Advertisement

அத்தியாயம் 138

புகழ் தன் அக்கா மடியில் படுத்து அழுது கொண்டிருந்தாள். நந்துவும் ராவணும் உள்ளே வந்தனர்.

அடடா..நீ க்யூட் பேபின்னு நினைச்சேன். நீ அழுமூஞ்சி பேபியா? நந்து கேட்க, டேய் சும்மா இருடா..ஒரு பொண்ணு சொல்ல..

ஏய்..மரியாத..மரியாத..அண்ணன்னு சொல்லணும் புரியுதா? அவன் கேட்டான்.

அழுற பிள்ளைகிட்ட இப்படி பேசுற? இதுல மரியாதை வேண்டுமாம்.

நீ என்ன சொன்ன? முறைத்தவாறு ராவண் நந்துவிடம் கேட்டான்.

ஏன், உனக்கு காது கேட்கலையா அண்ணா?

அழுறத நிறுத்துறியா? காது வலிக்குது ராவண் சொல்ல, உன்னை யாரும் உள்ளே வரச் சொல்லலை. போடா..என்று கண்ணீருடன் அவனை பார்த்து சொல்ல..

டா வா? என்னை டான்னா சொன்ன?

உன்னை தான்டா..டால்டா..என்று திட்டி விட்டு அழுதாள்.

உனக்கு திமிரு கூடி போச்சுடி. உன்னை என்ன செய்கிறேன்னு பாரு என்று பாரு மடியில் இருந்தவளை தூக்கி வெளியே வர., அனைவரும்  பதறி அவளை இறக்கி விடுடா..என்று பாருவும் மற்றவர்களும் கத்திக் கொண்டே வெளியே வந்தனர். லூசு, பைத்தியம், கடன்காரா என பலவாறு அவனை திட்டி அடித்துக் கொண்டிருந்தாள் புகழ்.

ராவா, என்ன பண்ணுற? அவன் அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் சத்தமிட்டனர்.  பெரிய டப்பில் நீர் நிரப்பப்பட்டு இருந்தது. அதில் அவளை தூக்கிப் போட்டு, இனி டா போட்ட..தண்டனை சின்னதா இருக்காது. கையை நீட்டி மிரட்டினான். இவர்கள் கத்தும் சத்தம் கேட்டு புகழின் சீனியர்ஸூம், ராஜூவ், குகனும் வந்தனர். எல்லாரும் பதறி அவளிடம் வந்தனர்.

ராவா? சின்னப் பொண்ணுகிட்ட இப்படி தான் நடந்துப்பியா? குகன் சத்தமிட்டான். பாரு, அவள் நண்பர்கள் என அனைவரும் அவளை சூழ, அவள் தலையை தூக்கி கையை நீட்டி பக்கத்தில் இருந்த கப்பை எடுத்து அதே தண்ணீரை அதில் நிறைத்து ராவண் மேலே சல்லென ஊற்றினாள்.

ஏய்..உன்னை..அவன் துள்ள, குகனும் நந்துவும் அவனை இழுத்து சென்றனர்.

முதல்ல எழுந்திருடி பாரு திட்டிக் கொண்டே அவளை தூக்க, அக்கா வேண்டாம்..எல்லாரையும் போகச் சொல்லு. நானே அறைக்கு போறேன் என்றாள்.

பாரு அனைவரிடமும் கூற, அனைவரும் நகர்ந்து சென்றனர். அவள் ஆடை உடலோடு ஒட்டி இருக்க..வேகமாக அறைக்குள் ஓடினாள். அதே நேரம் குகன் நந்துவிடமிருந்து ராவண் தப்பி ஓர் அறைக்குள் சென்றான்.

புகழ் அறைக்கதவை திறக்க பாரு அவளிடம், நானும் வாரேன்டி என்று அவள் பின் ஓடி வந்தாள்.

நான் ஒன்றும் சின்னப் பொண்ணு இல்லை. நானே பார்த்துப்பேன் என்று உள்ளே நுழைந்து கப்போர்டை திறந்து ஆடையை எடுத்தாள். அதை கையில் வைத்துக் கொண்டு சரணுடன் இருந்த புகைப்படத்தை கண்ணீருடன் பார்த்தாள்.

கப்போர்டின் பின் தான் ராவண் மறைந்திருந்தான். கதவை திறக்கும் சத்தம் கேட்டு அவன் அண்ணன் என மறைந்து நின்றான். ஆனால் புகழை பார்த்து கண்ணெடுக்காமல் அவள் அழகை பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அழுது கொண்டே..

ஏன் மாமா இப்படி செஞ்சுட்டீங்க? எனக்கு பிராமிஸ் பண்ணீங்கல்ல. அக்காவை கொஞ்சமாவது யோசித்து பார்த்தீங்களா? அவள் எப்படி உங்களை மறக்கப் போகிறாளோ? உங்களை நான் மன்னிக்கவே மாட்டேன். எனக்கு குகன் மாமாவையும் பிடிச்சிருக்கு. அதனால இனி நீங்க எங்க மனசுல இருந்து முழுசா போகணும். நான் அக்கா மனசுல இருந்து உங்களை எடுக்க என்ன செய்யணும்ன்னாலும் செய்வேன். நீ சொன்னதுக்காக இந்த மாமாவை ஏத்துக்கலை. அதையும் தெரிஞ்சுக்கோங்க. உங்களோட பழக முழுசா ஒரு வாரம் எடுத்தேன். ஆனால் ஒரே நாளில் இந்த மாமாவுடன் பழகிட்டேன். அதனால நான் சீக்கிரம் உங்களை மறந்துடுவேன். ஆனால் அக்காவை..என்று யோசித்தவள். அக்கா உங்க ஆபிஸ்க்கு வந்தா உங்க நினைவா தானே இருக்கும். அவளை போக விடாமல் ஏதாவது செய்யணும்..என்று மீண்டும் புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டே நின்றாள்.

