Advertisement

அத்தியாயம் 144

தியாவை அஜய் அம்மா அவர் அறைக்குள் அழைத்து சென்று, இங்க உட்காரு என்று தங்க நெக்லஸ் வெள்ளைக்கல்லுடன் இருப்பதை அவளுக்கு அணிவிக்க,

அத்தை, என்ன செய்றீங்க? வேண்டாம்.

உன்னுடையதை தான் வித்துட்ட. இதை போட்டுக்கோ. நம்ம வீட்டு பிள்ள இப்படி வெறும் கழுத்திலா இருப்பது? இது மாமா உனக்காக வாங்கியது.

ப்ளீஸ் அத்தை வேண்டாம்.

நாங்க உனக்காக வாங்கக் கூடாதா?

அப்படியில்லை அத்தை. அக்காவுக்கு வாங்குனீங்களா?

அவளுக்கும் வாங்கி இருக்குடா. அப்பவே அவளுக்கு கொடுத்தாச்சு.

சரி அத்தை. நான் வாங்கிக்கிறேன். ஆனால் நான் உங்களுக்கு ஏதாவது கொடுத்தால் நீங்களும் வாங்கிக்கணும்.

சரிம்மா..கண்டிப்பா வாங்கிக்கிறேன். இப்ப போட்டுப்பேல்ல?

அவள் கூந்தலை ஒதுக்கினாள். போட்டுக் கொண்டே.. உன்னோட அத்தை மாதிரியே நடந்துக்கிற? அவளும் இதெல்லாம் வாங்கவே மாட்டாள். செய்தால் மறுபடியும் செய்து விடுவாள். ஆனால் இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்..அவள் யார் வீட்டிலும் பெரியதாக தங்கவே மாட்டாள். தெரியாதவங்களுடன் பேச மாட்டாள். ஆனால் நீ நல்லா பேசுறடா?

அத்தை சங்கோஜமாக உணர்வாங்க. என்னிடமே கல்யாணத்தோட பேசவே தயங்கினாங்க. எங்க வீட்டுக்கு போன பின்னும் சற்று நேரம் இப்படி தான் இருந்தாங்க. மறுநாள் தான் நல்லா பேசினாங்க என்று புன்னகைத்தாள்.

அத்தை, நேரமாகுது. நீங்க முதல்ல கிளம்புங்க. எல்லா தட்டும் எடுத்து வச்சுட்டீங்களா?

அவள் கன்னத்தை பிடித்து, பொறுப்பா கேக்குற? இன்னும் பார்க்கலை. நான் பார்க்கிறேன்.

நானும் வாரேன் அத்தை.

இல்லடா. நீ போ..அவங்களோட சேர்ந்து வா..

வேண்டாம் அத்தை. எனக்கு கொஞ்சம்..என்று தயங்கினாள்.

சரி, பாப்பாவை பார்த்துட்டு வா. நாம தயார் செய்யலாம் என்றார் அவர். சத்யா அங்கிருந்து கிளம்ப, அவள் பேசியதை கவனித்த சத்யா அம்மா கண்ணீருடன் நின்றார்.

அம்மா, என்னை சொல்லிட்டு நீங்க அழுறீங்க?

இல்லடா. அவங்ககிட்ட விட்டு கொடுக்கக்கூடாதுன்னு பேசுறா? நானும் அவளை தனியே வேலை வாங்கி ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் என்று சத்யாவின் மீது சாய்ந்து அழுதார்.

ஏய், அம்மாவும் மகனும் இந்த நேரத்துல என்ன அழுதுகிட்டு இருக்கீங்க? என்ற ரமா, நீ வா..என்று தியாவிடம் அழைத்து சென்றார்.

அக்கா, இருங்க என்று அவர் சொல்வதை கேட்காமல் அவரை இழுத்து செல்ல சத்யாவும் பின் சென்றான்.

அவர்கள் அங்கே செல்ல பாப்பா தயாராக இருந்தாள். அம்மா..பாப்பாவுக்கு புது டிரஸ் நல்லா இருக்கா?

சூப்பரா இருக்கு. அத்தை பாப்பாவை சூப்பராக தயார் செய்திருக்காங்க என்று அவளுக்கு முத்தம் கொடுக்க, “மாம் இஸ் மோஸ்ட் பியூட்டிஃபுல் வுமன்”

“தேங்க்யூ மை க்யூட் பார்பி டால்”. பாப்பாவை பிடி என்று அவள் அலமாரியை திறந்து கருப்பு பொட்டு எடுத்து பாப்பா காதுக்கு பின் வைத்து விட்டாள்.

அண்ணி, பாப்பா சூப்பரா இங்கிலீஸ் பேசுறா?

தியா புன்னகையுடன், இப்பெல்லாம் இங்கிலீஸ் இல்லாத இடமேயில்லை. பாப்பா வயித்துல இருக்கும் போதே, ஃபுல்லா இங்கிலீஸ் தான் பேசினேன். வொர்க்கும் பாரின் கம்பெனி வொர்க் என்பதால் இப்ப வரை நான் பேசுவதை பார்த்து கொஞ்ச கொஞ்சமாக பழகினாள். மாமா..கூட இங்க இங்கிலீஸ் பேசுவாங்க. அவங்களும் பாப்பா பேச காரணம் தான் என்று எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டே பேசினாள்.

பார்த்தியா? நான் இங்கிலீஸ் பேச மாட்டேன்னு சொல்லாம சொல்றா?

அத்தை..என்று அவர்களை பார்க்க, கையிலிருந்த மேக் அப் செட்டில் இருந்து சின்ன பாக்ஸ் ஒன்று உருண்டு ஓடியது.

திடீர்ன்னு பேசி, இப்படி பயமுறுத்துறீங்க? என்று பேசிக் கொண்டே அதை எடுக்க அதன் பின்னே ஓடினான்.

அவ்வளவு முக்கியமாடி அந்த பாக்ஸ்?

அத்தை, நான் பொருட்களை சட்டென தூக்கி போட மாட்டேன். முழுவதும் காலியானால் தான் போடுவேன். இது ஒன் ஃபிப்டி ருபீஸ் அத்தை என்று பின்னே சென்றாள்.

வாசல் கதவோரம் இடித்து நிற்க, இது கூட ஆட்டம் காட்டுது என்று அதை எடுத்து நிமிர்ந்தாள். சத்யாவை பார்த்து பயந்து நகர்ந்தாள். ஆனால் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.

அவனை பார்த்து தியா பயப்படுகிறாள் என்று அஜய் அம்மா புரிந்து, சத்யா தங்கையிடம் கண்ணை காட்டினார். அவள் பாப்பாவை தூக்கிக் கொண்டு..கணவனுடன் வெளியேற பின்னே இரு அத்தைகளும் செல்ல, இருவரும் அவர்களை பார்த்தனர்.

