Advertisement

அத்தியாயம் 146

பிரச்சனைகள் முடிந்து ஐந்தாம் வருடம் பிறந்தது. அர்ஜூனும் ஸ்ரீயும் ஒரே வீட்டில் இருந்தாலும் முன்பு போல ஒரே அறையில் இல்லாமல் அர்ஜூன் அவன் அறையில் இருந்தான். கம்பெனி பொறுப்பில் இருந்தாலும் காலையில் ஸ்ரீ, அனுவுடன் ஜாகிங், சாப்பாடு என முடிந்து மூவரும் அர்ஜூனுடன் செல்வர். அனுவை பள்ளியில் விட்டு ஸ்ரீ அதே காரில் வீட்டிற்கு வந்து வேலையை செய்வாள். ஆசைப்பட்டு மாடலிங் செய்தும், அர்ஜூன் அனுவை கவனித்தாலும் அவள் அர்ஜூனை மிஸ் பண்ண ஆரம்பித்தாள் கடந்த மூன்று வருடங்களாக.

மாலையில் ஸ்ரீயும் தாரிகாவும் அனுவை பள்ளியிலிருந்து அழைத்து வந்தனர். அன்று இரவு வெகு நேரமாகியும் அர்ஜூன் வீட்டிற்கு வரவில்லை. ஸ்ரீ அனைவருக்கும் போன் செய்தாள். வந்துருவான் ஸ்ரீ. அவன் எல்லாத்தையும் அபியுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் என்று இன்பா சொல்ல..அபிக்கு போன் செய்தாள். இப்ப தான் ஸ்ரீ அறைக்கு வந்தேன். வந்துருவான் ஸ்ரீ..என்றான் சோர்வுடன் அபி.

அர்ஜூன் கார் சத்தம் கேட்டு ஸ்ரீ அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அர்ஜூன் சோர்வுடன் சோபாவிலே படுத்து விட்டான்.

சாப்பிட வா அர்ஜூன் ஸ்ரீ அழைக்க, இல்ல ஸ்ரீ டயர்டா நான் இன்று மட்டும் உங்க அறையில் தூங்கவா? நாளைக்கு ஆபிஸ் போகலை ஸ்ரீ.

அவனருகே அமர்ந்து நெற்றியை தொட்டு பார்த்தாள். ஒன்றுமில்லை அர்ஜூன். நீ இரு நான் சாப்பிட இங்கே எடுத்து வரவா?

அவன் ஏதும் சொல்லாமல் கண்ணை மூடினான். சாப்பாட்டை எடுத்து வந்து அருகே வைத்து விட்டு அவனது சாக்ஸை கழற்றினாள். அர்ஜூன் கண்விழித்து ஸ்ரீயை பார்த்தான்.

எழுந்து அமரு..

அவன் சாய்ந்து அமரவும் அருகே அமர்ந்து அவனுக்கு ஊட்டி விட, அவன் தனது கைக்கடிகாரம், டை அனைத்தையும் அவிழ்த்துக் கொண்டே ஸ்ரீயை பார்த்தான். அர்ஜூன் சாப்பிட்டு முடிக்க, ஸ்ரீ சாப்பிட்டு கிச்சன் வேலையை முடித்து விட்டு அறைக்கு வந்து பார்த்தாள்.

வெகுநாட்களுக்கு பின் அர்ஜூன் அவர்கள் அறையில் படுத்திருந்தான். ஸ்ரீ அவன் பக்கம் வந்து படுத்துக் கொண்டாள்.

என்ன சொல்லணும் ஸ்ரீ? என்று தூக்கக் கலக்கத்தில் அர்ஜூன் அவள் பக்கம் திரும்பி கேட்டான்.

அர்ஜூன்..என்று தயங்கிய ஸ்ரீ அவனது கையை பிடித்து, அவனருகே நெருங்கி நாம கல்யாணம் பண்ணிக்கலாமா அர்ஜூன்? கேட்க..கண்ணை திறந்து எனர்ஜியுடன் எழுந்து அமர்ந்தான்.

என்ன சொன்ன?

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா…? ஸ்ரீ கேட்க,

ஸ்ரீ என்னை அடியேன்..நம்பாமல் அர்ஜூன் கேட்க, அவன் கன்னத்தில் முத்தமிட்டு, கனவில்லை அர்ஜூன். நான் நிஜமாக தான் கேட்கிறேன் என்றாள்.

ஸ்ரீ..என்று ஆனந்தக் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான். நாளைக்கு வீட்ல சொல்லிடுறேன் என்று அவன் படுக்க, ஸ்ரீயும் அவனருகே படுத்துக் கொண்டாள்.

ஸ்ரீ ஒரு மாசத்துல வச்சுக்கலாமா? இன்னும் உனக்கு நேரம் வேணுமா? அவன் கேட்க, ஸ்ரீ அவனை அணைத்துக் கொண்டு, ஒரு மாதம் ஆகுமா? ஸ்ரீ கேட்க,

அவன் ஆச்சர்யமுடன்.. ஸ்ரீ, என்ன திடீர்ன்னு வேகமா இருக்க?

அர்ஜூன், நீ பக்கத்துல இருந்தாலும் மிஸ் பண்ணுவது போல் உள்ளது என்று கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

அச்சோ, என்ன ஸ்ரீ நீ? இதுக்கெல்லாமா அழுறது? புதுசா பிராஜெக் போய்க்கிட்டு இருக்கு. அக்கா கூட இந்த ஒரு வாரமா என்னோட தான் வந்தாங்க. அக்காவை வீட்டுல வீட்டுட்டு வந்தேன்.

நான் நேரமாக்கியதால் தான் கேட்டியா? அவன் கேட்க, ஸ்ரீ அழுதாள்.

ஏய்..என்ன? பதறி எழுந்து அமர்ந்தான்.

தெரியல அர்ஜூன். அழணும் போல இருக்கு என்று அவனை அணைத்து அழுதாள்.

அம்மா..என்று அனு விழித்து ஸ்ரீ அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூனை பார்த்து..அர்ஜூன் என்று அவளும் அழுது கொண்டே அணைத்தாள்.

அவர்கள் வெறுமையுடன் இருப்பதை உணர்ந்த அர்ஜூன் இருவரையும் தோளில் போட்டுக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டு..இனி சீக்கிரம் வர பார்க்கிறேன் என்று ஸ்ரீயை பார்த்தான்.

அர்ஜூன், நீ எப்போதும் எங்களோட இருப்பேல்ல ஸ்ரீ திடீரென கேட்டாள். அவன் யோசனையுடன்..என்னோட உயிரை விட்டு நான் வாழ முடியுமா ஸ்ரீ? அவன் கேட்க..தேங்க்ஸ் அர்ஜூன் என்று அவன் தோளில் சாய்ந்தவாறே இருவரும் தூங்கினர். ஸ்ரீயின் கேள்வி அவனை சிந்திக்க வைத்தது.

கண்டிப்பா ஏதோ இருக்கு என்று நன்றாக அவர்கள் தூங்கிய பின் இரண்டு மணிக்கு தாரிகாவிற்கு போன் செய்ய..அவள் திட்டிக் கொண்டே போனை எடுத்து, தூங்க விடுங்களேன்டா..

நான் கேட்பதற்கு பதில் சொல்லிட்டு தூங்கு என்றான் அர்ஜூன். தாரிகா நன்றாக விழித்து எழுந்து அமர்ந்தாள்.

