Advertisement

அத்தியாயம் 142

மறுநாள் மனது கேட்காமல் வேலு அண்ணாவிடம் நான் விசயத்தை சொன்னேன். அண்ணா காலை வரை வரவேயில்லை. வேலு அண்ணாவிடம் அண்ணியை அழைச்சிட்டு போனேன். அவங்க அந்த வீடியோவை வேலு அண்ணாவிடம் கொடுத்தாங்க. அப்ப தான் எனக்கு அஜய் அண்ணா கால் பண்ணுச்சு. அதுவும் சரியா இருவருக்கும் பிரச்சனையான்னு கேட்டுச்சு? நானும் விசயத்தை சொல்ல சத்யாவை வருத்தெடுத்துச்சு.

தியா அண்ணிகிட்ட போன்ல அண்ணா பேசிட்டு வேலு அண்ணாவிடம் பேசுச்சு. எனக்கு அவ்வளவு தான் தெரியும் என்று வேலுவை பார்த்தாள்.

இப்ப அந்த கிறுக்கன் நம்ம ஊர்ல இல்லை. அதனால் அவனை வைத்திருக்கும் நம்ம சிட்டிக்கு போனோம். அங்க போலீஸ் உதவியுடன் அவனையும் தியாவையும் சந்திக்க வைத்தோம். அஜய் சார் முன்பே போலீஸிடம் பேசினார். அதனால் போலீஸ் உதவுனாங்க. அவனை தியா தான் பேசி வீடியோ எடுத்தாள். ஊருக்காக இல்லை. உனக்காக தான் என்று கோபமாக பார்த்த வேலு, இப்படி உடனே விட்டு போயிருவான்னு தெரியாம போச்சு. மாசமா வேற இருக்கா..ஆனால் மற..அவ உடனே இந்த வீடியோவ காட்டணும்ன்னு சொன்னாலே? அதுக்குள்ள..என்று சத்யாவை பார்த்தான் வேலு.

நான் எதுவும் செய்யலை. அவளை உடலளவில் காயப்படுத்தினேன் தான். ஆனால் அவள் கஷ்டப்படுவதை பார்க்க முடியலை. அந்த நாள் மட்டும் தான்.

நேற்று எப்ப வீட்டுக்கு வந்த?

இரவு பதினொரு மணிக்கு மேல் இருக்கும் என்றான் கண்ணீருடன்.

சின்னவள் சத்யா முன் வந்து, சாரி சொன்னாள்.

நீ எதுக்குடி அவனிடம் சாரி சொல்ற? அம்மா கேட்க,

அம்மா..நேற்று காலையில் இருந்து அண்ணி வீட்ல இல்லை. இரவு தான் வந்தாங்க..நான்..என்று பயத்துடன் தயங்கினாள்.

என்ன பண்ண? மூத்தவள் கோபமாக கேட்க, அக்கா..இரவில் வர்றீங்க? யாரிடமும் பணம் வாங்கிட்டு வர்றீங்களான்னு கேட்டேன்? அண்ணி அறைக்குள் போயிட்டாங்க என்று அழுவது போல் சொல்ல, அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர்.

மூத்தவள் அவளை அடிக்க, மறை கோபமாக, இனி அவளுக்கு உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மூஞ்சியிலே விழிக்காதே! என்று சத்யாவிடம் கூறி விட்டு அவன் வெளியேறினான்.

அவளை அடிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை. இவனே பேசும் போது, நீங்களெல்லாம் பேச மாட்டீங்களா? என்ன? கடைசியில அவள வேசி ஆக்கிட்டீங்கள? என்று காயத்ரி கண்ணீருடன் கேட்க,

இல்லம்மா..அப்படியெல்லாம் நாங்க நினைக்க கூட இல்லை அவன் அம்மா அழுதார். காயத்ரியின் வார்த்தை சத்யா மனதில் ஈட்டியை இறக்கியது போல் இருந்தது.

இல்லையா? ஆனால் அவளுக்கு அந்த நேரம் எப்படி இருந்திருக்கும்? உங்க குட்டிப் பொண்ணை குறை சொல்லலை. உங்க மகனின் செய்கையை அவள் திருப்பி தியாவிற்கு கொடுத்திருக்காள். இனி உங்க வீட்டுக்குள்ள தியா வர மாட்டா.

காயூ வர்றீயா? இல்லையா? மறை சத்தமிட, சத்யாவை கேவலமாக பார்த்து விட்டு அனைவரும் செல்ல, கண்ணன் நின்று காதலிக்கிற ஆனால் அவ மேல நம்பிக்கை இல்லைல்ல? உன்னோட அவளால இருக்க முடியாது. மறை பொண்டாட்டி சொன்னது சரி தான். தியாவ இனி மறையே பார்த்துப்பான். உன்னோட புள்ளைய பக்கத்துலயே வச்சு ஏங்கிக்கிட்டே கிட..என்று கத்தி விட்டு அவன் சென்றான்.

அவர்கள் வீட்டுக்கு வெளியே பெரிய கூட்டமே இருந்தது. அனைவரும் சத்யாவையும் அவன் குடும்பத்தையும் தூற்றியவாறு பேச, அவர்களுக்கு அவமானமாய் போச்சு.

சத்யா பைக்கை எடுக்க, அதிலிருந்து சாவியை எடுத்த அப்பா..உள்ள வா என்றார்.

அவனுக்கு அவன் அம்மா மருந்தை போட்டுக் கொண்டே திட்டினார். இவனுக்கு மருந்து ஒன்று தான் கேடு என்று மூத்தவள் தட்டி விட்டு உள்ளே சென்றாள்.

வாடா..மருமகளை தேட போகலாம் என்று அவன் அப்பா சொல்ல, நான் போரேன் என்று எழுந்து வண்டியை எடுத்தான். அவன் அப்பா அவன் பின் அமர்ந்து அவன் தோளை தட்டிக் கொடுத்தார். என் பிள்ளை மிகப் பெரிய தவறை செய்திருக்கிறான். அதை மாற்ற யாராலும் முடியாது. அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா. அதுக்காக அடுத்தவங்க மாதிரி என் பிள்ளையை விட முடியாது. அவனுக்கு அப்பாவாக அவன் தவற்றை திருத்துவேன். இதுக்கு மேல எங்க மருமகள பார்த்துக்கிறது எங்க எல்லாருடைய பொறுப்பு என்று மனதில் நினைத்தவாறு சென்றார்.

அன்று முழுவதும் எல்லாரும் தேடியும் அவள் கிடைக்கவேயில்லை. இரவில் மனமுடைந்து வீட்டிற்கு மறை வந்து காயத்ரியை கட்டிக் கொண்டு அழுதான்.

பாவம்மா அவ. நானும் கவனிக்காமல் விட்டுட்டேன் என்று தலையில் அடித்தான். காயத்ரி அவன் கையை பிடித்து, அவள் போகும் இடம் தெரியாமல் போகவில்லை. எங்கே போகலாம்ன்னு முடிவெடுத்து போனது போல் தான் தெரியுது? அவள் தவறான முடிவெடுக்கலைன்னு தான் தெரிந்ததே போதும். அவளை விடுங்க. அவள் அவனை காதலிக்கிறான்னா.. பார்க்காம இருக்க மாட்டா. கண்டிப்பா வருவா. ஆனால் சத்யாவை கண்காணித்துக் கொண்டே இருங்க. அவன் தவறான முடிவு எடுத்து விடாமல் என்றாள்.