அத்தை..இருங்க நானும் வாரேன் என்று தியா சொல்ல, அவர்கள் சென்று விட்டனர். தியா நகர்ந்து செல்ல, அவள் கையை பிடித்து சத்யா அவளை அறைக்குள் நகர்த்தி கதவை தாழிட்டான்.

மாமா, நேரமாகுது..என்று அவன் கையை எடுத்து விட்டு அவனை பார்த்தாள். அவன் பார்வை அவளை முழுதாய் ஆராய..அவளுக்கு பழைய நினைவு வந்து, பயத்துடன் அவனை விட்டு விலக்கி படுக்கையை தள்ளி வந்தாள். அவன் அருகே வர..மாமா..வேண்டாம். நீங்க வீடியோ பார்க்கலையா? நான் தப்பு செய்யலை என்று கண்ணீருடன் அவனை பயத்துடன் பார்த்தாள்.

அவளை இழுத்து அணைத்த சத்யா, என்னை மன்னிச்சிரு தியா. நான் தப்பு செஞ்சுட்டேன். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். மன்னிக்க முடியாத தவறு தான். பாப்பாவிற்காகவாது நம்ம வீட்டுக்கு வா. மத்தவங்க உன்னை இப்படி பேசுவதை என்னால் கேட்க முடியாது. எனக்கு நீ பக்கத்திலே இருக்கணும். இனி உன்னிடம் தப்பா நடந்துக்க மாட்டேன்.

மாமா..விடுங்க. எனக்கு வேலை இருக்கு. நான் போகணும் என்றாள்.

போகப்போறியா? என்று கண்கலங்கினான்.

மாமா, பங்சனுக்கு நேரமாகுது.

உனக்கு இந்த பங்சன் தான் முக்கியமா? நீ இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன் தெரியுமா? இப்ப கூட வர முடியாத சூழ்நிலை தான். நீ இங்க தான் இருக்கணுன்னு தெரிந்ததும்.. எல்லாத்தையும் அப்படியே போட்டு விட்டு வந்துட்டேன். ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் தா தியா.

பைத்தியம் மாதிரி ரெண்டு நாளா உன்னை தேடி உடம்புக்கே முடியாம போச்சு என்றது அவள் கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள்.

மாமா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. பாப்பாவை பற்றி சொல்ல ஆசை தான். ஆனால் எங்கே அவனோட சேர்த்து பேசிடுவீங்களோன்னு பயமா இருந்தது. நீங்க இல்லாம நானும் ரொம்ப கஷ்டப்பட்டேன். பாப்பா வயித்துல இருக்கும் போது ஹாஸ்பிட்டல்ல போவோம். அத்தை, மாமா இருவருமே வருவாங்க. அவங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் தான். ஆனால் எல்லாரும் அவங்க மாமாவோட வருவாங்க. நிறைய பேசுவாங்கல்லா. அப்புறம்…என்று நிறுத்தி அதை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனால் போக போக பழகிடுச்சு என்று கண்ணை துடைத்தாள்.

சாரிம்மா.

என்னையும் மன்னிச்சிருங்க மாமா. நானும் உங்களை விட்டு வந்துருக்க கூடாது என்றாள்.

தூரமா நடந்தா கால் வலிக்குமா? எதுக்கு வலிக்கும்?

அவள் புன்னகையுடன், பாப்பா என்னை விட்டு நகராமல் தொந்தரவு செய்வா. அதான் அத்தை அவளிடம் அப்படி சொன்னாங்க. அதை உங்களிடம் சொன்னாளா?

ஆமா என்று வருத்தமுடன் பாப்பாவை வளர்வதை பார்க்க முடியாமல் போச்சு.

அவ இன்னும் கிழவியாகலை. நாலு வயசு தான் மாமா. இனி பாருங்க என்றாள்.

தியா..நீ நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்றீயா?

போகலாம். மாமா..ஆனால் என்னால் வேலையை விட முடியாது. கான்ட்ராக்ட் சைன் பண்ணி இருக்கேன்.

கான்ட்ராக்ட்டா?

இன்னும் பத்து வருசத்துக்கு கண்டிப்பா வேலை பார்க்கணும்.

பத்து வருசமா?

ஆமா மாமா.

சரி. வருவேல்ல. என்னை மன்னிச்சிட்டியா?

மன்னிக்கலாம் இல்லை மாமா என்று மறை கூறியதையே இவனிடமும் சொல்ல, அவளை அணைத்து இனி என்னை விட்டு போக உன்னை அனுமதிக்கவே மாட்டேன் என்றான்.

மாமா..இப்ப போகலாமா?

நார்மல் தானே? அவன் கேட்க, அவள் மௌனமாக இருந்தாள்.

ஆப்ரேசனா?

ஆமா மாமா, எனக்கு வொர்க் டென்சன். நீங்க இல்லாதது. அப்புறம் பாப்பாவை இழக்கும் நிலை வந்து அவளை தக்க வைத்தோம்..

என்ன சொல்ற?

மாமா, இங்க வரும் போது டாட் அளவு தான் பாப்பா இருந்தா. நான் அஜய் மாமாவிடம் வேலை ஏதாவது கேட்டு தான் வேலை செய்து தான் சமாளித்து வந்தேன். திடீர்ன்னு நான்காவது மாதம் ப்ளீடாகிடுச்சு. அதனால ஒரு மாதம் ஓய்வில் தான் இருந்தேன். பின் தான் வேலை செய்தும்..நகையை வைத்து, நீங்க கொடுத்த பணம் அனைத்தையும் உபயோகித்து தான் செலவுகளை பார்த்தேன்.

மாமா தாரேன்னு சொன்னாங்க. நான் அதை ஏத்துக்கிட்டா உங்களுக்கு இங்க மரியாதை இல்லாமல் போகும். அதனால வாங்காமல் சமாளித்தேன். ஆப்ரேசன் என்பதால் மீண்டும் ஒரு மாதம் வேலை செய்யலை. அதனால் வேலை போனது. பின் பாரின் கம்பெனியில் பதினைந்து வருட கான்ட்ராக் வேலையை பார்த்துகிட்டு இருக்கேன். பாப்பா ஸ்கூல் பீஸ்க்கும் மாமாவை நான் கொடுக்கவிடலை என்றாள்.

கண்ணீருடன் அவளை அணைத்து மீண்டும் சாரி சொன்னான்.

மாமா..போகணும். நேரமாகுது. அத்தை தேடப்போறாங்க?

அந்நேரம் ரொமான்ஸ் செய்தது போதும். வெளிய வாங்க என்று தியாவை போலே அஜய் அண்ணி அழைத்தாள்.

வாங்க மாமா என்று அவன் கையை பிடித்து கதவை திறந்தாள்.