எதுவும் பிரச்சனையா அண்ணா?

நான் தான் உன்னிடம் கேட்கணும்? ஸ்ரீ கேட்டதை சொல்லி விட்டு, ஸ்ரீயை யாரும் ஏதும் சொன்னாங்களா? என்று கேட்டான்.

தாரிகா அமைதியாக இருந்தாள்.

ஏய்..சொல்லு..என்றான் கோபமாக.

அம்மா..கம்பெனிக்கு போனோம். அங்க வேலை பார்க்குற லேடி ஒருத்தவங்க ஸ்ரீயிடம்…ஸ்ரீயிடம்.. நேராகவே..என்று தயங்கினாள்.

ஒழுங்கா சொல்லு..கொஞ்சம் ஓவரா பேசிட்டாங்க.

நீ என்ன செஞ்சுக்கிட்டு இருந்த?

நான் பேச நினைக்கும் முன் அவள் தான் என் கையை பிடித்து வேண்டாம்ன்னு தடுத்துட்டா.

என்ன சொன்னாங்க?

அர்ஜூன் நீங்க ஒரே வீட்ல இருக்குறீங்களே? அதை தான் பேசினாங்க.

என்ன சொன்னாங்க?

வேண்டாமே அர்ஜூன்.

சொல்றியா? இல்லையா? அவன் கத்தினான்.

அசிங்கமா பேசுனாங்க. என்னால அந்த மாதிரி சொல்ல கூட முடியலன்னு அழுதாள்.

முதல்லவே சொல்ல மாட்டியா?

அர்ஜூன், இதை உன்னிடம் சொல்ல எனக்கு தைரியம் வரல.

அதான் கல்யாணம் பண்ணிக்கலாம்மான்னு கேட்டாளா? அர்ஜூன் கேட்க, என்ன? கேட்டுட்டாளா? தாரிகா மகிழ்ச்சியுடன் சொன்னாள். அர்ஜூன் குரல் கம்மி இருக்க,

ஏய், லூசு அண்ணா. அவள தப்பாவே நினைச்சுக்கிட்டு இரு. அவ..இந்த ஒரு வருசமா உன்னிடம் கேட்க பிராக்டிஸ் பண்ணிகிட்டு இருக்கா? ஆனால் கல்யாணத்தை பத்தி பேசவே பயப்பட்டா, அந்தம்மா..புண்ணியம் தான் சொல்லிட்டான்னு நினைக்கிறேன் தாரிகா சொல்ல,

அவ விருப்பப்பட்டு கேக்கலையே தாரி?

டேய், அவளோட கஷ்டம் தெரிஞ்சும் இப்படி நினைக்கிற? அவள் என்றோ உன்னிடம் கேட்க வேண்டியது. விருப்பப்படாமலா கேட்க நினைப்பாள்?

ம்ம்..சரியா தான் சொல்ற?

அவங்க யாருன்னு சொல்லு..அர்ஜூன் கேட்க, அதை விடுடா.

ஏய்..லூசு அதை நினைச்சு கஷ்டப்படுவா.

தூங்கிக்கிட்டு தான இருக்கா. நாளைக்கு கல்யாண தேதியை சொல்லு..எல்லாத்தையும் மறந்துடுவா. அப்புறம் அர்ஜூன்..அர்ஜூன்னு பின்னாடியே வருவா? என்று தாரிகா கிண்டலடிக்க, அர்ஜூன் வெட்கப்புன்னகை புரிந்தான்.

இதுக்காக தானே காத்திருந்தேன் என்று தாரிகா படுக்கையில் ஏறி குதித்துக் கொண்டு, நானும் சீனியரை கல்யாணம் பண்ணிக்க போறேனே?

தாரி..கவின் இப்ப தான் டியூட்டில்ல சேர்ந்திருக்கான். நல்லாத நடக்குற மாதிரி ரொம்ப சந்தோசமா இருக்கு என்றான் அர்ஜூன்.

போ..தூங்கு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உன்னை காணும்ன்னு அழுத மாதிரி பேசுனா..

அழுதாளா?

ஆமா..நீ வீட்டிற்கு போனப்ப அவளை பார்க்கலையா? டயர்ட்டுல சோபாவிலே படுத்துட்டேன். அவள் தான் ஊட்டி விட்டாள். நல்லா நடத்துங்கடா..

இத்தனை நாளா எல்லார் மேரேஜூக்கும் போய் வேடிக்கை பார்த்து டயர்டாகிடுச்சு. மேகா கல்யாணம் மாதிரி கிரிட்டிக்கல் இருக்காதுல்ல அர்ஜூன்.

ஓய்..அக்கான்னு சொல்லு.

வர மாட்டேங்குது அர்ஜூன்.

இரு வீட்டிலும் கல்யாணம். நல்ல வேலை தாலி ஊர்ல வச்சே கட்டிட்டாங்க. பாவி அவன் கல்யாணத்துக்கு அலைந்து அலைந்தே ஒரு வழி பண்ணிட்டாங்க. தாரி நீ தூங்கு. நானும் தூங்குகிறேன் என்று அறைக்கு சென்று, எனக்காக நிறைய தாங்கிட்டேல்ல ஸ்ரீ. நீ ஆசைப்படுவது போல் ஒரே வாரத்திலே முடிவு செய்ய வைக்கிறேன் என்ற அவளை அணைத்து தூங்கிய அர்ஜூன் மறுநாள் வேகமாக எழுந்து..பாட்டி, அவன் அம்மா..ப்ரெண்ட்ஸ்.. அவங்க பெற்றோர் அனைவருக்கும் பேசி தேதியை முடிவு செய்தனர். இரு வாரத்திற்கு பின் திருமணம் என முடிவெடுக்க, நண்பர்கள் அனைவரும் காலையிலே ஸ்ரீயை பார்க்க வந்து..

தெய்வமே! நல்ல முடிவு எடுத்திருக்கீங்க என்று ஆளாளுக்கு ஸ்ரீயிடம் கூற, எல்லாரும் என்ன பண்றீங்க? இரண்டு வாரத்துல நம்ம எல்லாருக்கும் கல்யாணம் அபி கூறி விட்டு இன்பாவை பார்க்க,

நல்ல வேலை நான் கிழவியாகும் முன்னேவாது ஓ.கே சொல்லிட்ட என்றாள் இன்பா.

எட்டு ஜோடிகளுக்கு சேர்ந்தவாறு ஊரில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்ய. இச்செய்தி உலகெங்கும் பரவியது.

அர்ஜூன்- தன்யா ஸ்ரீ

அகிலன்- பவதாரணி

கவின்- தாரிகா

அபினவ்- இன்பா

சைலேஷ்- நித்தி

மாதவ்- யாசு

கைரவ்- அனிகா

தருண்- இதயா

என பெயர்களுடன் புகைப்படங்களும் இருந்தன. ஊரில் அனைவரும் பிஸியாக சுற்ற, நம் ஜோடிகள் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருந்தனர்.

நேற்று நடந்த நிச்சய விழாவை பற்றி ஊரார் பேசியதை இதயா சொல்லிக் கொண்டிருந்தாள். திருமண ஜோடிகளே நடனமாடியது அனைவரையும் பிரம்மிப்புடன்..பேச வைத்ததாம் எனக் கூறி சிரித்தனர்.