அவன் சாவட்டும் என்றான் கோபமாக.

அவன் நல்லவன் தானே. அவனை பற்றி உங்களுக்கு தெரியாதா? அவனால் அந்த வீடியோவை ஏத்துக்க முடியலை. அதான் இப்படி நடந்திருக்கான். வேண்டுமென்றே அவளை பழி வாங்க கல்யாணம் செய்திருந்தால் அவன் பழி வாங்கும் படலம் முடிந்திருக்கும். அவளை தேட சென்றிருக்க மாட்டான்.

மறை அவன் வேலையை கவனிக்க, சத்யா அவன் அப்பாவை வீட்டில் விட்டு பக்கத்து ஊர்களுக்கும் சென்று விசாரித்து மேலும் இரண்டு நாட்கள் தேடினான். மனம் உடைந்து வீட்டிற்கு வந்தான். சோபாவிலே தூங்கினான். அவன் அம்மா கவலையுடன் சாப்பிட்டு தூங்குய்யா..என்று எழுப்ப, அவன் எழவில்லை. அவன் அப்பா வெளியூரில் வேலை பார்ப்பவர் மகன் திருமணத்திற்காக விடுப்பு எடுத்து நேற்று தான் வேலைக்கு சென்றார்.

அவன் அம்மா அழுது கொண்டே எழுப்ப. அவனை பார்த்த மூத்தவள் போனில் விசயத்தை சொல்லி வேலுவை அழைத்தாள்.

மறையை தவிர சத்யாவின் மற்ற நண்பர்கள் வந்தனர். அவன் எழாததை பார்த்து அவர்களும் பயந்து, மருத்துவரை அழைத்தனர். அவர் அவனை பார்த்து விட்டு..நா..உலர்ந்து போயிருக்கு. எதுவுமே சாப்பிடலை. இவரை பார்த்தால் தண்ணீர் அருந்தியது போல கூட இல்லை என்று ஜூஸ் ஏதாவது குடுங்க. அவர் எழுந்ததும் சாப்பிட வையுங்கள் என்று சென்றார்.

கண்ணன் ஜூஸ் வாங்கி வந்து கொடுத்து விட்டு தண்ணீரை கொடுத்தான். சத்யா விழித்தான். நண்பர்களை பார்த்ததும் கண்ணீர் வெளிய வர, ஆளாளுக்கு அக்கறையுடன் அவனை திட்டினர்.

அம்மா..சாப்பிட கொடுங்கள் என்று வேலு செல்ல, சத்யா அவன் கையை பிடித்து, அவளை வேறொருவனுடன் பார்க்கவும் அனைத்தையும் மறந்துட்டேன். அவளை கண்டுபிடிக்க கெல்ப் பண்ணுங்கடா என்றான் கண்ணீருடன்.

அவன் கன்னத்தில் அடித்த வேலு..எப்படி? எதை வச்சி தேட சொல்ற? அவள் உயிரோட எங்கேயோ தான் இருக்கா. அவள் இருக்கட்டும் விடு. அவளாக வர்றாலான்னு பார்ப்போம்.

ஏற்கனவே மறை போலீசில் கம்பிளைண்ட் கொடுத்திருக்கான் என்றவுடன் அவன் அம்மா பதறினார்.

அவளை காணோம். தேடி தரச் சொல்லி கொடுத்தான். உன்னை விசாரிக்க கூட போலீஸ் வருவாங்க. பார்த்துக்கோ.

என்னய்யா? இப்படி சொல்றீங்க?

அப்ப தேட வேண்டாமாம்மா? வேலு கேட்க, இல்ல பிள்ளைய சீக்கிரமா கண்டுபிடிங்க. ஆனால் என் பிள்ளைக்கு எதுவும் ஆகாதுல..

அதான் மறைக்கு எழுதிய கடிதத்தில் சத்யாவின் நிறத்தை காட்டி  புருசனுடன் வாழ விருப்பமில்லாமல் சென்றதாக எழுதி கொடுத்து விட்டு சென்றிருக்காலே! அப்புறம் எதுக்கு இவனுக்கு பிரச்சனை வரும்? அவளை தான் எல்லாரும் தப்பா நினைப்பாங்க என்றான் வேலு

அவள் பின் வரும் பிரச்சனையும் யோசித்து தான் சென்றிருக்கிறாள். அதனால் குழந்தைக்கு ஏதும் ஆகாமல் இருக்கும்படி தான் எல்லாவற்றையும் செய்திருப்பாள்.

பணத்திற்கு என்ன செய்வாளோ? அவன் அம்மா புலம்ப, அம்மா..அவளோட சம்பாத்திய பணத்தை எடுத்துட்டு தான் போயிருக்கா. அந்த முகேஷிடமிருந்து அவள் சம்பாத்திய பணத்தை மிரட்டி வாங்கி கொடுத்தோம்ல. அந்த பணத்தை எடுத்துட்டு போயிருக்கா சத்யா சொன்னான்.

காயத்ரி உள்ளே வந்தாள். மறை வெளியே நின்றான்.

சத்யா அம்மா அவனை உள்ளே அழைக்க அவன் வரவில்லை. நான் என் பொண்டாட்டி அழைத்ததால் தான் வந்தேன் என்றான்.

அவரை விடுங்க ஆன்ட்டி..என்று சத்யாவிடம் வந்து, அவள் உன்னை தேடி வரும் போது நீ உயிரோட இருக்க வேண்டாமா? காயத்ரி கேட்க, சத்யா எழுந்து, வந்துருவாளா? என்னோட தியா வந்துருவாளா? கேட்டான்.

வருவா..ஆனால் பத்து வருசம். ஏன் இருபது வருசம் கூட ஆகலாம்?

என்ன? இத்தனை வருடமாகுமா அண்ணி வர? மூத்தவள் கேட்க, அது கூட எனக்கு தெரியல. ஆனால் அவளுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னா.. கண்டிப்பா ஒரு நாள் வருவா?

அவளை பார்க்க நீ உயிரோட இருக்கணும். காத்திருப்பியா? இல்லை..என்று அவன் அம்மாவை பார்த்து உங்க பையனுக்கு வேற கல்யாணம் பண்ணப் போறீங்களா?

யார் என்ன சென்னாலும் என்னோட கல்யாணம் முடிஞ்சு போச்சு. சாகுற வரை தியா தான் என்னோட பொண்டாட்டி.

ம்ம்..குட். சும்மா அவளை நினைச்சு அழுறதை விட்டு, அவள் ஆரம்பித்த வேலையை உயர்த்து. நல்ல நிலைக்கு வா. அதுதான் அவளுக்கும் உன் பிள்ளைக்கும் சந்தோசமா இருக்கும். உன் பிள்ளை இவர் என் அப்பான்னு சொல்லும் படி நடந்துக்கோ. தவறுக்கு அவர்கள் வந்த பின் மன்னிப்பு கேட்கலாம் காயத்ரி சொல்ல..தலையை ஆட்டினான்.