இப்படியேவா வரப் போறீங்க?

என்ன? பயந்த தியா கண்ணாடியில் அவளை பார்த்து விட்டு அவனை பார்த்தாள்.

நான் சொன்னது கண்ணீர் தடத்தை. ரெண்டு பேருமே நல்லா அழுதிருக்கீங்க போல. தயாராகி வாங்க. சீக்கிரம் வாங்க. எல்லாரையும் என்னால் பேசி சமாளிக்க முடியாது என்றாள்.

அக்கா, பாடி சமாளிங்க.

பாரேன் இவளை..என்று சீக்கிரம் வாங்க என்று அவள் சென்றாள்.

இருவரும் கை பிடித்து சேர்ந்து வருவதை பார்த்து அஜய் சத்யாவிடம், இப்ப முறைடா பார்க்கலாம்? என்றான். அனைவரும் மகிழ்ச்சியுடன் அவர்களை பார்த்தனர்.

தியா சத்யா கையை விட்டு அஜய் அம்மா காதில்..அஜய்யுடம் சொல்லுங்க என்றாள்.

அவனை பார்த்தியா அழுதிருக்கான். நல்லா தெரியுது. இப்படியே இருந்தால் பொண்ணே அவனை விட்டு போயிருவா..இருவரும் அஜய்யை பார்த்துக் கொண்டே பேசினர்.

என்னை பத்தி தான் பேசுறீங்களா? அஜய் அவர்களிடம் கேட்க, தியா விலகினாள்.

கவினிடமிருந்த பையை வாங்கி, இது உனக்கு தேவைப்படுமாம் என்று அவன் அம்மா தியாவை பார்த்து புன்னகைக்க, இதுல என்ன இருக்கு? அஜய் திறக்கும் முன்..

இது எனக்கு? போங்க சார். நான் தர மாட்டேன் கவின் சொல்ல, அனைவரும் அவனிடமிருந்து அதை வாங்கி அவனை அழுத்தி பிடித்தனர்.

மேக் அப் செட் இருந்தது.

அடப்பாவி, இதை தான் தூக்கிக்கிட்டே திரிகிறாயா? அபி விரட்ட..அனைவரும் சிரித்து விட்டு கிளம்பினர். அஜய்க்கு ஏதோ தன்னை விட்டு போவதை போல் உணர்ந்தான்.

அத்தை, ப்ளீஸ் அஜய்யிடம் சொல்லுங்க. அவனை பார்க்க பாவமா இருக்கு என்றாள் அவன் அண்ணியும். கொஞ்ச நேரம் தானே? நடப்பதை மட்டும் வேடிக்கை பாரும்மா என்று பேசினர்.

மண்டபத்தை அடைந்தனர். வெற்றி குடும்பம்..ஊரார் அனைவரும் அங்கு இருந்தனர். பொண்ணோட அறைக்கு பொண்ணுங்க எல்லாரும் சென்றனர். சத்யா தங்கை தான் பொண்ணை அழைத்துக் கொண்டு மேடை ஏறினாள்.

அஜய்யை சுற்றி அவன் ஆபிஸ் பசங்க, அர்ஜூன் அவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இருந்தனர். ஸ்ரீ கண்கலங்க பொண்ணை பார்த்தாள். தாரிகா அவள் கையை பிடிக்க, அஜய் நிமிர கூட இல்லை.

பொண்ணு ஸ்ரீயிடம் கண்ணை காட்டி மேலே அழைத்தாள். ஸ்ரீ அர்ஜூனை பார்த்தான். அவன் போகச்சொல்லி சிக்னல் செய்ய அவளும் பொண்ணருகே சென்றாள்.

மாப்பிள்ள சார், பொண்ணை பாருங்க. ரொம்ப அழகா இருக்கா அகில் சொல்ல

அவ எப்படி இருந்தா எனக்கென்ன? அஜய் கூற, என்ன சார் இப்படி சொல்றீங்க?

வாயை மூடிக்கிட்டு இருடா என்று அஜய் கண்ணீர் வடிக்க, சார் அழுதா தப்பாகிடும் என்றான் அர்ஜூன்.

சைலேஷ், கைரவ், நித்தி அவனிடம் வந்து, வாழ்த்துக்கள் அஜய் எப்படியோ குடும்பஸ்தனாக போற?

கோபமாக அஜய் எழுந்தான். அனைவரும் அவனை திகைத்து பார்த்தனர்.

சார், முதல்ல பொண்ணை பாருங்க என்றான் அர்ஜூன்.

அர்ஜூன், எல்லாரும் என் பொறுமையை சோதிக்கிறீங்க? என்று சத்தமிட..அனைவரும் இவனை தான் பார்த்தனர்.

எனக்கு பொண்ணை பிடிக்கல என்றான். அந்த பொண்ணு கண்ணீருடன் நின்றாள். சார்..அகில் சத்தமிட்டான்.

சொல்லிட்டேன். கிளம்புகிறேன் என்றான். அந்த பொண்ணு கீழிறங்கி அவனிடம் வந்தாள். அப்பொழுது கூட அவள் முகத்தை பார்க்கலை. சட்டென அஜய்யை கட்டிக் கொள்ள, கோபமாக அவளை தள்ளினான். ஸ்ரீயும், பவியும் சேர்ந்து அவளை பிடித்தனர்.

உனக்கு என்னடா பிரச்சனை? அவன் அப்பா வந்தார்.

என்னை உங்களுக்கு பிடிக்கலையா சார்? என்ற வார்த்தையில் உறைந்து அந்த பொண்ணை பார்த்தான்.

பிரகதி..நீ..பிரகதி..என்று கண்ணீருடன் அவளிடம் வந்து, நீ தான் பொண்ணா? என்று அவளை அணைத்து..எங்க போன பிரகதி? உன்னை எல்லா இடத்திலும் தேடினேன். நீ கிடைக்கவில்லை. திடீர்ன்னு எல்லா ஏற்பாட்டை பார்க்கவும் வேற பொண்ணுன்னு நினைச்சு தான் கோபமா நடந்துகிட்டேன். சாரிம்மா..என்றான்.

டேய்..இதுக்கு தான் என்னை இப்படி வறுத்து எடுத்தீங்களா? அம்மா சொல்லி இருக்கலாம்ல?

எதை சொல்லணும்? நீ தான் வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்ட.

அதுக்கு..சொல்லி இருந்தால் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டேன் என்றவுடன் அகில் சிரித்துக் கொண்டே பிரகதியிடம் வந்து,

சார்..அழுதார் தெரியுமா? அது எப்படி? அவ யாரையும் கல்யாணம் பண்ணிக்கமாட்டா? என்று சிரித்து, சார் விட்டால் நீங்களே கல்யாணத்தை நிறுத்தி இருப்பீங்க?