முதல்ல இதை எல்லாத்தையும் தூக்கி போடணும் என்று நாற்காலியை இழுத்து போட்டு புகைப்படத்தை எடுக்க முயற்சி செய்தால் அவளுக்கு எட்டவேயில்லை. நீங்க எங்களை விட்டு போனது மாதிரி உன்னோட புகைப்படம் துக்கி போட கூட அருகே வர மாட்டேங்குது என்று அழுது கொண்டே எடுத்தாள். அதை கையில் எப்படியோ எடுக்க நாற்காலி முனையில் நின்ற அவள் கீழே விழ, அவளை பிடித்தான் ராவண்.

கண்ணீருடன் அவள் இருக்க, அவளை கைகளில் தாங்கிய அவன் விழிகள் அவள் விழியிலிருந்து வந்த கண்ணீரில் படிந்தது. அவள் பயத்தில் கத்த..வாயை மூடி சொல்றதை கேளு. நான் என் அண்ணனிடம் தப்பி வந்திருக்கேன். சத்தம் போட்ட என்று அவளை அனு அனுவாய் அவன் ரசிக்க..அவன் பார்வை போன போக்கில் பயந்து துள்ளி அவளாகவே கீழே இறங்கி ஓடிச் சென்று..அவள் எடுத்த ஆடையை எடுத்து உடலை மறைத்து…மாமா…என்று அழுது கொண்டே கத்தினாள். அவள் கத்தியதில் அனைவரும் அங்கு வந்தனர். இதுக்கு மேல இங்க இருந்தா மானத்தை வாங்கிடுவா..என்று வெளியே வந்து அனைவரிடமும் மாட்டினான் ராவண்.  .

ராவா..புகழ் அறையில் நீ செஞ்ச? அவன் அம்மா சத்தமிட்டார். நந்து அவனருகே வந்து அவனை பார்த்து, இது புகழ் உபயோகிக்கும் பர்ஃபியூம் ஸ்மெல். அவள என்ன செஞ்ச? கேட்டான்.

நானா? அவ என்ன ஐஸ்வர்யாராயா? இப்படி பில்டப் பண்றீங்க? கீழ விழுந்து சாவுடின்னு விட்ருக்கணும் அவன் சொல்ல பாரு கொதித்து போனாள். குகன் அவனை அடித்து, என்ன பேச்சு பேசுறடா?

அண்ணா, நான் எதுவுமே செய்யலை. நீ என் மேல கோபமா இருந்தேல்ல. அதான் இந்த அறைக்குள் வந்தேன். கதவு திறக்கும் சத்தம் கேட்டு தான் ஒளிந்தேன். ஆனால் புகழ் உள்ளே வந்து அந்த புகைப்படத்தை பார்த்து..என்று சொல்ல, ஈர ஆடையை மேலே போட்டு விட்டு வேகமாக வெளியே வந்து அவள் வாயை மூடி..நான் கோபத்தில் என் ஆடையை தூக்கி எறிந்தேன். அது கப்போர்டின் மேல் விழுந்தது. அதை நான் எடுக்கும் போது நான் கீழே விழ வந்தேன். நான் கீழே விழாமல் மாமா பிடிச்சாங்க. நான் தான் அவங்களை பார்த்து பயத்தில் கத்தினேன் என்றாள்.

அதுக்கு எதுக்கு அவன் வாயை மூடுற? அவன் தம்பி கேட்க.

அதுவா? சும்மாவே வம்பு பண்ணுவாங்க. நடக்காத எதையும் சொல்லி விட்டால் என்று ராவணை பார்த்துக் கொண்டே கையை எடுத்து சாரி மாமா..என்று உள்ளே சென்றாள்.

அவள் பேசிக் கொண்டிருக்கும் போது அறைக்கதவை குகன் திறக்க பாருவும் எட்டிப் பார்த்தாள். சரண் புகைப்படம் இல்லாதது..அதற்கு கீழே நாற்காலி விழுந்து கிடந்தது. அவள் கண்ணில் கண்ணீர் தடத்தை பார்த்தவுடன் குகனுக்கு என்ன செய்வதென்று புரியாமல் அப்படியே கதவை பிடித்து நிற்க, அவனை பார்த்த பாரு..அறியாமல் அவன் கை மேல் கையை வைத்து கண்ணீருடன் வேரெதுவும் செய்திருப்பளோ? என்று எட்டிப் பார்க்க, குகன் அவள் பக்கம் திரும்பினாள். இருவரும் நெருக்கமாக அவனை பார்த்த பாரு கையை எடுத்து விட்டு அவனை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள். அவனும் அவள் பின்னே சென்றான்.

இதை கவனிக்காமல் அவள் நேராக கீழே விழுந்த மூவர் புகைப்படத்தை பார்க்க..கண்ணீருடன் உடைந்த கண்ணாடி துண்டுகளை அகற்றி விட்டு புகைப்படத்தை பார்த்தாள். அதில் மூவரின் நெருக்கமும் பிரிந்து இருப்பதை பார்த்து அழுது கொண்டே கண்ணை உயர்த்தி முன்னிருந்த கண்ணாடியை பார்த்தாள். அவள் பின் குகன் கண்கலங்க அவளை பார்ப்பதை பார்த்து புகைப்படத்தை கீழே போட்டு எழுந்து அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். அவனும் ஆறுதலாக அவளை அணைத்தான். உள்ளே வந்த புகழ் மட்டுமல்லாமல் அனைவரும் குகன்- பார்வதியை பார்த்தனர்.

கண்ணாடி வழியே புகழை பார்த்த குகன் விலக, மாமா..அவள் நல்லா அழுது முடிக்கட்டும் என்று நகர்ந்தவளிடம் பார்வதி அணைத்துக் கொள்ள, புகழ் அவளை தள்ளி விட்டாள்.

புகழ்..என்று சத்தமிட்டான் குகன்.

மாமா..அவ அழட்டும். நல்லா அழட்டும். செத்து போனவன் தான அவளுக்கு முக்கியம். தெரிந்தே இவளை விட்டுப் போனவன் தானே இவளுக்கு முக்கியம். இவளுக்காக அவன் மட்டும் தானே இருந்தான். நாமெல்லாம் இவள் கண்ணுக்கு தெரிவோமா? கோபமுடன் அழுகையுடன் புகழ் சொல்ல,

புகழ் என்ன பேசுற? அவளை கஷ்டப்படுத்தாத.

