Advertisement

அத்தியாயம் 140

அர்ஜூன் ஸ்ரீ முன் வந்து மண்டியிட்டு வாயில் கை வைத்து தலை கவிழ்ந்து அழுதான். அவள் கையிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இவர்கள் பார்த்துக் கொண்டிருந்ததை புகழ் கேட்டுக் கொண்டே வெளியே வந்திருப்பாள். கொலைகாரன் ஆட்கள் சிலர் கூட ஸ்ரீயை கண்ணீருடன் பார்த்தனர். யாரும் கவனிக்காதது புகழ் அங்கு வந்ததையும், நந்து அம்மா ருத்ரா அங்கு இல்லாததையும்.

ஸ்ரீயை பார்த்துக் கொண்டே அண்ணா..என்று அர்ஜூன் தோளில் கை வைத்தாள் புகழ். அனைவரும் அவளை பார்க்க, அவளையும் பிடிச்சு கட்டுங்கடா..கொலைகாரன் சத்தமிட்டார். சிலர் கையிலிருந்து துப்பாக்கி கீழே விழுந்தன.

நந்துவும் சுந்தரமும் அப்பொழுது தான் ருத்ரா அங்கு இல்லாததை கவனித்து, அவள எங்கடா வச்சிருக்க? கத்தினார் சுந்தரம்.

என்ன மச்சான், இப்படி கத்துறீங்க? அமைதியாக பேசுங்க. அனைவரும் அர்ஜூனை பார்த்தனர். அவனுக்கு ஸ்ரீயை தவிர எந்த யோசனையும் இல்லை. அவன் அழுது கொண்டிருக்க..அண்ணா..அழுறதை நிறுத்து சத்தமிட்டாள் தாரிகா. அவனுடைய ஆள் ஒருவனே அவள் கட்டை அவிழ்த்து விட, “தேங்க்ஸ் அண்ணா” என்று அர்ஜூனிடம் ஓடினாள். அவன் எதையும் கண்டு கொள்ளாமல் அழ, அர்ஜூன்..இங்க பாரு..பாரு..என்று தாரிகா அர்ஜூனை சமாதானப்படுத்த..

புகழை ஒருவன் இழுத்து செல்ல, அவன் ஆளே அந்த பொண்ணை விடுடா..என்று புகழை பிடித்து இழுத்து அவன் பின் நிறுத்த, ஹேய்..என்ன பண்றீங்க? என்று அவன் சத்தமிட்டான்.

அந்த பொண்ணு சின்னப் பொண்ணு அவளை விடுங்க என்று அவன் சொல்ல, அவனுடன் நால்வர் வந்து நின்றனர். நாம செய்றது ரொம்ப தப்பா தெரியுது..என்றான் மற்றவன்.

அப்படியா? வாங்ககடா என்று அவர்களுக்குள் சண்டை போட, புகழ் சுந்தரம், நந்து..கையை அவிழ்த்து விட்டு ராவண், அவன் அப்பாவை அவிழ்த்து விட, ராவண் அவளை இழுத்து அவளுக்கு அடி ஏதும் பட்டுருக்கா என்று அவளை ஆராய்ந்தான்.

மாமா, என்ன செய்றீங்க?

உனக்கு அடி ஏதும் இல்லையே? பதறினான்.

இல்ல மாமா. வாங்க மத்தவங்களுக்கு உதவலாம்..என்று உதவ சென்று அனைவர் கட்டும் அவிழ்க்க பட குணசீலனுக்கு கோபம் அதிகமானது.

டேய்..அந்த குட்டி பொண்ணை கீழ விட்டுரு..என்றான் குணசீலன்.

அனைவரும் அதிர்ந்து அனுவை பார்க்க, அனுவை வைத்திருந்தவன் அவளை பொம்மை போல் தூக்கி கீழே எறிந்தான். அப்பா..என்று கத்திக் கொண்டே அனு கீழே விழ, மேலிருந்து அனுவை பிடித்துக் கொண்டே அஜய் கீழே விழுந்தான். மேலே பிரதீப்பும், வேலு நண்பர்கள், கௌதம் அவனை மேலிருந்து பார்க்க, அனு அழுது கொண்டே அவனை அணைத்திருந்தாள். அபியும் மற்றவர்களும் அஜய்யிடம் ஓடி வந்தனர்.

அனுவை தூக்கிக் கொண்டு அஜய்..எழுந்து நிற்க, அவன் வாயிலிருந்து இரத்தம் வந்தது. சார்..என்று கவின் அவனிடம் வந்தான்.

அதெல்லாம் ஒன்றுமில்லை..என்ற அஜய் அனுவை பார்த்தான். அனு அழுது கொண்டே அவன் இரத்தத்தை தன் பிஞ்சு கையால் துடைத்துக் கொண்டே, சாரி அங்கிள். அன்னைக்கு கோபமா பேசிட்டேன் அவனை அணைத்துக் கொண்டாள்.

அப்பா..என்ற சத்தத்தில் அழுது கொண்டிருந்த அர்ஜூனும் அனுவை பார்த்து அவளிடம் ஓடி வந்தான். அவனை பார்த்து அனு அவனிடம் பாய்ந்து, அர்ஜூன் அவன் என்னை கீழ போட்டான் என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

என்ன பிரச்சனை முடிஞ்சதா அர்ஜூன்? ஆனால் உன்னோட தோழனின் அம்மாவும், உன் வருங்கால அத்தையுமான ருத்ரா என்னிடம் தானே இருக்காங்க. அப்புறம் உன்னோட ஏஞ்சல்..அப்பப்பா..என்னவொரு காதல் கதை. என் பசங்களையே மயக்கிட்டா. அவனுகள பாரு. அவங்களுக்குள்ள சண்டை போட்டு அடிச்சுகிட்டு இருக்காங்க..என்று அர்ஜூன் பை சொல்லு என்று அவன் சொல்ல..பதறி ஸ்ரீயை அனைவரும் பார்த்தனர். சைலேஷ், கைரவ், நித்தி, யாசு..உள்ளே வர, ஸ்ரீயை கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து கீழே விழுந்தாள்.

அது ஐஸ் பார் இல்லை. ஐஸ் தொட்டி. சுற்றிலும் திடமான பனிக்கட்டியால் செய்யப்பட்ட தொட்டி. அதனுள் குளிந்த நீரால் நிரப்பப்பட்டு இருந்தது. ஸ்ரீ அதனுள் விழ, நோ…என்று அர்ஜூன் கையில் அனுவுடன் அதனருகே ஓடி வந்தான். அதற்குள் ஸ்ரீ உள்ளே விழுந்தாள்.

