Advertisement

அத்தியாயம் 145

துளசியும் அவள் நண்பர்களும் வீட்டிற்கு வந்தனர். துளசியை பார்த்து தீனா..துளசி என்னாச்சு? இப்படி ஈரமா வந்திருக்க? கேட்டான்.

ஹே..உன்னோட மாப்பிள்ள செஞ்ச வேலை தான் என்ற ஜானு.. மற்றவர்களை பார்த்தாள். அவர்கள் அனைவர் பார்வையும் எதிரே சோபாவில் அமர்ந்து கூலாக டீ குடித்துக் கொண்டிருந்த துருவன் மேல் இருந்தது.

துருவா..நீ அம்மாவை பார்க்க போகலையா? ஜானு கேட்க, நான் என்னைக்கு வீட்டுக்கு போயிருக்கேன். என்னோட மாமாவை பார்க்காமல் நான் எப்படி போவேன்?

ரொம்ப நல்லதா போச்சு? என்ற ஜானு, துளசி அவனை விடாத..ம்ம்..திட்டு என்றாள்.

துளசி துருவனை பார்த்து விட்டு அமைதியாக அறைக்கு சென்றாள்.

ஏய், நில்லுடி..அவள் அழைக்க, ஹே..வாட் ஆர் யூ டூயிங் மேன்? அவன் கேட்க, இட்ஸ் மை அங்கிள்ஸ் ஹௌஸ். சோ ஐ அம் டிரிங்கிங் டீ..

அத்தை, போனா போகுது வீட்டுக்கு வந்துட்டான். அவனுக்கும் குடுத்திருங்க என்று துருவன்..பை அங்கிள், பை ஆன்ட்டி. நான் சாயங்காலம் வாரேன் என்று எழுந்தான்.

துருவா, நில்லு..துளசிய என்ன பண்ண? நனைஞ்சு வந்துருக்கா? தீனா கேட்டான்.

சார், இவன் துளசியை தள்ளி விட்டான் அவன் சொல்ல, அட..நல்லா தமிழ் பேசுறியே? அப்பவே பேசி இருக்க வேண்டியது தானே? துருவன் கேட்க,

துருவா..என்று தீனா அவன் சட்டையை பிடித்து..எதுக்குடா அவள தள்ளி விட்ட?

அண்ணா..என்று துளசி தீனாவிடம் வந்து, அவன் மேல தப்பில்லை. நான் தான்..என்று அவள் நண்பர்களை பார்த்து விட்டு அவன் உதவி தான் செய்தான் என்றாள்.

புருவத்தை உயர்த்தி துருவன் துளசியை பார்க்க, நோ..நோ..துல்லு..திஸ் பாய்..

டென், “கீப் சைலன்ட்” என்று தீனாவிடம் முதல்ல சட்டையில இருந்து கையை எடு என்று துருவனை பார்த்து, சாரி துருவா..என்றாள்.

சாரியா எதுக்கு? அவன் கேட்க, அவள் பதிலளிக்காமல் ஜானுவை பார்த்தாள்.

ஆமா, இங்க என்ன நடக்குது துளசி? நானும் உன்னிடம் பேசணும் என்றான் ஆதேஷ்.

அண்ணா,.சொல்லாம போறவங்ககிட்ட பேசி என்ன ஆகப் போகுது?

துருவா, நான் சொல்ல நினைச்சேன்.

என்ன சொல்ல நினைச்ச? அவன் கேட்டான்.

அவள் ஏதும் பேசாமல் உள்ளே செல்ல துருவனும் பின்னே சென்றான். சொல்லிட்டு போ..என்று நின்றான்.

துருவா, நீ முதல்ல வீட்டுக்கு போ. உன்னை அம்மாவும், அண்ணாவும் பார்க்க நினைப்பாங்க என்றாள்.

அவனுக்கு கோபம் மேலோங்க, துருவா..வெற்றி அழைத்தார்.

மாமா, எப்ப பாரு அம்மா, அண்ணாவையே சொல்றா?

ஆமா, அவங்க தேடுவாங்க. கிளம்பு. துளசி இங்க தான் இருப்பா பேசிக்கலாம்.

அவன் கோபமாக வெளியேற, ஹா..ஹி இஸ் ஓவர் அவன் சொல்ல திரும்பிய துருவன், உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னிடம் வச்சுக்காத. எப்பையுமே பொறுமையா இருக்க மாட்டேன். நான் அடிச்சேன்னா தாங்க மாட்ட..என்று அவன் செல்ல,

டென்,” வாட்ஸ் யுவர் பிராபிளம்”? “ஹி இஸ் துளசிஸ் ரிலேசன்”. “ரெஸ்பெக்ட் வித் ஹிம்” என்றாள் ஒரு பொண்ணு.

ஹிவி, “ஆர் யூ மேடு”? “ஹி இஸ் துளசிஸ் எக்ஸ்” என்றான் அவன்.

தீனா கோபமாக, “ஹி இஸ் நாட் எக்ஸ்”. “ஹி இஸ் துளசிஸ் பியான்சே”..என்றான்.

வாட்?

எஸ்..”கீப் டிஸ்டென்ஸ் பார் யூ” என்ற ஜானு அவள் அப்பாவையும் தீனாவையும் தனியே அழைத்து சென்றாள். அப்பா..இருவரையும் எப்படியாவது எந்த டிஸ்டர்பன்சும் இல்லாமல் பேச வைக்கணும். அப்ப தான் அவங்க காதலை சொல்லிப்பாங்க.

நான் உங்க அப்பாம்மா..என்ன பேசுற?

சரிப்பா. நாம எதுவுமே செய்ய வேண்டாம். அந்த புளூ ஐஸ்காரன் தான் உங்களுக்கு மருமகனா வரப் போறான். என்ன இருந்தாலும் அவங்க எல்லாரும் அவனுக்கு ப்ரெண்ட்ஸ். எல்லாரும் துளசியோட அவனை கோர்த்து விட பார்ப்பாங்க. நாங்க கிளம்புறோம். வாங்க அண்ணா..ஜானு அழைக்க, என்னடி பண்றீங்க? மீனாட்சி வந்தார்.

அதுவாம்மா? அம்மா..உனக்கு அந்த புளூ ஐஸ் காரனை பிடிச்சிருக்கா?

வெற்றி டென்சன் ஆனார். ஜானு விளையாடாத..

அப்பா, நான் விளையாடலை. நம்ம துளசி என்னிடம் எந்த அளவு துருவனை பத்தி பேசினாளோ? அதே போல் அவனை பற்றியும் பேசி இருக்கா. இப்ப பார்த்தீங்கல்ல..துருவனை துளசியால சமாளிக்க முடியுமான்னு தெரியலை. அவன் கோபம் தான் உங்களுக்கு தெரியுமே? இதில் அவன் வேற வந்தவுடன்..துளசிய மை லேடின்னு சொல்லிட்டான். துருவன் ரொம்ப கோபமா தான் இருப்பான். இவளும் ஒழுங்கா பதில் சொல்லாம போயிட்டா. அவனுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவன் துளசிய அவாய்டு பண்ண ஆரம்பிச்சான்னா எல்லாம் முடிந்து விடும் என்றாள் ஜானு.

அப்பொழுது தான் இதில் உள்ள சீரியஸ் எல்லாருக்கும் புரிந்தது. துகிராவும் உள்ளே வந்து, உங்க பிளான்ல நானும் கலந்துக்கவா? கேட்டாள்.

சரி..என்ன செய்யலாம்?