நானா அவளை கஷ்டப்படுத்துறேன்? இல்ல மாமா. அவளை அவளே கஷ்டப்படுத்திக்கிட்டு நம்ம முன்னாடி நடிக்கிறா?

அக்கா, அவர் உனக்கு மூன்று வருட பழக்கம் தான். என்னை விட அவன் முக்கியமா போயிட்டான்ல. பாரு நான் தலையை கூட துவட்டலை. நான் ஆடையை மாற்றகூட இல்லை. மேலே தான் போட்டிருக்கேன். எப்பொழுதும் என்னை ஸ்கேன் செய்வ? இப்ப எங்க போன? நீ என்னோட அக்காவே இல்லை என்று அழுதாள்.

இல்லை. புகழ்..நான்..என்று தயங்கி குகனை பார்த்தாள். அவன் வெளியே செல்ல, அறையை பூட்டிய பாரு..சாரிடா குட்டிம்மா. என்னால முடியலை. கஷ்டமா இருக்கு. ஆனால் அவனை நினைத்தால் என்னால் எதையும் இப்ப கவனிக்க முடியாது தான். நீ தான் என்னோட உயிரே.. இப்படியெல்லாம் பேசாதடா என்று அழுது கொண்டே ஆடையை மாற்ற வைத்து புகழ் தலையை துவட்டிக் கொண்டிருந்தாள்.

அக்கா..நீ ஆபிஸ் போக வேண்டாமே?

இல்லடா. நான் போனால் தான் நல்லது.

ஏன் அக்கா? சரண் மாமா நினைவிலே இருந்திடலாம்ன்னு எண்ணுகிறாயா?

இல்ல புகழ். நான் அவனை மறந்தே தீரணும். இது யாருக்காகவும் இல்லை. எனக்காக நான் எடுத்த முடிவு.

அங்கிருந்தால் அவர் நினைவு தான் வரும். ஆபிஸில் இந்த ஒரு வாரம் வேலை இருக்காது. அஜய் சார்..எல்லாத்தையும் விடுங்கன்னு சொன்னாங்க. ஒரு கொலைகாரன் கேஸ் சீரியசா போய்க்கிட்டு இருக்கு. அதனால எல்லாரும் அங்க பாதுகாப்பா இருக்க சார் தான் சொன்னாங்க.

அக்கா, வேலை இல்லைன்னா அங்கிள் வீட்லயே நீ தங்கலாமே?

தங்கலாம். நான் சொன்னேன்ல சரணை மறக்க உன்னோட மாமாவை தான் பயன்படுத்திக்க போறேன்.

மாமாவா?

பாரு கதவை பார்க்க, அக்கா குகன் மாமாவா? அவங்க உங்க ஆபிஸ்ல என்ன செய்வாங்க?

எங்க பாதுகாப்புக்காக தான் அஜய் சார் அவரையும், மற்றொரு போலீஸ்காரரையும் அனுப்பி இருந்தாங்க.

அப்படியா? ஆனால் அக்கா அங்க போய் அவரை கண்டுகொள்ளாமல் நீ அவனையே நினைச்சுக்கிட்டு இருந்திடக்கூடாது.

சரிடா. நான் முயற்சி செய்கிறேன் என்று புகழை பார்த்து, நீயும் இனி அவனை நினைத்து அழக்கூடாது.

கண்டிப்பா மாட்டேன். எனக்கு அவனை விட இந்த மாமாவை தான் பிடிச்சிருக்கு என்றாள் புகழ்.

சரி, நீ ஓய்வெடு. நான் வாரேன் என்று பார்வதி எழுந்தாள்.

அக்கா..இரு நானும் வாரேன். சீனியரை பார்க்கணும் என்று இருவரும் வெளியே வந்தனர்.

குகனும் புகழின் நண்பன், சீனியர் அங்கிருக்க..அவர்களை பார்த்து சாரி சீனியர், நானும் கோபத்தில் பேசிட்டேன் என்று மன்னிப்பு கேட்க, குகனின் மொத்த குடும்பமும் அவர்களிடம் வந்து,

புகழ் மலை இறங்கிட்டியா? ஒருவன் கிண்டலாக கேட்டான். இல்லை இனி தான் மலையேறலாம்ன்னு இருக்கேன் என்று மற்றவர்களை பார்க்க அவர்கள் கிளம்பினர். அறைக்கு ஓடிய புகழ் அவளது பையை திறந்து ஒரு காகிதத்தை எடுத்து ராஜூவ்விடம் ஓடிச் சென்று நீட்ட, ராவண் கோபம் உச்சிக்கு சென்றது.

உனக்கு எதுக்குடா கோபம் வருது? பாட்டி கேட்க, அது..என்று அவர்களை பார்த்தான்.

புகழ் என்னது? ராஜூவ் கேட்க, பிரிச்சு பாரு என்று உள்ளே நகர்ந்தாள். அனைவரும் புரியாமல் புகழை பார்த்தனர். அவன் அதை பார்த்து விழித்து புகழை பார்த்தாள். போனை ஆட்டி காட்டினாள் புகழ்.

என்ன? அவன் கேட்க, தயாரா இரு..என்ற புகழ் பின்னாடி பாருடா லூசு என்றாள். அவன் திரும்பி பார்க்க..கேக்குடன் அவர்களின் தோழி வாசலில் நின்றாள்.

ஹே..என்ன பண்றீங்க? பாருவின் சித்தப்பா, சித்தி சத்தமிட..சித்தப்பா..  இருங்க என்று ராஜூவ்விடம் வந்து அவன் கையை பிடித்து வெளியே அழைத்து சென்றாள்.