ஸ்ரீ..என்று பைத்தியம் போல் கத்திக் கொண்டே அவளை பார்க்க, அவள் விழித்து பனிச்சுவரில் வந்து கையை வைத்தாள். அவள் தலையிலிருந்து இரத்தம் அதிகமாக கொட்டியது. அர்ஜூனும் வெளியிலிருந்து கையை வைத்தான். அனு ஸ்ரீயை பார்த்து..அம்மா..வா..வா..என்று அழுதாள். அனைவரும் அங்கு கூடினர். ஸ்ரீ உடல் விறைக்க, அர்ஜூன்..நான் உன்னை..அதற்கு மேல் பேச முடியாமல் அர்ஜூனையும் அனுவையும் பார்த்தாள்.

அர்ஜூன் அனுவை கீழே விட்டு, தள்ளிச் சென்று அந்த பனிச்சுவரை கையால் வெறியுடன் குத்திக் கொண்டே, ஸ்ரீ என்னை விட்டு நீ போக முடியாது. நான் போக விடமாட்டேன் என்று கத்திக் கொண்டே குத்தினான். அவன் கையில் இரத்தம் வடிந்தது. அனைவரும் அவனை பிடித்து இழுக்க, மற்றவர்கள் சுற்றி வந்தனர்.

அஜய்க்கு யோசனை ஒன்று வந்தது. வேகமாக வெளியே ஓட, இன்பா, நித்தி, யாசு..இன்னும் சிலர் அவனுடன் செல்ல, கைரவ் அனுவை வைத்திருந்தான். தருண் அர்ஜூனை பிடித்திருக்க, அவனை தள்ளிய அர்ஜூன் மீண்டும் தன் கைகளால் அதே இடத்தில் குத்தினான். அவன் விரல்கள் அனைத்தும் இரத்தத்தால் குளித்திருந்தது. ஸ்ரீ உறைந்து இருக்க, பனிக்கட்டியை சுற்றி சில கட்டைகளை அடுக்கினர் அஜய், நித்தி, யாசு..மற்றவர்கள். லைட்டரை அஜய் பொருத்த, எல்லாரும் என்ன செய்றீங்க? என்று அர்ஜூன் சீற்றமானான்.

தாரிகா, கவின், மறை, சத்யா அனைவரும் அர்ஜூனை பிடிக்க, அவன் கத்திக் கொண்டே அவர்களை பிடித்து தள்ளி விட்டு நெருப்பை நோக்கி ஓடினான். அவனை பிடித்து இழுத்த தருண், அர்ஜூனை ஓங்கி அறைந்தான். அர்ஜூன் அவனை கட்டிக் கொண்டு அழுதான். அனுவை தாரிகா வைத்து அழுது கொண்டே ஸ்ரீயை பார்த்துக் கொண்டிருந்தாள்.  ராவண், அவன் அப்பா, பிரதீப் அங்கிருந்த ஆட்களை கட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.

சுந்தரமும் நந்துவும் ருத்ராவை தேடி கிளம்பினர். தீனா, ஆதேஷ், அவன் அப்பா, வெற்றி, ஊரின் சிலர் அப்பக்கமாக வந்தனர். பனிக்கட்டி கறைந்து உள்ளிருந்த குளிர்ந்த தண்ணீர் சூடேற, உறைந்த ஸ்ரீ உடம்பு சாதாரணமாக ஆரம்பித்தது. உடனே அவளை அங்கிருந்த மிஷினை வைத்து அவளை அகில், அபி, கவின் தூக்கினர்.

அர்ஜூன்..அங்க பாரு ஸ்ரீ தருண் சொல்ல, வேகமாக அர்ஜூன் ஸ்ரீயிடம் ஓடினான். அவள் பயங்கர காயமுடன் இரத்தம் உறைந்து விழிக்காமல் இருந்தாள்.

ஸ்ரீ..கண்ணை திற..அர்ஜூன் அவளை அழைக்க அவளிடம் அசைவே இல்லை. தாரிகாவும் பயந்து அனுவுடன் மேலே ஏறி வந்தாள். மற்றவர்களும் ஸ்ரீயிடம் பதறி வந்தனர். அர்ஜூன் பயந்து, அவள் இதயம் துடிக்குதா? என பார்க்க, துடிப்பு நன்றாக இருந்தது. அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து வாயோடு வாய் வைத்து காற்று ஊதினான். சற்று நேரத்தில் ஸ்ரீ மெதுவாக விழித்தாள்.

ஸ்ரீ..உனக்கு ஒன்றுமில்லையே? என்று கண்ணீருடன் அவளை பார்க்க, அவள் தலையில் கை வைத்து முகத்தை சுருக்கினாள்.

ரொம்ப வலிக்குதாம்மா? அனு கேட்டுக் கொண்டே அழுதாள்.

ஸ்ரீ அர்ஜூன் மீது சாய்ந்து அமர்ந்து, இ..இ..இல்லடா..என்று அனு கண்ணீரை துடைத்து விட்டு அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூன்..சாரி..நான் அனுவோட அங்க இருந்திருக்க கூடாது என்றாள்.

இல்ல ஸ்ரீ..நீ எனக்கு..?

ஆமா அர்ஜூன்..என்று அவள் கூறிக் கொண்டே அவன் பின் வந்த குணசீலனை பார்த்து, அர்ஜூனை தள்ளி விட்டாள். ஸ்ரீ மீது துப்பாக்கி தோட்டா துளைத்தது. அவள் பேச முடியாமல் கண்ணீருடன் அர்ஜூன் கன்னத்தில் கையை வைத்து பேச திணறினாள்.

ஏய்..என்று அர்ஜூன் கத்திக் கொண்டே அவன் பக்கம் திரும்ப, அர்ஜூன்.. வேண்டாம் என்று அவன் கையை பிடித்து என்னை விட்டு போகாத அர்ஜூன். போன முறை நீ உதவியும் நாம் பிரிந்தோம். இம்முறை எனக்கு என்ன ஆனாலும் உன் அருகிலே ஆகட்டும் என்று அவள் கண்ணீர் வடிய.. குணசீலனை நோக்கி அகில், கவின், அபி சீற்றத்துடன் சென்றனர். ஆனால் அவன் அவர்கள் யாரையும் கண்டுகொள்ள வில்லை. அவன் குறி அர்ஜூன் மீது பட..அர்ஜூன் என்று அஜய் கத்திக் கொண்டே அவனிடம் வந்தான். அப்பொழுது கன்னா பின்னா என்று தோட்டாக்கள் குணசீலனை நோக்கி வந்தது. கடைசி தோட்டா அவனை துளைத்து, அவன் கீழே விழுந்தான்.