நிவாஸ் அங்கே வந்து, ஸ்ரீ, பவியை பார்த்து கண்ணீருடன் நின்றான். ஆருத்ரா அப்பா நெருக்கடி செய்ய வேறு வழியில்லாமல் முன்னமே நிவாஸ் ஆருத்ராவை திருமணம் செய்து கொண்டான்.

நிவி..உத்ரா எங்க?

ஆருகிட்ட இருக்கா நிவாஸ் சொல்ல, உனக்கெல்லாம் பாப்பா இருக்கா இன்பா வருத்தமுடன் சொல்ல, உங்களுக்கும் இனி..அவன் பேச,

டேய்..இங்க என்ன பேசிக்கிட்டு நிக்குற? போ.. மாப்பிள்ளைகளை அழைச்சிட்டு போ என பெரியத்தையும் காயத்ரியும் அவனை அங்கிருந்து பத்தி விட்டு பொண்ணுகளை அழைத்து வந்தனர்.

தெரிந்தவர் தெரியாதவர் என அனைவரும் அத்திருமணவிழாவிற்கு வந்தனர். அர்ஜூன் பாட்டிக்கெல்லாம் பெரும் சந்தோசம்..

பசங்க முதலில் மேடை ஏற, யாரும் கண்ணை அசைக்காமல் அவர்களை பார்த்தனர். ஒவ்வொருவரையும் பார்க்கும் அவர்களது பெற்றோர் சொந்த பந்தங்கள் மகிழ்ச்சியுடன் ஆனந்தக்கண்ணீருடன் அவர்களை பார்க்க, பொண்ணுங்களை பார்க்கும் அனைவருக்கும் தேவதைகள் கீழிறங்கி மணக்கோலம் பூண்டது போல உணர்ந்தனர்.

தெளிந்த வெய்யோன் சுடரொளி, பாறையில் அடித்து மோதும் அலைக்கூட்டம், கீச்சிடும் பறவைகள் என ரம்மியமான காலைப்பொழுதில் தன் இணைகளின் அழகான சங்கு கழுத்தில் பொன் தாலியை கட்டினர் நம் ஆண்தேவதைகள்.

அனைவரும் அக்னியை வலம் வர இணைகளின் கை கோர்த்து சுற்றி வந்தனர். அனு அர்ஜூன் ஸ்ரீ கையை பிடித்து அவர்களுடன் இணைந்து நடந்தாள். நம் அனு மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

அனைத்து சடங்குகளும் முடிந்து அனைவரும் அவர்களை வாழ்த்திச் சென்றனர். வாழ்த்துகள் குவிந்த வண்ணமிருந்தது. மாலை நேரம் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அர்ஜூனுக்கு அவன் கம்பெனியிலிருந்து போன் வர ஸ்ரீ அவனை பார்த்தாள்.

டேய், இன்றைக்குமா? அபி கேட்க, நான் பேசிட்டு வாரேன் ஸ்ரீ என்று அபியை பார்த்துக் கொண்டே எழுந்து போனை காதில் வைத்தான். ஸ்ரீயை பார்த்து, உன்னிடம் பேசணுமாம்? அர்ஜூன் சொல்ல, ராஜவேலு தான்..வரமுடியாத காரணத்தால் வாழ்த்தை கூறினார். அவள் புன்னகைத்துக் கொண்டே அவரிடம் பேச..அர்ஜூன் அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான்.

அர்ஜூன்..போதும். வழியுது துடைச்சுக்கோ..என்றான். அனைவரும் சிரித்தனர். ஸ்ரீ அவனை பார்க்க, ஒன்றுமில்லை..ஷூ..ஷூ..என்றான்.

டேய், எங்கள பார்த்தா எப்படி தெரியுது? என்று நண்பர்களின் கேளிக்கையில் ஒன்றி அனைவரும் மகிழ்ந்தனர்.

இரவு நேரம்..அனைவரும் மாப்பிள்ளைகள் வீட்டிற்கு செல்ல, அர்ஜூன் பாட்டி வீட்டில் அனுவை அஞ்சனா அழைத்து சென்றார். அர்ஜூன் அவனறையில் இருக்க, பெரியவர்கள் அனைவரும் பாட்டியின் தோப்பு வீட்டில் இருந்தனர்.

ஸ்ரீயை பாட்டியும் கமலியும் அர்ஜூன் அறைக்கு அனுப்பவும் அவள் கதவை திறந்த நிமிடம் பயந்து கத்தினாள்.

ஏய்..என்னாச்சு? கமலி ஓடி வந்தார். அம்மா..சும்மா பயமுறுத்தினேன். பயந்துட்டா என்று அர்ஜூன் சொல்ல, எங்கடா அவ?

பயந்து கத்திக் கொண்டே சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் ஸ்ரீ. தலையில் அடித்துக் கொண்டு கமலி கீழே சென்றார்.

அர்ஜூன் ஸ்ரீ தோளில் கை வைக்க, அவள் கத்துவதற்குள்.. அவள் வாயை அடைத்து அவளை தூக்கினான். அர்ஜூன் விடு. நான் கீழே இறங்கிக்கிறேன் என்று பதட்டமாக அவன் புருவத்தை சுருக்கி பார்த்தான்.

அர்ஜூன்..கொஞ்சம் டைம் எடுத்துக்கலாமா? ஸ்ரீ கேட்க, அவன் அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் பால்கனிக்கு சென்று நிலவை வெறித்துக் கொண்டிருந்தான்.

அர்ஜூன்..ஸ்ரீ அழைக்க, சொல்லு ஸ்ரீ? என்று கேட்டான். அவள் அவனை பின்னிருந்து அணைக்க, அவன் ஏதும் பேசாமல் அமைதியாக நின்றான்.

கோபமா இருக்கியா அர்ஜூன்? ஸ்ரீ கேட்க,

இல்லையே ஸ்ரீ? எதுக்கு கோபப்படப் போறேன்?

உனக்கு டயர்டா இருக்கா? என்று அர்ஜூன் அவனாகவே கேட்டுக் கொண்டே பால்கனி கதவை அடைத்து விட்டு படுக்கையில் சென்று ஒரு பக்கமாக அவளை பார்க்காதவாறு படுத்தான்.

அர்ஜூன்..ஸ்ரீ அழைக்க, அர்ஜூன் திரும்பாமல் சொல்லு ஸ்ரீ என்றான்.

அவள் அவனருகே படுத்துக் கொண்டாள். என்னால..என்று தயங்கினாள் ஸ்ரீ.

கையை எடுத்துட்டு தூங்கு என்று முதல் முறையாக அவள் கையை அவன் மீதிருந்து எடுத்துவிட, அவளால் ஏத்துக்க முடியாமல் அழுது கொண்டே..என்னை எடுத்துக்கோ அர்ஜூன் என்றாள்.

சட்டென திரும்பிய அர்ஜூன். நான் கட்டாயப்படுத்தலை. நீ தூங்கு என்றான்.

இல்ல அர்ஜூன். நான் நிஜமா தான் சொல்றேன்.

உனக்கு விருப்பமில்லாமல் என் விரல் கூட உன் மீது படாது ஸ்ரீ.

வேண்டாம்ன்னு எதையும் மீன் பண்ணி சொல்லலை அர்ஜூன். ஒருமாதிரி டயர்டா இருந்தது அர்ஜூன்.