என்ன செய்தாலும் சீக்கிரம் செய்யணும். அப்ப தான் அவர்களையும் உங்களோட சேர்த்து மேடையில் அமர வைக்க முடியும் என்றார் வெற்றி.

அப்பா..ரொம்ப சுலபம். இருவருமே இன்னும் காதலிக்கிறாங்கன்னு நல்லா தெரியுது. இருவரையும் அறைக்குள் பூட்டி வைத்து விட்டால் என்ன? தீனா கேட்க, உன்னை கொல்லப் போறேன் டா..மீனாட்சி சொல்ல..

மீனு, அதை விட வேற வழியில்லை. தொந்தரவில்லாமல் பேச அதான் வழி. வீட்ல யாராவது வந்துகிட்டே இருப்பாங்க. நம்ம துருவா வந்தா அந்த பயணும் அவனை தான் கவனிப்பான். கண்டிப்பா பேச முடியாது. வெளிய தனி இடத்தில் பேசினால் இருவரில் ஒருவர் கோபப்பட்டு சென்று விடுவர்.

ஆனால் மாமா,..ஏதும் தப்பா நடந்துட்டா?

எனக்கு துருவனை நல்லா தெரியும். அவன் அப்படியெல்லாம் அதிகமா போக மாட்டான் என்றாள் ஜானு.

சாயங்காலம் கோவிலுக்கு போறோம்ன்னு எல்லாரையும் அம்மா..நீங்க தான் அந்த பசங்களையும் கூட்டிட்டு போங்க. துளசி தண்ணீல இருந்ததுல சளி பிடிச்சிருக்கு நான் பார்த்துக்கிறேன் அவள் அறையில் இருக்கேன். அவர்கள் சென்ற பின் வெளியே வந்துடுறேன்.

அண்ணா..எப்படியாவது..துருவனை துளசி அறைக்கு அனுப்பு.

அப்புறம் பார்த்துக்கலாம். அப்பா…நீங்க இங்க தான் இருக்கணும். வேலையா போற மாதிரி போய்ட்டு வாங்க..என்றாள் ஜானு.

சூப்பர் பிளான் ஜானு. நான் என்ன செய்றது? துகிரா கேட்க, அண்ணி நீங்க துருவன் உள்ளே போகவும் அறையை லாக் பண்ணிடுங்க. யாரும் துருவன் கண்ணில் மட்டும் பட்றக் கூடாது. யாரும் வீட்டில் இல்லாதவாறு காட்டிக்கணும். துளசி அறையில் மட்டும் பாடல் சத்தத்தை ஒலிக்க விடலாம். அனைவரையும் தேடி விட்டு அவனும் வர வாய்ப்புள்ளது.

மாலை அவர்கள் திட்டத்தை செயல்படுத்தினர். துளசி நண்பர் கூட்டத்தில் ஒரு பொண்ணு இவர்களை சந்தேகமாக பார்த்தாள். துகிரா அவளை அழைத்து, உனக்கு துளசி முக்கியம்ன்னா..கெல்ப் பண்ணு. பேச தான் வைக்கப்போறோம். ப்ளீஸ் யாரிடமும் சொல்லாத..

ம்ம். ஓ.கே. துளசி எங்களிடம் துருவா பத்தி தான் பேசுவா. அவளுக்கும் அவனை பிடிக்கும். பார்த்துக்கிறேன் என்று புன்னகைத்து விட்டு சென்றாள்.

மாமா..மாமா..துருவன் கத்த..யாருமே இல்லை. அப்பத்தா அவர் அறையில் இருந்தார். அவரிடமும் ஜானு சொன்னதால் அவரும் வெளியே வரவேயில்லை.

எல்லா அறையும் பூட்டி இருக்க துளசி அறையில் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்க, அவள் பாடும் சத்தம் கேட்டது. உள்ளே சென்ற துருவன் அவளை தேட, அவள் குளித்து விட்டு தாவணியில் வந்து நின்றாள். அவள் அவனை பார்க்கவேயில்லை.

எதுக்கு ஜானு இவ்வளவு சவுண்டு வச்சிட்டு போயிருக்க..என்று அவளை திட்டிக் கொண்டே பாட்டிற்கு ஹம் செய்து கொண்டு சுவற்றில் இருந்த பல்லியை பார்த்து, ஷூ..போ..போ..என்று கையிலிருந்த துவாலையை சுவற்றில் அடிக்க பல்லி அவள் மீது விழுந்தது.

ஆ..என்று கத்திக் கொண்டே தாவணியை அவிழ்த்தாள். அவள் கத்தியதில் அது அவளிடமிருந்து பயந்து ஓடியது. அவள் கத்துவதை நிறுத்தாமல் இருக்க, துருவனுக்கு பயம் வந்தது. அவன் பின்னிருந்து அவள் வாயில் கையை வைத்தான். அவள் மேலும் பயந்து அவன் கையை தட்டி விட, அந்த பிரேஸ்லெட் கையில் பட..அவன் கையை தள்ளி விட்டு நகர்ந்தாள்.

துருவனை பார்த்து, துருவா..நீ என்று அவள் தாவணி கீழே கிடப்பதை பார்த்து, போ..துருவா..என்று கத்தினாள்.

வாய மூடு என்று நெருங்கி அவளிடம் வந்தான். அவள் பயந்து தாவணியை எடுப்பதற்குள் அவன் எடுத்து கழுத்தில் சுற்றிக் கொண்டு, சொல்லு…நீ தான என்னை காதலிச்ச? எதுக்கு சொல்லாம போன?

துருவா..அப்புறம் பேசிக்கலாம். முதல்ல தாவணிய கொடு..

தர முடியாது. நீ சொல்லு. தாரேன்..

ப்ளீஸ் துருவா. யாராவது வந்துட்டா சரியா இருக்காது.

ஏன் சரியா இருக்காது? ஹாம்..அந்த எலி மூஞ்சிக்காரன் தப்பா நினைச்சுடுவான்னு பயப்படுறியா?

அவனுக்கு எதுக்கு நான் பயப்படுணும்? அப்பா, அண்ணா, மாமாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான். உன்னை தான் அடிப்பாங்க.

அடிச்சா அடிக்கட்டும்..அவன் சொல்ல அவள் பார்வை சுவற்றில் இருந்தது. இரு பல்லிகள் சுவற்றில் விளையாட..எங்கே தன் மீது விழுந்து விடுமோ? என்ற பயத்தில் அவள் நகர. அவளது தாவணியை கையில் எடுத்த துருவன் அதை அவள் மீது போட்டு அவன் பக்கமாக இழுத்தான். அவளுக்கு உயிரை விட பல்லிக்கு தானே பயப்படுவாள். அவள் பல்லியிலிருந்து கண்ணை எடுக்காமல் இருந்தாள். அவனும் அவளை கவனித்து பல்லியை பார்த்தான்.

ஏய்..பல்லி விழப்போது துளசி..துருவன் சொல்ல, அவளாக அவனிடம் வந்து, பல்லியை வெளியே பத்து என்றாள் பயத்தில். அவன் கதவு பக்கம் செல்ல, கதவு பூட்டி இருந்தது.

கதவு திறந்து தானே இருந்தது? யார் பூட்டினா?

பூட்டி இருக்கா? துருவா…இப்ப எப்படி பல்லியை வெளியே துரத்துறது? அவள் கேட்க, அவன் அதிர்ந்து..பல்லிக்காகவா பயப்படுற?

ஆமா, துருவா..அதை பாரேன். பயங்கரமா இருக்கு என்றாள்.

இந்த சின்ன பல்லி பயங்கரமா இருக்கா? அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது. அதே புன்னகையுடன் அவளை பார்த்தான். அவன் கண்கள் அவள் மேனியை வருடியது.

பல்லி கீழே விழுந்தது. துருவா, பல்லி விழுந்திருச்சு என்று அவன் மீது ஏறினாள். அவன் அதிர்ந்து அவளை பார்க்க, அவனுக்கு உணர்வுகள் கிளம்பியது.

பல்லை கடித்துக் கொண்டு, துளசி கீழ இறங்கு என்றான்.

துருவா..முதல்ல பல்லியை விரட்டு. பயமா இருக்கு என்றாள் அதை பார்த்துக் கொண்டே..

அவன் அவளை இறுக்கி பிடித்தான். அவள் அப்பொழுது தான் அவனை பார்த்து விலகி படுக்கையில் ஏறினாள்.

துருவா..அதை விரட்டு. பயமா இருக்கு என்று அழுதாள்.

அவள் அழுவதை பார்த்து மனமிறங்கி அதை விரட்ட சுற்றி சுற்றி வந்தது. சன்னலை திறந்தால் அவள் வெளியே தெரிவாள். நீ உள்ளே போ..என்று குளியலறையை காட்டினான்.

இல்ல..பயமா இருக்கு. நான் கீழே இறங்க மாட்டேன் என்றாள். வேகமாக அவளருகே வந்து அவளை தூக்கினான்.

என்ன பண்ற? பயமா இருக்கு துருவா? அது உள்ள வந்துரும் என்று அவள் சொல்ல அப்படியே நின்று அவளை பார்த்தான்.

உனக்கு என்னை பார்த்து பயமா இல்லையா? துருவன் கேட்க, உன்னை பார்த்து பயப்படணுமா? என்று கேட்க, அவன் பார்வையை பார்த்து, துருவா..நான்..இல்லை. எனக்கு பயமா இல்லை என்றாள் கண்களை தாழ்த்தி.

எனக்கு உன் மீது கோபம் இருக்கு?

ம்ம்..தெரியும் துருவா. உன் நிலையில் யார் இருந்தாலும் கோபம் வர தான் செய்யும்? பரவாயில்லை என்றாள்.

அப்படின்னா?

நீ எவ்வளவு கோபப்பட்டாலும் ஏத்துக்கிறேன். அன்று கடைசியா பேசும் போது, உன் கண்ணை பார்த்து பேச தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால் நான் எடுத்த முடிவு சரிதான் என்றாள். அவன் அவளை கீழே போட வேகமாக எழுந்து, கீழே பார்த்தாள். பல்லி வெளியே செல்லவில்லை. ஜன்னலை திறந்து அதை விரட்டி விட்டு ஜன்னலை மூடினான்.

எது சரி?

ஆமா, நீ தான் என்னிடம் காதலிப்பதாக சொல்லலை. அந்நிலையில் நான் என்ன செய்றது? உன் அம்மா பார்வையிலே அவங்களுக்கு என்னை பிடிக்கலன்னு தெரிஞ்சது. எல்லாரும் புவியை தான் பெருசா பேசுனாங்க. நீயும் அவள தான காதலிச்ச? திடீர்ன்னு நீ என்னிடம் பிடிக்கும் என்று பேசுவதை போல் பேசுன. ஆனால் நீ அன்று காதலை சொல்லி இருந்தாலும் சென்றிருப்பேன்.

உனக்கு மட்டும் என்னை பிடித்தால் போதுமா? நாம சேர்ந்து வாழ்றதா இருந்தாலும் அம்மா என்னிடம் பேசலைன்னா கஷ்டமா இருக்காதா? அவங்களுக்காக போனாலும்..குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் தான் பொறுப்பா இருப்பேன்னு தோணுச்சு.

நான் காதலை சொன்ன போது நீ என்னை ஏத்துக்கலை. அன்று உன்னை ஹாஸ்பிட்டல்ல அந்த நிலையில பார்க்கும் போது ரொம்ப வீக்கா ஃபீல் பண்ணேன். நல்லா பேசிட்டு ப்ரெண்டா தான் பேசுறேன்னு நீ சொல்லிட்டா என்னால தாங்க முடியாது. என்னோட ஃபர்ஸ்ட் லவ்வும் நீ தான் லாஸ்ட் லவ்வும் நீ தான். ஆனால் உனக்கு புவி இருந்தா..உங்களுடன் பழகும் முன் எனக்கு கிரஸ் கூட இல்லை. நீ ஜானுவுடன் பழகினாலும் புவிக்கு ஸ்பெசல் முக்கியத்துவம் கொடுப்பதை நேரிலே பார்த்திருக்கேன். அப்பொழுது உன்னை தான் எனக்கு பிடிக்கும்ன்னு தோணவேயில்லை. கிஸ் பண்ணதால உன் மேல எனக்கு காதல் வரலை. எனக்காக எவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுத்த. அண்ணா, அப்பா, அம்மா, அப்பத்தா.. யாருமே பெருசா..கண்டுக்கவே மாட்டாங்க. எனக்காக நீ இருக்கன்னு  தோணுச்சு.

இப்படி இருந்து சந்தோசமா உன்னை விட்டு பிரிந்து செல்ல நினைப்பேனா? பிரதீப் அண்ணா முடிவெடுத்தாலும். நான் ஒத்துக் கொண்டதால் தான் விட்டுட்டு வந்தாங்க. அவங்களுக்கு நான் அழக்கூடாதுன்னு நினைச்சாங்க. அது தவறில்லையே?

காதல் காணாமல் போகும் வலியை விட, பிரிவு எவ்வளவோ நல்லது என்று தான் செல்ல முடிவெடுத்தேன். என்ன? ஃபாரினுக்கு போவேன்னு தான் நினைக்கவேயில்லை. சாரி துருவா. உன்னை கஷ்டப்படுத்தி இருந்தால். நீ புவிய மறந்துட்டன்னு நினைக்கிறேன் என்று அவள் சொல்ல, அவளை இழுத்து அவள் முகம் முழுவதும் முத்தமிட்டான். அவள் கண்ணீருடன் துருவா..”ஐ லவ் யூ” என்றாள்.

அவன் அவள் இதழ்களை அடைந்தான். அவனை விலக்கி விட்டு, தாவணியை கொடு என்றாள். அவன் பார்வை அவள் மேனியில் படர..அவள் கண்ணீருடன் இப்ப கூட துருவா..நீ சொல்ல மாட்டேங்கிற? என்றாள்.

நான் சொல்லணுமா? உனக்கு புரியலையா? என்னோட பொண்டாட்டிகிட்ட வாழ்நாள் முழுவதும் அதை தானே சொல்லப் போகிறேன் என்று அவள் விழிகளை பார்த்து, உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை போல?

பயம் துருவா?

இப்ப தான் பயப்பட மாட்டேன்னு சொன்ன?

திரும்பவும் வெகு வருடங்கள் பிரிவது போல் ஆகுமோன்னு பயம் என்றாள்.

எதுக்கு இந்த பயம்? தேவையில்லாமல்..என்று அவள் கழுத்தில் முத்தமிட்டான்.

துருவா..வெளிய போகணும்.

அவள் அறையை பார்த்து அங்கிருந்த பிளவர் வாஸில் இருந்த பிளாஸ்டிக் மலரை எடுத்து..எனக்கு நீ வாழ்நாள் முழுக்க வேணும். “ஐ லவ் யூ” துளசி என்று இதழ்களில் தன் அச்சாரத்தை பதித்து விட்டு அவளை பார்த்து, மாமாவுக்கு என்ன இப்பவே விருந்தா?

ராஸ்கல்..தாவணிய குடுடா?

தாரேன். நான் உனக்கு கொடுத்ததை நீ எனக்கு தா. தாரேன் என்றான்.

அவளும் முத்தம் கொடுக்க அதை பெற்று விட்டு..போனை எடுத்து, ஓய்..ஜானு உன்னோட வேலை தான? கதவை திற என்றான்.

துளசி தாவணியை போட, கதவும் திறக்கப்பட்டது.

கதவை சாத்தி விட்டு துருவன் வெளியே வர, கோவிலுக்கு சென்றவர்கள் வீட்டினுள் வந்தனர். அவன் அவர்களை பார்க்காது..ஜானுவிடம்,

எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? இப்படியா பூட்டி வைப்ப? யாராவது பார்த்திருந்தால் தப்பா நினைச்சிருப்பாங்க அவன் கத்த, டென் முன் வந்து அவள என்னடா பண்ண? துருவன் சட்டையை பிடித்தான். சத்தம் கேட்டு வெளியே வந்த துளசி..

டென், என்ன பண்ற? அவள் கேட்க, துல்லு..அவன் உன்னை எதுவும் செய்யலையே? என்று அவளை பார்த்தான். இதுவரை அவன் பார்க்காத ஓர் உடையில் துளசியை பார்க்க, அவன் கோபம் கலைந்து துருவனை விட்டு துளசியிடம் வந்து அவளை மேலும் கீழுமாய் பார்த்தான்.

என்னப்பா பண்ற? வெற்றி கேட்க, “ஐ வான்ட் துளசி” என்று அவளுக்கு முத்தமிட, அவள் அழுது கொண்டே அவனை அடித்தாள். துருவன் கொந்தளித்து விட்டான்.

தீனாவும், பிரதீப்பும் அவனை அடிக்க, அவன் நண்பர்கள் அவர்களை தடுத்து சாரி சார் என்று டென்னை அவர்களும் திட்டினர். பாரு..துளசி அழுறா ஒருவன் சொல்ல, துகிரா, மீனாட்சி, ஜானு அவளை  முறைத்தவாறு துளசியை அணைத்திருந்தனர்.

மாமா..இவனை வெளியே அனுப்பிடுங்க துருவன் கத்தினான்.

துருவா..அவனை அப்புறம் பார்க்கலாம். உங்களுக்குள் பிரச்சனை சரியானதான்னு தெரியல. ஆனால் துளசி..நீயும் துருவனும் நான் கேட்பதற்குள் தெளிவான பதில் சொல்லணும் என்றார் வெற்றி.

அப்பா..என்று அழைத்துக் கொண்டே துருவனை பார்த்தாள்.

நான் கேட்ட பின் நீங்க பேசுங்க என்ற வெற்றி, துருவா..துளசிய கல்யாணம் பண்ணிக்கிறியா? கேட்டார்.

அப்பா…அண்ணா கல்யாணம்?

அண்ணன்களுக்கும் ஜானுவுக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கப் போகுது? உங்க பிரச்சனை முடிந்து ஒத்துக் கொண்டால் அவர்களுடன் உங்களுக்கும் முடித்து விடலாம்..

ஜானு..என்று துருவன் ஆதேஷிடம்..உங்களுக்கும் கல்யாணமா? சொல்லவேயில்லை.

சொன்னால் தான் உங்களுக்கும் சேர்த்து முடிவு செய்ததை கண்டுபிடிச்சிருவீங்கல்ல ஜானு கேட்க, மாமா..அம்மா..என்று கேட்டான்.

அம்மா ஒத்துகிட்டாங்க.

அண்ணாவுக்கு முடியாமல் எப்படி?

அதனால என்னப்பா? இப்ப இதெல்லாம் பெரிய விசயமேயில்லை. உன் அண்ணாவுக்கும் பொண்ணு தயாரா தான இருக்காங்க. அதனால் பிரச்சனை இல்லை வெற்றி சொல்ல, துருவன் அமைதியாக நின்றான்.

சொல்லு துருவா? தீனா கேட்க, மாமா..வேண்டாம் என்று துருவன் துளசியை பார்த்தான்.

வேண்டாமா? என்று துளசி மனதில் பயம் பிடித்துக் கொண்டது.

“ஐ அம் மேரி வித் துல்லு” டென் சொல்ல..அனைவரும் அதிர்ந்தனர். துருவன் கண்கள் கலங்கியது. துளசி துருவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏன் துருவா? துளசி ஊருக்கு போனது உங்க நல்லதுக்கு தானே? பிரதீப் கேட்க, மாமா..என்னால இப்ப முடியாது?

ஏன் முடியாது? இப்ப தானடா காதலை சொன்ன? துளசி கேட்க, இப்ப முடியாது துளசி.

அதான் ஏன்?

ஏன்னா..என்னிடம் இப்ப எதுவுமே இல்ல. உன்னை எப்படி நான் பார்த்துக்க முடியும்? என்று கத்தினான்.

என்ன சொல்ற? ஒரு வருசமா வேலை பார்த்தேல்ல. இப்ப கூட வேலை நல்லா தான் இருக்குன்னு சொன்ன? என்று அவன் அம்மா அங்கு வந்தார். அகிலும் வந்திருந்தான்.

அவரை அணைத்த துருவன், அம்மா..எனக்கான செலவுக்கே சரியா போகுது. வொர்க் பிரஸ்ஸர் அதிகமா இருக்கு. நிரந்தர வேலையும் இல்லை. அதனால..என்னால பணத்தை சேமிக்கவே முடியலை. பணம் குறைவா தான் இருக்கு.

முதல்லவே சொல்லி இருக்கலாம்லடா? அவன் அம்மா கேட்க, நீங்க கஷ்டப்படுவீங்கன்னு சொல்லலம்மா.

என்னிடமாவது சொல்லி இருக்கலாமே? அகில் கேட்க, நான் வேலை முடிந்து வரும் சமயத்தில் உன்னிடம் பேச கூட நேரம் இருக்காது.

வேற கம்பெனிக்கு போகலாமே? மீனாட்சி கேட்டார்.

ஆமா, நம்ம ஏலகிரில கூட செலக்ட் ஆனேல்லடா. அங்க கூட திரும்ப போய் பார்க்கலாமே?

அம்மா, மூன்று வருசம் கான்ட்ராக்ட் போட்டாங்க. ஆனால் நான் ஒத்துக்கலை. அதனால் ஒன்றரை வருசத்துக்கு போட்டாங்க. இப்ப..இன்னும் அது முடிய இரண்டு மாதம் இருக்கு.

உனக்காக குறைச்சாங்களா? அது எப்படி குறைப்பானுக? எந்த கம்பெனியும் அவங்க விதிமுறைகளை மாத்த மாட்டாங்க லலிதா சொல்ல, ஆமா அத்தை சரியா சொல்றாங்க..என்ற பிரதீப்..

துருவா..அந்த கான்ட்ராக்ட் பேப்பரை வச்சிருக்கேல்ல பிரதீப் கேட்க, இருக்கு மாமா. ஆனால் இப்ப வெளிய வர முடியாது என்று துருவன் சொன்னான்.

அய்யோ..துருவா, அவனுக உன்னை பயன்படுத்துறாங்க. இந்த கான்ட்ராக்ட் எல்லாமே சும்மாவா தான் இருக்கும் ஆதேஷ் சொல்ல.. அண்ணா.. அப்படியெல்லாம் இல்லை.

சரி..உன்னோட கம்பெனி மேனேஜர் நம்பரை கொடு. நான் நிரூபிக்கிறேன் பாரு ஆதேஷ் சொல்ல

அண்ணா..அதெல்லாம் வேண்டாம்.

போனை பிடுங்கிய துளசி துருவனை முறைத்துக் கொண்டே, நீங்க பாருங்க மாமா..என்று கொடுக்க, அகில் அவன் போன் பாஸ்வேர்டை போட்டான். இருவரும் தனியாக வெளியே சென்றனர்.

ஏன் துளசி? கோபப்பட்டு விட்டு துருவன் வெளியே ஓடி வந்தான். பிரதீப், தீனா, வெற்றி நகர..வெற்றி மற்றவர்களை அங்கேயே நிறுத்தி வைத்து விட்டு அவன் பின் வந்தனர்.

ஆதேஷ் போன் செய்து அவனை பற்றி சொல்லி விட்டு, துருவனை பற்றி கேட்க, ஆதேஷ் கூறியதையே மறைமுகமாக சொல்ல, துருவனுக்கு கஷ்டமா இருந்தது. ஆதேஷூம் அகிலும் போனை வைத்து விட்டு துருவனை பார்த்தனர்.

துருவன் வருத்தமுடன் அமர்ந்தான்.

துருவா..என்று அகில் அவன் தோளில் கை வைக்க, அவன் தட்டி விட்டான்.

இப்ப என்னாச்சுன்னு இப்படி நடந்துக்கிற? பிரதீப் கேட்டான்.

அவனுக என்னை ஏமாத்துவதை கூட தெரியாமல் இருந்திருக்கேன். என்னை முட்டாளாக்கிட்டானுக..என்றான்.

இல்ல துருவா. உனக்கு தான் உலகம் தெரியல. நீ திறமையானவன்னு தெரிஞ்சு உன்னை பயன்படுத்தி இருக்காங்க. என்ன? நீ வேலை செய்ததற்கான சம்பளம் சரியா கொடுக்கலை.

நீ தெளிவா இருந்திருந்தா கண்டிபிடிச்சிருக்கலாம் பிரதீப் சொல்ல,

இப்ப என்ன செய்றது?

என்ன வேலைய விட்டுரு. நீ நம்ம கம்பெனியிலே சேர்ந்திருக்கலாம் பிரதீப் சொல்ல, வேண்டாம் என்றான் துருவன்.

சரி..அப்படின்னா, அப்பாவுக்கு அப்புறம் எல்லாத்தையும் யாரு பார்த்துப்பா? தீனா கேட்க, பிரதீப் மாமா பார்த்துப்பாங்க.

துருவா..கண்டிப்பா என்னால முடியாது. என்னுடையதையும், அர்ஜூன் ரெசார்ட்டையும் சேர்த்து பார்த்துக்கிட்டு இருக்கேன். அப்பாவோட நீ பார்த்துக்கிட்டா தான் என்னவாம்?

ஆதேஷ் அண்ணா..என்று அவனை பார்த்தான்.

ஏய்..எனக்கும் எங்களுடையதை பார்த்துக் கொள்ளவே முடியலை. கமலி ஆன்ட்டிக்கு, அர்ஜூன் அண்ணாவுக்கு வேற உதவியா இருக்கேன். எனக்கு நேரமெல்லாம் இருக்காது என்றான்.

அண்ணா..அப்பா இருக்கார்ல.

டேய், எனக்கே உதவிக்கு வர மாட்டேங்கிறார். அவருடையதை மோகன் அங்கிள் தான் பார்த்துக்கிறாங்க.

மாப்பிள்ளைக்கு என்ன பிரச்சனையாம்? வெற்றி அனைவரையும் பார்த்துக் கொண்டே அவன் தோளில் கை போட்டு அமர்ந்தார்.

மாமா, என்னால சமாளிக்க முடியாது.

நான் இருக்கும் வரை நாம சேர்ந்து வேலைய பார்த்துக்கலாம்ல. முதல்ல மாதிரி என்னால எல்லா இடத்துக்கும் போக முடியல. எனக்கு துணைக்கு வர மாட்டீங்கள?

மாமா, நான் அந்த அளவு படிக்கலை.

அப்ப, நான் என்ன அதிகமாவா படிச்சிருக்கேன்?

உங்க பசங்கள வச்சுகிட்டு என்னை சேர்த்தால் எல்லாரும் தப்பா பேசுவாங்களே?

அது எப்படி தப்பாகும்? என் பொண்ணை கட்டிய பிறகு எவனாலும் ஏதும் பேச முடியாது.

மாமா, அவன் சுயகௌரவம் பார்க்கிறான் ஆதேஷ் சொல்ல, அவர் சிரித்தார்.

மாப்பிள்ள, எனக்கடுத்து பார்த்துக்க தொழிற்சாலையில அடிச்சிட்டு இருக்கானுக. பிரதீப்பால் எல்லாத்தையும் பார்த்துக்க முடியாது. தீனா நம்ம விசயத்துல வரவே மாட்டான். மாப்பிள்ளை அங்க விட்டுட்டு வர மாட்டார். நீங்க வந்தா நல்லா இருக்கும். நானும் அப்பப்ப ஓய்வெடுத்துப்பேன்.

நீங்க வந்துட்டா..அவனுக யாரையும் உள்ள விடாம பார்த்துக்கலாம். நம்ம சொத்தை அடுத்தவனிடம் எப்படி விடுவது? சொல்லுங்க கேட்டார்.

சரிதான் மாமா. ஆனால் நான்..

போதும்டா. நீ சும்மா இருக்கப் போறதில்லை. அவரு சொல்ற வேலை பார்த்து சம்பளம் வாங்கப் போற. இதுல எதுக்கு இப்படி யோசிக்கிற துருவா? அகில் கேட்க, துருவன் அமைதியாக சிந்தித்தான்.

சரி மாமா. நானும் நமக்குரியதை பார்த்துக்கிறேன். ஆனால் மாமா..இந்த கம்பெனியில இருந்து எப்படி வெளிய வர்றது? என்ன இருந்தாலும் என்னிடம் கான்ட்ராக்ட் பத்தி தானே பேசி கையெழுத்து வாங்கி இருக்காங்களே!

அதை நான் பார்த்துக்கிறேன் ஆதேஷ் சொல்ல, நானும் அந்த கம்பெனியை பார்க்கணும் என்றான் அகில்.

கான்ட்ராக்ட்டை எடுத்து வை. நாளைக்கே இதை முடிச்சிடலாம் ஆதேஷ் சொல்ல..நானும் வருவேன் அகில் சொல்ல, அண்ணா..இரு. நீ ஏதாவது செஞ்சிறாத?

நான் என்ன செய்யப் போறேன்? நீ வேலை செய்த இடத்தை பார்க்க வேண்டாமா? அகில் கேட்க, வேண்டாம் என்று எழுந்தான்.

நான் வருவேன் அகில் சொல்ல, நீ வரக்கூடாது என்று அண்ணனும் தம்பியும் செல்லமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

தம்பி, பசங்களோட போயிட்டு வா..என்று வெற்றி பிரதீப்பை பார்த்தார்.

மாமா..இருக்கட்டும் அண்ணாவோட போய் முடிச்சிட்டு வாரோம்.

இல்ல பிரச்சனையாகிடாமல் பார்த்துப்பான் என்று வெற்றி அனைவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

சரி..துளசி. நீ சொல்லு..துருவனை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிறேல்ல வெற்றி கேட்க, அவள் வெட்கத்துடன் சரி என்றாள்.

ஆமாப்பா, துளசி படிப்பு இன்னும் முடியலையே?

அப்பா..துருவன் வேண்டாம்ன்னு சொன்னானே? துளசி கேட்க, அவன் அவள் கையை பிடித்து, நான் சம்மதிக்கிறேன் என்று புன்னகைத்தான்.

ஹே..சூப்பர்டா. இதை தான் எதிர்பார்த்தேன் என்று ஜானு அவனிடம் ஓடி வந்தாள். ஆதேஷ் அவள் முன் வந்து, நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன். நீ கண்டுக்கவே மாட்டேங்கிற. ஆமா எல்லாரையும் பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல மாமா.

இனி தான் உங்க மூஞ்சிய பார்த்து போரடிக்க போகுதே? அதான்..என்று அவனை பார்த்து கொண்டே வெற்றி பின் ஒளிய, என்ன சொன்ன? முன்னாடி வந்து சொல்லு. ஆதேஷ் அவளை பிடிக்க..மாமா, அவளை பிடிச்சு குடுங்க. கொஞ்ச நாள் நல்ல பிள்ளையா படிப்புல கவனமா இருந்தா. இப்ப திரும்பணும் வாயாட ஆரம்பிச்சிட்டா..என்றான்.

விடுங்க மாப்பிள்ள. ரெண்டே நாள் தான் அப்புறம் அவளால தப்பிக்க முடியாதே என்றார் மருமகனுக்கு சாதகமாய்.

அப்பா..நான் உங்க பொண்ணா? மாமாவுக்கு நீங்க அப்பாவா? கோபமாக கேட்டாள்.

ரதியை பார்த்து, கல்யாண வேலை பாதி முடிச்சிட்டீங்கல்ல..துருவன்- துளசிக்கும் சேர்த்து தயார் செய்யுங்க.

கல்யாணம் மண்டபத்துல சரியா வருமா? துருவன் கேட்க,

கல்யாணம் மண்டபத்துல்லன்னு யார் சொன்னா? நம்ம அர்ஜூன் ரெசார்ட்டுக்கு பின்னால் இருக்கும் பீச்ல தான்.

என்ன பீச்ல யா? என்று பொண்ணுங்க எல்லார் முகத்திலும் மலர்ச்சி.

இது யார் முடிவு? அகில் கேட்க, வெற்றி தீனாவை பார்த்தார்.

நினைச்சேன். ரொமான்ட்டிக்கா இருக்கணும்ன்னு நீங்க பேசும் போதே ஏதோ செய்யப் போறீங்கன்னு நினைச்சேன் என்ற துருவன் டென்னை பார்க்க, அவன் இவனை தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

வெற்றி அவனிடம் வந்து, தம்பி நீங்க துளசி தோழர்கள் என்று தான் வீட்டிலே தங்க வைத்தேன். ஆனால் நீங்க இங்க இருப்பது சரியாக இருக்காது.

அப்பா..என்று துளசி டென் முன் வந்து, நான் தான் ஏற்கனவே துருவனை பற்றியும் எங்க காதலை பற்றியும் சொல்லி இருக்கேன்ல.

ஏன்டி, உனக்கு என்னடி அவனிடம் பேச்சு? நீ உள்ள போ..உன்னோட அப்பன் பார்த்துப்பான் அப்பத்தா சொல்ல..

டென் அப்பொழுதும் விடாமல்…”ஐ வான்ட் துளசி” என்றான். அவள் கண்ணீருடன் பயந்து பின்னே நகர்ந்தாள். அவன் அவள் கையை விடாமல் இருந்தான்.

துருவன் அவன் கையை பிடித்து இழுக்க, டென் துருவனை அடித்தான்.

டென்னிஸ் என்ன பண்ற? அவன் நண்பர்கள் சத்தமிட்டனர். தீனாவும் பிரதீப்பும் கோபமாக அவனிடம் வர வெற்றி அவர்களை தடுத்தார்.

துளசி இதுக்கு மேல இவனோட ப்ரெண்ட்ஷிப் வேணுமா? தீனா கேட்க, துளசி டென்னை அறைந்து, வெளிய போன்னு கத்தினாள்.

சாரி துளசி என்று தோழி ஒருத்தி சொல்ல, ப்ளீஸ் அவனை கூட்டிட்டு போயிருங்க என்றாள்.

போகவா? டென் கேட்க, ஆமா..நீ உன்னோட வீட்டுக்கே போ. நான் இனி வரவே மாட்டேன். நம்ம ப்ரெண்ஷிப்ப கேவலப்படுத்திட்ட.

துளசி, உன்னோட படிப்பு? ஜானு கேட்க, வேண்டாம் ஜானு. நான் படிப்பை நிறுத்திடுறேன். நான் இனி உன்னை பார்க்கவே வேண்டாம்ன்னு நினைக்கிறேன். நீ போயிடு என்று கத்தினாள்.

சாரி துளசி. கோபத்துல்ல சொல்லிட்டேன். உன்னை பார்க்காம கஷ்டமா இருக்குமே? என்று கத்தினான்.

நான் துருவனுக்கு சொந்தமாகப் போறேன். இனி உன்னை பார்த்தால் அவனுக்கும் எனக்கும் நீ பேசிய எண்ணம் தான் தோன்றும். போ…போயிடு..என்றாள்.

வாடா,..என்ற ஒருவன் துளசியிடம் நாங்க வாரோம். போட்டோஸை இன்டால்ல போடு. நாங்க பார்த்துக்கிறோம் என்று அவனை இழுத்து செல்ல அவன் அழுது கொண்டே சென்றான். துளசி அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

துளசி கஷ்டமா இருக்காடா? வெற்றி கேட்க, ஆமாப்பா. யாரும் துணைக்கு இல்லாதப்ப அவனும் ப்ரெண்ட்ஸூம் நல்லா பார்த்துகிட்டாங்க. அக்கா அவ வேலையையும் குடும்பத்தையும் பார்க்க போயிருவா.

அப்பா..நான் அவங்கள் ஏர்போர்ட்ல டிராப் பண்ணிட்டு வாரேன் பிரதீப் சொல்ல, நீ எதுக்கு போகணும்? என்ன வேலை பார்த்துட்டான். அவங்க போய்ப்பாங்க.

தீனா அவன் ஒருவனுக்காக மத்த பசங்களும் போயிட்டாங்க. பொண்ணுங்களும் இருக்காங்க. பாதுகாப்பா போகணும்ல..

ஆமா, பிரதீப் சொல்றது சரிதான். நீ போயிட்டு வா..என்று வெற்றி சொல்ல..துகி வர்றீயா? அவன் கேட்க,

மாமா? டேட்டிங்கா? ஆதேஷ் கேலி செய்ய, அனைவரும் அவனை முறைத்தனர். துளசியை பார்த்த துகிரா வெற்றியிடம், மாமா..துளசியையும் கூட்டிட்டு போகவா?

மூளையே இல்லைன்னு நிரூபிக்கிறாங்க என்று தீனா சத்தமிட,..இல்ல துளசியோட நானும் வாரேன் என்ற துருவன், அண்ணா..அம்மாவை கூட்டுட்டு வீட்டுக்கு போ..என்று வெற்றியை பார்த்தான்.

துருவா..பிரச்சனையாகிடாமல் எறு தீனா சொல்ல, இல்ல மாமா, இப்ப துளசி அவளோட ப்ரெண்ஸை பார்த்து பேசுறது தான் சரியா இருக்கும் என்று மீண்டும் வெற்றியை பார்த்தான்.

போயிட்டு சீக்கிரமா வாங்க..பார்த்து என்றார்.

அப்பத்தா, மீனாட்சியை பார்க்க, துகிராவிற்கும் துளசிக்கும் இரும்பாலான பொருள் ஒன்றை அவர்கள் கையில் கொடுத்து, இதை கையிலே வச்சிருக்கணும் என்றார். நால்வரும் கிளம்பி செல்ல, நண்பர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர்.

துளசி அவர்களிடம் சென்று பேசி விட்டு டென்னை பார்த்தாள். அவன் கண்ணீருடன் அமர்ந்திருந்தான். முதலில் துளசியை பார்த்து ஆர்வமாகியிருப்பான். பின்னே துருவனை பார்த்ததும் முகம் இறுகி அமர்ந்திருந்தான்.

துளசி அவனிடம் பேச, போதும் துல்லு..நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு ஒரு ஹக் மட்டும் வேணும். போயிடுறேன் என்றான். அவள் பிரதீப்பையும் துருவனையும் பார்த்தான். பிரதீப் தோளை குலுக்கி விட்டு நகர்ந்தான். துருவன் துளசியை முறைத்து பார்த்தான்.

வேறு வழியில்லாமல் அவனை அணைக்க அவன் அணைத்துக் கொண்டே அழுதான். துருவன் முறைத்துக் கொண்டிருந்தான்.

வாங்க நாங்க டிராப் பண்றோம் துகிரா சொல்ல, துளசி அவனை விட்டு விலகினாள்.

நாங்க போய்டுவோம் என்றான் ஒருவன்.

என்னப்பா கோபமா? உங்க கல்சர் வேற. எங்க கல்சர் வேற. கையை பிடிச்சாலே தப்புன்னு பேசுவாங்க. அப்ப குடும்பத்தினர் தான் இருந்தோம். வேறு யாராவது இருந்தால் துளசியை பத்தி தப்பா பேசி இருப்பாங்க துகிரா சொல்ல..

ம்ம்..புரியுது. ஏற்கனவே துளசி இதெல்லாம் சொல்லி இருக்கா என்றான் மற்றவன்.

இங்க டாக்சி கிடைக்கிறது கஷ்டம். வாங்க ஏர்போர்ட்டுல்ல விட்டுடுறோம் என்றான் பிரதீப். அனைவரும் இரு காரிலும் ஏற, துருவன்- துளசி காரில் இருந்த டென் துருவனை பார்த்துக் கொண்டே வந்தான். அவனும் இவனை பார்க்க மற்றவர்கள் இருவரையும் பார்த்தனர்.

ஏர்ப்போர்ட்டில் இறங்கி அனைவரும் செல்ல துளசிக்கு அழுகை வந்தது. துருவன் அவளை அணைத்துக் கொள்ள, உள்ளே சென்ற டென் திரும்ப வந்து சாரி, “ஆல் தி பெஸ்ட்” என்றான்.

உன்னோட மேரேஜூக்கு இன்வெயிட் பண்ணு..துளசி கத்த,

யா..”ஐ வில் டெல் போத் ஆஃப் அஸ்” என்று சொல்லிக் கொண்டே ஓடினான். துளசி அங்கேயே அமர்ந்தான்.

பிரதீப் அவளிடம் வந்து, இப்ப நீ ஓ.கே தானடா?

ம்ம், ஆமா அண்ணா. இப்ப தான் நிம்மதியா இருக்கு என்றாள்.

போகலாமா? நேரமாகுது என்றான் துருவன். கார் ரெண்டும் ஊரை நோக்கி சென்றது.

மறுநாள் காலை ஆதேஷ், துருவா, அகில், பிரதீப் சென்னையை அடைந்தனர். துருவன் தங்கி இருக்கும் அறையை பார்த்து மூவரும் கோபப்பட்டனர்.

உள்ளே சென்று பார்த்த மூவரும் அவனை முறைத்தனர். ஒரே அறை அதிலே பாத்ரூம் வசதி.

ஏன்டா? நான் தான் வீடு பார்த்து தாரேன்னு சொன்னேன்ல.

பணத்துக்கு நான் எங்கே போறது?

சம்பளம் எவ்வளவு? ஆதேஷ் கேட்க, சிக்ஸ்டீன் தவுசண்ட் என்றான்.

வாட்? ஏய்..அம்மாகிட்ட ட்டென்ட்டி எய்ட் தவுசண்டுன்னு சொன்ன? அகில் கேட்க.

அதான் ஏமாத்தி இருக்கானுகளே? பிரதீப் சொன்னான். துருவனுக்கு ஒரு மாதிரி ஆனது.

பைவ் தவுசண்டு பிடிப்பாங்களாம். மீதி பணம் ஆபிஸ் பார்ட்டி, செலிபிரேசனுக்கு என்றான்.

பிடிப்பு பணம் அவ்வளவு எதுக்கு டா குடுத்த?

இதுக்கு முன்னாடி நான் என்ன வேலையா பார்த்துட்டு இருந்தேன் என்று கையில் கான்ட்ராக்டை எடுத்து சென்றனர்.

கம்பெனி மேனேஜர் ஆதேஷ் பார்த்து வரவேற்றார். பின்னே வந்த அகிலை பார்த்து கூட்டம் கூடியது. துருவன் கடுப்புடன் அவர்களுடன் வந்தான்.

அவரிடம் கான்ட்ராக்ட் பற்றி பேசி அதை கேன்சல் செய்து துருவனிடம் மன்னிப்பு கேட்க வைத்தான் ஆதேஷ். துருவனை உங்களுக்கு தெரியுமா? என்று அகிலிடம் அசிஸ்டன்ட் மேனேஜர் பொண்ணு கேட்க, அவன் அவளை முறைத்தான்.

துருவன் என்னோட உடன் பிறந்த தம்பி என்றான்.

சார், உங்க தம்பியா? என்ற மேனேஜர், நான் அசிஸ்டென்ட் பதவியை தம்பிக்கு தாரேன் சார் என்றார் துருவனை ஏமாற்றிய மேனேஜர். அந்த பொண்ணு அவரை முறைக்க, என்னோட மாப்பிள்ள நினைச்சா உங்க கம்பெனியவே வாங்க முடியும். வாங்கி என்ன செய்ய? கம்பிளைன்ட் தானே அதிகமாகும்.

சார், நீங்க கோட்டையூர் தலைவரோட பையன் தானே? அவர் கேட்க, ஆமா..நான் அவர் பையன் தான். நீ காசை பிடுங்கி வைச்சிருக்கேயே துருவன், அவர் எங்க வீட்டு மாப்பிள்ள..

உன்னோட வேலைய நீயே வச்ச்சுக்கோ. என்னோட மாப்பிள்ள கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பாதி உன்னிடம் இருக்கு. பிடித்தல் பணம் எல்லாத்தையும் சேர்த்து 2 லாக் சிக்ஸ்டீன் தவுசண்டு இன்னும் ஒரு வாரத்துல அவர் கைக்கு வரணும் இல்ல. இந்த கம்பெனியை செயல்பட விட மாட்டோம் பிரதீப் சொல்ல,

உங்க ஓனர பார்க்கணுமே? எங்க இருப்பாரு? ஆதேஷ் கேட்க, பணத்தை கேட்டவுடன் வாயை பிளந்த மேனேஜர் ஓனர் என்றவுடன்..கண்டிப்பா சார். ரெண்டே நாள்ல்ல தந்துருவோம் என்று அவர் சொல்லி மழுப்பினார்,

துருவன் அவனை அருவருப்புடன் பார்த்து, ஏன் சார்? மத்தவங்க உழைப்ப திருடுறது அசிங்கமா இல்லை. எம்பிளாயிய மனுசனா மதிச்சு பேசுங்க என்று அங்கே இருக்க பிடிக்காமல் அவன் செல்ல,..அகில் அவன் பின் ஓடி வந்தான்.

துருவன் முன் வந்த ஒருவன், என்னடா வேலைய விட வந்தியா? கேட்க, ஆமாடா டுபுக்கு என்ற துருவன் கோபமாக திரும்ப, அகில் பின்னே அவனுடன் வேலை பார்த்தவர்கள் வந்தனர்.

அகில் சார், உங்க ஜோடிய காணுமே? ஒருவன் கேட்க, துருவனை பார்க்கணுமே? மீண்டும் கோபமாக செல்ல,துருவா..நில்லுடா..என்று அகில் கத்தினான்.

துருவனை உங்களுக்கு தெரியுமா? அவனிடம் இப்பொழுது பேசியவன் கேட்க, அவன் என்னோட தம்பி. என்னை விடுங்களேன்..ஆதேஷூம் பிரதீப்பும் அகிலை பார்த்து சிரித்தனர். தம்பியா? என்று அதிர்ந்து துருவனை பார்த்தனர்.

அண்ணா..எதுக்கு அவன் பின்னாடி ஓடி வந்தீங்க? தேவையா? ஆதேஷ் கேட்க

காரை எடுத்துட்டு நம்மளல விட்டுப் போகப் போறான். அது பவியோட ஃபேவரேட் கார். சின்னதான ஸ்கிராட்ச் ஆனாலும் செத்தேன்.

சரி, வா..போகலாம் என்று பிரதீப், ஆதேஷ், அகில் வெளியே வர, பிரஸ் அவர்களை சூழ்ந்தனர்.

துருவன் திரும்பி இவர்களை பார்க்க, துருவா..போகாத நில்லு என்று அகில் கத்தினான்.

யார் சார் அது? அனைவரும் கேட்க, பவி அங்கே மாஸ்க் போட்டு வந்து அகிலை இழுத்து செல்ல, அது அகிலோட தம்பி ஆதேஷ் சொல்ல அனைவரும் காரை பார்த்தனர்.

மாமா..வாங்க என்று ஆதேஷ் பிரதீப்பை இழுத்து வர இருவரும் சிரித்தனர்.

ஊர்ல இருக்கிறதா சொல்லிட்டு இங்க என்ன பண்ற? பவி கேட்க, அய்யோ..பவி நாம அப்புறம் பேசலாம். காரை எடு..என்று இருவரும் ஓடி கார் அருகே வந்தனர். ஆதேஷூம் பிரதீப்பும் ஏற்கனவே துருவன் பின் சென்றிருப்பர். ஒரு பத்திரிக்கையாளன் மட்டும் அவர்களை பின் தொடர்ந்தான்.

மாப்பிள்ள நான் காரை ஓட்டுகிறேன் என பிரதீப் வேகமாக சென்று துருவன் கார் முன் நிறுத்தினான். மூவரும் காரிலிருந்து இறங்க, ஒருவன் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தான்.

பிரதீப் துருவன் முன் வந்து. இவ்வளவு கோபமா?

ஆமா மாமா, பணம் இருந்தால் ஒரு மாதிரியும் இல்லை என்றால் வேற மாதிரியும் நடந்துக்கிறான்.

துருவா..இப்ப உன்னை பார்த்தால் பள்ளி படிக்கும் போது உன்னை பார்த்தேனே அதுபோல் தோணுது ஆதேஷ் சொல்ல, ஆமா..வளர்ந்தாலும் அப்படியே தான் துருவா இருக்க பிரதீப் அவனை அணைத்து நோ..டென்சன் என்றான்.

அகில் எங்க?

அவனை தான் மாஸ்க் போட்டு..அச்சோ..யாரா இருக்கும்? அவர்கள் கேட்க, நான் தான் என்று மாஸ்க்கை அவிழ்த்தாள் பவதாரணி அந்த செய்தியாளன் காலரை பிடித்துக் கொண்டு.

மாட்டுனியா? ஆது..இங்க வா. இவனை பிடி ரொம்ப நேரமா பிடிச்சிருக்கேன்னா? என்று அவனை விட்டு, அகில் காரை பார்த்து, அகில் என்ன பண்ண? போச்சா..கார் போச்சா..புலம்பிக் கொண்டே அருகே சென்று பார்த்தாள்.

அண்ணி, சாரி. நான் தான்..துருவன் சொல்ல, இப்பவே சரி பண்ணித்தாடா அகில் என்று கத்த..அகில் காரிலிருந்து தண்ணீரை அருந்திக் கொண்டே இறங்கினான்.

உனக்கு இப்ப தண்ணீர் முக்கியமா போச்சா?

ஆமா, நீ அடிச்சேனா? எனக்கு ஊர் போற வரைக்கும் தெம்பு வேணாமா?

அதான் குடிச்சேன். “ஸ்டார்ட் நைவ்” என்று அவன் ஓடினான்.

நில்லுடா, அவள் விரட்ட..இவனை என்ன செய்றது? பிரதீப் கேட்க, அவனோட கேமிராவில் அவன் எடுத்த வீடியோவை அழித்து விட்டு அவனை விட்டுருங்க.

அவனையெல்லாம் விடுற? நான் உன்னோட டார்லிங்ல விட்றலாமே அகில் கேட்க, மை டார்லிங் நம்ம கார் இப்படி இருக்க காரணம் யாரு?

அகில் துருவனை கை காட்டினான்.

அவனிடம் கார் கீ எப்படி போனது? பவி கேட்க, அகில் திறுதிறுவென விழித்தான்.

கார் உடனே சரியாகணும்?

சரிம்மா, அர்ஜூனிடம் சொல்லி எடுத்து போக சொல்றேன். இப்பவே நாங்க போகணும் என்று பவி மேனேஜரை அழைத்து அவளை பத்திரமா வீட்ல விட்ருங்க என்றான்.

சரிங்க சார் என்று அந்த பொண்ணு சொல்ல, சரி எல்லாரிடமும் சொல்லி கல்யாண வாழ்த்தை தெரிவித்து, நாங்க நாளைக்கு ஊருக்கு வந்துருவோம் என்று சொல்லி கிளம்பினாள். அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.

அவர்கள் திருமண நாளும் வந்தது. அனைத்து நண்பர்கள், அவர்களின் குடும்பத்தார்கள் என கூட்டம் நிரம்பி வழிந்தது. அழகான அதிகாலையில் நான்கு ஜோடிகளும் அழகாக அவர்களது மேடையில் அமர்ந்து தன் காதல்கிளிகள் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்து தமக்குடையவர்களாக்கினர்.

அவ்வாறாக நாட்கள் கழிய துருவன் வெற்றியுடன் சேர்ந்து தன் அங்கீகாரத்தை அனைவர் முன்னிலையிலும் நிரூபித்துக் கொண்டிருந்தான். துளசியை அவர்கள் ஊர்க்கல்லூரியில் மாற்ற, அவள் ரதி வீட்டில் படிப்புடன் அவர்களது குடும்பப் பொறுப்பை செவ்வனே செயலாற்றி வந்தாள்.

Advertisement