தீபு..இங்க வேண்டாம் என்று அவன் கையை விட்டு, சீனியர் என்ன வேடிக்கை வேண்டி இருக்கு. கேக்கை எடுத்துட்டு தள்ளி அழைச்சிட்டு போங்க என்று ரௌத்திரனை பார்த்து புகழ் கத்த, அவனும் அராவும் கேக்கை வாங்கி விட்டு முன்னே செல்ல, தீபு..இன்று என்னோட பர்த்டே இல்லையே? என்று அவள் ஆடையை பார்த்து..உன்னோட பர்த்டேவா? இன்று..இல்லையே? கேட்டுக் கொண்டே அவளுடன் நடந்தான்.

தள்ளி வந்தவுடன் தீபு சீனியரிடமிருந்து கேக்கை வாங்கி ராஜூவ்விடம் கேக்கை நீட்டினாள். அதில் அவர்கள் சந்தித்த நாள் என்று எழுதி இருந்தது.

ராஜூவ் அவளை பார்க்க, அவள் பேசாமல் கேக்கை கட் பண்ண சொன்னாள். அவன் கேக்கில் கத்தியை வைக்க, அதிலிருந்து பொம்மை வெளியே வந்து.. வாழ்த்துக்கள்.. என்றது அவன் பயந்து பின்னே சென்று நின்று ஆர்வமுடன் பார்த்தான்.

என்ன தீபு பண்ற? அவன் புன்னகைக்க.. கையாலே சைகை செய்தாள். தீபுவும் ராஜூவ்வும் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் கேக்கில் சொருகிறாள். அவன் முகம் மாறியது.

அவனருகே நெருங்கி வந்து, ஐ லவ் யூடா கண்ணா..என்று அவன் அப்பா குரலில் சொல்ல, அவன் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான். அவள் கண்ணிலும் சிறு நீர்த்துளிகள். இதை பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் வாயில் கை வைத்து கண்ணீருடன் இருவரையும் பார்த்த புகழை இருவரும் பார்த்தனர். இருவருக்கும் பறக்கும் முத்தத்தை கொடுத்தாள். கொடுத்தாள் புகழ்.

அனைவரும் அவளை ஆச்சர்யமாக பார்த்தனர். அவளை பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ராவண் மனதினுள் எத்தனையோ பொண்ணுங்களுடன் பழகி இருக்கேன். அவள் கஷ்டத்திலும் நண்பர்களை சேர்த்து வச்சிருக்காலே என்ற அவன் மனத்தில் புகழ் ஒட்டிக் கொண்டாள்.

ராஜூவ் அவளை அணைத்த போது..தீபுவுடனான நினைவுகளும் அவளுடைய காதல் பார்வையும் புரிய வந்தது. அவன் அப்பாவை இழந்து தவித்த நேரம் தான் இவளை சந்தித்து இருப்பான்.

இருவரும் கையை கோர்த்துக் கொண்டு அவளை அணைக்க வந்தனர். தீபு..நில்லு..இப்ப வேண்டாம். நான் அழுதிருவேன். ப்ளீஸ் என்றாள். அவன் கையை விட்டு அவளிடம் வந்த தீபு, அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். நீ எப்போதுமே எங்களுக்கு ஸ்பெசல் தான் என்று அவளை அணைக்க..புகழ் அழுதாள்.

அழாத புகழ். நாங்க எல்லாரும் இருக்கோம். சில நாட்கள் தானே? அப்புறம் தினமும் நாம சந்திக்கும் பூங்காவில் சந்திப்போம். சரி தான சீனியர் என்று அராவை தீபு பார்த்தாள்.

கண்டிப்பா..தூரமா இருந்தா என்ன? உங்க அங்கிள் சொன்னாராமே? வீட்டுக்கே வந்துடுவோம். சாப்பாடு போடுவேல்ல..அரா கேட்க, புன்னகையுடன் கண்டிப்பா, உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சப்பாத்தியையே போட்டுறலாம்.

அடிப்பாவி. அதுக்கு நான் பட்டினியாவே இருந்திடுவேனே? என்று அவர்கள் பேசி கிளம்பிய பின் மதியம் சாமி கும்பிட்டு குகனின் ஜமீன் குடும்பம் கிளம்ப, அவன் அம்மாவுக்கு செல்ல மனமில்லாமல் இருக்க..கிளம்புங்க. நான் வீட்டுக்கு போகலை என்று குகன் அவன் கோபத்தை விட்டு நன்றாக பேசினான். ராவண் புகழை பார்த்துக் கொண்டே கிளம்ப, இம்முறை அவளும் அவனை பார்த்து கையசைத்தாள். அவன் மகிழ்ச்சியுடன் சென்றான்.

சரண் வீட்டிலிருந்து மதியம் வந்த பாருவின் நண்பர்கள், சுந்தரம் குடும்பம் பாரு, புகழின் அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு கிளம்ப, அவர்களின் சொந்த பந்தங்கள் மகிழ்வுடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.

புகழ் பாருவை பார்த்து, அக்கா..முடிந்தது முடிஞ்சு போச்சு. அதையே நினைக்காமல் இருக்கணும் என்று சொல்ல, சரி..என்று அவர்களது ஆபிஸில் குகன், பாரு, அந்த போலீஸ்கார், அவள் நண்பர்கள் இறங்க பாரு வேகமாக ருத்ராவிடம் ஓடி வந்து, அவளை காலை ரொம்ப நேரம் தூங்க விட்றாதீங்க ஆன்ட்டி. சோம்பேறி ஆகிடுவாள் சொல்லி விட்டு, யாரையும் தொந்தரவு செய்யாமல் சமத்தா இரு. புக்ஸ் எடுத்துட்டு வந்துருக்கேல்ல.. ஒழுங்கா படி என்று நந்துவை பார்த்து, ஏதாவது சேட்டை செய்தால் அவர் நம்பருக்கு கால் பண்ணி என்னிடம் சொல்லுங்க..என்றாள்.

ஏன் அண்ணி, உங்க நம்பர் என்னாச்சு அவன் கேட்க, போனை பார்த்து அதிலிருந்த சிம்மை தூக்கி எறிந்தாள்.