அவள் பக்கம் படுத்து அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தான். என்னோட பொண்டாட்டி ஆகிட்ட ஸ்ரீ. இதுக்கு மேல என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்துவது ரொம்ப சிரமம். அதனால தான் உன் கையை எடுத்து விட்டேன் அர்ஜூன் சொல்ல, அவனை நெருங்கிய ஸ்ரீ அவனது சட்டை பட்டனை கழற்றினாள்.

நோ..ஸ்ரீ..நீ தூங்கு அவன் சொல்ல, அர்ஜூனை இறுக அணைத்து, எனக்கு அம்மா, அப்பாவை பார்க்கணும் போல இருக்கு.

வா..என்று அவன் எழ, அவள் துக்க சொல்லி கையை தூக்கினாள்.

அர்ஜூன் அவளை தூக்கிக் கொண்டு பால்கனியிடம் வந்து ஸ்ரீ அம்மா அப்பாவிடம் பேசினான். அவளும் பேசினாள். ஸ்ரீ அர்ஜூனை பார்த்துக் கொண்டிருக்க..உள்ள போகலாமா? அர்ஜூன் கேட்டான். அவள் தலையசைத்தாள்.

தூங்கு ஸ்ரீ..என்று நகர்ந்து படுத்தான். எழுந்த ஸ்ரீ அவன் முன் வந்து நின்றாள்.

அர்ஜூன் அவளை பார்த்து எழுந்தான். அர்ஜூனை நெருங்கி அவனது சர்ட்டில் கை வைத்தாள். அர்ஜூன் அவளது கையை பிடித்து அவன் கன்னத்தில் வைத்து கண்ணை மூடி காதலை உணர்ந்தான்.

ஸ்ரீ அவன் கையை பிடித்து அவளது இடையில் வைத்தாள். அவனுள் இருந்த மோக உணர்வுகள் தீயாய் எழுந்து ஸ்ரீயை அடைய துடித்து அவள் ஆடைகளை களைந்து முத்தமிட, மேலும் உணர்வு பொங்க அவளை படுக்கையில் போட்டு அவள் மீது படர்ந்தான். ஸ்ரீ பயம் அற்று சுகவதையில் அர்ஜூன்..அர்ஜூன்..என முணங்கியவள் மாமா..மாமா..என அழைக்க அர்ஜூனுக்கு இன்னும் அவள் மீது ஆசை கூடி இருவரும் ஒருவராயினர். இரவு கலவிப்போரில் இருந்து காலையில் ஸ்ரீ எழுந்து அர்ஜூனை பார்த்து நெற்றியில் முத்தமிட்டாள்.

அர்ஜூன் எழுந்து, ஸ்ரீ..இன்னும் ஒரு முறை கேட்க, ச்சீ..போடா..இப்பவே பாப்பா எழுந்திருப்பா என்ற ஸ்ரீ எழ, அர்ஜூன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, மாமான்னு ஒரே ஒரு முறை சொல்லேன்..என்றான் கொஞ்சலாக.

அவன் கன்னத்தில் கடித்த ஸ்ரீ..சொல்ல மாட்டேனே? என்று குளியலறைக்கு ஓட, அர்ஜூனும் பின்னே ஓடி அங்கே ரொமான்ஸ் செய்து கொண்டிருக்க.. சீக்கிரம் வாங்க. கோவிலுக்கு போகணும் என்று கமலி சத்தம் கேட்டு,

அர்ஜூன் அத்தை வர சொல்றாங்க?

கொஞ்ச நேரம் ஸ்ரீ போகலாம் என்றான். ஸ்ரீ தயக்கமில்லாமல் அர்ஜூனுடன் நெருக்கமாகவே இருந்தாள்.

இரண்டு வருடம் கழிந்தது.

அர்ஜூன் கம்பெனியில் இருக்க, அர்ஜூன்..அர்ஜூன்..என்று நந்து மூச்சிறைக்க ஓடி வந்து, ஸ்ரீ கிடச்சிட்டாடா என்றான். அர்ஜூன் வேகமாக எழுந்து தன் கோர்ட்டை போட்டுக் கொண்டு, ஸ்ரீ அணிவித்த மோதிரம், செயின் அனைத்தையும் பார்த்துக் கொண்டு, எப்படி உன்னால என்னை விட்டு போக முடிந்தது? இப்பவே வாரேன் ஸ்ரீ..என்று நந்துவுடன் காரில் கிளம்பினான்.

ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் பகுதியில் மாடலிங் நிறுவனத்தில்  போட்டோஷூட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.

ஹே..ஜோசல்..தன்னு எங்க போயிருக்கா? அந்த கம்பெனி நிறுவி சத்தமிட்ட, மாடல்ஸை தாயார் செய்து கொண்டிருந்தாள் மேம்.

நான் அழைச்சிட்டு வாரேன் என்று ஓடினான். சீக்கிரம் வா..பெரிய விருந்தாளி வர்றாங்க? எல்லாரையும் தயார் படுத்துங்க..சத்தமிட்டு,

ஸ்டேஜை தயார் செய்யுங்க..மேம் தன்னு பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கா.

அவளே எத்தனைய பார்ப்பா. வேற ஆளுங்களே இல்லையா?

ஓ..சாரி மேம். வந்துட்டேன் என்று நம் தன்யா ஸ்ரீ ஓடி வர, ஏய்..மெதுவா வா. எங்காவது இடிச்சிக்காத என்று நிறுவி கூற,

பாய்ஸ், கம் பாஸ்ட். ஸ்டார் நௌ..என்று மேம் நீங்க உட்காருங்க. ஐந்தே நிமிஷத்தில் நம்ம பசங்க தயார் செஞ்சுசிவாங்க என்று அவர்களிடம் அதிகாரமாக பேசி வேலையை முடித்து அமர்ந்தான்.

மேம், கிரீன் டீ? ஒருவன் ஸ்ரீயிடம் நீட்ட, அவள் அவனை பார்த்தாள். ஸ்வேதா மேம் குடுக்க சொன்னாங்க என்று அவன் சொல்ல, அந்த நிறுவி அருகே வந்து, எடுத்துக்கோ தன்னு..

“தேங்க்ஸ் மேம்” என்று குடித்துக் கொண்டே, கெஸ்ட் யாரு மேம்? கேட்டான்.

“டீ. ஏ ப்ரெண்ட்ஸ் குரூப்ஸ்” முதலாளி அர்ஜூன்..என்றாள்.

என்ன? என்று அதிர்ந்து, மேம்..ஆர்கனைஸ்க்கு மட்டும் யாராவது பண்ண சொல்லுங்க. ப்ளீஸ் எனக்கு சோர்வா இருக்கு என்று பாவமாக கேட்டாள்.

சரி தன்னு, நானே பார்த்துக்கிறேன் என்று குடித்துக் கொண்டே, சார் எப்ப வர்றார்? கேட்டாள்.

அரைமணி நேரத்துல வந்திருவார். அவருக்கு தங்க ரூம்ஸ் அரேஞ் பண்ணனும். அதை மட்டும் முடிக்கிறியா?

ஓ.கே மேம். முடிச்சிட்டு வீட்டுக்கு போகலாமா? ஸ்ரீ கேட்க, நோ..நோ..உன்னை அவருக்கு இன்ட்ரோ குடுக்கணுமே?