நாழியாகிறது வாங்க..என்று பெரியவர் அழைக்க, இப்ப தான் நிம்மதியுடன் அஜய் மூச்சை விட்டு, இத்தனை நாள் எங்க இருந்த?

உங்க வீட்டுல தான்.

என்னோட வீட்லயா?

ஆமா, நீங்க வர மாட்டீங்கன்னு தெரிஞ்சு தான் அங்க இருந்தேன். நீங்க வீட்ல இருப்பது தெரிந்தால் நான் தங்கி இருக்க மாட்டேன்.

ஆமா, எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட?

ஹலோ..உங்க பேச்சை நாளை இரவு வச்சுக்கோங்க. இப்ப முதல்ல நிச்சயத்தை முடிக்கணும் அவன் அண்ணி சொல்ல, ஆமா..நீ வாம்மா. இவன் கிடக்கான் என்று ரமா பிரகதி கையை பிடித்து அழைத்து சென்றார்.

மகிழ்ச்சியான தருணங்களை மனதில் பிரகதி பதிய வைத்து, நாளை அவருக்கு சொந்தமாகி விடுவோம் என்று சந்தோசமாக தூங்கினாள்.

சத்யா- தியா அறைக்கு பாப்பாவுடன் சென்று, தியா அவளுக்கு ஆடை மாற்றி விட்டுக் கொண்டிருக்க, படுக்கையில் சாய்ந்திருந்த சத்யா தன் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏய்..டீச்சரம்மா, இதுக்கெல்லாமா கோபிப்பது? என்று மறை காயத்ரி பின் ஓடி வந்து அவளை பிடித்து லாக் செய்தான். மூவரும் அறையிலிருந்து மெதுவாக இருவரையும் எட்டி பார்க்க..ஒன்லி ஒன் கிஸ் ப்ளீஸ். பாப்பாவை கவனித்து டயர்டாகிட்டேன் என்றான் மறை.

காயத்ரி அவள் ஆசைப்படி ஆசிரியராகி விட்டாள். சக்தி- மாலினியும் அவர்களது தேர்வில் வெற்றி பெற்று கைடாக ஒன்று சேர்ந்து ஏலகிரியை வலம் வருகின்றனர்.

கொடுக்கிறேன். ஆனால் எனக்கு மசால் தோசை வேண்டுமே?

என்ன? மசால் தோசையா? என்று விலகினான்.

இப்ப தான சாப்பிட்டு வந்தோம். என்னோட மாமா..செய்றது நல்லா இருக்குமே? என்று அவனது சட்டை காலரை திருகினாள்.

எனக்கு எதுவுமே வேண்டாம். நான் என்ன கேட்டால் நீ என்ன கேக்குற? என்று அவன் செல்ல, மாமா..நானும் வாறேன் என்று காயத்ரி அவன் பின் ஓடினாள்.

மூவரும் தலையை உள்ளே இழுக்க சத்யாவும் தியாவும் நெருக்கமாக இருந்தனர். அவன் அம்மா அங்கே வர, இருவரும் விலகினர்.

நான் பாப்பாவை தூக்கிட்டு போக வந்தேன்.

அத்தை..பெரியத்தை எங்கே? அவ இங்க வெளிய தான் காயத்ரி பாப்பாவோட இருக்கா.

எதுவும் வேண்டுமா?

அத்தை, நானும் உங்களுடன் வரவா?

இல்லம்மா, நீ சத்யாவோட இரு. அம்மா, அப்பா..”குட் நைட்” பாட்டியோட தூங்கவா?

சரிடா..என்று சத்யாவை பார்த்தான். அவன் விழிகள் அவளை பார்க்க,..ரொம்ப சோர்வா இருக்கு மாமா. தூங்கலாமா? கேசுவலாக சொன்னாள்.

அவளை தன் பக்கம் திருப்பிய சத்யா, நீ பயப்பட வேண்டாம். உன் விருப்பமில்லாமல் உன்னை தொட மாட்டேன் என்றான்.

இல்ல மாமா. கொஞ்சம் நர்வசா இருக்கு. அதான்.

போ..தூங்கு என்று அவன் படுத்துக் கொண்டான். அவளும் படுத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

என்ன?

மாமா, உங்களுக்கும் கஷ்டமா இருந்திருக்கும்ல்ல?

வேண்டாம் தியா. அதை விடு. நீ தூங்கு. காலை வேகமாக எழணும்.

மாமா..என்று அவனருகே வந்து அவனை கட்டிக் கொண்டு கண்ணை மூடினாள். அவன் தயங்க..மாமா கையை மேல போட்டு தூங்குங்க. ஒன்றுமில்லை என்றாள்.

மறுநாள் அனைவரும் வேகமாகவே கிளம்பினர். சத்யா மகளுடன் இருக்க, அங்கே வந்த குட்டிப்பையனை பார்த்து அவள் ஒளிந்தாள்.

என்ன பண்றீங்க? அந்த பையனை தெரியுமா? அவனுடன் விளையாடலாமா? அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அந்த பையன் அவளை பார்த்து ஓடி வந்தான்.

அவள் பயத்துடன் அவனை பார்க்க, என்ன சத்யா? உன்னோட அப்பா உன்னை பார்க்க வர மாட்டார்ன்னு சொன்னேன்ல. வரல பார்த்தேல்ல. அவருக்கு உன்னை பிடிக்காது. அதான் வரலை அவன் சொல்ல,

ஏய்..குட்டிப்பையா என்ன பேசுற? சின்னவள் சத்தம் கொடுக்க, ஆமா..இவள பிடிக்காம தான் இவளோட அப்பா..விட்டுட்டு போயிட்டாங்க என்றான்.

அம்மா..என்று நம் நாராயிணி அழ, இதுவரை அழுது பார்க்காத தன் மகளை பார்த்த சத்யா அந்த பையனிடம், அவளை பிடிக்காம அவளோட அப்பா விட்டுட்டு போகல.. என்று அவளை தூக்கிக் கொண்டு. அவள் அப்பா தப்பு செய்து தான் இவங்க பிரிஞ்சிருந்தாங்க என்று அந்த பையன் முன் வந்தான்.

ஹே..மேன், ஹூ ஆர் யூ? அந்த பையன் கேட்க, “ஹீ இஸ் சத்யாஸ் பாதர்” என்று தியா சினமுடன் வந்து அவனை துக்க, ஆன்ட்டி..என்னை விட்டுருங்க..அம்மா..அம்மா..கத்தினான் அந்த பையன்.

அவன் அம்மா அங்கே வரவும் அவனை கொடுத்து விட்டு, பிள்ளைங்க முன்னாடி எதை பேசணுமோ? அதை மட்டும் பேசுங்க என்று சத்யாவிடம் வந்து அவர்களை முறைத்துக் கொண்டே..வாங்க போகலாம் என்று வெளியே அழைத்து வந்து, இவங்களுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லலைன்னா நம்மையே திருப்பி விட்டுருவாங்க என்றாள்.