அக்கா, என்ன செய்ற?

நீ பேசணும்ன்னா உன்னோட மாமாவுக்கு கால் பண்ணு. நான் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு ஆபிஸை பார்த்தாள். குகன் அவள் செய்ததை பார்த்துக் கொண்டே நின்றான்.

சார், எவ்வளவு நேரம் இப்படியே பார்த்துக் கொண்டே இருப்பீங்க? உள்ள வாங்க என்று அவனை பார்த்து நடந்தாள். சரண் இடத்தில் நாற்காலி, மேசை ஏதுமில்லை. அனைத்தையும் மாற்றி போட்டிருந்தனர். கண்ணீர் வந்தாலும் அதை உள்ளிழுத்து அங்கேயே நின்றாள். அனைவரும் அவளை பார்க்க, குகன் அவளது கையை கோர்த்துக் கொண்டான். அவள் அவனை பார்த்து விட்டு உள்ள போகலாம்ல்ல? என்று உள்ளே இருவரும் சேர்ந்தே நுழைந்தனர். அவள் கஷ்டப்படும் எல்லா நேரத்திலும் கையை கோர்த்துக் கொண்டான். சரண் என்று ஒருவன் இருந்ததாகவே யாரும் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

வீட்டிற்கு வந்த புகழ் தூங்க அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு ராவண் நினைவு வந்து கொண்டே இருந்தது. அவன் அவளை பிடித்த போது அவளுக்குள்ளும் சில உணர்வுகளை கவனித்து இருப்பாள். இரண்டு நாட்கள் அப்படி இருக்கும். அனைத்தும் சரியாகும் என்று அவள் அப்பாவை நினைத்தவள்..மிஸ் யூ அப்பா என்று சொல்லிக் கொண்டே படுத்தாள். ராவணுக்கும் புகழின் நினைவு முழுவதும் ஓட புன்னகையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாத்தா..அவனிடம், என் பேரனுக்கு என்னாச்சு? சாப்பிடாமல் சிரித்துக்கிட்டு இருக்கீங்க?

போங்க தாத்தா..என்று வெட்கத்துடன் எழுந்து சென்றான்.

இது என்ன காலக் கொடுமை? நம்ம ராவா வா வெட்கத்தோட போறான்? அனைவரும் அவனை வியந்து பார்த்தனர்.

நித்தியும் கைரவ்வும் அவர்கள் குழுவுடன் தன் விளையாட்டிற்கான பயிற்சியை எடுத்துக் கொண்டிருந்தனர். அகில், அர்ஜூன் மற்றும் நண்பர்கள் அனைவரும் அங்கே வந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சைலேஷ் அகிலிடம் வந்து, நீ தயாரா இருக்கிறாயா? நாளைக்கு மேச்சும் உங்க மேடை நிகழ்ச்சியும் இருக்கு என்று சொல்ல, சார் இரண்டுமா? கவின் கேட்டான்.

மேச் முடிந்தவுடன் நிகழ்ச்சி என்றான் சைலேஷ். நித்தி அவர்களிடம் வந்து, என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? என்று தண்ணீரை எடுக்க, சைலேஷ் அதை எடுத்து விட்டு..போ..இன்னும் கொஞ்ச நேரம் முடிச்சிட்டு வந்து குடி என்றான்.

நித்தி..உங்க மேச் அன்று தான் நிகழ்ச்சி நடக்குமாம் யாசு சொல்ல, அவள் சைலேஷை பார்த்தாள்.

நித்தி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மாட்டாள்.

ஆமா, என்னால இரண்டுமே முடியாது என்றாள் நித்தி.

என்னாலும் முடியாது யாசு சொல்ல, அபியும் என்னால முடியாது என்றான்.

அகில் கோபமாக முடியாதுன்னா..நானே பார்த்துக்கிறேன் என்றான்.

கோபத்தை குறைடா, விதுனன் குழுவோட சேர்ந்து பண்ணலாமே? அர்ஜூன் கேட்க, அவங்களோட என்னால முடியாதுடா..

அகில், முதல்ல ஈகோவ விடு. உன்னோட கனவு முக்கியமா? ஈகோ முக்கியமா? சைலேஷ் கேட்டான்.

அவங்க நான் சொல்றதை ஏத்துக்க மாட்டாங்க.

பேசாம நீயே முடிவு எடுக்காத. முதல்ல பேசு. உனக்காக உதவ முன் வந்தாங்கல்ல..பேசு அகில், அர்ஜூன் சொல்ல

அகில் சிந்தனையுடன் இருக்க, நாளைக்கு நிகழ்ச்சி. நீ இப்படியே யோசித்துக் கொண்டிரு..இதுல முக்கிய விருந்தாளி யாரு தெரியுமா? “தி பிக்கஸ்ட்டு சிங்கர் ரோசன்”. அவருக்கு மட்டும் பிடித்து விட்டால்..உன் வாழ்க்கையே மாறும் என்றான் சைலேஷ்.

சார், அவரு நம்ம காலேஷூக்கா? மும்பையில இருந்து வராரா? அகில் கேட்க, ஏற்கனவே சென்னை வந்துட்டார். நீ தான் தயாராகலை சைலேஷ் சொல்ல..

போனை எடுத்த அகில் கவினிடம் வர்றீயா? கேட்க, என்னோட கனவு வேறாயிற்றே? விதுனிடம் பேசிக் கொண்டே ஓடினான். அனைவரும் அவனை பார்த்து சிரித்தனர்.

கையூ, நித்தி என்ன சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?

ஈவ்னிங் ஊருக்கு கிளம்பணும். இன்னும் கொஞ்ச நேரம் பிராக்டிஸ் பண்ணுங்க பசங்களா. அப்புறம் தயாராகுங்கள் என்று சைலேஷ் அர்ஜூனிடம் நீயும் வர்றேல்ல..

நோ…சார். இங்க எல்லாரும் தனியா இருப்பாங்க என்றான் அர்ஜூன்.

அதெல்லாம் இல்லை. நான் இருக்கேன்ல. எல்லாரையும் பார்த்துக்கிறேன். உன்னோட ரெண்டு ப்ரெண்ட்ஸூம் முக்கியமான கட்டத்தில் இருக்காங்க. நீ, ஸ்ரீ, தாரிகா..ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவங்கள ஊக்குவிக்க போகணும் கௌதம் சொல்ல..

ஆமா, நீங்க எல்லாரும் வந்தா கையூ, நித்தி, அகிலுக்கு சப்போர்ட்டா இருக்கும் என்றான் சைலேஷ்.

ஓ.கே சார், கிளம்பலாம் அர்ஜூன் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்து விசயத்தை சொன்னான்.

நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். சைலேஷ் தாத்தாவையும் அழைத்து சென்றான்.

இரவில் நித்தி கையூ தன் குழுவினருடன் விளையாட்டு பற்றிய திட்டத்தை போட்டுக் கொண்டிருந்தனர். அனிகா அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள். அகில் விதுனன் குழுவினருடன் சேர்ந்து பாடல் இயற்ற, பவி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹேய்..இங்க வா என்று நிவேதிதா பவியை அழைத்தாள். அகில் அவளை பார்த்தான். அவள் அவனருகே வந்து அமர்ந்தாள்.

நீ நல்லா பாட்டு பாடுவியாமே? கேள்விப்பட்டேன் என்று அகிலை பார்த்தாள்.

இல்லை. சும்மா பாத்ரூம் சாங் தான்.

எனக்கு அப்படி தெரியலையே? அகில் கேட்க, சரி..ஏதாவது பாடு சுருதி கேட்டாள்.

நானில்லை என்று பவி எழ, அவள் கையை பிடித்த அகில்..முயற்சி செய்யலாமே?

அகில் வேண்டாம். நல்லா இருக்காது.

நல்லா இருக்கா? இல்லையான்னு நாங்க சொல்றோம் நீ பாடு கதிர் சொல்ல, அவள் தயங்கினாள்.

இவளை விடு. அகில் நீ ஸ்ரீயை வரச் சொல்லு. உனக்கு ஜோடியா அவளை பாட சொல்லலாம் விதுனன் சொல்ல..நான் முயற்சி செய்கிறேன் என்றாள் பவதாரணி.

இந்த பாடலை பாடு..என்று பாட்டு வரிகளை கதிர் அவள் கையில் கொடுத்தான்.

அகில், நீ கண்ணை மூடிக்கோ. நான் பாடணும்.

நீ பாடுறதுக்கும் அவன் கண்ணை மூடவும் என்ன சம்பந்தம்? லயன்ஸ் குழுவின் கௌதம் கேட்டான்.

டேய், அவளுக்கு வெட்கமாக இருக்கு..சுருதி சொல்ல, அகில் அவளை பார்த்து சிரித்தான்.

சிரிச்ச கொன்னுடுவேன் என்ற பவி பாவமாக அனைவரையும் பார்த்தாள்.

அன்று ஒரே அறையில் இவனுடன் இருந்த போது வெட்கப்பட்டது போல் தெரியலையே? நிவேதிதா கேட்க, என்னை விடுங்கடா என்று பவி ஓட, அவளை இழுத்து அகில் அவன் மடியில் அமர்த்தி, நீ பாடாம எழவே முடியாது என்றான்.

டேய், உங்க ரொமான்ஸூக்கு நாங்க தான் ஆளா? விது..ஒரு நாளாவது ரொமான்ட்டிக்கா பேசியாவது இருக்கியா? பாட்டை தவிர வேற எண்ணமே உனக்கு வராது. இவனுகள பார்த்தா கடுப்பா இருக்கு. ஏம்மா..சீக்கிரம் பாடு. இல்லை நீ ரிஜக்ட் ஆகிடுவ? என்றாள் நிவேதிதா.

பவி பாடுவது ரசித்து அனைவரும் கவனிக்க..வாவ்..வாய்ஸ் சூப்பரா இருக்கு பவி கதிர் அகில் அருகே வர, மவனே கொன்றுவேன் என்று அகில் அவனை நிறுத்தினான்.

சீனியர்ன்னு மரியாதையெல்லாம் கிடையாதா? சுருதி கேட்க, நாங்க மரியாதை கொடுக்கிற மாதிரி நீங்க நடந்துக்கணும் என்ற அகில், சூப்பரா பாடுன டியர் என்று பவி கன்னத்தில் முத்தமிட்டாள். அவள் வெட்கத்துடன் ஓட, நில்லு நீயும் நாளைக்கு பாடணும். வா..பிராக்டிஸ் முடிச்சிட்டு போகலாம் விதுனன் அவளை அழைத்து வந்தான்.

மறுநாள் நித்தி கூடைப்பந்து விளையாடப் போவது பசங்க எல்லாருக்கும் தெரியவர, கல்லூரியில் யாருமேயில்லை. அனைவரும் விளையாட்டு மைதானத்தில் கூடினர். ரஞ்சித் குழுவினர் நித்தியை பார்த்து, இன்று அவள நம்மிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியாது என பேசிக் கொண்டே வந்தனர்.

அனைவர் முன்னிலையில் நித்தி, கைரவ் அருகில் நின்று அவர்களை தயார் படுத்திக் கொண்டிருந்தான் சைலேஷ். அர்ஜூன்..சைலேஷ் நித்தியின் மோதிரம் மாற்றும் வீடியோவை குரூப்பில் போட, அவர்களை ஆர்வமுடன் பலர் பார்த்தாலும் சிலர் சைலேஷிற்கு நித்தி பொருத்தமானவள் இல்லை என்றும் பேசினர்

கூடைப்பந்து விளையாட்டு ஆரம்பிக்க, எனக்கு உதவுறேன்னு யாரும் கெடுத்துறாதீங்க. நாம தான் ஜெயிக்கிறோம் என்ற நித்தி..ஓரிடத்தில் நிற்க, வேண்டுமென்றே அவளை பின்னே ரஞ்சித் குழுவினர் இருவர் நின்றனர்.

வாங்கடா..பார்த்துக்கலாம்..என்று மனதினுள் நினைத்த நித்தியிடம் பந்து வர..நித்தி மற்றவரிடம் பாஸ் செய்யாமல் ரஞ்சித்தை பார்த்து ஏளனமான பார்வை பார்த்து விட்டு அவளாகவே முன்னேறி கோல் அருகே வந்து விட பின்னிருந்த இருவரும் தவறாக அவளை தொட வர, சந்தோசும் கிரியும் அவர்களை இடிக்க, தள்ளி சென்று விழுந்தனர் இருவரும். நித்தி முதல் கோல் போட்டாள். கைரவ் அவளிடம் கண்ணை காட்ட..அதே இடத்தில் வந்து நின்றாள். மீண்டும் அவள் தான் போடப் போகிறால் என முட்டாள் ரஞ்சித் அவளை குறி வைத்து அவளிடமிருந்து பந்தை வாங்க முயன்றான். கோல் போடும் இடத்தை அடைந்தவுடன் மற்றவன் ஒருவனிடம் போட..அவன் பந்தை அதே நொடியில் நின்ற இடத்திலிருந்து போட்டான். அனைவரும் ஆரவாரத்துடன் நித்தி பெயரையும் மற்றவன் பெயரையும் உச்சரித்தனர்.

செட்..இருங்கடா வாரேன் என்று அவன் ஒருவனிடம் கண்ணை காட்ட.. அதை பார்த்த கைரவ் களத்தில் இறங்கினான். பந்து அவன் கையில் விளையாடியது. ரஞ்சித்தும் சும்மா இல்லை. பெரிய ஆட்டக்காரன் தான். இருவருக்கும் போட்டி தீயாய் இருக்க கைரவிடமிருந்து பந்தை வாங்கி அவனும் கோல் போட்டான். மூன்று புள்ளிகள் இருவருக்கும் சமமாக இருந்தது. இவர்கள் விளையாட்டை அனுவும் பார்த்துக் கொண்டிருந்தாள். அர்ஜூன் அனுவுக்கு விளையாட்டை பற்றி கூறினான்.

மேலும் விளையாட நேரம் குறைவாக இருந்தது. ரஞ்சித் குழுவினர் நித்தியை தான் டார்கெட் செய்வாங்க என அவர்களை குழப்பி விட்டு விளையாண்டு கொண்டிருந்தனர். கடைசி புள்ளியை யார் பெறப் போகிறார்கள் என்ற நிலையில் நித்தியை விட்டு அவர்கள் மற்றவர்களை கவனித்தனர். சைலேஷ் போனுடன் அவர்களை பார்த்துக் கொண்டே சிங்கரை வரவேற்க சென்றான். அவரை பார்த்தவுடன்..என்னோட பியான்சே கேம் விளையாடுறாங்க பார்த்துட்டு வந்து பேசலாமா சார்? கேட்டான்.

பியான்சே வா? ஓ.கே பார்க்கலாம் என்று இருவரும் காரில் வந்து இறங்கினர். அனைவரும் அவர்களை பார்த்தனர்.

நித்தி பந்தை யாரிடம் போடப் போகிறாள் என்று மற்றவர்களை ரஞ்சித் கவனித்தான். ஆனால் நித்தியே மூன்று அடி மட்டும் முன் வந்து நின்ற இடத்திலே பந்தை கூடையில் போட..அது கூடையை சுற்றியது. அனைவரும் ஆர்வமுடன் பார்க்க பந்து உள்ளே விழுந்தது.

விசில் பறக்க..அனைவரும் ஆரவாரத்துடன் இருக்க, நித்தி மேல் கோபமான ரஞ்சித் அவளிடம் வந்தான். இதை கவனித்த அகிலும் கவினும் வேகமாக ஓடி வந்தனர். நித்தி, கையூ வெற்றி அடைந்த சந்தோசத்தில் எழுந்து வந்த சைலேஷ் கண்ணிலும் அவன் பட, அவனும் நித்தியை நோக்கி ஓடி வந்தான்.

நித்தி..என்ற சத்தமுடன் சைலேஷை பார்த்து நித்தி அவனிடம் ஓடி வந்தாள். ரஞ்சித் அவளை பிடிக்கும் சமயத்தில் அகிலும் கவினும் சேர்ந்தவாறு அவனை தள்ளினர். அவன் கீழே விழுந்தான். ஓடி வந்த நித்தி சைலேஷை அணைத்துக் கொண்டு, நாம ஜெயிச்சிட்டோம் என்று குதித்தாள். அப்புறம் தான் சத்தம் கேட்டு பார்த்தாள். எழுந்த ரஞ்சித் சீற்றமுடன் சைலேஷ் நித்தியிடம் வந்தான். அவளை ஒரு பக்கமாய் சைலேஷ் இழுத்து நிறுத்திக் கொண்டான்.

சார், எங்க விசயத்துல தலையிடாதீங்க?

உங்க விசயமா? அவள் இப்ப என்னோட பாதி மனைவி ஆகிட்டா. நம்ம டீல்ல நாங்க ஜெயிச்சிட்டோம். நீ போய்க்கிட்டே இரு என்று சைலேஷ் அதிகார தொனியில் பேச,

டீலா, நாம எப்ப சார் போட்டோம்? திமிறாக அவன் கேட்க, ஏய்..என்று கத்தினான் சைலேஷ்.

எதுக்கு சார் கத்துறீங்க?

ஆமா, இந்த பொறுக்கிட்ட எதுக்கு கத்துறீங்க? என்று மாமு..அங்க பாரு என்று கவின் சொல்ல, அர்ஜூன் அவனிடம் வந்து, எங்கள ரொம்ப நல்லவனுகன்னு நினைச்சியா? நீ பேசியது அங்க வரும் பாரு என்று திரையிட்டு அன்று நடந்ததையும் அனைவருக்கும் காட்டினர். விருந்தாளிகள் தாத்தாவை பார்க்க..

எங்க மூத்த மருமகள் இவள் தான் என்று நித்தியிடம் வந்து நின்றார். அவள் கண்ணீருடன் அவரை பார்த்தாள். நீ எதுக்கும்மா அழுற? என்று தாத்தா அவள் கண்ணீரை துடைத்து விட்டார். கைரவ் அவர்களுடன் வந்து அனிகாவை தேடினான்.

தாத்தா அவனை பார்த்து, அங்க தான் இருக்கா. கூட்டிட்டு வா..என்று சொல்ல, அவன் ஓடிச் சென்று அழைத்து வந்தான் அனிகாவை. அவள் தயங்க இந்த பொண்ணு தான் அடுத்த மருமகள் என்று சொன்னார்.

படித்தே முடிக்கலை. அதுக்குள்ளவா? ஒருவர் கேட்க, காதல் படிப்பு, இடம், பொருள் பார்த்து வராது என்றார்.

நித்தி..என்ற சத்தம் கேட்டு எல்லாரும் மேலே பார்த்தனர். கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தின் படியின் மேலே வீல் சேரில் குருவும், அவன் அம்மாவும் இருந்தனர்.

கண்ணீருடன் அவர்களிடம் ஓடினாள் நித்தி. சைலேஷ் அவளை பார்த்து புன்னகைத்தான்.

சார், உங்க ஏற்பாடா? கவின் கேட்க, சும்மா பார்க்க போனேன். நித்தியிடம் இவன் பேசியதையும், அவள் குருவிற்காக விளையாடப் போகிறாள்ன்னு சொன்னேன். அவன் விழித்தான். ஆனால் பேச முடியவில்லை. அவனும் நித்தி விளையாடுவதை பார்க்கட்டும் என்று தான் அழைத்து வந்தேன். இப்ப அவன் அவளாலே சரியாகிட்டான்னு நினைக்கிறேன்.

“தேங்க்யூ சார்” என்று கவின் அணைக்க, ஓய் நீ எதுக்கு தேங்க்ஸ் சொல்ற? நான் என் பொண்டாட்டிக்காக செய்தேன். நீ படிக்கிற வேலைய பாரு..என்ற சைலேஷ் அவர்களிடம் செல்ல, ரஞ்சித் அர்ஜூனை முறைத்து பார்த்தான்.

அங்கிள்..என்று அனு கைரவ்விடம் ஓடி வர, டார்லிங்….என்று அவனும் அனுவிடம் வர, ரஞ்சித் பார்வை அனுவின் மீது பட்டது. கைரவிற்கும் அனுவிற்கு இடையே வந்த ரஞ்சித் அனுவை தூக்க வந்தான்.

ஹே…யார் மேல கைய வைக்க பாக்குற? என்னோட பொண்ணு மேலயே கைய வைக்குற என்று அர்ஜூன் அவன் கையை திருப்ப, கைரவ் அனுவை துக்கினான்

அர்ஜூன் அவனை விடு என்று ஸ்ரீ அவன் கையை பிடித்து தடுத்தாள். அவளை முறைத்த அர்ஜூன்..இனி பொண்ணுங்களையோ, வேற யாரையோ நீ கஷ்டப்படுத்துறதை பார்த்தேன். அப்பவே கொன்றுவேன் என்று எச்சரித்து அவன் கையை விட்டான்.

போடா இங்கிருந்து கைரவ் சொல்ல..மற்ற கல்லூரி பசங்க அவனை அடிக்க வந்தனர். அவன் அங்கிருந்து ஓடி விட்டான்.

சைலேஷ் அகிலிடம் வந்து, நீ போ தயாராகு என்று பவியை பார்த்தான். அவளும் அவனுடன் சென்றாள்.

கைரவ் குழுவிற்கு கோப்பை கொடுத்து அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ரோசன் அவர்களிடம் வந்து சைலேஷிற்கு வாழ்த்தை தெரிவித்து விட்டு, நீங்களும் பாடுவீங்களாமே? பசங்க பேசுனாங்க என்று நித்தியிடம் கேட்டான்.

எஸ் சார், ஆனால் அது ப்ரெண்டுக்காக செய்தது சார். ஆனால் இப்ப எனக்கு..என்று நித்தி சைலேஷை பார்த்து, என் குடும்பத்தை தவிர எதுவுமே வேண்டாம் என்று சைலேஷ் கையை பிடித்தாள். உரிமையானவர்களை விட்டு தள்ளி இருந்ததால் தான் என் அம்மாவை இழந்தேன். என்னால வேற யாரையும் இழக்க முடியாது என்று சைலேஷை பார்த்தாள்.

ம்ம்..உன் விருப்பம் தான். அவன் உன்னை கோழைன்னு சொன்னான். அதனால் தான் இதில் உன்னை கலந்து கொள்ள வைத்தேன். மற்றபடி எல்லாம் உன் விருப்பம் தான் என்று தாத்தாவை பார்த்தான்,

வாங்க தாத்தா நாம சாப்பிட போகலாம். இப்ப நம்ம கல்லூரி ப்ரெஸ்சர்ஸ் நிகழ்ச்சி மதிய உணவின் பின் நடக்கும்.

சைலு..அகிலுடன் பவி கலந்துக்க போறாளாம் நித்தி அவனிடம் சொல்ல..பார்க்கலாம். சாப்பிட போகலாமா? நித்தியிடம் சைலேஷ் கேட்டான்.

நான் அவங்கள பார்த்துட்டு வரணும் என்று அபி, கவினை பார்த்து போகலாமா? என்று நித்தி கேட்டாள். நாங்களும் வாரோம் என்று அர்ஜூன் வர, முதல்ல அனுவை பாருங்க என்று ஸ்ரீயை பார்த்தாள்.

நாம சாப்பிட்டு போய் அவங்கள பார்க்கலாம் ஸ்ரீ கூற, தாரிகா அவளை பாவமாக பார்க்க, ஸ்ரீ புன்னகையுடன் போ..என்றாள். தாரிகா, நித்தி, கவின், அபியுடன் அகில், பவி குழுவினரை பார்க்க சென்றனர்.

Advertisement