என்னை எதுக்கு மேம்? அனுவும் இன்று சீக்கிரம் வந்திருவா. நான் அவளை பார்க்க போகணும். வெளிய கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்கேன்.

சார் எத்தனை நாள் தங்குவார்? அவள் கேட்க, இதெல்லாம் எதுக்கு கேக்குற?

ஓ.கே நீங்க சொல்ல வேண்டாம். நான் கிளம்புகிறேன் என்று அவள் செல்ல, தன்னு எங்க போற? ஜோசல் கேட்டான்.

என்னோட வேலை முடிஞ்சது. நான் கிளம்புறேன்.

கெஸ்ட் யாருன்னு உனக்கு தெரியுமா? இந்தியாவில் அவர் கம்பெனி இல்லாத இடமே இல்லை. பிசினஸில் கொடிகட்டிப் பறந்த அவர் அம்மாவையும் விஞ்சிய பெரிய தல..என்று அர்ஜூனை பெருமையாக பேச..

மேம் சொன்னாங்க. நான் கிளம்புறேன்.

ஏய், நான் எவ்வளவு பெரிய விசயம் சொல்லிட்டு இருக்கேன். நீ அவரை பார்க்கலை. நீ அவரோட பிக் பேன் தான?

அவன் மட்டும் என்னை பார்க்கவே கூடாது என்று மனதில் நினைத்த ஸ்ரீ..அதுக்காக என்னோட அனுவை விட முடியுமா? கோபமாக கேட்க, நான் என்ன சொன்னேன்னு இப்படி கோபப்படுற? நானும் வரவா? ஜோசல் கேட்க,

எங்க பக்கத்துல வர நினைச்ச கொன்றுவேன் பார்த்துக்கோ என்று மிரட்டி ஸ்ரீ செல்ல..அங்கே கூட்டமாக இருந்தது. தூரமாக நின்று வேடிக்கை பார்த்தாள்.

பெரிய மாடல் ஒரு பொண்ணு கையில் பூங்கொத்தை கொடுத்து நிற்க வைத்திருந்தனர். அர்ஜூனும் அவன் அசிஸ்டென்ட்டும் காரிலிருந்து இறங்க, ஸ்ரீ அர்ஜூனை பார்த்து, பெரிய பேனர் பின் மறைந்து நின்று அவனை பார்த்தாள். அந்த பொண்ணு அவனிடம் பூங்கொத்தை நீட்டி வெல்கம் சார் என்றாள்.

சாருக்கு பொண்ணுங்க பூங்கொத்தை கொடுத்தால் பிடிக்காது என்று அசிஸ்டென்ட் சொல்ல, ஸ்வேதா அர்ஜூனை பார்த்து வெல்கம் சார்..என்று ஜோசலை இடித்தார்.

அவனும் வெல்கம் சார் என்று பூங்கொத்தை நீட்ட, அர்ஜூன் புன்னகையுடன் வாங்கிக் கொண்டு கண்களால் அவ்விடத்தை அளவெடுத்துக் கொண்டே சென்றான்.

ஓடி வந்து கொண்டிருந்த ஒருவன் ஸ்ரீயை இடித்து விட, பேனரை தட்டி விட்டு ஸ்ரீ கீழே விழுந்தாள். சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினர். அர்ஜூனும் அவ்விடம் பார்க்க மஞ்சல் நிற திரைச்சீலை அவளை மறைத்தது. உருவம் மட்டும் தெரிய, அர்ஜூன் அவளை பார்த்து ஓர் அடி எடுத்து வைக்க, நந்து கூறியது அவனுக்கு நினைவிற்கு வந்தது.

ஸ்ரீயை தெரியாதது போல் காட்டி சரியான சமயத்தில் பேசு அர்ஜூன் என்று அவன் சொல்லி அனுப்பியதை நினைத்து பார்த்துக் கொண்டே நின்றான்.

தன்னு..என்று ஜோசல் பதற, ஏய்..போ..அவளுக்கு கெல்ப் பண்ணு ஸ்வேதா அவன் காதில் சொல்ல, அர்ஜூனை கண்டுகொள்ளாமல் ஸ்ரீயிடம் ஓடினான்.

சார், இவளுக்கு வேற வேலையே இல்லை. எல்லாரும் அவளையே பார்க்கணும்ன்னு நினைச்சு ஏதாவது செய்வா என்று அந்த மாடல் பொண்ணு கூற, ரா..சும்மா இரு என்று ஸ்வேதா அர்ஜூனிடம், அப்படியெல்லாம் இல்லை… இங்கிருக்கும் அனைத்தையும் அவள் தான் அரேஜ் பண்ணா. இவள் தான் ஆர்கனைஸ் பண்றதா இருந்தது. ஆனால் அவளுக்கு முக்கியமான வேலை வந்துருச்சு. சார்..உங்களோட பெரிய ஃபேன் சார். நீங்க வாங்க..என்று அவனை அழைத்து செல்ல அர்ஜூன் புன்னகைத்தான்.

நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது. நடந்து கொண்டிருக்க, ஸ்ரீ ஸ்வேதாவிற்கு போன் செய்தாள்.

தன்னு, நீ ஓ.கே தானே? ஸ்வேதா கேட்க, அர்ஜூன் அவளை பார்த்தான்.

“ஐ அம் ஓ.கே மேம்” சாருக்கு அறை தயாராகிடுச்சு என்று அவள் பேச, அர்ஜூன் அருகே தான் இருந்தான். ஓ.கே தன்னு..நீ பேபிய  பார்த்துக்கோ..

மேம்..என்று ஸ்ரீ இழுக்க, சொல்லு தன்னு?

நாளைக்கு ஒரு நாள் விடுப்பு குடுங்களேன் ஸ்ரீ கேட்க, வாட்? இங்க எவ்வளவு வேலை இருக்கு. லீவ் கேக்குற?

எனக்கு திருமண நாள்..ப்ளீஸ் மேம். மறுநாள் எல்லாத்தையும் முடிச்சு தாரேன்.

ஓ..அப்படியா? மறுநாள் எப்படி முடியும்? செலக்ட் ஆகுற மாடலுக்கு பார்ட்டிக்கு அரேஜ் பண்ணனும்.

மேம் அதிரா பார்த்துப்பா. நான் வேண்டுமானால் பேசட்டுமா? ஸ்ரீ கேட்க,

தன்னு..அவள் செலக்ட் ஆனா யார் பார்ப்பா?

கிவி இருக்கான்ல.

கிவியா? அவனுக்கு பேச மட்டும் தான் வரும். அரேஜ்மென்ட்டை எப்படி பார்ப்பான்?

நோ..வொரி மேம். நம்ம பசங்களுக்கு இன்ஸ்ட்ரெக்சனை கொடுத்துடுறேன். கிவியிடமும் நான் சொல்றேன். அவன் பார்த்துப்பான். மேம்..ஜோ இருந்தா அவனை வெளியே வர சொல்லுங்க மேம். அவனிடம் பேசணும் என்றாள்.

ஸ்வேதா அவனை தேட, அவன் மேடையை பார்த்து நின்றிருந்தான்.

தன்னு நான் வர சொல்றேன். பக்கத்துல இருக்கியா? அவனுக்கும் வேலை இருக்கு.

அவனை வெளியே வர சொல்லுங்க. நான் பேசிக்கிறேன்.

வெளிய தான் இருக்கியா? மேம் பாப்பாவை அழைத்து வந்தேன். அவனை வர சொல்லுங்க.

