Advertisement

அத்தியாயம் 139

மதியம் இரண்டு மணிக்கு மாணவ, மாணவியர்கள் கலையரங்கத்தில் குழுமினர்..வரிசையாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடந்து கொண்டிருந்தது.

அகில், விதுனன் அனைவரும் மினுமினுக்கும் ஆடையுடன் வந்து நின்றனர். பாடலை விதுன் ஆரம்பிக்க கரெண்ட்டு போனது. மைக் எடுக்கவில்லை. மாணவ, மாணவிகள் கத்தினர்.

விதுனன் குழுவினர் தயங்கி நின்றனர். அகில் பாட ஆரம்பிக்க, சத்தம் கேட்கலை..என்று அனைவரும் கத்தினர். அவனும் புரியாமல் இருக்க, அர்ஜூன் மேடையின் பின் சென்று “ஸ்பீக்கர் ஆப்” ஒன்றை கல்லூரி பிரசிடென்ட்டிடம் கொடுத்து மைக்குடன் கனெக்ட் செய்ய சொன்னான். விரிவுரையாளர்கள் ஜெனரேட்டரை ஆன் செய்ய சென்றனர். ஆனால் அதில் உள்ள வயரை யாரோ கட் செய்திருந்தனர். கல்லூரி முதல்வரிடம் அவர்கள் சொல்ல, அவர் அவர்களை திட்டினார்.

அதற்குள் மைக் எடுத்து விட, அகில் மைக்கை விதுனனிடம் கொடுத்தான். அவன் பதட்டமாக..சீனியர் என்ன பண்றீங்க? அகில் வாங்க, அர்ஜூன் கீழே இறங்கி செல்ல..அர்ஜூன் நில்லு..என்று அவனை நிறுத்திய அகில் மேடை ஏறினால் பர்பாஃம் பண்ணனும் என்றான்.

அகில் அது உன்னுடைய எண்ணம் தான். எனக்கில்லை..

நீ அன்று நல்லா தான பாடுன? வா..சேர்ந்து பண்ணலாம்.

ஸ்ரீ அவர்களை பார்த்து அனுவை தாரிகாவிடம் கொடுத்து அவளும் மேடை ஏற, அகில் புன்னகையுடன்..நீ வேடிக்கையை மட்டும் பாரு அர்ஜூன்..என்று ஸ்ரீ..நீயும் பவியும் சேர்ந்து பண்றீங்களா? கேட்டான்.

நோ..நீங்க என்ன பிராக்டிஸ் பண்ணீங்களோ அதையே பாடுங்க. நானும் அர்ஜூன் டான்ஸ் பர்ஃபாம் பண்றோம்.

ஸ்ரீ வேண்டாம், இது கல்லூரி விழா. பேச்சுக்கள் தவறானால் என்ன செய்வது? அர்ஜூன் கேட்டான்.

எல்லாமே தெரிஞ்சு தானடா வந்தேன். யார் என்ன சொன்னால் என்ன? என்று அனுவை பார்த்து ஸ்ரீ..பார்க்க ரெடியா இருக்கிறியான்னு கேட்டா?

அர்ஜூன் இருவரையும் பார்க்க, அனு தான் கேட்டாள். அதான் உன்னோட டான்ஸ் பண்ண வந்தேன்.

அர்ஜூனும் ஸ்ரீயும் சைலேஷை பார்த்தனர். அவன் ஓ.கே என்று கையை காட்ட, அவர்களது பாடலும் நடனமும் அனைவரையும் வியக்கும் வண்ணம் இருந்தது.

பவதாரணியா இது? என்று பொண்ணுங்க எல்லாரும் அவளை புகழ்ந்தனர். பாடல் முடிந்து காய்ஸ் நீங்க இப்ப பார்த்தது உங்களை ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். ஆனால் இப்பொழுது உங்களுக்காக ஒரு சின்ன அளவிலான டூயட் மியூசிக் விது டான்ஸ் என்று அகில் யாசுவை பார்க்க, மைக்கிலே யாசு நீ ஏற்கனவே ப்ளே பண்ண பியானோவ மட்டும் ப்ளே பண்ணு. நாங்க எல்லாரும் பேராக டான்ஸ் பண்றோம் என்றான் அகில்.

அகில்..வேண்டாம் என்று ஸ்ரீ இறங்க, அர்ஜூன் அவளை தடுத்து, நீ சொன்னதுக்காக நான் செய்தேன்ல. இப்ப நான் சொல்றேன். நாம கண்டிப்பாக டான்ஸ் பண்றோம் என்று ஆரம்பிக்க..ஆரவாரமும் ஆர்ப்பாடமுமாய் அனைவரும் கண்டுகளித்தனர்.

அர்ஜூனும் ஸ்ரீயும் அவர்களது காதல் உலகத்தில் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து நடனம் ஆட, சத்யா திருமணத்தின் போது அஜய்- பவியை விட பிரமாதமாக அர்ஜூன்- ஸ்ரீ, அகில்- பவதாரணி, விதுனன்- நிவேதிதா அனைவர் மனதிலும் நின்றனர். பசங்க மத்தியில் விசில் பறந்தது.

ரோசன் இவர்களை பார்த்து மும்பையில் இருக்கும் அவரின் இசையாலத்தில் சேர்ந்து கொள்ள சொன்னான். அனைவரும் மகிழ்ச்சியானார்கள். அர்ஜூனும் ஸ்ரீயும் அவரிடம், எங்களால் முடியாது சார். ஆனால் மற்ற அனைவரும் வருவதாக கூறி விட்டு அர்ஜூன் அவ்விடத்தை விட்டு செல்ல, அர்ஜூன் – ஸ்ரீ, அகில்-பவதாரணி ஜோடியை பற்றி தான் கல்லூரியில் அன்றைய பேச்சாக இருந்தது. அனு அர்ஜூன், ஸ்ரீயை பார்த்து சூப்பரா இருந்தது என்றாள். என்னை எவனாவது கண்டு கொள்கிறானா பாரேன் என்று யாசு புலம்பியவாறு சென்றாள்.

கல்லூரி விழா முடிந்தவுடனே அனைவரும் ஊருக்கு கிளம்பி சென்றனர். அனைவரது வாழ்க்கையும் நன்றாக சென்று கொண்டிருக்க, சத்யா என்ன தான் தியாவை உடலளவில் காயப்படுத்தாமல் விலகினாலும் அவளது அந்த வீடியோவை எண்ணி எண்ணி, அவளை தினமும் வேதனைக்குள்ளாக்கினான்.

பார்வதிக்கு சரண் நினைவு அடிக்கடி கஷ்டப்படுத்த குகனும் அவளுடைய மற்ற நண்பர்களும் அவள் மனதை மாற்ற உறுதுணையாக இருந்தனர். முழுதாக முடியவில்லை என்றாலும் குகன் அவள் மனதில் வர ஆரம்பித்தான். சுந்தரம் ருத்ராவிடமும் கொஞ்சமாக நெருக்கம் வந்தது. புகழ் மேகா, நந்துவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.

அப்படியே ஒருவாரம் கழிந்தது. சுந்தரம் வீட்டில் நந்து அம்மா ருத்ரா, புகழிற்கு எம்பிராய்டரி சொல்லிக் கொடுத்து விட்டு நகர, புகழிற்கு சுந்தரம் வாங்கித் தந்த போன் ஒலித்தது. குகனின் மாமா பொண்ணு ஒருத்தி போன் செய்திருந்தாள். அவளிடம் பேசிக் கொண்டே புகழ் படுக்கையில் அமர்ந்திருந்தாள். ஏதோ சத்தம் கேட்டு, முதலில் அசால்ட்டாக இருந்தவளுக்கு மேலும் சூ சத்தம் கேட்க, பயந்து எழுந்து..யாரு?..யாரு?.. போனில் அந்த பொண்ணிடம், என்னோட அறைக்குள் யாரோ இருக்கிற மாதிரி இருக்கு.

சீக்கிரமா வெளிய போ..அவள் சொல்லிக் கொண்டே வெளியே தலைதெறிக்க ஓடி வந்தாள். குகனின் அப்பா, அம்மா, ராவண் உள்ளே வந்தனர்.

மாமா..என்று வக்கீல் அப்பாவிடம் சென்று புகழ்..புகழ்..மூச்செடுத்து விட்டு, மாமா..அங்க புகழ் அறையில் யாரோ இருக்காங்களாம். அவ பயத்துடன் இருக்கா.

யாருன்னு சொல்லுங்க என்று அறையை சுற்றி வந்தாள் புகழ். அவளை தள்ளி விட்டு ஒருவன் அவள் அறைக்கதவை விட்டு செல்ல..

மாமா..மாமா.இங்க வா..திருடன்..திருடன்..எனக் கத்தினாள்.

போனை வாங்கிய வக்கீல் அவள் சத்தம் கேட்டு, புகழ் அவன் பின்னே போகாத? கத்தினார்.

அங்கிள், திருடன்..அவனை விரட்ட, அவன் ருத்ரா அறைக்குள் சென்றான்.

அங்கிள், ருத்ரா ஆன்ட்டி அறைக்குள் போயிட்டான். சுந்தரத்தை கூப்பிடு என்றார்.

அங்கிள், அவர் இன்னும் வீட்டுக்கு வரல..என்று நந்து மாமா..மாமா..என்று கத்திக் கொண்டே ருத்ரா அறைக்கதவை தட்டினாள். அவனும் மேகாவும் ஓடி வந்தனர்.

மாமா..திருடன்.என்று அவள் கத்த..நந்து இடித்து திறக்க முடியலை. ராவண் குகனிற்கு போன் செய்து சொல்ல, அப்பாவிடமிருந்து போனை வாங்கி நான் சொல்வதை செய்ய சொல் என்று ராவண் புகழிடம் நந்துவிடம் போனை கொடுக்க சொல்ல, அவள் கொடுக்க போனை வாங்கிய நந்து பதட்டமுடன் அண்ணா..அம்மா..என்று சொல்ல,

போனில் இடை புகுந்த குகன் மூன்றாவது மாடிக்கு போ. அவன் திருடனாக இருக்க வாய்ப்பில்லை என்ற குகன் சீக்கிரம் போ. அடுத்து என்ன செய்யணும்ன்னு உனக்கே தெரியும்ல.

ஹ..ஆமா அண்ணா. நான் இப்பவே போறேன் இருவரும் இங்கேயே இருங்க. கதவை திறக்க முயற்சி செய்யுங்க என்று அவன் ஓடிச் சென்று பாஸ்வேர்டை போட்டான்.

அண்ணா…கதவு திறக்கலையே? நந்து கேட்க, நந்து கதவு இங்க திறந்துடுச்சு மேகா கத்தினாள். இரு பொண்ணுங்களும் உள்ளே சென்று பார்த்து அதிர்ந்து கத்தினர்.

ஹே..என்னாச்சு? சீக்கிரம் அவங்களை பாருடா..என்று ராவண் சத்தமிட்டான். நந்து கீழே சென்று அறையை அடைந்து அதிர்ந்தவன் இருவரையும் வெளியே தள்ளி அவன் உள்ளே சென்றான்.

ஆளுயரத்திற்கு பெரிய பற்களுடன் பிரெளன் கலர் பெரிய நாய் வாயில் இரத்தமுடன் வந்தவனை கடித்து குதறி வைத்திருந்தது. அவன் செத்து கிடந்தான். அவன் அம்மா மயங்கி இருந்தார். அவன் பயத்துடன் அருகே செல்ல போகாதடா..இருவரும் கத்தினர். நாயின் உறுமல் சத்தம் கேட்டு குகனும் ராவண் அவனுடன் இருப்பவர்களும் பதறினர். அவனை பார்த்த அந்த நாய், அங்கிருந்த மேசையை தட்டி விட்டு அமைதியாக சென்றது.

அம்மா..அம்மா..என்று பதறி வந்து அவன் அம்மாவை எழுப்ப, பின்னிருந்து வந்த ஒருவன் புகழ் வாயை மூடி இழுத்து செல்ல..அவள் அங்கிருந்த பொருள் ஒன்றை காலால் உதைத்தாள். சத்தம் கேட்டு மேகா அவளை பார்த்து,

நந்து..இங்க வா என்று ஹே..அவள விடு என்று அவனை அங்கிருந்த ஸ்டூல் ஒன்றை எடுத்து ஓடிச் சென்று அவனை அடித்தாள் மேகா. அவன் அவளை தள்ளி விட்டு புகழை தூக்கி ஓடினான். வெகு நேரம் அவன் புகழ் மூக்கை அழுத்தி பிடிக்க, அவள் முடியாமல் மயங்கினாள்.

நந்து அவன் அம்மாவை விட்டு வெளியே வந்து அவன் பின்னே ஓடினான்.  சுந்தரத்திற்கு கதவு திறந்தவுடன் வந்த சத்தத்தில் ஏற்கனவே கிளம்பி விட்டார். வக்கீல் அப்பாவும் போன் செய்து சொல்ல, அவர் விரைந்தார். அவனை விட்டுறாத குகன் சொல்ல..அண்ணா..பைக்கில்ல தான் போறேன். அவன் கார்ல போறானான். ஒருவன் இருப்பது போல் தெரியலை அவன் கூற,

டேய், இப்ப கூட வெளிய வர மாட்டாயா? ராவண் குகனிடம் சத்தமிட்டான். கண்டிப்பா புகழுக்கு ஏதும் ஆகாது. என்னால் கண்டிப்பாக வர முடியாது.

அப்பா, வாங்க நாம சென்னை கிளம்பலாம் ராவண் அவன் அப்பாவிடம் சொல்ல..ராவா..வேண்டாம். அந்த கொலைகாரனால் இப்ப வரை அங்க யாருக்கும் ஆபத்து நேரலை. உன்னால் வந்துடாம? என்றான் குகன்.

புகழிற்கு ஏதும் ஆகாது என்று எப்படி உறுதியா சொல்ற? வக்கீல் அப்பா கேட்க, அவன் ருத்ரா அம்மாவை அடைய ஆட்களை விட்டு கடத்த சொல்லி இருக்கான். புகழ் தானே சிக்கிட்டா?

அவனே சுந்தரம் அப்பாவுக்கு போன் செய்து ருத்ரா அம்மாவை அழைத்து வரச் சொல்வான். கண்டிப்பாக இது தான் நடக்கப் போகுது. மிரட்ட தான் புகழை தூக்கிட்டு போயிருக்கான். அவனை பிடிச்ச்சிறலாம் குகன் சொல்ல, இதெல்லாம் சரியா படலை என்றான் அவன்.

சுந்தரம் நந்துவிடம் பேச, அவர்களை அவன் தவற விட்டதாக சொன்னான். இருவரும் வீட்டிற்கு வந்தனர். அவன் அம்மாவை விழிக்க வைக்க மேகாவும் அவன் அம்மாவும் பயத்துடன் அமர்ந்திருந்தனர்.

வந்த அவர்களிடம் இருவரும் ஓடி வந்தனர். ருத்ரா சுந்தரை பார்த்து ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டார். அவர் அதிர்ச்சியுடன் நிற்க, நந்துவும் மேகாவும் என்ன சொல்லண்ணு புரியாமல் இருவரையும் பார்த்தனர்.

அப்பா..புகழை எங்க கடத்திட்டு போயிருக்கான்னு தெரியுமா? நந்து கேட்க, ருத்ரா விலகினார். அவன் கடந்த வந்தது ருத்ராவை என்றால் ஊரில் அந்த பொண்ணு..? நந்துவை பார்த்தான்.

அங்கிள்..ஸ்ரீ? மேகா கேட்க, அவளிடம் அர்ஜூனுக்கு போன் செய்து விசாரி. இருட்டாகி விட்டது. அந்த பொண்ணு வெளிய போயிருந்து அவளையும் கடத்தி இருந்தால், சீக்கிரம் அவனிடம் பேசு என்று ருத்ரா அறைக்கு சென்று இறந்தவனை பார்த்தாள்.

யாராவது அவன் பக்கம் சென்றீர்களா? அவர் கேட்க..இல்லை என்றான் நந்து.  சுந்தரம் போன் ஒலிக்க எடுத்தார்.

என்னடா நண்பா? அவள் பக்கம் நெருங்க விடாம நிறைய செஞ்ச? என்ன பிரயோஜனம். பாவம் அந்த பொண்ணு..

இங்க பாரு. நம்மை பிரச்சனையில அந்த பொண்ணை இழுக்காத. அட..இனி என்னால் காத்திருக்க முடியாது. எனக்கானவர்களை நான் இன்றே அடைந்தே தீருவேன். நீ உன்னோட ஊருக்கு வந்து ரொம்ப வருசமாகுதுல்ல.. வா..இப்பவே கிளம்பி வா. உன் அவளையும் அழைச்சிட்டு வா. எனக்கு அவள் தான் வேண்டுமே? இந்த பொண்ணு உயிரோட வேணும்ன்னா குடும்பத்தோட இங்க வாடா என்று கத்தினான்.

ராஸ்கல்..வாரேன். இப்பொழுதே வாரேன் என்று சுந்தரம் போனை வைத்து விட்டு ருத்ரா அறையை பூட்டி விட்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

புகழுக்கு ஏதும் ஆகாது. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று குகனிடமும் அவனது வக்கீல் அப்பாவிடமும் சொல்லி விட்டு போனை வைத்தார் சுந்தரம். பாரு குகன் தோளில் சாய்ந்து தன் தங்கையை எண்ணி அழுது கொண்டிருந்தாள்

அங்கிள் ஸ்ரீ, தாரிகா வெளிய போயிருக்காங்களாம். நான் விசயத்தை சொன்னவுடனே அர்ஜூன் அவர்களை பார்க்க கிளம்பி விட்டான் என்றாள் மேகா. அவர் தலையசைத்து இருக்கையில் சாய்ந்து கொண்டு காரை செலுத்தினார்.

தாரிகா அர்ஜூனுக்கு போன் செய்து, பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வா..என்று கூறி விட்டு போனை வைத்தாள்.

அர்ஜூன் பதறி அங்கே சென்றான். கும் இருட்டாக இருந்தது. ஸ்ரீ..தாரிகா..என கத்திக் கொண்டே அர்ஜூன் செல்ல, சில விளக்குகள் ஒளிர்ந்தது. அதை பார்த்துக் கொண்டே நடந்தான். திடீரென அவனை சுற்றி சிவப்பு நிற இதய வடிவ ஹீலியம் பலூன்கள் பறந்தது. அதை பார்த்துக் கொண்டே மேலும் நடந்தான். “கம் ஃபாஸ்ட் குட்டிப்பையா” என ரோஜா இதழ்களால் எழுதி இருந்தது. புன்னகையுடன் மேலே நடந்தான். எங்கிருந்தோ வந்த டைரிமில்க் சாக்லெட் கவரால் செய்யப்பட்ட பெரிய ரோஜாக் கொத்து அவன் கையில் விழுந்தது. அதை பார்த்து அர்ஜூன்..ஏஞ்சல்..எங்க இருக்க? வெளிய வா..என்றான்.

தாரிகாவும் கவினும் அவனிடம் ஓடி வந்தனர்.

என்னடா இது? அர்ஜூன் கேட்க, நீயே பாரு என்று கவின் சொல்ல, மூவரும் வந்தனர். கோவில் முழுவதும் சுத்தம் செய்து முழுவதும் அகல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

மூவரும் உள்ளே நுழைந்தனர். கோவிலின் கருவறைக்கு வெளியே இருந்த இரத்தக்கறையை பார்த்து கவினும் தாரிகாவும் ஸ்ரீ என்று உள்ளே ஓடி வந்தனர். அவள் அங்கு இல்லை. அவள் அர்ஜூனிடம் காதலை சொல்வதற்காக சில இலைகளையும் பூக்களையும் வைத்து எழுதி இருந்த “ஐ லவ் யூ” சிதறி கிடந்தது. அர்ஜூன் அதை பார்த்து ஸ்ரீ, விளையாடாதே.. வெளிய வா..

அண்ணா, அவள் விளையாடலை. ஏதோ நடந்துருக்கு. இந்த இரத்தக்கறை என்று தாரிகா அழுதாள்.

அனு…அனு..கவின் சத்தமிட, அனுவும் ஸ்ரீயுடன் இருக்காளா? அர்ஜூன் பதட்டமானான்.

அண்ணா..ஸ்ரீயோட போன் என்று தாரிகா ஸ்ரீயோட போனை கொடுக்க, அர்ஜூன் ஆன் செய்து பார்த்தான். அவள் ஊருக்கு வந்ததிலிருந்தே நிறைய மிரட்டல் மேசேஜ் வந்திருந்தது. ஆனால் ஸ்ரீ அதற்கு பதிலாக நான் அர்ஜூனை விட்டு வர மாட்டேன். முடிஞ்சதை செஞ்சுக்கோ..என்றும் நான் சீக்கிரம் அர்ஜூனிடம் காதலை சொல்லப் போகிறேன் என்றும் இருந்தது.

ஸ்ரீ உன்னிடம் காதலை சொல்ல தான் இங்கே வரச் சொன்னாள். ஆனால்..அவளை காணும். அனுவும் கூட இருந்தா அர்ஜூன். பெரிய பிரச்சனையாக இருக்குமோன்னு பயமா இருக்கு அர்ஜூன் கவின் சொல்ல..

இருக்குமோ என்ன? அவன் இங்க வந்துட்டான். ஸ்ரீ, அனு அவனுடன் தான் இருக்காங்க அர்ஜூன் இரத்தக்கறையை முறைத்தவாறு சொன்னான்.

அர்ஜூன், என்ன? இவ்வளவு சாதாரணமா சொல்ற? தாரிகாவும் கவினும் டென்சன் ஆனார்கள்.

அமைதியா இருங்க..யோசிக்கலாம்..என்று அர்ஜூன் சொல்லும் போது அவனுக்கு நந்துவிடமிருந்து மேசேஜ் வந்தது. அவன் புகழை கடத்தியதை சொன்னான். பாரு, புகழை ஸ்ரீ, அர்ஜூனுடன் பேச வைத்திருப்பார்கள்.

சரி,வாங்க. ஸ்ரீ, அனுவையும் கடத்தி இருக்காங்க என்றான் அர்ஜூன்.

அர்ஜூன்..நந்து சுந்தரத்திடம் சொன்னான். அவர் அர்ஜூனுக்கு போன் செய்து, நாங்க வந்துட்டோம் என்று ஊருக்குள் வந்தனர். அவன் இருக்கும் இடத்தை சொல்ல..அர்ஜூன் அங்க வேணாம். வெளிய வா..என்றார். அப்பொழுது ஊரில் இருப்பவர்களுக்கும், சுந்தரம் நின்ற இடம், அர்ஜூன் இருக்கும் இடம்..என அனைத்து இடங்களிலும் குரல் ஒன்று கேட்டது.

வெல்கம் என்னுடைய இனிய தோழா சுந்தரா. அர்ஜூன் நிக்குற இடத்துக்கு வலது பக்கமா வா. தூரமா ஓர் கோட்டை இருக்கும். என்னோட டார்லிங்கை கூட்டிட்டு வா..என்று குணசீலன் ஆரவாரமுடன் பேசினான்.

ஊரில் இருந்தவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர..பிரதீப், வேலு தன் நண்பர்களுடனும், அஜய், சைலேஷ், நித்தி, கைரவ், இன்பா, அகில்,அபி என பெரியவர்களும் அங்கே வந்து கூடினர். அவன் பேசியதை கவனித்த அர்ஜூன் வேகமாக ஓட, கவினும் தாரிகாவும் அவன் பின் ஓடினர்.

அர்ஜூன் செல்லும் முன் அனைவருக்கும் லோக்கேசனை அனுப்பினான். பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க அனைவரும் ஒவ்வொருவராய் நழுவி அர்ஜூன் அனுப்பிய இடத்திற்கு ஓடினர். சுந்தரம் முதலில் அர்ஜூனிடம் பேசிக் கொண்டே தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வேகமாக வந்தார். நந்துவும் மேகாவும் சுந்தரம் பேச்சை கேட்காமல் முன்னே ஓடினர். கூட்டத்தில் இருந்து முதலில் தருண் செல்ல, அகில், அபி, பிரதீப், வேலு ப்ரெண்ட்ஸ், அஜய், கௌதம் சென்றனர். நித்தியும் யாசுவும் ஓட நினைக்க சைலேஷ் அவர்களை நிறுத்தினான்.

அவன் கூறிய இடத்திற்கு சென்று, ஸ்ரீ..அனு..என சத்தமிட்டுக் கொண்டே அர்ஜூன் உள்ளே செல்ல அங்கே யாரும் இல்லை.

அர்ஜூன்… ஸ்ரீ, குட்டிப்பாப்பா நிலையை நீ பார்க்க வேண்டாமா?.நான் இருக்கும் இடத்தை ஊரறிய சொல்ல நான் என்ன முட்டாளா?  அதான் புத்திசாலித்தனமா நான் இவங்கள பிடிச்சு வச்சிருக்கேன். ஆனால் பாறேன் இருவர் தானாக வந்து சிக்கிட்டானுக..என்றான் அவன்.

யாரையும் ஏதும் செய்யாத. நான் வந்துடுறேன். எங்க வரணும்ன்னு சொல்லு..அர்ஜூன் கண்ணீருடன் சத்தமிட்டான். கவினும் தாரிகாவும் உள்ளே வந்தனர்.

மூவரும்..முதல்ல அங்கிருந்து வெளிய வாங்க. கோட்டைக்கு பின்னாடி இருக்கும் பழைய ஐஸ் பேக்கடரிக்கு வாங்க என்றான். அர்ஜூன் அவர்களை பார்த்து விட்டு வேகமாக ஓடினான். மற்றவர்களும் ஓடினர்.

அர்ஜூன் அவ்விடத்தை அடைந்ததும் அதிர்ந்து நின்றான். ஸ்ரீயை பெரிய ஐஸ்பாருக்கு மேலே கட்டி வைத்திருந்தான். அவள் புடவையில் இரத்தமுடன் இருந்தாள். ஸ்ரீ..என்று அர்ஜூன் ஓடி வர, அர்ஜூன் நில்லு, இதுக்கு மேல ஒர் அடி எடுத்து வச்சாலும் உன்னோட பொண்ணுன்னு சொல்லிகிட்டு தெரிஞ்சேல்ல..அனு செத்து போயிருவா..என்றும் குரல் கேட்டது. தாரிகாவும் கவினும் ஸ்ரீயை பார்த்து, ஸ்ரீ..எழுந்திரு.. என்னாச்சு? லைட்டா சத்தம் கொடுத்திருக்கலாமே? கவின் அழுதான்.

சத்தமா? அவள் இரத்தத்தை யாரும் பார்க்கலையா? மயங்க தான் அடிச்சிருக்காங்க. ஆனால் அவள் விலகி தப்பிக்க

போய்.. நல்லா அடி வாங்கி இருக்கா. அவளை புடவையில் பார்க்கவும் எனக்கு அவள் அம்மாவை பார்த்தது போல் இருந்தது. ஆசையும் வந்தது. அவளை அடைய அருகே சென்றால் சொன்னா பாரு அர்ஜூன் ஒரு வார்த்தை..என்ன காதல்? உன் காதலையும் மிஞ்சி விட்டாள்.

அங்கிருந்த ஆட்கள் அவர்களை பிடிக்க, விடுங்கப்பா. இப்ப வேண்டாம். சொல்லும் போது பிடிங்க..

என்ன சொன்னா? அர்ஜூன் கண்ணீருடன் கேட்டான்.

நீ என்னை தொட்டாலும் என்னிடமிருந்து எந்த உணர்வுகளையும் உன்னால் வாங்க முடியாது. நான் அர்ஜூனுக்கு மட்டுமே சொந்தமானவள் மனதளவில். இது வெறும் உடம்பு தான். என் மனதும் உயிரும் அர்ஜூனுக்காக என்று ஸ்ரீ பேசியதை ஒலிக்க விட்டான்.

அர்ஜூன் கதறி அழுதான். அழுறதை நிறுத்திட்டு எங்க எல்லாருக்கும் உதவி செய் என்ற குரல் கேட்டு அர்ஜூனும் மற்றவர்களும் குரல் வந்த திசையை பார்த்தனர். ராவணையும், அவன் அப்பாவையும் கட்டிப் போட்டிருந்தனர்.

குகன் மாமா அப்பா? தம்பி? நீங்க எப்படி இங்க வந்தீங்க?

அர்ஜூன் உனக்கு இடது பக்கம் பாரு? குணசீலன் சொல்ல, நிவாஸையும் கட்டி வைத்திருந்தான்.

நிவி..என்று அவனருகே செல்ல இருந்த அர்ஜூனிடம், அர்ஜூன் மறந்துட்டியா? மேலிருந்து உன்னோட அனுவை தூக்கிப் போடாவா? என்று பொம்மை போல் அனுவை தூக்கினான் ஒருவன். அனு கத்திக் கொண்டே அம்மா..அம்மா..என்று ஸ்ரீயை பார்த்துக் கொண்டே அர்ஜூனை பார்த்து, தூக்க சொல்லி கையை நீட்டினாள். அனைவர் கண்ணும் கலங்கியது.

வேண்டாம்..அவளை ஏதும் செய்யாதே? நான் யார் அருகேவும் செல்லலை என்று கதறி அழுதான் அர்ஜூன்.

அட, வாங்கப்பா..வாங்க..என்ற குரல் கேட்க அனைவரும் வாயிலை பார்த்தனர். தருண் தனியே உள்ளே வந்து ஸ்ரீயை தான் முதலில் பார்த்தான். ஸ்ரீ..என்று மற்றவர்களை பார்க்க..அர்ஜூன் என்று அவனை பார்க்க, அவனது அழுத முகம் தருணை கலங்க வைக்க, நந்துவும் மேகாவும் வந்தனர்.

அனைவரையும் பார்த்த நந்து..புகழ் எங்கே? கேட்க, கேட்டதுக்கு தான் அந்த ஆள் ஆட்களை வச்சு கட்டி வச்சுட்டான்ட்டா? என்று ராவண் சொல்ல..

அவனை பார்த்து விட்டு அர்ஜூன்..என்று அவனிடம் வந்தனர். தருண், அர்ஜூன் அருகே நந்து மேகா செல்ல..ஸ்ரீயை பார்த்த மேகா, பொம்மையை கட்டி போட்டுருக்கிறது போல கட்டி வச்சிருக்க? யார் தான்டா நீ? கோபமாக அவள் கேட்க, அர்ஜூன் அவள் வாயை மூடி, கொஞ்ச நேரம் அமைதியா இரு என்றான் அர்ஜூன்.

ஏம்மா..பசங்களே அமைதியா இருக்காங்க. உனக்கு பயமே இல்லையோ? என்று குரல் கேட்க, அவ தெரியா பேசிட்டா மன்னிச்சிருங்க அர்ஜூன் சொல்ல, அனைவரும் அதிர்ந்து அர்ஜூனை பார்த்தனர். அந்த குரல் கலகலவென சிரித்தது.

அர்ஜூன் இவனிடம் எதுக்கு மன்னிப்பு கேக்குற? என்று சுந்தரமும் ருத்ராவும் வந்தனர். ருத்ரா பயத்துடன் சுந்தரத்தின் கையை பிடித்துக் கொண்டு வர, அவனுக்கு கோபம் அதிகமானது.

அர்ஜூனையும் என்னோட டார்லிங்கையும் தவிர எல்லாரையும் பிடிச்சு கட்டுங்கடா என்று அனுவை கீழே போடுவதை போல் ஒருவன் முன் வர, அனைவரும் வேண்டாம் என்று கத்தினர்.

பரவாயில்லை. இந்த குட்டிப்பொண்ணு மேல எல்லாருமே இவ்வளவு பாசமா இருக்கீங்க?

அகிலும் அபியும் உள்ளே வந்து, உன்னை மாதிரி கேவலமான பிறவிக்கு எப்படி பாசமா இருக்க தெரியும்? கேட்டபடி வந்தனர்.

எல்லாரும் எதுக்குடா வர்றீங்க? அர்ஜூன் கோபமாக கேட்க, இது எனக்கு நல்லது தான் ஒரே நேரத்தில் எல்லாரையும் கொன்னுட்டு போய்க்கிட்டே இருப்பேனே? என்றான் அவன்.

ஆமாடா. அதுவரை நாங்க சும்மா இருப்போம் பாரு அபி சொல்ல, என்னப்பா அம்மாவை அழைச்சிட்டு வந்திருந்தா ஃபண்ணா இருந்திருக்கும்ல..என்று அகிலிடம் சொல்ல..யோவ்..நீ சரியான கோழை. வெளியே வரவே பயப்படும் நீயெல்லாம் பேசுறியா? அகில் கேட்க, அவன் கோபமாக அர்ஜூன் உன் நண்பனிடம் சொல்லி வை என்றான்.

எல்லாரும் சும்மா இருங்க என்று கத்திய அர்ஜூன், ஸ்ரீ கண்ணை முழித்து பாரு..என்று அர்ஜூன் கத்தினான்.

அண்ணா..நான் உன்னிடம் ஒன்று காட்டணும் என்ற தாரிகா அவள் போனை அர்ஜூனிடம் போட அவன் அதை பிடித்தான். அதே நேரம் வந்த அனைவரும் அர்ஜூன் ஏற்கனவே சொன்ன பிளானை அவசரத்தில் மறந்திருப்பர். ஆனால் பிரதீப், வேலு ப்ரெண்ட்ஸ், அஜய், கௌதம் அந்த தொழிற்சாலைக்கு பின் சன்னல் உயரமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு ஒவ்வொருவரும் அங்கிருந்த இரண்டு அறைக்குள் இரு குழுவாக பிரிந்து குதித்தனர். இதை பிரகதி தூரமாக நின்று பார்த்தாள்.

தீனா, சைலேஷ், கைரவ், நித்தி, யாசு நடப்பதை வெளியே மறைந்து நின்று யாசுவின் கைக்கடிகாரத்தில் பார்த்தனர். அதே போல் நிவாஸ் கட்டி இருந்தான். அவன் லைவ்வாக காட்டினான்.

அர்ஜூன் தாரிகாவிடம், போனில் என்ன இருக்கு? கேட்டான்.

போனை வாங்கி திரையிட்டு போடுங்கடா. நாமும் பார்க்கலாம் அவன் சொல்ல, ஆட்களில் ஒருவன் அர்ஜூனிடமிருந்து பிடுங்கி தாரிகா, ஸ்ரீ குடித்த முந்தைய நாளில் எடுத்த வீடியோவை போட்டனர்.

அர்ஜூன் குடித்து விழுந்து கிடக்க..அறையிலிருந்து வந்த ஸ்ரீ, அவனருகே வந்து, இப்படியா குடிப்ப? எனக்கு கஷ்டமா இருக்கு அர்ஜூன். நான் என் காதலை சொல்லலாம் என்று நினைக்கும் போது நமக்கு தெரியாத என் வீடியோ வெளிய வந்துருச்சு. என்னால ஏத்துக்கவே முடியலை அர்ஜூன். இதே போல் தான் அர்ஜூன் அன்று நாம் பள்ளியில் படிக்கும் போது என் காதலை சொல்ல நினைத்தேன். ஆனால் அதற்குள் என்னையும் அகிலையும் கடத்தி..நடக்க கூடாதது நடந்து நாம் பிரியும் படி ஆனது.

பிரிந்து முதலாய் அகிலை சந்திக்கும் போது நினைவு கொஞ்ச கொஞ்சமாய் வந்தது. ஆனால் அப்பொழுது முழுதாக வரவில்லை. ஆனால் அர்ஜூன் உன்னை பார்க்கும் போது ஏதோ தோன்றியது. சொல்ல முடியாத வேதனை தாக்கியது போல் இருந்தது. மனம் கனமாய் இருந்தது. அப்பொழுது எதுவும் தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து உன்னை பார்க்கும் போது எனக்கு நினைவு வர ஆரம்பித்தது. ஹாஸ்பிட்டல்ல அகில் என்னை கிஸ் பண்ணும் போது நீ உடைந்து வெளியே செல்லும் போது, எனக்கு என் உயிரையே இழந்தது போல் உணர்ந்தேன். அந்த உணர்வில் தான் உன்னை அணைத்தேன். ஆனால் நமக்குள் நடந்த அனைத்தும்…அனைத்துமே நினைவுக்கு வந்தது.

புன்னகையுடன் முதலாய் உன்னை பார்த்தது; குட்டிப்பையான்னு அழைத்தது; நீ முதலாய் எனக்கு கொடுத்த மிட்டாய்;  அகிலுடன் நீ பேச முயன்றது; முயற்சி செய்ன்னு நான் உன்னை ஊக்குவித்தது; நித்தி, யாசுவிடம் நீ நட்பானது; அதனால் அகில், அபி, கவின் அவர்களுடன் சண்டை போட்டது; பிரகதி இடையே வந்தது; அவள் வீட்டில் வந்து என்னை மிரட்டிய போது நீ எனக்காக அவளை திட்டியது; என்னை தாண்டி செல்லும் நீ..என்னை ஏக்கமாக பார்த்தது; நீ காதலை கூறி உனை நான் நிராகரித்தது; நம்மை சிக்க வைத்த பிரகதி..அன்று நடந்தது. அன்றும் என்னிடம் நீ நிராகரிக்கப்பட்டாய்.. அர்ஜூன் அப்புறம் தான் எனக்கு உன் மீது காதல் வந்தது. உன் வெளித்தோற்றத்தால் வரலை. அகில் என்னை நிராகரித்து கோபப்பட்டான். அவன் நம்பலை இவன் நம்புகிறான் என்று காதல் வரலை அர்ஜூன்.

உன்னை கவனித்து இருந்திருக்கேன். ஆனால் நீ என் அருகே இருந்ததில்லை என்பதால் உன் உணர்வுகளையும் என் உணர்வுகளையும் என்னால் புரிந்து கொள்ளவில்லை.

அர்ஜூன்..உனக்கு தூரத்தில் இருந்து காதலிக்க முடிந்தது. எனக்கு காதல்ன்னா என்னன்னு புரியலை. அதை விட அகில் அருகே இருந்ததால் அவன் மீது காதல் இருக்கு என்று அவன் மீதுள்ள பாசத்தை தவறாக புரிந்து இருக்கிறேன் என்று தாமதமாக தான் புரிந்து கொண்டேன். அந்த காட்டில் நாம் சிங்கத்திடம் மாட்டிய போது..கொஞ்சமும் யோசிக்காமல் எனக்காக முன் வந்தாயே அர்ஜூன்? அப்பொழுது நான் ரொம்ப பாதுகாப்பாக உணர்ந்தேன்.

எதுக்கும் பயப்படாமல் இருப்பேன் என்று நான் எல்லாரிடமும் காட்டினாலும் நானும் சில விசயங்களுக்கு பயந்தேன். ஆனால் எனக்கு இந்த அளவு பாதுகாப்பு நீ கொடுப்பன்னு நினைச்சு கூட பார்க்கலை. இதை விட உன்னை பிடிக்க என்ன வேண்டும்? அதுக்காக மட்டும் காதல் வரலை. அதுவும் காரணம் மட்டும் தான். எனக்கு உன் நினைவுகள் அன்றிலிருந்து அதிகமாக வந்தது.

உன்னோட பெஞ்சில் காதலை கூறி வரும் நோட் கூட நான் தான் தினமும் வைத்தேன். எனக்கு உன்னிடம் நேரில் சொல்லணும்ன்னு தோணுச்சு. பிளான்லாம் போட்டேன். சாங் கூட எழுதி வச்சேன். ஆனால் உன்னிடம் என் காதலை சொல்லும் முன்..என்று கண்ணை துடைத்தாள்.

அர்ஜூன் உன்னிடம் காதல் வந்த போதே சொல்ல நினைத்தேன். ஏற்கனவே அகில் மீதுள்ள கோபத்தில் அவனிடம் பேசாமல் இருந்தேன். இந்த நேரம் உன்னிடம் காதலை சொன்னால் அவன் கஷ்டப்படுவான். உங்களுக்கும் பிரச்சனையும் அதிகமாகும் என்று தான் சொல்லாமல் இருந்தேன். என்னால் அவன் பழையவாறு பேச முடியவில்லை என்றாலும் நான் சாதாரணமாக பேச ஆரம்பித்தேன். அதனால் உன்னிடம் சொல்ல நினைத்து பிளான் செய்திருந்தேன். என்ன? சொல்ல முடியாமல் போச்சு அர்ஜூன்..என்று அவள் பிடித்திருந்த அர்ஜூன் கையில் முத்தமிட்டாள்.

வாரேன் அர்ஜூன்..என்று எழுந்து தண்ணீர் எடுத்து வந்து அவனது மேலாடையை கழற்றி சுத்தமாக்கி மீண்டும் போட்டு விட்டாள். பின் அவனை நகர்த்தி மது பாட்டில்களை ஒதுக்கி வைத்து விட்டு அவ்விடத்தை சுத்தம் செய்தான். செண்ட் பாட்டில் எடுத்து வந்து அவ்வறையில் அடித்து விட்டாள்.

மீண்டும் அர்ஜூனிடம் வந்து அவனை அங்கேயே படுக்க வைத்து, அவளும் அவனுடன் படுத்து அவனை அணைத்துக் கொண்டு, அவனுடன் சேர்ந்து வாழும் ஆசையை கூறினாள். அனைவரும் கண்ணீருடன் பார்த்து..சட்டென எழுந்த ஸ்ரீ..அர்ஜூன் நான் உயிரோட இருப்பேனா? இல்லையான்னு தெரியாது. அப்படியே உயிரோட இருந்தாலும் நாம சேர்ந்து வாழ்வது என்னையே குற்றவுணர்ச்சிக்குள் தள்ளும். மற்ற எதுவும் செய்ய முடியாது. உன்னிடம் என் காதலை கூறவும் முடியாது. ஆனால் நீ இப்ப என் முன் இருந்தாலும் நான் செய்வது உனக்கு தெரியாது அர்ஜூன்..

அதனால என்னோட காதலை உன்னிடம் சொல்லப் போகிறேன்..என்று அவனை அவள் பக்கம் திருப்பி வைத்து விட்டு தன் உணர்வுபூர்வமான காதலை பாட்டாக பாடினாள்.

  ” துடிக்குதே.. துடிக்குதே..

என் இதயம் உனக்குள்ளாகவே!

   மருகுதே..மருகுதே..

என்  உள்ளம் நீயாகவே!

   வேண்டுதே..வேண்டுதே..

என் கண்கள் உனதாகவே!

    தவிக்குதே..தவிக்குதே..

என் மனம் நீயெனவே!

என்னுயிரே உயிரின் உயிரே நீ தானே..

எந்நிழலே நிழலின் நிழலே நீ தானே..

     தவித்தேனே..தவித்தேனே..

காதலை கூற முடியாமல் தவித்தேனே!

       துடித்தேனே..துடித்தேனே..

உன் அருகாமையை துடித்தேனே!

எனக்கு நீயுமாய்..உனக்கு நானுமாய்

   தேவையடா..என்னாசை மாமா

மெல்லிய மணமே எனை உன்னிடம்

   உருக்குலைத்து மனமிழக்க வைக்கிறதே!

உனை வருடிய காற்று எனை தீண்டிய போது

      என் பெண்மையை உணர்ந்தேன்.

                                   கரைந்தேன்

                                   கலந்தேன்

    துடிக்குதே..துடிக்குதே..

என் இதயம் உனக்குள்ளாகவே!

     மருகுதே…மருகுதே..

என் உள்ளம் நீயாகவே!

     வேண்டுதே..வேண்டுதே..

என் கண்கள் உனதாகவே!

        தவிக்குதே..தவிக்குதே..

என் மனம் நீயெனவே!

 மென் இதழ்கள் உன் பெயரை அழைக்க

    கிடந்து மால்கிறதே என் காதலனே!

 புதிதாய் வெட்கி வீழ்ந்து போனேனடா

    உன் காதலால்! என் காதலனே!

  வாழ்நாள் முழுதும் உன்னுடனான

                 நெருக்கம் நீள..

                 உனை கண்டு..

                       வீழ்ந்து..

         துவண்டு கிடப்பேனடா!

              என்னாசை மாமா..

 நீ காதலுரைத்த போதே உன்னுடனான                                 பார்வையின்

          சாரலில் எனை மறந்தேனடா!

 காதலை ஏற்காத எனையே உன் காதல்                                      வலையில்

        விழ வைத்து மூடிய என் விழியை

               திறக்க வைத்தாயடா!

புரியாத காதலை உன்னால் புரிந்தேனடா!

           மாமா..மாமா..

உனையழைக்க மனம் ஏங்குதடா!

மனமென்னும் அரியாசனத்தில்

       சிறை வைத்தாய்

    இக்காதல் கன்னியை!

போரை தவிர்த்து உறவை வளர்த்தேனடா!

 

      உன் அகிம்சை மனமே

     மெய் தீண்ட வைத்ததடா!

 கை பிடித்து உன் தோள் சாய்ந்து

     உன்னுள் வலம் வந்து

     உனதாக ஆசையடா

        என்னாசை மாமா!”

ஃபீல் செய்து பாடிய ஸ்ரீ அர்ஜூனுக்கு இதழ் முத்தம் கொடுத்து கண்ணீருடன் உள்ளே நகர்ந்த போது அவள் கண்ணில் பட்டது மது பாட்டில். அவளறைக்கு எடுத்து சென்று ஓரிடத்தில் அதை வைத்து குடிக்கலாமா? வேண்டாமா? என்று பார்த்து அசந்து தூங்கினாள். திடீரென பயந்து விழித்த ஸ்ரீ..யோசிக்காது மடமடவென குடித்தாள். போதை தலைக்கு ஏறியது. அவள் மாற்றி இருந்த ஆடையுடன் அர்ஜூனிடம் வந்து..

அர்ஜூன்..அர்ஜூன்..எழுந்திருடா..என்று அவன் கன்னத்தை பிடித்து கிள்ளினாள். எந்திரிடா..அவங்க அம்மா, அப்பாவை கொன்னுட்டாங்க.நாம அவங்கள சும்மா விடக்கூடாது அர்ஜூன்..என்று அவன் கையை பிடித்து இழுத்தாள்.

அவன் எழாமல் இருக்க, அவனருகே அமர்ந்து..அர்ஜூனை உற்று பார்த்து,

நீ எதுக்கு என்னை இவ்வளவு காதலிக்கிற அர்ஜூன்? எனக்கு உன்னை பார்த்தால் பொறாமையா இருக்கும். உனக்கு எப்போதுமே சப்போர்ட்டுக்கு தருண் இருந்துக்கிட்டே இருந்தான். ஆனால் அன்று நம்மை பற்றிய வதந்தியில் யாரும் என்னுடன் நிற்கவில்லை. எனக்கு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? சரி..நாமும் தருணோட ப்ரெண்டா இருக்கலாம்ன்னு பேசப் போனா..எரிந்து எரிந்து விழுவான். தேங்கா தலையா.. என்னையே ப்ரெண்டா நீ ஏத்துக்கலைல்லடா..உன்னை என்ன செய்கிறேன்னு பார் என்று அங்கிருந்த ரோஜாவை எடுத்து இதழ்களை பிச்சிப் போட்டு, டேய் தருண்..உன்னையும் உன் காதலையும் பிரிக்காமல் விட மாட்டேன் பாரு..என்று அர்ஜூன் அறையை பார்த்து உள்ளே சென்று..

அகில்..உனக்கு என்ன பெரிய இவன்னு நினைப்பாடா..எப்ப பாரு அர்ஜூனோட சண்டை போட்டுக்கிட்டே இருக்க. இதுக்கு மேல சண்ட போட்ட உனக்கு ஒண்ணு வச்சிருக்கேன். அப்புறம் நீ காலி தான்..அவர்கள் ஒன்றாக இருந்த போட்டோவை எடுத்து வந்து..

நித்தியை பார்த்து, நித்து..நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா? என்று யாசுவை பார்த்து, யாசு நீ என்னை முறைச்சுக்கிட்டே இருப்பேல்ல! கவினை பார்த்து..உன்னோட சண்டை போட்டு நாளாகுது. யாரிடம் எங்க ஆன்ட்டி வீட்ல..உன்னை மாதிரி யாரும் என்னுடன் சண்டை போட யாருமே இல்லை தெரியுமா? ஹே..அபி, உன் கண்ணுல தான் நல்லா சிக்கினேன்ல. ம்ம்..நான் படிக்கிறதை திருட்டுத்தனமா பார்த்து அடி வாங்குவேல்ல..என்று அவனை புகைப்படத்தில் பார்த்து சிரித்தாள். அதோடு அர்ஜூனிடம் வந்தாள். அவன் வாலட் கீழே விழ, அதை எடுத்த ஸ்ரீ..நிறைய பணம் வச்சிருக்கியா அர்ஜூன்? என்று திறந்து பார்த்து..ஓ வென அழுதாள்.

இதுலையுமா என்னோட புகைப்படம் வச்சிருக்க? பக்கத்துல யாரு? அனுவும் நிவியும்..

நிவி..லவ் யூ டா மை க்யூட் பிரதர். என்னை யாரும் எதுவும் சொல்லிறக் கூடாது. அப்படி கோபப்படுவேல்ல..எனக்கு உடன் பிறந்தவங்க இல்லாத..குறைய சரி பண்ணிட்ட, ஆரு..என்னோட நிவியை கஷ்டப்படுத்துன..உன்னை சும்மா விட மாட்டேன் என்று சுற்றிய ஸ்ரீ தள்ளாடி அர்ஜூன் மீது விழுந்தாள். புகைப்படத்தை பார்த்து அனுக்குட்டி, எல்லாரையும் விட உன்னை விட்டு என்னால போக முடியலை. நீ அம்மாவை நல்லா பார்த்துக்கோ..வினிதா அக்கா..உங்களுக்கு எதுவும் ஆகாது. பாப்பாவோட அர்ஜூனை பார்த்துக்கோங்க..என்று அர்ஜூனை பார்த்து..

அர்ஜூன் உன்னை நான் காதலிக்கிறேன். எனக்கு உன்னை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் இருக்கு. ஆனால் முடியாதே..நான் தான் சீக்கிரமே செத்து போயிடுவேனே? என்று போதையில் உளறினாள்.

தாரி..நான் உன்னை விட்டும் போகப் போறேன். நிவி, அர்ஜூனை நல்லா பார்த்துக்கோ..என்று அவன் மீதே படுத்து விட்டு மீண்டும் நிமிர்ந்து பார்த்து அர்ஜூன் எனக்கு தலை சுத்துது. நான் இங்க இருந்தா நீ என்னோட காதலை கண்டுபிடிச்சிருவ? என்னோட காதல் உனக்கு கடைசி வரை தெரியக்கூடாது என்று எழுந்து தள்ளாடி கீழே விழுந்து எழுந்து அவனை பார்த்துக் கொண்டே சென்று படுக்கையில் தொப்பென விழுந்தாள்.

சற்று நேரத்தில் கவின் அவளை தூக்கி வந்து அர்ஜூன் அருகே படுக்க வைத்து விட்டு, எனக்கு உன்னை நினைச்சு சிரிக்கவா? அழவான்னு தெரியலை என்று தாரிகாவை பார்த்தான். அவள் கண்ணீருடன் நான் ஓய்வெடுக்க போரேன் என்று அறைக்குள் சென்று விட்டாள்.

Advertisement