Advertisement

அத்தியாயம் 141

அர்ஜூன் பாட்டி சாப்பாட்டுடன் ஸ்ரீயை பார்க்க வந்தார். அர்ஜூன் அவளருகே அமர்ந்திருக்க, அவன் தோளில் சாய்ந்து அனுவை மடியில் வைத்து அவளுடன் பேசிக் கொண்டிருந்தாள். பாட்டி அவர்களை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். ஸ்ரீ நகர..நீ சாய்ஞ்சுக்கோம்மா..என்றார் பாட்டி.

வேண்டாம் பாட்டி என்று அவனிடமிருந்து விலகி, அனுவை அவனிடம் கொடுத்தாள். பாட்டி அவருக்கு ஊட்டி விட, பாட்டி, இப்ப அம்மா இருந்தா நல்லா இருக்குன்னு தோணுச்சு. ஆனால் அதுக்கு பதிலா நீங்க இருக்கீங்க பாட்டி.. கண்கலங்கினாள்.

செகண்டு ஏஞ்சல், உன்னோட ஏஞ்சலுக்கு நாமெல்லாம் கண்ணுக்கு தெரியலை போல? அர்ஜூன் கேட்க, அவள சாப்பிட விடு அஜூ என்றார் பாட்டி.

பாட்டி எனக்கு? அர்ஜூன் கேட்க, அவனுக்கு ஊட்டி விட்டார். அவன் அனுவிடம் வவ்வளம் காட்ட, பேட் பாய் என்றாள்.

என்ன சொன்ன? அனு அர்ஜூன் அனுவை துக்க, பாட்டி காப்பாத்துங்க.. ஏஞ்சல்..என்னை காப்பாத்து அர்ஜூன். எனக்கு கிச்சுகிச்சு மூட்டுறான் என்று சிரித்துக் கொண்டே விளையாடினாள். ஸ்ரீயும் பாட்டியும் இருவரையும் ரசித்து பார்த்தனர். அவர் அனுவுடன் செல்ல அர்ஜூன் ஸ்ரீ அருகே அமர்ந்தான்.

ஸ்ரீ அர்ஜூனை பார்த்துக் கொண்டே இருந்தாள்.

என்ன ஸ்ரீ? அப்படி பாக்குற?

என்ன இது அர்ஜூன்? என்று அவன் தாடி, மெலிந்த தோற்றத்தை காட்ட..அவன் அவளை நெருங்கி, நீ தானே விட்டு போக பார்த்த?

அதுக்கு? இப்படியா? பாட்டி, அம்மா எல்லாரும் உன்னை பார்த்து எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க என்று முறைத்தாள்.

ஸ்ரீ..உனக்கு இப்ப கூட என் கஷ்டம் புரியலைல?

புரியுது அர்ஜூன். ஆனால் அர்ஜூன் இப்ப உனக்கு நான் மட்டுமில்லை. நம் அனு, அம்மா, தாரி, பாட்டி, அஞ்சும்மா, நம்ம ப்ரெண்ட்ஸ். அதை விட உன்னை நம்பி நிறைய வொர்க்கர்ஸ் இருக்காங்க.

எத்தனை பேர் இருந்தாலும் உனக்கு ஈடாகாது ஸ்ரீ. ஸ்ரீ அவனை அணைத்துக் கொண்டு, சாரி அர்ஜூன் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.

உன்னால எப்படி ஸ்ரீ உன்னோட காதலை மறைக்க முடிஞ்சது?

தெரியல அர்ஜூன். ஆனால்..அர்ஜூன். நீ நம்புறேல்ல.

என்ன நம்பணும்?

அப்பவே நான் உன்னை காதலித்ததை காதல்ன்னு நம்புறேல்ல பயந்து அவனை பார்த்தாள்.

அர்ஜூன் சிரித்துக் கொண்டு, நீ சரியான ஜில்லா கேடி ஸ்ரீ.

உன்னோட காதல் நோட்டை நான் கிழித்து போடும் போது உனக்கு கஷ்டமா இல்லையா?

இருந்தது அர்ஜூன். சொல்லப் போறானால் அதை பார்த்து தான் நான் உன்னை வேண்டாம்ன்னு சொல்லும் போது..உனக்கு எப்படி வலித்திருக்கும்ன்னு தெரிந்தது என்றாள்.

ரொம்ப வேகமா புரிஞ்சுக்கிட்ட?

சாரி அர்ஜூன்.

உனக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணுமே? அர்ஜூன் சொல்ல. ஸ்ரீ அவனது கன்னத்தில் முத்தமிட்டு போதுமா? கேட்டாள்.

அர்ஜூன் புன்னகையுடன் பத்தாதே..என்று மறுகன்னத்தை காட்டினான். அவள் அவன் கன்னம், நெற்றியில் கொடுக்க, தாரிகா, பவி, தாரிகா அம்மா வந்தனர்.

இருவரையும் பழைய மாதிரி பார்க்க சந்தோசமா இருக்கு என்று தாரிகா..அண்ணா, ட்ரீட் நாளைக்கு ஃகெவியா வேணும்?

வழிய விடும்மா..என்று தாரிகா அம்மா இருவருக்கும் திருநீறு இட, பவி அவளிடம் வந்து, ஸ்ரீ உனக்கு சாப்பிட என்ன வேண்டும்? பவி கேட்க, எனக்கு வெளிய போகணும். கூட்டிட்டு போறியா?

உதை விழும் என்று பாட்டி உள்ளே வந்து எலும்பு சூப்பை தாரிகா அம்மாவிடம் கொடுத்து, இதை அவளுக்கு கொடு என்றார்.

எங்களுக்கெல்லாம் இருக்கா? இல்லை எல்லாமே அவளுக்கு தானா? தாரிகா கேட்க, அபி உள்ளே வந்தான்.

ஸ்ரீ இந்தா? என்று ஒன்றை நீட்டினான். அவளுக்கு பிடித்த ஐஸ்கிரீம்..

தேங்க்ஸ் சீனியர் என்றாள் ஸ்ரீ கேலியாக.

சீனியர்..சீனியர்ன்னு எல்லாமே தெரிஞ்சு ஏமாத்தி இருக்க அபி கேட்க, அவள் புன்னகையுடன் அது இருக்கட்டும். அர்ஜூன்..பிரகதி, அனிகா, இதயா, இன்பா மேம் வரலையா? என்று அபியை பார்த்தாள்.

மேம் பிஸியா இருக்காங்க ஸ்ரீ. அவங்க ரொம்ப மோசம். அவங்க ப்ரெண்டை பார்த்ததிலிருந்து என்னை டீல்ல விட்டுட்டாங்க என்றான் அபி.

ப்ரெண்டா? ஆபிஸ்ல பேசியே ப்ரெண்டு பிடிச்சிட்டாங்களா? அச்சோ..அபி அது பையனா? ஸ்ரீ கேட்க, இல்ல ஸ்ரீ. யாழு அக்கா உயிரோட தான் இருக்காங்க. அவங்களும் இன்பா மேம்மும் சேர்ந்து கம்பெனிய கவனிச்சுக்கிறாங்க.

அப்படியா? யோசித்த ஸ்ரீ அர்ஜூனிடம், அக்காவை பத்தி சொல்லாம மறைச்சுட்டேல்ல.

நானா? சந்துரூ மாமா யாருக்கும் தெரியாமல் கவனித்து இருந்தார். எங்களுக்கு தெரிந்து அந்த பிரச்சனையின் போது அஜய் சார் தான் அக்காவை பார்த்துக்கிட்டாங்க. குகன் மாமா..தான் அஜய் சார் ஆபிஸ்ல இருந்து பாரு அக்கா ப்ரெண்ட்ஸோட சேர்த்து பார்த்துக்கிட்டாங்க. அதுவும் பின் தான் தெரிந்தது. அக்கா ஒரு வாரமாக இங்கே தான் இருந்தாங்க. அப்புறம் தான் அம்மாவுடன் போனாங்க என்று தாரிகா அம்மாவை பார்த்தான்.

ஸ்ரீ, இப்ப ஐஸ்கிரீம் வேண்டாம். நாளை காலை சாப்பிடு. நான் எடுத்து வைக்கிறேன். தாரிகா அம்மா சொல்ல, ஆன்ட்டி..இப்ப கொஞ்சமா சாப்பிட்டுக்கவா? ஸ்ரீ கேட்டாள்.

காலையில சாப்பிடு. வேற ஏதாவது வேணுமா? அஞ்சனாம்மா கேட்க, வேண்டாம் என்றாள் உதட்டை பிதுக்கிக் கொண்டு.

ஸ்ரீ, நாங்க நாளைக்கு கிளம்பிடுவோம் என்றாள் தாரிகா.

நிவி எங்க போனான்?

அகில் சீனியரிடம் பேசிட்டு இப்ப தான் வாரேன் என்று அறை வாசலில் சத்தம் கேட்டது.

வா..நிவி என்று அர்ஜூன் நகர்ந்து அமர்ந்தான். ஸ்ரீயை பார்த்த நிவாஸ், சாரி..எல்லாமே அப்பாவால் என்று தெரியாம போச்சு. அவரை நான் என்னமோ நினைத்தேன். அவர் வேறாக இருந்திருக்கிறார் என்று அழுதான்.

எதுக்குடா அழுற? அர்ஜூன் அவன் தோளில் கையை போட்டான். நிவாஸ் அர்ஜூன் கையை தட்டி விட்டான்.

நிவி..ஸ்ரீ கோபமாக முறைக்க, அப்புறம் என்ன? இவனுக்கு மட்டும் தான் உன்னை நினைத்து கஷ்டமாம். எங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்காதா? கோபமாக நிவாஸ் பேசினான்.

நிவி..சும்மா இரு தாரிகா சொல்ல, எதுக்கு சும்மா இருக்க சொல்ற? நம்மள இங்கே இருக்க விடாம உடனே கிளப்பி விட்டான்ல? நிவி கோபமாக கத்தினான்.

நிவி..நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட அர்ஜூன் சொல்ல, அர்ஜூன் கையை நிவாஸ் தட்டி விட்டான்.

டேய்…நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். ரொம்ப ஓவரா பண்ற? அவன் அவசரமா நம்மள போக வச்சது நமக்காக தான். ஸ்ரீ உன்னோட அக்கா தான். அர்ஜூன் மனுசன் தான் எல்லாரையும் பக்கத்துல இருந்து பார்த்துக்க முடியாது. பாம் வெடிச்ச சம்பவம் பரவி..பிரஸ், போலீஸ், டிடெக்டிவ்ஸ்ன்னு நிறைய பேர் வந்தாங்க. அஜய் சாரும், தீனா சாரும் எப்படியோ அனுப்பினாங்க. ஸ்ரீ பக்கம் வராம அவங்கள தடுக்க எவ்வளவு கஷ்டப்படாங்க உனக்கே தெரியும். அர்ஜூன் நம்மை கிளம்ப சொன்னது படிப்புக்காக மட்டுமல்ல.. நம்ம பாதுகாப்புக்காக. ஸ்ரீயோட தம்பி..அதை விட நீ..என்று தாரிகா சொல்ல வருவதை புரிந்து கொண்ட அர்ஜூன் தாரிகா வாயை மூடி வெளியே இழுத்து வந்து திட்டினான்.

அவன் ஓவரா பேசுறான்டா.

பேசுனா பேசிட்டு போகட்டும். பேச தான் செய்றான். நம்ம நிவி தான?

உனக்கு நம்ம நிவின்னா. நீ என்னோட அண்ணன். நீ தப்பு செய்து அவன் திட்டினாலே எனக்கு கஷ்டமா இருக்கும். உன் மேல தப்பு இல்லாத போது சொல்றது தப்பில்லை என்று வேகமாக உள்ளே வந்த தாரிகா..

அந்த கொலைகாரன் உன் அப்பா, அகில், ஸ்ரீ அம்மாவிற்கு தெரிந்தவர். அதனால் உங்க எல்லாரை பற்றியும் நியூஸில் எல்லாம் தெரிய வந்தால்..உன்னோட அப்பன் கொலைகாரன்னு உன்னை எல்லாரும் காயப்படுத்துவாங்கன்னு தான் காலேஷூக்கு அனுப்பினான். நீ எதுக்கு சைலேஷ் சார் வீட்ல இருந்த? உன்னோட பாதுகாப்புக்காக தான் செய்தான் என்று சொல்ல, அர்ஜூன் கோபமாக தாரிகாவை அடித்து விட்டு கையை பார்த்துக் கொண்டு அவளை பார்த்தான். அவன் கன்னத்தில் கை வைத்து அழுது கொண்டு செல்ல..இருடி..என்று தாரிகா அம்மா அவனை முறைத்துக் கொண்டே தாரிகா பின் சென்றார். ஸ்ரீ, நிவாஸை பார்த்த அர்ஜூன் தாரிகா அம்மா பின் சென்றான்.

யார்கிட்டவாது சண்டை போட்டுக்கிட்டே இருக்கணுமா உனக்கு? என்று பாட்டி நிவியை திட்டி விட்டு வெளியே சென்றார். ஸ்ரீ நிவாஸை பார்த்து, இங்க வா..என்னை பாரு. நான் நல்லா இருக்கேன். எந்த பிரச்சனையும் இல்லை. டென்சன் ஆக எதுவும் இல்லை. எனக்கு அர்ஜூன் எந்த அளவு முக்கியமோ? அதே போல் தான் நிவி நீ எனக்கும்? அவன் என் வாழ்வில் முன்னும் இருந்திருக்கலாம், பின்னும் இருந்திருக்கலாம். ஆனால் நிவி உன்னை நான் என்னுடன் பிறந்த தம்பியாக தான் பார்க்கிறேன். நீ அர்ஜூனை பார்த்து பொறாமை படத் தேவையில்லை. அந்த நடுநிலை நாட்கள் எனக்கு ரொம்ப ஸ்பெசல். ஏன்னா..எனக்கு தம்பியா ஒருவன் கிடைத்தான். என்னை நல்லா பார்த்துக்கிட்டான். அவனை விட்டு நான் சென்று விடுவேனா? ஸ்ரீ சொல்ல, நிவி அழுது கொண்டே ஸ்ரீயை அணைத்தாள்.

முதல்ல அர்ஜூன், தாரிகாகிட்ட சாரி கேளு போ..என்று அனுப்பினாள் ஸ்ரீ. நிவியும் வெளியே வந்தான். வீட்டிற்கு வெளியே தாரிகா அமர்ந்திருக்க, அர்ஜூன் அம்மா..நீங்க உள்ள போங்கம்மா. நான் பேசிட்டு அழைத்து வாரேன் என்றான். அவரும் உள்ளே நின்று பார்க்க,

சாரிடா. ரொம்ப வலிக்குதா?

போடா. நான் உனக்காக தான பேசினேன். நீ அடிச்சிட்ட?

நீ எனக்காக பேசுன? அவனுக்காக யார் பேசுவா? ஸ்ரீயா? அவள் இதை பற்றி பேசும் நிலையிலா இருக்கிறாள்? கொஞ்சம் யோசித்து பாரு. யாழு அக்காவை பத்தி சொல்லாததுக்கு என் மேலையும் சந்துரூ மாமா மேலையும் எவ்வளவு கோபப்பட்ட? அதே தான் நம் நிவிக்கும். அவன் அக்கா எந்த நிலையில் இருந்தா. அவனால் போக முடியுமா? காரணம் இருந்தாலும், உனக்கு அம்மா பக்கத்துல இருக்காங்க. இப்ப கூட உன் பின் தான் நின்னாங்க. அவனுக்காக யார் இருக்கா? நம்ம தான இருக்கணும்? இப்படி பேசிட்ட. அவனுக்கு கஷ்டமா இருந்திருக்கும். இதனால் தான் அவன் நிவியின் அப்பா என்று வெளியே வராமல் ரொம்ப கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டேன். ஆனால் நீயே இப்படி பேசிட்ட? யார் முன்னும் கோபத்துல பேசாத தாரி..

அவன் நிலையில் நீ இருந்து பாக்குற? அவன் கொஞ்சமும் யோசிக்கலையே?

அவன் அக்கா மீதுள்ள பாசம் அவனை சிந்திக்க விடலை. இதில் நான் வேற அவள் விழித்ததிலிருந்தே அவளருகே இருக்கேன். அவன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அதான் கோபப்பட்டான்.

நிவி மேல உனக்கு கோபம் வரலையா? தாரிகா கேட்க, எதுக்கு கோபப்படணும்? அவனுக்கு தனியா இருக்கிற எண்ணமே இருக்கக்கூடாதுன்னு தான் சைலேஷ் சார் வீட்ல அவனை தங்க வைத்தேன். அவன் பாதுகாப்பா இருக்கான்னு நிம்மதியா நான் இங்கே இருந்தேன். ஸ்ரீக்கும் அவனையும் பவியையும் விட்டால் யாருமில்லை.

அகில் அம்மா..என்ன இருந்தாலும் ஆன்ட்டியோட ப்ரெண்டு தான். இப்ப கூட பவியை இங்க இருக்க சொல்ல தான் நினச்சேன். ஆனால் அவங்க கோபப்படுவாங்களோன்னு தான் விட்டுட்டேன். நினைச்ச மாதிரியே பாட்டிய கோபமா தான் பார்த்துட்டு போறாங்க. நான் இருவர் பக்கமும் பேச முடியாது. ஸ்ரீயோ, நிவியோ இங்க இருக்க சொல்லலாம். நிவி சொல்லி இருக்கலாம். ஸ்ரீகிட்ட எடுக்குற உரிமைய பவியிடம் அவன் எடுத்துக்க மாட்டிக்கிறான். ஒரு முறை அதை சொல்லி கூட பவி புலம்பினாள்.

எனக்கு தெரிந்து அவள் அகில் அம்மாவிடம் எதிர்த்து பேச யோசிக்கிறாள். ஆனால் இங்கே வரும் போது கூட இவள் அங்கே இருந்தால் அவளை யாரும் தப்பா பேசிருவாங்களொன்னு சிந்தனையா இருக்கு என்றான் அர்ஜூன்.

ஏன்டா, எல்லார் பற்றியும் யோசிக்கிற? என்னை பத்தி யோசிச்சியா?

நம்ம அக்கா இருக்காங்களே? அவங்க பேச்ச தட்டீருவ? அர்ஜூன் கேட்க, நீ அக்காவிடம் சொன்னாலும் சொல்லலைன்னாலும் அவங்க என்னை நல்லா பார்த்துப்பாங்க.

ஓ..அப்படியா? எத்தனை வருசம் உன்னையே பார்த்துக்கிட்டு இருப்பாங்க? அவங்களுக்கு தனி குடும்பம் இருக்கு. கல்யாணம் பண்ணாமலே மருமகள யாராவது இப்படி பார்த்துப்பாங்களா? சந்துரூ மாமா அம்மா அக்காவ நல்லா பார்த்துக்கிட்டா. அக்கா உயிரோட இருக்காங்கன்னு சொன்னதும் பார்க்க தோன்றியது. ஆனால் அதை விட அவங்க உயிர் முக்கியம். அதனால் நான் அவர் அம்மாவிடம் பேசி..எனக்கு தெரிந்த ஆளை பார்த்துக்க சொல்லி அனுப்புவதாக சொன்னேன். ஆனால் அவங்க..எங்க வீட்டுப்புள்ளைய நாங்களே பார்த்துப்போம் என்று சொன்னார். அவங்க ரொம்ப நல்லவங்க தாரி என்றான்.

தாரிகா அம்மாவை தாண்டி நிவி இருவர் முன்னும் வந்து நின்றான். இருவரும் பேசியதை கேட்டிருப்பான்.

சாரி மாமா..என்று நிவி அர்ஜூனை அணைக்க, ஓய்..நகரு, நகரு..என்று தாரிகா அவனை தள்ளினாள்.

சாரி, தாரி..என்றான் நிவி.

சாரியா? பாரு உன்னால இவன் என்னை அடிச்சிட்டு பெரிய கதையெல்லாம் பேசுறான் என்று எழுந்து நடந்தாள். அதான் சாரி சொல்றேன்ல..என்ன? என்று நின்ற தாரிகா கல்லை எடுத்து நிவி மீது வீசினாள். அர்ஜூன் எழுந்து வந்து அவளை தடுத்தான்.

ஸ்ரீ..உன்னோட ப்ரெண்டு என்னை கொல்லப்பாக்குறா? நிவாஸ் கத்தினான். அனு வெளியே வந்து இருவரையும் பார்த்து அர்ஜூனை பார்த்தாள். அவன் தாரிகா கையை பிடித்து மீண்டும் பேச,

டேய்..நிறுத்து, சென்டிமென்ட்டா பேசுறேன்னு கொல்றடா. ரெண்டு பேரும் என்னமும் செய்யுங்க? என்று அவள் உள்ளே சென்றாள். அவள் அம்மாவும் உள்ளே சென்றார்.

அர்ஜூன் அனுவை பார்த்து, டோரா முடிச்சிருச்சா..அனுவை தூக்கி கேட்டான். இல்ல..எல்லாரும் சத்தம் போட்டுகிட்டே இருக்கீங்க? நான் எப்படி பாக்குறது?

இனி தொந்தரவு செய்ய மாட்டோம்..போய் பாரு என்று அர்ஜூன் அமர்ந்தான். நிவாஸ் அவனிடம் வந்து அமர்ந்து, நான் கோபத்துல பேசிட்டேன். சாரி அர்ஜூன்.

ஓ.கே என்று அர்ஜூன் நட்சத்திரங்களை பார்த்தான்.

நான் பவி அக்காவை இங்கே வரச் சொல்லவா?

பேசுனதை கேட்டியா?

ஆமா, கேட்டேன்.

நாளைக்கு அகிலுடன் இங்கே இருந்துட்டு கிளம்புறதா தான் சொன்னா? நீ இப்ப பேச வேண்டாம் அகில் அவள் பக்கம் இல்லாத சமயம் பேசு. இல்லை கோபப்படுவான். அவன் கோபம் உனக்கு தெரியும்ல?

தெரியும்..தெரியும்.

நீயும் ஸ்ரீயிடம் பேசுவது போல் பவியிடமும் பேசிப்பார். அவ ஃபீல் பண்ணுறா?

சரி அர்ஜூன். சாப்பிட வாங்கடா..தாரிகா அம்மா அழைத்தார். இருவரும் உள்ளே சென்றனர்.

தீனாவுக்கு சென்னையில போஸ்ட்டிங் போட்டிருக்காங்க. அவன் அங்கே தான் இருக்கிறான். புவியும் தருணுடன் அங்கே தான் ஓர் பள்ளியில் சேர்ந்து படிக்கிறாள். அவள் இப்பொழுது சைலேஷ் வீட்டில் தான் இருக்கிறாள். தருண் சென்றவுடன் அவள் அவர்கள் வீட்டிற்கு வந்து விடுவாள்.

மறுநாள் முழுவதும் ஸ்ரீ, அகில், பவி, நிவாஸ் மற்றும் நண்பர்களும் சந்தோசமாக இருந்தனர். ஸ்ரீ மதியத்திற்கு பின் வீட்டிலிருந்து வெளியே வந்தாள். முழுதாக விடவில்லை. ஒரு வாரம் கழித்து தான் வெளியே செல்லணும் என்று கூறியதால் அவள் வீட்டையே சுற்றி வந்தாள்.

பிரதீப் இரவு தான் வீட்டிற்கு வந்தான். துகிரா, ஆதேஷ் அறையில் விளக்கு எறிய, இங்க என்ன? என்று பார்த்துக் கொண்டே வந்தவன் துகிரா அறையை திறக்க, அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அவனுக்கு அதிர்ச்சி சந்தோசம் என இருக்க, விளக்கை போட்டுட்டு எப்படி தூங்குறா பாரு? திட்டிக் கொண்டே அவளிடம் நெருங்க, நில்லுங்க என்று திரும்பி படுத்தாள்.

நீ தூங்கலையா? அவன் கேட்க, அறையிலிருந்த அனைத்தையும் அவன் மீது தூக்கிப் போட்டாள்.

எதுக்கு இந்த கோபம்?

எதுக்கு கோபமா? வேற ஆளை பிடிச்சுட்டீகளா? அவள் கேட்க, ஏய்..என்ன பேசுற?

போன் செஞ்சா எடுக்கணுமா? இல்லையா? நான் ஒருத்தி இருக்கிற மாதிரியே உங்களுக்கு தெரியலை. போங்க வெளிய..என்று எழுந்து வந்து அவனை தள்ளினாள்.

செல்லகுட்டிம்மாவுக்கு கோபமா? உங்களால என்னை நகர்த்தவே முடியாது என்றான்.

சட்டென அவனுக்கு இதழணைப்பை கொடுத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தாள். அவன் அப்படியே நின்றான். பின் நிதானித்து..வேலை நிறைய இருந்ததும்மா. இந்த வேலுவை தவிர, எல்லாருமே வேற வேலைய பார்க்க கிளம்பிட்டானுக. இதுல இந்த ரெசார்ட் வேற. அர்ஜூன் ஸ்ரீயை நினைச்சு கவலையில எதையுமே பார்க்கலை. நான் தான் சரியா சாப்பிடுறதில்லை, தூங்குறதில்லை. மணிய பாரு பன்னிரண்டாகுது. இதை விட நேரமாகும்.

துகிரா அமைதியாக அவனை பார்த்தாள்.

அவன் புருவத்தை உயர்த்தினான். தினமும் நேராகுமா?

ஆமா, அதான் அம்மா சாப்பாட்டை அங்கே அப்பாவிடம் கொடுத்து விடுவாங்க என்றான்.

அதுக்காக பேசாம இருக்குறதா? எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா? துகிரா அழுதாள். அவன் அவளை அணைத்து இரவு கால் பண்ணா எடுப்பியா? கேட்டான்.

உடனே சரி என்றாள். அவன் புன்னகையுடன்..ஸ்ரீயை பார்த்தாச்சா?

அவள் விழிச்சிட்டா.

ம்ம்..தெரியும். நாளைக்கு பார்க்க போகணும்.

நாளை ஈவ்னிங் கிளம்பணும் என்றாள் அவள்.

கண்டிப்பா கிளம்பணுமா? வருத்தமாக கேட்டான்.

போக வேண்டாமா? நாளைக்கு முழுவதும் என்னுடன் இருக்க முடியுமா? அவள் கேட்க, அவன் எழுந்தான்.

முடியாதா?

பார்க்கிறேன் என்றான். அவள் அமைதியாக அவனை அணைத்து, உங்களை ரொம்ப மிஸ் பண்ணேன் என்றாள்.

ஸ்ரீயை பார்த்து வந்த பின் நாம் சேர்ந்து ஓர் இடத்திற்கு போகலாமா? என்று கேட்டான்.

எங்க போகப்போறோம்?

நம்ம ஊரை சுத்தி பார்க்க போகலாம் என்றான். கொஞ்சம் வேலையும் இருக்கும் என்று தயங்கினான். அவன் கன்னத்தில் முத்தமிட்டு, எனக்காக லீவு போடுறீங்களே? அதுவே போதும்.

தூங்கு. நாளை பார்க்கலாம் என்று அவன் செல்ல, ஒரு நிமிசம் என்று அவன் கையில் ஒரு கயிற்றை கட்டினாள்.

என்னது?

இது..நான் தான் என்றாள் புன்னகையுடன். அவள் தலையை தடவி விட்டு வெளியே வந்து ஆதேஷ் அறையை பார்த்தான். அறை திறந்து இருந்தது. ஜானு ஆதேஷ் மடியில் தலை வைத்து படுத்திருந்தாள். அவன் படுக்கையில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். பிரதீப் இருவரையும் பார்த்து புன்னகையுடன் சென்றான்.

அனைவர் திட்டப்படி எல்லாம் நன்றாக சென்றது. அனைவரும் கிளம்பினர். அன்று அர்ஜூன் ஸ்ரீ பக்கமே இல்லை. அவன் அவனறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்திருப்பான். அன்றிரவு..அர்ஜூன் ஸ்ரீ அறைக்குள் செல்ல அனு தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை இன்று நிறைய பேர் வந்து பார்த்து சென்றிருப்பர். ஆனால் அவள் விழிகள் அர்ஜூனை தான் தேடியது.

அனுவை பார்த்து விட்டு ஸ்ரீ அருகே வந்து அமர்ந்து அவள் கையை பிடித்து அவளை பார்த்தான். அவள் நெற்றியில் முத்தமிட்டு அவன் செல்ல, ஸ்ரீ அவன் கையை பிடித்தாள். பக்கத்துல இரு அர்ஜூன் என்றாள்.

தூங்கு ஸ்ரீ.

நோ..அர்ஜூன். நீ போயிடுவேல்ல.

புன்னகைத்த அர்ஜூன், உன்னை விட்டு போவேன்னு நினைக்கிறியா?

ப்ளீஸ் பக்கத்திலே இரு அர்ஜூன். அவன் அருகே அமர்ந்தான். அவன் கையை கோர்த்த ஸ்ரீ, எனக்கு தூங்கணும் போல இருக்கு. பக்கத்துல வா..படுத்துக்கோ..நீயும் தூங்கு.

ஸ்ரீ..?

இது ஒன்றும் நமக்கு புதுசில்லை அர்ஜூன். பயப்படாம வா. உன்னை ஏதும் செய்ய மாட்டேன்.

சிரித்த அர்ஜூன், முதல்ல நான் உன் பக்கம் வந்தால் தள்ளி விடுவ. இப்ப பாரு நீயே கூப்பிடுற?

என்ன?

இல்லை..இல்லை..தூங்க துணைக்கு கூப்பிடுறன்னு சொன்னேன் என்று அவன் சொல்லிக் கொண்டே அருகே படுத்தான். அவனை அணைத்து ஸ்ரீ தூங்குவதை பார்த்து அர்ஜூனும் அப்படியே தூங்கினான்.

இப்படியே நாட்கள் நகர்ந்தது. மறுமாதம் ஸ்ரீ, அர்ஜூன், அனு சென்னையில் அர்ஜூன் வீட்டிற்கு சென்றனர் உடன் நிவியும் வந்தான். சில நாட்களில் பவியும் அவ்வப்போது தங்க ஆரம்பித்தாள். அவள் பெற்றோரும் அவளை விட்டனர்.

மூன்று மாதங்கள் கடந்தது. அனுவும் பள்ளிக்கு சென்று வந்தாள்.

ஊரில் தியாவை காயப்படுத்திக் கொண்டிருந்த சத்யா அவளை இன்னும் விடுவதாக இல்லை. அன்று விடுமுறை இல்லாததால் தன் பிள்ளைகளை தனியே விட்டு சத்யா பெற்றோர் மேரேஜூக்கு ஊருக்கு செல்வதாக சென்று விட்டனர்.

இரவு சாப்பிட்டு அனைவரும் படுக்கும் முன் தங்கைகள் இருப்பதை மறந்து, அந்த வீடியோவை வைத்து தியாவை தவறாக பேசி விட்டான். இதுவரை பொறுமையாக இருந்த அவளால் அந்த சின்ன பொண்ணு முன் பேசவும் தாங்க முடியவில்லை அழுதாள். அவன் அதை கூட கவனிக்காமல் வெளியே சென்று விட்டான்.

மூத்தவள்..அண்ணி..என்று வர, அழுது கொண்டே கதவை சாத்தினாள். சின்னவள் தியாவை சந்தேகப் பார்வையுடன் பார்த்தாள். அவளுக்கு சின்னப் பொண்ணு பார்வை தாங்க முடியாமல் கதறி அழுதாள்.

மறுநாள் மாலை தான் பெற்றோர்கள் வந்தனர். அவள் சாப்பாட்டை மட்டும் செய்து எடுத்து வைத்து விட்டு சென்றாள். மூத்தவள் அவளிடம் பேசியும் தியா யாரிடமும் பேசவில்லை. பெரியவர்கள் அலைச்சலில் சாப்பிட்டு படுத்து விட்டனர்.

அஜய் பர்வத பாட்டிக்கு அன்று கோவிலில் வைத்து உதவிய போது..எடுத்த புகைப்படத்தை இப்பொழுதிலிருந்து ஒரு வாரம் முன் தான் பார்த்தான். அதில் இருவரும் சண்டை போடுவதும், அதை பார்த்து தான் பாட்டிக்கு கஷ்டத்தில் ஹார்ட் அட்டாக் வந்திருக்கு என்று நினைத்து தியா நம்பரை வாங்கி பேசி தெரிந்து கொண்டான். பின் அவன் சொன்னவாறு செய்து வீடியோவில் இருப்பவனே உண்மையையே பேச வைத்து ஆதாரத்தை சேகரித்துக் கொண்டாள் தியா.

மறுநாள் காலை. தியா..என்னடி பண்ற? சத்யா அம்மா.. அவன் அறைக்கதவை தட்ட, சத்யா எழுந்து வந்தான்.

ஏம்மா, கத்திக்கிட்டு இருக்க?

அவள எங்கடா? இவ்வளவு நேரமா தூங்க மாட்டாளே? என்று சொல்ல, அவன் அறையை பார்த்தான். பாத்ரூமில் இருக்காளோ? என்று தியா..தியா..உள்ள இருக்கியா? கத்தினான்.

மூத்தவள் ஓடி வந்து கதவை பார்க்க, வெளியே தான லாக்ல இருக்கு. அவங்க உள்ள இல்லை என்று சட்டென அண்ணனை பார்த்து, ஏதும் திட்டுனியா? கேட்டாள்.

நான்..என்று அவன் அறையை பார்த்தான்.

அம்மா, இது என்ன? என்று சின்னவள் பிரக்னென்சி கிட்டை எடுத்து காட்டினாள்.

அதை பார்த்து அவன் அம்மா மகிழ, அம்மா..பல்லை காட்டாத. இதை அண்ணி நம்மக்கிட்ட சொல்லி இருக்கணும்? அவங்க எங்க? கேட்டாள் மூத்தவள்.

இதை எங்கிருந்து எடுத்த? மூத்தவள் கேட்க, அண்ணி வளர்க்கும் செடியில் தான் சொருகி இருந்தது.

சத்யா பதட்டமுடன் அறைக்கு சென்றான். அவள் பயன்படுத்தும் டேபிளில் காகிதம் இருந்தது. அதற்கு மேல் ஒரு பென்டிரைவும் இருந்தது.

அவன் அப்பா வந்து பென்டிரைவை வாங்கி டிவியில் சொருகினார்.

மாமா..நான் தப்பு செய்யவேயில்லை. அஜய் மாமா உதவியுடன் இந்த வீடியோவை சேகரித்தேன். இதில் வீடியோவில் இருந்தவன் பேசுவான். பாருங்க. உண்மையிலே எனக்கு அவன் பேரு கூட தெரியாது. என்னோட பாட்டி சொல்லி தான் உங்களுக்கு அவங்களுக்கும் ஆகாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

பொன்னனின் நண்பன் பேசினான். சத்யா..எனக்கு உன்னை பழி வாங்கணும். அதனால் தான் அந்த வீடியோவை அனுப்பினேன். சக்தி எங்க நண்பன் தான். ஆனால் அந்த பொண்ணு மாலினிய எங்க யாருக்குமே பிடிக்காது. அதை விடு வேற கதை. உன் கதைக்கு வருவோம். நம்ம ஆசிஃப் தங்கச்சிகிட்ட நான் பேசினா உனக்கென்ன? அப்பொழுது தான் அந்த பொண்ணு என் வலையில் விழுந்தாள். அதற்குள் அதை கெடுத்து..அவளை அடைய விடாமல் தடுத்ததோடு ஊருக்கே தெரியும் படி செஞ்சுட்ட. அதான் உனக்கு பிடிச்ச பொண்ணோடு சேர்ந்து இருந்த மாதிரி வீடியோ எடுத்து அனுப்பினேன். அது உன்னோட பொண்டாட்டியே இல்லை. ஆனால் நீ என்னை நம்பி அந்த பொண்ணை கஷ்டப்படுத்திட்ட போல. அது புள்ள முகமே சரியில்லை. ஆனால் பொண்ணு நான் பார்த்ததிலே பெரிய அழகி தான்.

அவனை விடு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? அவன் கேட்க, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவள். போலீஸிடமிருந்து துப்பாக்கியை எடுத்து அவருகே வந்து அவன் வாயில் துப்பாக்கியை திணித்து, நீ வாயை திறந்த உன்னை கொன்னுடுவேன்.

போலீஸ்கார் அலறினார். அய்யோ..அம்மா, இவனுகள பெரிய ஜெயில்ல வந்து எதுவும் செஞ்சுறாத? நம்ம வாழ்க்கையையே முடிச்சிடுவானுக?

என்னத்த முடிப்பானுக? அதான் இவனே எல்லாத்தையும் முடிச்சிட்டானே? என்று அழுதாள்.

முதல்ல துப்பாக்கியை குடும்மா. இந்தாம்மா உன்னோட போன். கிளம்பும்மா..

ஹேய்..பொண்ணு. என்னை ஏத்துக்கோ?

செருப்பை தூக்கி அவன் மீது எறிந்தாள் தியா. சார், தியாவை அழைத்தார்.

இவன் என்ன செய்திருந்தாலும் உன்னோட புருசனுக்கு உன் மேல நம்பிக்கை இல்லையேம்மா? நீ அவரிடம் தான் பேசணும். இதை காட்டியாவது அவன் நம்புறானான்னு பார்த்து எப்படியாவது வாழ்வை ஓட்டும்மா..என்று அவர் சொல்ல, அவள் அழுது கொண்டே சென்றாள்.

என்னடா இது? அவன் அப்பா சத்தமிட்டார்.

காகிதத்தை அவனிடமிருந்து பிடுங்கிய அவன் அம்மா படிக்க ஆரம்பித்தார்.

மாமா, என்னை மன்னிச்சிருங்க. இதுக்கு மேல நீங்க பேசுறத கேட்க முடியாது சாகலாம்ன்னு கூட தோணுச்சு. ஆனா பாட்டி என்னை உங்களிடம் நம்பி ஒப்படைத்து விட்டு போயிட்டாங்க. பொறுமையா சமாளிக்க தான் நினைக்கிறேன். நீங்க நான் சொல்லி நம்பவேயில்லை. என் மீதும் தவறுள்ளது. நான் உங்கள் கண்ணுக்கு தவறாக தெரிவதில் தவறில்லை. என் வாழ்க்கையை நான் அப்படி தான் வாழ்ந்தேன். ஆனால் உண்மையிலே உங்களை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். என்னை உடலளவில் நீங்க காயப்படுத்தியது கூட வலிக்கவில்லை. ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப உடைஞ்சு போற மாதிரி செஞ்சுட்டீக. பாப்பா முன்னாடி இப்படியா பேசுவீங்க? என்னால தாங்கவே முடியலை.

மாமா, வேலைய நல்லா செஞ்சு கம்பெனிய உயர்த்துங்க, அத்தை மாமாவை பார்த்துக்கோங்க. அப்புறம் மாமா..நான் உங்களிடம் ஆசையுடன் அன்று இதை சொல்ல நினைத்தேன். ஆனால் நீங்க என்னை ரொம்ப காயப்படுத்தீட்டீங்க? நமக்கு பாப்பா வரப் போறா? இதை நான் சொல்லி, அவன் குழந்தைன்னு சொல்லிடுவீங்களோன்னு தான் சொல்லை. மன்னிச்சிருங்க மாமா.

நான் என் மாமா நினைவிலே இருந்திருவேன். நீங்க உங்களுக்கு சரியான பொண்ணா தேடிக்கோங்க மாமா. நான் இனி வரமாட்டேன். இனி உங்க வாழ்க்கையில் யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உறுதி படுத்திட்டு பேசுங்க. நான் போரேன் மாமா. எல்லாரையும் நல்லா பார்த்துக்கோங்க என்று முடிக்க, அவன் கதறி அழுதான்.

அவன் அம்மாவும், அப்பாவும் அவனை மாறி மாறி அடித்தனர். என்னடா செஞ்சு வச்சிருக்க? பிரச்சனைன்னா சொல்ல தோணலையா? அவன் அப்பா அடித்தார். அவன் உடைந்து அழுதான். அவனுக்கு தியா மீது சந்தேகம்  என்றாலும் அவன் காதல் அவள் தானே.

என்னை விட்டு நீ எப்படி போகலாம்? என்று வெளியே வர, அவனை இழுத்து அறைக்குள் அடைத்தனர்.

கதவை திறங்க. அம்மா..நான் அவளை தேடணும். என்னை விடுங்க என்று கதவை தட்டிக் கொண்டே இருந்தான்.

அவன் அவளை கஷ்டப்படுத்துறான்னு தெரியாமல் நானும் புள்ளைய கஷ்டப்படுத்துற மாதிரி செஞ்சுட்டேனே? அவன் அம்மா அழுது கொண்டே அமர்ந்தார்.

இவனுக்கு ஏன் புத்தி இப்படி போச்சு? அவன் அப்பா சினமுடன் பேசினார். தங்கைகள் அமைதியாக இருந்தனர். எல்லாவற்றையும் எடுத்து சென்ற தியா..அவளது தினசரி பயன்படுத்தும் டைரியை எடுக்காமல் சென்று விட்டாள்.

சிறு வயதிலிருந்து அவள் பட்ட கஷ்டத்தை எழுதி இருந்தாள். கண்ணீருடன் படித்தான் சத்யா.

அந்நேரம் சீற்றவுடன் தியா..தியா..என்று கத்திக் கொண்டே சத்யா வீட்டின் முன் வந்து கத்தினான் மறை. மறை எப்பொழுதும் சத்யாவை அழைக்க தான் வருவான். ஆனால் இன்று தியாவை அழைத்துக் கொண்டிருந்தான். கதவு திறந்திருக்க, கதவை தள்ளி உள்ளே வந்தான் மறை.

வீட்டினுள் சத்யா அம்மாவும், அப்பாவும் அங்கங்கு கவலையுடன் அமர்ந்திருக்க, மூத்தவள் கண்ணீருடனும் மற்றவள் அவள் மடியிலும் படுத்திருந்தாள்.

உள்ளே வந்தவன் அவர்களை பார்த்து, தியா எங்கே? என்று அவர்களின் அறையை பார்த்தான். காயத்ரி ராக்கியுடன் ஓடி வந்தாள்.

மறை சத்தம் கேட்டு மருண்ட சத்யா, காதலும் போனது. நட்பும் போய் விடுமோ? என்று அழுதான். அவன் சத்தம் வெளியே கேட்க, வெளியிருந்து பூட்டிய கதவை பார்த்து.. அவர்களை பார்த்தான்.

சத்யா அப்பா மறையை பார்த்து கையெடுத்து கும்பிட்டு அழுதார்.

என்னாச்சு? என்று மறை கதவை திறந்தான். சத்யா ஓர் மூலையில் அமர்ந்து கையில் தியா டைரியுடன் அழுது கொண்டிருந்தான். காலியான கப்போர்ட்டு ஒன்று திறந்து இருந்தது.

சத்யா மறையை பார்த்து எழுந்து அவனை அணைத்துக் கொண்டு, நான் தப்பு செஞ்சுட்டேன்டா. என்னை மன்னிச்சிருடா. நீயும் என்னை விட்டு போயிறாதடா என்று கதறி அழுதான்.

ஏய், என்ன பேசுற? தியா எங்கே? சினமுடன் கேட்டான்.

நான் தப்பு செஞ்சுட்டேன்டா. அவ என்னை விட்டு போயிட்டாடா என்று அழுதான் சத்யா.

போயிட்டாளா? எங்க போனா? காயத்ரி அவனிடம் கேட்க, அழுது கொண்டே “தெரியலை”ன்னு சொன்னான்.

மூத்தவள் எழுந்து காயத்ரியிடம் வந்து அந்த பிரக்னன்சி கிட்டை கொடுத்தாள்.

காயத்ரி அதை பார்த்து, கர்ப்பமா இருக்காளா? இந்த நேரத்துல எங்க போனா? என்ன நடக்குது? காயத்ரி சத்தம் போட்டாள்.

அவள் நடந்ததை சொல்ல மறை கோபமாக சத்யாவை அடிக்க ஆரம்பித்தான். காயத்ரி அதிர்ந்து கண்ணீருடன் நின்றாள்.

அவனை விடுய்யா..என்று மறையை அவன் அம்மா தடுக்க, எதுக்குடி தடுக்குற? அவன் நல்லா வாங்கட்டும் என்று அப்பா அவன் அம்மாவை இழுத்துக் கொண்டார்.

அவளுக்கு யாருமில்லைன்னு தானே இப்படி பண்ணிட்ட? ஆனால் அண்ணன் நான் இருக்கேன்டா என்று மறை அவனை அடிக்க, சத்யா எதிர்த்து ஓர் அடி கூட வக்கலை. அவனுக்கு அடிபட்டு முகத்தில், வாயில் இரத்தம் வர, வேலு அங்கே வந்து இருவரை பிரித்து விட்டு மறையை திட்டினான்.

அவரை எதுக்கு திட்டுறீங்க? தியாவை காணோம். கர்ப்பமா இருக்கா. எங்க இருக்கா? என்ன செய்றான்னு தெரியலை?

யாருமில்லாமல் இந்த நேரத்தில் எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா? காயத்ரி கண்ணீருடன் சத்யாவிடம் வந்து, நீ அவளை காதலிக்கிறன்னு சொன்னாங்க. ஆனால் எனக்கு அப்படி தோணலை. அன்று மண்டபத்தில் வச்சு அவள் உன்னை அவமானப்படுத்தியதால் பழி வாங்க தான கல்யாணம் பண்ணியா?

இல்லை. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். அதனால் தான் கல்யாணம் பண்ண ஒத்துக் கொண்டேன். ஆனால் கல்யாணத்திற்கு முன்னே எனக்கு அவன் வீடியோவை அனுப்பிட்டான். எனக்கு கோபம் வந்தாலும் யாரிடமும் சொல்ல விருப்பமில்லை. என்னால் அவளை விட்டு கொடுக்க விருப்பமில்லை. அதனால் கல்யாணம் செய்து கொண்டேன்.

ஓ..அதனால் தான் உன் மூஞ்சியே அன்று சரியில்லையா? வேலு கேட்டான்.

ஏன்டா அவளுக்காக திருட்டுத்தனமா அவ ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போய் மிரட்டி அவள் பற்றிய அனைத்தையும் வாங்க மட்டும் எங்களை அழைச்சிட்டு போன? இதை உனக்கு சொல்லத் தோணலையா? அங்கு வந்த சரவணன் சத்யாவை அடித்தான். கண்ணனும் அவன் பங்குக்கு அடிக்க, சத்யா அங்கேயே அமர்ந்தான்.

போயும் போயும் அந்த பரதேசியோட உன் பொண்டாட்டி இருக்கான்னா சந்தேகப்பட்ட? நீ பைத்தியம் தான்டா..மறை கல்யாணத்துக்கு பின் தியா அடிக்கடி உன்னை தூரத்தில் இருந்து கண்காணித்தாள். அது உனக்கு தெரியுமா?

நீ கூட அன்று கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னேன்ல. அதை கேட்டு உனக்கு முன்பே அவள் வந்திருந்தாள். நம்மை கடந்து அவள் செல்லும் போது சிரிப்புடன் உன்னை பார்த்தால் அதை நீ கவனிக்கலையா? அவள் உன்னுடன் வாழ தயாராகி விட்டால் என்று எனக்கே தெரிஞ்சது. இப்படி பண்ணிட்டியேடா கண்ணன் சொல்ல, சத்யா கதறி அழுதான்.

எனக்கு இந்த விசயம் நேற்றைக்கு முந்தைய நாளே தெரியும் என்று வேலு மூத்தவளை பார்த்தான்.

தெரிஞ்சும் நீ சொல்லலையா? மறை கோபமாக வேலுவை அடிக்க வந்தான். அண்ணா..வேண்டாம், அண்ணி தான் இந்த விசயம் வெளிய யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாங்க.

உனக்கு தெரியுமாடி? அவள் அம்மா கேட்க, அவளும் அழுதாள்.

எனக்கு சந்தேகமா தான் இருந்ததும்மா. நீங்க ஊருக்கு போனப்ப. நாங்க எங்க அறையிலிருந்து தண்ணீருக்காக வந்த போது அண்ணியை பற்றி அண்ணா..பேசியதை கேட்டோம். கோபத்தில் நாங்க இருப்பதையும் மறந்து நாங்க பார்ப்பதையும் கண்டுகொள்ளாமல் அவன் வெளியே சென்று விட்டான். அண்ணி..பாவம். கதவை திறக்காமல் அழுது கொண்டே இருந்தாங்க.

சின்னவள் தூங்கிய பின் அண்ணியை பார்க்க வந்தேன். அவங்க கிச்சன்ல இருந்தாங்க. நான் பேசினேன். அவங்க பதிலே சொல்லலை. எனக்கு முன்பே தெரியும்ன்னு சொன்ன பின் முதல்ல பயந்தாங்க. நான் உங்களை நம்புறேன்னு சொன்னவுடன் என்னை அணைத்து அழுதாங்க. என்னுடன் தான் படுத்துக்கிட்டாங்க. இவனும் கண்டுக்கவேயில்லை என்று தன் அண்ணனை முறைத்தாள்.

Advertisement