கொஞ்ச நேரத்துல முடிஞ்சிடும். நானும் வாரேன்.

மேம்..கெஸ்ட்ட கவனிக்கணும்ல்ல. அதுலயும் அந்த சிடுமூஞ்சி நடிகை பாவனா..ஏதாவது குறை சொல்லி பசங்கள கஷ்டப்படுத்துவா. சமாளிக்கணும்ல..என்றாள்.

சரியா சொன்ன தன்னு? சரியான சிடுமூஞ்சி என்று ஸ்வேதா பாவனாவை பார்க்க, அர்ஜூனும் அந்த பொண்ணை பார்த்தான். அந்த பொண்ணு அர்ஜூனை பார்த்து பல்லை காட்ட அவன் முறைத்து விட்டு திரும்பிக் கொண்டான்.

மேம்..பார்த்துக்கோங்க. நாங்க போயிட்டு வந்து கால் பண்ணுறோம் என்றாள்.

ஹாய்..ஆன்ட்டி, அம்மா கூட வெளிய போறேன். நீங்க வர்றீங்களா? அனு கேட்க, நோ..பேபி. நீங்க போய்ட்டு ஆன்ட்டிக்கு எப்பொழுதும் போல் மோமோஸ் வாங்கிட்டு வாங்க.

எஸ், ஆன்ட்டி..என்று சொல்ல, ஸ்ரீ போனை வாங்கி அப்புறம் கால் பண்றேன் மேம் என்று போனை வைத்தாள்.

ஸ்வேதா போன் செய்து, ஜோசலை அழைத்தாள். ஸ்டேஜை பார்த்துக் கொண்டே ஸ்வேதாவிடம் வந்து குனிந்தான். தன்னு..வெளிய இருக்கா. உன்னை பார்க்கணும்ன்னு சொன்னா கெஸ்ட்டுக்கு கிப்ட்ஸ் ரெடியா இருக்குல்ல.

இருக்கு மேம் என்ற அவன் பார்வை ஸ்டேஜில் இருக்க, இங்க தான் பேசிட்டு இருக்கேன். அங்க என்ன பார்வை? அதி வர்றா? இப்ப மட்டும் நான் அவளை பார்க்கல..தன்னு என்னை கொன்றுவா?

ஏன்டா, அதிக்கு நான் தன்னுவிடம் கமெண்டு கொடுக்கணுமாம் என்று அவன் சொல்ல, ஸ்வேதா புன்னகையுடன்..உனக்கு புரியலையா ஜோ? ஸ்வேதா கேட்க, என்ன புரியலையா மேம்?

உன்னை தன்னு திட்டுறதுக்கு சரியான காரணம் இது தான்? நீயெல்லாம் எப்ப தான் புரிஞ்சுக்கப் போறியோ?

திட்ட தான் வர சொன்னீங்களா?

இல்லை..நாளை தன்னுவுக்கு வெட்டிங் டேவாம். கிப்ட் வாங்கிடு.

போங்க மேம். நான் பிரப்போஸ் பண்ண நினைச்சா..வெட்டிங் டேன்னு என்னை கிப்ட் வாங்க சொல்றீங்க? என்றவுடன் அர்ஜூன் அவனை முறைத்து பார்த்தான்.

தேவையில்லாம அவகிட்ட அடி வாங்கிடாதடா.

நான் என்னோட குட்டி டார்லிங்கிற்கு பிரபோஸ் செய்து தன்னுவை ஒத்துக்க வைப்பேன்.

சொன்னா நீ கேட்க மாட்ட? நீ என்னமும் செய். நான் அதிராவிடம் பேசிக்கிறேன்.

ஓ.கே..

இப்ப அவள பார்க்க போ. வெளிய தான் இருக்கா. டேய்..ஜொல்லு விட்டுட்டு அவ பின்னாடியே போயிறாத. உனக்கு வேலை நிறைய இருக்கு. போற.. என்னன்னு கேட்குற வர்ற

சரி. இந்தாங்க..என்று அவன் கையிலிருந்த புரோகிராம் லிஸ்ட்டை கையில் கொடுத்து சென்றான்.

கெஸ்ட் தங்குற இடத்தை கூறி, நீயும் ஒரு முறை எல்லாமே சரியா இருக்கான்னு பார்த்திரு..என்று ஸ்ரீ கூற,

தன்னு..பாவனா அர்ஜூன் சாரையே பார்த்துக்கிட்டு இருக்கா அவன் சொல்ல, அனு அவளை பார்த்தாள்.

சரி கிளம்பு..என்று அவனை அனுப்பி விட்டு, போகலாமா அனு? ஸ்ரீ கேட்க,

அம்மா, அர்ஜூன் அப்பாவா? கோபமாக கேட்டாள்.

இல்லடா. அவனாக இருந்தால் இங்கே வந்திருப்பேனா? ஸ்ரீ கேட்க, சரி போகலாம் என்று கம்பெனியையே பார்த்துக் கொண்டு சென்றாள் அனு.

மறு நாளும் வந்தது காலையிலே எழுந்து அனுவுடன் கோவிலுக்கு சென்று வந்தாள் ஸ்ரீ. அர்ஜூனும் அங்கே தான் வந்திருப்பான். ஆனால் இருவருமே பார்த்துக் கொள்ளவில்லை.

அனுவை பள்ளியில் விட்டு அவள் வேலை பார்க்கும் இடத்திற்கு மறைந்து மறைந்து சென்றாள்.

தன்னு..என்று அதிரா ஓடி வந்து அவளை அணைத்து, வெட்டிங் டே வாழ்த்துக்கள் என்று, ஹே..கெஸ்ட்டை பார்த்தியா? கேட்டாள்.

ம்ம்..பார்த்தேன் என்றாள் ஸ்ரீ சோகமாக.

உன்னோட அர்ஜூனிடம் வித்தியாசம் தெரியுதா? அவள் கேட்க, வாய மூடு யாரும் கேட்டு விடாமல் என்று அவளை வெளியே அழைத்து வந்து தனியே பேசினாள்.

எனக்கு பயமா இருக்கு அதிரா. அனு மட்டும் அவரை பார்த்தால் பயங்கரமா கோப்படுவா. இந்த ஜோ லூசு வேற. அனு முன் வைத்து அர்ஜூன் பெயரை சொல்லீட்டான்.

என்னை பெருமையா பேசுற மாதிரி இருக்கே? என்று ஜோசல் அங்கே வந்தான்.

ஜோசு..என்று ஸ்வேதா அவன் பின் வந்தார். ஸ்ரீயை பார்த்து தன்னு..என்று அவளை அணைத்து, குட் நியூஸ் தெரியுமா?

குட் நியூஸா? என்று மூவரும் அவளை பார்த்தனர்.

அர்ஜூன் சார்..நம்ம நிறுவனத்துக்காக அவரோட ஷேரை கொடுத்திருக்காரு என்று சொல்ல, ஹே..சூப்பர் என்று ஜோசல் ஸ்ரீயை அணைக்க வந்தான்.

ஹேய்..பக்கத்துல வந்த கொன்றுவேன்.

சந்தோசமான விசயம் தான் சும்மா கட்டிக்கிட்டா என்னவாம்?