பிரகதி உள்ளே வந்த போது, ஸ்ரீயை அவன் சுடுவதை பார்த்து அவள் தான் அஜய்யின் துப்பாக்கியில் குணசீலனை சுட்டாள். அவளை அனைவரும்  அதிர்ந்து பார்க்க, அவன் குறி பிரகதியை நோக்கி வர, நிவாஸ் அவளை தள்ளி விட்டு சுந்தரம் ருத்ராவுடன் இருப்பதை பார்த்து, அவரிடம் ஓடிச் சென்று துப்பாக்கியை எடுத்து அவன் அப்பாவை அவனே சுட்டான்.

நிவி..என்று அகில் அதிர, சீனியர் எனக்கு இவன் தான் கொலைகாரன்னு ஏற்கனவே தெரியும். ஸ்ரீயை தேடச் சென்ற அர்ஜூன் பின் அன்று நானும் சென்றேன். அங்கு அர்ஜூன் கோபமாக என் அப்பா தான் கொலைகாரன்னு சொன்னதை கேட்டேன் என்று அவனிடம் வந்தான்.

என்னோட அம்மாவை கொன்றது நீ தானடா? உன்னை பார்க்கவே பிடிக்கலை. உன்னை இத்தோட விடக் கூடாது என்று துப்பாக்கியை நீட்ட, குணசீலன் காலால் அதை தட்டி விட்டு நிவாஸை சுட, மீண்டும் ஓர் தோட்டா குணசீலன் கையில் நேர்த்தியாக பட்டது. அங்கு வந்த ஆதேஷ் அவனை சுட்டான்.

தீனா ஆதேஷ், நிவாஸிடமிருந்து துப்பாக்கியை வாங்கி விட்டு குணசீலனிடம் வந்தான். நிவாஸ் ஸ்ரீயை அந்நிலையில் பார்க்க முடியாமல் அங்கேயே அமர்ந்து அழுதிருப்பான். இப்பொழுது அழுது கொண்டே ஸ்ரீயிடம் வந்து, சாரி ஸ்ரீ என்னாலும் உனக்கு பிரச்சனை என்றான்.

நிவி..என்று அவன் கையை பிடித்தவளுக்கு கண்கள் மங்கலாக, கண்களை மேலும் விரித்து, அர்ஜூன்..எனக்கு எல்லாருமே மங்கலா தெரியுறீங்க? அவள் சொல்லிக் கொண்டே பவியை மிஸ் பண்றேன்னு சொல்லு அகில் என்று அனைவரையும் பார்த்தாள். பின் அர்ஜூன் சட்டையை பிடித்து அருகே இழுத்து, அ..அனுவை பார்த்துக்கோ அர்ஜூன். நா..நான்..உன்னை கா..கா..கா..காதலிக்கிறேன் என்று அவன் இதழ்களில் முத்தமிட்டு, எல்லாமே இருட்டா இருக்கு அர்ஜூன் என்று  அனு தலையில் கை வைத்துக் கொண்டே கண்களை மூடினாள். அனைவரும் கதறி அழுதனர்.

இல்ல ஸ்ரீ..உனக்கு ஏதும் ஆகாது என்று அர்ஜூன் அவளை அணைத்து கதறி அழுதான். நடந்த அனைத்தையும் கௌதமின் லாக்கெட்டில் இருந்து அர்ஜூன் பாட்டி, கமலி, பெரியத்தை, காயத்ரி, சக்தி..ஊரார் அனைவரும் பார்த்து கதறி அழுதனர். சக்தியும், மற்ற ஊர்ப்பசங்களும் ஊராரை மண்டபத்தில் வைத்து பாதுகாத்தனர். ஊரில் யாருமே இல்லை. அனைவரும் மண்டபத்திலும், அந்த தொழிற்சாலையிலும் தான் இருந்தனர்.

ஊரின் ஓரிடத்தில் பாம் வெடிக்க. அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். யாருக்கும் ஏதும் ஆகலை. போலீசார் அங்கு வந்து குணசீலன் உடலை அகற்றினார்கள்.

அப்படியே ஒரு மாதம் கழிந்தது.

அர்ஜூன், கவினை தவிர நண்பர்கள் அனைவரும் சென்னைக்கு சென்றிருந்தனர்.

அகில், பவி, விதுனன் குழுவினர் மும்பையில் அவர்களது கரியருக்காக.. இசையில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இன்பா நான்கு கம்பெனியையும் வழி நடத்திக் கொண்டிருந்தாள். யாழினியுடன் நடத்திக் கொண்டிருந்தாள். யாழினி அஜய் கம்பெனி அறையில் சந்துரூவுடன் குகனின் பாதுகாப்பில்இருந்திருப்பாள். அவள் பிழைத்து சரியானாள்.

எப்பொழுதும் போல் நம் நண்பர்கள் அவர்களுக்கு உதவினர். நித்தி, கைரவ், அபி, தருண், துகிரா, ஆதேஷ், அனிகா, தாரிகா, நிவாஸ் அதே கல்லூரியில் படிக்க, ஜிதினும் மகிழும் வேறொரு கல்லூரிக்கு சென்று படித்து வந்தனர். பிரச்சனை முடிந்த ஒரு வாரத்திலே யாழினி சரியாகி..கயலுக்கும் குணசீலனுக்கும் எதிரான ஆதாரங்களை கொடுக்க, கயலுக்கு தண்டனையும்,  குணசீலனை கொன்ற துப்பாக்கியை வைத்து தீனா, அஜய், சுந்தரத்திற்கு சர்க்காரால் விருது வழங்கப்பட்டது. நம்ம பசங்க கொன்றாங்கன்னு தெரிஞ்சா கேஸ் ஆகிவிடும் என்று மூவரும் விருதை ஏற்றிருப்பர். அனைவரும் அவரவர் வேலையை கவனிக்க, மாதவை யாசு பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். யாசு அவளுக்கென ஃபேசன் டிசைனிங் படிப்புக்காக அமைக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்தாள்.

யாழினி இன்பாவுடன் சேர்ந்து வேலையை கவனிக்க, தாரிகா அம்மாவிற்கும் தாரிகாவிற்கும் அவள் உயிரோடிருப்பதை நினைத்து ஒரே மகிழ்ச்சி. மோகனும் சைனாவில் இருந்து அவர்களை அவ்வப்போது காண வருவார். சுந்தரமும் அவர் அம்மாவை பார்க்க தன் புது குடும்பத்துடன் சென்றார். குகன், பார்வதியை பற்றியும் அவர் சொல்ல, மறு நாளே அவர்களை வர வைத்து பேசினார். அன்றே சுந்தரம் ருத்ரா கழுத்தில் தாலியை கட்டினார் அனைவருக்கும் தெரியும் படி.

குகன் – பார்வதியும் நன்றாகவே பழக ஆரம்பித்து இருந்தனர். புகழிற்கு பள்ளி மாற்றப்பட்டு..புது, பழைய தோழர்கள், தோழிகளுடன் மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

பிரகதியும் அர்ஜூன் சொன்னது போல் கல்லூரியில் சேர்ந்தாள். அவள் இருக்கும் இடம் அர்ஜூனை தவிர நம் அஜய்க்கும் தெரியாது. அவன் அவளை தேடாத இடமேயில்லை. அஜய் கண்ணில் அவள் சிக்கவேயில்லை.

ரெசார்ட் நன்றாக இயங்கிக் கொண்டிருந்தது. மறைக்கு அங்கே ஹெட் செஃப் வேலை கிடைக்க, காயத்ரி மகிழ்ந்தாள். காயத்ரியும் ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை படித்துக் கொண்டே தன் மகனை பள்ளியிலும் சேர்த்தாள்.

தியாவிடம் காயத்ரி மறைக்காக சவால் விட்டது போல் இங்கிலீஸ் பேச வைத்தாள். ஆனால் தியா யாரிடமும் சரியாக பேசுவது கூட இல்லை. இப்பொழுது வரையும் சத்யா தியாவை மனதளவில் காயப்படுத்திக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அவள் கூறிய வேலையை ஏற்று சத்யா, சிறிய கம்பெனி ஒன்றை கட்டி பிசினஸ் தொடங்க, தியாவும் சத்யாவுடன் சென்றாள். நன்றாக நடந்து கொண்டிருந்தது.

டூரிசம்க்கான தேர்வை சக்தியும், மாலினியும் எழுதி முடிவுக்காக காத்திருந்தனர். அவர்களுக்கான அவ்விடத்தில் இப்பொழுது ரெசார்ட்டிலிருந்து சுற்றுலா பயணிகளை ஊர் சுற்றிக் காட்டும் பொறுப்பை வசுந்தரா ஏற்றிருந்தாள். அவள் தேர்வை எழுதி..தேர்வானதால் அவ்விடம் முதலில் அவளுக்கு மட்டும் தான் கிடைத்தது. சரவணாவும் அவன் அம்மாவை மிரட்டி வசுவை ஏற்றுக் கொள்ள வைத்தான். அவர்கள் காதலும் கண்ணன் அந்த ரிசப்சன் பொண்ணோட அண்ணனுடன் பழகி அவளிடம் காதலை கூறி வீட்டினரையும் ஒத்துக் கொள்ள வைத்து விட்டான்.

சுந்தரமுடன் காரு கிளம்பி விட, கௌதம் வீட்டில் சுவாதி, சீனு இருந்தனர். காருண்யா கௌதம் அம்மாவை பார்த்த போது..அவளை ஏற்கனவே சந்தித்ததை தன் மகனிடம் கூறி மகிழ்ந்தார். குகனும் அவனது போலீஸ் வேலையில் கவனத்தை திருப்பினாலும் அவன் மனது பாரு எப்பொழுது நம்மை கல்யாணம் செய்ய ஒத்துக் கொள்வாள் என்பதிலே இருந்தது. புகழின் புது தோழன் வரிசையில் சீனுவும் ஒருவனான். இருவரும் ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படித்து வந்தனர். அண்ணன்-தங்கையாகவும், தோழன்-தோழியாகவும் வலம் வந்தனர்.

வேலு- அகல்யா திருமணம் முடிந்த ஒரு வாரம் கழித்து, அனைவரும் வீக் எண்டுக்காக ஊருக்கு வந்தனர். யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. அனைவரும் அர்ஜூனை நினைத்து கவலையுடன் தங்கள் வீட்டிற்கு கூட செல்லாது, அவனை சந்திக்க அவன் பாட்டி வீட்டிற்கு வந்தனர். பாட்டி வருத்தமுடன், மாடி அறையை பார்த்தார்.

அர்ஜூன்..என்று அபி சத்தமிட, அவன் அவர்களை திரும்பி பார்த்தான்.

தாடியுடனான முகம், களைந்த தலை, மெலிந்த உடல் என்று அர்ஜூன் முகம் முழுவதும் வருத்தம் மட்டுமே. நம் அர்ஜூனா? என்று அனைவரும் அவனை கண்ணீருடன் அபி, கைரவ், தருண் அணைத்துக் கொண்டனர். அனைவர் கண்ணிலும் கண்ணீர்.

அண்ணா..ஸ்ரீ? தாரிகா கேட்க, அவன் பார்வையை பார்த்து அறைக்குள் சென்று பார்த்தனர். ஸ்ரீ கோமாவில் இருந்தாள். நிவாஸ் அமைதியாக அவளிடம் வந்து, அவள் கையை பிடித்து சீக்கிரம் எழுந்து வாக்கா..அர்ஜூன், அனுவுக்கு நீ கண்டிப்பாக வேண்டும் என்று அழுதான். தாரிகாவும் அவளை பார்த்து அழுதாள்.

அழாத தாரி..என்று அவள் அம்மா சொல்லிக் கொண்டே உள்ளே வர, அர்ஜூன் அவரை பார்த்து அஞ்சும்மா..என்று அவரை அணைத்து சிறு பிள்ளை போல் அழுதான்.