வாயை திறந்து பேச முடியாதா? கேட்டாள்.

ம்ம்..நான் என் தியாவை பார்க்கும் போது, இந்த சின்ன கம்பெனியை பல மடங்கு உயர்த்தி இருப்பேன். அவளுக்காக காத்திருப்பேன் என்றான்.

சத்யா மறையிடம் வந்து, சாரிடா..அவளை பற்றி ஏதாவது தெரிந்தால் சொல்லுடா என்று சொல்ல,

சொல்லி..இன்னும் அவள் காயப்படவா? அமைதியாக மறை கேட்டான்.

இல்லடா. இனி அவள் கிடைச்சா. மன்னிப்பு மட்டுமில்லை ராணி போல் பார்த்துப்பேன். எந்த நிலையிலும் சந்தேகப்பட மாட்டேன். இது சத்தியம் என்றான்.

மறை ஏதும் சொல்லாமல் இருக்க சத்யா அவனை அணைத்துக் கொண்டான். மறையும் அவன் தோளில் கை போட்டான். மறை எப்படி சமாதானம் ஆனான்? பின் வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

மூன்று வருடம் கழிந்தது.

புகழ் ராவணுக்கு போன் செய்தாள். மாமா, எங்க இருக்கீங்க?

நீயா எனக்கு போன் செஞ்சிருக்க?

அப்ப….போனை வச்சிருங்க.

ஏய்..வச்சுறாத..என்று ராவண் சொல்ல, சரி சொல்லுங்க? எங்க இருக்கீங்க?

எதுக்கு கேக்குற?

சொல்றீங்களா? போனை வைக்கவா?

நான் தாத்தா வீட்ல தான் இருக்கேன். இப்ப தான் வந்தேன். இவ்வளவு காலையில தான் வந்தீங்களா? நைட் டியூட்டியா?

அப்பா வீட்ல இருந்து இப்ப தான் வந்தேன்னு சொன்னேன். நான் முன் போலில்லை என்றான்.

ஆன்ட்டி, அங்கிள் இருக்காங்களா?

அவங்க வராம நான் மட்டும் எதுக்கு வருவேனாம்?

பாட்டி, உன் பேரன் உன்னை பார்க்க வரலையாம். அம்மா, அப்பா வந்ததால தான் வந்துருக்காராம் என்று புகழ் கத்த, ஏய்..என்ற ராவண் பேலஸ் வாயிலுக்கு ஓடினான்.

புகழ், அண்ணா, அண்ணி.. நந்து என்று அவர்களை நோக்கி ஓடி வந்து புகழை அணைத்தான்.

டேய்..அனைவரும் கத்த..ஓ..மாத்தி கட்டிப் பிடிச்சுட்டேனா? என்று குகனை அணைத்துக் கொண்டே புகழை பார்த்து குறும்புடன் ஒற்றை கண்ணடித்தான்.

மாமா..கண்ணாடிக்குறாங்க..கத்தினாள்.

அடிப்பாவி, நீ மாறவேயில்லை..என்றான். அனைவரும் அங்கே வர, சுந்தரம், ருத்ரா, குகன், பார்வதி, புகழ், நந்து உள்ளே செல்ல..அந்த பொண்ணு எங்கப்பா? தாத்தா மேகாவை கேட்டார்.

தாத்தா..நாங்க நினைச்சபடி எங்க பிசினஸ்ல ஜெயிச்சிட்டோம். அதனால அவளோட அப்பா மேகாவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துகிட்டார் என்று அவரை கட்டிக் கொண்டான்.

ருத்ரா, நந்து கோபத்தை மறந்து இவர்களுடன் நன்றாகவே பழகினர். தாத்தாவும் பேலஸ் விதிமுறைகளை இக்காலத்திற்கு ஏற்ப மாற்றினார். வீட்டு பிள்ளைகள் அனைவரையும் படிக்க வைத்தார்.

உள்ளே வந்ததும், என்ன திடீர்ன்னு வந்துருக்கீங்க? பாட்டி கேட்டார்.

பார்வதி குகனை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா.  இப்ப நம்ம பையனும் நல்ல இடத்துல இருக்கான். இப்பவே முடிக்கலாம்ன்னு நினைக்கிறோம். அதான் உங்களிடமும் பேசி முடிவெடுக்க வந்தோம் என்றார் சுந்தரம்.

அம்மாடி? உனக்கு பிரச்சனையில்லையே? பாட்டி கேட்க, அவர் அருகே வந்து அமர்ந்த பாரு..எனக்கு அவரை பிடிச்சிருக்கு. நான் அவரை கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றாள். அவனும் புன்னகைத்தான்.

அய்யோ..அக்காவை விட மாமா தான் வெட்கப்படுறார் தாத்தா என்று புகழ் அவர் அருகே அமர்ந்தாள்.

தாத்தா குகனை பார்த்து, ஏம்ப்பா நீ கொஞ்சம் பிசினஸை பார்க்கலாமே? என்று கேட்டவுடன் குகன் எழுந்தான்.

அப்பா..சும்மா இருக்க மாட்டீங்களா? அவன் அம்மா சத்தமிட, அதான் நந்து இருக்கான்ல. அவன் பார்த்துப்பான்.

நானா? நான் இப்பொழுது தான். நானும் பார்த்துக்கிறேன் என்று பேலசின் வாரிசுகள் மேலும் இருவர் நந்துவுடன் கை கோர்த்தனர்.

அப்பா, அவன் தான் விருப்பமில்லைன்னு சொல்றான்ல. குகனை விடுங்க. நம்மளோட மத்த வாரிசுகள் பார்த்துப்பாங்க என்றார் ருத்ராவின் மூத்த அண்ணன்.

நான் மேகாவுடன் பேசிட்டு தான் சொல்வேன்.

பாருடா..இப்பவே வா?

ஆமா, இரண்டு அண்ணனுகளுக்கு அப்புறம் எங்களுக்கு தான கல்யாணம் செய்வீங்க? நாங்க எதிலும் சேர்ந்து முடிவெடுத்து பழகிடுச்சு நந்து சொல்ல,

ம்ம்..நல்ல புரிதல் தான் பாட்டி நந்துவை மெச்சிக் கொண்டார்.

நல்ல நாள் பார்த்து ஒரு மாதத்தில் திருமணத்தை வைத்துக் கொண்டனர். குகன்- பார்வதி திருமண நாளும் வந்தது. அரண்மனையில் வைத்து தான் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்திருமணத்திற்கு அனைவரும் வந்தனர். அர்ஜூன், அஜய், நிவி, ஸ்ரீ…எல்லாரும் இருந்தனர்.

புகழ் இங்க வாடி..இதை மாத்திட்டு வா, பாட்டி சொல்ல, பாட்டி இது நல்லா தானே இருக்கு. போதும் என்றாள்.

ராவண் அம்மா அவளிடம் வந்து, நம்ம வீட்டு புள்ளைங்க தனியா தெரியணும். சும்மா வாயாடாம. பெரியவங்களுக்கு மதிப்பு கொடுத்து மாத்திட்டு வா என்றார். அவரை முறைத்து விட்டு, குகனிடம் போட்டு கொடுத்தாள்.

ஏன்டி, அவனே எப்பொழுதாவது பேசுவான். அதையும் கெடுக்குற? உனக்காக தானே சொன்னேன்.

பாட்டி, உங்ககிட்ட வேண்டாம்ன்னு தான் சொன்னேன். அது மரியாதை கொடுக்காததாகுமா? புகழ் கேட்க, இல்லடி தங்கம். இந்த பாட்டிக்காக போட்டுக்க மாட்டீயா?

இப்படி சொன்னா எப்படி இருக்கு? என்று புகழ் ராவண் அம்மாவை முறைத்து விட்டு ஆடையை மாற்றினாள்.

அஜய் அர்ஜூனிடம், பிரகதி எங்க இருக்கான்னு சொல்லு என்று கேட்டுக் கொண்டே இருந்தான். மூணு வருசத்துக்கு மேல ஆகுதுடா அவளை பார்த்து. பார்க்கணும் போல இருக்குடா..என்றான்.

நான் ஒன்றும் செய்யமுடியாது சார். “ஐ அம் சாரி” சார் என்றான் அர்ஜூன். போடா..என்று அவன் நகர்ந்தான்.

புகழை பார்த்து அனைவரும் அவளையே பார்க்க..அவள் டார்க் புளூ நிற பட்டுப்புடவை, அதற்கு ஏற்ற அணிகலன்களுடன் நேராக பாட்டியிடம் வந்தான்.

பாட்டியை பார்த்து கண்ணடித்து, எப்படி இருக்கு? உங்களுக்கு சந்தோசமா? கேட்டாள்.

என் தங்கம் என்று நெட்டிமுறித்து அவளுக்கு முத்தம் கொடுத்தார். அவளும் கொடுக்க, செல்லம் மாமாவுக்கு ராவண் கன்னத்தை காட்ட, திடீரென அவள் முன்னே வர பயந்து விட்டாள். ஆவ்..என்று நகர்ந்தாள். கத்துவாளே என்று பாட்டி, வேண்டாம்மா..என்று மெதுவாக அவளிடம் சொல்ல நினைக்க, பாட்டி நான் அக்காவை பார்த்துட்டு வாரேன் என்று அவனை பார்த்து விட்டு அமைதியாக சென்றாள்.

டேய் ராவா, என்ன இது அதிசயம்? அமைதியா இருக்கா. உன்னை திட்டாமல் போயிட்டா. நான் கூட கத்தி மானத்தை வாங்கிடுவாளோன்னு பயந்துட்டேன் பாட்டி சொல்ல, எல்லாரும் இருக்காங்கல்ல பாட்டி அதான் அமைதியா போயிட்டா என்று அவன் நகர,

நீ உண்மையாக நம்ம புகழிடம் சீரியசா இருக்கியா?

அவளை பார்த்த பின் என் வாழ்க்கையில் எந்த பொண்ணையும் பார்க்காமல் தான் சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனால் புகழ் மத்த பொண்ணுங்க மாதிரி இல்லை. பாட்டி அவ நினைக்கிறத சொல்லவே மாட்டா. தனியா தான் பேசுவா..அவன் சொல்லிக் கொண்டிருக்க, அக்காவை பார்க்க வந்த புகழ் பார்வதி அறைக்கு செல்லாமல் யாருமில்லாத அறைக்கு சென்று கண்ணாடி முன் நின்று அவளை பார்த்து, மாமா..நீ கேட்டா குடுத்திருவேனா? ஆசைய பாரு. உன்னை இன்னும் ஒரே வருசம் அலைய விடுறேன் பாரு என்று பேசினான்.

பின்னால் கை தட்டும் சத்தம் கேட்டது. ஸ்ரீ, காயத்ரி, தாரிகா இருந்தனர். வெட்கமுடன் வெளியே ஓட, மூவரும் அவளை விரட்டினார்கள். குகன் அவளை பார்த்து, புகழ்…பார்த்து வா. புடவை உடுத்திட்டு ஓடுற என்று கேட்க, மாமா..விசயம் தெரியாமல் பேசாதீங்க என்று ஓடினாள். ஆனால் மூவரும் அவளை சுற்றி வளைத்தனர்.

வேண்டாம் விட்ருங்க..அவள் சொல்ல, வா,…அது எப்படி விடுவோம்? என்று காயத்ரி அவளை பிடிக்க வர, அர்ஜூன் அண்ணா கெல்ப் பண்ணுங்க..என்று ஒரு பக்கம் பார்த்து சொல்ல, அர்ஜூனா? மூவரும் தேட..புகழ் ஓடி விட்டாள்.

அப்பாடா, தப்பிச்சேன் என்று தனியே ஓரிடத்தில் மூச்சை இழுத்து விட்டாள். பாட்டி, தாத்தா, ராவண் அப்பா, சுந்தரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அமைதியாக உள்ளே செல்ல எண்ணி அறைக்கு அருகே புன்னகையுடன் வந்த புகழ் முகம் வாடியது. குகனுடனே ராவணுக்கு பொண்ணு பார்த்திருக்கலாமே? இப்ப அவனுக்கும் முடிச்சிருக்கலாம்..சுந்தரம் கேட்டார்.

இல்லண்ணா. அவனுக்கு ஏற்கனவே பார்க்க ஆரம்பிச்சிட்டோம். ஆனால் அவனை பற்றி விசாரித்து அப்படியே கிளம்பிடுறாங்க. பொண்ணு அமையவே மாட்டேங்குது.

நம்ம ரூபி இருக்காலே? நம்ம பையனிடம் அவன் பொண்ணை கேட்கலாமே? பாட்டி சொல்ல, அட, ஆமா..சின்ன வயசுல இருந்தே இருவரும் சேர்ந்தே தான இருப்பாங்க அவன் அப்பா சொல்ல,

அப்ப பேசுங்க என்றார் சுந்தரம். புகழ் கண்ணீருடன் அங்கிருந்து சென்றாள். நால்வரும் வெளியே எட்டி பார்த்தனர்.

புள்ளைய எதுக்கு அழ வைக்கணும்? தாத்தா கேட்க, இருங்க என்ன செய்றான்னு பார்க்கலாம்? எல்லாரையும் என்ன பாடு படுத்துறா? கொஞ்ச நேரம் மட்டுமே அழட்டும்.

பார்வதியை பார்க்க செல்லும் வழியில் ரூபியை பார்த்தாள். பின் அறைக்குள் சென்று அவளையும் பார்த்தாள். பாட்டி சிரித்துக் கொண்டே அவளை பார்த்தார்.

மீண்டும் வெளியே வந்தாள். பார்க்கக்கூடாத இருவரையும் ஜோடியாக பார்க்க, அவள் கோபத்தை விடுத்து இருவரையும் பார்த்துக் கொண்டே அமைதியாக சென்றாள்.

என்ன? அமைதியா இருக்கா? தாத்தா கேட்க, காத்திருங்க பார்க்கலாம் என்றார்.

பார்வதியை பார்க்க சென்றாள். அவள் அக்காவை மணக்கோலத்தில் பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்தது. அக்கா..அப்பா உன்னை பார்த்து சந்தோசப்படுவார் என்றாள்.

ம்ம்..என்று புகழை கண்ணாடி வழி பார்த்து, என்னாச்சு புகழ், யாரும் ஏதும் சொன்னாங்களா? கேட்க, மனதை அடக்கிய புகழ், அக்கா..சீனுவை தேடினேனா காணோம். என்னோட ப்ரெண்ட்ஸ் யாரும் இன்னும் வரலை என்றாள்.

கால் பண்ணு பார்வதி சொல்லி விட்டு புகழ் இங்க வா..என்று அவள் கலங்கியதில் அவளது கண்ணில் மேக் அப் கலைந்திருக்க, பார்வதி அதை சரி செய்ய..புகழ் கண்ணிலிருந்து கண்ணீர் வர,.பார்வதி பயந்து என்னாச்சுடி? அழுற?

இல்ல அக்கா. அம்மா, அப்பாவை மிஸ் பண்றேன் என்றாள். பார்வதி கண்ணிலும் கண்ணீர் வர..

அக்கா..ஸ்டேச்சூ..என்றாள் புகழ்.

பார்வதி அசையாமல் இருக்க அவள் கண்களை சரி செய்து நீ அழக்கூடாது. மாமா பார்த்தா வருத்தப்படுவாங்கல்ல. மேக் அப் செய்பவர்களிடம் கண்ணை காட்டி விட்டு, நான் என்னோட ப்ரெண்ட்ஸை பார்க்கிறேன் என்று வெளியே வந்தாள். புகழை பார்த்துக் கொண்டிருந்த பாட்டி திரும்பி நிற்க, அவரை பார்த்த புகழ்,

பாட்டி..அக்காவோட யாருமே இல்லை. பொண்ணுங்க எல்லாரும் எங்க போனாங்க? என்று தேடுவது போல் கண்ணீரை அகற்றி விட்டு, நீங்களாவது அக்காவோட இருங்க என்று அவள் நகர்ந்தாள்.

ராவா சொன்னது சரி தான். அவளது கஷ்டத்தை யாரிடமாவது சொல்லுவான்னு நினைச்சா..இப்படி கட்டுப்படுத்துறாலே? இது நல்லதில்லையே என்று அவளை பார்த்துக் கொண்டே பாட்டி பார்வதியை பார்க்க சென்றார்.

புகழின் ப்ரெண்ட்ஸ் வந்து விட,  அவர்களிடம் பேச, அவள் கவனம் நண்பர்கள் பக்கம் திரும்பியது. திருமணம் முடிந்து மணமக்களை வாழ்த்த ஒவ்வொரு குடும்பமாய் அவர்களிடம் சென்று வர, ராவணை பார்த்து ஒருவர்..அடுத்து நீ தானப்பா தயாரா இருக்கிறாயா? அவர் கேட்க, பதிலுக்கு புன்னகைத்துக் கொண்டே ரூபி அவனிடம் வந்து, மாமா..ஸ்வீட் நல்லா இருக்கான்னு பாருங்களேன் என்று ஊட்டி விட, இந்த ஜோடி கூட நல்லா இருக்கு என்று அவர் சொல்ல, அவன் வாயில் வைத்ததை மூடாமல் விழித்தான்.

வாயை மூடு மாமா. அப்புறம் அதிகமா பேசுவாங்க என்று அவனை இடித்தாள். பல்லை கடித்துக் கொண்டே கோபமுடன் திரும்பி நின்றாள் புகழ். மீண்டும் அவர் ரூபியை கட்டிக்கப் போறீங்களா? அவர் கேட்க, அதனால என்ன முறப்பொண்ணு தான? கட்டிப்பார். இப்ப தான் நம்ம ராவணுக்கு மரியாதையும் ரொம்ப அதிகமா இருக்கே.

புகழ்..என்று தீபு அவளை உலுக்க, நாம ஐஸ்கிரீம் சாப்பிட போகலாமா? கேட்டாள்.

ஐஸ்கிரீமா? இங்க தான் நிறைய வெரய்ட்டி இருக்கே? வெளிய எதுக்கு போகணும்? வினித் கேட்டான்.

எனக்கு இங்க இருக்குற எதுவுமே பிடிக்கலை.

இங்க அப்படி என்ன பிடிக்கலையாம்? இங்கில்லாமல் ரோட்டுக்கடை சுவை தான் பிடிக்குமா? கோபமாக ராவண் அவளை அவன் பக்கம் திருப்பி கேட்டான்.

நான் தான் சொல்றேன்ல. எனக்கு இங்க ஐஸ்கிரீம் பிடிக்கலை. வா..தீபு நாம போகலாம் என்றாள் புகழ்.

ஆமா, உனக்கு ரோட்ல சாப்பிட்டு தானே பழக்கம். மறந்துட்டேன். இந்த இடத்துல எப்படி சாப்பிடுவ? ராவண் கேட்க, ராவா..என்று குகன் கத்தினான். புகழ் அவனை கோபத்தில் அனைவர் முன்னும் அடித்தாள். குகனா அவன் அமைதியாக இருக்க? ராவணும் அவளை அடித்தான்.

பார்வதிக்கும் ராவண் பேச்சு கஷ்டத்தை கொடுக்க, புகழ் அழுது கொண்டே ஓட, அவள் பின் நண்பர்கள் சென்றனர்.

புகழ்..நில்லு என்று பார்வதியை பிடித்துக் கொண்டே குகன் அவளை இடைமறித்தான்.

கன்னத்திலிருந்து கையை எடுத்த புகழ், சினமுடன் அன்று அக்காவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு நீங்க சொன்னதுக்கு நான் யோசித்தது இதே ஸ்டேட்டஸ்காக தான் மாமா. உங்களை பார்த்த கொஞ்ச நேரத்திலே அக்காவுக்கு நீங்க சரியா இருப்பீங்கன்னு தோணுச்சு. எப்ப நீங்க ஜமீன் பேமிலின்னு தெரிஞ்சதோ அப்பவே வேண்டான்னு தான் நினைச்சேன். ஆனால் நீங்க தான் சுந்தரம் அங்கிள் வீட்ல தான் இருக்க போறீங்கன்னு சொன்னதால ஒத்துக்கிட்டேன். அவளை யாரும் ஏதும் சொல்லாமல் பார்த்துக்கோங்க. அப்புறம் உங்க தம்பி சொன்ன மாதிரி..நான் ரோட்டு கடையில தான் சந்தோசமா சாப்பிடுவேன். எனக்கு இந்த பணக்காரங்களே பிடிக்காது.

அதுக்காக யாரும் தெரியாமல் இல்லை. என்னோட ப்ரெண்ட்ஸ் என்னை இன்வெயிட் பண்ணாலும் நான் சென்றதில்லை. நான் முதலில் அட்டெண்டு பண்ற முதல், கடைசி பணக்கார வீட்டு பங்சன் இதா தான் இருக்கும்.

நான் பணத்தை நம்பி வாழ்றவள் இல்லை. நம்பிக்கையில் வாழ்பவள். இங்க பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா எல்லாருடைய பாசத்துக்காக மட்டும் தான் உள்ளே வந்தேன். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்ற பின் நான் இங்கிருந்தால் நல்லா இருக்காது.

அக்கா, உன்னை அது செய்யாத, இது செய்யாதன்னு நான் சொல்லலை. உன் வழிகாட்டிதலில் வளர்ந்தவள் தான் நான். பார்த்து கவனமா இரு. மாமா நீங்க மட்டும் அக்காவிடம் உங்க தம்பி போல பேசுனீங்கன்னு தெரிஞ்சா அந்த நிமிசம் நீங்க அக்காவை பிரிய வேண்டியதாக இருக்கும் என்று சொல்லி விட்டு நகர, அனைவரும் அவளை அதிர்ந்து பார்த்தனர்.

நில்லு புகழ் என்ற குகன், சாரிடா..அவன் புரியாமல் செஞ்சுட்டான்.

அய்யோ மாமா, எனக்கு மரியாதை, சுயகௌரவம் இருக்கு. நான் ஒன்றும் பொம்மை இல்லையே? எப்பொழுதும் போல் சிரித்துக் கொண்டே இருக்க.

நான் சொன்னதை மறந்துறாதீங்க என்று அவள் செல்ல, ராவண் அவள் கையை பிடிக்க, கையை தட்டி விட்டு, ஹௌ டேர் யூ? என்று அவனை முறைத்தாள்.

மாமா யாரும் என் வழியில் குறுக்கே வராமல் இருப்பது நல்லது.  உங்க பணக்கார விருந்தாளிகளை கவனிக்காம என்ன பண்றீங்க டாக்டர் சார்? என்று கேட்டவள் நிற்காமல் அவளறைக்கு வேகமாக நடந்தாள். காயத்ரி அவள் பின்னே சென்று அவளறைக்குள் நுழைந்தாள்.

அக்கா, நீங்க வந்ததும் நல்லதா போச்சு. அணிகலன்களை அகற்ற உதவி செய்யுங்க? அவளும் உதவிக் கொண்டே, ஏன்டா இப்படி பேசிட்ட? உன்னோட காதல் என்னாவது? நீ பேசியதில் உன்னால் மறுபடியும் இந்த இடத்திற்குள் வர முடியாது. உன் காதல் கை கூடாமலே போயிடும்.

என்னை வேற யாராவது பேசி இருந்தால் நானே அதுக்கான பதிலை கொடுத்திருப்பேன். மாமாவே சொல்லவும்..அழுத புகழ், காதலை சொன்ன பின்னோ இல்லை வாழும் போதோ இப்படி பேசினால் நான் எப்படி அவருடன் இருக்க முடியும்? அதுக்கு இப்ப போறதே பரவாயில்லை. அக்கா மூவ் ஆன் ஆகிடுவேன்.

அது சாதாரணமில்லை. உன் பக்கம் மாமா உறுதியா இருந்தாங்க இருந்தும் மூன்று வருசமாச்சு. நிதானமா முடிவெடு.

இருக்கட்டும் அக்கா. நான் பார்த்துக்கிறேன் என்று அவளது சாதாரண ஆடையை மாற்றி விட்டு மேக் அப்பை அகற்றி விட்டு வெளியே வந்தாள்.

புகழ் அழுவாளோ? என்று அனைவரும் பயந்து இருக்க, அவள் சாதாரணமாக பாட்டி முன் வந்து, இந்தாங்க பாட்டி நீங்க ஆசைப்பட்ட மாதிரி போட்டு காமிச்சுட்டேன். எனக்கு இதெல்லாம் வேண்டாம்.

என்னடா இப்படி பேசிட்ட? நாங்க உன்னை எங்க வீட்டு பிள்ளையா தான பார்த்தோம்.

பாட்டி, நீங்க பார்க்கலை. மத்தவங்க கண்ணுக்கு நான் லோ கிளாஸ் தான். என் முன் வைத்தே மத்தவங்க பேசினாங்க. நான் கண்டுக்கல. ஆனால் நம்ம குடும்பம்..சோ..சாரி, உங்க பேரனே சொல்லும் போது நான் எப்படி பாட்டி இருப்பது? உங்களுக்கே தெரியும். நான் அக்கா மாதிரி இல்லை. அவள் தைரியமா இருந்தாலும் என்ன நடந்தாலும் சமாளிச்சுப்பா. ஆனால் அவள் பொறுமை எனக்கு கிடையாது.

நான் கோபத்துல பேசிட்டேன் புகழ். சாரி..போகாத என்றான் ராவண்.

சார், என்னை இங்கே இருக்க சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. என்னோட அக்காவும், மாமாவும் சொன்னால் இருக்கிறேன்.

இதுக்கு மேல நான் இங்க இருக்கணுமா? என்று இருவரையும் பார்த்தாள். குகன் பேச எண்ணி நகர, பார்வதி அவன் கையை பிடித்து தடுத்து கண்ணீருடன் நின்றாள்.

அவள் அழுவதை பார்த்து, அக்கா எதுக்கு அழுற? என்று அவளிடம் சென்று அவள் கண்ணீரை துடைத்து, மாமா மறந்தே போயிட்டேன் என்று அவளது பையை பிரித்து, மாமா..கையை நீட்டுங்க என்று அவன் கையில் கைக்கடிகாரத்தையும், அக்கா..உனக்கு பெரிய சர்ப்பிரைஸ் இருக்கு என்று கழுத்தை ஒட்டிய நெக்ல்ஸ் ஒன்றை அணிவித்து..

எப்படி? சூப்பரா இருக்குல்ல..என்று அவளை பார்த்து, அக்கா..இதை விட நீ தான் சூப்பரா இருக்க. என்ன மாமா? நான் சொல்றது சரி தான? புன்னகையுடன் கேட்டாள்.

ம்ம்..சரி தான்டா..என்று கண்கலங்கினான்.

ஓ.கே..என்று தாத்தாவிடம் வந்து, தாத்தா…என்னோட அக்கா விருப்பமிருந்தா மட்டும் அவள் இங்கே வரட்டும். மாமா வரட்டும். அவள கட்டாயப்படுத்தாதீங்க. தாத்தா உங்களுக்கும் பாட்டிக்கும் ஒண்ணு வாங்கினேன் என்று புடவையும் வேஷ்டி சட்டையும் அவர் கையில் கொடுத்து..உங்க அளவுக்கு இல்லை. என்னை உங்க ப்ரெண்டா நினைச்சு இதை வாங்கிக்கோங்க. என்னால் முடிந்தது.

போக தான் போறியா?

போகணுமே? எனக்கு எதிர்காலத்தை நான் உருவாக்க வேண்டாமா?

நீ போ. ஆனால் நம்ம வீட்ல தான் இருக்கணும் நந்து சொல்ல, இல்ல மாமா, நான் இப்ப வீட்டுக்கு தான் போறேன். ஆனால் நீங்க வரும் போது வீட்ல இருக்க மாட்டேன்.

நீ தனியா இருக்க முடியாது மேகா சொல்ல, இல்லக்கா. என்னால முடியும். இன்னும் ஒரு வருசம் தான் முடிச்சுட்டு நான் என்னோட எதிர்காலத்தை நோக்கி செல்லப் போறேன். எந்த நேரத்துல எங்க இருப்பேன்னு கூட தெரியாது. நான் ஆர்க்கியாலெஜிஸ்ட். என்னால ஒரே இடத்தில் இருக்க முடியாது. எனக்கு இருந்தது அக்கா தான். அவளை மாமாவிடம் ஒப்படைச்சிட்டேன். இதுக்கு மேல எனக்கு வேற யாரு..என்று பாருவை கண்ணீருடன் பார்த்தாள்.  பாரு அழுது கொண்டே அறைக்கு செல்ல, மாமா..என்றாள். அவனும் பின் சென்றான்.

யாருமில்லையா? நாங்க தான் இருக்கோம்ல ராவண் அம்மா சொல்ல, கண்ணீரை துடைத்து விட்டு, ஆன்ட்டி உங்க குடும்பத்துல நானும் கெஸ்ட் தான். இதுவரை அக்கா மட்டும் தான். இப்ப குகன் மாமா இருக்காங்க. சொந்த உறவை நம்ம மனசே காட்டிக் கொடுக்கும். ஆனால் எனக்கு இதுவரை தோன்றியது. ஆனால் இப்ப இல்ல ஆன்ட்டி..என்று ராவணை பார்த்தாள். பின் எல்லாரையும் பார்த்து, என்னை யாரும் பேசியது போல் யாரும் என் அக்காவை பேச மாட்டீங்கன்னு நினைக்கிறேன்னு ஒரு ஆன்ட்டி முன் வந்து,

அப்ப..என்னோட அக்கா என் இடத்துல தான் இருந்தா. ஆனா இப்ப பார்வதி- குகன் மாமாவோட சரிபாதி. யாரும் அவளை சொன்னால் அவரை சொன்னது போல் ஆகும்.

ஆன்ட்டி, நீங்க என்னோட அக்காவை பத்தி தெரியாம பேசுறீங்க? நான் என் அம்மாவை பார்த்ததேயில்லை. யாரும் உனக்கு அம்மா இல்லையான்னு சொன்னா..என் அக்கா தான் அம்மாவா முன் வந்துருக்கா. அவள் எனக்கு அம்மா.

பிள்ளைகளுக்கு அம்மாவை பத்தி பேசுனா சும்மா விடுவாங்களா? நீங்க விடுவீங்களா? நான் விடமாட்டேன் என்று அவர்கள் கையில் இருக்கும் பர்ஸை பிடுங்கி அதிலிருந்த பணத்தை எடுத்து, பரவாயில்லை நிறைய வச்சுருக்கீங்க. ஆனா..இதை விட உங்க வீட்ல நிறைய பணம் இருக்கும்ல..என்று அங்கிருந்த மேசையில் சம்மனம் போட்டு அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து ராக்கெட் செய்து பறக்க விட்டு..அச்சோ..ஆன்ட்டி, உங்க பணம் பறந்து போச்சு..போய்..தேடி பொறுக்கிக்கோங்க என்று குதித்து இறங்கி அவள் அக்கா சென்ற அறையை பார்த்துக் கொண்டே அஜய்யிடம் வந்தாள்.

பணத்தோட அருமை புரியுதா பாரு? என்று அந்த ஆன்ட்டி திட்ட, அவள் கண்டு கொள்ளவேயில்லை

சார், எப்படியும் வேலையை விட மாட்டா. நீங்க பார்த்துக்கோங்க.

புகழ், நீ வேண்டுமானால் ஹாஸ்டல்ல இருந்துக்கிறியா?

சார், நான் ஹாஸ்டல்லா? செட்டே ஆகாது என்று கீர்த்தியிடம் வந்து அணைத்து பார்த்துக்கோங்க.

அதுக்கு இல்லைம்மா? அவன் தயங்க, புரியுது சார்..எப்படியும் என்னை நான் தான் பார்த்துக்கணும். நீங்க இப்ப உதவி..மறுபடியும் உங்க முன்னாடி..நோ..சார் என்று அனைவரையும் பார்த்து விட்டு, ருத்ராவை அணைத்து அழுதாள். அக்காவ பார்த்துக்கோங்க ஆன்ட்டி.

பின் தன் நண்பர்களிடம் வந்து கிளம்பலாமா தீபு? கேட்டாள்.

என்னடி பண்ற? பெரியவங்க முன்னாடி நீ இப்படி பேச மாட்டேல்ல?

இப்ப வர்றீங்களா? கிளம்பவா? சத்தமிட்டாள்.

அக்கா அழுதுகிட்டே போனாங்க புகழ் ராஜூவ் சொல்ல, அதான் மாமா போயிருக்காங்கல்ல. பார்த்துப்பாங்க என்று அவள் போனை பிரித்து சிம்மை தூக்கிப் போட்டாள்.

ஹேய், என்ன பண்ணிக்கிட்டு இருக்க? சீனு அப்பொழுது தான் உள்ளே வந்தான். காருண்யா அவனிடம் செல்ல..அக்கா, என்ன பண்றா?

அவள்..என்று தயங்கினாள். எல்லாரும் அவளை பார்க்க, அக்காவ எங்க? கேட்டான்.

கண்ணீரை கட்டுப்படுத்தி கண்ணை காட்டினாள்.

அவன் அறைக்கு சென்று பார்க்க, அவள் படுக்கையில் குப்புற படுத்து அழுதாள். குகன் அவள் கையை பிடித்து அமர்ந்திருந்தான்.

அக்கா என்று சீனு அழைக்க, அவனை பார்த்து விட்டு கண்ணை துடைத்து வா சீனு..என்று பேச, எல்லாரும் புகழை ஒருமாதிரி பாக்குறாங்க. என்ன நடக்குது?

சரியா தான் பண்றா சீனு. அது தான் அவளுக்கு நல்லது. ஆனால் தனியா விட தான் பயமா இருக்கு.

அதான் நான் இருக்கேன்லக்கா. நீங்க கவலையே படாதீங்க என்றான்.

பார்த்துக்கோ என்று அவள் கண்ணீருடன் சொல்ல, அவளிடம் வந்து சந்தோசமா இருக்க வேண்டிய நேரம் அழுதுகிட்டு இருக்கீங்க?

மாமா..அக்காவை மேடைக்கு கூட்டிட்டு போங்க என்றான். அவளும் எழுந்து குகனுடன் வெளியே வந்தாள்.

இருவரையும் பார்த்து புன்னகைத்த புகழ் முடியாமல் பார்வதியிடம் ஓடி வந்து அணைத்து விட்டு கண்ணீருடன் தலையசைத்து கிளம்புகிறேன் என்று சொல்ல பார்வதி அவள் கையை பிடித்து விடாமல் நின்றிருந்தாள். அவள் கையை எடுத்து விட்டு குகனை பார்த்து விட்டு விறுவிறுவென வெளியே நடந்தாள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராவண் செல்ல, அவன் கையை அழுத்தமாக பிடித்த அவன் அப்பா, அவளை இதுக்கு மேல கஷ்டப்படுத்த வேண்டாம். நீ இரு..என்று அவர் வெளியே ஓடினார்.

புகழ்ம்மா..நில்லு..என்று அவளிடம் வந்து, இது என்னோட நம்பர். உனக்கு உதவி வேணும்னா கூப்பிடு என்றார்.

அவள் புன்னகையுடன், தேங்க்ஸ் அங்கிள். “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி விட்டு காரில் ஏறினாள். கார் அங்கிருந்து சென்றது.

“ஆல் தி பெஸ்ட்டா?” என்று யோசித்தவர்..ராவண் திருமணத்தை பற்றி பேசியது நினைவு வந்து, வெளியே வந்தார். கார் சென்ற தடம் மட்டும் இருந்தது. அவருக்கு கோபம் இப்போது தன் மகன் மீது கோபம் வீறிட்டது. அவர் உள்ளே வர..புகழ் ஒருவர் பணத்தில் ராக்கெட் செய்து விட்டாலே அந்தம்மா கத்திக் கொண்டிருந்தது.

வேகமாக வந்தவர் ராவண் கன்னத்தில் அறைந்தார்.

அய்யோ, பிள்ளைய அடிக்காதீங்க அவன் அம்மா வர, எல்லாமே உன்னால தான். பிள்ளைய ஒழுங்கா வளக்குறத விட என்ன உனக்கு வேலை இருந்தது? என்று அவருக்கும் அடி விழுந்தது.

அவனிடம் திரும்பி, இந்த அரண்மனை உன்னோட அம்மா வீடு தான். உனக்கு எல்லாரும் சொந்தமாலும் உனக்கு தாத்தா, பாட்டி வீடு மட்டும் தான். இங்கே இருந்து பழகி சாதாரண மக்களின் வாழ்க்கையின் அருமை உனக்கு புரியலை. போய்..பாரு தெரியும். பட்டு மெத்தையில் வெறுமை தான் மிஞ்சும். பத்து ரூபாய் சம்பாதித்தாலும் சந்தோசமா இருக்குற குடும்பத்தை போய் பாரு.

புகழ பார்த்து என்ன சொன்ன? ரோட்டு கடையில வாங்கி சாப்பிடுறவளா? எவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட் போனாலும் கிடைக்காத சந்தோசம் ரோட்டு கடையில தான் கிடைக்கும். அதான் அவள் சிரிச்சுக்கிட்டு இருக்கா..

அவன் பேச வர, என்ன சொல்ல வர்றன்னு தெரியுது?

புகழ் சந்தோசமா இல்லைன்னு எனக்கு எப்பவோ தெரியும். எதுக்கு அவள இப்படி மாத்திக்கிட்டான்னு தெரியுமா? கேட்டார். அவன் அமைதியாக நின்றான்.

அவள் சொன்னாலே அம்மாவை பார்த்ததேயில்லை. அக்கா தான் அம்மான்னு. என்ன தான் சொன்னாலும் அவளுக்குள்ள இருந்த முதல் பாதிப்பு. அம்மா இல்லாத ஏக்கம். எங்கே அக்காவுக்கோ..அப்பாவுக்கோ.. தெரிந்தால் நம்மை பார்த்து கஷ்டப்படுவாங்கன்னு அவளுக்கு விவரம் தெரிந்த பத்தாவது வயதிலே சிரிப்பை கையில் எடுத்திருக்கா. வளரும் போது..அக்காவை அம்மாவாக பார்க்க ஆரம்பித்தாள். பார்வதி இல்லாமல் இதுவரை புகழ் இருந்ததேயில்லை. முதல் முறையாய் உங்களுடன் தனியே இருந்திருக்காள் என்று சுந்தரம் ருத்ராவை பார்த்தார். அவர்கள் கண்கள் கலங்கியது. இனி தனியே தான் இருக்கப் போகிறாள். பார்வதி குகன் தோளில் சாய்ந்து அழுதாள்.

நான் ஒன்று நினைத்தேன் என்று ஆனால் உன்னால எல்லாமே போச்சு என்று ராவணை திட்டி விட்டு அந்தம்மாவை பார்த்து, பார்வதியும் புகழும் எங்க வீட்டு பொண்ணுங்க. பார்வதியை நீங்க ஏதோ பேசியதால் அவள் இப்படி செஞ்சுட்டு போயிருக்கா. இங்க எல்லா துறையினரும் இருக்கீங்க? புகழை சமாதானப்படுத்த பார்த்தீங்க. ஆனால் ஒருவராவது என் மகனிடம்..நீ இப்படி பேசக் கூடாது தம்பின்னு சொன்னீங்களா? கத்தினார். அனைவரும் அமைதியாக இருந்தனர்.

சொல்ல மாட்டாங்க. சொல்ல மாட்டாங்கடா..ராவா. ஏன்னா..நீ ஜமீன்தார் வீட்டு பேரன். இப்ப உன்னோட தாத்தாவே புகழை பேத்தின்னு சொன்னாலும் யாரும் ஏத்துக்கிட்டு உனக்கிருக்கும் மரியாதையை கொடுக்க மாட்டாங்க.

ஏன்னா, அவளிடம் பணம் இல்லை. ஜஸ்ட் சிம்பிள்..என்று அங்கிருந்த டேபிளை தட்டி விட்டார். அவர் கையில் அந்த கண்ணாடி டேபிள் முனை பட்டு இரத்தம் கசிந்தது. அவன் அம்மா அவரிடம் வந்தார். குகன், பாட்டி அனைவரும் அவரிடம் வர, விலகி போங்க.

என் பக்கத்துல யாரும் வராதீங்க? என்று சத்தமிட்டு குகனை பார்த்து.. உன்னை பார்த்து தான்டா எல்லாமே கத்துக்கணும். எல்லாமே சரியா செய்யுற..உன்னை மாதிரி நான் இருந்திருக்கக் கூடாதான்னு ஏக்கமா இருக்குடா. நான் கல்யாணம் முடிந்த பின் இங்கே தானே இருந்தேன். வீட்டோட மாப்பிள்ளை. மாமா என்னிடம் பேசி நான் ஒத்துக் கொண்டு தான் வந்தேன். எனக்கு அவளை பிடித்ததால் இங்கே இருக்க முடிவெடுத்தேன். அதனால் நான் பட்ட கஷ்டமும் அவமானமும் பற்பல. அனைத்தையும் துடைத்து விட்டும் இருந்தேன். கடைசியில் இப்ப தான் நான் போகும் நிலை வந்தது. நான் இங்கிருந்து போகும் போது மாமாவிடம் ஏதும் கேட்கலை. அவரும் ஏதும் சொல்லலை. நல்லதென இருந்தாலும் எனக்கான வாழ்க்கையை இத்தனை வருடங்களாக இழந்திருக்கிறேன். சாரி மாமா என்று அவரை அணைத்து விட்டு,

அத்தை, மாமா..நம்ம நினைச்சதை உங்க பேரன் ஒன்றுமில்லாமல் ஆக்கிட்டான். இப்ப நான் என்ன செய்றது? அவர் கேட்க..பாட்டி தாத்தாவை பார்த்தார். அவர் பேசிக் கொண்டிருக்க, அவர் மனைவி அவர் கைக்கு கட்டிட்டு அவர் பணியை செவ்வனே செய்து முடித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement