுக்கு கல்யாணம் பண்ணித் தந்ததா சொன்னாங்க. இனி அவளோட வாழ்க்கையில நீ இடையில வரக்கூடாதுன்னு சொன்னாங்க.

அதுக்கு அவங்க..உன் பையன் தான் காதல்னு கல்யாணம் பண்ணிக்கிட்டான். இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் உங்க குடும்பத்துக்கு வாரிசை கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க. அப்புறம்..அப்புறம்..அம்மாவை..அவங்க கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க.

பாட்டி அதுக்கு முடியாது. அவளுக்கு குழந்தை பிறக்கலைன்னாலும் பரவாயில்லைன்னு சொன்னாங்க.

ஸ்ரீக்கு குழந்தை பிறந்தால் அது அவளுடன் முதலில் இருந்தவனுடையதா தான் இருக்குன்னு சொன்னாங்க.

முதல்ல எனக்கு புரியலை. அர்ஜூன் எதுக்கு நீ அம்மாவுக்கு உதவலை? அனு கேட்டாள்.

தன்னு பாப்பா என்ன சொல்றா? யாரு அது முதலில் இருந்தவன் ஜோ கேட்க, அவள் அழுதாள்.

அமைதியா இருக்கீங்களா? அர்ஜூன் கத்தி விட்டு அனுவை பார்த்தான்.

அவனை பார்த்த அனு பயமிருந்தாலும் ஸ்ரீ போலே காட்டிக் கொள்ளாது மேலும் தொடர்ந்தாள்.

அப்படியிருக்காது என்று பாட்டி சொல்ல, கண்டிப்பா அது அவனுடைய குழந்தையா தான் இருக்கும். அடுத்து அவளுக்கு கண்டிப்பா குழந்தையே பிறக்காது. உன்னோட வீட்டு வாரிசுன்னு யாருமே இருக்க மாட்டாங்க. இரண்டுமே அடுத்தவன் குழந்தை தான் என்று அழுதுவது போல் முகத்தை அனு வைத்திருக்க,

போதும் அனு வேண்டாம்டா..என்று வலியுடனே கண்ணீருடன் எழுந்து வந்து ஸ்ரீ அனுவை அணைக்க அனு அழ ஆரம்பித்தாள். அனைவரும் திகைத்து அனுவை பார்த்தனர்.

அதிரா..என்று ஸ்ரீ அவளை அழைக்க, அவள் புரிந்து கொண்டு அனுவை அவள் அறைக்கு தூக்கி சென்றாள்.

சொல்லு..ஸ்ரீ..எதுக்கு அனு அழுறா? அர்ஜூன் கேட்க, ப்ளீஸ் அர்ஜூன். நீ போயிரு. என்னால இதுக்கு மேல முடியாது என்று அழுதாள்.

நீ சொல்ல வேண்டாம். அம்மாவிடம் பேசியது. உன்னோட ஆன்ட்டியா? அர்ஜூன் கேட்க, ஸ்ரீ அழுகை நின்று அவனை பார்த்தாள்.

எப்படி கண்டுபிடிச்சன்னு நினைக்கிறியா? நம்மள பிரிக்கணும்ன்னு நினைச்ச எல்லாரும் செத்து போயிட்டாங்க. இப்ப உயிரோட இருக்குறது அந்த கயலும், என்னோட அம்மாவும் தான்.

சொல்லு ஸ்ரீ? ப்ளீஸ் அனுவுக்காகவாது சொல்லு என்றான் அர்ஜூன்.

கயல் வெளிய வந்தது உனக்கு தெரியுமா அர்ஜூன்? ஸ்ரீ கேட்டாள்.

தெரியும். மாமா ஆட்கள் பாலோ செய்தனர். ஆனால் நம் வீட்டுக்கு வந்ததாக செய்தி ஏதும் வரலை. அதனால் பிரச்சனை இல்லைன்னு நினைச்சேன்.

நீ என்னை விட்டு வந்த பின்..அதுவும் நீ எழுதிய கடிதம் நம்பும் படி இல்லை. யாரோ உன்னை ஏதோ சொல்லி இருக்காங்க. அதான் கோவிச்சுட்டு போயிருக்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம் என்று அவள் முன் மண்டியிட்டு..அன்று காலை எவ்வளவு சந்தோசமாக எழுந்தேன் தெரியுமா ஸ்ரீ?

எப்பொழுதும் போல் தான் வாழ்க்கை இருந்தாலும்..பத்து நாட்களுக்கு உன்னுடனும் அனுவுடனும் தனியே இருக்க நினைத்து எல்லா வேலையையும் முன்பே செய்தேன். ஆனால் நாம் எப்பொழுது போல் தானே பேசி வந்தோம்.

இல்ல அர்ஜூன். நாங்க பேசி வந்த போது முழுவதும் நீ வேலை இருக்குன்னு ஓடிக்கிட்டே தான் இருந்தா. உனக்கு நினைவிருக்கா..அம்மா உன்னுடன் நேரம் செலவழிக்கலைன்னு எவ்வளவு கோபப்பட்ட? அதை விட பலமடங்கு கோபம் எனக்கு உங்க மேல? உன் மேல..

மத்த நேரம் நல்லா பேசிய நீ, நாங்க பிரச்சனைன்னு சொல்ல வந்தப் போது உனக்கு வேலை முக்கியமா போயிடுச்சு அர்ஜூன். ஒரு வேலை..நாங்க எல்லாத்தையும் கேட்காதது போல் உன்னுடன் இருந்திருந்தால்..நானும் அனுவும் இப்ப உயிரோட இருந்திருக்கவே முடியாது. அந்த கயல் உன்னோட அம்மாவுக்கு மெண்டல் பிரஸ்ஸர் கொடுத்து அவங்கள தூண்டி விட்டா..

ஸ்ரீ..என்று அதிர்ந்த அர்ஜூன், உயிரோட இருந்திருக்க மாட்டீங்கன்னா.. அம்மா உங்களை கொல்ல பார்த்தாங்கன்னு சொல்றியா ஸ்ரீ? அர்ஜூன் கேட்க, ஸ்ரீ தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு மீதியை சொன்னாள்.

அர்ஜூனுக்கு வேற பொண்ணை பார்த்து கட்டி வை. அதான் நல்லது. அவளால் பிள்ளை பெத்துக்கவும் முடியாது, அப்படி பிறந்தாலும் அது..என்று அவள் உதடுகள் நடுங்க வேறொருவனுடைய பிள்ளையா தான் இருக்கும். அதனால ஒண்ணு அவங்கள என்னிடம் விட்டுரு, இல்லை கொன்னுடு என்னோட ஆன்ட்டி சாதாரணமா பேசுனாங்க.

கொலையான்னு? அத்தை பேச்சில் நடுக்கம் தெரிந்தது. ஆனால் அவள் திரும்ப திரும்ப..நான் அவனுடன் இருந்தவள் என்றும், உன்னோட வாரிசு இவள் வயிற்றில் வளராதுன்னு சொன்னது..அனு மனதிலும் அத்தை மனதிலும் தெளிவா பதிஞ்சிருச்சு.

அனு, ஸ்ரீ இருக்கும் வரை அர்ஜூன் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டான்னு சொல்ல, அத்தை அமைதியாக யோசித்தாங்க. எனக்கு நம்பிக்கை இருந்தது. ஒத்துக்கொள்ள மாட்டாங்கன்னு..அதே போல் ஒழுங்கா வெளியே போயிடுன்னு சொன்னாங்க.

நீ வேணும்ன்னா அவளுக்கு உடல் பரிசோதனை செய்து பார் என்று சொல்லி விட்டு செல்ல,நாங்கள் மறைந்து கொண்டோம். நாங்க வீட்டிலிருந்து வெளியே சென்றோம். அப்ப அனு மூணு தான் அர்ஜூன்  படிச்சுகிட்டு இருந்தா.

பாட்டி நம்மள கொன்னுடுவாங்கல்லான்னு கேட்டா அர்ஜூன்? எனக்கு உயிரே போச்சு. அதனால் அத்தையை அன்று கவனித்தேன். அனு அவங்க பக்கத்துல போகவே பயந்தா. அவங்களும் மாலையில் கிளம்பிட்டாங்க.

ஆனால் மறுநாள் எனக்கு போன் செய்து காய்ச்சல் அதிகமா இருக்குன்னு என்னை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல சொன்னாங்க. நான் அனுவை தாரியிடம் விட்டு செக் பண்ண கூப்பிடுறாங்கன்னு தெரிஞ்சு தான் போனேன். எனக்கு ஜூஸ் கொடுத்து மயங்க வைத்து அவங்களுக்கு தேவையானதை செஞ்சுக்கிட்டாங்க என்று அழுது கொண்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

மூன்று நாள் கழித்து அதுக்கு ரிப்போர்ட் வந்திருக்கும் போல..அனுவை அழைத்து அவங்க வெளிய ஒரு ஹோட்டலுக்கு வர சொன்னாங்க. வாரேன்னு சொல்லிட்டேன். ஆனால் திடீர்ன்னு பயமா இருந்தது. போகாமல் இருந்தால் அவங்களுக்கு சந்தேகம் வந்துரும்ன்னு அனுவை அன்றும் தாரியிடம் விட்டு தனியே நான் தயாரா தான் போனேன் .

ஒன் நாட் எய்ட்டுக்கு வரச் சொன்னாங்க. நானும் போனேன். அவங்க மட்டும் தான் இருந்தாங்க. சுற்றிலும் பார்த்தேன். பொருட்களோ, ஏன் குடிக்க தண்ணீர் கூட அந்த அறையில் இல்லை. என் சந்தேகம் உறுதியாக..அவங்களை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். அவங்க முகத்தில் பயம் தெளிவா தெரிஞ்சது. அவங்க கையில் கத்தியை மறைத்து வச்சிருந்தாங்க. என் பார்வையை நிராகரித்தாங்க. ஆனால் அத்தையால் என்னிடம் கையை ஓங்க கூட முடியலை..

என்னாச்சு அத்தை? உடம்பு நல்லா இருக்கான்னு கேட்க, படுக்கையில் கத்தியை மறைத்து விட்டு என்னை அணைத்துக் கொண்டாங்க. அப்புறம் அவங்க எதுவுமே பேசலை. நானும் எதுவும் கேட்காமல் வந்துட்டேன்.

ஆனால் அந்த கத்தியை எடுக்க அவங்க அறைக்கு வந்தது. அவங்க அழுதது..எல்லாம் எனக்கு நல்லா கேட்டது. நான் அங்கே அத்தையிடம் பேசிக் கொண்டே ரெக்கார்டரை வைத்து விட்டு வந்தேன். வேறேதும் செய்வதாக இருந்தால் அதில் பதிவாகும் என்று தான் வைத்தேன்.

அவங்களை அவங்களே கன்ட்ரோல் செய்து தான் என்னை அவங்க ஏதும் செய்யலைன்னு புரிஞ்சது. ஆனாலும் அவங்க கயல் பிடியிலிருந்து வெளியே வரலை. அடுத்த நாள் அதிகாலையிலே வந்தாங்களே? உனக்கு நினைவிருக்கான்னு தெரியலை..காலை சாப்பிட்டிற்காக அத்தை டைனிங் டேபிளில் போனை வைத்து சென்ற போது கயல் போன் செய்தாள்.

ரிங் சத்தம் கேட்டு பயந்து வேகமாக வந்து போனை எடுத்து நம்மை பார்த்தாங்க. உனக்கு தான் எதுவுமே தெரியாதே. சாப்பிட்டு நீ கிளம்பிட்ட அர்ஜூன். அன்று முழுவதும் நம்ம வீட்ல தான் இருந்தாங்க. அவங்க போன் பேசும் போது அனு கவனிப்பதை பார்த்து போனை வச்சாங்க. அனு என்னிடம் வந்து சொல்லிட்டா. நான் யோசித்து விட்டு நேராகவே பேசலாம்ன்னு நினைச்சேன். ஆனால் அவங்க அவளிடம் பேசுறதை கேட்டேன். மதிய சாப்பாட்டில் அனுவிற்கு விசம் கலந்து வைப்பதாக பேசுனாங்க.

எனக்கு புரியாமல் இருக்க, அனுவை தூக்கிக் கொண்டு..நம்ம அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டேன். அவளும் அதை கேட்டு..அம்மா..பயமா இருக்கு. செத்தா வலிக்குமான்னு கேட்டா? என்னால தாங்கவே முடியல அர்ஜூன். நாங்க இருவருமே..என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தப்ப.. தாரியிடம் சொல்லலாம்ன்னு நினைச்சேன். ஆனால் அவளுக்கு ஏதாவது ஆகி விட்டால்..என்று குளிர்ந்த சவரை திறந்து விட்டு இருவரையும் முழுதாக நனைத்து எங்களுக்கு காய்ச்சல் வரும் வரை அப்படியே நின்றேன். அனு உடல் தாங்காது வெளியே வந்தேன். அவளுக்கு காய்ச்சல் கொதித்தது. அதை வைத்து தாரிகாவை வர வைத்தேன். எனக்கும் காய்ச்சலாக இருக்க, அத்தை சமையல் வீணாகி போனது தான் மிச்சம்.  தாரி சென்ற பின் பால் அனுவுக்கு கொடுக்க வந்தாங்க.

அவளுக்கு காய்ச்சல் குறையவேயில்லை. அதை காரணமாக சொல்லியும், நல்லவிதமா பேசுவது போல் கொடுக்க என்னால் மறுக்க முடியல அர்ஜூன். ஆனால் அவங்க முன்னாடியே நான் குடிக்கிறேன் என்று குடித்த பின் தான் வெளியே போனாங்க. அது ஸ்லோ பாய்சன் போல. அர்ஜூன் நீ வந்தவுடன் சாப்பிடாமல் கூட படுத்துட்ட. நான் என்ன சொல்றதுன்னு விட்டேன். தூக்கமில்லாமல் எப்படியும் அனுவையும் கொல்ல பார்ப்பாங்கன்னு தெரிஞ்சு தான் உனக்கு கடிதமாக எங்களுடன் நேரம் செலவழிக்க மாட்டேங்கிறேன்னு காரணத்தை எழுதி விட்டு எங்களுடைய பொருட்கள் பாதியை எடுக்க..எனக்கு தொண்டை அடைத்தது. அப்படியே பையை மூடி அனுவை தூக்கிக் கொண்டு, எங்க குடும்ப மனநல மருத்துவரை பார்க்க அவர் மருத்துவமனைக்கு ஓடினேன். அனு கேட்பதற்கு கூட பதில் சொல்ல முடியாமல் அவரை பார்த்து.. விசயத்தை பற்றி எழுதிகாட்ட..வாயிலிருந்து இரத்தம் வந்தது. அங்கேயே மயங்கினேன். எழுந்து பார்த்த போது நர்ஸ் அருகே இருந்தார். அவர் என்னை காப்பாற்றினார்.

விசம் எப்படி சாப்பிட்டேன்னு கேட்டார். நான் எதையும் கூறாமல் யாருக்கும் இதை பற்றி சொல்லக்கூடாது. நான் அர்ஜூனை விட்டு முழுதாக செல்லப் போறேன். அதனால் உனக்கும் என்னை பற்றி தெரிய வேண்டாம்ன்னு சொல்லி கெஞ்சியதால் அவர் புரிந்து கொண்டு என்னை அவரே அனுவுடன் ரயிலில் பணத்துடன் ஏற்றி விட்டார். அனுவும் காய்ச்சலில் இருக்க, அவர் மருந்தை கொடுத்து முன்னதாகவே பாப்பாவுக்கு ஊசியும் போட்டதால் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் எனக்கு ரொம்ப சோர்வானதால் மயங்கிட்டேன்.

எழுந்து பார்க்கும் போது..என்று ஸ்ரீ ஸ்வேதாவை பார்த்தாள். நானும் அதே ரயிலில் தான் பயணித்துக் கொண்டிருந்தேன். அங்கே பயணிகளில் ஒருவராய் மருத்துவரும் இருந்தார். அவர் காய்ச்சலால் சோர்வா இருக்காங்க என்று எல்லாரையும் பார்த்தார். யாரும் உதவ வரவில்லை. எனக்கு அனுவை பார்த்து மனசு கேட்காமல் தான் இருவரையும் பார்த்துக் கொண்டேன். அப்புறம் தான் ஸ்ரீ மாடல் என தெரிந்து அவள் விழித்தவுடன் பேசி இங்கே அழைத்து வந்தேன். அதிராவும் சென்னை தான். நானும் சென்னை தான். அங்கே அப்பாவுக்கு என்னோட தொழில் தப்புன்னு சொன்னாரு. எனக்கு கஷ்டமா இருந்தால வேண்டுமென்றே தூரமா ஆரம்பித்தேன். இதில் கல்யாணம் பண்ணுன்னு டார்ச்சர் பண்ணாங்க. அதான் ஒரு முறை நேரில் பார்த்து உறுதியா முடியாதுன்னு சொல்லிட்டு வரும் போது தான் இருவரையும் பார்த்தேன். ஆனா தன்னு..நீ இவ்வளவு கஷ்டப்பட்டு பேபியையும் உன்னையும் காப்பாத்திக்க வந்தன்னு தெரியாம போச்சு என்று ஸ்வேதா அவளை அணைத்தார்.

அர்ஜூன் அசையாது அப்படியே அமர்ந்து விட்டான். ஜோ அவனது தோளில் கை வைக்க, சொல்லி இருக்கலாம் ஸ்ரீ? அர்ஜூன் கதறி அழுதான்.

சொல்றத கேக்குற மாதிரியா இருந்த? ஜாக்கிங் போகும் போதும் உன் கையிலிருந்த போனில் கம்பெனி பற்றிய விவரம் தான். என்னை என்ன சொல்ல சொல்ற? என்னை விடு..அனு உன்னிடம் பேச முயற்சி செய்தாள். உனக்கு தான் நாங்க கண்ணுக்கு தெரியவே இல்லையே?

என்னை மன்னிச்சிரு ஸ்ரீ, உனக்கு நல்ல கணவனாகவும் அனுவுக்கு சரியான அப்பாவாகவும் இல்லாமல் இருந்து எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன். அம்மா அந்த ஹோட்டல்ல வச்சி..ஏதாவது, ஏன் ஸ்ரீ? என்னை அடித்தாவது சொல்லி இருக்கலாமே? விசம் இருக்குன்னு தெரிஞ்சே பாலை குடிச்சிருக்க? நடந்த எதுவுமே தெரியாம கம்பெனி.. கம்பெனியா சுத்தி வேலை பார்த்து உங்களிடம் நேரம் கழிக்கலாம்ன்னு நினைச்சா இருவருமே இல்லை. எனக்கு பைத்தியமே பிடிப்பது போல் இருந்தது ஸ்ரீ.

என்னோட அம்மாவே உங்கள கொல்ல பார்த்துருக்காங்க. அந்த ரெக்கார்ட்டர் இருக்கா ஸ்ரீ? அர்ஜூன் கேட்க,

இல்லை. நான் அன்றே அதை அழித்து விட்டேன். ஆன்ட்டி எல்லார் மாதிரியும் தான் யோசித்தாங்க அர்ஜூன். அவங்கள என்ன சொல்றது? எல்லாருக்கும் தன் வம்சம் விருத்தியாகணும்ன்னு தான நினைப்பாங்க. அடுத்த பிள்ளைகளை எப்படி ஏத்துப்பாங்க? என்ற ஸ்ரீ கண்ணீருடன் கையை வயிற்றில் வைத்தாள்.

இல்ல ஸ்ரீ. இது நம்ம குழந்தை. உனக்கு ஏதும் ஆகாது ஸ்ரீ. நான் பார்த்துக்கிறேன் அர்ஜூன் கதறலுடன் பேச,

தேவையில்லை அர்ஜூன். நானே பார்த்துப்பேன். உனக்குநினைவிருக்குல்ல அக்கா நம்மிடன் அனுவை ஒப்படைத்தாங்களே அதே போல் நானும் என்று கண்ணீருடன்..ஜோவை பார்த்தாள். அவன் புரியாமல் ஸ்ரீயை பார்த்தான்.

இங்க வா..என்று அவனை அழைக்க, சாரி தன்னு..எனக்கு நீ இந்த அளவு கஷ்டப்பட்டிருப்பன்னு தெரியாம உன் பின்னாடியே சுற்றி உன்னை கஷ்டப்படுத்திட்டேன் என்று தேம்பி அழுதான்.

எனக்கு பையன் தான் பிறப்பான். உனக்கு அம்மா, அப்பா யாருமே இல்லை. அதிராவுக்கு அம்மா, அப்பா, சொந்தங்கள் எல்லாரும் இருக்காங்க. உன்னை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். நீ எப்படியாவது அவளோட அம்மா, அப்பாவை ஒத்துக்கொள்ள வச்சி அவளை கல்யாணம் பண்ணிக்கோ.. என்னோட அனுவையும், என்னோட என்று அர்ஜூனை பார்த்த ஸ்ரீ ஜோவிடம்..குட்டி அர்ஜூனையும் நல்லா பார்த்துக்கோ..என்று அவள் சொல்ல, அர்ஜூன் உடைந்து அழுதான்.

ஸ்ரீ, உனக்கு ஒன்றும் ஆக விட மாட்டேன் என்று அர்ஜூன் அழ, யாரும் அவனை தடுக்கவில்லை. அவன் தவறு..எதையும் அறிந்து கொள்ளாமல் இருந்தது.

அர்ஜூன், நீ கிளம்பு. என்னோட அனு உயிரோட இருக்கணும்ன்னு நினைக்கிறேன்னு ஸ்ரீ சொல்ல, நான் உங்களை விட்டு போக மாட்டேன் ஸ்ரீ. நான் யாருக்காக இப்படி ஓடி உழைச்சது. நீங்க இல்லாம என்னால அங்க போக முடியாது. நீ சொல்றதும் சரி தான். அனுவும் நீயும் உயிரோட இருக்கணுன்னா..அங்க போக வேண்டாம். எனக்கும் எதுவும் வேண்டாம். இங்கேயே இருப்போம் என்றான் அர்ஜூன்.

எதுக்கு எங்க உயிர வாங்குறதுக்கா? அனு வெளியே வந்தாள்.

செகண்டு ஏஞ்சல் என்னை மன்னிக்க மாட்டாயா? ப்ளீஸ் நீ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ப்ளீஸ் என்று அர்ஜூன் சொல்ல, எனக்கும் தான் அர்ஜூன்..அன்று அம்மா என் கண்ணு முன்னாடி இரத்த இரத்த வாந்தி எடுத்தாங்க. நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா? எனக்கு வாந்தி வருமோன்னு நினைச்சேன். ஆனால் அம்மா..இப்படி செய்வாங்கன்னு எனக்கு தெரியாது என்ற அனு ஸ்ரீயிடம் வந்து, நீயும் வினி அம்மா போல என்னை விட்டு போக நினைச்சுட்டேல்ல..எனக்கும் அந்த பாலை கொடுத்திருந்தால் ரெண்டு பேருமே போயிருக்கலாமே என்றாள். அர்ஜூன் உடைந்து இருவரையும் பார்க்க, நீ பேசியதை கவனிச்சியா? அதிரா என்ன செய்ற? ஸ்ரீ கத்தினாள்.

அனுவை இழுத்து அர்ஜூன் அணைத்துக் கொண்டு அடுத்த முறை இந்த மாதிரி ஏதாவது அம்மாவோட குடிக்கிறதா இருந்தா எனக்கும் கொடுத்துட்டு குடிங்க என்றான் அர்ஜூன் அழுது கொண்டே..

அர்ஜூன், என்ன பேசுற?

ஆமா, நீ திரும்பவும் எங்களை விட்டு போற மாதிரியே பேசுற? அர்ஜூன் கோபமாகவும் சிறுபையன் போல பேச பார்த்த அனு, அவனை விலக்கி விட்டு..எழுந்திரு..என்று கத்தினாள்.

அனு..ஸ்ரீ சத்தமிட, அர்ஜூன் எழுந்து..எனக்கு நீங்க என்ன தண்டனை தந்தாலும் ஏத்துப்பேன் என்றான்.

தன்யா ஸ்ரீயும் அர்ஜூனும் என்னோட அம்மா, அப்பா. என்னால உங்களுக்கு தண்டனை தர முடியாது. எனக்காக நீ ஒன்று மட்டும் செய் போதும். நீயும் நானும் சேர்ந்து..அம்மாவுக்கும் தம்பிக்கும் ஏதும் ஆகாமல் பார்த்துக்கலாம் என்றாள்.

கண்ணீரை துடைத்த அர்ஜூன், என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று அர்ஜூன் சொல்ல, அவனை அவர்களது அறைக்கு இழுத்து செல்ல ஸ்வேதா, அதிரா உதவியுடன் ஸ்ரீ எழுந்து பின் சென்றாள்.

அந்த பையை எடு என்றாள் அனு. அவளுக்கு அர்ஜூன்வாங்கித் தந்த பள்ளிப்பை. சேர் போட்டு ஏறி எடுத்த அர்ஜூன் அனுவிடம் அதை கொடுத்தான். அதிலிருந்த போன் ஒன்றை அவனிடம் கொடுத்து இதுல இருக்கிறதை வைரல் பண்ணு என்றாள்.

ஸ்ரீ அதை வாங்க வர..அம்மா..நீ மட்டும் அப்பா பக்கத்துல வந்த..என்று ஜன்னலை திறந்து அதில் ஏறினாள் அனு.

அனு வேண்டாம். எதுவாக இருந்தாலும் நான் செய்றேன் இப்படி செய்யாத என்று அர்ஜூன் அவளிடம் வர..

வராம சொன்னதை செஞ்சுட்டா. நான் இப்பவே இறங்கிடுவேன் என்றாள் அனு.

ஸ்ரீ மயங்கி விழ, அதிரா அவளை பிடிக்க மற்றவர்கள் அவளை கவனித்தனர். என்னவென்று கூட பாராது..உடனே அதை இணையத்தில் வெளியிட்டான் அர்ஜூன்.

அதை பார்த்து பண்ணலையா? என்று அனு கேட்க, எதுவாக இருந்தாலும் இருக்கட்டும் என்றான்.

முதல்ல அதை பார்த்துட்டு எங்களோட இருக்கிறியான்னு சொல்லு என்றாள் அனு.

அர்ஜூன் அதை பார்க்க, விழித்த ஸ்ரீயும் அவனிடம் வந்தாள். கமலியும் கயலும் பேசியது அனைத்தும், பின் அறையில் அர்ஜூன் வரும் முன் பாலை கொடுத்தது. பின் அவங்க சென்ற பின் அர்ஜூன் வந்தது. ஸ்ரீ வலியில் துடித்ததும் இருக்க, ஸ்ரீ அதிர்ந்து அனுவை பார்த்தாள். நான் பார்த்த படம் தான் உதவியதும்மா..என்று அனு சாதாரணமாக இறங்கினாள்.

அர்ஜூன் எல்லா கஷ்டமும் நமக்கு வரும் முன்னே அவன் அதை வாங்கிய அனைத்துமே எனக்கு நல்லா நினைவில் இருக்கும்மா. இந்த முறை தோற்றது நாம் அல்ல அவன் தான். இப்ப கண்டிப்பா பாட்டிய போலீஸ் பிடிச்சிருவாங்கல்ல..என்று அர்ஜூனிடம் வந்தாள்.

சின்னப் பொண்ணுன்னு பார்த்தா பெரிய காரியமெல்லாம் பண்ற? கிவி கேட்க, அங்கிள் எல்லாமே என் அப்பாவிடமிருந்து தானே வந்தது என்று அனு அர்ஜூனை பார்க்க, அவன் கண்கள் கலங்கியது.

அனு, பாட்டி உள்ளவே இருக்கட்டும். எப்படியும் கயலையும் அரெஸ்ட் பண்ணிடுவாங்க. எல்லாரும் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்று அர்ஜூன் அழுதான்.

என்ன இருந்தாலும் அவன் அம்மா ஆயிற்றே? ஸ்ரீ அர்ஜூனை அணைத்து ஆறுதலாக தட்டிக் கொடுத்துக் கொண்டே அனுவை முறைத்தாள்.

ஸ்ரீ..என்று உப்பிய வயிருடன் தாரிகாவும் அவள் பின் மற்றவர்களும், குட்டீஸ் வந்து அவளையும் அனுவையும் ஒருவழி செய்தனர். அர்ஜூன் தனியே அமர்ந்திருந்தான்.

இப்ப என்ன செய்யப் போறீங்க சார்? ஜோ கேட்க, சார்..என்று வேகமாக அவன் செக்கரட்டரி ஓடி வந்தான்.

என்ன? என்று அர்ஜூன் அவனை பார்க்க, சார்..அம்மா..என்று அழுதான்.

என்ன? என்று அவன் கையிலிருந்த போனை வாங்கி பார்த்து உடைந்து அழுதான் அர்ஜூன். அனைவரும் பதறி அவனிடம் வந்தனர்.

கமலி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி அனைவருக்கும் பரவியது. ஸ்ரீயும் அனுவும் கூட ஊருக்கு கிளம்பினர். அனு மனதில் தப்பு செஞ்சிட்டோமோ என்ற எண்ணம் உதிக்க..அழுது கொண்டே அர்ஜூனிடம் சாரி சொன்னாள். ஸ்ரீ இருவரையும் திட்டினாள்.

அர்ஜூன் அம்மா இறக்கவில்லை. சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. பிழைத்தாலும் அவங்க மன நோயாளி போல் நடந்து கொண்டதால் மனநல காப்பகத்தில் வைக்கப்பட்டார். ஸ்ரீயும் அனுவும் அனைத்தையும் மறந்து அர்ஜூனுடன் இருக்க, அவனுக்கு அவன் அம்மாவுக்கு கிடைத்த தண்டனையாக எண்ணிக் கொண்டாலும் அவன் அவரை பார்க்க சென்று விடுவான் அவன் குடும்பத்துடன். அவரை அவரோட செக்ரட்டரி பார்த்துக் கொண்டார்.

அர்ஜூன் ஸ்ரீ தம்பதியினருக்கு குட்டி அர்ஜூன் பிறக்க அர்னவ் என்று பெயரிட்டனர். அர்னவை பெற்றெடுத்த ஸ்ரீ மரண வாயிலில் கால் வைத்து மீண்டும் அர்ஜூன், அனுவிடம் வந்து சேர்ந்தாள்.

ஸ்ரீக்கு குழந்தை பிறந்த பின் அவளை ஹாஸ்பிட்டலில் வைத்து சிகிச்சை செய்து அவளை குணமாக்கினான் கௌதம். அர்ஜூன் பாட்டியும் இறந்து விட..அங்கிருந்த அனைத்து சொத்துக்களையும் ஊராருக்கு பிரித்து கொடுத்து விட்டனர் நம் காதல் ஜோடிகள். பாட்டி வீடு, தோப்பு வீடு மட்டும் நியாபகார்த்தமாக வைத்திருக்கிறார்கள். அர்ஜூனின் குதிரைகளை அவனே அவனது வீட்டில் வளர்த்து வந்தான். பிளாக்கை மட்டும் காட்டில் விட்டு சென்றான். குதிரைகளை பார்த்துக் கொள்ள ஆட்களை அர்ஜூன் நியமித்தான்.

           நான்கு வருடத்திற்கு பிறகு

அனுவும் அர்னவும் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்பா..இப்ப நீங்க வெளிய வர்றீங்களா? இல்லையா? அனு கத்த, அக்கா இங்கே வா..என்று அர்னவ் அழைக்க அனு அவனுடன் சென்றாள்.

இருவரும் வெளியே இருந்த தண்ணீர் பைப்பை எடுத்து வந்து அர்ஜூனும் ஆபிஸ் அறைக்கு வெளியே போட அறை முழுவதும் தண்ணீரால் நிரம்பி..பரவ.,..ஏஞ்சல் என்று அர்ஜூன் கத்திக் கொண்டே கதவை திறந்து தன் பிள்ளைகளை முறைக்க, குட்டி அர்ஜூன் அர்னவ் தண்ணீரை அர்ஜூன் மீது பீய்ச்சி அடிக்க, அவனும் அவனிடமிருந்து பிடுங்கி அடிக்க மூவருமாக தண்ணீரால் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ அறைக்கதவை திறக்க தண்ணீர் வீட்டுக்குள் வந்தது. என்னடா செய்றீங்க? ஸ்ரீ கத்த, மூவரும் அவளை பார்க்க, அர்ஜூன் பைப்பை கையில் எடுத்து ஏஞ்சல் அப்படியே நில்லு..என்று சொல்ல,

என்னை விட்டுரு..என்று அவள் சொல்லும் போதே தண்ணீரை அவன் மீது அடித்தான்.

அர்ஜூன்..என்று அவள் கோபமாக, யார்டா முதல்ல ஆரம்பித்தது? கேட்க, குட்டீஸ் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி காட்ட, அவள் சினமுடன் அவர்களை விரட்டினாள்.

அர்ஜூன் ஸ்ரீயை பிடித்து, ஓடிருங்கடா..என்று சொல்ல, இருவரும் அவர்கள் அறைக்கு ஓடினர்.

ஏஞ்சல்..அர்ஜூன் அழைக்க, அர்ஜூன் வேலை இருக்கு விடு என்றாள்.

இன்று விடுப்பு தான். நான் மாலை தான் போவேன் என்று அவளை திருப்பினான். அர்ஜூன்..பசங்க தனியா இருப்பாங்க. என்னை விடு ஸ்ரீ சொல்ல,

அனும்மா..நீ பாப்பா கேட்டேல. அப்பா ஏற்பாடு செய்யவா? அர்ஜூன் தலையை வெளியே நீட்டி கேட்க,

டேய்..பாப்பாட்ட என்ன கேக்குற? அர்ஜூனை அடித்தாள் ஸ்ரீ. அர்ஜூன் சும்மா தான் கேட்டான். மறுபடியும் அவளுக்கு கருவை தாங்கும் சக்தி இல்லை என்பதால் குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேசன் செய்து விட்டனர்.

அப்பா..ஓ.கேப்பா. நான் அருக்கு ஆடையை மாற்றி விடுகிறேன் என்று பொறுப்பாக சொல்லி விட்டு அனு அவனை உள்ளே அழைத்து சென்றாள்.

ஸ்ரீ..வா..அர்ஜூனை கட்டிக்கோ, அவன் கையை விரிக்க, போடா லூசு. பாப்பா..வளர்ந்தாலும் சின்ன பிள்ளை தான். நான் போறேன் என்று ஸ்ரீ செல்ல, அவளை இழுத்து கட்டிலில் போட்டு அவன் வேலையை ஆரம்பிக்க, அவளும் இணங்கினாள். நண்பர்கள் சத்தம் கேட்டு இருவரும் ஈரமுடன் வெளியே வந்தனர்.

அர்ஜூன், ஒரே ஜாலி தான் போ..கைரவ் சொல்ல, ஆமா..இவ்வளவு தண்ணியா? எங்கடா பசங்கள? நித்தி கேட்டுக் கொண்டு அவள் பொண்ணுடன் உள்ளே வந்தாள்.

சார், வரலையா அர்ஜூன் கேட்க, வெளிய தான் போனுடன் இருக்கார். வருவார்..

உள்ளே வந்த யாசு மகன் வீட்டின் நிலையை பார்த்து..ஹே..தண்ணியா இருக்கு. வாங்க விளையாடலாம் என்று கீழிருந்த பைப்பை எடுக்க, எங்கடா தண்ணிய காணோம்? என்று அங்கிள் தண்ணிய எங்க? அர்ஜூனிடம்  கேட்டான்.

உன்னோட அப்பா எங்க?

அவருக்கு வேலை இருக்காம்.

மேம்..உங்க க்யூட் பாப்பா எங்க?

அபி கூட வருவாடா.

அவன் வரலையா? கேட்க, வருவான் டா. கம்பெனிய விசயமா போனான். பாப்பா அழுதான்னு தூக்கிட்டு போயிருக்கான் என்றாள் இன்பா. அனைவரும் சோபாவில் ஏறி அமர்ந்திருக்க, அர்ஜூனும் ஸ்ரீயும் வீட்டை துடைத்தனர்.

சற்று நேரத்தில் பசங்க எல்லாரும் வந்து விட சந்தோசமாக பாட்டு ஆட்டம் என்று பொழுதை கழித்தனர். இவ்வாறாக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வீட்டில் கழிய ஆனந்தமுடன் வாழ்ந்தனர் நம் ஸ்ரீயும் அர்ஜூனும் நண்பர்களுடன்.

                         (நிறைவு)

Advertisement