அவளை எழுந்திருக்க சொல்லுங்க..எத்தனை வருசமானாலும் ஆகுமாம்.. டாக்டர் சொன்னாங்க. ஆனால் என்னால அவளோட பேசாம இருக்க முடியலை. அனு கூட இப்ப ரெண்டு நாளா தான் காயத்ரி அக்கா வீட்டுக்கு அவங்க அவளை வம்பு செய்து இழுத்துட்டு போயிருக்காங்க. அவளும் அழுது களைத்து போயிட்டாள் என்று அழுதான்.

ஸ்ரீ பக்கமிருந்த மேசையில் கேக் இருந்தது. இன்று ஸ்ரீ, அகில், பவி பர்த்டே. அவர்கள் மதியம் வருவாங்க என்று தாரிகா அர்ஜூனிடம் சொன்னாள். அவன் கண்ணீருடன் இருக்க, அவள் அவனை அணைத்து ஸ்ரீ ரொம்ப நாள் உன்னை காத்திருக்க விட மாட்டாள். அர்ஜூன் ஸ்ரீ அந்த எமனுடன் சண்டை போட்டாவது உன்னிடம் வந்துருவா..என்று சொல்ல, வந்துட்டா நல்லா இருக்கும் தாரி என்று அழுதான்.

அர்ஜூன்..அழாத. அவளோட பர்த்டே. நாம ஈவ்னிங் எல்லாருடனும் கொண்டாடணும் தருண் சொல்ல, அது தான் முக்கியம் பாரு அர்ஜூன் சொல்ல..

அர்ஜூன் அவளால நம்மை, இல்ல..உன்னை உணர முடியும். கண்டிப்பா பண்றோம். அவள் நம்மிடம் வர தாமதமானாலும் மனதினுள் சின்னதாக சந்தோசம் தெரிந்தால் வேகமாகவே நம்மிடம் வந்து விடுவாள் அபி சொல்ல, அனைவரும் சொல்ல அர்ஜூன் ஒத்துக் கொண்டான்.

மாலை நேரம் மூவரின் பிறந்தநாளுக்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, அகிலும் பவியும் அர்ஜூன், ஸ்ரீயை பார்க்க வந்தனர். அகிலுக்கு அர்ஜூனை நினைத்து கவலையுடன் அவனை அணைத்துக் கொண்டான். பவி கண்ணீருடன்..ஸ்ரீயை அருகே சென்று பேசிக் கொண்டிருந்தாள். இருவரும் அவளை பார்த்து அங்கே வர, அகில் அவள் தோளில் கை வைத்தான். அவனை அணைத்து பவி அழ, அகில் கண்கலங்க ஸ்ரீயை பார்த்தான். சற்று நேரம் அர்ஜூனுடன் பேசி விட்டு வெளியே வந்தனர். வேலை காரணமாக சிலர் வரவில்லை.

ஏற்பாடுகள் முடிந்து அனுவுடன் அர்ஜூன் தயாராக இருந்தான். ஆனால் அவன் முன் போலில்லாமல் இருக்க, அனைவரும் வருத்தமானார்கள்.

அர்ஜூன் ஸ்ரீ முன் இப்படி செய்யாத. எல்லாரையும் தான். அழுதுகிட்டே இருக்காதீங்க. பழைய மாதிரி அவளிடம் மகிழ்ச்சியுடன், கேலி கிண்டலுடன் பேசுங்க..என்று கவின் சொன்னான்.

அர்ஜூன், தலையை பாரு. எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வா..அப்ப தான் ஸ்ரீ கேக் வெட்டுவா? பவி சொல்ல.

இப்பவா? லூசு மாதிரி பேசாத என்றான் அகில்.

அப்பொழுதே அவனிடம் சொன்னேன். தேவதாஸ் மாதிரி..இப்படியா இருப்பான்? திட்டினாள் அவள். அர்ஜூன் அமைதியாக இருந்தான்.

அர்ஜூன், நான் சொன்னதை மறந்துட்டியா? என்று கவின் பேசிக் கொண்டே அனுவை தூக்கிக் கொண்டு ஸ்ரீயிடம் சென்று பேசினான். அனைவரும் ஸ்ரீக்கு வாழ்த்தை கூறி மூவர் முன்னும் கேக்கை வைத்து வெட்ட சொல்ல, கத்தியை வாங்கிய அகில் கை மீதும் பவி கை வைக்க, ஸ்ரீயை எடுத்து அர்ஜூன் அவள் கை மீது வைத்தான்.

கேக் வெட்டி பிறந்தநாள் பாடலை பாடி வாழ்த்தை சத்தமாக கூற, பாட்டி உள்ளே வந்து, அகில், பவிக்கு திருநீறு இட, இருவரும் அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினர். ஸ்ரீயிடம் சென்ற அவர் கண்ணீருடன்..என் பேத்தி நல்ல படியா சீக்கிரம் திரும்பி வரணும் என்று அவளுக்கு திருநீறு இட்டு, அர்ஜூன், அனுவுக்கும் இட்டார். அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தவாரே இருந்தான்.

அஜூ..இவங்களோட கோவிலுக்கு சென்று ஸ்ரீ பெயரிலும் அர்ச்சனை செஞ்சிட்டு வா..என்றார்.

நாங்க இன்னும் கொஞ்ச நேரம் ஸ்ரீயுடன் இருந்துட்டு போகலாமா? அகில் கேட்டான்.

என்னய்யா..கண்டிப்பா. எவ்வளவு நேரம் இருக்கணுமோ இருங்க என்று ஸ்ரீயை பார்த்துக் கொண்டே வெளியேறினார். தாரிகா அம்மா உள்ளே வந்து, ஸ்ரீ..இங்க பாரு. உனக்கு பிடிக்கும்ல..என்று ஸ்வீட் ஒன்றை அவளருகே வைத்து விட்டு அவள் நெற்றியில் முத்தமிட்டு..

அர்ஜூன் என்ன பண்ற? வா..என்று அவனை இழுத்து வந்து, உன்னால கோவிலுக்கு போக முடியாதுல்ல ஸ்ரீ. உனக்கு பதிலா அர்ஜூனும் அனுவும்.. என்று அனைவரையும் பார்த்து உன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாருமே போகப்போறாங்க என்று கமலி..உனக்கு கிஃப்ட் அனுப்பி வச்சிருக்கா. இப்ப கூட அவ வரலை பாரேன். அவ்வளவு வேலை இருக்காம். லலிதா கூட அவ பையனிடம் கொடுத்து அனுப்பியதா சொன்னா? என்று ஆதேஷை பார்த்தார்.

அவன் கண்ணை துடைத்து விட்டு, ஆமா ஸ்ரீ..உனக்காக அம்மா வேலைய விட்டு கடைக்கு கமலி ஆன்ட்டியோட போய் வாங்கிட்டு வந்தாங்க. என்னன்னு கேட்டா? அது ஸ்ரீக்கு மட்டும் தான். உனக்கு எதுக்கு? அவ பார்த்துப்பாம்ன்னு சொன்னாங்க. இந்தா என்று வாய் தெளிவாக பேசினாலும் கண்ணீருடன் அவள் பக்கம் வைத்து, இது என்னோட கிஃப்ட் என்று இரண்டையும் வைத்து கண்ணீருடன் நகர்ந்தான். அனைவரும் ஸ்ரீக்கு கொடுத்து விட்டு வெளியே வந்து, அகில் பவிக்கும் கொடுக்க, இருவரும் வெளியே இருந்து ஸ்ரீயை பார்த்துக் கொண்டிருந்தனர். உள்ளே அர்ஜூன், அனு, தாரிகா அம்மா, தாரிகா மட்டுமே இருந்தனர்.

அனு ஸ்ரீ படுக்கையில் ஏறி அவளுக்கு முத்தம் கொடுத்து, அம்மா..ஹாப்பி பர்த்டே..என்று சொல்லி விட்டு அவளருகே படுக்க, அர்ஜூன் அவளை தூக்கினான். அனு அழுதாள்.

அர்ஜூன், அனு இருக்கட்டும். அவளை அழ வைக்காத. ஸ்ரீ இப்ப விழித்திருந்தால் உன் மீது கோபப்படுவா தாரிகா சொல்ல..அர்ஜூன் கண்ணீர் உதிர்த்தான்.

தாரி, நீ வெளிய இரு..என்று அவள் அம்மா அவளை அனுப்பி விட்டு, அர்ஜூன் நீ நினைக்கிற எல்லாத்தையும் பேசு. அழாம பேசு..என்று அவர் செல்ல, அனு ஸ்ரீயிடம் பேசினாள்.

அம்மா, நீ எப்ப முழிப்ப? உன்னோட பர்த்டேக்கு கேக் சாப்பிடலையா? உனக்கு பசிக்கலையா? நீ ரொம்ப நாளா தூங்கிக்கிட்டே இருக்க. அனுவுக்கு பாட்டி தான் ஊட்டி விடுறாங்க. அர்ஜூன் பேசவே மாட்டேங்கிறான். விளையாட வர மாட்டேங்கிறான். நீ எப்பவும் என்னுடன் விளையாடுவேல்ல. இப்ப வா..என்று அழுதாள். அர்ஜூன் அனுவை தூக்கி கண்ணீருடன் அணைத்து ஸ்ரீ அருகே சென்று அமர்ந்தான்.

என்னோட ஏஞ்சல் எப்ப எங்கக்கிட்ட வருவீங்க? பாரு..அனு உன்னை நினைச்சு அழுதுகிட்டே இருக்கா. உன்னோட சத்தம் இல்லாம என்னால இருக்க முடியலம்மா. சீக்கிரம் விழிச்சிரும்மா..டாக்டர் சொல்ற மாதிரி ரொம்ப வருசமாகிடாத ஸ்ரீ. என்னால தாங்க முடியாது. இன்று உனக்கு, அகிலுக்கு , பவிக்கு பர்த்டே. பவியை பத்தி எல்லாருக்கும் சொல்லியாச்சு. அவ உன்னோட அக்கான்னு நம்ம ஊர்ல எல்லாரும் தெரிஞ்சு அதிர்ச்சியானாங்க தெரியுமா ஸ்ரீ?

நான் உன்னிடம் காலையிலே விஸ் பண்ணிட்டேன். நீ என்னிடம் பேசவே மாட்டேங்கிற? இன்று உன்னோட நாள். ஆனால் நீ..என்னோட கிஃப்டை கூட பார்க்கல. பாரு..நம்மை ப்ரெண்ட்ஸ், உன்னோட பர்த்டேவ செம்மையா செலிபிரேட் பண்ணாங்க. உனக்காக எல்லாருமே வந்துருக்காங்க. துகிரா கூட வந்துருக்கா. கண்ணை திறந்து பாரு ஸ்ரீ கலங்கியவன் கண்ணை அனு துடைத்து விட்டாள்.

ஸ்ரீ..நாம ஒன்றாக அனுவோட சந்தோசமா வாழணும். இந்த ஒரு மாசம் எனக்கு யுகமாய் தெரியுது. நீ சொன்னேல்ல.. காலை எழுந்து சேர்ந்து நடந்து போகணும்ன்னு. இப்ப எழுந்திரு..நாளை காலையிலே போகலாம். உன்னோட இந்த சின்ன ஆசைய செய்ய முடியாத பாவி ஆகிட்டேன் ஸ்ரீ. ஸ்ரீ..எனக்கு நீ ஓ.கே சொல்லிட்ட. பதில் கூட பேச முடியாமல் அன்று இருந்தேன். ஆனா..நீ ஒத்துக் கொண்டால் நாம் உடனே கல்யாணம் பண்ணிக்கலாம். உன்னை நான் முன் போல் சீண்ட கூட மாட்டேன். தொந்தரவே செய்ய மாட்டேன். நீ என் பக்கத்தில் இருந்து பார்த்தும், பேசிக் கொண்டும் இருந்தாலே போதும். ஆனால் இப்படியே நீ இருந்தால் நீ விழிக்கும் போது என்னை பார்ப்பது முடியாத காரியமாகும் என்று அழுது கொண்டே அனுவை பார்த்தான். அவள் ஸ்ரீ கையை பிடித்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அகில் மேல் உனக்கு காதல் இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனால் உனக்கு என்னை அப்பொழுதே அந்த அளவு பிடித்திருந்ததா ஏஞ்சல்? இதை நான் கனவிலும் நினைக்கவில்லை. நம் காதலுக்கான அடுத்த கட்டத்திற்கு செல்லணும். சீக்கிரம், வா..எனக்கு நீ இல்லாமல் எதுவும் ஓடாது. தயவு செய்து..வந்துரு ஸ்ரீ. ஹாப்பி..பர்த்டே. நாங்க கோவிலுக்கு போயிட்டு வாரோம் என்று பாட்டியை அழைத்தான். மற்றவர்கள் உள்ளே வந்து..அர்ஜூனிடம் கிளம்பலாமா? கேட்டனர்.

பாட்டி நர்ஸ் அக்கா எங்க? வந்துட்டேன்ப்பா..என்று ஒருவர் முன் வர, அர்ஜூன்..என்று ஸ்ரீ சத்தம் கேட்க, வேகமாக திரும்பி பார்த்தான். அவள் படுக்கையில் அப்படியே தான் இருந்தாள். எந்த அசைவும் இல்லை. அர்ஜூன் அறையிலிருந்து வெளியே காலெடுத்து வைக்க, அர்ஜூன்..என்று மீண்டும் சத்தம் கேட்க, பாட்டியும் நர்ஸும் ஸ்ரீயை பார்த்தனர். அவன் இருவரையும் பார்த்து விட்டு ஸ்ரீயை பார்க்க..தேங்க்ஸ் என்றாள் ஸ்ரீ கண்ணை மூடிக் கொண்டே.

கவின், நிவி…ஸ்ரீ வாய்ஸ், அர்ஜூன் சொல்ல, ஆமாடா..என்று கவின், நண்பர்கள் உள்ளே வந்தனர். ஸ்ரீ மெதுவாக கண்ணை திறந்தாள் சோர்வுடன். ஆனந்த கண்ணீருடன் அர்ஜூன் சுவற்றில் சாய, அவனிடமிருந்து அனு கீழிறங்கி ஓடினாள் ஸ்ரீயிடம். கண்களை அசைத்த ஸ்ரீ, அனுவை பார்த்து இதழ் குவித்தாள். அனு வேகமாக படுக்கையில் ஏறி, ஸ்ரீக்கு முத்தம் கொடுக்க.. பாப்பா..கீழிறங்கு என்று நர்ஸ் அனுவிடம் சொல்ல, ஸ்ரீ கண்களை திருப்பி அவரை பார்த்து முறைத்தாள்.

அகிலும் பவியும், ஸ்ரீ..விழிச்சிட்டா..என்று இருவரும் கட்டிக் கொண்டு அவளிடம் வந்தனர். முதலில் அவளருகே நின்றது பாட்டி, கவின், தாரிகா. அவர்களை பார்த்து மெதுவாக, இப்படியா சீக்ரெட்ட வெளிய சொல்வீங்க? புன்னகையுடன் கேட்டாள்.

ஸ்ரீ..என்று அழுகை கலந்த மகிழ்ச்சியுடன் தாரிகா அவளது கையை பிடித்தாள். அவள் பார்வை அகில், பவியிடம் செல்ல..நீ என்னோட அக்கான்னு மறச்சுட்டேல்ல? ஸ்ரீ கேட்க, சொல்ல முடியாத சூழ்நிலை என்று பவி அழ..

எதுக்கு அழுற? என்று அனைவரையும் பார்த்து புன்னகைத்த ஸ்ரீ விழிகள் அர்ஜூனை எதிர்பார்த்தது. அனைவரும் வழிவிட..அர்ஜூன் அழுது கொண்டிருந்தான்.

அர்ஜூன்..ஸ்ரீ அழைக்க, நிமிர்ந்து அவளை பார்த்து கண்ணீருடன் நின்றான்.

அபி, ஆது..என்னால பேச முடியலை. அவனை இழுத்திட்டு வாங்கடா ஸ்ரீ மெதுவாக சொல்ல, இருவரும் அர்ஜூனை பார்த்தனர்.

அர்ஜூன் ஸ்ரீயிடம் வர, அனைவரும் விலகி நின்றனர்.

என்னை விட்டுட்டு தனியா கோவிலுக்கு பாப்பாவோட போகப் போறீயா அர்ஜூன்? என்று ஸ்ரீ பாவமாக கேட்டுக் கொண்டே கையை அவனிடம் நீட்டினாள். அர்ஜூன் அவள் கையை பிடிக்க, அவன் கையை உதறிய ஸ்ரீ அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள். அர்ஜூன் கத்தினான். என்னால் மட்டும் எழுந்திருக்க முடிந்தால் நீ காலிடா என்றாள். அனைவரும் புன்னகைக்க, அர்ஜூன் அவள் கையை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டு அழுதான்.

அவளும் கண்ணீருடன் அவனை பார்த்தாள். ஏஞ்சல் வா..விளையாடப் போகலாம் அனு அழைக்க, தாரிகா அனுவை தூக்கி ஸ்ரீ கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும் என்று தோட்டா பாய்ந்த அவள் கையை பார்த்தாள். இப்பொழுது அனைத்தும் சரியாகி இருந்தது.

என்னது ஓய்வா? என்று ஸ்ரீ..எழுந்து அமர்ந்தாள். நர்ஸ் அருகே வந்து, அவளிடம் மாட்டி இருந்த அனைத்தையும் எடுத்து விட்டு, மேம்..முதல்ல நல்லா சாப்பிடுங்க. அப்ப தான் சோர்வில்லாமல் இருப்பீங்க என்றார். கேசவன் பாட்டியை அழைக்க..அவரை வாங்க..என்று ஸ்ரீ அறைக்கு அழைத்து சென்றார்.

அம்மா..இப்ப எப்படிடா இருக்கு? என்று விசாரித்து அவளை கவனித்தார் கேசவன்.

அங்கிள் இப்ப வெளிய போகலாமா? அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன், ஸ்ரீ ஓய்வெடுக்கணும். அவள் பிழச்சு வந்திருக்கா. இப்ப எங்கேயும் போகக்கூடாது என்றார் அவர் கண்டிப்புடன்.

நாளைக்கு அவன் கேட்க, அர்ஜூன். ஸ்ரீ நன்றாக ஓய்வெடுக்கணும்.

அப்பா..ஸ்ரீக்கு பர்த்டே. கோவிலுக்கு கூட போகக்கூடாதா? நித்தி கேட்க, அவ உடம்புல எனர்ஜியே இருக்காது. புரிஞ்சுக்கோங்கடா..என்றார்.

அங்கிள், எனக்கு ஒன்றுமில்லை ஸ்ரீ சொல்ல, அவர் முறைத்தார்.