தன் ஆசை நாயகி அழகு சிலையாக மேடையில் இருப்பதை பார்த்துக் கொண்டே வெள்ளை நிற பட்டி வேஷ்டியுடன் அஜய் உள்ளே வந்தான். அவனையும் மேடையில் ஏற்றி மங்கல முழக்கத்துடன் தாலியை அவன் கையில் கொடுக்க, அவன் வாங்கி கட்ட பிரகதிக்கு அவள் அம்மா, அப்பா நினைவு வந்து கண்ணீர் துளிகள் அஜய் கையில் பட்டது. அவன் தாலியை கட்டி விட்டு அவளை கண்ணீருடன் பார்த்தவன் புரிந்து, அவளை அணைக்க..டேய்..என்று அனைவரும் கத்தினர்.

இருங்கம்மா..என்று உன்னோட அம்மாவும், அப்பாவும் உன்னை பார்த்துக்கிட்டு தான் இருப்பாங்க. அவங்க ஆசியும் நமக்கு இருக்கும். நீ அழாம இருக்கணும் இல்ல..என்று அவளை பார்க்க, அவள் அனைவரையும் பார்த்து கண்ணை துடைத்தாள். அனைவரும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றனர்.

இரவு முதலிரவின் போது..எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட? என்று பிரகதியை அணைத்துக் கொண்டே கேட்டான். எனக்குன்னு நிலையா ஏதாவது இருக்கணும்ல. அதான் ஒத்துக்கலை. இப்ப இருக்கு ஒத்துகிட்டேன்.

என்ன இருக்கு?

நான் நியூட்ரீசியனிஸ்ட். ஒரு ஹாஸ்பிட்டல்ல ஜாயின் பண்ணியிருக்கேன்.

எங்க?

ஆருத்ரா பெயரை கூற, கடைசியில நீயும் அங்கேவா?

ஆமா. தேவ் சாருக்கும் சுவாதிக்கும் ஒரு வாரத்தில் மேரேஜ் தெரியுமா?

அவங்க என்னமும் செய்யட்டும். எனக்கு என்று அஜய் விளக்கை அணைத்தான். இவர்களின் வாழ்க்கை இனிதே ஆரம்பமானது.

அஜய் திருமணம் முடிந்து தியா அவளது உடைமை பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அஜய் அம்மாவும் அப்பாவும் வருத்தமுடன் தூங்கும் சத்துவை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தியா தயாரா? சத்யா சத்தம் கொடுக்க, வந்துட்டேன் மாமா..என்று இருவரையும் பார்த்து, மாதா மாதம் கண்டிப்பா உங்களை பார்க்க வந்துடுவோம் அத்தை. மாமா நீங்களும் அத்தையோட வீட்டுக்கு வரணும்.

தியா சத்துவை தூக்கிக் கொள்ள, சத்யா அம்மாவும் அப்பாவும் ,அஜய் அம்மா அப்பாவை வீட்டிற்கு அழைத்தனர்.

இல்ல..இப்ப வேண்டாம். இன்னொரு நாள் கண்டிப்பா வாரோம் என்று கவலையுடன் புள்ளைய பார்த்துக்கோங்க என்று அஜய் அப்பா சொல்ல, அவன் அம்மா அழுதார்.

அம்மா, கிளம்பும் போது அழாதீங்க என்றான் அஜய்.

தியா அவன் அம்மாவை அணைத்து, அத்தை வாரா வாராம் விடுமுறையில் வந்துடுறோம். போதுமா? என்று கேட்கவும் தான் அவர் அமைதியானார்.

புள்ளைங்கள..நாலு வருசமா நல்லா பார்த்துக்கிட்டீங்க. ரொம்ப நன்றி அண்ணா..என்று சத்யா அப்பா, தேவராஜை அணைத்தார்.

நம்ம மருமகள், பேரப்பிள்ளய தான பார்த்துக்கிட்டோம். இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவ?

வாரோம் என்று அஜய் வீட்டிலிருந்து சத்யாவும் அவன் குடும்பத்தினரும் தியாவையும் பாப்பாவையும் அழைத்து சென்றனர்.

ஒரு வாரத்தில் தேவ்- சுவாதி திருமணமும், மறு மாதத்தில் கௌதம்- காருண்யா திருமணமும் நடந்தது. சுவாதியும், காருவும் மருத்துவ படிப்பை முடித்தவுடன் காரு ஆருத்ரா ஹாஸ்பிட்டல்லயே சேர்ந்தாள். தேவ் அப்பா கௌதமிற்கு அவருக்கு அடுத்த இடத்தை கொடுத்தார்.

தேவ் ஆசைப்படி வெளிநாட்டில் ஹாஸ்பிட்டல் அமைத்து நடத்தி வந்தான். சுவாதி அவனுடன் சேர்ந்து கொண்டாள். சீனு..நம் புகழ் எடுத்து அகழ்வாராய்ச்சி பிரிவில் அவளுடன் படித்து பட்டம் வென்று இருவரும் அவர்களுக்கான வேலையில் சேர்ந்தனர். திருமணத்தின் பின்னும் தன் வேலையை விடாது ஆர்வமுடன் தன் குடும்பம், வேலை இரண்டையும் பார்த்து அவளது குணம் மாறாது அனைவரிடமும் வாயாடிக் கொண்டே இரு பக்கமும் வலம் வந்தாள் நம் புகழ்.

தன் அக்கா திருமணத்தோடு தான் தன் திருமணமும் நடக்கணும் என காத்திருந்தான் நிவாஸ்- ஆருத்ரா. இருவரும் சேர்ந்து பெரிய பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தனர்.

மூன்று மாதங்களுக்கு பின்..வெற்றி வீட்டில் பிரதீப்- துகிரா திருமணத்தை பற்றி பேச்சு ஆரம்பிக்க, தீனா- புவிக்கும் கூட சேர்த்தே முடிக்கலாமே? அப்பத்தா கேட்டார். அங்கு வந்த அர்ஜூன் பாட்டி பொண்ணுகளுக்கு சேர்த்து முடிச்சிடலாமே?

பொண்ணுங்களுக்கா? மீனாட்சி கேட்க, ஏன்டி பொட்ட பிள்ளைகள வச்சிட்டு என்னடி பசங்களுக்கு முடிக்கணும்ன்னு சொல்ற?

என்னோட பேரனுக்கு இந்த மாசக்கடைசியில கல்யாணம் முடிவு செஞ்சுட்டதா பையன் சொன்னான். ஆனால் பொண்ணோட அப்பன் அங்க தான் கல்யாணத்தை நடத்தணும்ன்னு சொல்லீட்டாராம்..நான் நாளை பேச போறேன்.

அர்ஜூனை வேற பொண்ணா?

அடேய்..அஜூக்கு தான் என்னோட பேத்தி இருக்கால்ல? நந்துவ சொல்றேன்டா. அந்த பொண்ணோட அப்பன் பெரிய இவனாம். நம்ம ஊர்ல நடத்தாம வேண்டாம்கிறானாம்? விட்டிருவேனா?

கொஞ்சம் நம்ம குதிரைகளை பார்த்துக்கோங்க. வேலு பசங்க மத்த வேலைக்கு போனாலும் குதிரைய பாக்க வந்துருவானுக..ஒரு மணி நேரத்துல முடிச்சிட்டு போய்டுவானுக. வேலு தான் சென்னைக்கு போய் தங்கிட்டானே. அவனுக்கு புள்ள பிறந்ததை கூட பார்க்க போக முடியலை. அப்படியே பார்த்துட்டு வந்துருவேன். அது பிறந்து ஒரு வருசமாச்சு.

ஆமா, வேலு மாதிரியே இருப்பான் பாட்டி. பையன் செம்ம துடிப்பு பிரதீப் கூற, பார்த்துட்டு வந்துட்டியாய்யா..

அது எப்படி போகாமல் இருப்பது? அவனுக எல்லாருமே சிறு வயதிலிருந்தே உடன் வளர்ந்தவனுகல்ல. அதுவும் நம்ம வேலை கை நிறைய சம்பாதிக்கிறான். அவனை பார்க்கவே பெருமையா இருக்கு என்றான்.

சரிம்மா..பார்க்கிறோம். மூத்த மருமக படிப்ப முடிச்சிட்டா. சின்னவளுக்கு, ஜானுவுக்கு, துளசிக்கும் இன்னும் ஒரு வருசம் ஆகுமே. அதான் யோசிக்கிறோம்.

ரதி மகன் சின்னவன் ஏதோ..கம்பெனில வேலை பாக்குறதா சொன்னா. நல்ல வேலை ரதிக்கு..நம்ம காயத்ரி மாமியாராவது துணைக்கு இருக்காங்க. மூத்தவனாவது இடையில் வந்து பார்த்தான். இந்த பய ஒரு வருசமா ஊரு பக்கமே காணோம்.

பாட்டி, துருவனுக்கு வொர்க் அதிகமா இருக்கும். அதான் வரலை. துளசி என்ன முடிவுல இருக்காலோ? இப்பவும் துருவனை பத்தி நினைச்சுக்கிட்டு தான் இருக்காலான்னு தெரியலை.

அதெல்லாம் நம்ம ஊரு புள்ளைங்க பசங்கள மாத்த மாட்டாங்க.. சரிய்யா..வாரேன் என்று அர்ஜூன் பாட்டி கிளம்ப, பாட்டி…நம்ம ஊரை பத்தியும் அர்ஜூன், தீனா..எல்லாரை பத்தியும் நல்ல மரியாதை சிட்டிக்குள்ள இருக்கு. அதை எடுத்து சொல்லி புரிய வையுங்க. சண்டை எதுவும் போட்றாதீங்க..என்றான் பிரதீப். அவனை பார்த்து புன்னகைத்து கிளம்பினார் அர்ஜூன் பாட்டி.

ஆதேஷ் மாப்பிள்ளை, அவர் அம்மா பிசினஸையும், அர்ஜூனுடனும் சேர்ந்து கவனித்து வருகிறார். ஜானுவும் அவருக்காக படிப்பதால்…திருமணம் முடித்தால் கூட ஜானு அங்கிருந்து படித்துக் கொண்டே அவருக்கு உதவியாகவும், குடும்பத்தையும் பார்த்துப்பா.

மருமகளும் துளசியும்..வெற்றி சிந்தித்தார்.

அப்பா..புவிக்கு..அடுத்த வருடம் மருத்துவ இலவச முகாம்ன்னு தான் அவள் அலைய வேண்டி இருக்கும். இந்த வருடம் எப்பொழுதும் போல் தான் இருப்பா. தீனாவும் இப்ப சென்னையில தான இருக்கான். அவங்களுக்கு பிரச்சனையில்லை. துருவன்- துளசியை தான் பார்க்கணும்.

அப்பா..நான் ஒன்று சொல்றேன். செய்யலாம்ன்னு சொல்லுங்க என்றான் பிரதீப்.

என்னய்யா?

அப்பா..எனக்கும் தீனாவுக்கும் திருமணம். அதனால் ஒரு வாரத்திற்கு முன்னே வான்னு துருவன் துளசியை வர வைக்கலாம். அவர்களை சந்திக்க வைத்து நடப்பதை வைத்து அவங்க திருமணத்தை முடிவெடுக்கலாம். ஜானு திருமணத்தை பற்றி சொல்லாமல் செய்யலாம் என்றான் பிரதீப்.

இதெல்லாம் சரி. சம்பந்தி ஒத்துப்பாங்களா? மீனாட்சி கேட்க, முதல்ல அவங்க வீட்டுக்கு போய் எல்லாத்தையும் நேரா பேசிடுங்க.

மதியம் சாப்பிட்டு கிளம்பலாம் வெற்றி சொல்ல, போகும் போது ரதிய கூட்டிட்டு போங்க. அன்று அவளோட புருசன் செத்ததிலிருந்து எங்கேயும் வெளிய வராம இருக்கா.. வேலைக்கும் போகலை. அவளுக்கு உடன் ஒருவராவது இருக்கிறாரே?

அப்பத்தா, அண்ணனுக்கு முடிக்காமல் எப்படி தம்பிக்கு முடிக்க ஆன்ட்டி ஒத்துப்பாங்க? பிரதீப் கேட்க, அதையும் பேசிடுவோம் வெற்றி கூறினார்.

அப்பா..அது சாதாரண விசயமில்லை. ஸ்ரீ அவள் விசயத்திலிருந்து வெளியே வரவும், இன்பாவுக்காகவும் தான் காத்திருக்கணும்.

அப்பா..அந்த பொண்ணு நம்ம அபிக்காக நாலு வருசமா காத்திருக்கா. அவளோட ப்ரெண்ட்ஸ் சைலேஷ், மாதவ் தவிர எல்லாருக்கும் கல்யாணம் முடிஞ்சு பிள்ளைகளே இருக்கு. ஸ்ரீக்காக தான் எல்லாரும் காத்திருக்காங்க.

அப்படின்னா..அந்த பொண்ணுக்கிட்ட பேசலாமே?

இல்லப்பா. அர்ஜூன் கண்டிப்பா சொல்லீட்டான். ஸ்ரீ அவளாகவே கல்யாண பேச்சு எடுக்கும் வரை காத்திருக்கணும். இல்ல கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா.. நீங்க பண்ணிக்கலாம்ன்னு ஏற்கனவே சொல்லீட்டான். அந்த பொண்ணு நிலைமையையும் யோசிக்கணும்ல?

சரிப்பா. அந்த பொண்ணை விடுங்க. நாம நம்ம மாப்பிள்ளோட அம்மாகிட்ட பேசிக்கலாம் என்றார் மீனாட்சி.

ரதியை பார்க்க உடனே கிளம்பினர். நான் பசங்களிடம் பேசிட்டு சொல்றேன்னு அவர் சொல்ல, இல்ல…என்று மீனாட்சி அவர்கள் எடுத்த முடிவை பற்றி சொல்ல..

நாலு பேருக்கும் ஒரே மேடையா?

நல்லது தான். ஆனால் துருவனும் துளசியும்..தயங்கினார்.

அதையும் அவர் கூற, அகில் அவனோட ப்ரெண்ட்ஸோட தான் கல்யாணம் பண்ணிப்பான். அவனிடம் பேசிட்டு சொல்றேன் என்று போனுடன் நகர்ந்து சென்றார்.

காயத்ரியின் பெரியத்தை அவர்களிடம் பேச, வந்த ரதி..உங்க முடிவை அகில் ஏத்துகிட்டான். துருவனுக்கு விருப்பமிருந்தால் முடிக்கலாம்ன்னு சொல்லிட்டான் என்றார்.

அகில், பவி, விதுனன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இப்பொழுது ரொம்ப பேமஸ். இசைக்குழு என்றாலே மும்பையில் இவர்கள் தான்.  நம் இந்தியாவில் இவர்களுக்கு விசிறிகள் அதிகம். இவர்கள் அரங்கம் வந்தாலே அதிரும் மேடைகள். அஜய் திருமணத்தில் கூட அகில் பவியிடம் நிறைய விசிறிகள் ஆட்டோகிராஃப் வாங்கினாங்க. அனுவுக்கு தான் செம்ம குஷி. அவளோட க்யூட் அங்கிள் பெரிய செலிபிரேட்டி ஆச்சே. நம் ஸ்ரீயும் மாடலிங் முடித்து வெளிநாட்டிற்கு சென்று மாடலாக வந்தாள். மிஸ் யுனிவர்ஸில் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாள். அர்ஜூனுக்கு ஒரு பக்கம் பெருமை சந்தோசமாக இருந்தாலும்..பசங்க அவளிடம் வந்து பேசினால் போச்சு..ஸ்ரீயை ஏதும் செய்ய மாட்டான். அவர்களை கண்களால் எறித்தே ஒரு வழி ஆக்கிடுவான்.

தருண், அகில் பவியை..ராக் பேர்ஸ் என்றும் ஸ்ரீயை மிஸ் யுனிவர்ஸ் என்று கேலி செய்தே கொன்று விடுவான். ஸ்ரீ வெளிநாட்டிற்கு சென்றால் அனு தாரிகா வீட்டிற்கு சென்று விடுவாள். இன்பாவால் அவளுடைய கம்பெனி, அர்ஜூனுடையதையும் கவனிக்க முடியாததால் அவள் அவளுடையதையும் அர்ஜூனின் ஒரு கம்பெனியையும் கவனித்து வந்தான். இப்பொழுது இன்பா இடத்தில் இருப்பது அர்ஜூனின் அக்கா யாழினி. அவளுக்கும் சந்துரூவிற்கும் மகன் இருக்கிறான். அவனை சந்துரூ அம்மா கவனித்துக் கொள்வார். அவ்வப்போது தாரிகா அம்மாவும், தாரிகாவும் பார்த்துக் கொள்வார்கள்.

ஆதேஷ் வீட்டில் அவர் அப்பா இருக்க, வெற்றி, மீனாட்சியும் வந்தனர். அவர்களை வரவேற்று ஆதேஷ், லலிதாவை வர வைத்தார் அவர். இருவரும் கல்யாண பேச்சை ஆரம்பிக்க..நாங்களே வர நினைத்தோம். துகி படிப்பு முடிஞ்சிருச்சு என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, கையில் சில பையுடன் கையில் ஜூஸ்ஸை அருந்தியவாறு, டாட் தயாரா இருக்கீங்களா? என்று உள்ளே வந்தாள்.

வெற்றி, மீனாட்சியை பார்த்து, அத்த, மாமா..எப்ப வந்தீங்க? என்று அவர்களிடம் வந்தாள். ஆதேஷ் அவளிடம் சென்று ஜூஸ்ஸை பிடுங்கி விட்டு, கல்யாணத்தை பத்தி பேச வந்துருக்காங்க என்றான்.

என்ன? என்று அவள் பையை கீழே விட..ஆதேஷ் அதை பிடித்து ஓரமாக வைத்தான். நான் அறைக்கு போறேன் என்று ஓடினாள். அனைவரும் அவளை பார்த்து சிரிக்க.. மாமா..இவளா வெட்கப்படுறா? என்று வாயில் வைத்துக் கொண்டே வெற்றி அருகே அமர்ந்தான் ஆதேஷ்.

நாங்க துகிக்காக மட்டும் வரல. மாப்பிள்ளையையும் கேட்டு தான் வந்துருக்கோம் என்றவுடன், அவன் மீனாட்சியை பார்த்து, ஜானு படிப்பு இன்னும் முடியல அத்தை என்றான்.

அதனால என்ன மாப்பிள்ள? இப்பயும் இங்க ஹாஸ்டல்ல தான இருக்கா? கல்யாணம் முடிஞ்சு வீட்ல இருந்து காலேஜ் முடிக்கட்டும். அப்புறம் உங்களுக்கு துணையாகவும் இருக்கட்டும் என்றார் வெற்றி.

மாமா..துளசி?

அவர்கள் முடிவை சொல்ல..துருவன் இன்னும் துளசி நினைவில் தான் இருக்கான். ஆனால் அவளை பார்த்தால் கோபமாக தான் பேசுவான்.

துளசியும் மறக்காத மாதிரி தான் இருந்தா. ஆனால் அவ பின்னாடி ஒருத்தன் சுத்துறான். எச்சரிக்கை செய்து விட்டு தான் வந்தேன் வெற்றி சொல்ல..

அதான் வருவாங்கல்ல பார்க்கலாம் என்றார் ஆதேஷ் அப்பா.

நாள் முடிவு செய்யலாமா? அடுத்த மாதம் முதல் வாரத்தை தேர்ந்தெடுத்தனர். இரண்டு வாரத்தில் துளசி வந்து விட, துருவனுக்கு துளசி வருவதை யாரும் சொல்லவில்லை.

துருவன் வெற்றியிடம் இரு நாள் கழித்து வருவதாக சொன்னான்.

அவர் பிடிவாதம் செய்ய, மாமா..நான் இங்க ஜூனியரா தான் வேலையில் இருக்கேன். இரு நாட்கள் விடுப்பு தருவதே பெரிய விசயம். ஆனால் உங்களுக்காக நான்கு நாட்கள் விடுப்பு கேட்கிறேன். நானே உங்களுக்கு கால் பண்றேன். விடுப்பு என்பதால் அனைத்தையும் முன்னதாகவே முடிக்கணும் என்று போனை வைத்து விட்டான். துருவன் துளசியை தவிர எல்லாரிடமும் நன்றாக ஒன்றி விட்டான்.

துளசி அவள் நண்பர்களுடன் வந்தாள். டென் என்றவனுக்கு தான் துளசி மீது விருப்பம். வெற்றியும் பிரதீப்பும் அவனை முறைத்துக் கொண்டிருந்தனர். வெற்றி மீனாட்சி கல்யாண தேதியை முடிவு சென்ற அன்றே தருணிடம் சென்று சொல்ல..அவனுக்கு பேரானந்தம். அன்றிலிருந்து தருண் புவிக்கு நேரம் ஒதுக்கி வெளியே அழைத்து சென்று தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டு, அவனால் முடியாத சமயத்தில் இதயாவும் அவள் அம்மாவும் உதவினார்கள். தீனாவும் புவிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தான்.

தீனா, துருவனுடன் தருண் குடும்பத்தினரும், ஆதேஷ் குடும்பமும் வந்தனர். திருமணம் ஊரிலும் ரிசப்சன் சென்னையிலும் நடக்கவிருந்தது.

எல்லாரும் முன்னாடி போங்க வாரேன் என்று துருவன் அவன் படித்த பள்ளியை பார்த்து இறங்க, மாமா..நானும் துருவோட வரவா? ஜானு ஆதேஷையும் அவன் அம்மா, அப்பாவையும் பார்த்தாள்.

சரிம்மா, சீக்கிரம் வந்துரு என்று இருவரையும் காரிலிருந்து இறக்கி விட்டு மற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

பள்ளிக்குள்ளே சென்று தங்கள் நினைவுகளை பேசிக் கொண்டே ஜானுவும் துருவனும் ஓரிடத்தில் நிற்க, அண்ணா..என்ற சத்தம் கேட்டு திரும்பினர் இருவரும்.

சக்கர..பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். துருவனை அவன் அணைக்க, என்னடா எதுவும் வேணுமா? ரொம்ப ஐஸ் வக்குற? ஜானு கேட்டாள்.

நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். துரு அண்ணா..துளசிக்கா வந்திருக்காங்க. ஆனால்..என்று நிறுத்தினான். அவனை துருவன் ஊடுருவி பார்த்தான்.

அக்கா பின்னாடியே வெள்ளைகார பயபுல ஒருத்தன் சுத்துறான்.

கிளாஸூக்கு போகாம என்னடா பண்ற?

சும்மா தான் வெளியே வந்தேன். வாரேன் அக்கா, அண்ணா..என்று வகுப்பிற்கு சென்றான்.

இருவரும் அவர்கள் ஆசிரிய, ஆசிரியைகளை பார்த்து விட்டு வெளியே வந்தனர். துருவா..அங்க பாரு..பஞ்சு மிட்டாய். வாங்கித்தாடா. சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு என்று ஜானு கேட்க, ஆளுக்கொன்றை வைத்துக் கொண்டு நடந்தனர்.

பாலத்தில் சிலரை பார்க்க, அவர்கள் கத்திக் கொண்டிருந்தனர். அனைத்தும் வெளிநாட்டு பசங்க பொண்ணுங்க.

எனிபடி கெல்ப்? பொண்ணு ஒன்று கத்த..துருவனும் ஜானுவும் இங்கே வந்தனர்.

ஹே..பாய். ஷி இஸ் மை லேடி. ப்ளீஸ் கெல்ப் க்ர் என்றான் ஒருவன்.

பாலத்திலிருந்து விழுந்து பிடித்து தொங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பொண்ணு.

துருவன் மிட்டாயை ஜானுவிடம் கொடுத்து விட்டு, கையை பிடித்து இழுத்தான்.

ஹே..பார்த்து மேன் என்றான் அவன்.

அவனை பார்த்து விட்டு மேலும் இழுத்தான். அவள் முகத்திலிருந்த முடியை விலக்கி துருவனை பார்த்து அதிர்ந்தாள். அவன் துளசியை பார்த்ததும்..விட்டுட்டு போனேல..இரு..என்று கையை விட்டான்.

துளசி தண்ணீரில் விழுந்தாள். அகில் ஸ்ரீயை தள்ளி விட்ட அதே பாலம்.

“வாட் தி கெல்?” அவன் துருவனை திட்ட, ஜானு பதறி..டேய் துளசிக்கு நீச்சல் தெரியாது என்றாள்.

கொஞ்ச நேரம் படட்டும். சொல்லாமல் போனால்ல?

வாட்? ஒரு பொண்ணு கேட்க, துளசி மேலெழும்பி..மூழ்கி துருவா..துருவா.. எனக் கத்தினாள்.

ஹே, நீ தான் துரு வா? அவன் கேட்க, மேலிருந்த சட்டையை கழற்றி ஜானுவிடம் போட்டு விட்டு, பாலத்தில் ஏறி நீரில் குதித்தான்.

பார்த்துடா..ஜானு கத்த, ஹே க்யூட்டி என்று ஒருவன் ஜானு அருகே வந்தான்.

ஹே, மேன். “டோன்ட் பிளர்ட்”. “ஆல்ரெடி ஐ அம் கமிட்டடு” என்றாள் ஜானு.

துருவன் துளசியை தூக்கிக் கொண்டு மேலே வந்தான். ஜானு அவளது கன்னத்தை தட்டி, துளசி..துளசி..என்றாள்.

தண்ணீர் நிறைய குடிச்சிருக்கா ஜானு துருவன் சொல்ல,  டென் துளசி அருகே வந்து, அவளது வயிற்றில் கை வைக்க, அவனது கையை பிடித்து..மூவ் தர் என்று துருவன் துளசி வயிற்றை அழுத்தினான். தண்ணீர் வெளியேற அவள் மெதுவாக விழித்தாள். சட்டையை அவளுக்கு போட்டு விட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போ..என்று அவன் நடக்க,

டேய்..கூட்டிட்டு போகாம விட்டுட்டு போற..

அதான் அவளோட மேன் இருக்கானே? என்று அவன் செல்ல, துருவா என்று புன்னகைத்த படி எழுந்தாள் துளசி. ஜானுவை பார்த்து, ஜானு..என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

 

 

 

Advertisement