ஆமாடா, உன்னை பற்றி எனக்கு தெரியாதா? என்று அதிராவை பார்த்த ஸ்ரீ இவளை கட்டிக்கோவேன் என்று சொல்ல, ஓ.கே வா கட்டிக்கலாம் என்று அவன் அருகே வர, அதிரா அவனை முறைத்து விட்டு சென்றாள்.

மேம்..நாளைக்கு பார்க்கலாம் ஸ்ரீ சொல்ல, தன்யா..ஈவ்னிங் பேபியோட வர்ற?

நோ..மேம்.

பேபி ஓ.கே சொல்லிட்டாளே?

வாட்? அவளிடம் எப்ப பேசுனீங்க?

காலையிலே பேசிட்டேனே?

சரி, வர முடியுதான்னு பார்க்கிறேன். ஹாஸ்பிட்டல் வேற போகணும்?

நான் உனக்கு துணைக்கு வரவா? ஜோ கேட்க, தேவையேயில்லை என்றாள்.

தன்னு..அந்த பாவனா அர்ஜூன் சாரை செம்மையா கோபப்படுத்திட்டா?

அதான அவளுக்கு பிரச்சனை செய்யாமல் இருக்க முடியாதே?

நானா பிரச்சனை செய்தேன்? பாவனா ஸ்ரீ முன் வந்து, எகத்தாளமாக பார்த்தாள்.

ஒரு பூ கூடவா அவனுக்கு பிடிக்காது. சேடிஸ்ட் என்றாள்.

ஹலோ மேம், அதிகமா பேசாதீங்க. எல்லாருக்கும் ரோஸ் பிடிக்கணும்ன்னு அவசியமில்லை. நீ எப்படி எங்களுக்கு கெஸ்ட்டோ அதே மாதிரி சாரும் எங்களோட கெஸ்ட். பிரச்சனை பண்ணாம ஃபங்சன்ல கலந்துக்கோங்க.

பார்டா..இவளெல்லாம் எனக்கு ஆர்டர் போடுறா? என்று ஸ்வேதாவை அவள் பார்க்க, சாரி மேம் என்று பாவனா அருகே ஸ்வேதா வந்தாள். அவளை பிடித்த தள்ள, அர்ஜூன் செக்ரட்டரி அவரை கீழே விழாமல் பிடித்தார்.

மேம்மை எதுக்கு தள்ளி விட்டீங்க? ஸ்ரீ அவளிடம் எகிற, அவள் ஸ்ரீயை அடிக்க கையை ஓங்கினாள். அர்ஜூன் செக்கரட்டரி..அதிர்ந்து இருவரையும் பார்க்க, அவள் கையை தடுத்த ஜோசல்.

மேம்..உங்களுக்கு ஜூஸ் தயாரா இருக்கு. எங்கடா போன? சீக்கிரம் வா..மேம்மிற்கு தாகமா இருக்காம். அழைச்சிட்டு போ என்று போனில் சொல்ல கிவி ஓடி வந்து அவளை அழைத்து செல்ல, அவள் ஸ்ரீயை முறைத்துக் கொண்டே சென்றாள்.

இது நடந்து கொண்டிருந்த பக்கத்து வராந்தாவில் தான் அர்ஜூன் நின்று கவனித்துக் கொண்டிருந்தான். ஸ்ரீயை பார்க்கவில்லை. ஸ்ரீ தான் என தெரிந்து மறைந்து நின்று கவனித்துக் கொண்டிருந்தான்.

தன்யா, அவங்க கிட்ட எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்ற? ஜோ கேட்க, ஆமாட எனக்கு வேற வேலையில்லை பாரு..என்று மேம்..இந்த திமிறால தான் இவளுக்கு பாப்புலாரட்டி இல்லை என்றாள் ஸ்ரீ.

ஜோ வாயை திறக்க, இப்ப தன்யா சும்மா இருந்தாலும் அவ இவகிட்ட பிரச்சனை பண்ண தான் செய்வா? தன்யா நீ மாடலிங் பண்ணலாம்ல. மூவில்ல கூட உன்னை கூப்பிட்டிருந்தாங்க. அதி கூட என்னிடம் பேச சொன்னா?

மேம், ஏற்கனவே சொல்லிட்டேன். என்னை கட்டாயப்படுத்தாதீங்க என்று ஜோ சட்டையில் இருந்த பேனாவை எடுத்து, இதை நான் வச்சுக்கவா ஜோ? ஸ்ரீ கேட்க,

பார்த்தீங்களா மேம், என் நினைவாக என்னோட தன்னு உரிமையா எடுத்துக்கிட்டா அவன் சொல்ல..மூடியை கழற்றி பேனாவை அவன் கழுத்தில் வைத்த ஸ்ரீ..அசஞ்ச உள்ள இறக்கிடுவேன். இதுக்கு மேல என்னோட தன்னு, டேட்டிங், அப்புறம் பாப்பா பக்குதுல வந்த.. நீ கொடுத்த இதே பேனாவால தான்டா உனக்கு சாவு..என்று மிரட்டினாள்.

அர்ஜூன் செக்கரட்டரி சிரிக்க, ஹலோ,எதுக்கு சார் சிரிக்கிறீங்க? என்று பேனாவை அவன் பக்கம் திருப்ப,

மேம் என்னை ஏதும் செஞ்சுறாதீங்க…எனக்கு பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க அவன் சொல்ல, ஸ்ரீ புன்னகையுடன் நகர்ந்து, “ஆல் தி பெஸ்ட் சார்” என்றாள்.

எங்க சாருக்கு கூட அவங்க அம்மா பார்த்துக்கிட்டு இருக்காங்க அவன் சொல்ல, ஸ்ரீ அவனை பார்த்து விட்டு, மனதினுள் அர்ஜூன்..இது கூட நல்லது தான். நான் செய்வது சரி தான் என எண்ணிக் கொண்டாள்.

அப்படியா? உங்க சார்..அவங்க மனைவியை தவிர யாரையும் நினைக்க மாட்டாருன்னு பேச்சு வந்தது ஸ்வேதா கேட்க, ஆமா மேம் என்று அவன் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே..அவர் மட்டும் நினைச்சு என்ன பிரயோஜனம்?

அவங்க மனைவிக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை. பிள்ளைய கூட தூக்கிட்டு சொல்லாம போயிட்டாங்க. சார் அவங்க மேல செம்ம கோபத்துல இருக்கார். மாட்டினாங்க காலி தான் என்றாள்.

நம்ம ஸ்ரீக்கு மனதில் பயம் இருந்தாலும், அப்படியா? ஒரு பொண்ணு சந்தோசமா புருசனோட வாழும் போது திடீர்ன்னு சொல்லாம போயிட்டான்னா. அவள தான இந்த உலகம் குறை சொல்லும்? அவளுக்கு என்ன பிரச்சனைன்னு யாருக்குமே நினைக்க தோணது மேம் என்று அவனை பார்த்து விட்டு, மேம்..நான் கிளம்புறேன்.

ஈவ்னிங் வருவேல்ல.

முடியுமான்னு தெரியலை மேம். ஹாஸ்பிட்டல் போகணும்.

யார் கூட வர்றா?

எனக்கு தான் உங்க பேபி இருக்கால்ல.

தன்யா அவ சின்னப் பொண்ணு. அதை விடுங்க..யார் செலக்ட் ஆனா?

வேற யாரு? உன்னருமை தோழி அதிரா தான்.

நினைச்சேன்.

மதியம் வீட்டுக்கு அவ வருவா. அவளை உன்னால் தயார் செய்ய முடியுமா? ஸ்ட்ரெயின் பண்ணிக்காத. முடியாதுன்னா ஒரு கால் பண்ணு யாரையாவது அனுப்புறேன்.

நோ…மேம். நான் பார்த்துக்கிறேன் என்றாள் ஸ்ரீ.

தன்னு..என்று குரல் கேட்க, மற்றவர்கள் பார்க்க, அதிரா கையில் கவருடன் வந்தாள்.

என்ன இது? ஸ்ரீ கேட்க, உனக்கான கிப்ட்..என்று அதை ஸ்ரீ கையில் கொடுத்து கண்ணீருடன் ஹாப்பி வெட்டிங் டே என்றாள்.

அதிரா, என்னாச்சு? எதுக்கு அழுற? நீ தான் செலக்ட் ஆகிட்டேல்ல..என்று அவளை உற்று பார்த்து, ஜோவா? எதுவும் சொன்னானா? இல்லை திட்டுனானா? ஸ்ரீ கேட்க, கண்ணை துடைத்து விட்டு, சந்தோசத்துல தான் கண்ணீர் வந்திருச்சு. பார்ட்டிக்கு கண்டிப்பா நீ வரணும் தன்னு.

டிரிங்க்ஸ் இருக்குமே? ஸ்ரீ கேட்க, அதுக்கு நான் பொறுப்பு. கெர்ல்ஸ்க்கு தனியா அரேஜ் பண்ண சொல்றேன் என்றாள் ஸ்வேதா.

அர்ஜூன் அதிராவை சந்தேகமுடன் பார்த்தான்.

மாலை நேரமாக பார்ட்டி ஆரம்பிக்கப்பட்டது. அனைவரும் கூடியிருக்க.. ஜோசல் கோர்ட் சர்ட்டுடன் காத்திருந்தான்.

ஸ்ரீயும் அனுவும் வந்தனர். அர்ஜூனை அனு பார்க்கக்கூடாது என்று எண்ணிக் கொண்டே உள்ளே நுழைய, அங்கேயே அவர்களை நிறுத்தி தள்ளியிருந்த ஒர் இடத்திற்கு அழைத்து சென்றான் ஜோசல். அவ்விடம் இருட்டாக இருக்க,

ஜோ..எங்களை பயமுறுத்த பாக்குறியா? அனு கேட்க, இல்லையே டார்லிங்.. என்று அனுவை ஓரிடத்தில் நிற்க வைத்து, ஸ்ரீயிடம்…எதுக்கு புடவை உடுத்தி இருக்க? அதிரா கொடுத்ததை போடலையா? அவன் கேட்க,

ஏய்..என்ன செய்யப் போற? இது என்னோட திருமண நாள். என் புருசன் வாங்கிக் கொடுத்ததை கட்டி இருக்கேன். உனக்கென்ன?

புருசனா? அவன் பக்கத்துல கூட இல்லை. அவன் எப்ப வாங்கியதை எடுத்து உடுத்தின? கோபமாக கேட்டான் ஜோசல்.

அங்கே விளக்கு மிளிர..அனு சுற்றி பார்த்தாள். உன்னோட புருசனை பத்தி எதுவும் யாரிடமும் சொல்ல மாட்டேங்கிற? கேட்டால் காதலிருக்குன்னு சொல்ற?

என்னால இதுக்கு மேல காத்திருக்க முடியாது என ஸ்ரீயை அருகே இழுத்து, நான் உன்னை காதலிக்கிறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? அவன் கேட்க, இருட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூன் அவன் கையை முறுக்கி சீற்றத்துடன் நின்றான். அர்ஜூன் அனுவை பார்க்கவில்லை. அவள் அங்கிருந்த லைட்டை பின் தொடர்ந்து சென்றாள்.

என்னை விட்டு தள்ளி இரு என்று ஸ்ரீ அவனை விலக்க, அவன் அவளை இழுத்து அணைத்தான். அவளுக்கு ஜிதினுடனான அனைத்தும் நினைவு வர, கைகள் நடுங்கியது. உடல் வியர்த்தது. ஆனால் கட்டுப்படுத்திய ஸ்ரீ கையை எடு..நகர்ந்து போ..என்று கத்திக் கொண்டே அவனை தள்ளினாள். அவன் மேலும் அணைத்தான். அனைவரும் அங்கு கூடினர்.

அர்ஜூனிடம் பேசலாம் என அவனை பின் தொடர்ந்து வந்த அதிரா இருவரையும் பார்த்து விட்டு அர்ஜூனையும் பார்த்து அப்படியே நின்றாள்.

ஏய்..சொல்றேன்ற விடு என்று திக்கி பேசிய ஸ்ரீ கண்ணீருடன் அவள் கையிலிருந்த பேனா மூடியை எடுத்து அவன் கையில் கிழித்தாள். அவன் கத்திக் கொண்டே அவளை விட்டு விலகி கண்ணீருடன்..

உன்னை விட்டுட்டு போன ஒருத்தனுக்காக என்னை கஷ்டப்படுத்துற தன்னு.

அட, இந்த டிராமா நல்லா இருக்கே என்று பாவனா சொல்ல, ராவும் ஸ்ரீயை பற்றி தவறாக பேசினர். அர்ஜூன் கோபம் உச்சத்தை அடைந்தது.

நிதானமான ஸ்ரீ, இல்ல..அவன் என்னை விட்டு போகல. நான் தான் அவனை விட்டு வந்திருக்கேன் என்று கத்தினான்.

எதுவாக இருந்தாலும் அவன் தான் உன்னுடன் உன்னருகே இல்லையே?

அவன் என் பக்கத்துல தான் இருக்கான் என அவள் அர்ஜூனை பார்த்ததை நினைத்தாள். ஆனால் ஜோ தவறாக நினைத்து, இதை தான சொல்ற? இந்த தாலிய விட இந்த செயின் தான் உனக்கு அவன் அருகில் இருப்பது போல் இருக்கு என்று அதை பிடித்து இழுக்க, அவன் கையோடு அர்ஜூன் கட்டிய தாலி செயினும் வந்தது. அவன் அதை தூக்கி எறிந்தான்.

ஸ்ரீ சீற்றமுடன், என்னடா பண்ணிட்ட? ஏன் எல்லாரும் என் உயிரை வாங்குறீங்க? என்று அவனை அடித்து விட்டு கொண்டு தலையை பிடித்து அழுது கொண்டே அமர்ந்தாள். எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.

கிவி ஜோவிடம் செல்ல, அதிராவும் அர்ஜூன் அசிஸ்டன்ட்டும் ஸ்ரீயிடம் வர ஓர் அடி எடுத்து வைக்க, அவர்கள் இருவர் கையையும் பிடித்த அர்ஜூன் கோபமாக நோ..என்றான். இவர்கள் மூவரும் தனியே நின்றிருந்தனர்.

ஸ்ரீ எழுந்து..கையிலிருந்த போனில் டார்ச்சை ஆன் செய்து அவளது தாலியை தேடினாள். அது கிடைக்காமல் இருக்க..புற்களில் விழுந்திருக்குமோ? என்று குனிந்து அழுது கொண்டே தேடினாள்.

அய்யோ..தன்னு, என்று அதிரா நகர, அர்ஜூன் அவளை முறைத்து விட்டு நகர்ந்தான்.

Advertisement