ஓ.கே அங்கிள் அவள் ஓய்வெடுக்கட்டும். நான் அவளுடனே இருக்கிறேன் என்றான். தாரிகா, அகில், கவின், அபி, அம்மாக்கள் ஸ்ரீயை பார்க்க வந்து விட்டனர். ஸ்ரீ நாங்க போயிட்டு வாரோம் என்று நண்பர்கள் கிளம்ப, அர்ஜூனும் அனுவும் வெளியே வந்தனர். அவனை அணைத்து இப்ப தான்டா நிம்மதியா இருக்கு என்று தருண் சொல்ல, இனி அர்ஜூனை கையில பிடிக்க முடியாது என்று துகிரா சொன்னாள்.

நீ பிரதீப் அண்ணாவ பார்த்தாயா?

அவரை பத்தி கேட்காத அர்ஜூன். போன் செய்தால் எடுக்க கூட இல்லை. இப்ப கூட அவர் ஊர்ல இல்லை என்று கோபமாக பேசினாள் துகிரா. அகிலும் பவியும் அர்ஜூனிடம் வந்து, ”ஆல் தி பெஸ்ட் அர்ஜூன்” என்றனர்.

சும்மா இருங்கடா..என்று பவியை பார்த்தான்.

அர்ஜூன், நாங்க நாளைக்கு மாலையே கிளம்பணும். அதனால ஸ்ரீயோட நாளைக்கு நேரத்தை செலவழிக்கலாம்ன்னு நினைக்கிறோம் பவி சொல்ல..ஓ.கே என்றான் அர்ஜூன்.

சாரி..அர்ஜூன். உன்னை..

ஒன்றுமில்லை. அவளுக்கு சரியான பின் தான் நான் வேலையவே பார்க்கணும். ஸ்ரீ அதே காலேஷ்ல படிப்பாளா? அகில் தயங்க,

இல்ல அகில், அவள “விஸ்வலைட் ஃபிலிம் இன்ஸ்யூட்ல” மாடலிங் கோர்ஸ் சேர்க்கணும். அவ என்ன சொல்லப் போறாளோ? ஆனால் அவளை இதுக்கு மேல் தனியே எங்கும் விட மாட்டேன். அவள் என் அருகே தான் இருக்கணும். அதான் சென்னையிலே சேர்க்க முடிவு செய்துள்ளேன்.

அகில் புன்னகையுடன் இப்பவே சொல்லாத என்றான்.

இப்ப சொல்லலை. பார்த்தேல்ல..கிள்ளி வச்சுட்டா என்றான் புன்னகையுடன்.

ஹப்பா..இந்த புன்னகையை பார்த்து எத்தனை நாளாயிடுச்சு ஆதேஷ் சொல்ல, ஆமா ஆது, அர்ஜூன் மூஞ்சிய பாரேன் என்று அபி அவனை கேலி செய்தான். அம்மாக்கள் வெளியே வந்து, அர்ஜூனிடம். முதல்ல உன்னை பார். அப்புறம் அவளை பார்க்கலாம் என்றனர். அவன் புன்னகையுடன் நண்பர்களை பார்க்க, ஸ்ரீ..நாம நாளைக்கு பார்க்கலாம் என்று அர்ஜூனை பார்த்தனர்.

கோவிலுக்கு போயிட்டு வாங்கடா. சாப்பிடலாம் என்றான் அர்ஜூன்.

சாப்பாடு வேண்டாம். ஸ்ரீயை பார்த்ததில் வயிரும் மனதும் நிறைஞ்சு போச்சு அகில் சொல்ல, துகிரா உனக்கு எதுவும் வேண்டாமா? அர்ஜூன் கேட்க, ஆதேஷ் அவள் வாயை அடைத்தான்.

சரி, அப்ப நாளைக்கு காலையில ட்ரீட் தயாரா வாங்க என்றான் அர்ஜூன்.

பணம் செலவழிக்க நீ தான் தயாரா இருக்கணும் என்றான் கைரவ்.

நித்தி ஸ்ரீயிடம் சென்று ஏதோ சொல்ல, ஸ்ரீ அர்ஜூனை பார்த்து சிரித்தாள்.

ஹேய்..யாராவது என் பேத்திக்கு கேக் குடுத்தீங்களாடா? திட்டிக் கொண்டே அவளருகே வந்தார்.

பாட்டி, என் வாயில் ஏற்கனவே கேக் ஸ்மல் வருது என்றாள் ஸ்ரீ.

எப்படி? யார் கொடுத்தா? பாட்டி கேட்க, அனைவரும் அர்ஜூனை பார்த்தனர்.

அவன் புன்னகையுடன், பாட்டி..அவளுக்கு விஸ் பண்ணும் போது கேக்கை கொடுத்துட்டேன்.

அவள் விழித்திருக்க மாட்டாளேடா? யாசு சொல்ல, அதனால் என்ன? கொடுத்துட்டேன். நீ சாப்பிட்டேல்ல..அவளுக்கு கொடுக்காமல் எப்படி?

டேய் அர்ஜூன், சாப்பிடுவதையெல்லாம் கண்ணு வைக்காத என்று அவள் சொல்ல, அனைவரும் புன்னகைத்தனர்.

அனு, எங்களோட கோவிலுக்கு வர்றீயா? கைரவ் அவளை தூக்க, நோ..நான் ஏஞ்சலுடன் தான் இருப்பேன் என்று ஸ்ரீயிடம் அனு ஓடினாள்.

பாட்டி ஸ்ரீக்கு கேக் ஊட்டி விட்டு, ரொம்ப நாள் சந்தோசமா இருக்கணும்மா என்றார். அவள் இறங்க..இன்று கீழே இறங்கவே கூடாது என்ற பாட்டி..அர்ஜூன் ஸ்ரீயை பார்த்துக்கோ. நான் சாப்பிட எடுத்துட்டு வாரேன் என்று நீங்க கிளம்பலையா? எனக் கேட்டார்.

பாட்டி நான் வந்துட்டு தான் போவேன் என்றாள் பவி. இங்கே கூட நீ தங்கு. உன்னை யார் என்ன சொல்லப் போறாங்க என்றார்.

நீ வீட்டுக்கு வந்துரும்மா..என்று ரதி பாட்டியை முறைத்துக் கொண்டே சென்றார். பாட்டி கீழே செல்ல, கேசவன் அவருக்காக காத்திருந்தார். ஸ்ரீக்கு என்ன சாப்பிட கொடுக்கவென அவர் கூற, இதோ,..என் பேத்தையை சரியாக்காமல் விட மாட்டேன் என்று அவர் கிச்சன் செல்ல, அனைவரும் புன்னகையுடன் வெளியேறினர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement